“இன்னும் கொஞ்சம் மேலே ஏத்துங்க” தற்காலிக தீர்வுகாண அஸ்வின் ஒரு தார்பாய் கொண்டு அவ்விடத்தை மூடும் முயற்சியிலிருக்க மனைவி அவனுக்கு வழிகாட்டினாள்.
சரியாக வெயில் மறைந்ததை பார்த்து இறுக்கமான முடிச்சிட்டு அஸ்வின் கீழே இறங்கி அவனோடு இணைந்து அந்த மடக்கு ஏணியை உள்ளே ஓரமாக வைத்து வந்தான்.
அதற்குள் ஆரோஹி அவ்விடத்தினில் சிறிய மெத்தை விரித்து அதற்கு மேல் இரண்டு போர்வை, தலையணை வைத்து காத்திருக்க, அஸ்வின் இருவருக்கும் ஏதுவாக ஏர் கூலர் ஒன்றை அவர்களுக்கு காற்று வரும்படி பொருத்தி வந்து மனைவியருகே படுத்தான்.
வீடே குட்டி உறக்கத்திலிருக்க, இந்த இருவருக்கும் உறக்கம் வரவில்லை. மெத்தையில் அமர்ந்து பேசவும் தோன்றாமல் போக, மனைவி கேட்டதன் பேரில் இந்த சிறு அலங்காரம் அந்த உப்பரிகைக்கு.
“நல்லா இருக்கு ஆரு” தலைக்கு மேல் இரண்டு கையையும் வைத்து படுத்தான்.
“ம்ம்” சிரிப்போடு எழுந்தவள் ஏர் கூலரின் வேகத்தை கொஞ்சம் குறைத்து அவனது கைகளில் தலையை வைத்து படுத்தாள்.
சிரித்தான், “ஏர் கூலர் ஒரு சாக்கா?” என்று.
கண்டுபிடித்துவிட்டான் என மெல்ல அவன் மார்பினில் தலையை வைத்து முட்டினாள்.
“யவ்னி கூட்டம் தான். அவளுக்கு நல்லது செய்றேன்னு ஏதாவது ஒரு கிறுக்கு வேலைய பாத்துடுறாங்க” என்றான் மனைவியை வாகாக கைகளில் இடம் மாற்றி.
“அவ்ளோ லவ் போல உங்க மேல” கேலியாக அவனை பார்த்து வளைந்தது அவள் இதழ்கள் ஓரம்.
“ரொம்ப லவ் போ. உண்மையான லவ், நாம லவ் பண்றவங்களோட நல்லதை மட்டும் தான் யோசிக்கும். அவளே அமைதியா இருந்தாலும் சுத்தி இருக்குறவங்க சரியில்ல. எல்லாம் ஓவர் ஆகிடுச்சு இனி அந்த பேச்சு வேணாம்” என்றான்.
“உங்க ஃப்ரண்ட்ஸ், டீம் மேட்ஸ் கிட்ட என்ன சொல்லி சமாளிச்சீங்க?”
“அவுங்களுக்கு எல்லாம் தெரியும். அன்னைக்கு பார்ட்டில அவ என் கூட கொஞ்சம் கிளோஸா வந்து நின்னது கோவம் வந்துடுச்சு, சோ எல்லார் முன்னாடியும் நம்ம கல்யாணம் பத்தி சொல்ல வேண்டியதா போய்டுச்சு”
அவன் முகத்தை பார்த்து முறைத்து, “அப்டி என்ன கோவம்? உங்களுக்கு கோவமே வராதுன்னு திவ்யா நம்பிட்டு இருக்கா”
அஸ்வின், “அர்த்தம், காரணம் இல்லாம வந்தா தான் தப்பு. காட்ட வேண்டிய இடத்துல எமோஷன்ஸ் காட்டலனா நமக்கு மதிப்பே இல்லாம போய்டும்”
அவள் நாடி வருடி கூறியவன் கையை தட்டிவிட்டு, “என்னமோ போங்க. எனக்கு இன்னைக்கு கிடைச்ச மாதிரி திடீர் அட்டென்ஷன் எல்லாம் சுத்தமா புடிக்கல”
“ஏன்? யாரும் எதுவும் சொன்னாங்களா?”
“இல்ல… ஸ்கேன் பண்றங்க கிரிக்கெட்டரே. டாப் டு பாட்டம் மொத்தமா ஸ்கேன் பன்றாங்க. உங்களுக்கு ஏத்த பேர் தானா நான்னு பாக்கறீங்களா இல்ல உங்க ரேஞ்க்கு நான் இருக்கேனான்னு பாக்குறாங்க. ஒரு ஆண்ட்டி நகத்தை பாத்து என்ன இதுனு கேக்குறாங்க”
அவள் நகத்தை அவனிடம் நீட்டினாள். அழகாக துளியும் வளர்த்திருக்காமல் ஓட்ட நறுக்கியிருந்தாள். நீட்டிய அவள் கையை பற்றிகொண்டவன் விரல்கள் அவள் விரல்கள் ஒவ்வொன்றையும் வருடியது.
