Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 7

அத்தியாயம் – 7

“ஷாம் நிச்சயதார்த்தத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி டோக்கியோ போறேன்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டா வீட்ல உள்ளவங்க எவ்வளவு தடுத்தும் அவ கேக்காம கிளம்பி போயிட்டா, அவ போன கொஞ்ச நேரத்துலயே கிராணியும் ஜான்சி அம்மாவும் வீட்டுக்கு வந்தாங்க, அவங்க கிட்ட ஷாம் கிளம்பி போய்ட்டானு சொன்னதும் கிராணி டென்ஷன் ஆகி உடனே மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க”

 

“சகுந்தலா அத்தை செக் பண்ணி பார்த்ததில்ல அவங்களுக்கு பிபி அதிகமாய் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கன்னு தெரிஞ்சிருச்சு உடனே அத்தை அவர்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ணி கொஞ்ச நேரத்திலேயே பாட்டி முழிச்சுட்டாங்க, கிராணி உடனே ஷாம பாக்கணும் போன் போட்டு வர சொல்லுன்னு சொன்னாங்க, ஷாமுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னோம் அவளும் வந்தா”



Advertisement

 

கிராணி “இப்போ எதுக்கு மித்ரா டோக்கியோக்கு போற”

 

Advertisement

“அங்க எனக்கு நிறைய வேலை பெண்டிங்கல இருக்கு கிராணி, ரிங்கு மேரேஜ்க்கு வர்ற அவசரத்துல நிறைய ஒர்க் கம்ப்ளீட் பண்ணாமலே வந்துட்டேன் கிராணி”

Advertisement

 

“சரி இப்ப போயிட்டு எப்ப திரும்ப வருவ”

 

Advertisement

“கிராணி அது வந்து”என்று இழுத்தால் மித்ரா.

 

“ஒழுங்கா பதில் சொல்லு மித்ரா,நீ எப்போ வருவ ராணி பதவிய ஏத்துக்க”

 

“கிராணி ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நாள் என்ன பிரியாவிடுங்க, எனக்கு அங்க நிறைய வேலை இருக்கு நான் கிளம்புறேன் உடம்ப பார்த்துக் கோங்க” என்று கூறிவிட்டு வெளியேற சென்றாள்.

 

“போ மித்ரா போ கூடிய சீக்கிரமே நீ இங்க திரும்ப வருவ, என்னோட இறுதியாத்திரைக்கு வழியானுப்பி வைக்க, நான் செத்த அப்பறம் என்ன பாக்காவது வருவியா மித்ரா நீ” என்று அவர் கூறி முடிப்பதற்குள்ள அங்கிருந்தவார்கள் அம்மா அத்தை கிராணி என்று அழைத்தனர்.

 

மித்ரா கிராணியின் கையை பிடித்துக் கொண்டு”என் கிராணி இப்படிலாம் பேசி எல்லாரோடா மனசையும் கஷ்ட படுத்துறீங்க, உங்களுக்கு எதுவும் ஆகாது இன்னும் நூறு வருஷம் நீங்க நல்லா இருப்பிங்க”

 

“எதுக்கு நான் நூறு வருஷம் வாழனும் மித்ரா அப்பவும் உன்ன நெனச்சி நான் வேதனை படவா”

 

“கிராணி” என்றாள் ஷாம் அதிர்ச்சியுடன்.

 

“என்னோட கடைசி ஆசையா என்ன நினைச்சிட்டு இருந்தேன் தெரியுமா, நீ ராணி ஆகி அரியசானத்துல அமர்ந்து ஆச்சி பண்ணனும், நீ உன் புருஷன் குழந்தைக கூட சந்தோசமா வாழுறத பாக்கணும், என் பேர பசங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகி அவங்களுக்கு பொறக்கப்போற அடுத்த தலைமுறை ராணிய என் கையாளத் தொட்டு தூக்கி கொஞ்சனும், அவ வளராத பாத்துட்டு தான் நான் சாகனுன்னு ஆசைப் பட்டேன்”

 

“ஆன இப்போ நான் ஆசைப்பட்ட எதுவுமே நடக்கலையே” என்று கூறிக் கண்ணீர் வடித்தார் ராஜமாதா.

ராஜமாதா கண்கலங்கி அங்கிருந்த யாருமே பார்த்தது இல்லை இதுவரை அனைவருக்குமே மிகவும் கஷ்டமாக இருந்தது.

 

“அம்மா ப்ளீஸ்மா வருத்தப்படாதீங்க மா, நீங்க கண் கலங்குறத பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா”

என்றார் ராஜராஜன்.

