அரசி(க்கி)யே என் அடிமையே – 18
அத்தியாயம் – 18
நண்பர்கள் அனைவரும் மணிகர்ணிகாபுரியை வந்தடைந்தனர். இவர்களை வரவேற்க வினித் மற்றும் சஞ்சய் இருவரும் விமான தளத்திற்கு சென்று இருந்தனர். இவர்கள் இருவரும் நண்பர்களை வரவேற்று அவர்களின் நலனை பற்றி விசாரித்தனர்.
Advertisement
“மித்ரா இப்போ எப்படி இருக்கிறாள் நடக்க ஆரம்பிச்சிட்டாளா” நிகில்.
Advertisement
Advertisement
“இப்ப நல்லா இருக்கா நிகில், ஸ்டிக் வச்சு மெதுவா நடக்குற நெக்ஸ்ட் வீக் காலேஜ் வந்துருவா” வினித்.
Advertisement
“அவ எங்க இருக்கா வினித், நாங்க வரது அவளுக்கு தெரியாது தான” ஸ்ரேயா.
“மேடமுக்கு, பர்த்டேக்கு கிப்ட்டா அப்பா புதுசா Airbus a319 ஒன்னு வாங்கி கொடுத்து இருக்காங்க, அதுல தான் ஒரு ரவுண்டு போயிருக்கா” என்று வினித் கூற தோழிகள் இருவரை தவிர மற்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். விக்ரமோ அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டான்.பிலைட் கிப்ட் பண்ணுற அளவுக்கு மித்ரா அப்பா வசதியானவரா என்று நினைத்தான்.
அப்பொழுது விமானத்தின் சத்தம் ஒன்று கேட்டது.
அனைவரும் சப்தம் வந்த திசையை திரும்பி பார்க்க சிறிய ரக விமானம் ஒன்று வந்து தரையிறங்கியது. அதிலிருந்து மித்ரா ஸ்டிக் உதவியுடன் மெதுவாக நடந்து வந்தாள். அவளைப் பார்த்ததும் தோழிகள் இருவரும் ஓடி சென்று அணைத்துக் கொண்டனர். விக்ரம் அவளை தலை முதல் கால் வரை பார்த்தான் அவளது உடலில் இருந்த காயங்கள் ஆறி விட்டனவா என்று.
நண்பர்கள் அனைவரையும் ஒன்றாக இங்கு பார்த்ததில் மித்ராக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவளது கண்கள் விக்ரமை விட்டு நகர மறுத்தது.இப்படியே ஓடி சென்று விக்ரமை அனைத்துக் கொள்ள வேண்டும் என்று அவளது மனது நினைத்தது.
“மித்து கிராணி எங்க இருங்காங்க” ரிங்கு.
“இன்னைக்கு சபை நாள் ரிங்கு, எல்லாரும் அங்க தான் இருக்காங்க, நீங்க வாங்க அரண்மனைக்கு போகலாம்” என்று கூறி மித்ரா அனைவரையும் கார்களில் அழைத்து சென்றாள்.
அரண்மனையை பார்த்ததும் அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றனர். “என்ன மித்ரா உன்னோட வீடு இவ்ளோ பெருசா இருக்கு” கார்த்திக்.
“டேய் கார்த்திக் இது வீடு இல்லடா பேலஸ், ராணி ஓட அரண்மனை” என்று கூறி மணிகர்ணிகாபுரியைப் பற்றியும், மித்ராவின் ராஜகுடும்பத்தை பற்றியும் கூறினாள் ஸ்ரேயா.
“இந்த காலத்துல இப்படி ஒரு ஊரா, மித்ரா நான் படத்துல மட்டும் தான் அரசவை எல்லாம் பார்த்து இருக்கேன், ப்ளீஸ் பா இங்குள்ள அரசவைக்கு என்ன கூட்டிட்டு போறியா” என்றான் சூர்யா.
சற்று நேரம் யோசித்து விட்டு அனைவரையும் அரசவைக்கு வருமாறு தன்னுடன் அழைத்து சென்றாள். குடும்பத்தினர் அனைவரும் அமரும் பகுதிக்கு நண்பர்களே அழைத்து சென்றாள். அங்கு அரசவையில் அமர்ந்திருந்த ஜான்சி ராணியை பார்த்ததும் “கெளதம் ஓட அம்மா ஜான்சி ஆண்ட்டியா ராணி, அவங்கள பார்க்கவே ரொம்ப கம்பிரமா அழகா இருக்காங்க இந்த டிரஸ்ல” என்றாள் சுருதி.
