Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 14

அத்தியாயம் – 14

மித்ரா பிரின்ஸ்பால் அறைக்கு சென்று 15 நிமிடம் கழித்து வெளியே வந்து தன் தோழிகள் அருகில் சென்றாள்.

“பேபி என்னாச்சு பேபி எதுக்கு பிரின்ஸ்பால் உன்னை கூப்பிட்டாங்க ஏதாவது பிரச்சனையா” என்றால் ரிங்கு சற்று பதட்டத்துடன்.

“பிரச்சனை எல்லாம் எதுவும் இல்ல ரிங்கு, சும்மா பேசறதுக்காக கூப்பிட்டாங்க அவ்வளவு தான்” என்றால் மித்ரா.



Advertisement

“ஆமாம் பெரிய ஆளு இவ இவகிட்ட பேசுறதுக்காக கூப்பிட்டாங்க, நல்ல டோஸ் வாங்கிட்டு வந்துருப்ப இங்க வந்து நடிக்காத” என்றான் விக்ரம் கிண்டலாக. மித்ரா அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கு

“ஷாம் நெக்ஸ்ட் கிளாஸ் அந்த ரம்பத்தோடது, கட்டடிச்சுட்டு கேன்டீன் போலாம் வா” என்றான் சூர்யா, அவனுடன் அர்ஜுன் ரகு இருந்தனர்.

“டேய் என்ன பேருடா இது ஷாம், பையன கூப்பிடுற மாதிரி கூப்பிடுற, அவ பேரு சங்கமித்ரா தானே அப்படி கூப்பிடுடா” என்றான் விக்ரம்.

Advertisement

“சீனியர் சங்கமித்ரா ரொம்ப பெரிய பேரா இருக்கு சீனியர், அதான் சுருக்கி ஷாம்னு கூப்பிடுறோம், அது மட்டும் இல்லாம இவள பார்த்து யாராவது பொண்ணுன்னு சொல்லுவாங்களா” என்றான் சூர்யா சிரித்துக்கொண்டேன்.

Advertisement

“டேய் என்ன பார்த்தா பொண்ணு மாதிரி தெரியலைனா சொல்லுற உன்னை” என்று கூறிக்கொண்டு சூர்யாவை குனிய வைத்து அவன் முதுகிலேயே நான்கு அடிப்போட்டால் மித்ரா. இவர்களது சேட்டையை பார்த்து அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தன.

“இப்படி ஆம்பள பையன் மாதிரி பிஹேவ் பண்ணா,அப்படி தான் சொல்லுவான்” என்றான் விக்ரம்.
மித்ரா அவனை முறைத்துப் பார்க்க.

“மச்சான் ஷாம் கோபப்படாத வா, உன் கோபத்தை குறைப்பதற்கு ஜில்லுனு ஐஸ்கிரீம் வாங்கி தரேன் ஓகேவா” என்று செல்லம் கொஞ்சி மித்ராவை அங்கிருந்து அழைத்து சென்றான் அர்ஜுன்.போகும் போது

Advertisement

“ஷாம் உன்ன யாராவது கிண்டல் பண்ணா கோவப்பட்டு திட்டுற, இல்லனா அடிக்குற ஆன விக்ரம் சீனியர் ஏதாவது சொன்ன மட்டும் அமைதியா இருக்குற ஏன்” என்றான் சூர்யா.

“விக்ரம் என்ன கிண்டல் பண்ண மட்டும் எனக்கு கோவமே வரமாட்டேங்குது அது ஏன்னு எனக்கே தெரியல மச்சான், சில சமயம் அவன் கிண்டல் பண்றது கூட எனக்கு பிடிக்குது டா”என்றாள் மித்ரா.

“அப்போ உனக்கு சீனியர் மேல சம்திங் சம்திங் போல”

“சீச்சி அப்படிலாம் எதுவும் இல்லடா” என்றாள் மித்ரா வேகமாக.

“ஓகே விடு மச்சான்,இப்ப எதுவும் இல்லன்னா சரி இனிமேல் அப்படி இருந்தா நீ என்கிட்ட தான் ஃபர்ஸ்ட் சொல்லணும் சரியா” என்றான் சூர்யா.

