Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 19

அத்தியாயம் – 19

 

கல்லூரியை முடித்த விக்ரம் தனது மாமாவின் உதவியுடன் தாத்தாவின் தொழில்களை பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்தான். அலுவலக நேரம் முடிந்ததும் நேராக பார்க்கிற்கு சென்று மித்ராவைப் பார்த்து பேசிவிட்டு தான் வீட்டிற்கு செல்வான்.

 



Advertisement

 

விக்ரம் மித்ராவின் மீது பைத்தியமாக இருந்தான், அவளுக்கு பிடித்தது பிடிக்காதது என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தான் . அவளுக்கு சிறிதாக தலைவலி என்றாள் கூட அவனால தாங்க முடியாது. யாரேனும் தெரியாமல் அவளை இடித்து விட்டாள் கூட அவனை ரத்தம் வரும் அளவுக்கு பயங்கரமாக அடித்து விடுவான்.

 

Advertisement

 

Advertisement

மித்ராவிற்கும் தனக்கும் நடுவில் யாரும் வரக்கூடாது என்று நினைத்தான் அது நண்பர்களாக இருந்தாலும் கூட அவர்களை வர அனுமதிக்க மாட்டான். மித்ராவிற்கு அனைத்துமாக தானே இருக்க வேண்டும் என்று நினைத்தான் அவள் மீது மிகவும் பொஸ்ஸிவ் ஆக இருந்தான்.

 

 

Advertisement

 

ஒரு நாள் மித்ரா விக்ரமிற்கு கால் செய்து அவனை அவசரமாக பார்க்க வேண்டும் என்று கூறி பார்க்கிற்கு வருமாறு கூறினாள்.விக்ரமும் விரைந்து பார்க்கிற்கு வந்தான். அவனை பார்த்ததும் மித்ரா மகிழ்ச்சியுடன் ஓடி சென்று அணைத்துக் கொண்டாள். அவளது மகிழ்ச்சியை விக்ரமையும் தொற்றிக் கொண்டது.

 

 

“அமுலு என்ன விஷயம் டா ஏன் இவ்ளோ ஹாப்பியா இருக்கா சொன்னா தானே எனக்கும் தெரியும், சொல்லு டி” விக்ரம்.

 

 

“ஆதி எனக்கு ஜப்பான்ல இருக்குற நம்பர் ஒன் காலேஜ்ல ME மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க சீட் கிடைச்சிருக்கு டா” என்றாள் மகிழ்ச்சியாக.

 

 

“ஓஓ அப்படியா, ரொம்ப சந்தோஷம்” என்றான் வரவழைக்கப் புன்னகையுடன்.அவள் இருந்த மகிழ்ச்சியில் விக்ரமின் முகத்தில் இருந்த மாற்றத்தை கவனிக்காமல் விட்டுவிட்டாள்.

 

 

“இன்னும் ஆறு மாசத்துல நான் ஜப்பான் போகணும், அதுக்குள்ள நான் என்னோட ப்ராஜெக்ட்ட முடிக்கணும் டைம் வேற ரொம்ப கம்மியா இருக்கு என்ன பண்ணுறதுனே தெரியல” என்று மித்ரா விக்ரமிடம் புலம்பிக் கொண்டிருக்க, அவனது முகமோ இறுகிக் கொண்டே சென்றது.

 

 

“அமுலு இங்கையே ME படி டி ஜப்பானுக்குகெல்லாம் எதுக்கு போய்கிட்டு வேண்டாம் டி”

 

 

“முடியாது விக்ரம் நான் ஜப்பான்ல தான் படிப்பேன், அந்த காலேஜ்ல சீட் கிடைக்குறது எவளோ கஷ்டம் தெரியுமா,உலகத்துல இருக்குற பெஸ்ட் டாப் 10 காலேஜ்ல இதுவும் ஒன்னு, நான் BE படிக்குறதுக்கே அங்க தான் போகணுன்னு நினைச்சேன், எண்ட்ரன்ஸ் எக்ஸாம்ல பெயில் ஆயிட்டேன். நாலு வருஷமா ஹார்ட்வொர்க் பண்ணி இப்பதான் செலக்ட் ஆயிருக்கேன் அதுவும் ஒரு மார்க் டிஃபரண்ட்ஸ்ல, நான் அந்த காலேஜ்ல தான் விக்ரம் படிக்க போறேன்” என்றாள் உறுதியாக.

