Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 11

அத்தியாயம் – 11

 

பேசி முடித்த பின் அனைவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட விக்ரமோ கௌஷிக் கூறியதை யோசித்துக் கொண்டிருந்தான். மித்ராவை எப்படி சமாளிப்பது அவளின் கோபத்தை எப்படி குறைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 



Advertisement

 

 ஜான்சி விக்ரமின் அருகில் சென்று அமர்ந்து “விக்ரம் உன்னோட நிலைமை எனக்கு புரியுது மித்ரா கோவத்தை விட்டு உன்ன ஏத்துப்பாலானு தானே யோசிக்கிற, அவளுக்கு உன்ன ரொம்ப புடிக்கும் விக்ரம், உன்ன மறக்க முடியாம தான் மித்ரா இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணிக்காமலே இருந்தா, இப்ப கூட அவளுக்கு உன் மேல இருக்கிறது வெறும் கோவம் மட்டும்தான் வெறுப்பு இல்ல, உன்னால அவ மனசு ரொம்ப காயப் பட்டு இருக்கு அது ஆற கொஞ்சம் டைம் ஆகும் அதுவரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா தான் இருக்கனும் சரியா” என்றார் அவன் தலையை பாசமாக வருடிக் கொண்டே.

 

Advertisement

“கண்டிப்பா நான் பொறுமையா இருப்பேன் அம்மா, எவளோ நாள் ஆனாலும் என் மித்து மனசு மாறுற வரைக்கும் காத்திருப்பேன்”

Advertisement

 

“இனிமேல் எந்த பிரச்சனை வந்தாலும் நீ மித்ராவ காயப்படுத்த மாட்டேன், அவள கைவிட மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி குடு” என்றார் ஜான்சி.

 

Advertisement

“நான் ஏற்கனவே பண்ண தப்ப மறுபடியும் பண்ண மாட்டேன் அம்மா, ஒருமுறை மித்துவை இழந்து நான் பட்ட கஷ்டம் போதும் இனிமேல் என்ன ஆனாலும் அவள விட்டு பிரியவே மாட்டேன்” என்றான் விக்ரம்.

 

காலையில் நடந்த பிரச்சனைகள் இருந்து யாரும் முழுதாக வெளியே வரவில்லை, இரவு உணவின் பொழுது அனைவரும் ஒன்றாக அமர்ந்து அமைதியாக உண்டு முடித்தனர். இரவு உணவிற்கு கூட மித்ரா அறையில் இருந்து வெளிவரவில்லை. மித்ரா வராததை பார்த்து விக்ரமிற்கு கவலையாக இருந்தது. விக்ரமின் முகம் மாற்றத்தை பார்த்த கிராணி.

 

“விக்ரம் மித்ரா பற்றி யோசிக்காமல் நீ ஃபர்ஸ்ட் சாப்பிடு அவளை நான் பாத்துக்குறேன்” என்றார் கிராணி.

 

 

கிராணி சகுந்தலாவை அழைத்து முதல் இரவு காண ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார்.”அத்தை மித்ரா இருக்கிற மனநிலையில இப்போ இந்த சடங்கு எல்லாம் தேவையா”.

 

“நமக்கு ஆயிரம் கஷ்டங்கள் இருக்கலாம் ஆனால் முறைன்னு ஒன்னு இருக்குல்ல சடங்கு சம்பிரதாயத்தை எல்லாம் நம்ம கடைபிடித்து ஆகணும், போய் ஆக வேண்டிய ஏற்பாட பாரு” என்றார் கிராணி.

 

இரவு மித்ராவின் அறையானது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மெத்தையில் ரோஜா பூக்களால் இதய வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மித்ராவிற்கு நடப்பவைகளில் சிறிதும் விருப்பம் இல்லை என்றாலும் கிராணியின் வார்த்தையை மறுக்க முடியாமல் அனைத்திற்கும் உடன்பட்டால். இரவு விக்ரம் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து கம்பீரமான அளவுடன் மெத்தையில் அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் மித்ரா இளஞ்சிவப்பு நிற பட்டுப் புடவை அணிந்து தலை நிறைய மல்லிகை பூச்சூடி தேவதை போல் கையில் பால் சொம்புடன் வந்தாள்.

 

மித்ராவைப் வந்ததும் விக்ரம் கண்ணிமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கதவை சாற்றி விட்டு வந்த மித்ரா பால் சொம்பை டேபிள் மீது வைத்து விட்டு. விக்ரமை ஏரெடுத்தும் பார்க்காமல் பால்கனியில் போய் நின்று கொண்டாள். அந்த நிலா வெளிச்சமும் குளிர்ந்த காற்றும் மித்ராவின் மனதை சற்று அமைதி படுத்தியது. மித்ராவிடம் கோபத்தை எதிர்பார்த்த விக்ரமுக்கு அவளின் அமைதி அவனுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

 

மெதுவாக பால்கனிக்கு சென்று மித்ராவுக்கு சற்று இடைவெளி விட்டு நின்று அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். விக்ரம் வந்தது தெரிந்தும் அவனைக் திரும்பிப் பார்க்காமல் இருந்தால் மித்ரா.