“அப்படி நடக்க சான்சே இல்லடா” என்றாள் மித்ரா.

இன்னும் அரைமணி நேரத்தில் அனைத்து மாணவர்களையும் பங்க்ஷன் ஹாலுக்கு வருமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தார் பிரின்ஸ்பால். விளையாட்டுத்துறை அமைச்சர் வந்திருப்பதாகவும் அவரை வரவேற்பதற்காக ஸ்பீச் ஒன்றை பேசுமாறும் விக்ரமிடம் கூறினார் ஆசிரியர். சற்று நேரத்தில் மாணவர்கள் அனைவரும் அரங்கத்தில் கூடிவிட ஷாம் அவளது நண்பருடன் கேண்டின் சென்று விட்டு நிதானமாக வந்து கடைசி வரிசை நோக்கி சென்றால்.

“பேபி இங்க வா” என்று தாங்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு அழைத்தால் ஸ்ரேயா, அவள் அருகில் ரிங்கு கனி அமர்ந்து இருக்க பின் வரிசையில் சரண் அமர்ந்திருந்தான். மித்ராவை இங்கு வா என்று சைகை செய்தான். மித்ரா தன் நண்பர்களிடம் கூறிவிட்டு தோழிகளுடன் சென்று அமர்ந்தாள்.

“ஸ்ரே இப்போ எதுகாக எல்லாரையும் இங்க வர சொல்லிருக்காங்க” என்றாள் ரிங்கு.

“ஏத்துக்கா இருந்தா என்ன பேப், கிளாஸ் கட் ஆச்சுல அது போதும் நமக்கு” என்றாள் ஸ்ரேயா.

“உன்னலாம் திருத்தவே முடியாது ஸ்ரே” என்று ரிங்கு கூற இஇ என்று பல்லை கட்டி இளித்தால்.

சற்று நேரத்தில் பிரின்ஸ்பால் காலேஜ் கரஸ்பாண்டன், முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சென்று வரவேற்று விளையாட்டுத்துறை அமைச்சரை மேடையில் இருந்த இருக்கையில் அமர வைத்தனர். இந்த நிகழ்வுகளை வந்திருந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் அவர்களது கேமராக்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டனர்.

விக்ரம் வரவேற்புரையை கூறி அமைச்சரை வரவேற்றான். அமைச்சர் தான் பேசுவதாக கூறி மைக்கின் முன் வந்து நின்று “வணக்கம் மாணவ மாணவிகளே இப்ப நான் எதுக்கு வந்திருக்கேனு நேரா விஷயத்துக்கு வந்துடறேன் நான் இங்க ஒருத்தர பாராட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை தர்றதுக்காக தான் வந்து இருக்கேன் அது யாருன்னா” என்று அமைச்சர் கூறிக் கொண்டிருக்கும் போது நடுவில் வந்த ஆசிரியர் ஒருவர்.

 

“சார் நீங்க அவங்க பேர சொல்றதுக்கு முன்னாடி அவங்க கலந்து கொண்ட போட்டியோட வீடியோவை பாத்துட்டு அதுக்கு அப்புறம் அவங்களோட பேர சொல்லலாம்” என்றார் ஆசிரியர்.

 

“அப்படியா அப்ப போடுங்கப்பா முதல்ல அந்த வீடியோவை நானும் பாத்துகிறேன்” என்றார் அமைச்சர்.

