Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ35_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் 35

 

Your children are not your children.

They are the sons and daughters of Life’s longing for itself.



Advertisement

They come through you and not from you,

And though they are with you yet they beong not to you.

You may give your love but not your thoughts,

Advertisement

For they have their own thoughts

Advertisement

You may house their bodies but not their souls,

For their souls dwell in the house                   

For their souls dwell in the house of tomorrow,

Advertisement

which you cannot visit, not even in your dreams.

You may strive to be like them, but seek not to make them like you.

-Kahlil Gibran

 

 

“ஒரு வார்த்தை முன்னமே சொல்லி இருக்கலாமே மனோ?”

 

“ஏன் விழி, வேண்டாம்ன்னு ஒரு எண்ணம் இருந்துதா?”

 

“எங்க வீட்டுல 100% ஒத்துக்கவே போரதில்லன்னு ரெண்டு நாள் முன்னமே தெரிஞ்சிடுச்சு மனோ. அங்க போன பிறகும், ஒண்ணு… வீட்ட எதிர்த்துகிட்டு ரெஜிஸ்டர்  மேரேஜ்! இல்ல… உங்கள மறந்துட்டு அந்த லூசு டாக்டரோட மணமேடை ஏறணும்! என் முடிவு என்னவா இருக்கும்ன்னு உங்களுக்குத் தெரியும்! அப்புறம் எதுக்கு சஸ்பன்ஸ் எல்லாம்?”

 

“ஹூம்ம்ம்ம்… சொல்லி இருந்திருக்கலாம்1 ஆனா உங்க வீடுல கேப்பாங்க… ஆசையா வளத்தோமே இப்பிடி பண்ணிட்டு வந்து இருக்கியேன்னு! ஒரு வார்த்த கேட்டியான்னு அவங்க கேக்கும் போது சொல்லு… எனக்கும் தாலி கட்டுற வரைக்குமே தெரியாதுன்னு”

 

கூறியவனைப் பார்த்தாள். “உங்க வீட்டுல என்ன சொல்லி சமாளிக்க போறீங்க? உங்க ஆசைக்கு உங்க வீட்டுல தடையில்லையே!”

 

“உண்மை தான். ஆனா, உங்க வீட்டுல சொல்லாம எங்க வீட்டுக்கு மட்டும் சொல்றது தப்புன்னு தோணிச்சு!”

 

“நைட் சொல்லுவோமா?”

 

“இன்னைக்கு நமக்கான நாள். சந்தோஷமான நாள்ல எதுக்கு பெத்தவங்களோட சண்டை, போராட்டம் எல்லாம்? நாளைக்குத் தெம்பா சொல்லிட்டு, வாங்கி கட்டிப்போம்” சிரித்தான்.

 

“ம்ம்ம்”

 

முகத்தைப் பார்த்தான். விழியின் முகம் அமைதியாக இருக்கவும் எபியால் அவள் மனம் படிக்கமுடியவில்லை.

 

“ஸ்வேத்தா, என் கூட படிச்ச பொண்ணு, அவளுக்கு அப்பா மட்டும் தான். அவர் மேல அவளுக்கு அவ்வளவு மரியாதையும், பாசமும்! அவ, எங்க ஃப்ரெண்டு சிவாவ விரும்பினான்னு அவ வீட்டுல தெரிஞ்சதும், அவட்ட என்ன சொல்லி அவள கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாங்கன்னு தெரியலை, நாலாவது வருஷம் பாதியிலேயே அவ காலேஜ் வரது நின்னு, அவ அப்பா காட்டின பையனோட கல்யாணமும் முடிஞ்சுது!

 

இன்னைக்கு அவளுக்கு ரெண்டு பிள்ளைங்க. நாலு பேர் மதிக்கிற நிலையில அவள  வச்சிருக்க நல்ல புருஷன். ஏழ்மை இல்லாத கஷ்டமில்லாத வாழ்க்கை. ஆனா நிறைவான வாழ்க்கைன்னு பார்த்தா, அவ ரொம்ப ஏழை. ஊருக்கு போயிருந்த போது அவள பார்த்தேன்… எல்லாம் இருந்தும் அவ முழுமையான வாழ்க்கையை வாழல விழி. ‘பழகிடுச்சு. ஏதோ இருக்கேன் எபி’ன்னு சொன்னா. சொன்னவ உதடுல பொய்யான ஒரு சிரிப்பு! ‘சிவா…’ன்னு ஏதோ கேக்க வந்தவ கண் கலங்கி போச்சு.”

