Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 20.1

அந்த அறை மொத்தமும் அமைதியையும் வேதனையையும் தத்தெடுத்திருந்தது. நேற்று சகோதரன் கூற கேட்ட செய்தியே நெஞ்சடைக்க வைத்திருக்க அஸ்வினால் அன்பு அமர முடியவில்லை.

மனதின் அவஸ்தையை கால்கள் ஆட்டி நிதானித்துக்கொண்டிருந்தான். அந்த அறையில் குழுமியிருந்த மூன்று மருத்துவர்கள் ஏதேதோ மெடிக்கல் டெர்ம்ஸ் வைத்து விளக்கம் அளித்தனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையற்றவனாக, “கம்மிங் ஸ்ட்ரையிட் டு தி பாயிண்ட் டாக்டர், எனக்கு இந்த பெர்ஸண்டேஜ், பயாலஜி ஒர்டஸ் எல்லாம் தெரியாது. என் மனைவியை காப்பாத்த ஒரே ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தா கூட அதுக்கான முயற்சியை நான் விட மாட்டேன்” என்றான் தெளிவாக.

“குட் மிஸ்டர் அஸ்வின். உங்களோட நம்பிக்கை தைரியம் எல்லாம் பாராட்ட வேண்டியது தான். அதே தைரியத்தை உங்க மனைவிகிட்ட நாங்க எதிர்பாக்குறோம்” என்றான் அர்ஜுன்.



Advertisement

“நான் அவங்கள அப்சர்வ் பண்ணதுல அவங்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை அவங்க புழைக்கிறதுல. பயம், தவிப்புனு ஒரு எமோஷனல் பாலா இருக்காங்க. மெடிசின் தாண்டி அவங்க மெண்டல் சப்போர்ட் இதுல இருந்தா மட்டும் தான் எங்களால அந்த டுவன்ட்டி பைவ் பெர்ஸன்டேஜ் கேரெண்ட்டி கூட சொல்ல முடியும்”

மகனை தொடர்ந்து வரதராஜனும், “எஸ், அவங்க இம்யூன் சிஸ்டம் பலப்படணும். அதுக்கு மேல தான் எங்களால டிரீட்மென்ட் பண்ண முடியும். இவங்க கண்டிஷன்ல ஒரு நல்ல விஷயம் என்னனா நோய் பரவுற வேகம் கம்மி. சோ அவங்கள பிசிக்கலா, மென்டலா முன்னேத்தி ட்ரீட் பண்ணலாம்”

“பட் இந்த ஒரு மாசம் வலிய ஆரோஹி தாங்கணுமே” அவள் வேதனையை கண்கூடாக பார்த்தவன் அல்லவா அவன், மீண்டும் அந்த வேதனையை அனுபவிக்க விட மனம் ஏற்கவே இல்லை.

Advertisement

“வி கேன் டேக் கேர் ஆப் இட் அர்ஜுன்” என்றான் வருண் சக்கரவர்த்தி, வரதராஜனின் இளைய மகன்.

Advertisement

அஸ்வினின் எப்படி என்னும் கேள்விக்கு, “மைல்டான பைய்ன் கில்லர்ஸ், அதிகமா அந்த நேரம் அவங்கள தூங்க வச்சு பாத்துக்கலாம்.

இப்போ தான் அவங்களுக்கு பீரியட்ஸ், இன்னும் சாலிடா நமக்கு குறைஞ்சது இருபத்தி அஞ்சு நாள் இருக்கும். அதுக்குள்ள அவங்கள திடப்படுத்திட்டா கொஞ்சம் கொஞ்சமா வலி கூட குறைஞ்சிடும்” தீர்வை வைத்தான் வருண்.

அஸ்வினின் சிந்தனையை படித்த அவன் தந்தை, “ஈஸியா நடக்குற விஷயம் இது இல்ல அஸ்வின், லெ தெம் டேக் டைம்” தந்தையின் பேச்சை கேட்டு ஒரு மனதாக சம்மதித்தவன் அறையை விட்டு வெளியேற தங்கியே நின்றான்.

Advertisement

“அஸ்வின்?” என்றான் அர்ஜுன் அவன் தயக்கத்தை கண்டுகொண்டு.

“காப்பாத்திடலாம் தானே டாக்டர்?” பரிதவிப்போடு கேட்டவன் காதலுக்கு பொய்யான நம்பிக்கையை கொடுக்க அந்த மருத்துவருக்கு மனம் வரவில்லை,

“உங்க அன்பு அந்த பொண்ண உங்ககிட்ட கொண்டு வரும்னு நம்பிக்கையோட இருக்கலாம் அஸ்வின்” என்றார் உள் அடக்கிய பொருளோடு.

வெளியே வந்த அஸ்வினுக்கு அவன் மனைவியை பார்க்கும் சக்தி இல்லை. தன் அன்பு தான் அவளை காப்பாற்ற வேண்டும் என்கிறார்களே, அப்படியெனில் அவன் அன்பு அவளை இப்படி ஒரு நிலையில் படுக்க வைத்திருக்கவே கூடாது. அத்தனை பலமானது என அவன் நம்பினான்.