 

“திரையில் அந்த போட்டி ஆரம்பம் காண்பிக்கப்பட்டது. அதில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். அந்த பைக் ரேஸ் ஆனது மலைப்பகுதிகளில் நடைபெற்றது. குண்டு குழிகளும் ஒடுக்கமான பாதையும் ஆபத்தான வளைவுகளும் பெரிய பெரிய பள்ளங்களும் நிறைந்து இருந்தது அந்த பாதை, இது அனைத்தையும் கடந்து வருபவர்களே போட்டியின் வெற்றியாளர். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் சில வினாடி தவறினாலும் அவரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை”

 

போட்டி ஆரம்பமானதுமே ஸ்ரேயா ரிங்கு இருவரும் மித்ராவை பார்த்தனர். மித்ரா அவர்களைப் பார்த்து கண் ஜாடை செய்தால். போட்டியாளர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் போட்டியாளர்களின் முகம் பார்ப்பவருக்கு தெரியவில்லை, கடைசியாக பல இடையூறுகளுக்கு பின் ஒரு போட்டியாளர் பினிஷிங் பாயிண்ட் நெருங்கி வெற்றி பெற்றார்.

அவரை நேராக அங்கிருந்த விழா மேடைக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்ற பின் தன் முகத்தில் இருந்த ஹெல்மட்டை கழட்டினால் மித்ரா. மித்ராவின் முகத்தைப் பார்த்தவுடன் கல்லூரியில் இருந்த மாணவர்களின் கர ஓசை சத்தம் அந்த அரங்கத்தையே அதிர வைத்தது. நண்பர்கள் அனைவரும் மித்ராவை நினைத்து பெருமிதம் கொண்டனர் எங்கள் தோழி என்று.சரண் மகிழ்ச்சியுடன் மித்ராவை அனைத்து “கலக்கிட்ட மச்சி” என்றான்.

 

விக்ரமின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்தது, மித்ராவிடம் இருந்து இப்படி ஒரு செயலை விக்ரம் எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியில் சிலையாக உறைந்து விட்டான்.

 

வீடியோ முடிந்ததும் அமைச்சர் சங்கமித்ராவின் பெயரை கூறி அவளை மேடைக்கு வருமாறு அழைத்தார். மித்ரா எழுந்து மேடை நோக்கி செல்ல.

“சிங்கப் பெண்ணே… சிங்கப் பெண்ணே…
ஆணினமே உன்னை வணங்குமே…
நன்றிக் கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே…

ஒருமுறை தலைகுனி…
உன் வெற்றிச் சிங்கம் முகம்…
அவன் பார்ப்பதற்கு மட்டுமே…

ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…உன்னை பெண்ணென்று…
கேலி செய்த கூட்டம் ஒருநாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…” என்ற பாடல் ஒலிக்க தலை நிமிர்ந்து கம்பீரமாக மேடை நோக்கி சென்றாள் மித்ரா.

 

மேடையின் ஓரம் நின்று இந்த விக்ரமை கடந்து செல்லும் போது “பெண்ணென்று…
கேலி செய்த கூட்டம் ஒருநாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு” என்ற வரிகள் ஓடிக்கொண்டிருந்தது. மித்ரா அமைதியாக விக்ரமை பார்த்துவிட்டு சென்று விட்டாள்.

 

“இவள நம்ம கொறச்சி எடை போட்டோம்மோ” என்று எண்ணினான்.

 

மித்ராவை பாராட்டி அவளுக்கு கல்லூரி சார்பாக ஒரு கோப்பையை வழங்கினார், அமைச்சரோ அரசு அளித்த ஐந்து லட்சம் ஊக்கத்தொகையுடன் தன்னுடைய சார்பாகவும் மூன்று லட்சம் காசோலையை வழங்கினார். அதன் பின் மித்ராவை பேசுமாறு அழைத்தனர்.

 

” ஹாய் பிரண்ட்ஸ், இந்தப் போட்டில நான் கலந்துகிட்ட மூணு மாசத்துக்கு மேல ஆச்சு எனக்காக ஊக்கத்தொகை அளித்த விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி, நான் இந்த வெற்றியை என்னோட பிரண்ட்ஸ் ஸ்ரேயாக்கும் ரியானாவுக்கும் டெடிகேட் பண்றேன்” என்றாள் மித்ரா தோழிகள் இருவரும் கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“நான் எந்த போட்டியில் கலந்துக் கிட்டாலும் உன்னால முடியும் மித்ரானு எனக்கு ஊக்கம் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க, நான் சின்ன வயசுல இருந்தே ஒரு இடத்தில இருக்க மாட்டேன் ஏதாவது வால்த்தனம் பண்ணிக் எங்கேயாவது எனக்கு அடிபட்டுக்கிட்டே இருக்கும், எனக்கு மருந்து போடுறதுக்காகவே என்னோட ரியானா பேக்ல எப்பவும் ஃபர்ஸ்ட் எய்ட் கிட் இருந்துகிட்டே இருக்கும் இப்போ வரைக்கும்” என்று கூறி சிரித்தால் மித்ரா.