“நகத்தை வெட்டி சுத்தமா வச்சிருக்கணும்னு தானே சொல்லுவாங்க, இவங்க என்ன வளக்காம விட்டதுக்கு ஏதோ ஜந்துவை பாக்குற மாதிரி பாக்குறாங்க” அவள் முக பாவனையை பார்த்து வாய் விட்டு சத்தமாக சிரித்தான்.
“ஆமா உங்க பங்குக்கு நீங்களும் சிரிங்க” அழுத்துக்கொண்டவளுக்கு அவர்களை பற்றி குறை கூற ஓராயிரம் இருந்தது.
அத்தனையையும் கூறி முடித்தாள் கணவனிடம். அவளது குற்றசாட்டுகளை கூறுவது குழந்தை பள்ளி முடித்து வந்து கதை கூறுவது போல் சுவாரஸ்யமாக தான் இருந்தது அவனுக்கும்.
“குடும்பம் நடத்த குணம் இருக்கா, அறிவிருக்கா, பொறுப்பிருக்கானு பாக்குறத விட்டு… நகம் இருக்கா, பல்லு லைனா இருக்கா, இடுப்பு தெரியிற மாதிரி புடவை கட்டிருக்கேனா, ஊசி மாதிரி ஹீல்ஸ் போட்ருக்கேனான்னு பாக்குறாங்க.
இவங்க ஃப்ரண்ட்ஷிப் எல்லாம் கட் பண்ண சொல்லுங்க ஆண்ட்டிய. அதை விட ஒரு அம்மா பேங்க்ல எத்தனை சி வச்சிருப்பேன்னு கேக்குது. ஏன் எனக்கு சாப்பாடு நீங்க போட மாட்டிங்களா, இல்ல நான் பேப்பர் கேன்சல் பண்ணிட்டு ஆபீஸ் போகவா?”
“கண்டிப்பா பாத்துக்குவேன் ம்மா. நீ உன் இஷ்டபடியே இரு” வேகமாக பதில் கொடுத்தான் கணவன் மனைவியின் கோவத்தை பார்த்து.
‘இவர்கள் இப்படி தான் என அவளே சிறிது நாட்களில் புரிந்துகொள்வாள். என்ன கூறியும் மாறும் வகை அவர்கள் இல்லையே. இவளிடம் அதை கூறினாலும் ஏற்றுக்கொள்ள போவதில்லை’ என அவன் அமைதியாக இருந்தான்.
“முடிய வெட்ட சொல்றாங்க கிரிக்கெட்டரே… உங்களுக்கு புடிக்காதாமே இவ்ளோ முடி இருந்தா” கோவமாக பேசியவள் குரல் உடனே இறங்கி கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.
“என்ன ஆரு இது” மனைவியின் கன்னத்தை ஆதூரமாக வருடியவன் விறல் அவள் கண்ணீரை துடைத்தது,
“கல்யாணம் பண்ணிட்டா ஒருத்தருக்காக ஒருத்தர் சில விஷயங்களை தியாகம் பண்ணிட்டு இருக்கலாம். அது நல்லது தான், ஸ்ட்ராங் ரிலேஷன்க்கு ரொம்ப முக்கியமும் கூட.
“இப்டியே இருக்க சொல்லல உனக்கு புடிச்ச மாதிரியே இருக்க சொல்றேன்” என்றான் அஸ்வின்.
அஸ்வினை குறுகுறுவென பார்த்தவள் முகத்தை தூக்கி வைத்து, “போயா நாயாரானா… நீ க்யூட் போ” இது பாராட்டா திட்டா என தெரியாமலே அஸ்வின் உல்லாசமாக மார்பினில் படுத்துக்கிடந்தவளை பார்த்து சிரித்தான்.
“முக்கியமான விஷயம் பேசணும், டீம் மேட்ஸ் எல்லாம் உன்ன இன்றோ குடுக்க சொல்றாங்க. ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ண போறேன். உனக்கு ஓகே தானே?” சிறிது யோசித்தவள் மறுப்பு தெரிவிக்காமல் சரி என்றாள்.
“என்ன டிரஸ் பண்ண போற ஐடியா?”
“கவுன் போடவா?”
“கவுன் வேணாம்டா சாரீ கட்டுறியா?”
“இது என்ன வீட்டு பங்க்ஷனா பட்டு புடவை கட்டி, தலை நிறைய பூ வைக்க?”
அஸ்வின், “யார் பட்டு புடவை சொன்னாங்க?” கைபேசியை எடுத்து ஒரு புகைப்படத்தை தேடி அவள்முன்பு நீட்டினான்.
அதனை பார்த்தவள் அஸ்வினை முறைத்ததோடு நிறுத்தாமல், “யோவ் போயா” வெட்கத்தை அந்த கோவத்தினுள் அவள் ஒழித்து வைத்ததை கணவன் அவன் கண்டுகொண்டான்.
