Skip to content
Post Views: 7,645
ஒரு வாரமாவது தங்கியிருந்து போ என செல்லம்மாள் எத்தனையோ கெஞ்சிப்பார்த்தார். வேலையிருக்கிறது, கிளம்பியே ஆகவேண்டும் என்றுவிட்டான் திருனேஷ்வரன்.
இரவு பதினொரு மணிக்கு புதிய தொழிலுக்கான கலந்தாய்வு இருக்கவே, இரயிலில் செல்ல நேற்றே பதிவு செய்திருந்தான். தற்போது மணியைப் பார்த்தபடி அவசரமாக தயாராகி வெளியே வந்தான்.
“சாப்பிடு திருனேசு” என்று உணவை எடுத்து வைத்தார் செல்லம்மாள்.
“சாப்பிட நேரம் இல்லம்மா, பேக் பண்ணி கொடுங்க, ட்ரைன்ல சாப்பிட்டுக்கிறேன்” என்றபடி தனது மொபைல் சார்ஜரை தேட, அதனை எடுத்து வந்து மகன் கையில் கொடுத்தார் வில்வராஜ்.
Advertisement
வாதம் செய்தால் உணவை வாங்காமல் சென்றிடுவானோ என அனைத்தும் பேக் செய்து மகனிடம் கொடுத்து, “வேலை முடிஞ்சதும் வரியா?” என்றார்.
“பார்க்கலாம்மா”
“இதை செலவுக்கு வச்சிக்கோ திருனேசு” என்று பணத்தை நீட்டினார்.
Advertisement
“காசு இருக்கும்மா” என்று பணத்தை வாங்காமல் கிளம்ப, “காசு எப்படியிருக்கும்?” என வேகமாக மகன் முன்னே வந்து நின்றார்.
Advertisement
“ஜெயில்ல வேலை செய்ததுக்கு சம்பளம் கொடுத்தாங்கம்மா, அது இருக்கு” என்று இருவரிடமும் விடைபெற, “நான் ஸ்டேஷனுக்கு வரேன் திருனேசு” என்றார் வில்வராஜ்.
இரயில் வர இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. காமலாபுரத்திலிருந்து ஜங்ஷன் சென்றடைய அரைமணி நேரத்திற்கு மேலாகும்தான்.
தந்தை அழைத்துச் சென்றால் உதவியாகத்தான் இருக்கும். ஆனாலும் தந்தையின் நலம் கருதி, “வேணாம்ப்பா, வழில யாராவது வந்தா லிஃப்ட் கேட்டு போய்க்கிறேன்” என்று கிளம்பினான்.
Advertisement
*** *** *** *** *** ***
காமலாபுரம் பெரிய டவுன் கிடையாது. நேரத்திற்குதான் பேருந்து வரும் ஆகையால் நண்பனுக்கு அழைக்கலாம் என்று வேக நடையோடு மொபைலை எடுத்தான்.
நண்பன் அழைப்பை ஏற்காமல் போகவே, மீண்டும் அழைக்க நினைத்த நேரம் பைக் சத்தம் கேட்கவே திரும்பினான். அங்கே அசோகன்தான் பொன்மணியை பேருந்து நிலையத்தில் விட வந்துகொண்டிருந்தார்.
பின்னால் பொன்மணி இருப்பது தெரியாமல், அசோகன் மட்டும்தான் வந்துகொண்டிருக்கிறார் என நினைத்து தன்போல் நடக்க ஆரம்பிக்கவே, திருனேஷ்வரன் அருகே பைக்கை நிறுத்தினார்.
பின்னால் அமர்ந்திருக்கும் பொன்மணியைப் பார்த்தவன், “என்னை அப்படியே பிரிவு ரோட்ல விட்டுடுறிங்களா? டைமாகுது” என்றான்.
