Skip to content
Post Views: 5,895
அத்தியாயம் 33:
அரவிந்த் கேட்ட கேள்விக்கு “கெட்டவன்னு கிடையாது. அவங்க அம்மா வளத்ததுனால நல்ல பையனாதான் இருந்துருக்கான். இதுக்கு முன்ன பெண்கள் விஷயத்துல அப்படி இப்படி இருந்தாலும் யாரையும் கட்டாய படுத்தின மாதிரி தெரில. முக்கியமா அவங்க அப்பா மாதிரி கிடையாது அவன். ஆனா என்ன கொஞ்சம் மென்டலா பாதிக்கப்பட்ட மாதிரிதான் பிஹேவ் பண்றான் சந்தியா மேட்டர்ல. ரொம்ப எமோஷனலா அட்டாச் ஆயிருக்கான்” என்று விஜய் பேசி கொண்டிருக்கும் போதே அவனுக்கு கால் வந்தது. பேசிவிட்டு வைத்தவன்
“அந்த தீபன் பெயில்ல வெளிய வந்துட்டானாம். முன்னாடியே அவன் வக்கீல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டுத்தான், இதுல இறங்கியிருக்கான். பிரச்சனை என்னென்னா இன்னைக்கு நம்ம பண்ணத பார்த்து அவன் இன்னும் உஷார் ஆய்டுவான். நம்ம இன்னும் கேர்ஃபுல்லா இருக்கணும்”என்றவன்
ஆதியிடம் “உன் வைஃப்க்கு இன்னும் எவ்ளோ நாள் காலேஜ்? ஸ்டடி ஹாலிடேஸ் முடிஞ்சு என்னைக்கு திரும்ப எக்ஸாம்?” என்று விஜய் கேட்டதும்
Advertisement
“இன்னும் டூ வீக்ஸ் மட்டும் தான் காலேஜ். அப்புறம் லீவ் தான். ஆனா எக்ஸாம் டேட் தெரியல. இரு விஜய். அவளுக்கு கால் பண்ணி கேட்டுடுறேன்” என்றுவிட்டு மொபைல் எடுத்து பார்த்தவன் தலையில் கை வைத்து உட்கார்ந்தான். ஏனென்றால் சந்தியாவிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்டு கால்ஸ். அருணும் அழைத்திருந்தான்.
பிறகு அரவிந்தை திரும்பி பார்த்து முறைத்தவன் “சந்தியாட்ட என்ன சொல்லி வீட்ல விட்டுட்டு வந்த” என்று கேட்டான்.
அதற்கு அரவிந்த் “உண்மைய சொன்னேன்” என்றான்.
Advertisement
“ஏண்டா மடப்பயலே. உண்மைய சொன்னா பயப்பட மாட்டாளா. எதாவது பொய் சொல்லி சமாளிச்சிட்டு வந்திருக்கலாம்ல” என்று திட்டியவனை பார்த்து கடுப்பானான் அரவிந்த்.
Advertisement
“அடேயப்பா. பொய்யி. சொன்னா உன் வீட்டம்மா அப்படியே நம்பிடும். இவ்ளோ பேசறவன் தில்லுருந்தா உன்ர பொண்டாட்டிக்கிட்ட போன போட்டு மதியமே நீயே ஒரு பொய் சொல்லிருக்க வேண்டியதுதான. அவ கால் பண்ணா அட்டென்ட் பண்ணாம பம்மிக்கிட்டு இருந்துட்டு, இப்ப என்னட்ட வந்து பாயறான். இதோ இந்த வசந்தன், உன் வீட்டுக்கு வந்து என் கார்ல வந்தா அவட்ட மாட்டிக்குவோம்ன்னுட்டு பாதி வழியில வந்து என் கார்ல ஏறி வரான். ஏதோ நா ஒரு வீரன்கிறதால அவட்ட உண்மையும் சொல்லி, என் கூடவே வரேன்னு சொன்னவளை எப்படியோ கழட்டி விட்டுட்டு வந்து சேந்தேன்” என்று மூச்சுவிடாமல் பேசிவிட்டு தண்ணீர் குடித்தவனை பார்த்த விஜய், ஆதியிடம்
“ஏன் ஆதி. சிஸ்டர் என்ன அவ்ளோ டெர்ரரா” என்றான். அதற்கு ஆதி
“ச்ச. இவன் சொல்றான்னு நீயும் கேட்டுகிட்டு. அவ சின்ன புள்ள. பச்சை மண்ணு. இவன் ஒரு பயந்தாங்குளி பய” என்றதும், அரவிந்த்
Advertisement
“எது? சின்ன புள்ளையா. கல்யாணமே வேண்டான்னு சாரு துர்வாசர் மாதிரி சுத்திகிட்டு இருந்தாரு. இவர சுத்தி சுத்தி வந்து எவ்ளோ நேக்கா பிளான் போட்டு கவுத்துச்சு தெரியுமா அந்த சுண்டைக்கா. செம கேடி. எல்லாரையும் பேச்சிலேயே கவுத்துடும்” என்றான் அரவிந்த்.
