Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன்- 23

அத்தியாயம் 23:

இப்படியாக அரவிந்தை பற்றி சிந்தித்து கொண்டு அமர்ந்திருந்தவளின் மொபைலுக்கு புது நம்பரில் இருந்து கால் வந்தது. யாராக இருக்கும் என்று யோசனையுடன் கால் அட்டென்ட் செய்தாள்.

“ஹலோ”

“ஹலோ மிஸ்ஸஸ் ஆதித்யன்” என்று ஆர்ப்பாட்டமாக அரவிந்த்தான் பேசினான்.



Advertisement

அரவிந்த் பேசுகிறான் என்று தெரிந்ததும், சித்ராவிடம் போன் பேசிவிட்டு வருவதாக சொல்லிவிட்டு அவசரமாக தனியாக வந்தாள் சந்தியா.

“ஹலோ” என்றவள் தொடர்ந்து “சாத்தானை பத்தி நினைச்சா அது உடனே வரும்ன்றது சரியாதான் இருக்கு. இவ்வளவு நேரம் உங்கள பத்திதான் யோசிச்சிட்டிருந்தேன் அரவிந்த்”

“அது சரிம்மா. ஏன் பேச மாட்டீங்க. நீங்கதான் திருமதி ஆதித்யன் ஆயிட்டிங்களே. உங்க கண்ணுக்கு நாங்க பேயாதான் தெரிவோம். ஆனா இந்த நேரத்துல உங்க மாமாவை பத்தி யோசிக்காம மேடம் என்ன பத்தி யோசிச்சேன்னு சொல்றதுதான் கொஞ்சம் இடிக்குது”

Advertisement

“ம்… யோசிக்காம என்ன செய்றது. உங்கள நம்பி என் வாழ்க்கையில முக்கியமான பிளான் போட்டா இப்படி பாதில எஸ் ஆயிட்டீங்களே. உங்கள என்ன செய்றது”

Advertisement

“பாதில போனா என்னம்மா. பிளான் சக்ஸஸ் ஆச்சில்ல. அத யோசிங்க மேடம்”

“இருந்தாலும் இப்படி சொல்லாம கொள்ளாம போய்டுவீங்களா. என் கல்யாணத்துக்கு கூட வராம இருந்துட்டீங்கள்ல. அப்புறம் ஏன் சொல்லாம போனீங்க. உங்க பழைய நம்பர் என்னாச்சி. உங்களுக்கு நன்றி சொல்ல கூட முடியாம நா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா”

“ஓ அப்ப இன்னும் நீ ஆதிக்கிட்ட மனசு விட்டு பேசல. சரியா”

Advertisement

“ப்ச். நா என்ன கேக்கறேன். நீங்க என்ன சொல்றீங்க?”

“இல்ல நீயும் ஆதியும் பேசிருந்தீங்கன்னா நா ஏன் உன்கிட்ட பேசாம எஸ் ஆனன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்”

“புரியல”

“நீ போய் ஆதிக்கிட்டயே கேளேன்”

“முடியாது நீங்க சொல்லுங்க”

“ஸ்ஸப்பா அம்மா தாயே. முடியல. உன் ஆள் ஆதி வந்து என்ன மிரட்டினான். நிச்சயத்தன்னைக்கு வராத. அப்புறம் இந்த விஷயம் சந்தியாக்கு தெரியக்கூடாது நான்தான் சொல்லுவேன்னும் சொல்லிட்டு போய்ட்டான். சரி இனி மத்தத அவன் பாத்துப்பான்னு கிளம்பிட்டேன். ஆனா உன்னட்ட மாட்டினா, இப்ப என் வாய பிடுங்குன மாதிரி விஷயத்தை வாங்கிடுவ. அதான் எப்படியோ நல்லாருந்தீங்கன்னா சரின்னு சொல்லாம எஸ் ஆயிட்டேன்” என்று அரவிந்த் கூறியதும் அமைதியானாள் சந்தியா.