பைக்கிலிருந்து இறங்கிய பொன்மணி, “அப்பா அவரை கூட்டிட்டு போய் விட்டுட்டு வாங்க, நான் நடந்து வந்துட்டிருக்கேன்” என்றாள்.
“எதுக்கு இரண்டு வேலை? நீ உக்காரு” என்றான்.
பொன்மணி தயங்க, வண்டியிலிருந்து இறங்கிய அசோகன் “பைக்கை ராஜு டீ கடையில விட்டுட்டு சாவியை ராஜுகிட்ட கொடுத்துடுங்க, நான் வாங்கிக்கிறேன்” என்றபடி சாவியை நீட்டினார் திருனேஷ்வரனிடம்.
“பழகாதவங்ககிட்ட என்னை அறிமுகப்படுத்தி, உங்களையும் சொல்லி, பைக் கீயை கொடுக்க எனக்கு லேட் ஆகிடும், நீங்க எங்கையோ கிளம்பியிருக்கிங்க, என்னால உங்க ப்ரோகிராம் கெட வேண்டாம், நான் பார்த்துக்கிறேன்” என்று நடக்கலானான்.
“தம்பி” என அசோகன் பின்னோடு வர, “உங்க பொண்ணு பின்னாடி நான் உக்கார்ந்துக்கிறேன், பிரிவு ரோட்ல விட முடியுமா? அதை மட்டும் சொல்லுங்க” என்றான்.
“சரிங்க தம்பி” என்று மகளைப் பார்த்தார்.
“பஸ்சுக்கு இன்னும் டைம் இருக்குப்பா, நீங்க போய் அவரை விட்டுட்டு வாங்க, நான் இங்கையே இருக்கேன்” என மறுத்தாள்.
“எது வரைக்கும்?”
“சென்னை போகுது தம்பி, உங்ககிட்ட சொல்ல சொன்னேனே” என்று மகளைப் பார்த்தார்.
“சொன்னேன்ப்பா”
“நாளைக்கு போறனுதான சொன்ன?” என முறைத்தவன், “எனக்கும் சென்னைதான் போகனும், “எந்த பஸ் புக் பண்ணியிருக்க?” என்றான்.
அச்சோ நம்மளோட வர நினைப்பாங்களோ என “இ… இல்ல, அது ரொம்ப லேட் ஆகிடும், நைட் ஒன்பது மணிக்கு மேல ஆகிடும்” என்றாள்.
மகள் மருமகனை தவிர்க்க நினைப்பதை புரிந்து, “சேலத்துலயிருந்து சென்னை போக எவ்வளோ நேரமாகும்னு மாப்பிள்ளைக்கு தெரியாதா பொன்மணி?” என்றார்.
“நீங்க புக் பண்ணின பஸ் டைம் என்ன?” என்றான்.
“மூனு மணி” என்றார் அசோகன்.
“சரி நானும் உன்னோடவே வரேன்” என்றதும், அத்தனை மகிழ்ச்சி அசோகனுக்கு.
“அந்த பஸ்ல டிக்கட் ஃபுல்லாகியிருக்கும், ஸ்லீப்பர் பஸ் அது”
“அந்த கவலை உனக்கு வேணாம், நான் பேசிக்கிறேன், உன்னால என்னோட வர முடியுமா முடியாதா?” என்றதும், ஆட்டோ வரும் சத்தம் கேட்க, அதனை நிறுத்தினான் திருனேஷ்வரன்.
“சரிம்மா, சென்னை போனதும் போன் பண்ணு, நான் கிளம்பறேன்” என்று கிளம்பியிருந்தார் அசோகன்.
திருனேஷ்வரனின் இயல்பான பேச்சு, பழிவாங்க திருமணம் என்ற நெருடலை போக்கியிருந்தது. திருனேஷ்வரனின் குடும்பத்தார் நிச்சயம் மகளை ஏற்கமாட்டார்கள்.