 

“அம்முலு நான் பண்ணது தப்புதான் ப்ளீஸ் என்ன மன்னிச்சிரு” என்று விக்ரம் கூறிக் கொண்டிருக்கும் போதே.

 

“போதும் நிறுத்துங்க மிஸ்டர்.விக்ரம் ஆதித்தன் இதுக்கு மேல நீங்க சொல்றதெல்லாம் கேட்கிறதுக்கு நான் முட்டாள் கிடையாது, என்னோட கிராணி சொன்ன ஒரே வார்த்தைக்காக மட்டும் தான் நான் அமைதியா இருக்கேன் இல்ல எப்பவோ நீங்க கட்டின தாலிய கழட்டி முகத்துல விட்டு எறிஞ்சிட்டு போயிட்டே இருந்திருப்பேன்”

 

“அம்முலு ப்ளீஸ் அன்னைக்கு நான் அப்படி நடந்துக்கிட்டது தப்புதான் அன்னைக்கு என்னோட நிலைமை அப்படி ஏதோ தெரியாம பண்ணிட்டேன் ப்ளீஸ் மன்னிச்சிரு வேணும்னா உன் கால்ல கூட விழுறேன்” என்று கூறி மித்ராவின் காலில் விழ சென்றான்.

 

சற்று பின்னால் நகர்ந்த மித்ரா “விக்ரம் இன்னமும் நீங்க பண்ற டிராமாவை பார்த்து ஏமாற நான் ஒன்னும் பழைய மித்ரா கிடையாது, என்ன விட்டு தள்ளியே இருங்க அதுதான் உங்களுக்கு நல்லது” 

 

“ட்ராமா எல்லாம் எதுவும் பண்ணல மித்ரா ப்ளீஸ் என்ன நம்பு, நான் உன்னை இதுக்கு முன்னாடியும் காதலிச்சேன் இப்பவும் காதலிக்கிறேன் இனிமேலும் உன்னை மட்டும் தான் டி காதலிப்பேன் ப்ளீஸ் என்னை நம்புடி, என்னால நீ இல்லாம வாழ முடியாது அம்முலு, உனக்கே தெரியாம உன் கழுத்துல தாலி கட்டினது தப்புதான் அதுக்காக என்ன மன்னிச்சிடு மித்ரா, பழசெல்லாம் மறந்துறு இனிமேல் புதுசா லைப் ஸ்டார்ட் பண்ணலாம்” 

 

“என்னது மறக்கணுமா என்னடா மறக்க சொல்ற என்ன லவ் பண்ணி ஏமாத்துணியே அதை மறக்கவா, இல்ல என்னை குப்பை மாதிரி வேண்டாம்னு தூக்கி போட்டியே அத மறக்கவா, அன்னைக்கு என்ன பாத்து நீ சொன்னா கேவலமான வார்த்தைகளை மறக்க சொல்றியா, இந்த அஞ்சு வருஷத்துல உன்ன மறக்க முடியாமல் நீ பேசின வார்த்தைகள் நினைச்சு நினைச்சு நான் துடியா துடிச்சேனே அதை மறக்க சொல்றியா சொல்லுடா சொல்லு இப்படி எல்லாத்தையும் பண்ணிட்டு கடைசில எதுவுமே நடக்காத மாதிரி என் கழுத்துல தாலி கட்டிட்டு என்ன மன்னிச்சிடு ஏத்துக்கோன்னு சொல்றியே இது உனக்கே அசிங்கமா இல்ல”

 

“உன்ன பாக்குறதுக்கு முன்னாடி நான் என் ஃபிரண்ட்ஸ்,என் குடும்பம், என் ஊருன்னு அவ்ளோ சந்தோசமா இருந்தேன் டா, நீ எப்ப என் வாழ்க்கையில வந்தியோ அந்த நிமிஷமே என் சந்தோஷம் நிம்மதி எல்லாமே போச்சுடா” என்று ஆவேசமாக கூறி கதறி அழுதால் மித்ரா.

 

“மித்ரா நடந்த எதையும் என்னால மாற்ற முடியாது, அன்னைக்கு நான் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டனா அன்னைக்கு நான் இருந்த சூழ்நிலை அப்படி, அன்னைக்கு நான் பண்ண தப்புதான் நான் ஒத்துக்குறேன் அதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன்”

 

“ஓஓ எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குவ அப்படித்தானே”

 

“ம்ம் கண்டிப்பா ஏத்துக்குவேன் “

 

“அப்போ என்னோட வாழ்க்கையை விட்டே நீ போயிரு இந்த அஞ்சு வருஷம் என் கண்ணு முன்னாடி வராமல் எப்படி இருந்தியோ இனிமேலும் அப்படியே இருந்திரு சரியா” என்றால் மித்ரா.

