மறுநாள் காலை மகா அடுப்படியில் பால் காய்ச்சிக்கொண்டிருக்கும் போது ஹரி வந்தான்.
“என்னடா இவ்வளவு காலையில எழுந்திரிச்சிட்ட? காஃபி குடிக்கிறியா?”
Advertisement
“கொடு க்கா..”
“சாம்பவிக்கும் கலக்கவா? அவ எழுந்திரிச்சாச்சா?”
Advertisement
Advertisement
“அவளுக்கு குங்குமப்பூ பால் தான் க்கா. அங்க இருக்கு பாரு”
அப்பொழுது சாம்பவியும் உள்ளே வந்தாள்.
Advertisement
“இன்னிக்கு ஒரு நாள் எனக்கு குங்குமப்பூ இல்லாம பால் கொடுங்க அண்ணி.. அந்த வாசனையே பிடிக்கலை”
“என்ன சாம்பூ நீ.. அது எவ்வளவு காஸ்டலின்னு உனக்கே தெரியும்.. நம்ம பாப்பாக்காக தானே..” என்றான் ஹரி வேகமாக.
கலக்கி வைத்திருந்த காஃபியை சாம்பவியின் கையில் கொடுத்தார். குங்கமப்பூ பாலை ஹரியிடம் கொடுத்தார்.
“அவளுக்கு எதுக்கு இப்ப காஃபி..”
“ஒரு நாள் குடிச்சா ஒன்னும் ஆகுது .. எனக்கு தெரியும்..” என்று கூறி ஹரியிடம் பால் க்ளாசையை நீட்டினார் மகா.
“எனக்கு எதுக்கு க்கா குங்கமப்பூ பால் எல்லாம்..”
“குழந்தையோட அப்பா குடிக்கலாம் தப்பில்லை.. குடி.”
“அக்கா காலையில எப்படிக்கா இதை குடிக்கிறது?”
“இத்தனை மாசமா சாம்பவியை குடிக்க சொல்லி படுத்தும்போது தோனலயா? இப்ப அதை குடிச்சிட்டு கிளம்பு”
சாம்பவி நிதானமாக ரசித்து குடித்தாள். “தேங்க்ஸ் அண்ணி” என்று மகாவை கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் ஒரு முத்தம் வேறு வைத்தாள். அவள் உள்ளே சென்றதும்,
“ஏன்டா ஹரி.. நீ படிச்சு தானே வேலைக்கு போற.. குங்குமப்பூ குடிக்கிறதுனால குழந்தை சிவப்பா பொறக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது டா. அது ஜீன்ல இருக்கு. சும்மா அவளை டென்ஷன் பண்ணாம நீயா எது நல்லதுன்னு செய்யாம , அவளுக்கு என்ன வேணும்னு கேட்டு பார்த்துக்கோடா.. நல்ல பொண்ணு ஹரி.. இப்படி செஞ்சு உன் மேலே அவளுக்கு வெறுப்பு வர மாதிரி நடந்துக்காத”
என்று சகோதரியாக அறிவுரை கூறினார்.
“சரிக்கா” என்றான், உணர்ந்து சொன்னானா தெரியாது.
இந்த வாரத்தில் இருந்து சாம்பவி லீவ் போட்டிருந்தாள். அதனால் ஹரியை ஆபிஸ் அனுப்பிவிட்டு ஓய்வாக அமர்ந்து மகாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“ஏன் மகா, இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டுக்கு போகணும்னு தானே ஆசை இருக்கும். நீ போகலையா?”
“எனக்கு எங்க அம்மா வீட்டுக்கு போக ஆசையே இல்லை அண்ணி.. பையன் தான் பொறக்கணும்னு எங்க அப்பா ஊர்ல ஒரு ஜோசியரை விட்டு வைக்கலை. ஹரியை கூட சமாளிச்சுடுவேன், எங்க அப்பாவை சமாளிக்க முடியாது”
“அப்பாவும் என்கிட்ட இதைப்பத்தி சொன்னாங்க சாம்பவி. விடு மனசை போட்டு குழப்பிக்காத..”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சடகோபன் ராஜத்துடன் வந்தார்.
