எத்தனை பெண்களை கடந்து வந்திருப்பான், இவளை விட அழகில் அறிவில், படிப்பில் எல்லாம் உயர்ந்தவர்களை பார்த்திருக்கிறான். பார்த்தாலே கண்களை அகற்ற விரும்பாமல் நெளிவு சுளிவுகளை காட்டி இழுக்கும் பெண்கள் அவர்கள்.
இவள் அவை எவற்றுக்கும் வேலை கொடுக்கவில்லை. மிக இறுக்கமாக இல்லாமல் எளிமையாக தான் அணிந்திருந்தாள். கருப்பு நிற டிசைனர் புடவை.
பூசினார் போல் இருந்த பொழுதே அழகு கூட்டி காட்டியது அவன் விழிகள், இப்பொழுது இன்னும் வசீகரித்தாள். நெட் பேப்ரிக் தான் புடவை முழுதும், முழுக்கை ரவிக்கை, கழுத்தில் வைர அட்டிகை ஒன்று.
அவளது அடர்ந்த நீல கூந்தல் இடை தாண்டி சுதந்திரமாக காற்றில் ஆட மூச்சு முட்டியது அஸ்வினுக்கு. மனைவி ரவிக்கையை தன்னுடைய உடலை மறைத்து சங்கட்டமாக போர்வையை போல் மேலே மேலே ப்லீட்ஸ் வைத்தது போல் நின்றாள்.
அவளை என்ன செய்வதென பார்த்த அந்த அழகு நிலைய பெண் வந்து உடையை சரி செய்துவிட்டு போக, “தேங்க்ஸ் ம்மா” அவளை அனுப்பி வைத்தவன் ஆரோஹி கை பிடித்து அறையுள்ளே இழுத்து சென்றான்.
“யோவ் நாராயணா” அவனது திடீர் இழுப்பிற்கு திணறி போனாள்.
ஆரோஹிக்கு இந்த உடை மிகவும் பிடித்து போனது, அவள் நினைத்தது போல் அத்தனை மோசமில்லை, அவள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க கூறியிருப்பான் போல, என்ன அந்த இடை தான் அப்பட்டமாக தெரிகிறது. உள்ளே மனைவியை இழுத்து நிறுத்தியவன் அங்கும் அங்கும் நடக்க, இவள் மீண்டும் கண்ணாடி முன்பு சென்று நின்றுகொண்டாள்.
“நல்லா இருக்கு கிரிக்கெட்டரே. நான் இதே போட்டுக்குறேன். ம்ம் கெளம்பலாமா?” காரியமே கண்ணாக கண்ணாடி விட்டு அகலாமல் சிறிது உதட்டு சாயம் பூசி நின்றவளை அப்படியே அந்த கண்ணாடி மீது இழுத்து சாற்றி திருப்பினான்.
கண்கள் அவள் விழிகளை நோகாமல் உதட்டின் மீது மையலிட்டு நின்றுவிட்டது.
‘அய்யய்யோ’ மனம் எக்குத்தப்பாக மத்தளம் அடிக்க அவள் பார்வை அவன் உதடுகளை தொட்ட சமயம் அஸ்வின் அவளை மொத்தமாய் தன்னுள் இழுத்துக்கொண்டான்.
ஒரு மாதத்திற்கு முன்பு கிடைத்த இதழ் தேன், பிறகு இப்பொழுது தான் கிடைக்கிறது. விட்டுவிடுவானா என்ன, திகட்ட திகட்ட பருகி, அவள் உதட்டு சாயத்தை மொத்தமாய் உண்டு, இருந்த தடயமே தெரியாமல் போன பிறகு தான் மனைவியை விடுவித்தான்.
அவனை விட அவளுக்கு தான் கிறக்கம் அதிகம் போல, விழிகளை பிரிக்க முடியாமல் சிரமப்பட்டு பிரித்து பார்த்தாள்.
அவன் வேகத்தில் பயந்து போனாலோ என அஸ்வின் மெல்ல மனைவியின் நெற்றி முட்டி சில நொடிகள் இளைப்பாறினான்.
பிறகு அவளை விட்டு இரண்டடி நகர்ந்தவன் அலமாரியில் இருந்த ஒரு பையை அவள் கையில் ஒப்படைத்து, “இதை மாத்திக்கோடா” என்றான்.