திருனேஷ்வரனின் பெற்றோரால் மகள் நிறைய அவமானங்களை சந்திக்க நேரும். இதற்கிடையே பொன்மணியும் திருனேஷ்வரனை ஏற்கும் மனநிலையில் இல்லை, இருவருக்குமான புரிதலுக்கே பல மாதங்கள் ஆகலாம்.
ஆனாலும் அனைத்தையும் மருமகன் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை பிறக்க, இருவரையும் நடு ரோடில் விட்டுவிட்டு தைரியமாக கிளம்பிவிட்டார் அசோகன்.
பொன்மணியினுள் கலவரம் உண்டாக, கண்களும் கலங்கியது. “உக்காரு, டைம் ஆகுது” என்றான்.
வேறு வழியில்லாமல் பொன்மணி ஆட்டோவினுள் அமர, இவனும் ஏறினான். பேருந்து நிலையம் வரும்வரை இருவரும் ஏதும் பேசவில்லை. ஆட்டோவிலிருந்து இறங்கியதும் இவன் பணத்தை எடுக்க பாக்கட்டினுள் கை வைக்க, பொன்மணி பணம் எடுப்பது புரிந்து அமைதியாக நின்றான்.
பொன்மணி பணம் கொடுத்த பின்னே இருவரும் பேருந்து நிலையத்திற்குள் சென்றனர். பொன்மணி முன்பதிவு செய்திருந்த பேருந்து நின்று கொண்டிருக்க, “டிக்கட் இருக்கா அண்ணா?” என்றான்.
“இல்லப்பா, எல்லாம் புக்காகிடுச்சு”
“சரி வேற பஸ்ல போலாம்” என்றான் பொன்மணியிடம்.
“இல்ல, எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு, அதனாலதான் ஸ்லீப்பர் புக் பண்ணினேன், லேப் பார்க்க இந்த பஸ்தான் வசதியா இருக்கும்”
தனது மொபைலிலுள்ள டிக்கட்டை எடுத்து காண்பித்து, “உன்னோட சென்னை வரத்தான் ட்ரைன்ல போகல. வா” என்று ஓரிடத்தில் அமரப் பணித்து “நான் போய் வேற பஸ்ல விசாரிச்சுட்டு வரேன். இங்கையே இரு” என்று இவனின் பையையும் பொன்மணி மடிமீது வைத்துவிட்டு சென்றான்.
பத்து நிமிடங்கள் முடிந்த போதும் படுக்கும் வசதிகொண்ட பேருந்தில் டிக்கட் கிடைக்காமல் போகவே, நேரம் பார்த்தவன், கூகுளில் கார் பார்த்துக்கொண்டு வந்தான்.
பொன்மணி பதிவு செய்த பேருந்தும் புறப்பட இருக்கவே, பொன்மணிக்கு பதட்டமானது.
பேருந்தை கடந்து வரும் திருனேஷை அழைத்து, “தம்பி, அந்த பொண்ணுக்கு நீங்க என்ன வேணும்?” என்றார் டிரைவர்.
“புருஷன்”
“பார்த்தா அப்படி தெரியல, அந்த பொண்ணு பதட்டமா இருக்க மாதிரி இருந்தது, வீட்டுக்கு தெரியாம கல்யாணம் செய்துக்கிட்டிங்களா?” என்றார் விசாரணையாக.
“டிக்கட் இருக்கா சொல்லுங்க, நீங்க கேட்குறதுக்கு பதில் சொல்றேன்” என்றான்.
“டிக்கட் இருக்கு. குடும்பமா புக் பண்ணியிருந்தாங்க, வரலைனு இப்போதான் சொன்னாங்க, இப்போலாம் ஸ்லீப்பர் பஸ்ல நடக்குற அட்டூழியம் இவ்வளோ அவ்வளோனு இல்ல, அதனாலதான் விசாரிக்க வேண்டியதா இருக்கு. அந்த பொண்ணை உண்மையா கல்யாணம் செய்துக்கிட்டியா? இல்ல மிரட்டி கூட்டிட்டு வந்திருக்கியா?”
