Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவள் என் பொன்னெழில்

அவள் என் பொன்னெழில் 16.2

“நீங்க அந்த மைண்டல இல்லைனு எனக்கு தெரியும்”

சிரித்தபடி, “அப்படியா? உனக்கு தெரியுதா?” என்று பாராட்டியபடி அவளிடம் வந்தவன், “சொல்ற விசயமா இருந்தா உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப்போறேன்?” என்று கனிவாக சொல்லி, “நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எனக்கு ஏதும் பிரச்சனை வராது. பத்து பேர் சேர்ந்து வந்தாலும் அடிச்சி த்வம்சம் பண்ணிடுவேன், பயப்படாத” என்றான்.

“நேரா வந்தா அடிச்சிடுவிங்க, ஆனாலும் எதோ ரொம்ப பயமாயிருக்கு” என்றாள்.

“என்ன பயம்? எதுக்கு பயம்? என்மேல நம்பிக்கையில்லையா? இத்தனை முறை சொல்றேன்தான?” என்றான் கோபத்தோடு.



Advertisement

பயப்படக்கூடாதாம், ஆனா என்ன பிரச்சனைனு சொல்லமாட்டாராம். பயப்படாம எப்படி இருக்க முடியும்? என ஆற்றாமையோடு நினைத்துக்கொண்டிருக்க, தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது பொன்மணிக்கு.

“அப்பா” என்றாள் அன்பை தேக்கி.

“என்னடா பண்ணிட்டிருக்க?”

Advertisement

“சும்மாதான்ப்பா இருக்கேன், சாப்பிட்டிங்களா?”

Advertisement

“ம் ஆச்சு, நீ சாப்பிட்டியா? என்ன சாப்பிட்ட?”

“இட்லி, சிக்கன்ப்பா”

“மருமகன் இருக்காரா?”

Advertisement

தந்தையின் மனதை தேற்ற வேண்டி, “இல்லப்பா அரைமணி நேரத்துல வந்துடறேனு சொல்லிட்டு வெளில போயிருக்கார்” என்றாள்.

“நானும் அம்மாவும் ஒரு வாரத்துக்கு எங்கையாவது வெளில போலாம்னு இருக்கோம்டா”

“சூப்பர்ப்பா, போய்ட்டு வாங்க” என்றாள் மகிழ்வோடு.

“சத்யப்ரகாஷ் விசயத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா இருடா, மாப்பிள்ளைக்கிட்டயும் சொல்லு, எதாவது பண்ணி வைக்கப்போறான்” என்றார் கவலையாக.

“அவனைப் பத்தின கவலையை விடுங்கப்பா, அவனால என்னையும் என் புருசனையும் ஒன்னும் பண்ண முடியாது” என்றாள் அதீத தைரியத்தோடு.

பெரிய மகளால் உண்டான ஆதங்கத்தை சின்ன மகளிடம் கொட்டத்தான் அழைத்தார். ஆனால் ஐந்து வருடம் கழித்து தற்போதுதான் சற்று நிம்மதியாக இருக்கிறாள் என்றும் தயங்கியது மனது.

மருமகன் அரைமணி நேரத்தில் வருவதாய் சொல்லிச் சென்றிருக்கிறார். நான் எதாவது பேசி அது பொன்மணியின் மனநிலையை குலைத்துவிட்டால் என்ன செய்வதென, “சரிடாம்மா, எந்த ஊருக்கு போறோம்னு முடிவு பண்ணிட்டு போன் பண்றேன்” என்று இணைப்பை துண்டித்தார்.

கலையைப் பற்றி பேசத்தான் அழைத்திருப்பார் என தந்தைக்கு அழைத்தவள், “கலையைப் பத்தி ரொம்ப யோசிக்காதிங்கப்பா” என்றாள்.

“யோசிக்காம இருக்க முடியலையேடா” என்றவர் குரல் உடைந்திருந்தது.

“அவளும் நிம்மதியில்லாமத்தான்ப்பா இருப்பா, சீக்கிரம் உங்க அன்புக்கு ஏங்கி வருவா” என்றாள்.

அசோகன் அமைதியாக இருக்க, “வந்தா ஏத்துக்கமாட்டிங்களாப்பா?” என்றாள் கவலையாக.

“அதை அப்போ பார்க்கலாம்டா, நான் வைக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தார்.

தந்தையை தேற்றும் மகளை ஆசையாய் திருனேஷ்வரன் பார்த்திருக்க, “அது… நீங்க பக்கத்துல இல்லைனு சொன்னாத்தான் பேசுவார், இல்லைனா மருமகனை பாருனு வச்சிருப்பார். அதான் அப்படி சொன்னேன்” என்றாள்.