ஆனால் நிதர்சனம், அவன் வரவிற்கு முன்பே அவள் தான் சாத்தானின் பிடியில் சிக்கியாயிட்டதே. அத்தையின் மூலம் நெடு நேரமாக தன்னை காண வராத கணவனுக்கு தூது அனுப்பினாள் ஆரோஹி.

முகத்தை தெழுச்சியாக வைத்து அவளை வந்தடைந்தவனை அவன் மனைவி ஆராய்வது தெரிந்து சிரிப்பை அணிந்துகொண்டான்.

“நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்களேன்”

“ம்ம் போகலாம் போகலாம் ரெண்டு பெரும் சேர்த்தே போகலாம்”

“பார்றா வீட்டுக்கு போக சொல்லிட்டாங்களா?” ஆசையாக கேட்டாள்.

“ம்ம்ஹ்ம் இல்ல, ஆனா நான் கேட்டு பாக்கலாம்னு யோசிச்சேன். நம்ம வீட்டுக்கு போனா உனக்கும் ரெப்ரெஷா இருக்கும்ல டா?” அவளும் ஆமோதிப்பாய் தலை அசைத்தாள்.

“எதுக்கு ஆறு கூப்பிட்ட?”

“வேர்ல்ட் கப்க்கு பிலேயர்ஸ் எல்லாரும் பிராக்டிஸ் பண்ண போய்ட்டதா பாத்தேன் நாராயணா”

“ஓ ஆமா ரெண்டு வாரத்துல மேட்ச் இருக்குல்ல” என்றான் எதுவுமே தெரியாதது போல. “நீங்க எப்போ கெளம்புறீங்க?”

“எங்க?”

“பிராக்டிஸ்க்கு தான்”

“அங்க போய் என்ன பண்ண போறேன்?” அவன் எதிரான பேச்சிலே அவன் போகப்போவதில்லை என்பதை முடிவெடுத்திருப்பது தெரிந்தது.

அந்த நேரம் உள்ளே வந்த மதியிடம், “அத்தை உங்க புள்ளைய பாருங்க என்னமோ சொல்றாரு”

“என்ன சொல்றான்?” என்றார் மருமகள் கையில் பழச்சாற்றை ஒப்படைத்து.

“மேட்ச் போக மாட்டேன் சொல்றார் அத்தை” அதிர்ச்சியை அத்தையிடம் எதிர்பார்த்தவளுக்கு அதுவே திருப்பி தன்னிடம் பிரதிபலித்தது.

“ஏன் அஸ்வின் போகலையா?” சாதாரணமாக மகனிடம் கேள்வி கேட்டார். அவன் இல்லை எனவும் அதற்கும் எதிர் கேள்வியோ கோவமோ இல்லை.

இவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது, இவருக்கு மட்டுமல்ல மொத்த குடும்பம் இதில் கூட்டாக உண்மையி மறைத்திருக்கின்றனர். பொல்லாத கோவம் வர கையிலிருந்த தம்ளரை பட்டென அருகிலிருந்த மேஜையில் வைத்து படுத்துவிட்டாள்.

“ஆரூ என்னடா?” என்றான் அஸ்வின் பயந்தவனாக.

அவளது ஒரு ஒரு சின்ன வேகமும் அவனுள் பூகம்பத்தையே தோற்றிவித்துவிடுகிறது, வலியோ, வலியோ என நினைத்து நினைத்தே எந்நேரமும் அரண்டவனாய் தான் இருக்கிறான்.

தன்னை ஆதரிக்க வந்த கையை உதறிய ஆரோஹி, “தொடாதிங்க” என்றாள் சினம் கொண்டு.

அன்னைக்கும் தெரிந்துவிட்டது இவனை விளையாட அனுப்பாமல் மருமகள் ஓயப்போவதில்லை என்று. மகன் நேற்றே மறைமுகமாக கூறியிருந்தான் மனைவியை விட்டு ஒரு நொடி கூட அகழப்போவதில்லை என்று.

வீட்டினருக்கும் அது சரியாக தான் பட்டது. யார் உடன் இருந்தாலும் அவள் கண்களும் அஸ்வினை தானே நொடிக்கொருமுறை தேடுகிறது. இந்த உலகக்கோப்பை விட்டால் அடுத்தது, ஆனால் இது அப்படி இல்லையே.

அவளோடு எலும்பும் சதையுமாக தான் அருகில் நிற்க வேண்டும் என மகன் நினைப்பதை புரிந்து மகனுக்காக அமைதியாக வழி விட்டனர் பெற்றோர். அவர்கள் பாடு என ஒரு ஓரம் சென்று அமர்ந்துவிட்டார் மதி.

அப்பொழுது உள்ளே வந்த ராகவும் மனைவியின் கண் ஜாடை அறிந்து அவர் அருகில் நின்றுகொண்டார்.

“வலி எதுவும் இல்லையே ம்மா?”

