வீர்யா சம்பவ் திருமணம் முடிந்து சரியாக ஓராண்டில் வந்தியத்தேவன் மணிமேகலை வீட்டின் கிரஹப்பிரவேசம்.
Advertisement
நன்றாக எடுத்து பெரிய வீடாக கட்டி இருந்தார்கள். மூன்று மாடி , ஒவ்வொரு தளத்திலும் இரண்டு படுக்கை அறை, ஹால் கிட்சன் டைனிங் என்று இருந்தது. வீட்டிற்குள்ளே இருந்து மாடி படி.
காலை ஐந்து மணிக்கு கணபதி ஹோமத்தில் வந்தியத்தேவனும் மணிமேகலையும் மாலையும் கழுத்துமாக அமர்ந்திருந்ததை பார்க்க அவ்வளவு நிறைவாக இருந்தது.
Advertisement
Advertisement
பத்தும்மாவின் சொந்தத்தில் ராமலக்ஷ்மி என்ற பெண்ணை வல்லபனுக்கு பார்த்திருந்தார்கள்.சொந்தம் என்றாள் தஞ்சாவூரில் இவர்கள் இருந்த வீட்டிற்கு பக்கத்து வீடு அவர்களது. ராமலக்ஷ்மியின் தாயும் பத்தும்மாவும் அத்தை மகள் மாமன் மகள் உறவு.
வசதி என்று பெரிதாக ஒன்றும் இல்லை.ராமலக்ஷ்மியின் அம்மா சிறிய வயதில் இறந்து விட, அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர். ராமலஷ்மிக்கு சித்தி மூலம் இரண்டு சகோதரிகள். கதைகளில் வருவது போல கொடுமைக்கார சித்தி எல்லாம் இல்ல, ஆனால் பெரிதாக ஒட்டுதல் இல்லை.
Advertisement
எப்பொழுதுமே பத்தும்மாக்கு குழந்தைகளுடன் தானே நட்பும் ஆட்டமும். அப்படி ராமலக்ஷ்மியும் இவரது தோழியே!
ராமியின் சிறிய வயதில், அதாவது ஒன்றாம் வகுப்பு வரை பத்தும்மாவுடைய விளையாட்டு தோழி. அதன் பின் பத்தும்மாவின் உடல் நல கோளாறு, அவர் சென்னை சென்றது என்று தொடர்ப்பு விட்டு போணது.
ஆறு வயதில் தன்னுடன் துறுதுறு என்ற விளையாடும் பத்துமாவை ராமியால் மறக்க முடிந்ததே இல்லை. அவள் அம்மாவின் மறைவில் இருந்து மீட்டது அந்த நாளில் பத்தும்மா தான்.
இம்முறை க்ரஹப்ரவேசத்திற்கு ஊரில் உள்ள உறவினர்களை அழைக்க சென்ற இடத்தில தன் தோழியை பார்த்த பத்தும்மாவிற்கு ஒரே கொண்டாட்டம். அவளுக்கு திருமணத்திற்கு பார்த்து கொண்டிருப்பதாக கூற, உடனே அவருக்கு வல்லபன் ஞாபகம் வந்தது, இவர்கள் திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு வந்தார்.
நேரில் பார்த்தும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்து போனது. பெற்றோர்களிடம் அதிக ஒட்டுதல் இல்லாத ஏக்கத்தை பற்றி ராமி கூற, அதுவே வல்லபன் மனதை இளக்கி விட்டது.
வராஹிக்கும் ராமலக்ஷ்மியை மிகவும் பிடித்து போனது. கிட்டத்தட்ட அவளுக்கும் ராமிகும் ஒரே வயது தான்.
எப்போதையும் போல, நாங்க மாப்பிள்ளை வீட்டு காரங்க.. கேள்வி கேட்கத்தான் செய்வோம் என்று வீர்யா அவள் பக்க விசாரணைகளை முடித்தே ஒப்புதல் அளித்தாள்.
“ஏன் வீரு.. நம்ம கல்யாணத்தப்ப மாப்பிள்ளை வீட்டுகாரங்களா நாங்க ஒரு கேள்வியும் கேட்கலையே” என்றான் சம்பவ் தன் நீண்ட நாள் சந்தேகத்ததை.
“நம்ம விஷயத்துல மாப்பிள்ளை வீடு பொண்ணு வீடு எல்லாம் தனி தனியாவா இருந்துச்சு.. எல்லாம் ஒன்னுன்னு இல்ல நான் நினைச்சேன்.. அப்படி இல்லையா?” என்று வீர்யா தன் நெற்றிக்கண்ணை திறக்க,
“அப்படி தான்.. அப்படியே தான் .. எல்லாம் ஒன்னு.. ஒன்னுக்குள்ள ஒன்னு” என்று சம்பவ் தோப்புக்கர்ணம் போட்டு அவளை மலை இறக்கினான்.
வல்லபன் திருமணத்திற்கு ஹரியும் வினோதாவும் ஒரு வாரம் முன்பு வந்து இறங்கினார்கள்.
அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை, அதை அவர்களும் கண்டுகொள்ளவில்லை.
மணமேடையில் “மாப்பிள்ளையோட அப்பா அம்மா வாங்க” என்று அய்யர் கூற , வேகமாக எழப்போன ராம் வினோதாவை கண்டுகொள்ளாமல், வராஹி மணிமேகலை வந்தியத்தேவன் கைகளை பிடித்து கொண்டு மேடை ஏறினாள்.
பரிமளா சுந்தர்ராஜன் கூட அதை தடுக்கவில்லை.
சுணங்கி போன முகத்துடன் திருமணம் முடியும் வரை இருந்துவிட்டு உடனே கிளம்பிவிட்டனர் இருவரும்.