“ஹேய்… எனக்கு புரிஞ்சது, எதுக்கு இவ்வளோ எக்ஸ்ப்ளனேஷன்?”

“இல்ல… பொய் சொல்றேனு தப்பா நினைச்சிட்டிங்கனா?” என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட, குரலும் திணறியது.

“பொன்மணி” என்று அதட்டலிட்டான் அதீத கோபத்தோடு.

“சா… சாரி, அஞ்சு வருசத்துக்கு முன்னாடி சொன்ன பொய்யால உண்டான மன உளைச்சல், பாதிக்கப்பட்டவர் முன்னாடியே திரும்பவும் பொய் பேசுற நிலைமை வந்ததும்”

“நிறுத்திறியா?”

பொன்மணி தலை குனிய, “அப்போவே உன்னை நான் தப்பா நினைக்கல, இப்போ எப்படி நினைப்பேன்? இப்படி பேசி உன்னை நீயே அசிங்கப்படுத்திட்டிருந்த… அவ்வளோதான் பார்த்துக்க” என்றான் அதட்டலாக.

“இனிமே நீங்க தப்பா நினைப்பிங்கனு யோசிக்கமாட்டேன்”

நிம்மதியானவன், “கொஞ்ச நேரம் படு, எனக்கும் ஒர்க் இருக்கு” என்று லேப்டாப்பை எடுத்தான்.

பத்து மணிபோல் வேலை செய்ய ஆரம்பித்தவன் இரண்டு மணியாகியும் வேலை செய்துகொண்டிருந்தான்.

பதினொரு மணிபோல் டீ வைத்து கொடுக்க, “ம்ப்ச் கேட்காம எதுக்கு வச்ச?” என்று அதட்டிலிட்டபடி குடித்து வேலையை தொடர்ந்தான்.

“ஏங்க… மணி இரண்டாகிடுச்சு, சாப்பிட்டு வேலை பாருங்க” என்றாள்.

“நீ சாப்பிடு, நான் வரேன்” என்றபடி வேலையை தொடர, “தனியா சாப்பிடறதுனா இங்க எதுக்கு செய்துட்டு வரனும்?” என்றாள் முறைப்போடு.

“டென் மின்ட்ஸ்” என்றவன் ஒரு மணிநேரமாகியும் உண்ண வரவில்லை. பிறகுதான் பொன்மணிக்கு பசிக்குமோ என்று தோன்ற, “நீ சாப்பிடு” என்றவன், “சரி எடுத்து வை, இரண்டு பேரும் சாப்பிடலாம்” என்றான்.

பொன்மணி எடுத்து வைக்கவே அப்படியே உண்ண வந்தான். “லேப் ஷட்டவுன் பண்ணிட்டு கை கழுவிட்டு வாங்க” என்றாள்.

“டென் மினிட்ஸ்ல திரும்ப ஓபன் பண்ணனும், அப்படியே இருக்கட்டும்” என்று கை கழுவி வந்து உண்ண ஆரம்பித்தவன், “நிஜமா செம்மையா இருக்கு பொண்ணுமணி” என்று ரசித்து உண்டான் பிரியாணியை.

“தென்றல் ஸ்வாதி சாப்பிட்டாங்களா? அவங்களுக்கும் வச்சிட்டு வந்திருக்கியா? இங்கையே இவ்வளோ எடுத்துட்டு வந்திருக்க?”

“அவங்களுக்கு மட்டன் பிடிக்காதாம், சிக்கன்தான் சாப்பிடுவாங்க, அதுவும் காலைல நான்வெஜ் சாப்பிட்டா மதியம் சாப்பிடமாட்டாங்களாம், அரைகிலோ கறி, அரைகிலோ அரிசிதான் போட்டேன், முழுசா காலி பண்ணிட்டுதான் எழனும்” என்றாள்.

“இப்படி சாப்பிட்டா நீ கர்ப்பம் ஆகும் முன்னாடி, என் வயிறு கர்ப்பினி வயிறு போல ஆகிடும்” என்று சிரிக்க, பொன்மணி முகம் சிவந்தது.

“சொல்றதுக்கே முகம் சிவக்குமாடீ” என ரசனையாக சொன்னவன், “சீக்கிரம் குழந்தை பெத்துக்கிற ஐடியா இருக்கா? இல்ல இரண்டு வருசம் கழிச்சு, ஒரு வருசம் கழிச்சு பெத்துக்கலாம்னு ப்ளான் எதாவது இருக்கா?” என்றான்.

“முதல்ல சாப்பிடுங்க, அதை அப்புறம் பேசலாம்” என்று தானும் உண்ண ஆரம்பித்தாள்.

