Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் காதல் ஒரு வரமாய்....

உன் காதல் ஒரு வரமாய்…..19

உன் காதல் ஒரு வரமாய்….19

அமிர்தா தாம்பரம் வந்து வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கடந்துவிட்டது.அஞ்சல் நிலைத்தின் பக்கத்தில் தான் வீடு அதனால் அவளிற்கு அலைச்சல் இல்லை.முதன் முதலில் வேலைக்கு என்று நுழையும் போது சற்று பயம் இருக்கத்தான் செய்தது ஆனால் அதைவிடவும் வேலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்க,சீக்கிரமே அவள் பணியை கற்றுக் கொண்டாள்.இதற்கிடையில் அமிர்தா ஒரு முறை வாணி மேடத்தையும் பார்த்துவிட்டு வந்தாள்.

அமிர்தாவிற்கு பல்பணி ஊழியர்கள் பிரிவில் தான் வேலை. அஞ்சல் விநியோகம், வாடிக்கையாளர் வினவல்களைக் கையாளுதல், அஞ்சல் உபகரணங்களை நிர்வகித்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களின் திறமையான செயல்பாட்டை ஆதரித்தல் போன்ற பணி.

“அமிர்தா….”என்று தன்னுடன் வேலை பார்க்கும் கார்த்திகா அழைக்க,



Advertisement

“ம்ம் என்ன கார்த்தி….”

“ஏய் இன்னைக்கு நமக்கு சம்பளம் போட்டுவாங்க….”

“ஆமா…”என்று தன் வேலையை கவனித்துக் கொண்டு பதில் தந்த அமிர்தாவைக் கண்டு கார்த்திகாவிற்கு எரிச்சலாக இருந்தது.அவளும் அமிர்தாவுடன் வேலைக்கு சேர்ந்தவள் தான்.அதனால் இருவரும் ஒன்றாக தான் வேலை கற்றனர்.அதோடு அமிர்தாவை தவிர அவளிற்கு வேறு ஆளும் இல்லை என்பதால் பேசுவாள்.ஆனால் அமிர்தா தேவைக்கு அதிகமாக பேசமாட்டாள்.தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ரகம் அது கார்த்திகாவை எரிச்சல் மூட்டும்.

Advertisement

“என்னமோ இவ கிட்ட பேச நான் காத்திக்கிட்டு இருக்குற மாதிரி பிகு பண்ணிக்கிறா….எனக்கே வேற ஆள் இல்லைனு இவ கிட்ட பேச வேண்டியிருக்கு….”என்று மனதில் நினைத்தாலும் வெளியில் சொல்ல மாட்டாள்.இன்றும் அப்படி தான் அவளை திட்டிக் கொண்டு,

Advertisement

“அடியே….நான் உன் கிட்ட தான் பேசுறேன்….கொஞ்சம் என் முகத்தை பாரு….”என்று அமிர்தாவின் கையை பிடித்து இழுக்க,சிரித்துக் கொண்டே திரும்பியவள்,

“சொல்லு…கேட்டுட்டு தான் இருக்கேன்….”

“என்ன பிளான்….”

Advertisement

“என்ன என்ன பிளான்….”

“முதல் சம்பளம்டீ….எதுவும் டீரிட் இல்லை….”என்று கேட்க,

“இல்ல….அப்படி கொடுக்கவும் ஆள் இல்லை….”

“ஏன் நான் இருக்கேன்….இப்ப எனக்கு உன்னைவிட்ட ஆள் இல்லை…அதனால கண்டிப்பா வர….அவ்வளவு தான்….”என்று கூறிவிட அமிர்தாவால் மறுக்க முடியவில்லை.

இதோ கார்த்திகா கூறியது போல இருவரும் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர்.

“உன்கூட வந்தேன் பாரு என்னை சொல்லனும்….”என்று கார்த்திகா திட்டிக் கொண்டிருக்க அமிர்தா அந்த காபி ஷாப்பினை நோட்டம் விட்ட வாரே காபியை பருகி கொண்டிருந்தாள்.