 

“மித்ரா எங்களுக்கு நீ ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளத்தது தப்போனு எங்களை யோசிக்க வச்சிடாத, இதுவரைக்கும் உன்னோட விஷயத்துல நான் எதுவுமே தலையிட்டதில்லை என் பொண்ணு எந்த முடிவும் எடுத்தாலும் அது சரியா இருக்கும்னு நான் நம்புனேன், ஆனா இப்போ என் அம்மா வேதனைப்படுவதை பார்க்கும் போது நான் உன்னை வளர்த்த விதம் சரியில்லையோன்னு தோணுது” என்றார் ராஜராஜன் மிகுந்த வருத்தத்துடன்.

 

 தன்னால் அனைவரும் கஷ்டப்படுவதை நினைத்து மித்ராவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இதற்கு மேலும் தன்னால் யாரும் கஷ்டப்படக் கூடாது என்று முடிவு எடுத்து கிராணியிடம் சென்று “கிராணி ப்ளீஸ் அழாதீங்க நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன் எனக்கு உங்க சந்தோஷம் தான் முக்கியம்” என்றாள்.

 

“நான் என்ன சொன்னாலும் நீ கேட்பியா,இப்போ என்ன சமாதான படுத்த சொல்லிட்டு அப்பறம் மறுத்து பேச மாட்டாயே “

 

“உங்க மேல சாத்தியமா நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன் மறுத்து பேச மாட்டேன்” என்றாள் மித்ரா.

மிகவும் மகிழ்ச்சி அடைந்த கிராணி தன் மகன் ராஜராஜனிடம் “யோசியரை வர சொல்லு ராஜா மித்ரா ஓட ராணி பதவி ஏற்புக்கு நாள் பாக்க சொல்லணும் அதோட உடனே மித்ராக்கு மாப்பிள்ளை பார்க்கணும்”என்றார் கிராணி அதை கேட்டு மித்ரா எதுவும் கூறாமல் தன் அறைக்கு சென்று விட்டாள்.

 

மறுநாள் காலை லீமீங்குவை அழைத்து வந்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தால் ஸ்ரேயா.பெரியவர்களை பார்த்ததும் அவர்களது காலில் விழுந்து வணங்கினான் லீமீங்கு, பின் அங்கிருந்து வினித், சஞ்சய்,கெளதம், கௌஷிக் அனைவரிடமும் மிகவும் இயல்பாக பழகினான்.

 

சிறிது நேரா உரையாடலுக்கு பிறகு லீமிங்கு நேராக கிராணியின் அருகில் சென்று அவரின் கையை பிடித்து “கிராணி நான் உங்க பேத்தி மித்ராவ ரொம்ப லவ் பண்ணுறேன் ப்ளீஸ் அவளை எனக்கு கல்யாணம் வைங்க” என்று தமிழில் தனக்கு தெரிந்த அளவுக்கு கேட்டான்.

 

“உங்களுக்கு தமிழ் தெரியுமா ப்ரோ” என்றான் கௌஷிக் வேகமாக.

 

“மித்ராவ லவ் பண்ண ஆரம்பிச்ச உடனே தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன், அதுவும் இல்லாம அவளுக்கு தமிழ்மொழி ரொம்ப பிடிக்கும் சொல்லிருக்க அவளுக்காக கத்துக்கிட்டேன்” என்றான் சிறு வெக்கத்துடன்.

 

கிராணி மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் லீமிங்குவை மிகவும் பிடித்துவிட்டது. இருந்தும் மித்ராவை அவ்வளவு தொலைவில் திருமணம் செய்துக் கொடுப்பதா என்ற எண்ணம் அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது.

 

 

ஜான்சி லீமிங்குவிடம் “ஷாமை பற்றி உனக்கு எந்த அளவுக்கு தெரியும், உனக்கு அவளை எவளோ பிடிக்கும்” என்று கேட்டார்.

 

“எனக்கு ஷாமை பற்றியெல்லாம் தெரியும் அவளுக்கு பிடித்தது பிடிக்காததில் இருந்து அவளது கடந்த கால காதல் வரை அனைத்தும் தெரியும், என்னோட அம்மா அப்பா ரெண்டு பேரும் இப்போ உயிரோட இல்ல அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க அப்பா இப்போதான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இறந்து போனாக, அப்பா இறப்பை என்னால தாங்கிக்க முடியாம ரொம்ப ஒடஞ்சி போய்ட்டேன், அப்போ மித்ரா அதான் எனக்கு துணையா இருந்து என்ன அந்த தனிமையில இருந்து வெளியக் கொண்டு வந்தா”

 

“மித்ரா தான் எனக்கு அம்மா அப்பா எல்லாமே அவ இல்லாம என்னால இருக்கவே முடியாது. இப்போ அவ இல்லாத அந்த ஒரு வாரம் பைத்தியமே புடிச்சா மாதிரி இருந்துச்சி எனக்கு ப்ளீஸ் கிராணி ப்ளீஸ் அங்கிள் ஆண்ட்டி எனக்கிட்ட மித்ராவ குடுத்துருங்க என்றான் லீமிங்கு.