“இ… இல்ல இதுவே இருக்கட்டுமே. எனக்கு பிரச்சனை இல்லை” என்றால் வரவழைத்த குரலில்.
ஒரேடியாக தலையாட்டினான், “ம்ஹூம், என்னால உன்ன இப்டி விட முடியாது, வர வர கண்ட்ரோல் ரொம்ப மிஸ் ஆகுது ஆரூ. இதுல இந்த கலர், பேப்ரிக்… சாத்தியமா முடியல. ப்ளீஸ்டி வேற மாத்து” மன்றாடினான் அஸ்வின்.
அவன் பதிலில் முகமெல்லாம் குப்பென சிவந்தாலும் இந்த உடையை அவிழ்க்கும் சோகத்தில் திரும்பி நடந்தவள் இடையை பற்றி அழுத்தினான்.
மீண்டும் மூச்சு திறனால் உருவாக அவனை பீதியோடு பார்த்தாள், “இது நாம மட்டும் இருக்கும்போது போடு ஆரூ…” சரசமாக அவள் காதில் கிசுகிசுத்தவன் அவள் உடை மாற்ற ஏதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.
அஸ்வின் கொடுத்த உடையை அணிந்து கண்ணாடி முன்பு நின்ற ஆரோஹிக்கு அவன் கன்னத்தை பிடித்து கொஞ்ச தான் தோன்றியது. அவள் கேட்ட கவுன் வகை உடை.
அழகிய கழுத்து வட்டம், மங்கிய லாவெண்டர் நிற அந்த உடை அவள் கணுக்காலுக்கு ஓரடி மேல் இருந்தது. உடையின் இடுப்பு பகுதிக்கு கீழ் ஆங்காங்கு பூக்களும் அதில் மேயும் பட்டாம்பூச்சிகளுமாய் பார்க்கவே அதிகம் உறுத்தாமல் கண்ணை பறித்தது.
கூடவும் இல்லை, குறையும் இல்லை. கச்சிதமான தேர்வு கணவன் தேர்வு என ஒரே பாராட்டு தான் அஸ்வினுக்கு.
சிகையை கொஞ்சம் அலங்கரித்து உதட்டு சாயத்தை எடுக்க, தலை கவிழ்த்து வெட்கத்தில் உளமார புன்னகைத்தவள் அதே புன்னகையோடு வெளியே வர அஸ்வின் கோட் சூட் சகிதம் அத்தனை வசீகரமாக வந்து நின்றான்.
இருவர் கண்ணிலும் மற்றவரை பார்த்து மெச்சுதல் பார்வை தான். மெல்லிய பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு இருவரும் செல்ல அங்கு இந்த புது தம்பதிக்கு ஏகபோக வரவேற்பு தான்.
பெண்கள் வட்டம் ஆரோஹியை மொத்தமாய் தங்களுக்குள் இழுத்துக்கொள்ள, அங்கு பாகுபாடில்லாமல் அழகிய நட்புக்கரம் அவளை நோக்கி நீட்டப்பட்டது.
தங்குதடையின்று அவர்கள் ஜோதியில் ஐக்கியமான மனைவியின் மேல் ஒரு பார்வையும், நண்பர்கள் கேலியில் ஒரு பார்வையும் வைத்திருந்த அஸ்வினை தான் ஆண்கள் கூட்டம் சரமாரியாக கேலி செய்துவிட்டனர்.
பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் ஆரோஹியை குறைய நினைக்கவில்லை, தங்களது தோழியாய் பாவித்து சகஜமாக பழக ஆரோஹிக்கு கொண்டாட்டம் தான்.
மன நிறைவோடு இல்லம் வந்தவர்கள் உடை மாற்றி மாடி வரவேற்பறையில் படுத்து பராசக்தி படம் பார்த்துக்கொண்டிருந்தனர், எல்லாம் அஸ்வின் செயல் தான்.
அந்த படத்திலிருந்து ஏதோ ஒரு காட்சி அருமையாக உள்ளதென அவன் மனைவி கூறவும் உடனே பார்க்கும் ஆவலில் இருவரும் சித்தமாயினர். அஸ்வின் கவனம் படத்தினில் நிலைப்பெற அவன் மனைவியோ ஏதோ சிந்தனையில் உழன்றுகொண்டிருந்தாள்.