அதற்கு ஆதி “டேய் அவ எங்க பிளான் போட்டா. நீதான நிச்சய பிளான் போட்டு என்ன ஏமாத்துன” என்று ஆதி கூறியதும் “ம்ஹும் அப்படிதான் ரொம்ப நாளா, நானும் நினைச்சுக்கிட்டு பெருமையா சுத்திட்ருந்தேன். ஆனா விஷயம் அது இல்ல.
நீ ரமேஷ்ட்ட முதல்ல அவங்க ஊருக்கு பஞ்சாயத்துக்கு போனியே. அன்னைக்கு அங்க நடந்த விஷயத்தை, இந்தா இருக்கானே இந்த நல்லவன் என்று வசந்தை காட்டியவன், இவன் போன போட்டு அவன் தங்கச்சிக்கிட்ட சொல்லிட்டான்.
அதிலேயே அவளுக்கு தெரிஞ்சி போச்சு. நீ மறுபடியும் முருங்கை மரம் ஏற போறன்னு. அன்னைக்குன்னு பாத்து கரெக்ட்டா நானும் எங்கப்பாட்ட சொல்லி அவள பொண்ணு கேக்க சொல்லிட்டேன். இத அவங்கப்பா அவகிட்ட சொன்னதும் உன் ரியாக்சன் என்னன்னு பாக்க, உன்னட்டையும் உங்க அப்பாக்கிட்டயும் என்ன பத்தி கேக்க சொல்லி அனுப்பிருக்கா.
அவ எதிர்பார்த்த பதிலைத்தான் நீ சொல்லி அனுப்பியிருக்க. அதை கேட்டதும் உன்னட்ட கடைசியா பேசி பாக்கலாம்ன்னுதான் மில்லுக்கு வந்துருக்கா. நீ எடக்கு மடக்கா பேசி அனுப்புன உடனே பொங்கி எழுந்து, ஒரு முடிவுக்கு வந்தவள், அவங்கப்பா அம்மாக்கிட்ட நா பொண்ணு பாக்க வர்றத்துக்கு ஓகே சொல்லிட்டா.
அவ ஒரு முடிவுக்கு வந்தான்னு சொன்னனே, அது என்ன முடிவு தெரியுமா. நா அவளுக்கு ஒரு பிளான் போட்டு தந்தேனே, நிச்சய நாடகம், அதையேதான் அவளும் முடிவு பண்ணிருக்கா.
அத என்னட்ட தனியா பேசும்போது சொல்லலாம்ன்னு வந்தவகிட்ட நானே யாரு ஆதியை லவ் பண்றியான்னு கேட்கவும், என் போக்கிலேயே பேச வச்சு என் வாயாலேயே அவ பிளானை எக்ஸ்கியூட் பண்ண வச்சுருக்கா.
ஏன்னா உன்னையும் என்னையும் பத்தி அவ்ளோ நல்லா தெரிஞ்சு வச்சுருந்துருக்கா. சந்தியா என்ன கல்யாணம் பண்ணிக்க போறாங்கிறத உன்னாலையும் ஏத்துக்க முடியாது. அதே சமயம் நா நிச்சயம் பண்ண பொண்ண உனக்கு விட்டு கொடுத்து நீ கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற பிளான் எனக்கும் பிடிக்கும், அப்படீன்னு நிச்சயமா இருந்துருக்கா.
இதுல என்ன கொடுமைன்னா அவ பிளான என் வாயாலேயே அவட்ட சொல்லி அவள நா கன்வின்ஸ் வேற பண்ணேன்” என்று சொல்லிவிட்டு தலையில் கை வைத்து உட்கார்ந்த அரவிந்தை பார்த்து அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தார்கள் விஜயும், வசந்தனும்.
ஆதிக்கு இதை பற்றி முன்பே தெரிந்த்திருந்தாலும் காட்டி கொள்ளாமல், அரவிந்தை பார்த்து வந்த சிரிப்பை அடக்க பார்த்தவன் முடியாமல் சிரிக்க ஆரம்பித்தான்.