 

“நான் எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு என்ன நம்பி எனக்கு முழு சுகந்திரமும் குடுத்த என் குடும்பத்தை மாதிரியும், ரியானா, ஸ்ரேயா மாதிரி பிரண்ட்ஸும் அமைஞ்சா நீங்களும் எல்லாத்துலயும் வின் பண்ணலாம்,தேங்க்யூ சோ மச் பிரண்ட்ஸ், ஐ லவ் யூ சோ மச்” என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

 

இறுதியாக கல்லூரி கரஸ்பாண்டன் மித்ராவைப் போல் பெண்கள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்று கூறி மித்ராவை வாழ்த்தி அந்த விழாவை முடித்து வைத்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் பதிந்து கொண்டனர்.

 

விழா நிறைவு பெற்றதும் பத்திரிக்கையாளர்கள் அமைச்சரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மித்ராவை பற்றி கூறுமாறு பத்திரிகையாளர் ஒருவர் கேட்க. அவள் எங்கள் தஞ்சை மண்ணை சேர்ந்த பெண், வீரமங்கை அவளை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறி முடித்தார்.

 

மித்த பின் மித்ராவிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது அவளது தோழிகள் இருவரைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. போட்டோகிராபர் ஒருவர் பெண்கள் மூவரையும் ஒன்றாக நிற்க வைத்து அழகான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். மித்ராவின் நண்பர்கள் பட்டாளம் ஒன்று கூடி மித்ராவை பாராட்டி தீர்த்து விட்டனர்.

 

“மச்சி போட்டியில வின் பண்ணி பெரிய பெரிய அமௌன்ட் எல்லாம் வாங்கிருக்க, அதுக்கு எங்களுக்கு பெரிய ட்ரீட்டா வைக்கிற” அர்ஜுன்.

 

“ட்ரீட் தான வெச்சிரலாம் மச்சான், எப்போ எங்க வேணும்னு சொல்லு”
மித்ரா

 

“எட்டு லட்ச ரூபா அமௌன்ட் வந்து இருக்குல்ல உனக்கு அதுல எங்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல்ல நீ ட்ரீட் குடு” நிகில்.

“ஸ்டார் ஹோட்டல்ல தானடா, இன்னைக்கு நைட்டு ட்ரீட் கொடுக்கிறேன் ஓகேவா அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை இருக்குடா அதை முடிச்சிரலாம்” என்று கூறி கயலை அழைத்து அவளது கையில் செக்களை கொடுத்தாள்.

 

“மித்ரா இதை ஏன்டா இப்ப என்கிட்ட குடுக்குற” என்றால் கயல் குழப்பத்துடன்.

“கயல் பேபி இத ஆசிரம ஃபாதர் கிட்ட கொடுத்துடு அங்க இருக்குற குழந்தைகள் படிப்புக்கு யூஸ் பண்ணிக்க சொல்லு” என்றாள் மித்ரா.

கயல் ஏதோ மறுத்து கூற வர அதை தடுத்த மித்ரா “கயல் ப்ளீஸ் எதுவும் சொல்லாத இந்த அமௌன்ட் வச்சு நான் என்ன பண்ண போறேன், உன்கிட்ட இருந்தாலாவது நாலு குழந்தைகளுக்கு படிப்புக்கு யூஸ் ஆகும்” என்றாள் மித்ரா.

 

“மச்சான் என்ன மச்சான் இப்படி பண்ணிட்ட, எல்லா பணத்தையும் கயல் கிட்ட கொடுத்துட்டா அப்புறம் ட்ரீட்டுக்கு என்ன மச்சான் பண்றது” என்றால் அர்ஜுன் சோகமாக.

