Skip to content
Post Views: 7,005
அத்தியாயம் 11
“எதுக்கும்மா இத்தனை முறை போன் பண்ணியிருக்கிங்க?”
“சென்னை போய்ட்டியா இல்லையானு தெரிஞ்சுக்கதான் திருனேசு”
Advertisement
“வந்துட்டேன்ம்மா, முக்கியமான வேலையிருக்குனுதான் அவசரமா கிளம்பி வந்தேன், குளிச்சிட்டு வரதுக்குள்ள இத்தனை முறை கால் பண்ணியிருக்கிங்க, அப்பாக்கு என்னவோனு பயந்தே போய்ட்டேன். எதாவது முக்கியமான விசயம்னா மட்டும் கால் பண்ணுங்கம்மா” என்று இணைப்பை துண்டித்தான்.
அடுத்து ரூபலஷ்மியிடமிருந்து அழைப்பு வர, ஏற்றதும், “வீட்டுல இருக்க போல, வந்ததும் கால் பண்ணமாட்டியா? உன் அப்பாம்மா எப்படி இருக்காங்க?” என்றார் பேச்சை வளர்க்க.
“என்னை வாட்ச் பண்ண தனியா ஆளே போட்டுட்டிங்களா?” என சலிப்பானவன், “முக்கியமான வேலையிருக்குங்க மேடம், நாளைக்கு பேசுறேன்” என்று இணைப்பை துண்டித்து, தயாராகி கிளம்பினான் அலுவலகத்திற்கு.
Advertisement
சரியாக பத்தரை மணிக்கு திருனேஷ்வரன் அலுவலகத்தினுள் நுழைய, “வா வா திருனேஷ், டைம்க்கு வராம போய்டுவியோனு பயந்துட்டேன்” என்று நிம்மதியோடு வரவேற்றார் சுந்தரம்.
Advertisement
“ஹம்… ராஜ்குமார் எங்கே? ப்ரிப்பேர் ஆகிட்டாரா? வர சொல்லுங்க, நான் செக் பண்ணனும்” என்று கட்டளையிட்டவன், “ஷேர் பேப்பர்ஸ் எடுங்க” என்றான்.
ஷேர் அனைத்தும் முறைப்படி தயாராக இருக்க, இரண்டு நிமிடம் படித்துப்பார்த்தவன், ஒப்பந்த பத்திரத்தில் ராஜ்குமாரின் கையொட்பம் இருக்கிறதா என்றும் பார்த்து “தேங்க் யூ சார்” என்று கையொட்பமிட்டான்.
திருனேஷ்வரனின் செயலை பார்த்திருந்த ராஜ்குமார், இவனென்ன எம்.டி மாதிரி ஆர்டர் பண்றான். என்னை செக் பண்ணுவானா? என்ற கடுப்போடு வந்தான்.
Advertisement
ராஜ்குமாரின் உடையைப் பார்த்தவன், “இதென்ன டிரஸ்? ஃபார்மல் போடனும்னு கூடவா தெரியாது? சொல்லமாட்டிங்களா சார்?” என்று சுந்தரத்திடம் கடுகடுத்தான்.
“நான் எப்படி டிரஸ் பண்ணனும்னு நீ சொல்லாத”
“என்ன? என்ன சொன்ன?”
“சாரி… நீங்க சொல்லாதிங்க”
“கால் மீ சார்… ஒகே” என்று கட்டளையிட்டு, “ஒகே… நீங்க எப்படி டிரஸ் பண்ணனும்னு இனி நான் சொல்லமாட்டேன்” என்று, “க்ளைன்ட் முன்னாடி சரியா பேசிடுவிங்கதான?” என்றான்.
“பேசிடுவேன், பேசிடுவேன்” என்றான் மிதப்பாக.
“ஒருமுறை என்கிட்ட பேசி காட்ட முடியுங்களா?”
“இதென்ன ஸ்கூல் டிராமா ரிகர்ஸல் மாதிரி?”
ராஜ்குமாரை விடுத்து சுந்தரத்திடம் “சார் உங்க மருமகனுக்கு சில விசயங்கள் சுட்டுபோட்டாலும் வராது போல, அதுல முதல் விசயம் மரியாதை கொடுக்குறது.
இவர் இப்படி ஒருமையில பேசுறது எனக்கு மட்டும்தான் அசிங்கம்னு நினைச்சிட்டிருக்கார். ஆனா அது அவருக்குத்தான் அசிங்கம்ன்றதை போகப்போக புரிஞ்சிப்பார்” என்று மற்ற விசயங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று அந்த ஹாலை பார்வையால் அளவெடுத்துக்கொண்டிருந்தான்.