“என்ன அந்த ஆசனம் மட்டும் காலியா இருக்கு அங்க யாரு உக்காருவாங்க” அர்ஜுன்.
“அந்த ஆசனத்துல இளவரசி தான் உக்காருவாங்க” ரிங்கு.
“இளவரசியா அவாங்க யாரு, ஏன் அங்க உக்காரல” நிகில்.
“நம்ம சங்கமித்ராராணி தான், இந்த நாட்டோட இளவரசி அவளுக்கு இன்னும் இளவரசியா பட்டாபிஷேகம் பண்ணல, அது முடிஞ்சாதான் அந்த ஆசனத்தில் அவளால உட்கார முடியும்” என்று ஸ்ரேயா கூற விக்ரம் அதிர்ச்சியாகி மித்ராவை பார்த்தான் விக்ரமின் இதயம் உடைந்து நொறுங்குவதை போல் வலி ஏற்பட்டது.
“மித்ரா ஸ்ரேயா என்னென்னமோ சொல்ற அதெல்லாம் உண்மையா” சரண்.
“ஆமா சரண், இங்கு நடக்கிறது எல்லாம் பார்த்து ப்ளீஸ் என்னை யாரும் ஒதுக்கி வச்சுடாதீங்க பா நான் எப்பவும் உங்க பிரண்ட் மித்ரா தான் சரியா” என்றாள்.
சபை முடிந்த உடன் கிராணியை நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தால் மித்ரா. அனைவரையும் அழைத்து சென்று அரண்மனை சுற்றி காண்பித்தாள் அதன் பின்னர் அனைவரும் உணவருந்தி விட்டு உறங்க சென்றனர்.
மறுநாள் காலை கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு யானைகள் குதிரைகள் முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்க காவலர்கள் படை சூழ அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் ராஜ உடை அணிந்து சங்கமித்ராராணி அழைத்து வரப்பட்டாள். நண்பர்கள் அனைவரும் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். விக்ரமுக்கு மித்ராவை இப்படி காண்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் தன் காதல் நிறைவேறாததை நினைத்து கவலையாக இருந்தது.
அரசவைக்கு அழைத்து வரப்பட்ட மித்ரா அங்கிருந்த பெரியவர்கள் அனைவரையும் வணங்கி ஆசிர்வாதம் பெற்று இளவரசிக் காண அரியாசனத்தின் அருகில் போய் நின்றாள். கிராணி வைரக்கற்கள் பதித்த கிரீடம் ஒன்றை மித்ராவின் தலையில் சூடினார். ஜான்சிராணி மிகுந்த வேலைபாடுகள் செய்யப்பட்ட கூர்மையான வாள் ஒன்றை மித்ராவின் கையில் கொடுத்தார். அதன் பின் உறுதிமொழி ஏற்று மித்ரா இளவரசி காண அறியாசனத்தில் அமர்ந்தால்.
மித்ரா இளவரசியாக ஆசனத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து அன்னபூரணியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. குடும்பத்தினர் அனைவரும் அவளை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பதவியேற்பு விழா நிறைவு பெற்றதும் அனைவரும் ராஜ விருந்துண்டு விட்டு அன்று மாலையே கிளம்பி மும்பை சென்றனர். அங்கு அவர்களுக்கு சொந்தமான ஐந்து நட்சத்திர விடுதியில் மித்ராவின் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. மும்பையில் உள்ள பெரும் தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் அனைவரும் வருகை தந்து மித்ராவை வாழ்த்தினார்.
நண்பர்கள் ஒவ்வொருவராக சென்று மித்ராவிற்கு பரிசுகளை வழங்கினர். மித்ரா விக்ரம் தரும் பரிசுக்காக ஆவலாக காத்திருந்தாள். ஆனால் விக்ரமோ அவளுக்காக தான் சொந்தமாக டிசைன் செய்து வாங்கி வந்த இதே வடிவிலான டாலர் பொருத்தப்பட்ட செயினை மித்ராவிடம் தறாமல், விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தான்.