அரவிந்த் தொடர்ந்து “இவ மறுநாளே எங்கப்பாட்ட கடைல வந்து பேசினப்போ , எங்கப்பா கேட்டிருக்கார். ஏம்மா எந்த நம்பிக்கைல என் பையன நம்பி இந்த நிச்சய பிளானுக்கு ஒத்துக்கிட்ட. என் பையன் ஆதியை பழிவாங்க நிச்சயத்தை நிறுத்தலன்னா என்னம்மா பண்ணுவேன்னு கேட்ருக்கார். அதுக்கு சொல்லிருக்கா
நானே உங்க பையன்கிட்ட இந்த மாதிரி நாடகம் போடலாம்ன்னு கேக்கத்தான் பொண்ணு பாக்கவே வர சொன்னேன் அங்கிள். ஆனா பாருங்க, எனக்கு அந்த வேலைய கூட தராம உங்க பையனே எல்லா பிளானும் போட்டுட்டார்.
உங்க பையன் ரொம்ப… நல்லவர் அங்கிள். அவரை போய் நீங்க பெரிய வில்லன் ரேஞ்சுக்கு பேசறீங்க . அங்கிள் உங்க பையன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்ன்னு சொல்லிருக்கா. அதுக்கு எங்க அப்பாவும் சொல்லிருக்கார், ஆமாம்மா. நீ சொல்றதும் சரிதான். என் பையனுக்கு அந்த அளவுக்கு கூறு கிடையாதுன்னு.
நான் ஏன் ஊருக்கு வந்தேன்னு நினைக்கிறீங்க. இந்த மேட்டரெல்லாம் ரெண்டு நாளைக்கு முன்னாடி தண்ணிய போட்டுட்டு எங்கப்பா உளறிட்டார். அதான் தாங்க முடியாம உன் பொண்டாட்டிய பாத்து நறுக்குன்னு நாலு கேள்வி கேக்கலாம்ன்னு வந்தேன். அதுக்குள்ள இந்த தீபன் பய வேற வந்துட்டான். ஏற்கனவே டென்ஷன்ல இருக்கவள ஏதும் கேக்க வேண்டாம்ன்னுதான் போனா போகுதுன்னு ஏதும் கேக்கல” என்று சொல்லிவிட்டு,
சிரித்து கொண்டிருந்தவர்களை பார்த்து கடுப்பான அரவிந்த் , வசந்தனை பார்த்து “என்னங்கடா ரொம்பத்தான் சிரிக்கிறீங்க. இதோ இவன எக்ஸாம் எழுத வைக்க அவன் மச்சானும் தலையால தண்ணி குடிச்சான். கேட்டானா? ஆனா அவ ஊருக்குள்ள வந்து ஒருநாள் இவன்கிட்ட பேசுனா. இப்ப சாரு போற போக்க பாத்தா படிச்சி ஐஏஎஸ் ஆனாலும் ஆய்டுவாரு போல. அப்படி விழுந்து புரண்டு படிக்கிறார். அப்படி என்ன பேசி இவன சரி கட்டுனான்னு கேளு” என்றதும் சிரிப்பை நிறுத்திய வசந்தன்
“அட என்ன வெட்டி நாயம் . வாங்க வீட்டுக்கு போகோணும். அங்க என்ர தங்கச்சி உன்ன தேடுவா” என்றுவிட்டு வெளியே பில் செட்டில் பண்ண ஓடிவிட்டான்.
விஜய் சிரித்து முடித்தவன் “இருந்தாலும் உன் வைப் செம ஷார்ப்த்தான். பேசாம எங்க டிபார்ட்மெண்ட்ல சேர்த்து விட்ரலாம் போல. சரி ஆதி, அவங்ககிட்ட போன் பண்ணி என்னைக்கு எக்ஸாம்ன்னு கேளு ” என்றான்.
சரி என்று ஆதியும் கால் பண்ணினான். முதல் ரிங்கிலேயே போனை எடுத்தவள் “மாமா. நீங்க நல்லாருக்கீங்களா” என்றுதான் கேட்டாள்.
“நான் நல்லாத்தான் இருக்கேன் பொம்மு. ஏண்டி இவ்ளோ கால் பண்ணிருக்க”
“ஏன் கேக்க மாட்ட்டீங்க நீங்க. யாரை கேட்டு நீங்க இவ்ளோ ரிஸ்க்கான ப்ளான்லாம் போட்டீங்க. காலைல என்ன காலேஜ்ல விட்டுட்டு போனதோடு சரி. அதுக்கப்புறம் ஒரு வார்த்தை பேசினீங்களா. எனக்கு பயமா இருக்காதா மாமா. அருண் கௌரிட்ட கேட்டா நீங்க நல்லாருக்கீங்க. வந்துடுவீங்கன்னே சொல்லிட்டு இருக்காங்க. இப்ப எங்க இருக்கீங்க. எப்ப வீட்டுக்கு வருவீங்க மாமா”
“நா வீட்டுக்குத்தான் வந்துக்கிட்ருக்கேன்டி பொம்மு. இப்ப வந்துடுவேன். அதுக்கு முன்ன உனக்கு எக்ஸாம் டேட் எப்பன்னு சொல்லு?” என்றதும்
“எதுக்கு” என்று ஒரு கேள்வியை கேட்டாள் சந்தியா.
