Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 26 Final

அத்தியாயம் 26 – final

“என்ன பாயிண்ட்.. என்ன பாயிண்ட்!!!

என்ன பேச்சு.. என்ன பேச்சு!!!



Advertisement

அட அட அட!!!!

நீங்க மிஸ் பண்ணிட்டிங்க பத்தும்மா..”

Advertisement

“—————”

Advertisement

“அவ பேசும்போது மொத்த கோர்ட்டும் அப்படியே மெய்மறந்து அவளையே பார்த்திட்டு இருந்துச்சு தெரியுமா?”

Advertisement

“————”

“என்ன பத்தும்மா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன், நீங்க ம்ம்கூட சொல்ல மாட்டேங்குறீங்க?” என்றான் சம்பவ் சுணக்கமாக.

“அவங்க ம்ம்னு சொல்லாமலே ரெண்டு மணி நேரமா எங்க காது தீஞ்சு போற அளவுக்கு சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க அண்ணா.. வீர்யா அக்கா நல்லா பேசலைன்னு சொன்னாதான் அதிசயம்” என்றாள் அங்கே அமர்ந்திருந்த வைஷாலி.

இப்பொழுது நான்காம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள்.

“உனக்கு தெரியாது பம்ப்கின். கோர்ட்ல பேசறதும் வீட்ல பேசறதும் ஒன்னு கிடையாது. அங்க எப்படி…” என்று மீண்டும் சம்பவ் ஆரம்பிக்க..

“அய்யயோ பாட்டி என்னை காப்பாத்துங்க.. திரும்ப இந்த அண்ணா முதல்ல இருந்து ஆரம்பிக்கப்போறாங்க” என்று கூறிவிட்டு மாடிக்கு ஓடிவிட்டாள்.

பத்தும்மா சம்பவ்வையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தார்.

“பாருங்க நான் பேசறதை இந்த குட்டி பம்ப்கின் கூட கேட்க மாட்டேங்கது.. ஆனா வீர்யா..” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க,

“இப்ப உன்னை என்ன செய்ய போறேன் பாரு” என்று பத்தும்மா அவனை அடிக்க கை ஓங்க.. “நோ வயலென்ஸ் பத்தும்மா .. அப்புறம் உங்க மேலேயும் கேஸ் போட்டிருவேன்” என்று கத்திகொண்டே அவன் ஓட,

அவனை துரத்திக்கொண்டே “டேய் டுபாக்கூர் வக்கீலு.. உன் முழியே இப்ப கொஞ்ச நாளா சரி இல்ல. அதை நான் போய் வீரு கிட்ட சொல்றேன் இரு முதல்ல” என்று கூற

“ப்ளீஸ்..ப்ளீஸ்.. பத்தும்மா.. அப்படி மட்டும் செஞ்சுடாதீங்க.. உங்களை விட்டா எனக்கு இந்த விஷயத்துல யாரு ஹெல்ப் பண்ணுவாங்க சொல்லுங்க” என்றான் சம்பவ் பாவமாக.

“எந்த விஷயத்துல?” என்று கேட்டுக்கொண்டே மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டார் பத்தும்மா.

சம்பவ் அவர் காலடியில் அமர்ந்து பாவமாக அவர் முகத்தை பார்க்க..

“டேய் இன்ஸ்டெண்ட்டா எப்படி டா இந்த முகத்தை மாத்துற?”

“இப்ப அதுவா முக்கியம்? எனக்கு ஹெல்ப் பண்ணுங்களேன் பத்தும்மா”

“விஷயத்தை சொல்லு முதல்ல.. அப்புறமா பார்க்கலாம்” என்றார் கெத்தாக.

“அது வந்து.. எப்ப இருந்துன்னு தெரியலை பத்தும்மா.. இப்ப எல்லாம் எனக்கு வீர்யாவை பார்த்தா வெட்கம் வெட்கமா வருது” என்றான் தலையை குணிந்து வெட்க பட்டுக்கொண்டே.

“அட கர்மமே.. இது என்ன டா கூத்து? அவளுக்கு இது தெரியுமா?”