 

நொடியும் தாமதிக்காது விக்ரம் “சாரி மித்ரா என்னால உன்ன விட்டு போக முடியாது, இனிமேல் என் வாழ்வோ சாவோ அது உன் கூட தான், என் உடம்புல கடைசி சொட்டு உயிர் இருக்கிற வரைக்கும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்” 

 

“நீ பண்ற டிராமாவால்லாம் பார்த்து என் வீட்ல இருக்குறவங்க வேணா உன்னை நம்பலாம் நான் என்னைக்கும் உன்னை நம்ப மாட்டேன் மிஸ்டர்.விக்ரம் ஆதித்தன், நீ எந்த நோக்கத்தோட இப்ப என் கழுத்துல தாலி கட்டினானு எனக்கு தெரியல எதுவா இருந்தாலும் நீ நினைச்சது நடக்க விடமாட்டேன்”

 

“நிஜமாவே உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கணு எனக்கு தெரியல மித்ரா, காலம் தான் என்னோட காதல உனக்கு புரிய வைக்கணும்”

 

“ஹா ஹா ஹா காதலாம் பெரிய காதல், நீ என்ன காதலிச்ச லட்சனம் தான் எனக்கு தெரியுமேடா, மறுபடியும் காதல் காதல்னு சொல்லி இரிடேட் பண்ணாத”

 

 “நான் உன் மேல வச்ச காதல் உண்மையென்று ஒரு நாள் நீ கண்டிப்பா புரிஞ்சுப்ப மித்ரா அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன்”

 

“அதையும் பார்ப்போம்,அப்பறம் நீ என் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் நீ எனக்கு ஹஸ்பண்டும் கிடையாது நான் உங்க வைஃபும் கிடையாது வைஃப் என்ற உரிமையில என் பக்கத்துல நெருங்கிறாதீங்க மிஸ்டர் விக்ரம்”

 

“வெளியே இருக்கிறவங்கள பொருத்தவரைக்கும் வேணா நீங்களும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இருக்கலாம் ஆனா என்ன பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு மூணாவது மனுஷன் தான் என்ன புரிஞ்சதா, நமக்குள்ள நடக்கிற இந்த விஷயம் வெளிய இருக்கிற வங்களுக்கு தெரியக்கூடாது” என்று கோவமாக கூறிவிட்டு அறைக்குள் சென்று மெத்தையில் இருந்த பூக்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு அமைதியாக படுத்து தூங்கிவிட்டாள்.

 

சற்று நேரம் கழித்து உள்ளே வந்த விக்ரம் மித்ராவின் அருகில் சென்று அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இந்த முகத்தை ஒருமுறையாவது அருகில் பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கிய நாட்களை எண்ணிப் பார்த்தான்.

 

 பின் அமைதியாக சென்று அங்கிருந்த சோபாவில் படுத்து தூங்க ஆரம்பித்தான். கண்மூடி இருந்தாலும் அவனின் நினைவுகள் அனைத்தும் எட்டு வருடங்களுக்கு முன் நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்தது. அதே போல் தான் மித்ராவும் பழைய நினைவுகளை தான் எண்ணிக் கொண்டிருந்தாள். 

 

எட்டு வருடங்களுக்கு முன் 

  

“விக்கி கண்ணா எழுந்திரிடா டைம் பாரு ஏழு ஆயிருச்சு இன்னுமும் எழுந்திருக்காம தூங்கிட்டே இருக்க காலேஜ்க்கு டைம் ஆகிற போது கண்ணா” என்று பாசத்துடன் மகனை எழுப்பிக் கொண்டிருந்தார் வாசுகி.

 

 “அம்மா பைவ் மினிட்ஸ் மட்டும் மா ப்ளீஸ் மா” என்று சிறு குழந்தை போல் சிணுங்கி கொண்டிருந்தாள் விக்ரம்.

 

“அம்மா சொன்னா கேப்பே இல்ல கண்ணா எந்திரி எந்திரிச்சு பிரஷ் பண்ணிட்டு இந்த டீயை குடி” என்று வாசுகி கூறியதும் அதை மறுக்க முடியாமல் உடனே எழுந்து பாத்ரூமுக்கு சென்று விட்டான் விக்ரம்.

 

விக்ரமை பொருத்தவரை தாய் சொல்லே அவனுக்கு வேதவாக்கு வாசுகி கூறும் எதையும் அவன் இதுவரை மறுத்துக் கூறியதே கிடையாது. தாய்க்கு பிடிக்காத எதையும் விக்ரம் செய்ய மாட்டான்.