“இங்க பாரு சாம்பவி, அப்பா கேரளா போய் ஒரு பெரிய ஜோசியரை பார்த்திட்டு வரேன். அவர் ரொம்ப உறுதியா உனக்கு பையன் தான் பொறக்கும்னு சொல்லி இருக்காரு. ஆனா உன்னை காலையில தினமும் தலைக்கு குளிச்சு, இந்த ஸ்லோகத்தை சொல்ல சொல்லி இருக்காரு” என்று ஒரு காகிதத்தை கொடுத்தார்.
“ஏன் சார், மாசமா இருக்க பொண்ணு தினமும் தலைக்கு குளிச்சா சேருமா?
அதுவும் சாம்பவிக்கு சைன்னஸ் பிரச்சனை வேற இருக்கு” என்றார் மகா எரிச்சலாக.
“அது எல்லாம் ஒன்னும் ஆகாது ம்மா..” என்று மகா கூறியதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,
“நீ தினமும் செய்யணும் சாம்பவி. பேசாம நீ எங்களோட வா.. அப்ப தான் நீ சரியா செய்றியான்னு எனக்கு தெரியும்” என்று மகளிடம் கூறினார்.
‘இது என்னடா வம்பா போச்சு!’ என்று மகா ராஜத்தை பார்க்க, அவர் கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்தார்.
“அது எல்லாம் பிள்ளைத்தாச்சி பொண்ணை திடீர்னு எல்லாம் அனுப்ப முடியாது.. நல்ல நாள் நேரம் எல்லாம் பார்க்கணும். எங்க அப்பா அம்மா வரட்டும்” என்றார் மகா கறாராக.
“அப்ப நாங்க இங்க இருந்து பார்த்துகிறோம்” என்றார் சடகோபன் உடனே.
“அப்ப ராஜம் நீ போ.. நான் இங்க இருக்கேன்” என்று சட்டமாக அமர்ந்து கொண்டார் சடகோபன்.
“கிளிஞ்சது..” என்று மகா, உள்ளே சென்று சுந்தர்ராஜனுக்கு அழைத்து விஷத்தை கூறினார்.
“அந்த ஆளோட.. ஒரு நாள் சமாளி மகா, நான் நாளைக்கு டிக்கெட் போட்டு வந்துடறேன்” என்று கூறி வைத்தார் சுந்தர்ராஜன்.
சாம்பவி ஏன் அம்மா வீடு செல்ல விருப்படவில்லை என்று இப்பொழுது மகாவிற்கு தெளிவாக புரிந்தது.
இரண்டு பெண் பிள்ளைகள் தனியாக இருப்பார்கள் என்று ராஜம் மனமே இல்லாமல் அங்கே இருந்து கிளம்பி சென்றார்.
மாலை வீடு திரும்பிய ஹரிக்கு சடகோபனை பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி.
அவர் கேரளா சென்ற கதையை மீண்டும் ஒருமுறை மருமகனுக்கு சொல்ல, அவனும் அவருக்கு தக்க ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தான்.
“நான் சொன்னதை கேட்டீங்களா மாமா..”
“ஆண்பிள்ளை எப்படி இருந்தாலும் அழகுதான் மாப்பிள்ளை நீங்க எதுக்கு கவலைப்படறீங்க?”
“இருந்தாலும் மாமா..” என்று இழுத்தான்.
“இருங்க நான் அவருக்கு போன் போட்டு குழந்தை அழகா பிறக்க என்ன செய்யலாம்னு இன்னொருமுறை கேக்குறேன். அவர் நம்பர் கொடுத்திருக்காரு”
மீண்டும் ஜோசியரிடம் பேசிவிட்டு,
“வாட்ஸாப்ப் ல இன்னொரு சுலோகம் அனுப்பி இருக்காரு. காலையில இதையும் சேர்த்து சொன்னா போதுமாம்..”