“உன்னை தான் திட்டுறேன்….”என்று அதற்கும் கார்த்திகா திட்ட,

“என்னை என்ன பண்ண சொல்லுற….எனக்கு இந்த மாதிரி ஊர் சுத்தி எல்லாம் பழக்கமில்லை….அதனால தான் வந்துட்டேன்….” என்று அமிர்தா கூற,கார்த்திகா அவளை வெட்ட வா குத்த வா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு இருவரும் முதலில் ஒரு மாலிற்கு தான் சென்றனர்.கார்த்திகா தனக்கு தேவையான பொருட்களை வாங்க,அமிர்தா அனைத்தையும் பார்வையிட்டு வந்து கொண்டிருந்தாள்.

“ஏய் எதாவது வாங்குடீ….”

“இல்ல இங்க ரொம்ப காஸ்ட்லியா இருக்கு….நான் திநகர்ல வாங்கிக்கிறேன்….”என்று அமிர்தா கூற,

“உன்னை….”என்று பல்லை கடித்த கார்த்திகா தனக்கான பொருட்களை வாங்கிவிட்டு வந்துவிட்டாள்.

“என்ன என்னையே பார்த்திக்கிட்டு இருக்க…சீக்கிரம் குடி….வீட்டுக்கு போகனும் இல்ல….”என்று அமிர்தாவின் குரலில் நிகழ்வுக்கு வந்த கார்த்தி தன் காபியை பருகியவாரே,

“இப்ப என்ன அதுக்குள்ள வீட்டுக்கு போகனும் வீட்டுக்கு போகனும் ஸ்கூல் பிள்ளை போல அழுவுற…”

“எனக்கு வேலையிருக்கு கார்த்திகா…”

“ப்ச் உன்னோட….இரு வந்துடுறேன்….”என்றுவிட்டு கைகழுவும் இடம் செல்ல அமிர்தா வெளியில் பார்க்க தொடங்கினாள்.அந்த காபி ஷாப்பின் முன் புறம் அழகாக புல்வெளிகள் அமைக்கப்பட்டு அங்கு குழந்தைகள் விளையாடவென ஊஞ்சல்,சருக்குமரம் இருக்க.அதில் குழந்தைகள் விளையாடிய படி இருந்தனர்.அதை பார்த்துக் கொண்டே வந்தவளின் கண்கள் ஷாப்பின் எதிர் புறம் பதிய அங்கு யாரோ ஒருவனுடன் பேசியபடி வந்து கொண்டிருந்தான் சிவா.

எவனை இனி தன் வாழ்நாளில் காணவேக் கூடாது என்று எண்ணியிருந்தாளோ அவனை மீண்டும் பார்த்துவிட.அமிழ்ந்திருந்த எண்ணங்கள் ஆர்பரிக்க தொடங்கின.அதோட அவனும் இதே ஷாப்பிற்கு வருவதைக் கண்டவள் எழுந்துவிட்டாள்.அவள் எழவும் கார்த்திகா வரவும் சரியாக இருந்தது.

“வா வந்துட்டேன்….”என்று பேசிக் கொண்டே முன்னே செல்ல,அமிர்தா எப்படி அவனை கடந்து செல்வது என்ற யோசனையில் தயங்கிக் கொண்டே வர,அவளின் நல்ல நேரம் சிவா பக்கத்தில் ஒரு கடைக்குள் நுழைய,

“வா வா சீக்கிரம் வா கார்த்தி…”என்று அவளை இழுத்துக் கொண்டு அவள் வண்டியிருக்கும் பக்கம் விட்டவள்,

“ஏய் ஏன்டி இழுத்துட்டு வர…நானே வந்துட்டு தான இருக்கேன்….”

“அதான்…சீக்கிரம் கிளம்பனும்…”என்றவள் கண்கள் முழுதும் அந்த கடையில் தான் இருந்தது.

“அட இருடி…சாவியை தேடிக்கிட்டு இருக்கேன்….எங்க வச்சேன்….அச்சோ டேபில்ல வச்சிட்டு வந்துட்டேன்டீ….இரு எடுத்துட்டு வந்துடுறேன்…..”என்றுவிட்டு அவள் கடைக்குள் ஓட,

“சீக்கிரம் வா…”என்றவள் சிவா அந்த கடையில் இருந்து வெளிவரவும்.அமிர்தா கார்த்திகாவின் வண்டியின் பின் ஒலிந்து கொண்டவள் அவன் என்ன செய்கிறான் என்று பார்க்க,அவனோ யாருடனோ பேசிக் கொண்டே காபி ஷாப்பிற்குள் நுழைய,கார்த்திகா வந்துவிட்டாள்.