“அவளுக்கு தெரியுமா தெரியலை.. அவகிட்ட சொல்லவும் பயமா இருக்கு.. இப்படி எண்ணம் வந்ததும் சொல்லாம அவ கூட இயல்பா பழகறது தப்புனு மனசாட்சி சொல்லுது”

“வேற என்ன சொல்லுது உன் மனசாட்சி”

“இது தப்பா சரியான்னு பட்டிமன்றமே நடத்துது.. “

“டேய் சம்பவ்.. நேரா போய் வீர்யாட்ட என்கிட்ட சொன்னதை அப்படியே சொல்லு. பட்டிமன்றத்துக்கு தீர்ப்பை அவ சொல்லிடுவா”

“பயமா இருக்கு பத்தும்மா”

“நீ யாருன்னு அவளுக்கு தெரியும் அவ யாருன்னு உனக்கு தெரியும்.. சும்மா ட்ராமா பண்ணாம போய் பேசு. ஒரு த்ரில்லிங் ஓர் ஃபைய்டிங் ஒரு சேசிங்ன்னு இருந்தா அந்த லவ் ஸ்டோரிக்கு ஹெல்ப் பண்ணலாம்.. உன்னோட மொக்கை லவ்வுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணா என் ரேஞ்ச் என்ன ஆகறது?” என்று பத்தும்மா அசால்ட்டாக கூற,

அவன் அமைதியாகவே இருக்கவும், பத்தும்மா கொஞ்சம் இறங்கி வந்து,

“உனக்கு வந்திருக்க பீலிங்ஸ் அதுவா வந்திருச்சு.. இப்ப அது தப்பா சரியான்னு எல்லாம் குழப்பிக்காத.. முதல்ல இது ஒத்து வருமா? உனக்கு கண்டிப்பா இது வேணுமான்னு? யோசி.. ஆமான்னு தோணுனா வீர்யாகிட்ட பேசு.. அப்புறம் ஒரு முடிவுக்கு வா.. படிச்சு முடிச்சு வக்கீலா வேலை பார்த்துட்டு இன்னும் சின்ன பிள்ளையாட்டம் எதுக்கு பயம்” என்றார் இலகுவாக.

“நான் சொல்லி, அவளுக்கு விருப்பமில்லாட்டி என் ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டா? என்னால வீர்யாகிட்ட பேசாம இருக்க முடியாது”

“உன்னை மாதிரி தானே அவளுக்கும் இருக்கும்.. நீ போய் தைரியமா பேசு.”

“தேங்க்ஸ் பத்தும்மா..”

“நீயாச்சும் உருப்படியா ப்ரொபோஸ் பண்ணு டா.. பூசணிக்காய் முருங்கக்காய்னு எடுத்திட்டு போகாம..” என்று ஜாலியாக பேசி அவனை அனுப்பி வைத்தார்.

மறுநாள் கோர்ட்டில் இருந்து இருவரும் டூ வீலரில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்கள். வீர்யா வண்டி ஓட்ட, சம்பவ் பின்னால் அமர்ந்திருந்தான்.

“வீர்யா எனக்கு உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..” என்றான் சம்பவ் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

“சொல்லு என்ன விஷயம்?”

“எங்கயாவது உட்கார்ந்து பேசுவோம் வீர்யா”

“வீட்டுக்கு தானே போறோம், அங்கே போய் அம்மா கொடுக்கிற ஸ்னாக்ஸ்ஸை சாப்பிட்டுக்கிட்டே உட்கார்ந்து பேசவேண்டியது தானே”

“இல்ல வெளியே எங்கயாவது நிப்பாட்டு”

“பீச்சுக்கு போவோமா?”

“சரி..”

“இருவரும் நேரே பீச்சிற்கு சென்றனர்”

கொஞ்ச தூரம் நடந்து சென்று கடலை பார்த்துக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்தனர்.

“வீர்யா.. நான் சொன்னா நீ என்னை தப்பாயெல்லாம் நினைக்க கூடாது, சரியா”

“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு? உன்னை போய் நான் தப்பா நினைப்பேனா சான்ஸே இல்ல.. நீ விஷயத்தை சொல்லு”

“உனக்கு இஷ்டமில்லைனா இல்லை சொல்லலாம், ஆனா என் ப்ரெண்ட்ஷிப் எல்லாம் கட் பண்ண கூடாது”

“டேய் ஒழுங்கா விஷயத்தை சொல்லு..”

“எனக்கு இப்ப கொஞ்ச நாளா.. சரியா சொல்லணும்னா ஒரு ஒரு மாசமா…”

“ஒரு மாசமா??”