அதிக நேரம் அந்த மூளையினுள்ளும் சிந்தனையை அடக்க முடியவில்லை. அஸ்வின் தோளை சுரண்டி, “சரக்கடிக்கலாமா?” ஒரே போடாய் போட்ட மனைவி கேள்வியில் கழுத்து சுளுக்கும் அளவு வேகத்தோடு வெடுக்கென திரும்பினான்.
“என்ன சொன்ன?” சந்தேகம் தீரவில்லை அஸ்வின் பார்வையில். மனைவியோ வாகாக எழுந்து அமர்ந்துகொண்டாள், “சரக்கு… சரக்கு அடிக்கலாமானு கேட்டேன்”
“போடி பைத்தியம்” தூக்க கழகத்தில் பிதற்றுகிறாள் என்றெண்ணியவன் மீண்டும் படத்தை ரீவைண்ட் செய்து பார்க்க துவங்கினான்.
“யோவ் கிரிக்கெட்டரே. நான் இப்ப ட்ரின்க் பண்ணனும்” பிடிவாதமாக நின்றாள் மனைவி.
“ஆரூ தூங்கு. காலைல பேசிக்கலாம்”
ஆரோஹி, “அதெல்லாம் முடியாது, இப்போவே வாங்க”
அஸ்வின், “என்ன இது பைத்தியக்கார தனமா”
ஆரோஹி, “என்ன பைத்தியக்கார தனம்? எனக்கு இது ரொம்ப நாள் ஆசை, கொஞ்சம் டேஸ்ட் பண்ணிக்கிறேன்”
“அதெல்லாம் தப்பு. படு. ஏதாவது உளறிட்டு”
“யார் உளறுறாங்க, ஏன் நீங்க குடிக்க மாட்டிங்களா என்ன? ஆம்பளைங்கனா எல்லாம் பண்ணலாம், பொம்பளைங்க நாங்க பண்ண கூடாதா?”
அவளை மார்கமாக முறைத்தான், “எது எதுல ஆம்பளைங்களோட போட்டி போடணும்னு ஒரு வரைமுறை இல்லையா? நான் குடிச்சாலும் தப்பு தான், நீ குடிச்சாலும் தப்பு தான்”
“தப்புனு நினைக்கிறவர் எதுக்காக கீழ ஒரு பார் ஓபன் பண்ணிருக்கீங்களாம்?” சோர்ந்து போனான், இவளிடம் இதை மறைக்க தானே அவன் பாடாய்ப்பட்டது, எப்படி தான் பார்த்தாலோ.
“அது எனக்கில்லடா. இன்னைக்கு மாதிரி நம்ம வீட்டுல பார்ட்டி ஹோஸ்ட் பண்ணா இதுக்குன்னு தனியா இடம் ஒதுங்கிடும்ல. அதுக்காக கன்ஸ்ரக்ட் பண்ணது” ஆரோஹியை சமாளித்துவிட்டதாக எண்ணி பெருமைகொண்டான்.
அவளோ அதற்கு மேல் நிற்கவே இல்லை, “நீங்க வந்தா வாங்க, நான் போறேன். இன்னைக்கு மட்டையாகி அந்த போதைய பீல் பண்ண தான் போறேன்”
அஸ்வினை விட்டு தான் மட்டும் எழுந்து வேகமாக கீழே இறங்க, அவளை விட வேகமாக வந்த அந்த விளையாட்டு வீரன், மனைவியை வளைத்து தடுக்க பார்க்க தன்னை வளைந்திருந்த அஸ்வின் கையில் பற்தடம் பதிய கடித்தாள்.
வலி உயிரே போனாலும் அவன் விடவில்லை, “யோவ் விடுயா…” “முடியாதுடி” என்றான் இவனும்.
“ஓ… சரி இப்ப இல்லனா என்ன, நீங்க தூங்குனதும் நான் எந்திரிச்சு போவேன், இங்க நீங்க லாக் போனாலும் பார் போவேன். அட்லீஸ்ட் ஒரு பெக் ஆவது குடிக்காம விட மாட்டேன்”
அவளை வியந்து தான் பார்த்தான், “எப்பா டேய் மொடா குடிகாரன் கூட இப்டி பேசமாட்டான்” அஸ்வின் சற்று கைகளை தளர்த்தியிருந்த நேரம் அவன் கையிலிருந்து விலகி சிட்டாக ஓடிவிட்டாள்.
