Skip to content
Post Views: 1,020
இரண்டு வாரங்கள் கடந்திருக்க அந்த வார இறுதியில் தன் மாமா வீட்டிற்கு வந்திருந்தாள் மலர்விழி.
“மலரு குட்டி..” சிரிப்புடன் வரவேற்றார் செந்தில். பெண் பிள்ளைகள் இல்லாதவருக்கு தங்கை மகள்கள் மேல் கொள்ளை பிரியம். அதிலும் மலர் வீட்டின் கடைக்குட்டி என்பதால் சற்று செல்லம் அதிகம்.
Advertisement
“நல்லா இருக்கீங்களா மாமா?” அவள் நலம் விசாரிக்க “நல்லா இருக்கேன் டா.. படிப்பெல்லாம் எப்படி போகுது?” என்று பதிலுக்கு நலம் விசாரித்தார்.
இருவரும் பேசிக் கொண்டிருக்க சமையலறையிலிருந்து வந்த அவள் அத்தை வள்ளி குடிக்க தண்ணீர் குடுத்து விட்டு “வா மலர்” என்று பேச்சிற்கு வரவேற்றார். இருவருக்கும் சற்று ஒத்து போகாது.
Advertisement
Advertisement
துடுக்குத்தனமாக பேசும் மலர் இவருக்கு அதிகபிரசங்கி என்றால் மனதிற்கு பட்டதை முகத்தில் அடிப்பதை போல் பேசும் வள்ளி அவளுக்கு திமிரு பிடித்தவர்.
பெற்றோரை குறித்து நலம் விசாரித்துவிட்டு அவளை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டார். மலரும் அதை கருத்தில் கொள்ளவில்லை, அவளுக்கு வந்த வேலை முடிய வேண்டும்.
Advertisement
“இந்த எரும எங்க போய் தொலைஞ்சுது?” எரிச்சலுடன் மலரின் விழிகள் அவனை தேட “யார டா தேடுற?” என்று கேட்டார் செந்தில்.
“மாமா அரவிந்த்..” அவள் இழுக்கவும் அவர் “மேல ரூம்ல இருப்பான் போய் பாரு” என்று கூற விட்டால் போதுமென்று எழுந்து வந்துவிட்டாள்.
வேகமாக வந்தவள், “டேய் பெரிய இவனா நீ கால் பண்ணா எடுக்க மாட்டியா?” என்று கத்திகொண்டே அவன் அறைக்குள் நுழைய
அவளை சற்றும் எதிர்ப் பார்க்காதவனோ “ஏய் இங்க எதுக்கு டி வந்த? மொதல்ல வெளிய போ” என்றான் தயவு தாட்சனை பார்க்காமல்.
“மிஸ்டர் அரவிந்த் உங்க அம்மா உங்களுக்கு மேனர்ஸ்சே சொல்லிக் குடுக்கலையா? வீட்டுக்கு வந்தவங்கள இப்படி தான் ரொம்ப மரியாதையா வரவேற்றுப்பாங்களா?”
“தேவையில்லாம எங்க அம்மாவ பத்தி பேசாதே..” அவன் எச்சரிக்க மலரின் பொறுமையும் பறந்துவிட்டது.
“உனக்கு என்ன டா பிரச்சனை?”
“எல்லாமே பிரச்சனை.. ஏன் வந்து தீர்த்து வைக்க போறியா? மொதல்ல கிளம்பு”
“இப்போ எதுக்கு டா லூசு மாதிரி கத்தற?”
“ஆமா டி லூசு தான்” என்றான் அதற்கும்.
“அரவிந்த்..” அதட்டிவள் அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்ட வாங்காமல் முரைத்துக் கொண்டு நின்றான்.
“குடி டா! குடிச்சிட்டு பொறுமையா மொறைப்பியாம்”
வாங்கிக் கொண்டவன் மடமடவென தண்ணீரை குடித்துவிட்டு கட்டிலில் அமர அவன் அருகே அமர்ந்தவள், “சொல்லு என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?” என்று பொறுமையாக கேட்டாள்.