“கண்டிப்பா பலிக்குமா மாமா”
“அவர் அப்பாயிண்ட்மெண்ட்கே ஆறு மாசம் வெயிட் பண்ணேன் மாப்பிள்ளை. இல்லைன்னா இன்னும் முன்னாடியே நாம இதை செஞ்சிருக்கலாம். அவ்வளவு பெரிய ஆளு “
“சரி சரி.. நைட் சிக்கன் சாப்பிடறீங்களா மாமா? நான் போய் வாங்கிட்டு வரேன்”
“சரி மாப்பிள்ளை”
சமையல் செய்யும் அம்மா வருவதால் மகா பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இவர்கள் அலப்பறையில் மகாவுக்கே தலை வலிக்க ஆரம்பித்தது. எப்படியோ நாளைக்கு ஒரு நாள் தாக்குப்பிடிக்கணும் என்று வேண்டிக்கொண்டே தூங்க சென்றார்.
விடிகாலையில் சாம்பிராணி புகையும் மணி சத்தமும் கேட்க, அடித்து பிடித்து கொண்டு எழுந்தார் மகா. ஏற்கனவே அவர் ஆறு மணிக்கு அலாரம் வைத்து தான் படுத்திருந்தார்.
மணியை பார்த்தால், நான்கு என்று காட்டியது.
கொஞ்சம் பதற்றமாகவே வெளியே வந்து பார்த்தால்,
சாம்பவி பூஜை அறையில் நின்றிருந்தாள். தலைக்கு குளித்து இருந்தாள். . தலை முடியில் ஈரம் கூட காயவில்லை. தண்ணீர் சொட்டிக்கொண்டு இருந்தது.
என்ன ஹரி இது.. இவ்வளவு காலையில ஆராம்பிச்சிட்டீங்க என்று கோவமாக வந்தார் மகா.
சும்மா இருக்கா.. அவ்வளவு தான்.. இன்னும் ரெண்டு லைன் தான் இருக்கு. அதை படிச்சா முடிஞ்சது..
இவர்கள் நினைத்ததை நடத்தி முடித்தே அமர்ந்தனர்.
மகா சாம்பவியின் முகத்தை பார்த்தால் அது சிவந்து காணப்பட்டது.
நீ வாம்மா, என்று அவள் கையை பிடித்து அழைத்து வந்து சோபாவில் அமரவைத்து, வேகமாக சென்று ஹேர் ட்ரையர் கொண்டுவந்து முதலில் அவள் முடியை உலர்த்தினார்.
“நான் வேணா சூடா பால் கொண்டு வரவா சாம்பூ..” என்றான் ஹரி.
சாம்பவி திரும்பியும் பார்க்கவில்லை.
“என்ன பழக்கம் இது சாம்பவி. மாப்பிள்ளை அக்கறையா கேட்குறாரு, இப்படி அலட்சியமா இருக்கலாமா?” என்று தன் பழைய மிரட்டலை கொண்டு வந்தார் சடகோபன்.
அவரையும் திரும்பி பார்க்கவில்லை அவள்.
“இப்ப நீங்க ரெண்டு பேரும் சும்மா இருக்க போறீங்களா இல்லையா? எனக்கு வர கோவத்துக்கு நானே ஏதாவது சொல்லிடப்போறேன்” என்றார் மகா..
மாமனாரும் மருமகனும் அதற்கு பிறகு ஒன்றும் பேசவில்லை.
“ஏன் சாம்பவி உன் கை இவ்வளவு ஜில்லுன்னு இருக்கு.. சுடு தண்ணீல தானே குளிச்ச?”
“ஹும்ம்.. “என்று விரக்தியாக உதட்டை வளைத்தாள்
“எனக்கு மனசு எல்லாம் பதறுதே.. பாதகா.. கர்ப்பிணி பொண்ணை காலையில பச்சை தண்ணீல குளிக்க சொன்னியா?” என்றார் ஹரியை பார்த்து ஆக்ரோஷமாக.
அவன் உன்மையில் இப்பொழுது பயந்து போனான். சடகோபனை பயத்தோடு பார்க்க,
“காலையில பச்சை தண்ணீல குளிச்சு தான் அந்த பூஜையை செய்யணும்” என்றார் அவர் இறங்கிவிட்ட குரலில்.
“யோவ்.. கிளம்புய்யா இங்க இருந்து முதல்ல” என்று அவரை பார்த்து கத்தினார் மகா.. மரியாதையை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டார்.