“ஏய் ஏன்டீ நீ அங்க உட்கார்ந்திருக்க….”என்று கீழே அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு அவள் கேட்க,

“சும்மா தான்….வண்டியை எடுடீ….நான் போகனும்….”

“இவ ஒருத்தி போகனும் போகனும் சொல்லிக்கிட்டு….வந்து ஏறு….”என்று வண்டியை கிளப்ப அமிர்தா காபி ஷாப்பை ஒரு முறை பார்த்தவள் பின் வண்டியில் அமர்ந்துவிட வண்டி நகர்ந்தது.

அமிர்தா வீடு வந்ததும் தான் அவளிற்கு மூச்சே வந்தது.எங்கே அவன் தன்னை கண்டுவிடுவானோ என்று பயந்து ஓடி வந்துவிட்டாள்.சற்று நேரம் அமைதியாக தன் படுக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் தான் நிகழ்வுக்கு வந்தாள்.பின் தன்னை சுத்தப்படுத்துக் கொண்டு தன் அன்னை படத்தின் முன் நிற்க,

“ம்மா….நம்ம கனவு கொஞ்சம் கொஞ்சமா நிறைவேறுதுமா…..எனக்கு முதல் மாச சம்பளம் போட்டுட்டாங்க….சுளையா இருபதாயிரம்….நான் டிரியினிங் பிரியட் முடிஞ்சிட்டா இன்னும் சம்பளம் கூடுமாம் சொல்லியிருக்காங்க….”என்றவள் அவரின் முன் பணக்கவரை வைத்து கண்களை மூடி வேண்டிக் கொண்டாள்.பின் தன் அன்றாடம் வேலைகளை பார்க்க சென்றுவிட்டாள்.அடுத்த இரு நாட்கள் பொது விடுமுறை என்பதால் பொறுமையாக எழலாம் என்று சாப்பிட்டுவிட்டு தன் படுக்கையில் விழ,மூடிய விழிகளின் முன் மீண்டும் வந்து நின்றான் சிவா.

வேகமாக கண்களை திறந்து எழுந்து அமர்ந்துவிட்டாள்.என்னடா இது அவனை மறக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் இப்படி ஒரு நொடி பார்த்துக்கே இப்படி அவஸ்தி படுறேன் இது நல்லதுக்கில்லை என்று நினைத்தவள் தனது யோகா மேட்டை எடுத்து கீழே விரித்து அமைதியாக தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.இது அவள் பார்த்த மருத்துவர் கூறியது எப்போது மனது சலனப்பட்டாலும் மனதை அமைதி படுத்த யோகா தான் சிறந்த வழி என்று கூறியிருக்க அமிர்தாவும் தினமும் காலை எழுந்தவுடன் செய்துவிட்டு தான் வேலைக்கு செல்வாள்.இன்று மனது மீண்டும் சஞ்சலமாக அமர்ந்துவிட்டாள்.அரைமணிநேரம் எதையும் மனதில் கொள்ளாமல் மனதை ஒருநிலை படுத்த முயன்று வெற்றியும் கண்டாள்.

“ப்பா…இப்ப தான் கொஞ்சம் பிரஷ்ஷா இருக்கு….”என்று நினைத்தவள் தன் படுக்கையில் அமர்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கிவிட்டாள்.சிறிது நேரம் கழித்து கண்களை சுழட்ட புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுக்கும் முன்,

“கடவுளே இப்ப தான் என் வாழ்க்கையில கொஞ்சம் முன்னாடி வந்துக்கிட்டு இருக்கேன்….திரும்பவும் அவரைக் காட்டி என்னை கீழ இறக்கிடாத….இனி நான் அவரை பார்க்கவே கூடாது….”என்று வேண்டுதலை வைத்துவிட்டு தூங்க.கடவுள் அவள் கூறியதற்கு எதிர் பதமான வேலையை தான் செய்தார்.இனி அவள் வாழ்வு அவளுடன் இல்லை என்பது புரியும் நேரம் வந்தது.

காலை பதினோரு மணிளவில் தான் மதிய உணவை செய்து முடித்துவிட்டு அமிர்தா நிமிர,வீட்டின் மணி ஒலித்தது.