 

“…”

 

“அப்படி ஒரு வாழ்க்கை எனக்கும் வேண்டாம். உனக்கும் வேண்டாம். சிவா உயிரோட இருக்கான். உயிர்ப்பே இல்ல அவன்கிட்ட. அவனும்  ஒருநாள் கல்யாணம் பண்ணிப்பான், அவன பெத்தவங்க தொல்லை தாங்காம!  அவன மாதிரி வாழ்க்கை ஓட்டத்தோட  ஜீவனே இல்லாம ஓட நான் தயாரா இல்ல. நான் செஞ்சது சரி… தப்புன்னு நான் வாதம் செய்ய மாட்டேன். அவங்க அவங்க வாழ்க்கையை மட்டும் தான் அவங்க அவங்க வாழணும். இது என் கருத்து.

 

என் வாழ்க்கையை உருப்படியா வாழ என்ன தேவையோ அந்த நெறிமுறைகளை என்னை பெத்தவங்க எனக்கு காட்டணும்! நல்ல வழியில போக அறிவ புகட்டணும்.  அதே தான் எனக்கும்! நான் என் பிள்ளைங்களுக்கு ஒரு வழிகாட்டியா இருக்கணுமே ஒழிய, காலம் பூரா என் விருப்பு விருப்ப அவங்க மேல திணிக்க கூடாது.

 

என் பசிக்காக அம்மா 25வருஷம் முன்ன சாப்பிட்டாங்க. அதையே இப்போ செய்ய முடியாது. வளர்த்து விட்டாச்சு. இது வாழ்க்கைன்னு கை காட்டியாச்சு. விழுந்தோ எழுந்தோ என் வாழ்க்கைய நான் தான் வாழணும். என் தேவைக்கு நான் தான் சம்பாரிக்கணும். என் வயறுக்கு நான் தான் சாப்பிடணும். அதே மாதிரி, என் சாவு வரை என் மனச நிரப்ப போற என் வாழ்க்கைத் துணையை நான் தான் முடிவு பண்ணணும்! பண்ணிட்டேன்.

 

சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்களோட போராடி பயனில்ல! யாரையோ திருப்திப் படுத்த, வறட்டு கௌரவத்துக்காக, அவங்களோட  உதவாத கொள்கைக்காக, சொந்த பிள்ளைங்க விருப்பு வெறுப்ப யோசிக்காத பெத்தவங்களுக்காக… இருக்க ஒரு வாழ்க்கையை நெருப்புக்குள்ள வெந்துகிட்டே வாழ முடியாது விழி. நம்ம வாய்க்குள்ள என்ன போகணும்ன்னு முடிவு பண்ற உரிமை நமக்கு இருக்கும் போது, நம்ம உயிரோட யார கலக்க விடணும்ன்னு முடிவு பண்ற உரிமையும் நமக்கு மட்டும் தான்!”

 

எதற்காக இவ்வளவு பெரிய விளக்கம்? திருமணத்தில் தவறில்லை என்று தன்னை தேற்றுகிறானா?  “எனக்கு உங்க மேல வருத்தம் எதுவும் இல்ல மனோ. வீட்டுல கேட்டேன் அவங்க ஒத்துகல… சோ நான் தப்பு செஞ்சுட்டேன்னு ஃபீல் பண்ணவும் இல்ல. நீங்க தான் எனக்கானவர்ன்னு முடிவு பண்ணின அன்னைக்கே… இதெல்லாம் எதிர்பார்த்தது தான்.”

 

“எல்லா கோட்டையும் அழிச்சுட்டு புதுசா ஒரு கோடு போடுவோமா விழி?”

 

“…?”