விக்ரம் முதல் முதலாக தரும் பரிசு என்பதால் மித்ரா மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டாள்.விக்ரம் வடிவமைத்த இதய வடிவ டாலரின் மேல் பகுதியில் விக்ரம் மித்ரா இருவரின் பெயர்களும் இதய வடிவில் பொறிக்கப்பட்டு நடுவில் சிவப்பு வைரக்கல் ஒன்று இருக்கும். அந்தப் டாலரை ஓபன் செய்தால் அதில் மாங்கல்யத்தின் அமைப்பு இருக்கும். வெளிப்புறமாக பார்த்தால் இதய வடிவ டாலராகவும் அதைத் திறந்தால் மாங்கல்யமாகவும் இருக்குமாறு வடிவமைத்திருந்தான் விக்ரம்.
மித்ராவின் பிறந்தநாள் விழா முடிந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது, மித்ரா கல்லூரிக்கு வந்ததிலிருந்து விக்ரம் அவளுடன் பேசுவதையும் பார்ப்பதையும் தவிர்த்து வந்தான். மித்ராவே வழியே சென்று பேசினாலும் ஏதாவது காரணம் கூறி அங்கிருந்து சென்று விடுவான். விக்ரமின் இந்தப் புறக்கணிப்பு மித்ராவிற்கு வருத்தத்தை அளித்தது.
தன்னுடைய வருத்தத்தை ஸ்ரேயா சரண் இருவரிடமும் கூறினாள். சரண் இது பற்றி ரகுவிடம் பேசுமாறு கூறினான். பின் ரகுவை அழைத்து விக்ரமை பற்றி கேட்டபொழுது முதலில் கூற மறுத்த ரகு பின் மித்ராவின் வற்புறுத்தலால் கூற ஆரம்பித்தான் ” மித்ரா நீ பணக்கார வீட்டு பொண்ணுன்னு தெரியும் ஆனா அரச குடும்பத்தை சேர்ந்த பொண்ணா இருப்பேன்னு கொஞ்சமும் நினைச்சு பார்க்கல, உன்னோட லெவலுக்கும் அவனோட லெவலுக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லை அதனால உன்னை மறக்குறதுன்னு அவன் முடிவு பண்ணிட்டான், அது மட்டும் இல்லாம உனக்கு தான் அவன் மேல எந்த பீலிங்ஸ் இல்லைனு சொல்லிட்டயாம்” என்றான் ரகு.
ரகு கூறியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மித்ரா. அதன் பின் ரகு மற்றும் சரண் இருவரிடமும் ரகசியமாக சில வேலைகளை செய்யுமாறு கூறினாள். அந்த வார விடுமுறை நாட்களை கொண்டாட நண்பர்கள் அனைவரையும் மணாலி அழைத்து சென்றாள் மித்ரா. அவர்களுடன் விக்ரமை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தான் ரகு.
மணாலியில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க,அதிகாலை நேரம் விக்ரமின் அறை கதவைத் தட்டி விக்ரமை எழுப்பி தன்னுடன் வருமாறு அழைக்க சென்றால் மித்ரா. முதலில் வர மறுத்த விக்ரம் அவளின் வற்புறுத்தலால் அவளுடன் சென்றான். இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர்.
வெண்பனிகள் சூழ்ந்த அந்த மலைப்பகுதியில் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு விக்ரமின் கைபிடித்து அழைத்து சென்றாள். அந்தப் பகுதி முழுவதும் சிவப்பு வண்ண ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டு பார்க்கவே அற்புதமாக இருந்தது. விக்ரம் அதை அனைத்தையும் பார்த்து திகைத்து நின்றான்.
“விக்ரம் நீ ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தியே பீலிங்ஸ் வந்துருச்சா வந்துருச்சானு, இப்ப சொல்றேன் விக்ரம் எனக்கு உன் மேல ஃபீலிங் வந்துருச்சு அதுவும் ரொம்ப ரொம்ப, என்னால நீ இல்லாம வாழ முடியாது விக்ரம்,ஐ லவ் யூ சோ மச் விக்ரம்” என்று கூறி ஓடி சென்று கட்டி அணைத்துக் கொண்டாள் ஆனால் விக்ரமோ அவளை அணைக்காமல் நின்றிருந்தான். மித்ரா கேள்வியாக அவனைப் பார்க்க.