“ஒரு மாசமா.. உன்னை பார்த்தா வெட்கமா வருது.. நீ பேசும்போது கேட்டுகிட்டே இருக்கணும்னு தோணுது.. எப்பவுமே உன் கூட சேர்ந்தே இருக்கணும்னு தோணுது”

“ஆல்ரெடி ரொம்ப வருஷமா நாம சேர்ந்து தானே இருக்கோம்.. தூங்கறதை மட்டும் தான் நாம தனி தனியா செய்யறோம்”

“உனக்கு புரியலையா வீர்யா? தூங்கும்போது கூட உன்னை விட்டு பிரிய வேணாம்னு எனக்கு தோணுது” என்றான் சம்பவ் வீர்யாவின் கண்களை பார்த்துக்கொண்டே.

வீர்யா அமைதியாக பொங்கி வரும் அலைக்கடலை பார்த்து கொண்டிருந்தாள்.

சில நிமிடங்கள் அமைதி மட்டுமே! சம்பவ்விற்கு இதயம் மிகவும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“என்ன வீர்யா ஒன்னும் சொல்லாம இருக்க? கோபமா? உனக்கு ஓகே இல்லைன்னாலும் ஓகே தான்” என்றான் உள்ளிறங்கிய குரலில்.

“எல்லாரும் காதலை சொன்னதும் பொண்ணு சரின்னு சொல்லணும்னு தான் நினைப்பாங்க, நீ என்னடான்னா ஆரம்பித்துல இருந்து ஓகே இல்லைனாலும் பிடிக்கலைனாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டு இருக்க.. நான் ஓகே சொல்லணுமா இல்ல நோ சொல்லணுமா?”

“ஆங்..”

“ஒரு மாசமா நான் மட்டும் என்ன அண்டார்டிக்காவுலயா இருக்கேன்? உன்கூட தானே இருக்கேன்? உன் முழியை பார்த்து எனக்கு தெரியாதா?”

“அப்ப ஓகேவா?”

“எனக்கு ஓகே தான்..” என்றாள் வீர்யா அழகிய புன்னகையோடு.

“நிஜமாலுமே ஓகேவா வீர்யா?”

வீர்யா இடுப்பில் கை வைத்த்து முறைத்து பார்க்கவும்,

“கல்யாணம் எப்ப செஞ்சுக்கலாம்?”

“அதுக்குள்ள என்ன கல்யாணத்தை பத்தி கேட்குற?”

“வீர்யா.. நமக்கு தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா தெரியுமே.. பொதுவா பேசி பழகி புரிஞ்சு அப்பறம் கல்யாணம் செஞ்சுப்பாங்க.. நாம் தான் மத்த எல்லாம் முடிச்சாச்சே?”

“அதுவும் சரி தான்.. வரா கிட்ட முதல்ல சொல்லுவோம், அவளை இங்க வர சொல்லலாம்” என்று வராஹிக்கு அழைத்தனர்.

வராஹி சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து, இப்பொழது அதே கல்லூரியில் மேற்படிப்பு படித்து கொண்டிருக்கிறாள்.

இவர்கள் அழைக்க அவள் போனை எடுக்க வில்லை.

அவளிடம் சொல்லாமல் வீட்டில் சொல்ல இருவருக்கும் இஷ்டமில்லை. ‘கால் அஸ்’ என்று மெசேஜ் போட்டுட்டு இருவரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஹாஸ்பிட்டல் ட்யூட்டியில் இருந்தால் கைபேசி எடுக்க நேரம் இருக்காது. ஒரு மணி நேரம் கழித்து அவளே அழைத்தாள்.

“வரா. நீ நேரா பீச்சுக்கு வா, ஒரு முக்கியமான விஷயம்” என்றாள் வீர்யா.

“இப்பவா.. ரொம்ப பசிக்குது வீரு.. ஒரு சர்ஜெரி பிஜி ஸ்டுடென்ட்ஸை அஸ்சிஸ்ட் பண்ண சொன்னாங்க.. பத்து மணி நேரம்… இப்ப தான் வெளியே வரேன்.. காலையில சாப்பிட்டது.”

“அட பாவமே.. உங்க காலேஜ் கேன்டீன்ல ஒன்னும் நல்லா இருக்காதே.. நீ வெளியே வந்து ஒரு இளநீர் குடிச்சிட்டு அப்படியே நான் ஒரு ரெஸ்டாரெண்ட் லொகேஷன் அனுப்புறேன். அங்க வந்திடு நாங்களும் வந்திடறோம்”

“சரி வீரு”

அடுத்த அரைமணி நேரத்தில் வீர்யாவும் சம்பவ்வும் அங்கே சென்று இறங்கினார்கள்.