“அக்கா…”
‘ப்ளார்… ‘ ஓங்கி ஒரு அரை விட்டார்.
“ரெண்டு பேரும் என் கண் முன்னாடி நிக்கவே கூடாது.. எங்கயாவது போய் தொலைங்க..”
இருவரும் சத்தமில்லாமல் ரூமிற்குள் சென்றுவிட்டனர்.
“அவங்க தான் சொன்னாங்கன்னா நீ ஏன் சாம்பவி செஞ்ச.. இரு நான் குடிக்க சூடா கொண்டு வரேன்”, என்று அவசரமாக அடுப்படிக்கு ஓடினார்.
சூடாக பால் எடுத்துக்கொண்டு வந்து பார்த்தார்.
சாம்பவியின் உடம்பு சில்லிட்டு போயிருந்தது. மகாவிற்கு பதட்டமாகி போனது.
மெல்ல அவளை எழுப்பி கொஞ்சம் பாலை பருக வைத்து படுக்க வைத்தார்.
அவசரமாக கணவருக்கு அழைத்து சுருக்கமாக விஷயத்தை கூறி, “சீக்கிரம் அத்தையையும் கூட்டிட்டு வாங்க வெங்கட், எனக்கு பயமா இருக்கு” என்று வைத்தார்.
சாம்பவியின் கை கால்களை எல்லாம் தேய்த்து விட்டார். இப்பொழுது சில்லிப்பு போய், ஜுரம் வந்தது போல இருந்தது.
வேகமாக பரிமளாவிற்கு அழைத்து விஷயத்தை கூறினார்.
மகா பேசுவது உள்ளே இருந்த இருவருக்கும் கேட்கத்தான் செய்தது. இருவருக்குமே பயம் பிடித்து கொண்டது.
அடுத்த முக்கால் மணி நேரத்தில் வெங்கட் அவர் அம்மாவுடன் வந்துவிட்டார்.
“எங்க அவங்க ரெண்டு பேரும்” என்று தான் கேட்டார் உள்ளே நுழைந்தவுடன்.
அந்த ரூம்ல இருக்காங்க. அத்தை நீங்க வந்து சாம்பவியை பாருங்க என்று மாமியாரை அழைத்து சாம்பவியிடம் சென்றுவிட்டார் மகா.
வெங்கட் இருவரையும் நன்றாக திட்டிவிட்டு, உடனடியாக காரில் சாம்பவியை அழைத்து கொண்டு மருத்துவமனை புறப்பட்டனர்.
ஹரியும் சடகோபனும் பின்னாடி ஹரியின் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
“சும்மா பயம் காட்றாங்க மாப்பிள்ளை நீங்க பயப்படதீங்க” என்று ஹரிக்கு சமாதானம் கூறி அழைத்து வந்தார் சடகோபன்.
சாம்பவியை உடனடியாக அவசரப்பிரில் அனுமதித்தனர். அவளுக்கு பிபி மிகவும் அதிகமாக இருந்தது.
டாக்டர் கண்டமேனிக்கு அனைவரையும் திட்டினார். “ஜூரமும் அதிகமா இருக்கு, பிபியும் அதிகமா இருக்கு.. இப்ப டெலிவரி பண்ண முடியாது. பண்ணாமலும் இருக்க முடியாது. எப்படி இவ்வளவு அதிகமா ஆச்சு? பிபி குறையலைனா சாம்பவி உயிருக்கே ஆபத்து”
ஹரிக்கு சர்வமும் அடங்கிப்போனது.. அவன் இப்படி எல்லாம் ஆகும் என்று நினைக்கவே இல்லை. சாம்பவியை மிகவும் ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டான். அவளில்லாமல் ஒரு வாழ்க்கையா? அவனுக்கு தலை எல்லாம் சுத்தியது.
அனைவருக்கும் பதற்றம் தான். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
விஷயம் அறிந்ததும் சுந்தர்ராஜனும் பரிமளாவும் உடனே புறப்பட்டனர். வந்தியத்தேவனே அவர்களை காரில் அழைத்து வந்தார்.
இவர்கள் வந்து சேரும் வரையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
சுந்தர்ராஜன் மருத்துவமனைக்குள் நுழையும்பொழுதே மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.