“சாரி மித்ரா நமக்குள்ள செட்டாகாது, உன் மனசுல தேவையில்லாத ஆசை எல்லாம் விதைச்சிட்டேன் என்ன மன்னிச்சிடு” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
“ஏன் ஏன் செட் ஆகாது”
“உன் ஃபேமிலி பேக்ரவுண்ட் ரொம்ப பெருசு மித்து, என்னால உங்க அளவுக்கெல்லாம் வர முடியாது சாரி மித்ரா” விக்ரம் கூறியதை கேட்டு மித்ராவிற்கு கோவம் அதிகரித்தது.
“அப்ப நான் பணத்தைப் பார்த்து தான் லவ் பண்றேன்னு நீ சொல்றியா விக்ரம்”
“ஐயோ மித்து நான் அப்படி சொல்லவே இல்ல”
“அப்புறம் நீ சொல்றதுக்கு என்ன விக்ரம் அர்த்தம், உன்கிட்ட என் அப்பா அளவுக்கு பணம் இல்லனு சொல்லி தானே என்ன வேணாம்னு சொல்ற,உனக்கு நான் முக்கியம் இல்லையா விக்ரம், என்னோட லவ், என்னோட பீலிங்ஸ் உனக்கு எதுவுமே முக்கியம் இல்லல” என்று கோவத்துடன் கூறிவிட்டு நேராக சென்று காரில் அமர்ந்துக் கொண்டாள்.
அவளைத் தொடர்ந்து விக்ரமும் காரில் ஏற அமர்ந்தான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக வந்தனர். கெஸ்ட் ஹவுஸ் வந்ததும் மித்ரா விக்ரமின் நிமிர்ந்தும் பார்க்காமல் விறு விறுவென உள்ளே சென்று விட்டாள். விக்ரமிற்கு தான் மனது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பின் இரண்டு நாட்களாக மித்ரா விக்ரமின் கண்களில் படாமல் ரூமிலேயே அடைந்து கிடந்தாள். நண்பர்கள் கேட்டதற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சமாளித்துவிட்டாள்.
மூன்றாம் நாள் காலை அனைவரும் வெளியே சுற்றிப் பார்க்க செல்ல அப்பொழுதும் மித்ரா வராததால் தனக்கு தலைவலி என்று கூறி வீட்டிலேயே இருந்து விட்டான். அந்த கெஸ்ட் ஹவுஸில் மித்ரா மற்றும் விக்ரம் இருவர் மட்டுமே இருந்தனர். விக்ரம் மித்ராவின் அறைக்கு சென்று கதவை தட்டினான்.
நண்பர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் என்று எண்ணி கதவை திறந்தால் மித்ரா. அங்க நின்று இருந்த விக்ரமை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “என்ன வேணும் உங்களுக்கு,எதுக்காக கதவை தட்டுனீங்க” என்றாள்.
“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உள்ள வரலாமா”
“இன்னும் பேச வேண்டியது என்ன இருக்கு அதான் ஏற்கனவே பேசிட்டீங்களே” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றாள். விக்ரம் அவள் பின்னே சென்று அவள் எதிர்பாராத நேரம் கட்டி அணைத்து “அன்னைக்கு ஏதோ தெரியாம பேசிட்டேன் ப்ளீஸ் மித்ரா என்ன மன்னிச்சிடு மித்ரா” என்று கூறினான். மித்ரா அதிர்ச்சியில் நின்று இருந்தால் மித்ராவின் தோள்களில் விக்ரமின் கண்ணீர் பட்டு ஈரமானது.
