Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரசி(க்கி)யே என் அடிமையே

அரசி(க்கி)யே என் அடிமையே – 8

அத்தியாயம் – 8

 

கல்யாண ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது. தஞ்சாவூரில் இருந்து சகுந்தலாவின் தாய் அன்னபூரணி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மணிகர்ணிகாபுரியை வந்தடைந்தனார். அன்னபூரணிக்கு ஜப்பான் மாப்பிளை என்றது சற்று கவலையாக இருந்தது. பின் லீமிங்குவை பார்த்து பேசி பழகிய பின் அவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

 



Advertisement

ஷாம் உடன் படித்த ஸ்கூல் காலேஜ் நண்பர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் அழைத்து வரப் பட்டனர். திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் அந்த அரண்மனையானது உறவினர்கள் நண்பர்கள் என அனைவராலும் நிரம்பி வழிந்தது. வருங்கால ராணியின் திருமணம் என்பதால் அந்த ஊரை சேர்ந்த மக்களும் அவர்களின் குடும்ப விழாவாக நினைத்து அனைத்து வேலைகளையும் செய்து வந்தனர்.

 

மணிகர்ணிகாபுரி மொத்த நகரமும் மலர்களாலும் வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்காரிக்கப் பட்டு இந்திரனின் சொர்க்கபுரி போல் காட்சி அளித்தது.தங்கள் செல்ல மகளின் திருமணம் என்பதால் ராஜராஜன் மட்டும் ராஜசேகர் இருவரும் வெளிநாடுகளில் இருந்து சமையல் கலைநிபுணர்களை வரவைத்து அறுசுவை உணவு சமைக்க செய்திருந்தனர்.

Advertisement

 

Advertisement

மணிகர்ணிகாபுரில் நடைபெறும் அனைத்து திருமண ஏற்பாடுகளை பற்றியும் உழவாளி மூலம் அறிந்துக் கொண்டு எப்படி இந்த திருமணத்தை நிறுத்தலாம் என மகேந்திரசிம்மனும் அவனது தந்தையும் திட்டம் திட்டிக் கொண்டிருந்தனர்.

 

எதிரிகளால் திருமணத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளத்தால் ராஜமாதாவும் ஜான்சிராணியும் பல்வேறு பாதுக்காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனார். அதன் மூலம் அந்நியர்கள் யாரும் அந்த நகருக்குள் நுழைய முடிய வண்ணம் இருந்தது. விக்ரமின் மூலம் மித்ரா திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் வினித் விக்ரமை தடுக்க அனைத்து காவலர்களுக்கும் விக்ரமின் போட்டோவை குடுத்து அவன் வந்தாள் உள்ளே அனுமதிக்க கூடாது என்று கட்டளையிட்டிருந்தான்.

Advertisement

 

அந்த மாலை நேரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நடனங்களால் சங்கீத் நிகழ்ச்சி ஆர்ப்பாட்டமாக நடந்துக் கொண்டிருந்தது.மேடையில் வைர நகைகளால் அலங்காரிக்கப் பட்டு தேவதை போல் அழகாக அமர்ந்து இருந்தால் மித்ரா அவளது அருகில் அவளையே வைத்தகண் வாங்காமல் சைட் அடித்துக் கொண்டிருந்தான் லீமிங்கு.

 

குடும்பத்தினர் மட்டும் நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து மைக்கில் மணமக்களை பற்றிய சுவாரசியமான சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். கல்லூரி நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கல்லூரியில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் சில வீடியோக்களை திரையில் ஓட செய்து மித்ராவிற்கு சர்ப்ரைஸ் அளித்தனர்.

 

 திருமண நாள் நெருங்க நெருங்க மித்ரா மிகவும் குழப்பத்துடன் இருந்தால், அவளது குழப்பத்திலிருந்து வெளியே கொண்டு வந்து அவளை மகிழ்ச்சியாக இருக்கச் செய்தது அந்த நண்பர்களின் பட்டாளம். மித்ராவை கேலி கிண்டல்கள் செய்து அவளை எப்பொழுதும் கலகலப்பாக வைத்துக் கொண்டனர்.