“ஏன் வலிய தவற வேற ஒரு உணர்வே எனக்கு வர கூடாதா? ஒரு பேஷண்ட் மாதிரி என்ன பாக்காதீங்க” காய்ந்தாள் அவனை பார்க்காமல்.

இயலாமையில் பெற்றோரை பார்வையாலே துணைக்கு அழைக்க கண் மூடி ‘காம்’ என வாயசைத்த ராகவ் மதி அருகே அமர்ந்துகொண்டார், அனைத்தையும் நீயே சமாளி என்று. அவனும் தனக்குள்ளே எடுத்த சபதம் தான் அது, அவளை முன்னர் எப்படி பார்த்தோமோ அப்படியே இப்பொழுதும் பார்க்க வேண்டுமென, ஆனால் அவனையும் மீறி வருகிறது ஒரு பயம்.

நிதானித்தவன், “சரி எந்திரிச்சு இதை குடி” பழச்சாற்றை அவள் முன் நீட்டினான்.

“எனக்கு ஒன்னும் வேணாம்”

“என்ன ஆரூ இது பிடிவாதம்?”

“எது நான் பிடிவாதம் பிடிக்கிறேனா? நீங்க ஏன் வேர்ல்ட் கப் போக மாட்டேன்னு சொல்றிங்க?”

அவன் ஏதோ பேச வரும் முன், “என்ன காரணம் சொல்லாதீங்க கிரிக்கெட்டரே”

“உன்ன காரணம் சொல்லல, என்ன சொல்றேன் போதுமா? என்னால உன்ன இங்க விட்டுட்டு அங்க ஒன்னுமே நடக்காத மாதிரி சிரிச்சிட்டு இருக்க முடியாது”

“உங்கள யார் சிரிக்க சொன்னா? உம்முன்னு இருங்க. ஆனா நீங்கா அங்க இருக்கனும். டீம் நீங்க லீட் பண்ணனும். டாட்”

“கண்டிப்பா முடியாது ஆரூ” என்றான் அவனும் பிடிவாதமாக.

“ஏன் இப்டி பண்றீங்க?”

“எப்டியும் பண்ணலையே, உனக்கு தோணுறத நீ செய்ற மாதிரி எனக்கு தோணுறதை நான் செய்றேன். சிம்பிள்” என்றான் தோளை குலுக்கி.

“ஓ tit for tat? நான் உங்ககிட்ட கேக்காம முடிவு பன்னேனு நீங்களும் அதையே பண்றீங்க. ரைட்” என்றாள் இன்னும் அவனுக்கு நன்றாக முதுகு காட்டி படுத்து.

ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், “சரி நீ என்ன வேணாலும் நினைச்சுக்கோ. மொத இந்த ஜூஸ் குடி”

“அவரார் அவரார் மனசுக்கு தோணுறதை செய்றதா தானே இப்ப பேசி முடிவு பன்னிருக்கோம், அப்டியே நடந்துக்குவோம்”

மறு பக்கம் வந்து நின்ற அஸ்வின் முறைப்போடு, “எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற?”எரிச்சல் மண்டிய குரலில் கேள்வி கேட்டவன் மேலும்,

“இப்ப என்ன உன்கிட்ட கேக்காம நான் செஞ்சிட்டேன்?” கேட்டான் சந்தேகமாக.

படுத்திருந்தவள் அவனது கேள்வியில் வெடுக்கென எழுந்து அமர, கையிலிருந்த ஊசி சுருக்கென குத்தி வலி ஏற்படுத்தி மெல்ல அலற, “ஆரூ… ரோஹி” என மொத்த குடும்பமும் முன் வந்தது.

“நோ ஒறீஸ் மாமா. உங்ககிட்டையும் நான் சண்டை போடுவேன், அப்போ பேசிக்கலாம்” மாமனாரிடம் பதில் கொடுத்து அத்தையை முறைத்தவள் இருவரையும் தடுத்து நிறுத்தி அஸ்வின் பக்கம் திரும்பினாள்.

“என்ன கேக்காம என்ன செஞ்சீங்களா? உங்கள டாமினேட் பண்ற எண்ணம் எனக்கு கொஞ்சமும் இல்ல. ஆனா இந்த விசயத்துல அப்டி இருக்க முடியாது கிரிக்கெட்டரே. என்ன காரணமா வச்சு உங்க வாழ்க்கையோட முக்கியமான ஒரு பேஸ்ல பின்வாங்குறது எனக்கு சுத்தமா புடிக்கல”

“நான் பின்வாங்கலையே, ஒரு பிரேக் எடுக்குறேன்” என்றான் அஸ்வின்.

“பிரேக் எடுக்குறதுக்கு வேர்ல்ட் கப் தான் கிடைக்குமா உங்களுக்கு?”

அஸ்வின், “எனக்கு வேர்ல்ட் கப் எல்லாம் பெருசா படல”

ஆரோஹி, “ஓ என்னோட லாஸ்ட் டேஸ்ல என் கூட இருக்க ஆசைப்பட்டு இந்த பிரேக் அப்டி தானே?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!