“என்ன மேடம் அமைதியாய்ட்டிங்க. ரொம்ப சந்தோஷமோ” 

“ஆமா. பின்ன இல்லையா. பாருங்க என் மாமா கடைசில என்ன விட்டு கொடுக்கல பாத்தீங்கள்ல” 

“ம்ஹும். உனக்கு மட்டும் இன்னும் நல்ல மாமன் கிடைச்சிருந்தான்னா வேற சேதி . உன்ன அந்த பேச்சு பேசிருக்கான். தொரத்தி விட்ருக்கான். இதுல விட்டு கொடுக்கலையாம். உடனே உன்ர மாமனை மன்னிச்சிட்டியாக்கும்”

“ஹலோ அரவிந்த் சார். அதெல்லாம் புருஷன் பொண்டாட்டி விஷயம். சின்ன புள்ளைங்கல்லாம் தலையிட கூடாது. போய் ஒழுங்கா வுட் வட்ஸ் குடிச்சிட்டு தூங்குங்க”

“கேடி. நல்ல வேளை. உன்னட்ட நா மாட்டல. இன்னொரு சந்தோசம் என்னன்னா என் எதிரி உன்கிட்ட மாட்டிருக்கான் பாரு. அத நினைச்சாதான் மனசே குளு குளுன்னுருக்கு”

“ம் இருக்கும் இருக்கும். அப்புறம் அரவிந்த், நீங்க பண்ண எல்லா உதவிக்கும் ரொம்ப நன்றி. அப்படியே என்ன விட சூப்பர் கேடியா அங்கேயே உங்களுக்கு கிடைக்கட்டும்ன்னு வாழ்த்தறேன்”

“வேணுன்னா பாரு. பசுவாட்டம் சாதுவான பொண்ணா, பேசவே யோசிக்கிற பொண்ணா, குனிஞ்ச தலை நிமிராத பொண்ணா, சுருக்கமா சொன்னா உனக்கு ஆப்போசிட்டா ஒரு பொண்ண புடிக்கிறேன் பாரு. இப்ப போய் உன் மாமனை கவனி. நா  வைக்கிறேன். பை” என்றுவிட்டு வைத்தான் அரவிந்த்.

சிரிப்புடன் போனை வைத்துவிட்டு சித்ராவிடம் சென்றவளை உட்கார வைத்து தலை நிறைய மல்லி பூ வைத்து விட்டவர் “சந்தியா குட்டி. எனக்கெல்லாம் உன் மாமனை சிங்கம்ன்னு சொல்லி ஏமாத்தி கட்டி வச்சிட்டாங்க. ஆனா உன் புருஷன் ஆதி உண்மையிலேயே சிங்கம்தான். உனக்கு ஏத்த ஜோடி ஆதிதான் தெரியுமா. ஸ்ரீதர் அரவிந்த்தெல்லாம் இவன் பக்கத்தில நிக்கவே முடியாது. அவன் எடுக்கிற எந்த முடிவாகட்டும் அவ்ளோ கரெக்டா இருக்கும். எந்த ஒரு சபையா இருந்தாலும் அவன் பேச்சித்தான் எடுபடும். அவன் பேச்சை மீறி ஒரு பய பேசமாட்டான். அத மாதிரி எந்த பொண்ணையும் அவன் பாத்ததில்லை. சுதாவையே அவன் பிடிச்செல்லாம் கட்டிக்கல. அதனாலதான் அவ்ளோ ஈஸியா அவளை வேண்டாம்ன்னுட்டான். அத மாதிரி கல்யாணமே வேண்டான்னு சொல்லிட்டு இருந்தவன், உன்ன தானா கட்டிக்கிறேன்னு சொல்லிருக்கான்னா என்ன அர்த்தம். உன்ன அவ்ளோ பிடிச்சிருக்கு  போல அவனுக்கு.  

அப்புறம் இது பெரிய குடும்பம். நீ மூத்த மருமகளா வந்துருக்க. அதனால சிவகாமி அக்கா மாதிரி எல்லாரையும் பொறுப்பா அரவணைச்சி குடும்பத்தை கொண்டு போகணும். எனக்கு தெரியும். நீ ரொம்ப புத்திசாலி. அந்த புத்திசாலித்தனத்தை வாழ்க்கைல பயன்படுத்தி ஜெயிச்சி காட்டணும். சரியா” என்றார்.

“சரி அத்தை. சிவகாமி அத்தைய இவ்ளோ பெருமையா பேசுறீங்க. அப்புறம் ஏன் தனி குடித்தனம் போனீங்க.”