 

 திரையில் போட்டோக்கள் வீடியோக்கள் ஓடிக்கொண்டிருக்க இடையில் விக்ரம் நண்பர்களுடன் இருக்கும் போட்டோஸ் வந்தது, அதைத்தொடர்ந்து விக்ரம் உடன் மித்ரா பேசி சிரித்து கொண்டிருக்கும் வீடியோ ஓடியது. விக்ரமின் முகத்தை பார்த்த பின் மித்ரா தலையை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தால். அப்பொழுது அவள் அருகில் ரிங்கு வந்து “ஷாம் உன்ன சகுந்தலா ஆண்ட்டி கூப்புடுறாங்க” என்றாள்.ஷாம் அவளுடன் கிளம்பினால்.

 

“மித்ரா எங்க போற” என்றான் லீமிங்கு.

 

“மித்துவ ஆண்ட்டி கூப்புடுறாங்க போய்ட்டு பைவ் மினிட்ஸ்ல வந்துருவா, கொஞ்ச நேரம் கூட உங்க ஆளவிட்டு உங்கனால இருக்க முடியாத, நான் வேணுனா உங்களுக்கு கம்பெனி தரவா” என்று லீமிங்குவை கிண்டல் செய்தாள் ரிங்கு.

 

“வேண்டாம் வேண்டாம், எனக்கு என் மித்ரா ஓட கம்பெனி தான் வேணும்” என்றான் மீங்கு சிறு வெட்கத்துடன்.

 

“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா உங்களுக்கு” என்று கூறி கிண்டல் செய்து விட்டு மித்ராவை அழைத்து சென்றாள்.

 

சிறிது நேரம் கழித்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனி தனி அணிகளாக பிரிந்து நடனப் போட்டி நடத்தினர். அதில் பெண்கள் அணி வெற்றிப் பெற்றது. விழாவின் இறுதியில் மணமக்கள் இருவரும் சேர்ந்து       

“உன் விழிகளில்

விழுந்த நாட்களில் நான்

தொலைந்தது அதுவே

போதுமே வோ் எதுவும்

வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த

நாட்களில் நான் கரைந்தது

அதுவே போதுமே வோ்

எதுவும் வேண்டாமே பெண்ணே

என் கனவினில்

வந்த காதலியே கண்

விழிப்பதிற்க்குள்ளே

வந்தாயே நான் தேடி

தேடித்தான் அலஞ்சுடேன்

என் தேவதைய கண்டு

புடிச்சுட்டேன் நான் முழுசா

என்னதான் கொடுத்துட்டேன்

அட உன்ன வாங்கிட்டேன்

நீ தினம் சிரிச்சா

போதுமே வேற எதுவும்

வேணாமே நான் வாழவே

நான் உன்ன ரசிச்சா போதுமே

வேற எதுவும் வேணாமே

நான் வாழவே”

என்ற பாடலுக்கு மித்ரா கண்கள் மின்ன காதலுடன் லீமிங்குவின் கையை பிடித்துக் கொண்டு அடிக் கொண்டிருந்தாள்.

 

மித்ராவின் மகிழ்ச்சியான முகத்தை பார்த்து குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.அவர்கள் ஆடி முடிந்ததும் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அந்த சத்தத்தில் ஷாம் லீமிங்குவை விட்டு சற்று தள்ளி நின்றாள், 

 

“நம்ம ஷாம்க்கு வெக்கம் வந்துருச்சிடோய்” என்று கௌசிக் கிண்டல் செய்தான்.

 

விக்ரமோ ஷாமின் பிரிவை தாங்க முடியாமல் ஆள் அரவமற்ற தனித்தீவில் அமர்ந்து சோகம் தீரக் குடித்துக் கொண்டிருந்தான்.