பெய்ஜ் கலரில் கியூஸி சர்ட்டும், டார்க் ப்ரௌன் கலரில் லெனின் பேண்ட்டும் அணிந்திருந்தான் திருனேஷ்வரன். தனது தாடியை மட்டும் சீராக மாற்றியிருந்தான். மற்றபடி அதே அடர்ந்த மீசை, நீண்ட புருவங்கள் என திருனேஷ்வரனின் முகத்தையே உற்று பார்த்திருந்தான் ராஜ்குமார்.
அன்று பார்த்தபோது இத்தனை தேஜஸ் இருந்ததா? இல்லை நாம் கவனிக்க தவறிவிட்டோமா? இவன் சொன்னது போல உடையில் மனைவி பேச்சை கேட்டிருக்க வேண்டுமோ? இவன்தான் எம்.டி போல இருக்கான். நம்மை கீழாக பார்ப்பார்களோ? என்று ராஜ்குமார் யோசித்திருக்க,
“அன்னைக்கு எதோ டெளட்னு சொன்னிங்களாம்? எதாவது கேட்கனும்னா கேட்டுக்கோங்க, இன்னும் பத்து நிமிஷத்துல மீட்டிங் ஸ்டார்ட் பண்ணனும்” என்றான்.
“இல்ல, ஏதும் டெளட் இல்ல” என்றான்.
“இந்த ப்ராஜக்ட் கிடைக்கிறது சாதாரண விசயமில்ல, சுந்தர் சாரால இது சாத்தியமாச்சு. அதேபோலத்தான் ப்ராஜக்ட்டை தக்க வைக்கிறதும். சின்ன சின்ன விசயமும் பார்ப்பாங்க, ப்ராஜக்ட் கை விட்டு போச்சுனா லாஸ் இதோட போகாது. திரும்ப வேற ப்ராஜக்ட் கிடைக்கிறதும் ரொம்ப ரொம்ப கஷ்டம். கேர்ஃபுலா பேசனும், கேஷ்வலாவும் பேசனும். ஓகே” என்றான்.
சுந்தர் அருகிலிருக்க, திருனேஷ்வரன் பேச்சினை ஆமோதிப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை ராஜ்குமாருக்கு. எரிச்சலை உள்ளடக்கி சரி என்பதாய் தலையசைத்தான்.
அதற்கும் “தஞ்சாவூர் பொம்மை மாதிரி எதுக்கு இத்தனை முறை மண்டையை உருட்டுறிங்க? எஸ் சொல்ல சின்னதா ஒருமுறை தலையசைச்சா போதும்” என்றான்.
மீட்டிங் ஆரம்பமாக இன்னும் சில நொடிகளே இருக்க, ராஜ்குமார் நிச்சயம் சொதப்புவான், அவனை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டான்.
பிறகு திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் மீட்டிங் ஆரம்பமானது. முதலில் சுந்தர் பேசி, பின்னே ராஜ்குமாரை அறிமுகப்படுத்தினார். பிறகு திருனேஷ்வரனை அறிமுகப்படுத்தினார்.
பத்து நிமிடம் அவர்களின் அறிமுகத்திற்கு பின்னே, ப்ராஜக்ட் செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம், மற்றும் அதற்காக இவர்கள் கேட்கும் தொகையைப் பற்றிய பேச்சு மட்டும்தான் ராஜ்குமார் பேசவிருப்பது.
திருனேஷ்வரன் நினைத்தது போலவே ராஜ்குமார் பேச்சு த்வணி இருக்க, எதிரில் இருந்தவர்கள் முகம் அதிருப்தியை காட்ட, சுந்தரத்திற்கு பதட்டமானது.
ப்ரைமரி ஸ்கூல் ஸ்டூடண்ட் போல் ஒப்பிச்சிட்டிருக்கான் என்று அவர்கள் ஜெர்மன் மொழியில் கலந்தாலோசித்துக் கொண்டிருக்க,
ராஜ்குமார் கம்பெனியின் ஒரு பங்குதாரர். ப்ராஜக்ட் பற்றிய விபரங்களை நான் சொல்கிறேன் என்று ஜெர்மன் மொழியில் பேச ஆரம்பித்தவனின் பாவனையில் அசந்துதான் போனார்கள் அனைவரும்.
திருனேஷ்வரன் பேச ஆரம்பித்துவிட்டான், இனி தொழிலை வசப்படுத்தாமல் விடமாட்டான் என்று சுந்தரத்திற்கு தற்போதுதான் நிம்மதியானது.
மூன்று பேர் மட்டுமே வேலை செய்யும் கம்பெனியா? அதிலும் ராஜ்குமாரைப் போல் ஒருவனை வைத்துக்கொண்டு எப்படி வேலையை முடிப்பீர்கள் என்று நிறைய கேள்விகள் எழுந்தது.