 

“மித்ராவோட பஸ்ட் பத்தி தெரிஞ்சும் இப்படி பேசுற” என்றார் ஜான்சி.

 

“ஆண்ட்டி எனக்கு அதை பத்திலாம் கவலையே இல்ல, அவளே அந்த விசயத்துல இருந்து வெளிய வரத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்குறா, நான் அதுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப்ப மித்ராக்கு பண்ணுவேன்”

 

“லீமிங்கு உங்கள எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுக்கு எங்க மித்ராவ மேரேஜ் பண்ணிக் குடுக்க எங்களுக்கு சம்மதம் தான் இருந்தாலும், மேரேஜ் அப்பறம் மித்ரா டோக்கியோலையே இருந்துருவளே அதன் எங்களுக்கு யோசனையா இருக்கு, எங்க பொண்ணு எங்க கண்ணு முன்னாடி இருக்கனுன்னு ஆசை படுறோம்” என்றார் கிராணி.

 

“கிராணி உங்களுக்கு என்ன இப்போ ஷாம் இந்தியால இருக்கனும் அவளோ தான ஓகே மேரேஜ் அப்பறம் நாங்க இங்கையே செட்டில் ஆகிறோம், மித்ராகாக நான் எங்க வேணுனாலும் வர ரெடி, உங்கள மாதிரி ஒரு பெரிய பேமிலில நானும் ஒருத்தன இருக்கத்தான் நான் ஆசை படுறேன்” என்றார் லீமிங்கு.

 

அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். யோசியரை உடனே வரவைத்து திருமணநாள் பார்க்க சொல்ல மித்ராவின் ஜாதகத்தை பார்த்தவர் முதலில் திருமணத்தை நடத்துமாறு கூறிவிட்டு மூன்று மாதம் கழித்து ராணி பதவி ஏற்பு விழா வைத்துக் கொள்ளுமாறு கூறினார். இன்னும் பத்து நாளில் நல்ல முகூர்த்தநாள் இருப்பதால் அன்றே திருமணத்தை நடத்துமாறு கூறினார்.

 

ஜோசியர் கிளம்பும் போது கிராணி மற்றும் ஜான்சியை தனியாக அழைத்து மித்ராவின் திருமணத்தில் நிறைய பிரச்சினைகள் ஏற்படும் என்றும் பிரச்சனையை எதிர் கொள்ள தயாராக இருக்குமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

 

ஷாம் அலுவலகத்தில் இருந்து வந்ததும் கிராணி அவளிடம் “உனக்கு மாப்பிளை பாத்தாச்சி இன்னும் பத்து நாளுல உனக்கு கல்யாணம்” என்றார் 

 

“என்ன கிராணி சொல்லுறீங்க பத்துநாள்ல கல்யாணமா ” என்றாள் குழப்பத்துடன்.

 

“ஆமாம், எங்க எல்லாருக்கும் பையன ரொம்ப பிடிச்சிருக்கு, உனக்கும் அவர பிடிக்கும், அதோ வராங்க பாரு உனக்கு பார்த்த மாப்ள” ஷாம் திரும்பி பார்க்க அங்கு வினித் உடன் பேசிக்கொண்டே வந்துக் கொண்டிருந்தான் லீமிங்கு அவனை பார்த்தும் “மீங்கு எப்படி இங்க வந்தான், இவன் மாப்பிளையா இங்க என்ன நடக்குது ப்ளீஸ் யாரது சொல்லுங்களேன்” என்றாள் மித்ரா.

 

 

ஸ்ரேயா நடந்த அனைத்தையும் மித்ராவிடம் கூறினாள்,லீமீங்கு சிரித்தவாறு அவள் அருகில் அமர்ந்து “ஹாய் பேபி எப்படி இருக்க, உன்ன பக்கமா உன்கிட்ட பேசாம நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ண பேபி”என்றான் காதலாக.

 

“மீங்கு உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் வா” என்று வெளியே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.

 

“மீங்கு ப்ளீஸ் எதையாவது சொல்லி இந்த மேரேஜ் ஸ்டாப் பண்ணிவிடு” மித்ரா கூறியதை கேட்டு அவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது.