“இங்க ஒண்ணா இருந்தவரை அவங்க அருமை தெரியல சந்தியா. எல்லாத்துக்கும் எல்லாரும் அவங்களையே முன்னிலை படுத்தறாங்களேன்னு பொறாமையா இருந்துச்சு. தனியா போய் வயசும் ஏறின உடனேதான நிறைய விஷயங்கள் புரியுது” என்றவர் தொடர்ந்து 

“ஆனா உனக்கு ஆதியை உண்மையிலேயே பிடிச்சிருக்கா சந்தியா. ஏன் கேட்கிறேன்னா நீ பெங்களூர்ல வளர்ந்தவ, ஆதி என்னன்னா வேட்டிய கட்டிட்டு அலையுறான். கலர் வேற கருப்பா இருக்கான்” என்று சொல்லி கொண்டே போனவரை 

அத்தை என்று கூப்பிட்டு நிறுத்திய சந்தியா “இவ்ளோ நேரம் பெரிய பேச்செல்லாம் பேசிட்டு கடைசியா சின்ன புள்ள மாதிரி பேசுறீங்க. நீங்க இன்னும் வளரனும் அத்தை” என்று சிரித்து கொண்டே கூறிவிட்டு ஆதியின் அறைக்கு சென்றாள் சந்தியா. 

மாம்பழ வண்ணத்தில் பிரௌன் பார்டர் வைத்த பட்டு சேலையில் மிதமான அலங்காரத்துடன் கையில் பால் சொம்புடன் உள்ளே சென்றாள் சந்தியா. அதை கட்டிலின் பக்கத்தில் உள்ள குட்டி டேபிளில் வைத்துவிட்டு, கட்டிலில் கால் நீட்டி அவளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ஆதியை கண்டுகொள்ளாமல் அவள் உடைகளிலிருந்து நைட் பேண்ட் டீ சர்ட்டை எடுத்து கொண்டு பாத்ரூமிற்கு செல்ல போனாள் . 

அவளை சந்தியா என்று கூப்பிட்டு நிறுத்தினான் ஆதி.

திரும்பி பார்த்தவளிடம் “நா உன்கிட்ட பேசணும்”

“நா டிரஸ் மாத்தணும்” என்றுவிட்டு செல்ல போனவளின் வழியை மறித்து நின்றான் ஆதி.

ஏற்கனவே ஒரு மாசமாக அவளிடம் பேச முயற்சித்து பேச முடியாமல் போன கோபம் வேறு ஆதிக்கு.

“இப்ப எதுக்கு டிரஸ் மாத்த போற”

“இது என்ன கேள்வி. எனக்கு சாரீ கம்பார்ட்டபிளா இல்ல. அதான்”

“ஆனா எனக்கு சாரீதான் பிடிக்கும்”

“புடிச்சிருந்தா நீங்களே சாரிய கட்டிக்குங்க பாஸ். எனக்கு ஒன்னும்  ஆட்சேபணை இல்லை” என்று அசால்ட்டாக சந்தியா சொன்னதும், இவ்ளோ நேரம் கோபத்தை கட்டுக்குள் வைத்திருந்தவனின் கோபம் எல்லை மீறியது. இவள்ளாம்… பேசிக்கிட்ருந்தா சரிப்பட்டு வரமாட்டா என்று முடிவெடுத்தவன் “என்னடி சொன்ன” என்று கேட்டு அவளை அலேக்காக தூக்கி கொண்டு போய் கட்டிலில் போட்டான்.

அவசரமாக எழுந்திரிக்க முயன்றவளின் மேல் விழுவது போல் சென்றவன் விழாமல் அவளின் இரு பக்கமும் கைகளை ஊன்றி அவளை எழுந்திரிக்க விடாமல் செய்தான்.

கடுப்பான சந்தியா “இப்ப எதுக்கு இப்படி பண்றீங்க. தள்ளுங்க பாஸ்” 

“நானும் உன்னட்ட பேச ஒரு மாசமா எவ்ளோ முயற்சி பண்ணேன். நீ எங்காவது வாய்ப்பு கொடுத்தியா. சரி கல்யாணமும் முடிஞ்சிடுச்சி. இப்பவாது பேசலான்னு பாத்தா, இவ்ளோ திமிர் பண்ற. என்ன பாத்தா எப்படிடி தெரியுது. நா ஆதி தெரியுமில்ல” என்று அவள் முகத்தின் அருகில் கோபமாக பேசி கொண்டிருந்தான் ஆதி.