“நடிக்காத மலர்.. உனக்கு எல்லாம் தெரியும்”
“தெரியும் டா.. இருந்தாலும் உன் பக்கத்த நான் கேட்டனும்ல”.
“என் பக்கம்..” எள்ளலாக நகைத்தவன் “அதெல்லாம் நீங்க ரெண்டு பேரும் யோசிப்பீங்களா?” என்று கேட்க “யோசிக்காம தான் இங்க உற்கார்ந்து பேசிட்டு இருக்கேனா?” என்றாள் அவளும் கோவமாக.
அரவிந்த்திடம் பதிலில்லை. அவன் அமைதியாக அமர்ந்திருக்க, “சரி நேத்து எதுக்கு இசையோட சண்ட போட்ட?” என்று நேரே விஷயத்திற்கு வந்தாள் மலர்.
“உனக்கே தெரியும் நான் தமிழ் கிட்ட என் லவ் மேட்டர சொல்ல சொல்லி கிட்ட தட்ட ஒரு மாசம் ஆச்சு.. ஆனா இவ இன்னும் சொல்லல..”
“அவ சொல்லைனு உனக்கு தெரியுமா?”
“அதான் நேத்து அவளே சொன்னாளே” என்றான் கோவமாக.
அரவிந்த் தமிழிடம் தன் காதல் விவகாரத்தை கூற சொல்லி கிட்ட தட்ட ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் நேற்று இசைக்கு அழைத்து அதைப் பற்றி பேச அவளிடம் சரியான விடையில்லை. ஏதேதோ பேசி மழுப்பினாள். எரிச்சலாக வந்தது அரவிந்த்திற்கு. நேற்று என்றில்லை கடந்த இருவாரங்களாக நடக்கும் பிரச்சனை இது.
இன்று எப்படியும் இதற்கு விடை கண்டே தீர வேண்டும் என்று தீவிரம் கொண்டவன் “இசை நீ அவன் கிட்ட பேசுனியா இல்லையா? என்று உடைத்து பேச அதற்கும் இசையிடம் பதிலில்லை.
என்னவென்று சொல்ல இவன் பேரை எடுத்தாலே தமிழ் எரிந்து விழுகிறான் என்றா? அப்படி கூறி அவனை கஷ்டப்படுத்த அவளுக்கு விருப்பமில்லை. அதே சமயம் தமிழை அரவிந்த் தவறாக நினைத்துவிடுவானோ என்ற பயமும் இருந்தது. அது அவளுக்கு தேவையில்லாத ஒன்று இருந்தும் மனம் கேட்கவில்லை.
மழுப்பி மழுப்பி பேசி பார்த்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் மறைக்க முடியாமல் தமிழிடம் இவன் காதலை குறித்து பேசவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொண்டாள்.
அரவிந்த்திற்கு சுள்ளென்று கோவம் தலைக்கேற ஏற நன்றாக கத்திவிட்டான். இதுவரை இசையிடம் இந்தளவு கோவப்பட்டத்தில்லை. அவன் இயலாமையெல்லாம் இறக்கி வைக்க இன்னிசையை பயன்படுத்திக்கொண்டான்.
“என் மேல உங்களுக்கு கொஞ்சம் கூட பாசம் அக்கரை எதுவுமே இல்ல டி.. ரெண்டு பேரும் காலேஜ் வந்ததும் ரொம்பவே மாறிட்டீங்க” என்ற அரவிந்தின் பேச்சில் எரிச்சலாகிவிட்டாள் மலர்.
“இந்த பேச்செல்லாம் பேசாத..”
“என்ன உண்மைய தானே சொன்னேன்”
“என்ன உண்மைய சொன்ன? அவள மாதிரி என்ன பேசுனாலும் கேட்டுட்டோ இல்ல அழுதுட்டோ இருக்க மாட்டேன்.. மவனே லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிருவேன்” என்றவள் பேச்சில் அத்தனை கோவம்.