 

 

மித்ராவின் உறுதியை கண்டு அவனுக்கு வேதனையாக இருந்தது. “அப்போ டூ இயர்ஸ் என்ன விட்டு பிரிஞ்சி போக போறீயா நீ ” என்றான்.

 

 

“ரெண்டு வருஷம் இல்ல விக்ரம் மூணு வருஷம், ரெண்டு வருஷம் படிப்பு முடிஞ்சதும் ஒரு வருஷம் ட்ரெயினிங்” என்றாள் மித்ரா.

 

 

“இல்ல மித்ரா என்னால உன்னை விட்டு மூணு வருஷம் எல்லாம் இருக்க முடியாது, நீ சென்னையில ஏதாவது காலேஜ்ல படி” என்றான் முடிவாக.

 

 

“என்னாலயும் உன்ன விட்டு இருக்க முடியாது தான் அத்து , வேற வழி இல்லையே நான் படிக்க அங்கே பொய் தான் ஆகணும், என்னோட ரொம்ப வருஷம் ஆசை கனவு எல்லாமே இதுதான் விக்ரம் அது நிறைவேற போற நேரத்துல வேண்டாம்னு சொல்லாத விக்ரம் ப்ளீஸ்” என்றாள். விக்ரம் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

 

 

“விக்ரம் கொஞ்சமாது புரிஞ்சுக்க முயற்சி பண்ணு, நீ இப்பதான் பிசினஸ் பார்த்துக்க ஆரம்பிச்சிருக்கு நான் போய் படிச்சு முடிச்சு வர்றதுக்குள்ள நீயும் பிசினஸ்ல நல்ல நிலைமைக்கு வந்துருவ,அப்பறம் நாம ரெண்டு பேரும் ஒண்ணா ஹாப்பியா வாழலாம்,இப்போதைக்கு நமக்குள்ள இந்த சின்ன பிரிவு தேவை தான் விக்ரம்” என்றாள்.

 

 

இப்பொழுது மித்ராவிடம் எது பேசினாலும் சரியாக வராது, இன்னும் ஆறு மாத காலம் இருப்பதால் பின்பு நிதானமாக பேசி அவளுக்கு புரிய வைத்துவிடலாம் என்று நினைத்து விக்ரம் இப்போதைக்கு இந்த பேச்சை தள்ளி வைத்தான்.

 

 

விக்ரமிற்கு அதிக வேலைப்பளுவின் காரணமாக மித்ராவை தினமும் பார்க்க முடியாமல் வருத்தப்பட்டான். மறுபக்கம் மித்ராவோ ப்ராஜெக்ட் வேலைகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டாள். விரைவாக ப்ராஜெக்ட் முடித்துவிட்டு ஜப்பான் செல்ல வேண்டும் என்று நினைத்தாள். அதே போல் தனது நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க நினைத்து அவர்களுடன் வெளியே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

 

 

இன்னும் இரண்டு நாட்களில் விக்ரமிக்கு பிறந்தநாள் என்பதால் அவனுடன் தனியாக பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று நினைத்து மித்ரா அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து கொண்டிருந்தாள். விக்ரமிற்கு அது சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்தால்.

 

 

பிறந்தநாளுக்கு முதல் நாள் விக்ரம் அலுவலகத்திற்கு செல்வதற்காக தயாராகி கீழே வந்தான். அப்பொழுது வாசுகி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.அதில் “சித்தி கூடிய சீக்கிரமே விக்ரமுக்கும் கவிதாவுக்கும் கல்யாணத்தை முடிச்சிரனும் சித்தி, கல்யாணத்துக்கு அப்பறம் கூட கவி படிச்சிகிறட்டும்”

 

“……”

 

 

“என்ன சித்தி இப்படி சொல்லிட்டீங்க, என் பையன் நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான், நான் கவிதா கழுத்துல தாலிய கட்டுன்னு சொன்னா உடனே கட்டிருவான், நாளைக்கு விக்ரம் பிறந்த நாளு அண்ணா வீட்டுக்கு வரும்போது அவர்கிட்ட கல்யாணத்தை பத்தி பேச போறேன், அதோட நிச்சயத்துக்கு நல்ல நாளும் பார்க்க போறேன்” என்றார் வாசுகி போனில், அதை கேட்ட விக்ரம் அதிர்ச்சியில் உறைந்து விட்டான்.பின் அமைதியாக காரில் ஏறி அலுவலகம் சென்று கொண்டிருந்தான்.