அனைத்தும் கை மீறி சென்றிருப்பதாக உணர்ந்தவன் தானும், ஓரளவிற்கு கைகளில் சூழலை வைக்க முயன்று தானும் மனைவியை தேடி சென்றான்.
இவன் வருவானென அவளுக்கும் நம்பிக்கை போல, வாசலில் நிற்க, அவ்விடத்திற்கான சாவியை அவனிடம் நீட்டினாள்.
மனைவியை முறைத்தபடியே, “கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு. இன்னைக்கு மட்டும் தான் இதுக்கெல்லாம் விடுவேன்”
உர்ரென முகத்தை வைத்திருந்தவள் சட்டென மலர்ந்து, “என்னோட பக்கெட் லிஸ்ட்ல ஒரே ஒரு நாள் என்னோட புருஷன் கூட சேர்ந்து ட்ரின்க் பண்ணனும்னு தான் ஆசை. இது தான் லாஸ்ட். வாங்க, வாங்க, அங்க பிரிட்ஜ்ல ஐஸ் கட்டி இருக்குமா, சரி வேணாம் ஒரு நாள் குடிக்கிறோம் ராவா அடிச்சா தான் நல்லா இருக்கும்”
தன் வாக்கில் பேசியவள் தனக்கு தெரியாமல் எதையாவது குடித்துவிட்டாளா என்கிற சந்தேகம் அஸ்வினுக்கு. அந்த அறை நீண்டு நன்கு விசாலமாக இருந்தது.
மங்கிய மஞ்சள் நிற விளக்குகள் அவ்விடத்தை மொத்தமும் ஒளிரவிட்டிருக்க மங்கிய வெளிச்சத்திலும் அவ்விடத்தின் நேர்த்தி கண்ணை பறித்தது. இவ்விடம் இருப்பதாய் சித்தார்த் மூலம் கேள்வியுற்றிருக்கிறாள், ஆனால் இன்று தான் பார்ப்பது முதல் முறை.
“அழகா இருக்கு நாராயணா”
“ரொம்ப முக்கியம், சும்மாவே போதை போட்ட மாதிரி தான் இருப்ப. இதுல ட்ரிங்க்ஸ் வேற” என்றான் இன்னும் கோவம் தணியாமல்.
காரியம் நடக்கவேண்டும் ஆரோஹிக்கு அதனால் அமைதியாக இருக்க, அஸ்வின் பார்வை அங்கு நூற்றுக்கும் மேல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை ஆராய்ந்து.
அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. அதில் இருப்பதில் குறைந்தளவு போதை அளவு கொண்ட ஒரு பாட்டிலை எடுத்து அஸ்வின் திரும்ப அந்த மேஜைக்கு அந்தப்புரம் உள்ள நாற்காலியில் அமர்த்திருந்தவள் முகம் அஸ்டகோலமாய் காட்சியளித்தது.
“ஆரூ” அஸ்வின் அழைக்க, “ச்சை கேவலமா இருக்கு” வெறுப்பு அவள் வார்த்தைகளில் மிதந்தாலும் கீழே குனிந்து மீண்டும் அந்த பாட்டிலை எடுத்தாள்.
அதனை பார்த்த அஸ்வினுக்கு பதறியது. தலையில் அடித்துக்கொண்டான். சிறிய பாட்டில் அதற்கு வீரியம் அதிகமாம். அதிலே இந்த பெண் ஒரே மிடறில் பாதியை தீர்த்திருந்தாள்.
“அதை ஏன் ஆரூ எடுத்த, லூசு பொண்ணே” அவளிடமிருந்து அதனை வாங்க அவன் மேஜையை சுற்றி வர அதற்குள் வேகமாக மீதியையும் குடித்துவிட்டாள்.
“இன்னைக்கு நான் போட்டிருந்த டிரஸ்க்கு மேட்ச்சா இருந்ததுல கிரிக்கெட்டரே… வியாக் நல்லாவே இல்ல”
“அடி பாவி மொத்தத்தையும் முடிச்சிட்டு வியாக்னு சொல்ற. வா போகலாம்”
அவனுக்கு கோவம், புதிதாக இதனை அருந்துபவர்கள் இவ்வகை பானத்தை எடுப்பது சரியே இல்லை, அதிலும் அவன் ஆரோஹி, ம்ம்ஹூம் புடிக்கவில்லை அவனுக்கு.
