Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 20.2

“ஆரூ… இன்னொரு தடவை இப்டி பேசுன பல்ல உடைச்சிடுவேன்” என்றவனுக்கு மூக்கு விடைக்க கோவம் வந்தது.

அவன் மனைவியோ அவனுக்கு சற்றும் குறையாத கோவத்தோடு, “நம்பிக்கை இருக்கு தான நான் உயிரோட வருவேன்னு, அப்போ போங்க. இல்ல போக மாட்டேன்னா நான் சொன்னது தான் நடக்கபோகுதுனு நானே முடிவு பண்ணிக்கிறேன்” என கூறி கணவனோடு நேருக்கு நேர் விழி சண்டை போட்டு நின்றாள்.

“ஒரு சில விசயத்துல என்ன கண்ட்ரோல் பண்ணனும்னு நினைக்கிறது எனக்கு சுத்தமா புடிக்காது. சோ பி அவுட் ஆப் இட்” என்றான் இறுகிய குரலில்.

மனைவி இங்கே உடல் உபாதையால் உயிரோடு போராடிக்கொண்டிருக்கும் நேரம் ஒரு காதல் கணவனாய் அவனால் எப்படி அவளை விட்டு விலகி நிற்க இயலும்? கூறினாலும் புரிந்துகொள்ள கூடிய நிலையில் அவள் இல்லை.



Advertisement

ஆத்திரமாக அழுத்தத்தோடு கூறினால் தான் இவள் அமைதியுறுவாள் என இவன் நினைத்திருக்க வார்த்தைகள் சற்று அதிகப்படியாகவே வெளியேறியிருந்தது.

அஸ்வினின் அந்த நேரடி தாக்குதலில் துவண்ட ஆரோஹி கசிந்துருகிய நீரினை அடக்கி வைத்து அடிபட்ட பார்வை பார்த்தவளுக்கு அப்பொழுதும் அவனை அவன் போக்கில் விட மனம் வரவில்லை.

ராகவிடம் திரும்பியவள், “நான் இதுல இருந்து தள்ளி இருக்கணும்னு சொல்றார்ல மாமா, அப்போ உங்க பையன்கிட்ட சொல்லிடுங்க. நான் எந்த டிரீட்மென்ட்க்கும் கோவாப்ரேட் பண்ண மாட்டேன். என் விஷயத்துலையும் அவர் தலையிட கூடாது”

Advertisement

“என்ன ம்மா இது பேச்சு? இதுக்காகவா எல்லாரும் ராத்திரி பகல் தூங்காம கஷ்டப்பட்டது? உன்ன இப்டி விட்டுட்டு அவனால ஒரு நிலைல எப்படி இருக்க முடியும் சொல்லு. ஒரு வகைல அவன் யோசிக்கிறது கூட சரியா தான் படுது”

Advertisement

ராகவ் கூறியதற்கு மதியும் தலை அசைத்தார், “அடுத்த மேட்ச் பாத்துக்கலாம், ரோஹி. இப்போ நீ தேறி வந்தா போதும் எங்களுக்கு”

“அடுத்த மேட்ச்னு இவ்ளோ ஈஸியா சொல்றிங்க, இவருக்கு கேப்டனா இதான் முதல் மேட்ச். சாதாரண போட்டியா சரி அடுத்தவனை போட்டுக்கலாம்னு சொல்ல.

இந்த வாய்ப்பை விட்டா அடுத்து இவர் மேல நம்பிக்கை போய்டும், இனி இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்குமான்னு கூட சொல்ல முடியாது. எவ்ளோ நம்பிக்கை இருந்தா இவருக்கு குடுத்துருப்பாங்க?

Advertisement

இதுல இருந்து பின் வாங்குனா உங்க பையனுக்கு மட்டுமில்ல பல நூறு கோடி பேரோட கனவு என்னாகும் மட்டும் யோசிங்க”

அஸ்வின், “நான் இல்லனா டீம்ம லீட் பண்ண என்ன மாதிரி இன்னும் ஆளுங்க இருக்காங்க ப்பா”

ஆரோஹி, “இவரை மாதிரி ஆளுங்க இருப்பாங்க, ஆனா இவர் இருக்க மாட்டார்ல மாமா. யார் கைல பொறுப்பை ஒப்படைக்கணும்னு தெரியுமா இவர்கிட்ட குடுத்துருப்பாங்க?”

அஸ்வின், “எதை பத்தியும் நான் யோசிக்கிற நிலமைல இல்ல ப்பா. அவளை இதோட இந்த பேச்சை விட சொல்லுங்க” என்றதோடு அஸ்வின் அங்கிருந்து அகன்றிருந்தான்.

நீண்ட நேரம் போராட்டம் தான் அவளுள்ளே. அவனது இந்த வளர்ச்சியை தடுக்கும் முடிவு அவளை தான் பாடாய்படுத்தியது. வாக்கு கொடுத்தது போல் எந்த மருந்துகளையும் எடுக்காமல், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் சண்டித்தனம் செய்தாள்.