கல்யாணத்தில் கலக்கியது பம்க்கினும் பத்தும்மாவும் தான். இருவரும் ஒரே போல உடை அணிந்து மண்டபத்தையே ஒரு கலக்கு கலக்கினார்கள்.
“மேக்ஸ்.. ரெண்டு பேரும் பண்ற அலப்பறைக்கு ராத்திரி கால் வலிக்குதுன்னு நம்மளை தூங்க விட மாட்டங்க பாரு” என்றார் வந்தியத்தேவன்.
“சொன்ன பேச்சை கேட்டா தானே? ரெண்டு பேரையும் ஒரு ரூம்ல போட்டு பூட்டிட வேண்டியது தான். அவங்களே கட்டிட்டு உருளட்டும்..”
“ஹா ஹாஹா.. அதுவும் சரி தான்.. அப்ப தானே நாமளும் நம்ம ரூம்ல கட்டி உருள முடியும்..” என்றார் ஒற்றை கண்ணை அடித்து கொண்டு.
“ஐயோ.. என்ன பேச்சு இது தேவா… யார் காதுலேயாவது விழுக போவது..” என்று அவன் கையை பிடித்து கிள்ளி வைத்தார். வெட்கத்தில் அவர் முகம் அவ்வளவு அழகாக இருந்தது.
இருவரும் ரகசியக்குரலில் தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அடுத்து நம்ம வராஹி கல்யாணம் தான் இல்ல தேவா? டாக்டர் அம்மா எப்ப ஓகே சொல்ல போறாங்களோ?” என்றார் மணிமேகலை கணவனிடம்.
“உனக்கும் எனக்கும் அந்த சான்சை வீர்யா விடுவான்னு நினைக்கிற மேக்ஸ்?”
“கஷ்டம் தான்..” என்றார் அவரும் மூக்கை சுருக்கி கொண்டு.
வராஹி வேலைக்கு சேர்ந்ததும் திருமணத்திற்கு சம்மதம் என்று கூற நினைத்ததை போல , வராஹிக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை வீர்யா தான் எடுத்திருந்தாள்.
வலை வீசி விசாரணை நடத்தி வீர்யாவிற்கு பிடிப்பது என்பது மிகவும் கஷ்டமாக போனது.. இதுவரை நாற்பத்தி மூன்று பேரை நிராகத்திருந்தாள்.
“அம்மா தெய்வமே.. நீ இப்படியே பண்ணா நம்ம வராக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காது” என்று சம்பவ் மனைவியுடன் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறான்.
வராஹி அவள் வேலையில் மிகவும் கெட்டிக்காரி.. அதை முழு மனதுடன் செய்து கொண்டிருக்கிறாள்.
அப்பொழுது ரகுநந்தனின் நண்பன் ஸ்ரீனிவாஸ் வாராஹியை பிடித்திருப்பதாக அவனிடம் கூறினான். அவன் ரகு நந்தனுடன் பள்ளியில் படித்தவன். வாராஹியை சிறு வயதில் இருந்தே அவனுக்கும் தெரியும்.
ரகுநந்தன் தங்கைக்கு தெரியாமல் மணிமேகலையிடம் வந்து கூறினான். மிகவும் நல்ல பையன் அத்தம்மா, நம்ம வராஹிக்கு சூட் ஆகும். என்று மேலும் பையனின் விவரங்களை எல்லாம் கூறினான்.
அங்கே தான் வந்தியத்தேவனும் பத்துமாவும் இருந்தனர்.
“நல்ல வேலை செஞ்ச ரகு. உன் தங்கச்சிக்கு தெரியாம எங்க கிட்ட சொன்னீயே! நீ உன் ப்ரெண்டை கூட்டிட்டு வா. நான் அவனுக்கு வீர்யாவை சமாளிக்க ட்ரெயினிங் கொடுக்கிறேன். அப்புறம் வீர்யாவை பார்க்கட்டும்” என்றார் பத்தும்மா.
‘ஐயோ யாராவது காப்பாத்துங்களேன்’ என்று விழி பிதுங்கி அமர்ந்திருந்தான்.
அவன் பெற்றோர்கள் சிங்கப்பூரில் இருக்கிறார்கள். ஒரே ஒரு தங்கை, அவளும் அங்கே படித்து கொண்டிருக்கிறாள். இவனுக்கு இந்தியாவில் வேலை செய்வதே இஷ்டம் என்று கூறிய முதல் விஷயமே இவர்களுக்கு பிடித்து போனது.
ஒரு வழியாக பத்தும்மா ட்ரெயினிங்கில் பாஸ் ஆகி வீர்யாவிடம் இன்டர்வியூவிற்கு வந்தான்.
அவளும் அவள் பங்கிற்கு வைத்து செய்தாள். ஒரு வழியாக வீர்யா ஓகே சொல்ல, அப்பாடா என்று வந்த ஸ்ரீனிவாஸனுக்கு வல்லபனும் சம்பவ்வும் ஜூஸ் கொடுத்து தேற்றினார்கள்.
வராஹியின் ஆசைப்படி, அவர்கள் குலதெய்வ கோவிலான வராஹி அம்மன் கோவிலில், மணிமேகலையும் வந்தியத்தேவனும் தாரை வார்க்க, ஸ்ரீனிவாசனின் கைப்பிடித்தாள் வராஹி.
திருமணம் முடிந்ததும் வீர்யாவை கட்டிப்பிடித்து கொண்டாள்.
ங்கே என்று விழித்த மாப்பிள்ளையை பார்த்து.. “பழகிடும்…” என்று ராகம் இழுத்தது மொத்த குடும்பமும்.