“என் பொண்டாட்டியையும் கூட்டிட்டு வந்துட்டு பதில் சொல்றேன் ண்ணா” என்றவன்
வேக நடையோடு பொன்மணியிடம் வந்து, “டிக்கட் இருக்காம் வா” என்று தனது பையை தோளில் மாட்டிக்கொண்டு அவளை ஒரு கையிலும், அவளின் பையை ஒரு கையிலும் பிடித்தபடி பேருந்தருகே வந்தவன், “வீட்டுக்கு தெரியாமலாம் கல்யாணம் செய்யலைண்ணா, ஊரே பார்க்கும்படிதான் கல்யாணம் செய்தேன், ஆமாவானு கேட்டுக்கோங்க” என்றான் பொன்மணியை பார்த்தவாறு.
“அப்படியாம்மா?” என்று டிரைவர் கேட்க, பொன்மணியும் ஆமாம் என்பதாய் தலையசைக்க, இருவருக்கும் இருக்கையை காண்பித்தார் டிரைவர்.
இரண்டு பெரியவர்கள், ஒரு சிறியவர் படுக்கும் அளவிலான மேல் இருக்கை அது. டிக்கட்டை வாங்கியவன், கீழே நின்றபடி மேல பைகளை போட்டு, “மேல ஏறிடுவியா? இல்ல ஹெல்ப் பண்ணனுமா?” என்றான்.
“ஏறிடுவேன்” என்று ஏறி அமர்தவளுக்கு அத்தனை பதட்டம். படுக்கும் வசதி கொண்ட பேருந்தில் சென்றிருக்கிறாள்தான். ஆனால் மேல் இருக்கையில் பயணம் செய்ததில்லை.
திரைகளை இழுத்துவிட்டால் தனியறைபோல் இருக்குமே.. இந்த சூழலில் ஆறு மணி நேரம் பயணம் செய்தாக வேண்டுமே என்ற பயத்தில் வியர்த்துவிட்டது பொன்மணிக்கு.
மேலே ஏறியவன், “ஷப்பா… எப்படியோ சீட் கிடைச்சது” என்றான் நிம்மதியாக.
பொன்மணியிடம் பதிலில்லாமல் போக, “தண்ணி வச்சிருக்கியா?” என்றான்.
தனது பையிலிருந்து எடுத்துக்கொடுத்தவள், “உங்களோட என்னால வாழ முடியாது” என்றாள்.
“என் பொண்ணு மணியே… எனக்கும் பஸ்ல வச்சு வாழுற ஐடியா இல்ல. சும்மா உன்னோட பேசிட்டு ட்ராவல் பண்ண மட்டும்தான் நினைச்சிருக்கேன். சும்மா சும்மா வாழ முடியாதுனு சொல்லிட்டிருந்த பஸ்சுனு கூட பார்க்கமாட்டேன் பார்த்துக்க” என்றான் கடுப்பாக.
பொன்மணிக்கு கண்கள் கலங்கிவிட, “மென்ட்டலி ரொம்ப களைச்சி போயிருக்கேன் பொன்மணி, எதாவது பேசி இன்னும் என்னை களைக்க வைக்காத” என்றான் சலிப்பாக.
அத்தனை தாகத்தோடு தண்ணீர் கேட்டவன் இன்னும் அதை குடிக்காமல் இருக்க, “தண்ணி குடிங்க” என்றாள்.
“ம்…” என்று தண்ணீர் குடித்தவன், “சின்ன ஹெல்ப் பண்றியா?” என்றான் கெஞ்சலாக.
பொன்மணி தலையசைப்பில் சம்மதிக்க, “என் பேக்ல சாப்பாடு இருக்கும், எடுத்து கொடேன், பசிக்குது” என்றான்.