வாராஹியும் அப்பொழுது தான் வந்திருந்தாள்.

பின் மூவரும் அமைகியாக ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

சாப்பிட்ட பிறகே வராஹிக்கு தெம்பு வந்தது.

“சொல்லு வீரு..”

“வரா.. சம்பவ் எனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டான்..” பட்டென்று விஷயத்தை போட்டுடைத்தாள் வீர்யா.

“ஆங்..” என்று வராஹி இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

“உனக்கு ஓகேவா?” என்றாள் வீர்யா கொஞ்சம் டென்ஷனாக. வராஹிக்கு விருப்பம் இல்லை என்றால் அவளால் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய முடியாதே.

“ஹேய்ய்ய்… “ என்று தன் இயல்பை மீறி சந்தோஷாத்தில் கூச்சலிட்டாள் வராஹி.

அனைவரும் இவர்களையே திரும்பி பார்க்க.. நண்பர்கள் மூவரும் யாரையும் கண்டுகொள்ளவில்லை. மூவரும் வட்டமாக ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு ஹேய் என்று குதித்தனர்.

அன்று மாலையே வீட்டில் அனைவரிடமும் விஷயத்தை கூற யாருக்கும் மறுப்பு இருக்கவில்லை.

வீர்யா வராஹி சம்பவ் மூவரின் குடும்பமும் சந்தித்து பேசினார்கள்.

சம்பவ்வின் பெற்றோர்கள், “ரொம்ப வருஷமா அவன் உங்க வீட்ல தானே இருக்கான், என்ன தூங்கறதுக்கு மட்டும் வீட்டுக்கு வந்திட்டு இருந்தான்.. இனி அதுவும் டவுட் தான்” என்று கூறி மகிழ்ச்சியாகவே ஒத்துக்கொண்டனர்.

“என்ன வீரு.. உனக்கு சிக்கிய அடிமை இப்ப வாழ்நாள் அடிமை சாசனத்தை கொடுத்திட்டான் போலயே?” என்றார் பத்தும்மா சம்பவ்வை பார்த்துக்கொண்டே.

பதம்ஸ்ரீ அவார்ட் கொடுத்ததை போல அதை மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டான் சம்பவ்.

அட லூசே!!! என்று அனைவரும் அவனை பார்த்து வைத்தனர் வீர்யா உட்பட

—————

ரகுநந்தன் அவன் கூட வேலை செய்யும் மயூரி என்ற பெண்ணை காதலித்து ஆறுமாதம் முன்பாக தான் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டிருந்தான்.

அதனால் நிவேதாவும் நிரஞ்சனும் உடனே வீர்யா கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூற, “எனக்கும் வராவுக்கும் ஒன்னாவே கல்யாணம் செய்யலாமே” என்றாள் வீர்யா.

“இல்ல வீரு, இன்னும் ஒரு வருஷம் படிப்பே இருக்கு.. நான் மாஸ்டர்ஸ் முடிச்சு ஒரு வருஷம் இதே ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யணும்னு பாண்ட் இருக்கு. அதுக்கு அப்புறம் தான் மாப்பிள்ளையே பார்க்கணும்.. அதுக்காக நீங்க ஏன் வெயிட் பண்ணனும்? வேற மாப்பிள்ளைன்னா கூட நாம பிரியணும்னு யோசிக்கலாம். இப்ப கல்யாணம் ஆகியும் இங்கதானே இருக்க போறீங்க.. நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுகிறது தான் எனக்கு சந்தோசம்” என்றாள் வராஹி.

வீர்யா முகம் தெளியாமல் இருக்க, வந்தியத்தேவன், “வராஹிக்கு இன்னும் டூ இயர்ஸ் ஆகும்.. மெடிசின் படிச்சா லேட்டா ஆகும் தானே.. நாங்களே முதல்ல வல்லபன் கல்யாணத்தை தான் யோசிச்சு வச்சிருக்கோம்.. என்ஜோய் யுவர் மொமெண்ட் வீர்யா.. ரெண்டு வருஷம் அப்புறம் நாம எல்லாரும் சேர்ந்து வராவுக்கு கல்யாணம் செய்யலாம்” என்றார் ஆதுரமாக.

எப்பொழுதையும் போல மணிமேகலை வச்ச கண் எடுக்காமல் வந்தியத்தேவனை பார்த்துக்கொண்டிருந்தார் பெருமையாக.