“ஆதி ஏன்டா அழுகுற, ப்ளீஸ் அழாத நீ அழற பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”
“சாரி அம்மு இனிமேல் அந்த மாதிரி பேச மாட்டேன், உன் அப்பா அளவுக்கு இல்லனாலும் கண்டிப்பா உன்ன நான் ஹேப்பியா பாத்துப்பேன் டி” என்று கூறி அவள் கண் காது மூக்கு நெற்றி என்று முகம் முழுவதும் முத்தமிட்டுக் கொண்டு இருந்தான். அவனது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
முத்தமிட்டு கொண்டே இருந்தவனின் இதழ்கள் மித்ராவின் இதழ்களில் தஞ்சம் அடைந்தது மித்ராவின் இதழ்களை பிரிய மனமில்லாமல் முத்தத்தை தொடர்ந்து கொண்டே இருந்தான். மித்ரா மூச்சுக்காற்றுக்கு ஏங்கும் பொழுதே அவளை விட்டுப் பிரிந்தான்.அதன்பின் விக்ரம் அவளுக்காக வாங்கிய இதய வடிவ செயினை அவளது காலத்தில் அணிவித்தான் “எப்பொழுதும் இந்தச் செயின் உன்னுடைய கழுத்திலேயே இருக்க வேண்டும்” என்று கூறினான் மித்ராவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.
அவர்கள் இருவரும் தங்கள் காதலை ரசித்து வாழ ஆரம்பித்தனர், மாதங்கள் உருண்டோட இருவருக்கும் நடுவில் இருந்த காதல் அதிகரித்துக் கொண்டே சென்றது.
கல்லூரியின் அந்த ஆண்டிற்கான சேர்மன் எலக்சன் நடைபெற்றது அதில் நண்பர்கள் அனைவரும் வற்புறுத்தி மித்ராவை விக்ரமிற்கு எதிராக நிற்க வைத்தனர். விக்ரம் தன் மீது கோபம் கொள்வான் என்று மித்ரா நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் விக்ரமோ அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டான். எலக்சனும் நல்ல படியாக நடந்து முடிந்தது அதில் விக்ரம் மித்ரா விற்கும், மித்ரா விக்ரமிற்கும் ஓட்டு போட்டனர். எலக்சனின் முடிவில் விக்ரமனை விட மித்ராவே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாள். விக்ரமும் மகிழ்ச்சியாக வந்து மித்ராவை வாழ்த்தினான்.
விக்ரமிற்கு இறுதி ஆண்டு என்பதால் கல்லூரி நேரத்தில் ப்ராஜெக்ட் வேலையில் மூழ்கிப் போனான் இருந்தும் மாலை நேரங்களில் மித்ராவுடன் வெளியே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
வாசுகி மகனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அது குறித்து கவிதா மற்றும் ரகுவிடம் விசாரித்தார். இருவரும் விக்ரமிற்கு இறுதி ஆண்டு என்பதால் ப்ராஜெக்ட் வேலைகள் அதிகமாக உள்ளது அதனால் மாலை நேரத்தில் தாமதமாக வீட்டிற்கு வருகிறான் என்று கூறி சமாளித்து விட்டனர். வாசுகியும் கவிதா கூறியது உண்மை என்று நம்பி விட்டார்.
அன்று கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஃபேர்வெல் என்பதால் கல்லூரி வண்ண மலர்களாலும் காகித பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மித்ரா சேர்மன் என்பதால் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தாள் இருந்தும் அவரது முகத்தில் மகிழ்ச்சி என்பது துளியும் இல்லை.இனிமேல் விக்ரமை தினமும் பார்க்க முடியாதே என்ற சோகத்தில் இருந்தாள்.
அவளது எண்ணத்தை புரிந்து கொண்ட விக்ரமோ ஏதேதோ கூறி அவளை மகிழ்விக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. “அமுலு ப்ளீஸ் இப்படி உம்முனு இருக்காதடி, கொஞ்சமாவது சிரிடி, எனக்கு உன்னோட வருத்தம் புரியுது, என்னால மட்டும் உன்னை பார்க்காமல் எப்படி டி செல்லம் இருக்க முடியும், டெய்லி ஈவினிங் நம்ம வழக்கமா மீட் பண்ற பார்க்ல நான் வந்து உன்னை பார்ப்பேன் சரியா ப்ளீஸ் சிரிடி” என்றான்.
ஜூனியர்கள் அனைவரும் விக்ரமை பாடுமாறு கூற மேடை ஏறிய விக்ரம் மைக்கை பிடித்து பாடத் தொடங்கினான்
“நீ தெனம் சிரிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே
காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறிப் போவேனே அன்பே அன்பே
உன் கை விரை தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உணர்வாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு ஒ
நீ தெனம் சிரிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே” என்று பாடினான் மித்ராவை பார்த்துக் கொண்டேன்.