“யாருடா இப்ப….”என்று நினைத்துக் கொண்டே வீட்டை திறக்க,வாசலில் நின்றிருந்தவனைக் கண்டு இதயம் தொண்டை குழிக்குள் வந்தது.யாரை இனி வாழ்நாளில் பாரக்கக்கூடாது என்று நினைத்திருந்தாளோ அவன் தான் நின்றிருந்தான்.

“உள்ள வரலாமா….”என்று கேட்க,அமிர்தா தன் போல நகர,உள்ளே வந்தவன்,

“ம்ம்…அப்புறம் எப்படி இருக்க….”என்று கேட்க,அமிர்தா இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை.அதை அவளின் அதிர்ந்த முகத்தை வைத்தே கண்டு கொண்டவன்,அவளின் முன் நின்று சொடுக்கிட,

“ஆங்….நீ….நீங்க இங்க….”என்று அவள் தடுமாற,

“ம்ம்…நான் இங்க….அதை அப்புறம் சொல்லுறேன்…நேத்து எதுக்கு என்னை பார்த்துட்டு ஓடுன….ம்ம்…”என்று கேட்க,அமிர்தாவின் வெளிப்படையாக அதிர்ந்தது.அவன் தன்னை பார்த்துவிட்டு தான் வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டவள்,

“நா….நான் உங்களை பார்க்கலையே…இல்ல….நான் பார்க்கலை…”என்று அதற்கும் திக்கிதிணறி தான் பதில் வந்தது அவளிடமிருந்து.

“நீ பார்க்கலை….சரி ஆனா நான் பார்த்துட்டேன்……சரி இதையெல்லாம் விடு….இன்னைக்கு சாய்ந்திரம் அதே காபி ஷாப்பிற்கு ஆறு மணிக்கு வா….உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்….”என்றவன் எழுந்து கதவை நோக்கி செல்ல அமிர்தாவோ,

“இவன் என்ன வந்தான் இவன் பாட்டுக்கு எனக்கு ஆடர் போட்டுட்டு போறான்….”என்று நினைத்தபடி நின்று கொண்டிருக்க,கதவருகே சென்றவன் திரும்பி,

“வந்துடு…..வர….நான்….ம்ஹம் நாங்க வெயிட் பண்ணோவோம் உனக்காக….”என்று கூற அதுவரை அமைதியாக இருந்தவளின் முகம் மாறத்தொடங்கியது அதை உணரும் நிலையில் தான் சிவா இல்லை.அமிர்தா பதில் கூறும் முன் அவன் சென்றிருக்க வேறருந்த கொடி போல அந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டாள் அவள்.என்ன நடக்கிறது என்று உணர முடியவில்லை மனது மீண்டும் தத்தளிக்க தொடங்க தலையை பிடித்துக் கொண்டு நிமிரும் போது தெண்பட்டது சாவித்ரியின் புகைப்படம்.

தன் அன்னையின் முன் நின்று,

“ஏன்மா எனக்கு மட்டும் இப்படி நடக்குது…..ஏன் இப்ப வந்தாரு….நான் என் வேலைனு ஓடிக்கிட்டு இருக்கேன்….இப்ப எதுக்கு வரனும்….”என்று கேள்விகளாக கேட்டுக் கொண்டிருக்கும் போது தான் அவள் மூளையில் அவளிற்குள் சில கேள்விகள் எழுந்தன,

“இவருக்கு எப்படி நான் இங்க இருக்கேன் தெரியும்….நேத்து பார்த்த மாதிரி சொல்லலையே….எப்படி….இவ்வளவு சாவகாசமா பேசிட்டு போறாரு…..எப்படி….”என்று மீண்டும் தன் தலையை பிடித்து கொள்ள தலைவலி வந்தது தான் மிச்சம்.ஒரு கட்டதில் உடலும் மனதும் சோர்ந்து போக தன்னை நிதானப்படுத்த முயன்று தோற்றவள் ஒரு கட்டத்தில் மருத்துவர் அவளிற்கு அளித்த தூக்க மாத்திரையில் ஒன்றை விழுங்கிவிட்டு படுத்துவிட்டாள்.