 

விக்ரம் குளித்து விடுத்து கல்லூரிக்கு தயாராகி கீழே வந்தான். காலை உணவாக உப்புமாவை செய்து வைத்திருந்தார் வாசுகி. விக்ரவிற்கு உப்புமா பிடிக்காது சாப்பிட்டால் வாந்தி வருவதைப் போல் உணர்வான். இருந்தும் ஆசையாக பரிமாறிய தாயின் மனதை கஷ்டப்பட வைக்காமல் ஏதோ மருந்தை சாப்பிடுவதைப் போல் உப்புமாவை சாப்பிட்டு முடித்தான்.

 

கல்லூரிக்கு காரில் டிரைவருடன் புறப்பட்டான். அவனுடன் பயிலும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருவதைப் பார்த்து விக்ரமுக்கு ஆசையாக இருக்கும். ஒருமுறை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதால் அவனது அம்மா அவனே இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க மாட்டார். விக்ரமக்கோ இரு சக்கர வாகனம் என்றால் மிகவும் பிடிக்கும் ரோட்டில் யாரேனும் ஸ்போர்ட்ஸ் பைக் சென்றால் அவர்களை மிகவும் ஏக்கமாக பார்ப்பான்.

 

சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான மேல் தட்டு மக்கள் மட்டுமே பயிலும் கல்லூரியில் விக்ரம் முதலாம் ஆண்டு எம்பிஏ படித்துக் கொண்டிருந்தான். இன்ஜினியரிங் இளநிலை கல்வியையும் அதே கல்லூரியிலே முடித்தான். விக்ரமுக்கு ஆர்க்கிடெக் பயில வேண்டும் என்று மிகவும் விருப்பம். ஆனால் வாசுகி விக்ரவின் தாத்தாவின் தொழிலை பார்த்துக் கொள்ளப் போவது நீதான் எனவே பிசினஸ் மேனேஜ்மென்ட் படி என்று கூறிவிட்டார்.அம்மாவின் விருப்பத்தை மீற முடியாமல் கடமைக்காக படித்துக் கொண்டிருக்கிறான். 

 

இருப்பினும் அந்த கல்லூரியில் படிப்பு விளையாட்டு என்று அனைத்திலும் விக்ரமே முதலிடம் பெற்றான். தொடர்ந்து மூன்று வருடங்களாக விக்ரமே கல்லூரியின் ஸ்டுடென்ட் சேர்மன் ஆகவும் உள்ளான். 

 

 விக்ரம் அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் செல்லப்பிள்ளை. விக்ரமை தெரியாத மாணவர்களே அந்த கல்லூரியில் யாரும் கிடையாது. மாணவர்கள் ஏதேனும் பிரச்சினை என்று அவனிடம் வந்தால் உடனே அதை தீர்த்து வைத்து விடுவான். வீண் சண்டை எதற்கும் செல்ல மாட்டான். அடிதடி என்று எதிலும் கலந்து கொள்ள மாட்டான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட நல்லப் பையன்.

 

நல்லது என்று ஒன்று இருந்தால் தீமையும் இருக்க தானே செய்யும் புகைப்பிடிப்பது தண்ணி அடிப்பது பெண்களை கேலி செய்வது அடிதடி என்று அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்டவன் தான் அஜய். பிரபல தொழிலதிபரின் ஒரே வாரிசு பணத்திமிரில் வரைமுறை இல்லாமல் நடந்து கொள்பவன் அஜயின் ஒரே எதிரி விக்ரம். அஜய் செய்யும் தவறுகளை எல்லாம் விக்ரம் கல்லூரி முதல்வரிடம் கூறி பலமுறை தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறான். எனவே அஜய் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விக்ரமனை சிண்டி பார்ப்பான். 

 

விக்ரமின் தந்தை அவர்களுடன் இருக்க பிடிக்காமல் ஓடிப் போய்விட்டதாக குறி அவனை கிண்டல் செய்வான். விக்ரமை மம்மாஸ்பாய் என்று என்று தான் அழைப்பான் அஜய்.

 

அஜய் கல்லூரிக்கு வருவதே விக்ரமை கிண்டல் கேலி செய்து அவனை கஷ்டப்பட வைக்கத்தான். எப்பொழுதும் அவனே சீண்டிக் கொண்டே இருப்பான்.

 

ஒரு நாள் காலையில் விக்ரம் கிரவுண்டில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுது பெல் அடிக்கும் சத்தம் கேட்டு விக்ரம் மற்றும் அவனது நண்பர்கள் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது அதி விரைவாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று விக்ரமின் முன் மோதுவது போல் வந்து சடன் பிரேக் அடித்து நின்றது. விக்ரம் அதிர்ச்சியில் சிலையாக நின்று விட்டான்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!