அவளை அவ்விடம் விட்டு அப்புறப்படுத்த அவன் துடிக்க அவளோ பாவமாக கெஞ்சினாள் பத்து நிமிடம் இவ்விடத்தில் இருக்கலாமென.
அஸ்வின் முகத்தை தூக்கி வைத்து அமைதிகாக்க, “கோவமா?” மெல்ல மெல்ல தன்னையே இழக்க துவங்கிய மனைவியை அவன் பத்திரமாக அருகிலே வைத்திருந்தான்.
“இல்ல.”
“உங்களுக்கு ஒரு கொஸ்டின்”
“கேளு” என்றான்.
“ஒருத்தன் பச்சை பாண்ட் போட்டு, பச்சை சட்டை போட்டு, பச்சை செப்பல் போட்டு, பச்சை கேப் போட்டு, பச்சை கதவு இருக்க வீட்டுல கதவ தட்டுறாரு ஏன்?”
அஸ்வின், “அவனுக்கு பச்சை கலர் தான் புடிக்குமா?” அவள் இல்லை என்க அவன் வகை வகையாக பதில் கூறி பார்த்தும் அரை போதைக்கு சென்றிருந்த ஆரோஹி எதற்கும் சரி என கூறவில்லை.
அவளிடம் தோல்வியை ஒப்புக்கொள்ள, “ஏன்னா அந்த வீட்டுல காலிங் பெல் இல்லயாம்” தானே கூறி சிரித்தவள் பார்த்து தலையில் அடித்துக்கொண்டான் அஸ்வின்.
இதில் விக்கல் வேறு பெண்ணுக்கு. “கிரிக்கெட்டரே சைடு டிஷ் ஒரு ஹாலேப் பாயில் சொல்லுங்க”
அரண்டுபோனான், “அடியேய் அவ்ளோ தான்டி உன் லிமிட்டு சொல்லிட்டேன்” பொங்கினான் அஸ்வின்.
அவளோ ஏதேதோ கதை பேசினாள், பல தத்துவங்கள் பிறந்தது. ஆண்களிடம் கூட இத்தனை உளறலை அவன் கேட்டதில்லை.
“எனக்கு பக்கெட் லிஸ்ட் விஷ் கொஞ்சம் இருந்துச்சு… அதுல நீங்க நிறையா செஞ்சுட்டீங்க…”
“நிறையானா, அப்போ என் பட்டாம்பூச்சிக்கு இன்னும் ஆசை இருக்கு” தலை அசைத்தாள் கணவன் கழுத்தோடு கைகள் கட்டி நெருங்கி அமர்ந்து.
“சொல்லுங்க கேப்போம்” என்றான் அவனும் அவளை வசதியாக அமரவைத்து.
“எனக்கு பைக் ஓட்டணும் கிரிக்கெட்டரே, அப்றம் எனக்கு அஞ்சு குட்டி நாய் வளர்க்கணும்”
விரல்கள் பத்தை காட்டியது, “எல்லாம் என் பின்னாடியே என் காலுக்கு நடுல ஓடி வந்து விளையாடனும். எதை பத்தியும் யோசிக்காம நிம்மதியா புல்ல படுத்து வானத்தை பாத்து ஒரு தூக்கம், நான் நீங்க மட்டும்”
அஸ்வினுக்கோ வெட்டவெளியில் தாங்கள் மட்டும் படுத்து முடிவே இல்லாத நட்சத்திரங்களை விறல் விட்டு எண்ணுவது போல் கனவு காண, அது அத்தனை நிறைவாய் தோன்றியது.
“அப்றம் மேஜிக் பென்சில். நான் என்ன சாப்பாடு கேட்டு வரைஞ்சாலும் ஒடனே டிங்னு காத்துல வந்து நிக்கணும்”
சிறு வயதில் பார்த்து ஆசைப்பட்டது எல்லாம் இன்று அடிமனதிலிருந்து ஆசையாக வெளியே வந்தது.
“அப்றம் அஞ்சு குட்டி நாய்…”
“இப்ப தான் மேடம் சொன்னிங்க” அவள் பேசியதை கேட்டு சிரித்தான்,
“ஓ சொல்லிட்டேனா?” தானே குழம்பி போய் பெண் கேள்வி கேட்க அஸ்வின் இன்னும் சிரித்தான்.