பரிமளாவிற்கும் பதட்டமே.
“என்ன மகா சொல்றாங்க”
“சீக்கிரம் பிபி குறையணும்மா .. இல்லைன்னா சிக்கல் தான் இரண்டு உயிருக்கும் ஆபத்து”
“முதல்ல இவங்க இரண்டு பேரையும் இங்க இருந்து வெளிய அனுப்புங்க.. தானா என் மருமகளுக்கு சரி ஆயிடும்” என்று கர்ஜித்தார் சுந்தர்ராஜன்.
இந்த பூனையும் பால் குடிக்குமா முகத்துடன் இருந்தனர் இருவரும்.
“வெளிய எதுக்குப்பா அனுப்புறீங்க.. உள்ளே அனுப்புங்க..” என்றார் மகா பல்லை கடித்துக்கொண்டு.
“உள்ளே தான் யாரையும் விடமாட்டேங்குறாங்களே” என்றார் சடகோபன்.
“இவரை கொன்னுட்டு நான் உள்ளே போறேன்” என்று பொங்கி எழுந்துவிட்டார் சுந்தர்ராஜன்.
“நிஜமாலுமே சாம்பவிக்கு ஏதாவது ஆனா, இவங்க ரெண்டு பேரையும் கேஸ் போட்டு உள்ளே தள்ளணும் வெங்கட்டு” என்றார் பெரிய மருமகனிடம்.
“நீங்க அமைதியா இருங்க முதல்ல.. அது எல்லாம் ஒன்னும் ஆகாது. உங்களுக்கு வேற எதாவது ஆனா இப்ப பார்க்க முடியாது” என்று அதட்டலிட்டு அவரை அமர வைத்தார் வந்தியத்தேவன்.
இவரது குரல் கேட்டு சாம்பவி உள்ளே இருந்த நர்ஸிடம் மாமாவை பார்க்கணும் என்று சொல்லி அனுப்பினாள்.
சுந்தர்ராஜனை மட்டும் உள்ளே அனுப்பினார்கள்.
“எங்க மகா சாம்பவியோட அம்மா” என்றார் பரிமளா.
“நான் சொல்லலை ம்மா. என் கிட்ட அவங்க நம்பர் எல்லாம் இல்லையே..”
அப்பொழுது தான் சடகோபனுக்கு மனைவியின் நியாபகம் வந்தது. அவர் அழைத்து சொல்ல, அந்த பக்கம் ராஜம் அழுவது இங்கே கேட்டது.
“சீக்கிரமா பவியை கூட்டிட்டு வா” என்று போனை வைத்து விட்டார்.
“மாமா, எனக்கு ஏதாவதுன்னா, என் குழந்தை உங்க பொறுப்பு” என்றாள் சாம்பவி.
“இந்த மாமா மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா? எதுக்கு இப்படி பேசற? முதல்ல நல்லபடியா குழந்தையோட வா.. அவங்களா நாமளான்னு பார்க்க வேணாமா? நீ நல்லா ஆகி வந்தா தானே அவங்களை ஒரு கை பார்க்க முடியும்?”
“அப்படியா சொல்றீங்க மாமா?”
“பின்ன?”
“நான் வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல கேட்காம, ஹரி என்னை விடவே இல்லை மாமா.. காலையில மூணு மணிக்கு எழுப்பி, ஐஸ் மாதிரி இருந்த தண்ணீல குளிக்க வச்சிட்டாரு”
கேட்கும்பொழுதே கண்கள் கரித்துக்கொண்டு வந்தது அவருக்கு.
“நீங்க அழாதீங்க மாமா.. எனக்கு ஒன்னும் ஆகாது..”
மாமனாருடன் பேசியதிலே பிபி குறைய தொடங்கியது.
மருத்துவர் வந்து பார்த்துவிட்டு, “சிசேரியன் செஞ்சுடலாம். இவங்க வீட்டுக்காரர்கிட்ட கையெழுத்து வாங்கி ரெடி பண்ணுங்க” என்றார்.