 

 

அப்பொழுது ரகு விக்ரமுக்கு கால் செய்து மித்ரா ஜப்பான் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்து விட்டதாகவும், அடுத்த மாதம் ஜப்பான் செல்வதற்கான விமான டிக்கெட் புக் செய்து விட்டதாகவும் கூறினான்.

 

 

அலுவலகம் செல்ல மனமில்லாத விக்ரம் நேராக கடற்கரைக்கு சென்று அமர்ந்து கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் கவிதா உடனான திருமண பேச்சு மற்றும் மித்ராவின் ஜப்பான் பயணம் இதை குறித்தே எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. வெகு நேரமாக அங்கேயே அமர்ந்திருந்தான்.

 

 

மித்ரா விக்ரமுக்கு போன் செய்து அவன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அவனை காண பீச்சுக்கு சென்றாள், மித்ராவின் முகத்தைப் பார்த்ததும் விக்ரமின் கவலைகள் அனைத்தும் மறந்து போயின. மித்ரா விக்ரமை தன்னுடன் அழைத்துக் கொண்டு வெகுநேரமாக காரில் சென்று கொண்டிருந்தாள்.

 

 

“மித்து எங்கடி கூட்டிட்டு போற ரொம்ப நேரமா போயிட்டு இருக்கோம், சென்னையையே தாண்டி போய்ட்டு இருக்குற” என்றான்.

 

 

“அத்து கொஞ்சநேரம் அமைதியா வாடா இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருக்கு சீக்கிரமா போயிடலாம்”

 

 

இவர்களது கார் கடற்கரையை ஒட்டியே போய்க் கொண்டிருந்தது. விக்ரமிற்கு மித்ராயுடன் தனியா காரில் வெகுதூரம் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மித்ரா ஏதேதோ பேசிக்கொண்ட வர இந்த பயணம் இப்படியே தொடர்ந்து கொண்டே செல்லாத என்று நினைத்தான்.

 

 

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கடற்கரைக்கு விக்ரமை அழைத்து வந்தாள் மித்ரா. “அமுலு இங்க எதுக்கு டி வந்துருக்குறோம் சென்னைல இல்லாத பிச்சா, இவளோ தூரம் கூட்டிடு வந்துருக்குற”

 

 

“அய்யோ அத்து கேள்வி கேட்டுட்டே இருக்கமா கொஞ்ச நேரம் அமைதியா என்கூட வா டா” என்று கூறி அவனுடைய போனை வாங்கி காரில் வைத்து பூட்டினால்.

 

 

“போன் எதுக்கு டி உள்ள வச்ச, எனக்கு ஆபீஸ்ல இருந்து கால் வரும் டி இன்னைக்கு முக்கியமான மீட்டிங் வேற இருக்கு”

 

 

“என்ன விட உனக்கு உன் போன் முக்கியமா,உனக்கும் எனக்கும் நடுவுல இந்த போன் கூட இடைஞ்சலா இருக்க கூடாது” என்று கூறி விக்ரமின் கை பிடித்துக் கொண்டு கடற்கரையில் நடக்க ஆரம்பித்தாள். சற்று தூரத்தில் ஒரு போட் ஹவுஸ் ஓன்று இருந்தது.

 

 

“செல்லமா என்னடி இது, எதுக்காக இங்க வந்துருக்கோம் ப்ளீஸ் சொல்லுடி”

 

 

“உன்னோட பிறந்தநாளை நீயும் நானும் மட்டும் தனியா கொண்டாட தான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று மித்ரா கூறியதை கேட்டு விக்ரம் சிறகு இல்லாமல் வானத்தில் பறந்தான், பின் இருவரும் அதில் ஏறி அங்கிருந்த அறைக்கு சென்றனர்.

 

உள்ளே சென்றதும் கதவை சாற்றி விட்டு மித்ராவை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டு “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டி அமுலு இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதுவும் நீயும் நானும் மட்டும் தனியா இருக்குறோம்” என்றான் விக்ரம்.

 

“அத்து இதுக்கே இப்படி சந்தோச படுற இனிமேல் தான்டா உனக்கு சர்ப்ரைஸ் இருக்கு” என்றாள் மித்ரா.

 

விக்ரம் போட் ஹவுஸ் மாடியில் கீழே கால் நீட்டி அமர்ந்து இருக்கா,அவன் கால்களுக்கு நடுவில் மித்ரா அமர்ந்து அவனது நெஞ்சில் சாய்ந்திருந்தால், அவனோ அவளை பின்னால் இருந்து அனைத்துக் கொண்டிருந்தான். இருவரும் கடலை பார்த்து ரசித்துக் கொண்டே ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டே வந்தனர், அப்பொழுது மித்ரா “அடுத்த மாதம் இந்த நேரம் ஜப்பான்ல இருப்பேன்” என்று கூற விக்ரமின் முகம் மாறிவிட்டது.