“வீர்யா செமஸ்டர் லீவ்ல கல்யாணம் வச்சுக்கலாம் டி.. அப்ப தான் நான் பிரியா இருக்க முடியும்”

“கண்டிப்பா வரா.. அப்புறம் நாம கல்யாணத்துக்கு ஒரே மாதிரி சாரீ எடுப்போம், ஓகே?” என்று தோழிகள் இருவரும் பேச ஆரம்பித்து விட்டனர்.

“டேய் உனக்கு இந்த பொண்ணே தான் வேணுமா? நல்ல யோசிச்சுக்கோ” என்றார் பத்தும்மா கவுண்டமணி மாடுலேஷனில்.

பின்னே தோழிகள் இருவரும் சேர்ந்து கல்யாணத்தை பற்றி ஆலோசிக்க சம்பவ்வை கண்டுகொள்ளவே இல்லை.

அவன் ஆம் என்று தலையை ஆட்ட..

“விதி வலியது என்ன செய்ய?” என்று பெருமூச்சு விட்டு அவர் கூற எல்லாரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.

வல்லபன் சிஏ முடித்துவிட்டு பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கான்.

‘வெளி உலக அனுபவம் தேவை’ என்று வந்தியத்தேவன் கூற, அவன் நானா கூறியப் பிறகு அவனிடம் மறுபேச்சுதான் இல்லையே.

வீர்யா கல்யாண ஏற்பாடுகள் நடக்க நடக்க, மணிமேகலைக்கு வல்லபனுக்கும் திருமண பேச்சு ஆரம்பிக்க ஆசையாகி விட்டது.

“தேவ் தேவ்..வல்லபனுக்கு சீக்கிரம் பொண்ணு பார்க்கலாமே” என்று கணவரை நச்செடுக்க ஆரம்பித்தார்.

“முதல்ல நீ அவன்கிட்ட பேசு.. அவன் மனசுல யாராவது இருக்க போறாங்க..”

“நான் தானே.. என்கிட்ட அவன் சொல்லிட்டாலும், நீங்க பேசுங்க..” என்று நொடித்துக்கொண்டார்.

“அய்யோ என் செல்ல மேக்ஸ்.. இன்னும் உனக்கு இந்த பொறாமை போகலையா?” என்று மனைவியின் கன்னத்தை பிடித்து கிள்ளி கொஞ்சினார்.

சரியாக பாட்டியும் பேத்தியும் மாடிக்கு வந்தனர் அப்பொழுது.

“அய்யயோ! கண்ணை மூடுங்க பாட்டி.. கண்ணை மூடு பம்ப்கின்” என்று இருவரும் கத்திகொண்டே ஒருவர் கண்ணை மற்றொருவர் மூடிக்கொண்டு நின்றனர்.

“இங்க ஒன்னும் நடக்கலை. ஓவரா பண்ணாதீங்க ரெண்டு பேரும்” என்றார் மணிமேகலை உர்ரென்று.

“நாங்க தான் பார்த்தோமே.. அம்மா கன்னத்தை நானா கிள்ளுனதை” என்றாள் வைஷாலி.

“ஆளை விடுங்க.. என் புருஷனோட ரெண்டு நிமிஷம் பேச விட்றாதீங்க.. உக்கும்..” என்று நொடித்து விட்டு எழுந்து சென்றுவிட்டார் மணிமேகலை.

“என்ன பாட்டி இது?”

“அது ஒண்ணுமில்லை நாம மேலே வந்துட்டோம் இல்ல அதான் ரெண்டு பேரும் கீழே போய் லவ் பண்ண இப்படி ஒரு டிராமா.. மேகா முதல்ல போயிட்டால்ல, இப்ப பாரு ஒரு நிமிஷத்துல, மேக்ஸ்ன்னு உங்க நானாவும் போயிடுவான்” என்று கூறி முடிக்கவில்லை,

“மேக்ஸ் எனக்கு ஒரு காஃபி” என்று வந்தியத்தேவன் எழுந்து கீழே சென்றுவிட்டார்.

“இப்ப நாம் என்ன செய்றது” என்று வைஷாலி கேட்க, “நாம வீடியோ கேம் விளையாடலாம் வா..” என்று பேத்தியுடன் ஜாலியாக விளையாட ஆரம்பித்தார் பத்தும்மா.

—————–

சீரும் சிறப்புமாக நடந்தேறியது வீர்யநந்திதா சம்பவ்குமார் திருமணம். மணமகளின் தோழியாக மணப்பெண்ணுடனே வளம் வந்தாள் வராஹி.