அனைத்து கேள்விகளுக்கும் கவர்ந்திழுக்கும் வகையில் திருனேஷ்வரனின் பதில் இருக்க, இரண்டு மணிநேர பேச்சு வார்த்தைக்கு பின்னே எல்லாம் சுமூகமாக முடிந்து, ப்ராஜக்ட் கை வசம் வந்தது.
மீட்டிங் முடிந்த பின்னே, “ஸ்கூல் பசங்க ரைம்ஸ் ஒப்பிக்கிற மாதிரி இருக்குனு சொல்லிட்டிருக்காங்க, அது புரியாம முகத்துல அவ்வளோ பெருமையை காட்டுற” என்று ராஜ்குமாரை திட்டி,
“கமிட் ஆன ஒர்க்கை முடிக்காம விடமாட்டேன், ஆனா பணத்துக்காக இங்கேயே இருந்துடுவேனு நினைச்சிடாதிங்க சார், இங்க இருக்கவேண்டாம்னு எப்போ தோணினாலும் விலகிடுவேன், எல்லாம் தெரியும்ன்ற நினைப்பை மாத்தி உங்க மருமகனை கொஞ்சமாவது கத்துக்க சொல்லுங்க” என்று சுந்தரிடம் சொல்லி,
பின்னே இருவரிடமும், “அவங்க கொடுத்த டைம்க்குள்ள ப்ராஜக்ட் முடிக்க இன்னும் ஆறேழு பேராவது தேவைப்படும், நல்ல ஸ்கில் இருக்கவங்க யாராவது தெரியும்னா நாளைக்கே அப்பாயிண்ட் பண்ணப் பாருங்க, காலைல பத்து மணிக்கு வரேன். குட்நைட்” என்று சொல்லி கிளம்பினான்.
*** *** *** *** *** ***
பசியெடுக்கவே நேரம் பார்த்தான். நள்ளிரவு ஒரு மணியை காட்டியது. கடையை தேடியபடி மெதுவாக பைக்கில் வந்துகொண்டிருந்தான்.
அரைமணி நேர பயணத்திற்கு பிறகு சிறிய ரெஸ்டாரண்ட் இருந்தது. அங்கே சென்று கேட்க, ஃபாஸ்ட்புட் வகைகள்தான் இருக்கிறது என்றனர்.
அதை உண்ண பிடிக்காமல் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகே உள்ள டீ கடையை நினைத்தபடி வந்தான் பத்து நிமிடத்தில். இரண்டு வாழைப்பழம் உண்டு டீயை பருகி பின்னே வீட்டிற்கு வந்தான்.
வீட்டிற்கு வந்து உடை மாற்றியதும் ‘எங்க போன? எனக்கு தெரியாம எதாவது செய்து பிரச்சனைல மாட்டிக்காத, இனி எங்க போனாலும் சொல்லிட்டு போ. சாப்பிட்டியா? இல்ல எதாவது ஆர்டர் போட்டு விடட்டுமா?’ என்று ரூபலஷ்மியிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
சலிப்பாக நினைத்தபோதும், ‘சாப்பிட்டேன், ஒரு நல்ல ஜாப் கிடைச்சிருக்கு, அதுவிசயமாத்தான் வெளில போயிருந்தேன், மத்த விசயத்தை காலைல சொல்றேன். குட்நைட்’ என்று பதில் செய்தி அனுப்பி கட்டிலில் சாய்ந்தான் ஆயாசமாக.
அடுத்தநாள் காலை எட்டு மணிபோல் ரூபலஷ்மியிடமிருந்து அழைப்பு வந்தது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவன் முயன்று கண்விழித்து, அழைப்பை ஏற்றான்.
“லேட் நைட்தான் தூங்கின, தூங்கிட்டிருப்பனு தெரியும், எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகுதுனுதான் கால் பண்ணினேன்”
“என்ன விசயம் சொல்லுங்க மேடம்”
“உன்னை பார்த்து நாலு நாள் ஆச்சு திருனேஷ்வரன்”
“உங்க புருசனைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சுனு முதல்ல யோசிங்க, நான் வைக்கிறேன்” என்று இணைப்பை துண்டிக்க, தங்கையிடமிருந்து இரண்டு அழைப்புகள் வந்திருந்தது.
சற்று நேரத்தில் கல்லூரிக்கு கிளம்பிடுவாள் என்று தங்கைக்கு அழைக்க, “அண்ணா” என்றாள் நிறைந்த அன்போடு.