திருனேஷ்வரனின் பையை திறக்கவே அத்தனை சங்கடம் கொண்டாள் பொன்மணி. அவளின் முகத்தை பார்த்தே புரிந்தவன், “சீக்கிரம், பசிக்குது” என்றான்.
பிறகு வேகமாக பையை திறந்து உணவடங்கிய பாத்திரத்தை எடுத்து கொடுத்தாள். “ம்ப்ச்… இப்படி எடுக்க எனக்கு தெரியாதா? எல்லாத்தையும் ஓபன் பண்ணி சாப்பிடற மாதிரி வை” என்றான்.
பொன்மணி பாத்திரத்தை திறக்க, சிறிய கரண்டியும் இருக்கவே, “ஓ… ஸ்பூன் வச்சிருக்காங்களா? அப்போ ஓகே” என்று சாப்பிட ஏதுவாக அமர்ந்து, ஒரு வாய் உணவை உண்டு, “நீ சாப்பிட்டியா?” என்றான்.
சாப்பிட்டேன் என்பதாய் தலையசைக்க, “ஆனாலும் உன்னை பார்க்க வச்சிட்டு சாப்பிட ஒரு மாதிரி இருக்கு. ஒரு வாய் சாப்பிடேன்” என்றவன் நொடி நேரத்தில் அவளின் வாயில் உணவை திணித்தான்.
திருனேஷ்வரனின் திடீர் செயலில் பொன்மணிக்கு புரையேறிட, இருமியதில் சோற்றுப்பருக்கைகள் தெறித்து திருனேஷ்வரனின் முகத்தில் பட்டு அங்கேயே தங்கியது.
அவளின் தலையில் தட்டிவிட்டவன், “தண்ணி குடி முதல்ல” என்று பாட்டிலை நீட்ட, தண்ணீர் வாங்கி குடித்தாள்.
“இப்போ பரவால்லையா?”
“ம்” என்றவள், “முகத்தை துடைங்க” என்றாள்.
தனது முகத்தில் சோற்றுப்பருக்கைகள் ஒட்டியிருப்பது திருனேஷ்வரனுக்கும் தெரிகிறதுதான். அப்படியாவது தனது முகத்தை பார்ப்பாளா என்ற நினைப்பில் அதனை துடைக்காமல் இருந்தான்.
“இல்லையே… நானொன்னும் வழியலையே, உனக்கு அப்படியா தெரியுது?” என்றான் குறும்பாக.
தலை கவிழ்ந்தவளுக்கு அழுகைதான் வந்தது.
“உன் எச்சில் பட்ட சோறாவது ஒட்டிட்டிருக்கட்டும்னு நினைச்சேன், அதுவும் உனக்கு பிடிக்கலயா? இதோ துடைச்சிடறேன்” என முகத்தை துடைதவன், “சரி நான் ஊட்டல, நீயே சாப்பிட்டுக்கோ” என்று ஒரு பாகத்தை அவள் பக்கம் நகர்த்தினான்.
“நான் சாப்பிட்டுத்தான் வந்தேன், நீங்க சாப்பிடுங்க”
மாலை ஆறு மணிபோல் பஸ் எங்கையாவது நிற்கும், அப்போ எதாவது வாங்கிக்கொடுக்கலாம் என நினைத்தபடி உணவுண்டு முடித்து அனைத்தையும் எடுத்து வைத்து படுத்தான் ஆயாசமாக.
“எனக்கு உங்ககிட்ட பேசனும்”
ஷப்பா… வாழ முடியாது அது இதுனு இவ ஒப்பாரியை தாங்குற சக்தி இப்போதைக்கு இல்லைடா, பேச ஆசைப்பட்ட… மாட்டிக்குவ என்று நினைத்தவன், “எனக்கு தூங்கனும், எதோ ஒர்க் இருக்குனு சொன்னல்ல? அதை பாரு, ஏழு மணிபோல பேசலாம்” என்று கண்மூடிக்கொண்டான்.
error: Content is protected !!