தன்னை தானே கீழ்ப்படுத்திப் பேசினால் கோபப்படுகிறான். தன் மீதுள்ள கோபத்தை இழுத்து பிடிக்காமல் வேலையில் கவனம் செலுத்தி சரி செய்கிறான் என்று திருனேஷ்வரனையே பெருமையாய் பார்த்திருந்தவள், அவனின் வசீகர தோற்றத்தை ரசித்துப் பாரக்க ஆரம்பித்தாள்.

“என்னடீ அப்படி பார்க்குற?” என்று கேட்க,

“எவ்வளோ வேஸ்ட் பண்றிங்க? அந்த எலும்பை கடிச்சு சாப்பிடுங்க” என்றாள்.

தன்னை ரசிக்கிறாள் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றமாகிட, “எப்படி சாப்பிடறேனுதான் பார்த்துட்டிருந்தியா? எலும்பை கடிக்க நானென்ன ராஜ்கிரன் சாரா? சின்ன வயசுலயிருந்தே எலும்பு சாப்பிடமாட்டேன்” என்றான்.

“இனி பழகிக்கோங்க”

“சரிங்க” என்றபடி உண்டு முடித்தவன் மீண்டும் தனது வேலையை தொடர்ந்தான்.

எப்படியோ… இருக்கும் பிரச்சனைகளை மறந்து வேலை செய்கிறானே என நினைத்தாள் நிம்மதியோடு. ஆனாலும் திருனேஷ்வரன் தங்கியிருக்கும் வீட்டில் என்ன பிரச்சனை இருக்கும்? என்ற கவலை மனதை அரித்துக்கொண்டேதான் இருந்தது.

மாலை ஆறு ஆகிடவே, முகம் கழுவி, மீண்டும் டீ வைத்து கொடுத்தவள், “நைட்டுக்கு என்ன வேணும்? இங்க செய்ய முடியாது, வீட்டுக்கு போய் செய்து எடுத்துட்டு வரேன்” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம், உனக்கு எதாவது வேணும்னா ஆர்டர் பண்ணிக்கோ, வீட்டுக்கு போகக்கூடாது” என்றான்.

“இங்க தங்கனும்னா முன்னவே சொல்லியிருக்கனும், எனக்கு இப்படியேலாம் தூங்க முடியாது, நைட் சூட் வேணும், இல்லைனா தூக்கமே வராது” என்றாள்.

“தூங்க வேணாம்” என்றான் குறும்பாக.

இமைகள் படபடக்க, தலைகுனிந்து தன்னை சமன் செய்ய முயற்சித்து, “வேணாம், உங்க மூட் சரியில்ல, கொஞ்ச நாள் போகட்டும்” என்றாள்.

வாய் சொன்னபோதும் திருனேஷ்வரன் ஏமாந்துவிடுவானோ என்ற கலக்கமும் இருக்கவே அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.

ஏழு மணிபோல் லேப்டாப்பை அணைத்து வைத்தவன், “வரேன் இரு” என்று வெளியில் சென்று, அரை மணிநேரம் கழித்து வந்தான்.

“நைட் சூட் கேட்டதான? போய் சேன்ஜ் பண்ணிட்டு வா” என்று கொடுக்க, வாங்கிப் பிரித்தவள் முறைத்தாள் கணவனை.

இரவு உடை அத்தனை சன்னமாக இருக்க, “என்ன முறைக்கிற? கல்யாணம் ஆகி ஒன்றரை மாசமா கட்டினவனை காய விட்டவளுக்கு இதுவே கொடுக்கக்கூடாது” என்றவன் அவளிடமிருந்து அதை பறித்து ஓர் மூலையில் வீசி, அள்ளிச் சென்றான் தனியறைக்கு.

“முன்னாடி கதவு தாழ் போட்டுருக்கா? விடுங்க என்னை, நானே வருவேன்” என்று திமிற, “தாழ் போட்டுட்டேன்” என்றபடி மெத்தையில் இறக்கி விட்டவன் மேலுடையை கழற்றி பொன்மணியிடம் நெருங்க, “லைட் அணைங்க” என்றாள்.

“இந்த நேரம் என் பொண்டாட்டியை தவிர வேற எதையும் அணைக்காது என் கை” என்றான் தீவிர பாவனையோடு.

அகல கண் விரித்தவள், பாய்ந்து சென்று விளக்கை அணைத்தாள்.

சிரித்தவன், “வெளிச்சம் இருந்தா என்ன? அதை போட முடியாதா என்னால?” என்றான்.