சந்தியாவிற்கு அவன் பேச்சில் கோபமெல்லாம் வரவில்லை. மாறாக அவனுடைய அருகாமை அவளுக்கு அவஸ்தையாக இருந்தது.

“சரி முதல்ல தள்ளுங்க. அப்புறம் என்ன பேசணுமோ பேசுங்க” என்று பொறுமையாக சொன்னதால் அவளை விட்டு எழுந்தான். சந்தியாவும் எழுந்து அமர்ந்து “இப்ப சொல்லுங்க” என்றாள்.

இவ்வளவு நேரம் பேச வேண்டுமென்று அவ்வளவு அலப்பறை செய்தவன் இப்பொழுது அமைதியானான். அவன் தயக்கத்தை பார்த்த சந்தியா “சரி நா டிரஸ் மாத்த போறேன்” என்று கிளம்பவும் “சாரி” என்றான் ஆதி.

“எதுக்கு”

“அன்னைக்கு மில்லுல உன்னட்ட ரொம்ப பேசிட்டேன். அதுக்கு முன்னவும் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் அதுக்குதான்”

“அவ்வளவுதானா. நா போலாமா”

“அப்புறம் அரவிந்த நான்தான் நிச்சயத்தை நிறுத்த சொன்னேன். அதான் அவன் நிறுத்தினான்”

“ஏன்?”

“ஏன்னா உன்ன யார்ட்டயும் என்னால விட்டு தர முடியல. உன்ன என்ன தவிர வேற யாரும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினைச்சேன்”

“ஓ அப்புறம்” என்று சந்தியா சாதாரணமாக கேட்டதும், அவளை பிடிச்சிருக்குன்னு சொல்றேன். எங்கயாவது அசர்றாளா பாரு. இவளை… என்று மனதிற்குள் அவளை வறுத்தெடுத்த ஆதி வெளியில் கூலாக 

“அப்புறம் என்ன. நீ சாரிய சேன்ஜ் பண்ண வேண்டாம் . அவ்வளவுதான்” என்றான்.

“என்ன… ஏன்?” என்று ஆச்சரியமாக அவனை பார்த்தாள் சந்தியா.

“ஆமா இப்ப நம்ம பஸ்ட் நைட்ல. அத கொண்டாட வேண்டாமா. அதுக்கு நீ சாரீல இருந்தாதான் எனக்கு பிடிக்கும்” என்று சீரியஸாக சொன்னவனை ங்கே என்று பார்த்தாள் சந்தியா.

அவளின் பாவனையை பார்த்து வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிய ஆதி “என்ன பொம்மு குட்டி மாமாவ அப்படி பாக்கிற. உனக்கு லைட் இருந்தா ஓகே வா. இல்ல ஆஃப் பண்ணிடவா?” என்றதும் அதிர்ச்சியில் வேகமாக மண்டையை இட வலமாக ஆட்டிய சந்தியாவை பார்த்து “என்னம்மா லைட்ட ஆஃப் பண்ண வேண்டாமா. எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை” என்று அவளின் பக்கத்தில் நெருங்கிய ஆதியை பார்த்து அவசரமாக பெட்டை விட்டு எழுந்து நின்றாள் சந்தியா.

“என்ன பொம்மு எழுந்துட்ட” என்ற ஆதி அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்துகொண்டே நெருங்கினான்.

அவசரமாக பின்னாடி தள்ளி சென்ற சந்தியா தலையை குலுக்கி கொண்டு “ஹலோ என்ன பாஸ். நா சின்ன புள்ள . என்ன போய் பஸ்ட் நைட்க்கு கூப்பிடறீங்க” என்றாள்.

“நீ சின்ன புள்ளையா இருந்தா என்ன பொம்மு குட்டி. மாமாதான் பெரிய பையனாச்சே. உனக்கு தெரியாததெல்லாம் நா சொல்லி தரேன் பொம்மு. அதோட இல்லாம நீ ஒன்னும் அவ்ளோச் சின்ன புள்ளையெல்லாம் இல்லன்னு அன்னைக்கு தோட்ட வீட்ல வெறும் பாவாடையோட நின்னியே. அன்னைக்கே மாமா தெரிஞ்சிக்கிட்டேன்” என்று அவளை கிறக்கமாக பார்த்து கொண்டே கண்ணடித்தவனை மறுபடியும் ங்கே என்று விழி விரித்து பார்த்தாள் சந்தியா.

