அ21_1_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
கொல்லை துளசி எல்லை கடந்தால் 21_1 (தொடர்ச்சி)
“அண்ணாட்ட காலையில பேசினீங்களா? டென்ஷனா இருக்காங்களா?”
Advertisement
பேசிக் கொண்டே.. எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்திருந்தாள்.
“ம்ம். அம்மா அப்பா ஒத்துக்காம அவரே பண்ணிக்கப் போறார். இருக்கத்தான் செய்யும். ஆனா மனுஷன் திடமா இருக்கார்.”
Advertisement
Advertisement
“பெரியம்மா ஒன்னும் செஞ்சுக்காம இருக்கணும்…”
“அவங்களுக்கு வெறும் வாய் தான் விழி… பேசி பேசியே பேர கெடுத்துகிட்டாங்க! நான் பார்த்தது கூட இல்ல.. எனக்கு அவங்க மேல் ஒரு அபிப்பிராயமே இல்ல. அபி ரொம்ப அமைதி பேர்விழி! எப்பிடி அங்க மேனேஜ் பண்ண போறாளோ..”
Advertisement
“அண்ணா பாத்துப்பாங்க.. எல்லாருக்கும் என் மாமியார் மாதிரி கிடைப்பாங்களாக்கும்..”
இருவருக்கும் இடையே பல மைல் தூரம்.. ஆனால் மனம் இரண்டும் ஒன்றாய் இணைந்திருந்தது. ஒன்றாய் பல வருடம் வாழ்ந்த தம்பதியர் போல், புரிதலும் அன்னியோனியமும் கொட்டிக் கிடந்தது.
முக ஒப்பனையையும், புடவையையும் ஒரு முறை சரி பார்த்துத் திருத்திக்கொண்டவள், “எல்லாம் ஓக்கே தானே.. நல்லா இருக்கேன்ல.. ட்ரைவர் வந்துட்டாங்க.. கிளம்பட்டா மனோ? நீங்க சாப்ட்டு நேரத்தோட படுங்க.”, கிளம்ப தயாராக நின்றிருந்தாள்.
“விழி..”, கனைத்துக் கொண்டான்.
“என்னங்க?”
“ஒரு நிமிஷம் உக்காறேன்.. ஒன்னு சொல்லணும்.”
“இப்போவா.. சரி சட்டுன்னு சொல்லுங்க”
அவன் முகம் மாறியிருக்க.. அமைதியாக அமர்ந்து கொண்டாள். ‘ஏனாம் என்னானது திடீர் என்று?’ ஒரு முறை குனிந்து புடவையை சரி பார்த்து கொண்டாள்.
“எனக்கு உன் கிட்ட எல்லா உரிமையும் இருக்கா டி?”
“இது என்ன கேவலமான கேள்வி. உங்களுக்கே பதில் தெரியாதா?”
“நீ பதில் சொல்லு விழி”
“ஏன் மனோ நான் இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னது ஹர்ட் பண்ணிடுச்சா? உங்க கூடவே இருக்க எனக்கு கசக்குமா? இப்போ சாத்தியமே இல்லாதத நினைச்சு மனச வேதன படுத்த வேண்டாம்ன்னு தான் அப்பிடி சொன்னேன் மனோ. உங்களுக்குத் தெரியுமே மனோ நான் உங்கள் எவ்வளவு விரும்பறேன்னு.. எதுவுமே வேண்டாம் நீங்க மட்டும் போதுங்கற ஸ்டேஜ்ல இருக்கேன்னு தெரியுமில்ல மனோ.. ”, அவன் முக மாற்றம் அவளை இம்சித்தது.
“பச் விழி. நான் என்ன கேட்டேன். நீ என்ன சொல்ற?”
“என்ன மனோ?”
“எனக்கு உன் கிட்ட எல்லா உரிமையும் இருக்கா? நான் எல்லாம்ன்னு கேக்கிறது.. எல்லாம் தான்!”
சிறிதும் யோசிக்கவில்லை. “எல்லா உரிமையும் இருக்கு மனோ! என் மேல யாருக்கும் இல்லாத உரிமை கூட உங்களுக்கு மட்டும் தான் இருக்கு. இப்போ எதுக்கு மனோ இந்த கேள்வி? என்னை டென்ஷன் பண்றீங்க.”, ஏதோ உள்ளுக்குள் கவ்விக் கொண்ட உணர்வு.
“அது வந்து… காலையில.. அதாவது உன்னோட நேத்து நைட்.. நீ கும்முன்னு இருக்கன்னு ஏன் சொன்னேன் தெரியுமா?”
‘அவ்வளவு தானா’ என்ற பார்வை அவளிடம். “படுத்திறீங்க பா நீங்க! நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்! கிளம்பற நேரம் டார்டாய்ஸ் கொசுவத்தி சுருள சுத்த போறீங்களா..? முன்னமே சொன்னா என்ன? உங்கள..”, அவள் முறைக்க…
“முன்னமே சொல்லியிருந்தா இவ்வளவு நேரமும் சாமி ஆடியிருப்ப டி செல்லம்..”, தலை கோதிக் கொண்டவன் இதழ் அழகாய் விரிந்தது.
“மேட்டர் பெரிசோ…”, அவன் புன்முறுவல் அவளையும் தொற்றிக்கொண்டது.
“ம்ம்ம்..”, சிரித்தான்.
முயன்று முறைத்தாள்.
“ம்கூம்.. உன் பார்வை சரி இல்ல! நீ கிளம்பு! இப்போ வேண்டாம். உன் மூட் மாறிடும்! அப்புறம் நேர்ல சொல்றேன்… இந்த விஷயத்த உன் கிட்ட இப்பவே சொல்லலன்னு என்னை கோவிச்சுக்க கூடாது. சரியா?”.
என்ன தான் தம்பதிகளுக்குள் அன்னியோனியமும் நேர்மையும் இருந்தாலும் சில விடயங்களைச் சொல்லாமலே விட்டு விடுவது நன்மைக்கு என்று பட்டுத் தெரிந்து கொள்வான் போலும்!
“இவர் வேற நேரம் கெட்ட நேரத்துல! இவர்ட்ட நான் கோவிச்சுகிட்டாலும்.. சரி நான் கிளம்பட்டா?”
“லிப்ஸ்க்கு பர்ப்புள்ல மேட்(matte) ஃபினிஷ் குடுத்தா நல்லா இருக்கும் விழி… க்ளாஸ்(gloss) இந்த ஹேன்லூம் சாரிக்கு எடுக்கல. உன்ட்ட இல்லனாலும் பார்லர் லேடிட்ட கலர் இருக்கும்.. பிடிச்சா வீட்டுக்கு போனதும் மாத்திக்கோ.”
இவன் ரசனையை ரசிக்கவென்றே ஒருவன் பிறவி எடுத்திருப்பதை மறந்து, இவன் பார்த்து.. ரசித்து.. தன்னவளைக் கிளப்பி, “பத்திரம் விழி.”, என்று அனுப்பி வைத்தான்.