 

“ஏன் மித்ரா என்ன மேரேஜ் பண்ணிக்க உனக்கு விருப்பம் இல்லையா”

 

“மீங்கு நான் ஏன் மேரேஜ் வேண்டாம்னு சொல்றேன் உனக்கே தெரியும்”

 

“ஸ்டாப் இட் மித்ரா, இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதே காரணத்தை சொல்லிட்டு இருக்க போற நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு ப்ளீஸ் அதை விட்டு வெளியே வா, என்ன மேரேஜ் பண்ணிக்கோ”என்றான், மித்ரா ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தால்.

 

“ஓகே மேரேஜ் பண்ணிட்டு உடனே வந்துட்டு என்கூட வாழுனு சொல்லல மேரேஜ் ஆன அப்புறமும் நீயும் நானும் நல்ல பிரண்ட்ஸா இருக்கலாம் உனக்கு எப்போ என் கூட வாழனுன்னு தோணுதோ அப்போ நம்ம லைப் ஸ்டார்ட் பண்ணலாம் ஓகே வா”

 

“ப்ளீஸ் மித்ரா என்ன ஏத்துக்கோ எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா” என்று கூறி கண்ணீர் வடித்தான்.

 

“ஓகே மீங்கு நான் உன்ன மேரேஜ் பண்ணிக்கிறேன், ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும் உன்ன முழுசா ஏத்துக்க” 

 

“தேங்க்ஸ் பேபி தேங்க்யூ ஷோ” என்று கூறி அவளை அனைத்துக் கொண்டான்.

 

கல்யாண ஏற்பாடுகள் அனைத்து விரைவாக நடந்துக் கொண்டிருக்கிறது.

 

ரகுவிடம் நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள் கனிமொழி, கதவின் அருகில் நின்று விக்ரமும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

 

“ரகு நிஜமா லீமீங்கு ரொம்ப நல்ல பையன் எல்லாருக்கிட்டயும் நல்ல பழகுறாங்க, உலகத்துல இருக்குற டாப் டென் கார் கம்பெனிகள்ல அவரோட கம்பெனியும் ஒன்னு, எவளோ பெரிய தொழிலதிபர் கொஞ்சம் கூட கர்வமே இல்லாம இயல்ப பழகுறாரு, ஷாம்க்கு லீமிங்கு தான் கரெக்டானா மேட்ச்”

 

“போதும் கனி அவன ரொம்ப புகழாத, ஷாமுக்கு பொருத்தமானவனா அது விக்ரம் மட்டும் தான்”

 

“ரகு இனிமேல் விக்ரம் அண்ணா ஷாம் ரெண்டு பேரையும் சேத்து பேசாத அவங்க நல்ல ஜோடியா தான் இருந்தாங்க, அப்பறம் அவர்களுக்கு நடுவுல என்ன நடந்ததோ பிரிஞ்சிட்டாங்க இனிமேல் அதை பத்தி பேச வேண்டாம்”

 

“ஓகே கனி இனிமேல் பேசல சாரி, நான் கண்டிப்பா கல்யாணத்துக்கு வாரேன் சரியா” என்றான்.கனி ரகுவிடம் விடைப்பெற்று சென்றுவிட்டாள்.

 

ரகு விக்ரமிடம் “இப்போ என்னடா பண்ண போற”

 

“நான் எதுவும் பண்ண போறது இல்லடா, என்னால அவ பட்ட கஷ்டம் போதும் இனிமேலாது அவ சந்தோசமா இருக்கட்டும்”

 

“மச்சான் அவ இல்லாம நீ இருந்துருவியாடா”

 

“அஞ்சு வருசமா எப்படி அவள நெனச்சிட்டே வாழ்தேனோ அதே மாதிரியே இனிமேலும் இருந்துக்குறேன் அவ எங்க இருந்தாலும் சந்தோசமா இருக்கனும் மச்சான்”

 

கலிங்கபுரியில் மகேந்திரவர்மன் எப்படியாவது மித்ராவின் கல்யாணத்தை நிறுத்தி அவளை தான் மணந்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் திட்டிக் கொண்டிருந்தான்.

 

🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ சகோஸ் அடுத்த அத்தியாயம்ல நம்ம மித்ரா ஓட கல்யாணம் நடக்க போகுது எல்லாரும் வந்து மித்ரா லீமிங்கு ஜோடியா வாழ்த்திட்டு போங்க🙏🙏🙏🙏🙏 மறக்காம சாப்டுட்டு போங்க சகோஸ் பின் குறிப்பு அப்படியே மொய் வச்சிட்டு போயிருங்க😁😁😁😁😁🤩🤩🤩🤩

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!