“இன்னும் ஒன்னு உங்ககிட்ட கேக்கணும்”
அஸ்வின், “ம்ம்?”
“உங்க முடிய தொட்டு பாக்கணும்னு ஆசையா இருக்கு…”
இதழ்கள் ஓரம் மெல்லிய புன்னகை அஸ்வினுக்கு, அவள் கையை எடுத்து தன்னுடைய சிகையினுள் வைக்க வைக்க சொக்கிய கண்களோடு அவன் சிகையோடு விளையாடினாள்.
நிலையில்லாமல் தள்ளாடிய விரல்களின் கதகதப்பில் இளைப்பாறியவன் முகம் காதல் சுகத்தில் விரிந்திருக்க, “உங்க சிரிப்பு ரொம்ப க்யூட் நாராயணா, அப்றம் உங்க கிஸ். ப்ச் பிளாட் ஆகிட்டேன்”
தன்னுடைய மனதினை கண்ணாடியாய் படம் காட்டும் இந்த ஆரோஹிக்கு போதையே கொடுக்காமல் போதையில் வைத்திருக்க அவன் யோசித்த வழிகள் தான் அத்தனை அத்தனை லட்சங்கள்.
மன திருத்தம் செய்திருந்த வாழ்க்கையில் பிழைகளுக்கு வேலை குறைந்திருந்தது. அவளுக்காக அவன் மொத்தம் மாறியிருக்க, அவனை அவனாய் நேசிக்க துவங்கி நித்தம் பித்தானாள் பாவை.
“எத்தனை ஷாக் தருவ நீ எனக்கு?” அஸ்வின் அதிசயித்து மனைவியின் கன்னம் வருட அவள் கண்களில் கள்ளம் அதிகம் குடியேறியது.
அஸ்வினுக்கு புரிந்துபோனது கள்ளி இன்னும் ஏதோ ஒன்று வைத்திருக்கிறாள் என, “சொல்லுங்க கேப்போம்” என்றான் உறக்கத்தின் பிடியில் செல்ல தயாராகியிருந்த மனைவியை அவசரப்படுத்தி.
“அது… நான்” விக்கல் வர தண்ணீரை மனைவிக்கு கொடுத்து, “ம்ம் சொல்லு” நினைவுபடுத்தினான்.
“நான். இல்ல… இல்ல எனக்…” முழுதாக முடிக்காமல் கண்கள் மூடி அஸ்வின் தோளிலே உறங்கிவிட ஏமாற்றத்தோடு மனைவியை வீட்டினுள் அழைத்து சென்று அவளது அறையில் உறங்க வைத்தான்.
மறுநாள் காலை பத்தை தாண்டியும் அவள் வராமல் போக, தலை வலிக்கு தேவையான மாத்திரை, லெமன் ஜூஸ் என அனைத்தையும் ஏற்பாடு செய்து போன அஸ்வின் ஆரோஹியை எழுப்ப, அசையவே இல்லை அவள். திரைசீலைகளை விலக்கி மனைவியை காண அரண்டு போனான் அவள் இருந்த நிலையை பார்த்து.
மெத்தையின் கால்வாசி ரத்தத்தால் பரவியிருக்க அவள் கன்னம் தட்டி தண்ணீர் தெளித்து எது செய்தும் அசையவில்லை. பைத்தியம் போல் பிதற்றினான் அவள் பெயரை. சிறிதும் அசையவில்லை.
“எந்திரிச்சுக்கோடா ஆரூ பயமா இருக்கு எனக்கு. விளையாட இது நேரமில்லைடி” பல முறை மனைவியிடம் மன்றாடினான். அசைவே இல்லை. உடலை ஆராய்ந்தான் எங்கும் சிறு காயம் கூட இல்லை.
உதிரப்போக்காக இருக்குமோ என்கிற பயத்தில் அவளை கைகளில் அள்ளி மருத்துவமனை சென்று சேர்த்தவனிடம், “பீ பிரிப்பர்ட் யுவர்ஸெல்ப் அஸ்வின்(be prepared Ashwin), அவங்களுக்கு செர்விக்கல் கேன்சர். தேர்ட் ஸ்டேஜ்”
வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அவன் மனைவி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள் என்கிற செய்தியை வைத்து அஸ்வின் உயிரை மொத்தமாய் அந்த மருத்துவர் காவுவாங்கிவிட்டார்.