“இது என்னடி கேள்வி. உன் எக்ஸாம் டேட் தெரிஞ்சிக்கத்தான்”
“ம்ஹும் . நாம் நம்ப மாட்டேன். நீங்க திரும்ப அதை வச்சி ஏதாவது பிளான் போடுவீங்க. முதல்ல என்ன விஷயம்ன்னு சொல்லுங்க”
ம்ஹும் இவளை சமாளிக்க முடியாது என்று “ஒண்ணுல்லடி. அந்த தீபன் பெயில்ல வெளில வந்துட்டான். அதான் நீ எக்ஸாம்க்கு மட்டும் காலேஜ் போனா போதும். அதுக்குதான் டேட் கேக்கிறேன் போதுமா” என்று உண்மையை கூறினான்.
சரி என்று தேதியை சொல்லிவிட்டு “வீட்டுக்கு சீக்கிரம் வாங்க மாமா. நா உங்கள காலைல பாத்தது. நா உடனே உங்கள பாக்கணும். அப்புறம் இன்னைக்கும் நா படிக்க போகல. உங்களுக்காகத்தான் நம்ம ரூம்ல வெயிட் பண்றேன் மாமா ” என்று கிசு கிசு குரலில் சொல்லி போனை சந்தியா வைத்தும் போனை பார்த்து கொண்டே புன்னகை முகமாக மெய் மறந்து அமர்ந்திருந்த ஆதியை பார்த்து விஜய் என்ன என்று கண்ணால் கேட்டான் அரவிந்திடம்.
அதற்கு கையால் நெற்றியில் தொட்டு காட்டி “ஆல் ஃபேட்” என உதட்டை பிதுக்கினான் அரவிந்த்.
பின்பு “நீயே பாரு டீஸிபி போலீஸ். இப்ப இவன பாத்தா யாராவது பத்து பேர ஒத்தையா நின்னு சமாளிச்சவன்னு சொன்னா ஒத்துக்குவாங்களா” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே அங்கு வந்த வசந்தன், ஆதியை இது வரை பார்க்காத போஸில் பார்த்ததால் “என்னங்கண்ணா பண்ணீங்க என்ர மச்சான. இப்படி அவனை முன்ன பின்ன நா பாத்ததே இல்லீங்ளே” என்று பதறியவாறு போய் ஆதியை “மச்சான்” என்று அவன் கைகளை தொட்டு உலுக்கினான்.
அதற்கு களைந்த ஆதி வசந்தனிடம் “என்னடா போட்டு இப்படி உலுக்குற. என்ன விஷயம்” என்றான். அதற்குள் அரவிந்த் வசந்தனிடம் “அது ஒண்ணுல்ல தம்பி. சந்தியா பேய் உன்ர மச்சான அடிச்சிருச்சு. அதான்” என்றான்.
அதற்கு ஆதி அரவிந்தை முறைத்து கொண்டே விஜய்யிடம் சந்தியாவின் எக்ஸாம் டேட்டை சொன்னான்.
விஜய் “அப்ப இனிமே காலேஜ் போக வேண்டான்னு சொல்லு. உன் தங்கச்சியையும் போக வேண்டான்னு சொல்லிடு. ரெண்டு பேருமே எக்ஸாம்க்கு மட்டும் போகட்டும். அப்புறம் இது ஒரு ஜிபிஸ் வித் வாய்ஸ் ரெக்கார்டர் மெஷின். இத உன் வைப்கிட்ட கொடுத்து, அவங்க ஆர்னமெண்ட் இல்ல டிரஸ் எதுல வேணா பிக்ஸ் பண்ணிக்க சொல்லு. எப்பவும் அவங்க கூடவே இருக்கணும். வீட்ல தான இருக்கோம். அதனால கழட்டி வச்சிருவோம்ன்னு அலட்சியமா இருக்க கூடாது. பாத்துக்க. மாக்ஸிமம் அவங்கள வெளில விடாம பாத்துக்க” என்றான்.
அரவிந்த் “இதுக்கு என்னதாம்பா முடிவு. அந்த தீபனை என்னதான் பண்றது” என்று கேட்டான்.
அதற்கு விஜய் “இப்ப ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரும் அவன்கிட்ட கிளம்பும்போது மிரட்டிருக்கார். இனிமே சந்தியா சைட் போகாம இரு. அதான் உனக்கு நல்லது என்று. அதுக்கு அவன் அவரை பார்த்து முறைச்சிட்டே போயிருக்கான். அவன் அடங்குற மாதிரி தெரியல. அதனால எதாவது பெரிய கேசா வெளியவே வர முடியாத கேசா அவன மாட்டிவிடனும்” என்றான்.
error: Content is protected !!