 

மறுநாள் எழுந்ததிலிருந்து ஸ்ரேயா பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தாள். ” இந்த ரிங்கு காலைல இருந்து எங்க தான் போனானேத் தெரியல, ஈவினிங் மெஹந்திக்கு ஷாம் லீமிங்கு ரெண்டு பேருக்கும் ஒரே கலர்ல டிரஸ் டிசைன் பண்ண சொல்லி வாங்கிட்டுவானு சொல்லிருந்தேன் என்ன ஆச்சுனே தெரியலையே” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

 

அன்று மதிய உணவு வேளையில் தான் ரிங்கு அங்கு வந்தாள். “இவளோ நேரம் எங்கடி போயிருந்த என்கிட்ட சொல்லாமா, டிரஸ் என்ன ஆச்சு”

 

“ஸ்ரே டிரஸ் மார்னிங்கே இரண்டு பேருக்கும் குடுத்து விட்டுட்டேன், நீதானா ஊருக்கு போய் ஆசரமத்துல இருக்குற பாதர் சிஸ்டர்ஸ் அப்பறம் குழந்தைங்க எல்லாரையும் கூட்டிடு வர சொன்ன மறந்துட்டையா, அப்படியே அவங்க கூட நம்ம சின்னபையன் கதிரு அவன் அம்மா அப்பா அக்கா, அப்பறம் சங்கர் அண்ணா குடும்பத்துல எல்லாரையும் கூட்டிடு வந்து அவங்க தங்குறதுக்கு எல்லாம் ஏற்பாட்டையும் பன்னிட்டு வாரேன்டி”

 

“சூப்பர் ரிங்கு எல்லாரையும் கூட்டிடு வந்துடைய ரெண்டு நாளைக்கு முன்னாடியே போய் கூட்டிடு வரணுன்னு நெனச்சேன் மேரேஜ் டென்ஷன்ல மறந்துட்டேன், அவங்களுக்கு எந்த குறையும் இல்லாம பாத்துக்கோடா” என்றாள்.

 

ஜான்சி மட்டும் வெங்கடேசன் அவர்களின் குடும்ப மட்டும் தொழில் துறை நண்பர்கள் அனைவரும் அங்கு வந்திருந்தனார்.

 

வினித், சஞ்சய், கெளதம், கௌசிக் அவர்களின் நண்பர்கள், லீமிங்குவின் நண்பர்கள்,ரகு மட்டும் அவனுடைய நண்பர்கள் என இளைஞர்களின் பட்டாளம் ஓன்றுக் கூடி பாட்டு, டான்ஸ், சரக்கு என்று பேசுலர் பார்ட்டியை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர்.

 

மெஹந்தி விழாவும் மிகவும் மகிழ்ச்சியாக நடந்து கொண்டிருந்தது, விடிந்தால் திருமணம் என்பதால் கலிங்கப்புரியில் வீரசிம்மனும் மகேந்திரசிம்மனும் திருமணத்தை நிறுத்த அனைத்து ஏற்படுகளையும் செய்து முடித்திருந்தனர். நள்ளிரவு நேரத்தில் மணிகர்ணிகாபுரிக்குள் நுழைவதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

 

மித்ராவின் இருகைகளிலும் மெகந்தி போட்டு அதன் நடுவில் லீமிங்கு பெயரை அழகாக எழுதியிருந்தனர், விடிந்தால் திருமணம் என்பதால் லீமிங்கு பல கனவுகளுடன் ஆசையுடன் எப்போ விடியும் என்று காத்துக் கொண்டிருந்தான். மித்ரா என்ன மாதிரியான மனநிலையில் இருந்தால் என்று அவளுக்கே தெரியவில்லை. ஒரு பொம்மைப் போல் மற்றவர்கள் சொல்வதை செய்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பக்கம் ராஜமாதாவோ கோவில் அமர்ந்து தன் குலதெய்வமான துர்க்கா தேவியிடம் திருமணத்தில் எந்த பிரச்சனையும் நடக்கக் கூடாது.தன்னுடைய செல்ல பேத்தியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார்.