தங்கையின் அழைப்பில் ரூபலஷ்மியால் உண்டான எரிச்சலெல்லாம் காணாமல் போய்விட, “என்னடா காலைலயே போன் பண்ணியிருக்க? காலேஜ்க்கு டைமாகலயா?” என்றான் கனிவாக.
“இன்னும் ஒன் ஹார் இருக்குண்ணா, நீங்க எங்க இருக்கிங்க? இந்த வீக் என்னை பார்க்க வரேனு சொல்லியிருக்கிங்க”
“ம் நியாபகமிருக்கு, முடிஞ்சா சன்டே வரேன், இல்லைனா வீக் டேஸ்ல கூட ஈவ்னிங் டைம்ல வரேன்”
“சென்னைக்கு வந்துட்டிங்களா?”
“வந்துட்டேன்”
“நேத்து கல்யாணம் ஆகி இன்னைக்கே சென்னை வந்துட்டிங்களா? பொன்மணி அக்காவுமா? ச்சு… இல்லயில்ல அண்ணியுமா?”
சின்னதாய் சிரித்தவன், “அவளும்தான் வந்தா, ஆனா என்னோட இப்போ இல்ல, பொன்மணியும் சென்னையிலதான் ஒர்க் பண்றாளாம், அதுக்காக வந்துருக்கா” என்றான்.
“ஓஹ்” என்ற குரல் சோர்வாய் ஒலிக்க, “என்ன சடர்னா வாய்ஸ் டல்லாகிடுச்சு?” என்றான்.
“இல்ல… இனி அண்ணி உங்ககூடதான் இருப்பாங்க, அதனால என்னை பார்க்க வரும்போது அண்ணியையும் அழைச்சிட்டு வருவிங்கனு நினைச்சேன். அவங்கதான் உங்க கூட இல்லையே” என்றாள் ஏமாற்றமாக.
தங்கையின் ஆசையை நிறைவேற்ற பொன்மணியை மிரட்டி அழைத்து சென்றிடலாம். ஆனால் நேற்று பயணத்தின் போது, திருனேஷ்வரன் கேட்ட அத்தியாவசியமான விருப்பத்தை பொன்மணி மறுத்திருந்தாள்.
உதவி கேட்கும்போதே பொன்மணி மறுப்பாள் என்று தெரிந்தேதான் கேட்டான். ஆனாலும் சிறு சங்கடமுமில்லாமல் அவள் மறுத்தது கோபத்தை உண்டாக்கியிருக்க, இந்த சூழலில் தங்கையிடம் அழைத்துப் போனால் தன்னிடமிருந்து பிரிய தங்கையிடமே ஆலோசனை கேட்பாள் என்று தற்போதைக்கு தங்கையிடம் அழைத்து செல்லும் நினைப்பை தள்ளிவைத்தான்.
தன் மீதான அவளின் குற்றவுணர்வை விட, அவள் மீது நான் கொண்ட காதல் பெரிதென அவளுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும் என நினைத்திருந்தான்.
நேற்றிலிருந்தே பொன்மணி மீது மயக்கத்திலிருந்தவனுக்கு தற்போதைய தங்கையின் பேச்சு பொன்மணி மீதான ஆர்வத்தையும் ஆசையையும் அதிகரிக்க செய்ய, தங்கையிடம் பேச மறந்திருந்தான்.
“அண்ணா லைன்ல இருக்கிங்களா?” என்றாள் வெண்பா.
“ம்… இருக்கேன்” என்று சுதாரித்தவன், “என் கல்யாணம் யாருக்குமே விருப்பமில்லை வெண்பாம்மா, மத்தவங்களைப் பத்தி கூட பிரச்சனையில்லை, பொன்மணிக்கே விருப்பமில்லைன்றதுதான் பிரச்சனை.
அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கனும்னு தோணுது. இந்த முறை நான் மட்டும் வரேன். கூடிய சீக்கிரம் பொன்மணியை அழைச்சிட்டு வரேன். சரியா?” என்றான்.
“ஓகே ண்ணா, ஈவ்னிங் கால் பண்றேன், காலேஜ்க்கு டைம் ஆகுது” என்று இணைப்பை துண்டித்தாள்.
“முட்டைகண்ணி… தாலி கட்டி இரண்டே நாள்ல என்னை சுத்த விடுறியா? வீடு பார்க்கலாம்னு கேட்டதுக்கு வேணாம்னு சொல்லிட்டல்ல? எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு இருக்குடீ ஒரு நாளைக்கு… ச்சு… ஒரு நாளைக்கு இல்ல, தினம் தினம் என் பின்னாடி சுத்தவிடனும்” என்று முணுமுணுத்தவாறு குளியலறை சென்றான்.
error: Content is protected !!