“ப்ளீஸ்… ப்ளீஸ்…” என கெஞ்ச, “மதியம் சாப்பிடும்போதே என்னை என்னால கன்ட்ரோல் பண்ண முடியல, அப்போ ஆரம்பிச்சா சின்னாபின்னமாகிடுவனுதான் ஒர்க்ல கான்ஸன்ட்ரேட் பண்ணினேன்” என்று தாபத்தோடு சொன்னபடி மனைவியை தன்னோடு மெத்தையில் சரித்து, நெற்றியில் முத்தமிட்டு இறுக அணைத்துக்கொள்ள, சிறு எதிர்ப்பும் காட்டவில்லை பொன்மணி.

பொன்மணியின் பரிபூரண சம்மதம் புரிந்தபோதும், “இதென்ன? என்னவோ செய்துக்கன்ற மாதிரி… முத்தம் கொடுடீ” என்றான் அதட்டலாக.

“அப்படிலாம் இல்ல” என்க, “அப்போ முத்தம் கொடு” என்றான் தாபத்தோடு.

திருனேஷ்வரனுக்கு சிறு எதிர்ப்பும் காட்டக்கூடாது என்ற எண்ணம்தான் மனம் முழுவதும். ஆனாலும் எத்தனை முயற்சித்தும் அவன் சொன்னதை செய்ய முடியவில்லை. இதழ் குவிக்க முற்பட்டவளுக்கு அதனை பற்களால் உள்ளிளுக்கத்தான் வந்தது.

அவளின் பாவனையை ரசித்தவன், “இதையாவது என்னுதுல பண்ணு” என்று தன் இதழை அவள் இதழோடு அழுத்தமாய் பொருத்த, மூச்சு முட்டியது பொன்மணிக்கு.

மனைவியின் நெஞ்சுக்கூடு ஏறி இறங்க, அதற்குமேல் தாளமாட்டாமல் சுவைத்தான் மனைவி இதழை.

இருவர் மனமும் மயக்கத்திலிருக்க, பொன்மணியின் கண்கள் கிறக்கத்திலிருக்க, மனைவியின் இந்த நிலை திருனேஷ்வரனை பித்தாக்கியது.

இதழணைப்பு வன்மையை கூட்டியபோதும், திருனேஷ்வரனின் கை பொன்மணியின் பொன்னுடலை மென்மையாய் முத்தமிட்டபடி வலம் வர, கிறக்கத்திலிருந்தவள் கண்கள் அதிர்ந்து திறந்தது இயன்றவரை.

சிறு எதிர்ப்பும் காட்டக்கூடாது என்ற நினைப்பெல்லாம் மறந்து போனவளாக, வாக்குவாதம் நடத்தினாள் விழியால்.

பொன்மணி வாதத்தை ரசித்தபடி அவளிடம் வாதம் செய்யாமல் மந்தகாச சிரிப்போடு தனது ஆசையை நிறைவேற்றும் பணியைத் துவங்கினான் திருனேஷ்வரன்.

ம்… சில மணித்துளிகளிலேயே மனைவியின் உடல் மறைத்த ஆடையை ஒவ்வொன்றாய் அவிழ்த்தெறிந்த பின்னே, தன்னையும் லஜ்ஜையின்றி மனைவியிடம் ஒப்படைத்தான் அவ்வண்ணமே.

வெற்று தேகத்தில் அவனின் தீண்டல்களை உள் வாங்க முடியாமல் தற்போதும் வாதம்தான் செய்துகொண்டிருந்தாள். ஆனால் பலமற்றவளாக.

“புருசன் பொண்டாட்டி அன்புக்கு கூட தன்மானம் காக்கப்படனும்ற எல்லையிருக்கு. ஆனா காதலோட இணையுற காமத்துக்கு எல்லை இருந்தா அந்த காதலுக்கு மரியாதையில்லடீ என் பொண்ணுமணியே” என எடுத்துரைத்தான் கிசுகிசுப்பாக.

பசித்த இதயங்கள் மெல்ல மெல்ல பற்றிக்கொள்ள, விழிக்கு விருந்தானவள் பசி தீர்க்கும் பண்டமாகிட, தீப்பிடித்த தேகங்கள் அரங்கேற்றத்திற்கு ஆயத்தமானது.

உணர்வுகளின் உரையாடல் ஆழத்தோடும் அன்போடும் பயணிக்க, தேவைகள் சேவைகளாகி, சேவைகள் தேவைகளாகின.

தேவைகள் தீர்ந்த பின்னே வாஞ்சையான வார்த்தைகளாலும், மென்மையான இதலொற்றலாலும் மனைவிக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தான் கணவன்.

வாங்கி வந்த உணவும், கலைக்கப்பட்ட ஆடையும் அதிகாலை வரை தேவைப்படவில்லை இருவருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!