ஊரில் இருந்து ஹரி சாம்பவி அவர்கள் பிள்ளைகள் ஷ்யாம்ப்ரசாத், மாதவ்ப்ரசாத், சுந்தர்ராஜன், பரிமளா, மகா வெங்கட் என்று அனைவருமே வந்திருந்தனர்.

வந்தியத்தேவனும் மணிமேகலையும் தங்கள் வீட்டு திருமணம் போல ஓடியாடி வேலை செய்தனர்.

வேலைகளுக்கு இடையிலும் கணவன் மனைவி இருவரது பார்வையும் அவ்வப்பொழுது தொட்டு மீண்டது.

சுந்தர்ராஜன் வைஷாலியை மடிமீதே வைத்திருந்தார். அதிகமாக அவளுடன் இருக்க முடியவில்லை என்ற ஏக்கம், சென்னை வரும்பொழுது எல்லாம் பேத்தியோட அதிக நேரம் இருப்பார்.

“என்ன பெரிய மிலிட்டரி சார்.. ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து” என்று அக்கம் பக்கத்து ஆட்கள் வந்து சுந்தராஜனிடம் பேசிவிட்டு சென்றனர்.

“உங்களை மிலிட்டரி சார் ஆக்கிய இருவருக்கும் கல்யாணம் பாரத்தீங்களா அண்ணா?” என்று பத்து ம்மா கேட்க அனைவர் முகத்திலும் புன்முறுவல்.

“அங்க பார்த்தியா மகா” என்றார் வெங்கட் மனைவியிடம். அனைவரது கவனமும் அங்கே சென்றது..

மேடையில்.. வீர்யா வெட்ஸ் சம்பவ் என்று எழுதி இருந்ததற்கு மேலே,

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது” என்ற திருக்குறள் எழுதி இருந்தது.

“எவ்வளவு பொறுத்தமான குரல் இல்ல?” என்றார் சுந்தர்ராஜன் நெகிழ்வாக.

“இதை வரா தான் எழுத சொல்லி இருப்பா.. இந்த பிள்ளைங்க கடந்து வந்த..” என்று அவர் மேலும் பேசிக்கொண்டே செல்ல ,

“குட்டி பம்கின் வா வா நாம ஓடிடலாம். இவங்க பேமிலியோட இத்து போன பிளாஷ்பேக்கை ஆரம்பிக்க போறாங்க” என்று பத்தும்மா பேத்தியின் கைகளை பிடித்து கொண்டு வெளியே ஐஸ்க்ரீம் இருந்த இடத்திற்கு நகர்ந்துவிட்டார்.

“நம்ம பிளாஷ்பேக் இத்துப்போனதா?” என்று பரிமளா மூச்சு வாங்க ஹரியிடம் கேட்க.

“இதுல டவுட் வேறயா அத்தை?” என்றனர் வெங்கட்டும் சாம்பவியும்.

அதை கண்டுகொள்ளாமல்,

“இந்த வல்லபனை பாருங்க, நாம இத்தனை பேர் வந்திருக்கோம்.. நானா நானான்னு மாப்பிள்ளை வால் பிடிச்சிட்டே சுத்திட்டு இருக்கான்” என்றார் பரிமளா சுந்தர்ராஜனிடம்.

“அதான் தாத்தா உங்க பின்னாடி சுத்தறாங்களே பாட்டி” என்றான் ஷ்யாம்.

“ஆமா ஆமா உங்க தாத்தா சுத்திட்டாலும்..” என்று நொடித்துக்கொண்டார் பரிமளா.

கலகலப்பாக நடந்து முடிந்தது திருமணம்.

அடுத்து வல்லபனுக்கு திருமண பேச்சு எடுக்கவே அவன் சொன்ன ஓரே கண்டிஷன், “நம்ம கூட வந்து நம்ம வீட்ல இருக்கணும் அத்தம்மா.. அவ்வளவுதான் என் கண்டிஷன்” என்று முடித்து கொண்டான்.

வந்தியத்தேவன் பெருமையாக அம்மாவை பார்க்க,

“வீட்டை முதல்ல கொஞ்சம் பெருசா கட்டணும் தேவ்..” என்றார் பெரியவராக.

“சரிம்மா.. சீக்கிரம் செஞ்சுடலாம்..”

“பத்து, நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட” என்றார் மணிமேகலை குஷியாக.

—————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!