ஐயோ இவ்ளோ நாள் இந்த ரொமான்டிக் ஆதி மாமாவை உள்ளுக்குள்ள எங்க மறைச்சி வச்சிருந்தாங்கன்னு தெரியலையே என்று மனதிற்குள் புலம்பிய சந்தியா “அதெல்லாம் நீங்க ஒன்னும் சொல்லி தர வேண்டாம். எனக்கு 21 வயசுதான் ஆகுது. படிச்சிக்கிட்டுதான் இருக்கேன்” என்றுவிட்டு நகர பார்த்தவளை, வேகமாக அருகில் சென்று இடுப்பில் கை கோர்த்து பிடித்து கொண்டவன்.

“நீ அதுக்கெல்லாம் கவலை படாத பொம்மு. உன் படிப்பை டிஸ்டர்ப் பண்ணாம எப்படி ரோமான்ஸ் பண்றதுன்னு மாமா சொல்லித்தரேன்” என்றான் அவளின் கண்களை பார்த்து.

அவனின் பார்வையில் பேச்சில் மயங்க போன சந்தியா கண்களை இறுக்கி மூடி கொண்டாள். பிறகுதான் அவளுக்கு மூளையே வேலை செய்ய ஆரம்பித்தது. தலையை குலுக்கி கொண்டு கண்களை திறந்தவள்

“ஹலோ பாஸ். நீங்கதானே என்ன யாருக்கு பொண்டாட்டியானாலும் உன் இலட்சியத்தை விடக்கூடாதுன்னு சொல்லிருக்கீங்க. இப்ப இப்படி பண்ணிட்டு இருக்கீங்க. பஸ்ட் என் மேல இருந்து கைய எடுங்க” என்றதும் கையை எடுத்து கொண்டே 

“சரி லட்சியத்தை பத்தி பேசினதால கைய எடுக்கிறேன். ஆனாலும் பஸ்ட் நைட்க்கும் உன் லட்சியத்துக்கும் என்ன சம்பந்தம் பொம்மு” என்றான் ஆதி.

“வாங்க பாஸ். கட்டில்ல போய் உக்காந்துட்டு பேசலாம்”என்று சந்தியா  சென்று கட்டிலில் அமர்ந்ததும் அவளை சந்தேகமாக பார்த்து கொண்டே ஆதியும் சென்று அவளின் அருகில் அமர்ந்தான்.

“பாஸ். நா உங்கள லவ் பன்றேன்னு சொன்னப்பல்லாம் நீங்க என்ன சொன்னீங்க. நீ சின்ன புள்ள. படிக்கிற புள்ள. நா உன்ன விட ரொம்ப பெரியவன். நீ படிச்சி உருப்புட்ற வழிய பாருன்னு சொல்லிட்டே இருந்தீங்களா. அதான் நம்ம நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் இடைல இருந்த நாட்கள்ல நல்லா யோசிச்சி ஒரு முடிவுக்கு வந்தேன். அது என்னன்னா என் படிப்பு முடிஞ்சி ஒரு டெக்ஸ்ட்டைல் மில் ஆரம்பிக்கணும். அப்புறம் ஒரு ஜவுளி கடை இல்லல்ல கடல் ஆரம்பிக்கணும். அதுக்கு பிறகுதான் நம்ம பஸ்ட் நைட். அதுக்குள்ள நானும் நீங்க சொன்ன மாதிரி பெரிய புள்ளையாயிடுவேன் பாருங்க” என்றதும் உண்மையிலேயே அதிர்ச்சியான ஆதி 

“நீ சொல்றத பாத்தா மினிமம் அஞ்சு வருசமாது ஆகுமே பொம்மு குட்டி” என்றான்.

“பத்து வருஷமே ஆனாலும் அதை பத்தில்லாம் எனக்கு கவலை இல்ல பாஸ். நீங்க சொன்ன மாதிரி நல்லா படிச்சி வாழ்க்கைல ஜெயிச்சதுக்கு பிறகுதான் நமக்கு பஸ்ட் நைட்” என்றுவிட்டு “என் லட்சியத்துல ஜெயிக்கணும்ன்னு என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க பாஸ்” என்று அவன் காலில் விழுந்தாள்.

ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் ஆதி இல்லை. அதிர்ச்சியில் இருந்த அவனின் காலை தொட்டு கும்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாக ட்ரெஸ் மாற்ற சென்றாள் சந்தியா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!