மலரின் கோவத்தில் சற்று மிரண்டு போய் பார்த்தான் அரவிந்த்.
“நான் இதை உங்கிட்ட கொஞ்சம் கூட எதிர் பார்க்கல டா.. நீ இவ்ளோ சுயநலமானவனா?” அதிருப்தியும் ஆற்றாமையுமாய் அவள் கேட்க அரவிந்திற்கு பொறுக்கவில்லை.
“நான் என்ன சுயநலமா நடந்துக்கிட்டேன்?” என்றான் உடனே.
“உனக்கு கயல் அக்காவ அப்ரோச் பண்ண் பயம்.. அதுக்கு சீனியரோட உதவி வேணும்.. ஆனா அதையும் நீ நேரடியா கேட்க மாட்ட.. அதுக்கு உனக்கு இசை வேணும்.. இதுல ஆதாயப்படுறது நீ மட்டும் தான்..”
“உன்னோட ஆதாயத்துக்காக உனக்கு உதவி பண்ண நினைச்சவள கண்டபடி திட்டுற வாய்க்கு வந்ததெல்லாம் பேசுற.. நீ பண்றதெல்லாம் சுயநலம்னு சொல்லாம வேற என்னனு சொல்ல?”
மலரின் பேச்சு ஆணியடித்ததை போல் அவன் மர மண்டையில் உரைத்தது. எத்தனை சுயநலம்? யோசித்தவன் தன் செயலை எண்ணி வெட்கி போனான். பின் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசியிருக்கான் இன்னிசையை. இவன் பேசிய பேச்சையெல்லாம் ஒப்பிடும்போது தமிழ் இசையிடம் கோபப்பட்டதெல்லாம் ஒன்றுமே இல்லை.
தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் அரவிந்த்.
நண்பனை பார்க்க பாவமாக இருந்தபோதும் விடவில்லை மலர். தோழி நேற்று அழுத அழுகை அப்படி. கேட்க ஆளில்லை என்று நினைத்து கொண்டானோ? என்ற எண்ணம் எழுந்தது.
“அரவிந்த் என்னையும் இசையும் உனக்கு எத்தன நாளா தெரியும்?” மலரின் கேள்வியில் நிமிர்ந்தவன் “ஹே உன்ன பிறந்ததுல இருந்து பார்க்குறேன்.. அவள விவரம் தெரிஞ்ச வயசிலிருந்து தெரியும்” என்றான்.
“விவரம் தெரிஞ்ச வயசிலிருந்து தெஞ்ச எங்கள விட இப்போ வந்த உன் காதல் உனக்கு பெருசா போச்சுல? அது தப்பில்ல.. ஆனா அதுக்காக நீ எவ்ளோ சுலபமா எங்கள தூக்கி எறிஞ்சுட்ட? அப்போ நம்மளோட இவ்ளோ வருஷ ஃபிரண்ட்ஷிப் அவ்ளோதான் இல்லையா?”
“இசை? அவகிட்ட எப்படி டா உன்னால அப்படி பேச முடிஞ்சுது? கேட்கிறதுக்கு ஆள் இல்லனு நினைச்சுட்டியா?”. கோவத்தில் கத்தியவளின் பேச்சில் அத்தனை ஆதங்கம்.
மலரின் பேச்சை கேட்டு குற்றவுணர்வில் குறுகிப்போய் அமர்ந்திருந்தவனிடம் அவளின் எந்தவொரு கேள்விக்கும் விடையில்லை. தான் தன் காதல் என்ற எண்ணம் பிரதானமானதில் கயலும் காதலும் கண்ணை மறைக்க கண்மூடித்தனமாக கத்திவிட்டான்.
தற்போதிருக்கும் மனநிலையில் மலரையே எதிர்க் கொள்ள முடியவில்லை? இதில் இன்னிசை? அவனுக்கு பயமாக இருந்தது.