 

மித்ராவின் திருமணம் வட மட்டும் தென் இந்தியா சடங்குகள் இரண்டு கலந்து நடந்துக் கொண்டிருந்தது. மணமக்கள் இருவரும் ஷர்வாணி மற்றும் லெகங்கா அணிந்து அழகா இருந்தனர். அவர்கள் இருவரின் முகங்களும் மலர்களால் ஆன திரையில் மூடப்பட்டு இருந்தது. திருமணம் முடியும் வரை அவர்களது முகத்தை யாரும் பார்க்க முடியாது. 

 

 முகூர்த்த நேரம் நெருங்க மணமக்கள் மணவறைக்கு அழைத்து வரப்பட்டனர். ஐயர் மந்திரங்களை கூற மணமக்கள் இருவரும் அதை திரும்ப கூறிக் கொண்டிருந்தனர். சடங்குகள் அனைத்தையும் கடமையை என மித்ரா செய்து கொண்டிருந்தாள். அவளிடம் மகிழ்ச்சி என்பது துணியும் இல்லை.

 

ஐயர் மாங்கல்யத் தட்டை ஸ்ரேயா விடம் கொடுத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வருமாறு கூறினார். பின் மாங்கல்யத்தை மணமகனின் கையில் கொடுக்க கைகள் நடுங்க அதை பெற்றுக் கொண்ட லீமிங்கு மங்கள நாதங்கள் வாசிக்க மணமகளின் கழுத்தில் மங்கலயத்தை அணிவித்து மூன்று முடிச்சு போட அனைவரும் அட்சதைகளை தூவி மணமக்களை ஆசீர்வதித்தனர் .பின் மித்ராவின் முகத்தில் இருந்த முக்காடை சற்று விளக்கி அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.

 

மணமகனும், மணமகளும் தங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி ஏழு சுற்றுகள் சுற்றி, நித்தியத்திற்கும் ஒருவரோடொருவர் இருப்பதாக உறுதியளித்தனர். கடைசி சுற்றை சுற்றிவிட்டால் திருமண முழுமை அடைந்துவிடும். அவர்கள் கடைசி சுற்றை சுற்றிக் கொண்டிருக்க வெளியிலிருந்து “நிறுத்துங்க” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான் லீமிங்கு. அவன் தலைமுடி கலைந்து உடம்பில் பல ரத்தக் காயங்களுடன் அங்கு வந்து நின்றான்.

 

 லீமீங்குவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.”நீ இங்க இருக்கனா அப்போ மித்ரா கழுத்துல தாலிக் கட்டுனது யாரு” என்று ராஜமாதா அதிர்ச்சியுடன் கேக்க.

 

 

அந்த அரங்கமே அதிரும் அளவுக்கு சிரித்த வண்ணம் கைகளில் துப்பாக்கி ஏந்திய ஆட்கள் சூழ உள்ளே வந்தார் வீரசிம்மன். “சங்கமித்ரா கழுத்துல தாலிக் கட்டுனது என் மகன் மகேந்திரசிம்மன்” என்றார் கர்ஜனையாக,அதைக் கேட்டு அனைவரும் அரண்டு போய் நின்றிருந்தனார். காவலாளிகள் சிலர் அவரை நெருங்கி வர அவர்களை எட்டி உதைத்தவர்.

 

“இனிமேல் இந்த ராணியும், இந்த மணிகர்ணிகாபுரியும் இங்க இருக்குற மக்கள் எல்லாரும் என் மகன் மகேந்திரசிம்மனுக்கு அடிமையா இருக்க போறாங்க” என்று கர்வமா கூறி சிரித்தார்.

 

ராஜமாதா, ஜான்சி இருவரும் என்ன செய்வது என்று தெரியமல் திகைத்து நிற்க. மக்கள் அனைவரும் இனிமேல் தங்கள் நிலை என்னவாகும் என்று பயத்திலும், மித்ராவின் குடும்பத்தினர் அவள் வாழ்க்கை போய்விட்டதே என்று கவலையில் கண்ணீர் வடித்தனார். மித்ராவின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது, பூமி பிளந்து இப்படியே உள்ளே சென்றுவிட மாட்டோமா என்று எண்ணிக் கொண்டிருந்தாள் மித்ரா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!