அன்னை தந்தையை வைத்து பேச வைத்து பார்த்த அஸ்வினும் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவனாய் கோவத்தோடு உள்ளே வந்த கணவனை அடிபட்ட பார்வை பார்த்தவள்,

“நீங்க இவ்ளோ சுயநலமே யோசிப்பிங்கனு நான் எதிர்பார்க்கவே இல்ல அஸ்வின்” என்றாள்.

அஸ்வின், “நான் செல்பிஸ் தான்டி. உன்னோட ஒவ்வொரு நிமிஷமும் இருக்கணும்னு நினைக்கிற நான் செல்பிஸ் தான். இதுனால என்னோட கேரீயர் மொத்தமா முடிஞ்சு போனாலும் எனக்கு கொஞ்சமும் கவலை இல்ல”

இவனது இந்த அன்பினில் உருகி கறைவதா இல்லை உள்குள்ளே தன்னுடைய ஆசையை புதைத்து எனக்காக மருகுகிறான் என வருந்துவதா என்பதே புரியாமல் விழித்தாள்.

ஆக மொத்தம் எப்படி அவளுக்கு தான் இதயத்தின் ஒரு பகுதி பெரிதாய் அடிபட்டு நிற்கிறது.

“ஏன் நாராயணா இப்டி யோசிக்கிறீங்க? எனக்காக நீங்க பண்றிங்கனு சந்தோசப்பட கூட முடியல. நீங்க இல்லாம கப் ஜெயிச்சிட்டா கூட பரவால்ல, ஒருவேளை முடியலைன்னா? அது என்ன தானே அரிச்சிட்டே இருக்கும்?”

“நான் போனா மட்டும் ஜெய்ச்சிடுவோம்னு என்ன உறுதி?”

“வாய்ப்பு ரொம்ப அதிகம், எனக்காக ஆவது என்னோட கிரிக்கெட்டர் ஜெயிப்பார். வாக்கு குடுத்துருக்காரே எனக்கு”

விழியோரம் திரண்ட கண்ணீரை மறைக்க போராடியவன் தலை தாழ்த்தி சிகை கோதி தன்னையே கட்டுப்படுத்திக்கொண்டான்.

தடுமாறி தவிப்பவன் சிகையோடு விரல்களை நுழைத்தவள், “நாராயணா எனக்காக போங்களேன்” வாய் வார்த்தையாக பேசாமல் மௌனமாக தலை அசைத்து மறுப்பை தெரிவித்தான்.

“எனக்காக இவ்ளோ தூரம் யோசிக்கிற உங்களோட லட்சியம் சிதறி போகிறது எனக்கு எப்படி ப்பா நிம்மதி குடுக்கும்? ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள்ள மனசு குத்திட்டே தானே இருக்கும், இதுல எப்படி டிரீட்மென்ட்க்கு என்னால முழுசா ஒத்துழைக்க முடியும்?”

“ஏன்டா எப்ப பாரு டிரீட்மென்டயே இழுக்குற? உன்ன நல்லபடியா குணப்படுத்துற வரைக்கும் எனக்கு மூச்சு முட்டிட்டே இருக்கும். நான் பக்கத்துல இல்லாம நீ இருந்துடுவியா?” கேட்டான் வேதனை சுமந்த விழிகளோடு.

“இருந்துடுவேன் நாராயணா”

“ஒரு மாசம்டா” மனம் ஆறாமல் கூறியவனுக்கு தான் அந்த ஓர் மாதம் ஓர் யூகமாக தெரிந்தது.

தவிப்பு தான் அவள் கண்களில் எத்தனை எத்தனை, ஆனாலும் பயத்தை காட்டவில்லை அவள், “காத்திருப்போட பலன் ரெண்டு பேருக்குமே சந்தோசத்தை தான் தரும்” சிரிக்க முயன்றாள்.

தன்னை விட தன்னுடைய மனைவியின் எண்ணத்தை மதிக்க சித்தமானான். அன்றொரு நாளை போலவே இன்றைய இரவையும் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மனைவியை மருத்துவமனை விட்டு இம்முறை வீட்டிற்கு அழைத்து சென்றான்.

வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி. அவளது மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்க அவனே சமையல் செய்ய கணவனின் பேச்சு துணையாய் மனைவி சமையல் மேடையை அலங்கரித்தாள்.

அழகாக மலர்ந்த பேச்சுகள் இரவு உணவோடு நிறைவானது. மீண்டும் அஸ்வின் மருத்துவமனை அழைத்து சென்றிடுவான் என்றெண்ணி, “அஞ்சு நிமிஷம் நாராயணா ரூம் வர போய்ட்டு வர்றேன்” என படியேறியவளை விரைந்து வந்து கைகளில் அள்ளியவன்,

“இன்னைக்கு நைட் இங்க தான் இருக்க போறோம்” இன்ப செய்தியை பகிர்ந்தான்.