மலர்விழி அரவிந்தின் ரத்த சொந்தம் இயல்பாகவே அவள் மீது பாசமுண்டு. ஆனால் அவனுக்கும் இசைக்குமான உறவு முற்றிலும் மாறுபட்டது. பள்ளியில் மலரின் தோழியாக அறிமுகமானலும், அரவிந்த் அண்ணா.. என்று அவன் பின்னே சுற்றும் அவனின் குட்டி இசை மீது என்றுமே தனி பிரியம் தான்.
வீட்டின் கடைக்குட்டியான இவனின் கருத்துக்களை ஒருவரும் மதிக்காத போது இவனிடம் அவள் கேட்கும் சின்ன சின்ன கருத்துக்கள் கூட ஏதோ பெரிய மனிதனை போன்ற உணர்வை குடுக்கும். சிறுவயதில் நண்பனின் தங்கையை கண்டு தனக்கொரு தங்கையில்லையே என்று எண்ணியவனின் ஏக்கத்தை தீர்த்ததில் மலரை காட்டிலும் இசைக்கே அதிக பங்குண்டு. அதன் விளைவாய் பள்ளி முழுவதும் அரவிந்தின் தங்கை என்ற அடையாளம் தான் அவளுக்கும்.
அப்படிப்பட்ட உன்னதமான உறவை தன் சுயநலத்திற்காக இழைத்த தவறின் விளைவாய் இழந்துவிடுவோமோ என்று அச்சம் அவனுள் எழ மொத்தமாக மலரிடம் சரணடைந்துவிட்டான்.
“ஹே சாரி டி மலர்.. நான் ஏதோ புத்திக் கெட்டு போய் பண்ணீட்டேன்” என்று மன்னிப்பு கோரியவனை காலில் விழுகாத குறையாக கெஞ்சவிட்டு அவள் மனம் குமுறல்கள் அடங்கிய பின்னே சற்று பாவம் பார்த்து சமாதானமானாள் மலர்.
மலருக்கே இத்தனை பாடு! அடுத்து இசை.. அவளை எதிர் கொள்ளும் தைரியமும் திராணியும் துளியுமில்லை. அதே போல் அவளை இழக்கவும் தயாராக இல்லை.
“காலில் விழுந்தாவது அவளை சமாதானம் செய்து விட வேண்டும்” என்று மனதில் முடிவெடித்தவன் தைரியத்தை வரவழைத்து கொண்டு இசையை அழைக்க அது ஏற்கப்படவேயில்லை.
“என்ன டி கால் பண்ணா எடுக்கவே மாட்டிங்கிறா?” பதட்டத்தில் அவன் புலம்ப “நீ பேசுன பேச்சுக்கு இன்னும்மா உன் நம்பர பிளாக் பண்ணாம வச்சிருப்பா” என்று நக்கலடித்தாள் மலர்.
“பிளாக் பண்ணீட்டாளா!?!?”
“அவங்கிறதால பிளாக் மட்டும் பண்ணீருக்கா.. அவ இடத்துல நான் மட்டும் இருந்தா இனி ஜென்மத்துக்கும் உன் மூஞ்சிலையே முழிக்க மாட்டேன்”
மலரின் கூற்றில் தான் அவன் விட்டெறிந்த வார்த்தைகளின் வீரியம் விளங்கியது.
அவளை தொடர்பு கொள்ள வழி தெரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவன் சற்று நேரம் கழித்து மலரின் தொலைபேசியில் இருந்து முயற்சித்தான்.
அழைப்பை ஏற்று “சொல்லுடி..” என்றவள் “இசை..” என்று மறுபுறத்தில் அரவிந்த்தின் குரலை கேட்டதும் அழைப்பை துண்டிவிட்டாள். அவனிடம் பேசவே பிடிக்கவில்லை.