“இல்ல டாக்டர்.. எனக்கோ என் குழந்தைக்கோ அவர் பொறுப்பு இல்ல.. அவர் கையெழுத்து போட வேண்டாம்” என்றாள் சாம்பவி கோவமாக.
“இல்ல டாக்டர்.. எனக்கு ஒன்னுனாலும் என் பிள்ளைக்கு ஒன்னனாலும் பார்க்க போறது எங்க மாமா தான். அவர் கையெழுத்து போடட்டும்” என்றாள்.
நடப்பவைகளை அவரும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்.
“நீ சொல்ற மாதிரியே செஞ்சுடலாம். நீ நம்பிக்கையா இருந்தா எல்லாம் நல்ல படியா நடக்கும்” என்று கூறி சென்றார்.
“என் குழந்தையை அவங்க ரெண்டு பேர்கிட்டயும் காட்டவே கூடாது. அவங்க முதல்ல இங்க இருந்து போகணும் மாமா” என்றாள் சாம்பவி.
“சரி ம்மா.. நான் இப்பவே அவங்களை அனுப்பிடறேன்.. நீ அமைதியா இரு.. நம்ம வராஹி அம்மன் துணை இருப்பா..” என்று வெகுவாக அவளை சமாதான படுத்தி வெளியே வந்தார்.
அடித்து பிடித்து ஓடி வந்திருந்தார் ராஜம். உள்ளே நடந்தவற்றை வெளியே வந்து அனைவரிடமும் கூறினார்.
ஹரி மனதளவில் வெகுவாக அடிவாங்கினான். கணவனாய் நான் போடும் கையெழுத்தை கூட நிராகரித்துவிட்டாளே.
இருவரும் அசையாமல் அங்கேயே நிற்க, “வெங்கட்டு, இவங்க வெளிய போகாட்டி, போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிடு “என்று கூறி அமர்ந்துவிட்டார்.
வேறு வழி இல்லாமல் இருவரும் வெளியே சென்றுவிட்டார்கள்.
மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு சாம்பவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மருத்துவர் குழந்தையை சுந்தர்ராஜனிடம் தான் கொடுத்தார். சாம்பவி தற்பொழுது நன்றாக இருப்பதாகவும், இன்னும் ஒரு வாரம் மிகவும் ஜாக்கிறதையாக கவனித்து கொள்ளவேண்டும் என்றும் கூறினார். மறுபடியும் பிபி ஏறினால் உயிருக்கு ஆபத்து என்று எச்சரித்துவிட்டே சென்றார்.
ராஜம், “இனி நான் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிறேன்” என்றார் உடனே.
“ஏது நீங்களா.. நீங்க கையை பிசஞ்சு பிசஞ்சு சப்பாத்தி தான் சுடணும் “ என்றார் மகா வெடுக்கென.
“சும்மா இரு மகா” என்றார் அவர் மாமியார்.
“உங்களுக்கு தெரியாது அத்தை.. அப்பவே இந்த அம்மா பொண்ணுக்காக பேசி அவங்க வீட்டுக்காரரை தடுத்திருக்கணுமா இல்லையா?”
“ரிலாக்ஸ் ஆகுங்க மகா அண்ணி.. நீங்க தான் நேத்துல இருந்து டென்ஷனா இருக்கீங்க..” என்றார் வந்தியத்தேவன்.
“நானும் அத்தையும் இங்கே இருக்கோம். நீங்க எல்லாம் போய் சாப்பிட்டு வாங்க” என்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.
மருத்துவமனையில் இருந்து சாம்பவியை மகா வீட்டிற்கு தான் அழைத்து சென்றனர். ஹரியும் சடகோபனும் எவ்வளவு கெஞ்சியும் குழந்தையை அவர்கள் கண்ணில் காட்டவே இல்லை.
“ஒரு அப்பாவா எனக்கு என் குழந்தையை பார்க்கிற உரிமை இருக்கு தானே அத்தான். நியாயமா எனக்கு கிடைக்கவேண்டிய உரிமையை தட்டி பறிக்கிறது சரியா?” என்றான் வெங்கட்டிடம்.
“நியாயமா மணிக்கு கிடைக்க வேண்டிய படிப்பை நீ தட்டி பறிக்கலை?”