“எப்படி டாக்டர் விட்டாங்க?”

“உன் ஹெல்த் அவ்ளோ மோசம் இல்ல ஆரூ, சோ தாராளமா போகலாம் சொல்லிட்டாங்க”

அவளோ முகம் எல்லாம் ஒளிர கணவன் கன்னத்தில் எச்சில் செய்து சிரித்தாள். பளிச்சென பதில் புன்னகை கொடுத்தவனுக்கு உள்ளே மனம் கதறியது.

அடுத்த சில நொடிகளில் அவர்கள் வழக்கம் போல் படுக்கும் அந்த மாடி வரவேற்பறை படுக்கையறை ஆனது.

இருவரும் அருகருகே படுத்து அவளுக்கு பிடித்த படம் ஒன்றை திரையில் ஒளிரவிட்டு படுத்திருந்த இருவருக்கும் சிந்தனை அதில் சுத்தமாக லயிக்கவில்லை.

பொறுத்து பார்த்தவன் முடியாமல் ஒரே நொடியில் மனைவியை நெருங்கி அவள் இடையோடு கை பிணைத்து இறுக்கமாக அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவனது அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காவிடினும், அதற்காகவே ஏங்கிய ஆரோஹியும் அவன் அணைப்புக்குள் சிறு முயலாய் கட்டுப்பட அவனது அணைப்பு இன்னும் கூடியது.

கழுத்தில் ஈரத்தை உணர்ந்தவள், அவனது சிகையில் மெல்ல விறல் நுழைத்து வருடினாள். அடர்ந்த அந்த சிகையினில் பட்ட அவளது தளிர் விரல்கள் எப்பொழுதும் கொடுக்கும் மயக்கத்தை இன்று அவனுக்கு கொடுக்கவில்லை.

“கிரிக்கெட்டரே அழுகுறீங்களா?” கேலியாக கேட்டவளுக்கு தான் உள்ளே அத்தனை ரணம் கணவனின் கண்ணீரினால்.

“நான் கூட ஈரம் படவும் முத்தம் குடுக்குறீங்களோ நினைச்சேன்” பட்டென தலை உயர்த்தி முறைத்தவன் விழிகள் செந்நிறமாய் மாறி உண்மையை கூறியது.

“அப்டி பாத்தா என்ன அர்த்தம்? இதுக்கு மேல கிஸ் வேணும்னு யாராலயும் ஓப்பனா கேக்க முடியாது” என்றாள் இன்னும் குறும்பாக.

வறண்டிருந்த அந்த இதழ்கள் மேல் அவன் பார்வை பதிய, முதல் முத்தத்தின் சுவடு நினைவிலாடி அவனை மோகத்திற்குள் இழுத்தது. அஸ்வின் பார்வை மாற்றத்தை கண்கூடாய் கண்டவள் இதழ்களை ஈரப்படுத்த முயல, அவளுக்கு அந்த வேலை கூட கொடுக்க விரும்பாத அவள் கணவன் மொத்தமாய் ஆரோஹியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இழுத்து வந்திருந்தான்.

தயக்கமாய் துவங்கிய இதழ் யுத்தம் அவளது ஒத்துழைப்பில் கொஞ்சம் முன்னேற, அவனோ அவளை அறிய இங்கும் அங்கும் அல்லாடிக்கொண்டிருந்தான்.

காதலென்றே தெரியாமல் காதலித்தவளை காதல் கடலில் இழுத்து சென்று ஒவ்வொரு துளியிலும் காதலை எழுதி காட்டினான். அவளிடம் மட்டும் ஆசைபட்டியல் அதிரகிக்க, ஆசை தான் தீர்ந்தபாடில்லை.

குழந்தையின் ஸ்பரிசம் ஒத்த அவள் விரல்கள் அவனது டீ-ஷர்ட்டின் அடி பகுதியை பிடித்து மார்பை தாண்டி அவிழ்க்க பார்க்க, முத்த கூடலை நிறுத்தி விழி திறந்து மனைவியை கேள்வியாய் பார்த்தான்.

கிரகத்தில் மலராமல் முழு விழிப்போடு விரிந்திருந்த அவள் கண்மணிகள் வண்டாய் அவனிடம் அலைபாய்ந்தது.

“எ… எனக்கு நீங்க வேணும் அஸ்வின். மொத்தமா” சங்கமிக்க தயாரென அவளே பேசியதில் வெட்கமோ, தாபமோ கண்டறிய ஏதேதோ வழியில் சென்றவனுக்கு, உண்மை புரிந்ததும் நெஞ்சம் தூக்கிவாரி போட்டது.

அவளில் இருந்து பிரிந்து எழுந்தவன் சட்டை பிடித்து நிறுத்தியவள் கண்ணில் நிராகரிப்பின் வேதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!