இசையின் ஒதுக்கத்தில் நிஜமாகவே நெஞ்சம் வலித்தது. மேலும் குற்றவுணர்வு அதிகரிக்க அப்படியே அமர்ந்துவிட்டான்.
அரவிந்த்தின் தோரணை அவளை வருத்தினாலும் இது இவனுக்கு தேவை தான் என்று நினைத்துக் கொண்டாள் மலர்.
சற்று நேரம் அவனை கண்டு கொள்ளாமல் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு அதற்கு மேல் மனம் கேட்கவில்லை.
அவனருகே சென்று தரையில் அமர்ந்திருந்தவனுக்கு நேர கட்டிலில் அமர்ந்தவள் அவன் தலையை கோதியபடி, “விடுடா நம்ம இசை தான புரிஞ்சிப்பா” என்று சமாதானம் செய்ய மறுப்பாக தலையாட்டியவன், “ரொம்ப பேசீட்டேன்” என்றான் குரல் கமர.
“சரி பேசிட்ட விடு.. ஆனா இது உனக்கு ஒரு பாடம்.. ஒருமுறை வார்த்தைய விட்டுட்டா திரும்ப எடுக்க முடியாது.. இனி பேச்சில கொஞ்சம் கவனமா இரு” என அறிவுரை வழக்க அமைதியாக கேட்டுக் கொண்டான்.
“இன்னும் ஒரு செம் தான் மலர்.. இப்போ விட்ட நான் வாழ்க்க முழுக்க கயல மிஸ் பண்ணீருவேன்.. அந்த பயம் எனக்கு. அதுவுமில்லாம நான் இசைக்கிட்ட சொல்லி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சு.. ஆனா அவகிட்ட இருந்து ஒரு பதிலுமில்ல.. நேத்து எனக்கு எப்படியும் இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகனும்னு பேச போய் தான் இசைக்கிட்ட கோவப்பட்டுட்டேன்” என தன்னிலையை விளக்க
“மொதல்ல அவளுக்கு பதில் கிடைச்ச தானே உனக்கு பதில் சொல்ல முடியும்” என்றாள் மலர்.
“என்ன டி சொல்ற?” அவள் சொல்ல வந்தது விளங்காமல் அவன் கேட்டிட “உன் லவ்வ பத்தி சீனியர் கிட்ட பேசுனா தானே அவளுக்கு பதில் கிடைக்கும்.. அவரு தான் அரவிந்த்னு உன் பேர எடுத்தாலே எரிஞ்சு விழுகிறாரே” என்றாள்.
“நான் என்ன பண்ணேன்?!?”
“என்ன கேட்டா? உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ.. அன்னிக்கு உனக்கு சப்போர்ட் பண்ணி பேசி தான் அவங்க ரெண்டு பேர் குள்ள சண்ட”.
“நான் என்ன பண்ணேன் ?” என்றபடி தமிழுடனான தருணங்களை அசைப்போட்டவனுக்கு அவனுடன் சண்டையோ கருத்து வேறுபாடோ ஏற்பட்ட நினைவே இல்லை. மாறாக இசையுடன் இவனிருக்கும் பொழுதெல்லாம் தமிழ் முகத்தை தூக்கி வைப்பது தான் நினைவிற்கு வந்தது. லேசாக குறிப்பு தட்டவும் பிடித்துக் கொண்டான்.
“மலர் நான் நினைக்கிறேன் தமிழ் இசைய லவ் பண்றான்னு” என தன் யூகத்தை அரவிந்த் கூற “டேய் லூசு மாதிரி ஏதாவது உளறாத” என்று அதட்டினாள் மலர்.
“உளறல டி.. உண்மைய தான் சொல்லறேன்.. நீயே யோசிச்சு பாரேன் எல்லாமே சிங்க் ஆகும்”
“என்ன?”
“எனக்கு அவனுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.. அப்படி இருக்கிறப்போ அவன் ஏன் என்ன பத்தி பேசுனாலே கடுப்பாகனும் எரிஞ்சுவிழனும்?”