 

“டேய் எருமை உனக்கு உன் கவலை, நீ கண்டிப்பா வைக்கிறேன் டா கவலைப்படாதே என்கிட்ட பணம் இருக்கு ஓகேவா” என்று கூறிவிட்டு திரும்பி பார்க்க அங்கு நண்பர்களுடன் தம் அடித்துக் கொண்டிருந்த சரணை பார்த்து கோவம் அடைந்த மித்ரா மரக் கிளையிலிருந்து குச்சி ஒன்றை உடைத்துக் கொண்டு சரண் அருகில் சென்று அவனை அடிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

” லூசு லூசு அடிக்காத டி வலிக்குது”  என்று கூறிக் கொண்டே அங்கிருந்து நண்பர்களை சுற்றி சுற்றி ஓடினான்.

 

“வலிக்குதா நல்லா வலிக்கட்டுண்டா உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவே வராதாடா எருமை,இனிமேல் தம் அடிப்பியா அடிப்பியா” என்று கூறிக் கொண்டே தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தாள்.

 

“ரகு இங்க என்னடா நடக்குது, சரணுக்கு தன் எல்லாக் கெட்ட பழக்கமும் இருக்குதே, இப்போ என்னவோ புதுசா தம் அடிக்குற மாதிரி இப்படி போட்டு அடிக்குற அவனை, இந்த மித்ராக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு” என்றான் விக்ரம்.

 

“மச்சான் நீ பழைய சரண பத்தி பேசுற இப்ப இருக்கிறது. எங்களோட ஃபிரண்ட் சரண், சரண் முன்ன மாதிரி யெல்லாம் இல்லடா ரொம்ப மாறிட்டான், இப்போ இப்பல்லாம் எந்த கெட்ட பழக்கமும் அவனிடம் கிடையாது, எப்பயாவது தம் அடிப்பான் அதுவும் மித்ரா கண்ணில் பட்டுருச்சுன்னா இப்படி அடி வாங்குவான் எங்களுக்கு பார்த்து பார்த்து பழகி போச்சு மச்சான்” என்றான் ரகு மகிழ்ச்சியுடன்.

 

“சரண் கிட்ட எப்படிடா திடீர்னு இவ்ளோ மாற்றம், அவன் இப்படி எல்லாம் மாறுவான்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்லை டா” விக்ரம்.

 

“இதுக்கு முன்னாடி அவன் சேர்க்கை சரியில்லாமல் இருந்தது அதனால ரொம்ப கெட்டவனா இருந்தா, இப்போ நல்லவங்களோட பழகுறான் நல்லவனா மாறிட்டான்” என்றான் தன் நண்பர்களை பார்த்து பெருமையாக.

 

“மச்சான் ப்ளீஸ்டா, இனிமேல் தம் அடிக்க மாட்டேன் விட்டுருடா ப்ளீஸ், ரொம்ப வலிக்குது, என் செல்லம்ல என் மித்ரா குட்டில” என்று மித்ராவிடம் கெஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தான் சரண்.

 

“சரி போனா போதும்னு விட்ருவேன் இனிமேல் தம் அடிச்சா மவனே கொன்றுவேன், இன்னைக்கு நைட்டு பைவ் ஸ்டார் ஹோட்டல்ல ட்ரீட் கொடுக்கிறேன் ஒழுங்கா வந்து தொலை” என்றாள் மித்ரா.

 

“நீ கூப்பிட்டு நான் வராம இருப்பேனா மச்சான் கண்டிப்பா வரேன்டா” சரண்.

 

விக்ரம் வாசுகி இடம் இரவு நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறி அனுமதி வேண்டினான். வாசுகி இரவு நேரம் வெளியில் செல்லக்கூடாது என்று மறுத்துவிட்டார். அப்பொழுது அங்கு வந்த கவிதா.