“என்ன போயா? இந்த ட்ரேஸ்க்கு என்ன குறை?” அவனை பொறுத்த வரை அந்த உடை அத்தனை அழகாய் இருந்தது.
என்ன கொஞ்சம் கண்ணாடியாய் இருந்தது. ஆனால் அவளுக்கு தகுந்தாற் போல் உடையை வடிவமைக்க அவன் கையில் தான் ஆள் உள்ளதே.
“என்ன குறையா? எதுவுமே இல்ல அதுல. புள் நெட் க்ளாத், என் உடம்புக்கு தொப்பை எல்லாம் அசிங்கமா தெரியும்” நிதர்சனத்தை உரைத்தவள் வேகத்தில் என்ன பேசினோம் என்றே கவனிக்கவில்லை.
‘அப்படியா?’ என கேள்வியாக பார்த்தவன் கண்களுக்கு தலை அசைத்து பதில் கொடுத்தாள்.
அஸ்வின் இடது கையோ அவளது இடுப்பிற்கு புலம்பெயர்ந்து, “நாராயணா” அவனது திடீர் செயல் கூச்சத்தை கொடுக்க கைகளுக்கு தடை விதித்து சிணுங்கினாள்.
“கொஞ்ச நேரம் முன்னாடி பாத்தேனே அப்டி எதுவும் தெரியலயே”
“எங்க கை எடு பாக்கலாம்” தன்னுடைய கையை இறுக்கமாக பற்றியிருக்கும் அவள் கைகளை எடுத்து இலக்கை அடைய அவனுக்கு எத்தனை நொடிகள் ஆகிவிட போகிறது, அவளை அவள் கூட்டிலிருந்து வெளிக்கொணர்ந்து அதன் பிறகு அவளிடம் தன்னுடைய தேடலை தேட முடிவெடுத்திருந்தான்.
“ஏய் பொறுக்கி பையா கை எடுடா” வேகமாக அவன் கையில் அடித்து கணவனுக்கு மினி ஷாக் கொடுத்தாள் வார்த்தைகள் கொண்டு.
“என்னடா பொசுக்குன்னு இப்டி சொல்லிட்ட?”
ஆரோஹி, “பின்ன கை ரொம்ப சேட்டை பண்ணுதே”
அஸ்வின், “பாவம்ல அதுவும்”
ஆரோஹி, “என்ன பாவம், ஒன்றை மாசமாச்சு பாத்து, கால் பண்றப்போலாம் ஆசையா பேசல, நேர்ல வந்தா மட்டும் கட்டிபுடிக்கிறதென்ன முத்தம் குடுக்குறதென்ன. அப்போ நான் பாவமில்லையா?”
அஸ்வின், “போன்ல அதெல்லாம் பண்ண முடியாதே ஆருமா”
ஆரோஹி, “பண்ணனும்னு நினைச்சா எப்படி வேணாலும் பண்ணலாம். உங்களுக்கு தான் ரொமான்ஸே வராதே, பேசி வேஸ்ட் தான்”
ஏதோ நினைவு வந்தவளாக, “ஆ… அது என்ன முத்தம் கொடுக்குறது மட்டும் இவ்ளோ டீப்பா, கொஞ்சம் கூட தயங்காம ப்லோவா போறீங்க” திருதிருவென விழித்தவன் பார்வையே அவனை போட்டுக்கொடுத்தது.
“உன்னோட கோவாப்ரெஷன் ஆரும்மா. நீ க்யூட்ல” அவள் நாடி பிடித்து வண்டி கணக்கில் ஐஸை மேலே கொட்டினான். “பொய். கிஸ் பண்ணிருக்கீங்க தானே?”a
எல்லா பக்கமும் தலையைஅஸ்வினிடம் பெருத்த அமைதி மட்டுமே பதிலாய் கிடைத்தது, அதோடு அவள் முகத்தையே பார்க்காமல் குற்றஉணர்வோடு பேச்சையே நிறுத்திவிட்டான். அவனது அமைதியே அதிலிருந்த உண்மையை கூற, நடந்து முடிந்தவற்றை பிடித்து தொங்குவதில் அவளுக்கு விருப்பமில்லை.
“சரி நம்ம பேச்சுக்கு வருவோம், உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ரெண்டு டிரஸ் ச்சூஸ் பண்ணுவோம், எது பெட்டெரோ அதை பிக்ஸ் பண்ணிடலாம்” தானே ஆரமித்தது தானே அந்த பேச்சை அறுத்து நிறுத்தினாள், வேறு பேச்சை முன்னிறுத்தி.
“ஆரூ”
அஸ்வின் ஏதோ பேச வர அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள், “டிசைன் உங்க இஷ்டம். எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு… ம்ம்ம்?” அவன் முகத்தை பார்த்து தலை அசைத்து ஆரோஹி கேட்க அவள் நம்பிக்கையில் அஸ்வின் தான் வாயடைத்து நிற்க வேண்டியதாகி போனது.