“ஏன் எரிஞ்சுவிழனும்?” மலர் யோசனையாக இழுக்கவும்
“மக்கு” தலையில் அடித்துக் கொண்டவன், “அவன் பொஸசிவ் ஆகுறான்.. அவனுக்கு நான் இசையோட நெருக்கமா இருக்கிறது புடிக்கல.. நீ கவனிச்சு இருக்கியானு தெரியல நான் கவனிச்சிருக்கேன்.. இசை அவன் பக்கத்துல உட்காராம என் பக்கத்துல உட்கார்ந்தாலோ அவன கண்டுக்காம என்கிட்ட பேசிட்டு இருந்தாலோ அவன் முகமே மாறிடும்” என்றான்.
“ஹே ஆமா டா.. அன்னிக்கு நாங்க மால் போன அப்பவும் இசை இருக்கிற வர நல்லா தான் விளையாடிட்டு இருந்தாரு.. அவ போர் அடிக்கிது வரலனு போனதும்.. அவரும் வேணும்னு ஆட்டதுல தோத்துட்டு அவ பின்னாடியே போய்டாரு” என மலரும் தான் கவனித்தை கூற அரவிந்த்தின் யூகம் உறுதியானது.
“ஆனா இதை வச்சு எப்படி லவ் தான் சொல்ற?” என்ற மலருக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு குழப்பம்.
“சரி தான் இதை வச்சு லவ்னு நம்ம முடிவு பண்ண முடியாது ஆனா அவனுக்கு இசை மேல ஃபீலிங்ஸ் இருக்கு.. அட்லீஸ்ட் அவனுக்கு அவ மேல க்ரஷாவது இருக்கும்”
மலரின் முகம் தெளிவடையவில்லை.
மலரின் தெளிவில்லா முகத்தை கண்டவனோ, “இப்பவே நம்ம எதுவும் முடிவு பண்ணிக்க வேண்டாம். இன்னும் கொஞ்ச நாளைக்கு நம்ம தமிழோட நடவடிக்கைய கவனகிக்கலாம்.” என்று கூற அவளுக்கும் அதுவே சரியென்று தோன்றியது. அவனிடம் சரியென்றவள் இதனால் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் வரக்கூடாதென்று வேண்டிக் கொண்டாள்.
மறுநாள், அன்று தமிழுக்கு செமஸ்டர் செய்முறை தேர்வு. தங்களின் தேர்வை முடித்துவிட்டு வந்ததும் எக்ஸ்டர்னல் குறித்தும் எப்படியெல்லாம் எழுத வேண்டும் என்றும் எழிலும் கயலும் அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் முதல் பேட்ஜ் இவன் இரண்டாவது பேட்ஜ்.
கடந்த முறைகளை எல்லாம் விட இந்த முறை நன்றாகவே தயாராகியிருந்தான்.
பரிட்சைக்கு நேரமாகவும் தமிழ் லேப்பிற்கு கிளம்ப எழிலும் லேப் வரை அவனுடன் துணைக்கு வந்தான்.
இருவரும் கீழே இறங்கி வர காரிடாரில் அழுதுகொண்டிருந்த இசையை தோளோடு அணைத்தபடி சமாதானம் செய்து கொண்டிருந்தான் அரவிந்த். அவர்கள் கண்ட எழிலுக்கு “இவன் வேற நேரம் காலம் புரியாம” என்று எரிச்சலாக வந்தது.
தமிழ் பார்த்துவிட்டால் அவ்வளவு தான் இதை பற்றியே யோசித்து கொண்டு பரிட்சையில் கவனம் சிதறிவிடுவான். அவனின் அத்தனை உழைப்பும் வீணாகிவிடும்.
அவன் அறியா வண்ணம் எழில் அவனை அங்கிருந்து அழைத்து செல்ல நினைக்க, அதற்குள் பார்த்துவிட்டான் தமிழ்.
error: Content is protected !!