“அத்தை நான் என்னோட பிரண்டு பர்த்டே பங்க்ஷனுக்காக போறேன் அத்தை எனக்கு துணைக்கு விக்ரம் அத்தான அனுப்பி வைங்க” என்றாள் வாசுகி அண்ணன் மகள் கவிதா.

கவிதா விக்ரம் படிக்கும் அதே கல்லூரியில் தான் முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். கவிதாவிற்கு சிறு வயது முதலே ரகுவை மிகவும் பிடிக்கும் அந்தப் பிடித்தம் எப்பொழுது காதலாக மாறியது என்று அவளுக்கே தெரியாது. ரகுவை ஒரு தலையாக காதலித்து வருகிறாள் கவிதா. ரகு இவளை தோழியாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். ரகுவின் மூலம் கவிதாவும் அந்த நண்பர்கள் அணியில் ஒரு அங்கமாக மாறி இருந்தால். வாசுகிக்கு தன் செல்ல மருமகளான கவிதாவை தன் மகன் விக்ரமிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

கவிதா இரவு நேரம் வெளியே செல்வதாக கூறவும், முதலில் மறுத்த வாசுகி பின் கவிதாவின் கெஞ்சல்கள் கொஞ்சல்களால் செல்ல அனுமதித்தார்.

 

“நான் பாட்டிக்கு போகணும்னு கேட்டதுக்கு மட்டும் முடியாதுன்னு சொல்லிட்டு இப்ப கவி கேட்டது மட்டும் ஓகேன்னு சொல்றேங்கமா, என்னல எல்லாம் அவ கூட போக முடியாதுமா” என்றான் விக்ரம்.

 

“விக்ரம் பாவம்பா கவி, நைட் நேரம் பொம்பள பொண்ணா தனியா வெளியே அனுப்ப முடியாது பா கொஞ்சம் கூட போயிட்டு வாப்பா” என்றார் வாசுகி.

 

தாயின் வார்த்தை மீற முடியாத விக்ரம் தயாராகி கவிதாவுடன் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். விக்ரம் முகம் சோகமாக இருப்பதை பார்த்து சிரித்த கவிதா.

 

“அத்தான் இப்ப நம்ம போக போறது என் பிரண்டோட பர்த்டே பார்ட்டிக்கு இல்ல, மித்ரா கொடுக்கப் போற பார்ட்டிக்கு தான், எப்படியும் அத்தை உங்களை வெளியே போக விட மாட்டாங்கன்னு தெரியும் அதனால தான் இப்படி ஒரு பொய்ய சொன்னே” என்றாள் கவி.

“தேங்க்யூ சோ மச் கவி, நிஜமாவே நீ புத்திசாலி தான் போ” என்றான் விக்ரம்.

இரவு பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பாட்டு டான்ஸ் என்று அந்த ஹோட்டலையே அதிர வைத்துக் கொண்டிருந்தனர்.அங்கு மகிழ்ச்சிக்கு சந்தோசத்திற்கும் குறைவே இல்லை,

 

மறுநாள் காலை மித்ரவிற்கு வர போகும் பெரிய ஆப்பை பற்றி தெரியாமல் இங்கு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தாள்.

💐💐💐💐💐 ஹாய் சகோ வர வர கதை எழுதுற ஆசை குறைஞ்சிட்டே வருது, உங்களோட கமெண்ட்டும் லைக்கும் தான் எனக்கு ஒரு பூஸ்ட் மாதிரி, அது குறைய குறைய என்னோட ஆர்வமும் குறைஞ்சுகிட்டே போகுது, என்னோட கதை எதுனால உங்களுக்கு பிடிக்கலன்னு சொல்லுங்க ப்ளீஸ், நான் இப்பதான் கதை எழுத ஆரம்பிச்சி இருக்கேன், நான் ஏதாவது மிஸ்டேக் பண்ண ப்ளீஸ் சொல்லுங்க நான் கண்டிப்பா திருத்திக்கிறேன்.நீங்க எதுவுமே சொல்லாம இருந்தா ரொம்ப குழப்பமாவும் மனம் கஷ்டமாவும் இருக்கு சகோ 💐💐💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!