முழித்திருந்தால் மனது கண்டதை நினைக்கும் அதோடு மணியாக மணியாக அமிர்தாவின் இதயம் வேகமாக துடிக்க தொடங்க தூங்கினால் தான் இதுக்கு தீர்வு என்று மாத்திரையை முழுங்கிவிட்டு படுத்தவிட்டாள்.அடுத்த நாள் காலை அமிர்தா எழும் போதே மணி பத்தை தான்டியிருந்தது.மெல்ல எழுந்து பல் துலக்கி குளித்து வந்தாள்.நேற்று சரியாக உண்ணாதது வேறு மயக்கத்தை கொடுக்க, வேகமாக கோதுமை கரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வீட்டு மணி மீண்டும் அடிக்க அமிர்தாவிற்கு நடுக்கம் பிறந்தது.

இம்முறை கதவின் துவாரம் வழியே பார்க்க வீட்டின் உரிமையாளர் நின்றார்.அவரை பார்த்ததும் அமிர்தாவிற்கு மூச்சே வர கதவை திறந்தாள்,

“இந்தா திறந்துட்டுல்ல….நான் பயந்தே போயிட்டேன் தம்பி….”என்றவர் கூற,அமிர்தா பயத்துடன் வெளியில் பார்க்க அவளை கொன்றுவிடும் கோபத்துடன் நின்றிருந்தான் சிவா.

“என்னமா….தூக்கமா….இந்த பையன் ரொம்ப நேரமா உன் கதவை தட்டி பார்த்துட்டு என்கிட்ட வந்துடுச்சி…நானும் பயந்துட்டேன்….பார்த்துக்கமா….”என்றுவிட்டு அவர் சென்றுவிட,அமிர்தா திக் பிரம்மை பிடித்தவள் போல் நின்றுவிட்டாள்.அவளை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சிவா.அவன் நுழைந்த அடுத்த நொடி அவனின் பேசி இசைக்க எடுத்தவன்,

“ம்ம்….இங்க தான் இருக்கா….நீ வா….”என்றுவிட்டு வைத்துவிட,அமிர்தா இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை.நான் போகவில்லை என்றால் திரும்ப வரமாட்டான் என்று நினைத்திருக்க இவன் எதற்கு மீண்டும் வந்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளை,

“மேடம் கொஞ்சம் உள்ள வரீங்களா….”என்று சிவாவின் கடின குரலில் வீட்டின் உள்ளே அவள் வர,

“ஏன் வரலை….”என்றான் ஒற்றை கேள்வியாக,

“எதுக்கு வரனும்….”என்று அவளும் அசராமல் கேட்க,

“எதுக்குனா….நான் உன்னை வர சொல்லி சொல்லிட்டு தான போனேன்….”என்று சிவா கோபமாக கத்த,

“அதான் எதுக்கு….எதுக்கு என்னை நீங்க கூப்பிடுறீங்க….”

“உனக்கு முக்கியமான ஒருத்தரை….”என்று அவன் ஆரம்பிக்கும் முன்பே,

“வேண்டாம்….வேண்டாம்….நான் யாரையும் பார்க்க விரும்பல….”என்று கத்த,சிவா அதிர்ந்து நிற்க,

“உங்க மனைவி குழந்தையை நான் எதுக்கு பார்க்கனும்…..எனக்கு வேணாம்….”என்றவள் அடுத்த வார்த்தை பேசும் முன்,

“ஏய்ய்ய்ய்ய்…..”என்று கத்திக் கொண்டே கைகளை ஓங்கிவிட்டான் சிவா.அவனின் உக்கிரத்தில் அமிர்தா பயந்து பின் நகர,

“சிவா….”என்று வெளியில் இருந்து கத்தியபடி வந்தாள் திவ்யா.

“என்னடா இது கை ஓங்குற பழக்கம்….கையை இறக்கு முதல்ல….”என்று அதிகாரமாக கூற சிவாவின் கைகள் கீழ் இறங்கின,அமிர்தாவிடம் திரும்பிய திவ்யா,

“உனக்கு யார் சொன்ன இவனுக்கு கல்யாணம் ஆகிட்டுனு ஆங்….அதை சொல்லு முதல்ல…..”என்று அவளின் முன் கையை கட்டிக் கொண்டு நிற்க,

“அந்த பாவத்தை செஞ்சிட்டு அவஸ்தி படுற அந்த பாவபட்ட ஜீவன் நான் தாம்மா….”என்று குழந்தையுடன் உள்ளே ஒருவன் வரவும் அமிர்தா மயங்கி சரியவும் சரியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!