 

 

“அம்மு ப்ளீஸ் ஜப்பான் போகாத டி, உன்ன பாக்காம என்னால இருக்க முடியாது டி, நீ இல்லாம நான் எப்படி டி இருப்பேன் என்ன பத்தி கொஞ்சமாச்சி யோசி டி”

 

 

“அத்து இது பத்தி நாம ஏற்கனவே பேசிட்டோம் நான் அப்போவே என் முடிவை சொல்லிட்டேன், ப்ளீஸ் என் கனவு நிறைவேற நீ துணையா இரு அத்து தடையா இருக்காதா, உன்ன பார்க்க ஆறுமாசத்துக்கு ஒரு தடவை கண்டிப்பா வருவேன் டா, உனக்கு என்ன பாக்கணுன்னு தோணுறப்போ யெல்லாம் நீ கிளம்பி அங்க வா அவளோ தான அத்து”

 

 

விக்ரமிற்கு எப்படி மித்ராவின் மனதை மாற்றுவது என்று மிகவும் குழப்பமாக இருந்தது.அவர்களுக்கு இடையே ஆன இந்த பிரிவு நிரந்தரம் ஆகிவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தான்.

 

 

 

அவர்கள் சென்றுக் கொண்டிருந்த போட்ஹவுஸ் ஆனது பொருட்கள் சில வாங்குவதற்காக கடற்கரை கிராமம் ஒன்றில் நின்றது, அந்த ஊரிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் கேட்டது.

 

 

 

“இது என்ன சத்தம் அண்ணா ரொம்ப வித்தியாசமா இருக்குது” என்றான் விக்ரம்.

 

 

 

“அதுவா தம்பி இந்த ஊருல இருக்குற திருமணத்தேவி கோவில்ல கல்யாணம் நடந்தா, இந்த மாதிரி பழைய கால வாத்தியங்களை தான் வாசிப்பாங்க, அந்த சத்தம் தான் அது” என்றார் படகு ஒட்டுப்பவர்.

 

 

 

“திருமணத்தேவியா இந்த மாதிரி அம்மன் பேர நான் கேள்வி பட்டதே இல்லையே ரொம்ப வித்தியாசம் இருக்கு” என்றாள் மித்ரா.

 

 

“இந்த கோவிலுக்கு வந்து கல்யாணம் ஆகாதவங்க வேண்டுகிட்டா உடனே கல்யாணம் ஆகிரும், காதலர்கள் இங்க வந்து அந்த அம்மன்னா வேண்டிக்கிட்டு அவங்க காதல் கல்யாணத்துல முடியும்னும், அதே போல இந்த கோவில்ல கல்யாணம் பண்ணிக்குற காதலர்கள் ஏழேழு ஜென்மத்துக்கும் பிரியாம ஒற்றுமையை சந்தோசமா இருப்பாங்ககிறது இங்க உள்ள மக்களோட நம்பிக்கை” என்றார் அவர்.

 

 

அவர் கூறியதை கேட்டதும் மித்ரா “அத்து வா நாமளும் அந்த கோவிலுக்கு போய்ட்டு வரலாம்” என்றாள், விக்ரமும் மறுப்பு கூறாமல் அவளுடன் சென்றான்.

 

 

கோவிலுக்கு சென்று அம்மனை பார்த்ததும் இருவரும் கண்களை மூடி வணங்க ஆரம்பித்தனர். அப்பொழுது விக்ரம் “அமுலு” என்று அழைக்க. மித்ரா கண்ணை திறந்து பார்த்தால் அவள் எதிரில் விக்ரம் கையில் மஞ்சள் கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிற்றால் ஆன தாலியுடன் விக்ரம் நின்றுக் கொண்டிருந்தான்.

 

மித்ரா அதிர்ச்சியில் நின்றிருக்க விக்ரம் அவள் உணரும் முன்பே அவள் கழுத்தில் தாலியை கட்டி மூன்று முடிச்சிட்டான், பின் அம்மன் முன் இருந்த குங்குமத்தை எடுத்து மித்ராவின் நெற்றில் வைத்துவிட்டான். அதில் சுய உணர்வுக்கு வந்தவள், கோவமாக விக்ரமின் சட்டையை பிடித்து “ஏன்டா இப்படி பண்ண” என்றாள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!