 

“ஊருக்கு போர ப்ளான் பத்தி சொன்னேன். நான் இப்போதைக்கு பேப்பர் போடல. நீ கிளம்பற அன்னைக்கு, ரெண்டு பேரும் சேந்து போவோம் விழி. மூணு வாரம் லீவ் கிடைக்கும். எல்லாம் பேசி எடுத்து உன்ன நம்ம வீட்டுல விட்டுட்டு, நான் இங்க வந்து வேலையை முடிச்சு குடுத்துட்டு, விக்க வேண்டியதை எல்லாம் வித்துட்டு பொறுமையா வரேன். சரி தான?”

 

“ம்ம்ம்”

 

“என்ன டி சொரத்தயே இல்லாம ம்ம் சொல்ற?”

 

“லவ் யூ மனோ” என்றவளுக்குள் சிந்தனைகள் எதுவும் இல்லை. மனோவின் புஜத்தைக் கட்டிக் கொண்டு தோள் சாய்ந்தாள். அவன் அளவிற்கு யோசிக்கவில்லை என்றாலும், நடுத்தரவர்க்க பெற்றோர் மனம் புரிந்தாலும், பெற்றவர்கள் பேச்சை மீறியது வலித்தாலும், கணவன் என்ற இடத்தில், யாருக்காகவும் மனோவை தவிர வேறு யாரையும் நிறுத்த முடியாது என்பதால், நடப்பது போல் நடக்கட்டும் என்று தன்னை குழப்பிக் கொள்ளவில்லை.

 

ஆனால், அவள் உணர்வற்ற முகம் அவனைக் குழப்பியது என்னவோ உண்மை.

 

“அவசரப் பட்டதா நினைக்கிறீயா விழி? அவசிய பட்டனால தான் இந்த அவசரம். நீ மட்டும் இல்ல விழி, நானும் தான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன். நீ இல்லாத ஒரு வாழ்க்கை எனக்கு நரகம்.  கண்டிப்பா சாக மாட்டேன். அத விட கொடுமையான வாழ்க்கையைத் தினம் தினம் வாழுவேன். ஏனோ… அந்த நிலை ரெண்டு பேருக்கும் வந்திடும்ன்னு மனசு சொல்லிச்சு. அது தான் அவசர அவசரமா தாலி கட்டிட்டேன். ஒரு தரம் என் மனசில ஒரு நெருடல் ஏற்பட்டுச்சு… அத நான் கவனிச்சிருந்தா இன்னைக்கு இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்காது. காத்திருந்து… சண்டை போட்டு… நீ ஆச பட்ட படி கல்யாணம் பண்ணியிருக்கலாம்.”

 

பிரவீன் என்றவன் அவள் வாழ்வில் ராட்சசனாய் போனது பெண்ணிற்குத் தெரியாமல் போனதால் மனோவின் அவசரம் புரியாமலே போனது. “என்ன நெருடல்? என்ன சிக்கல் மனோ?”

 

நெற்றி முட்டி மூக்கில் இதழ் பதித்து, “முடிஞ்சு போனத பத்தி பேசி என்ன காணப்போறோம்? சொல்லிக்கிற அளவு அதுக்கு வர்த் இல்ல டி பட்டு. இப்போ நான் தான்… நான் மட்டும் தான் உன் எதிர்ல. என்னை மட்டும் கவனி போதும்.” எனவும், ஆசை சொட்டிய ஆண்மகன் கண்பார்த்த பெண் மனம் துள்ளிக் குதித்தது.

 

வீட்டிற்குள் நுழையாமல், பாயல் வீட்டு வாசல் முன்னிருந்த தாழ்வாரத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க, வெளியே வந்த மார்க், “உங்களுக்காகத் தான் காத்திருக்கோம். ஃபோன் போட்டாலும் எடுக்கல. அது தான் உங்கள் கூப்பிட கிளம்பினேன். உள்ள வராம இங்க என்ன பண்றீங்க? உள்ள வாங்க” என்று கையோடு அழைத்துச் சென்றான்.

 

வீடு அலங்கரிக்கப்பட்டிருக்க, உள்ளே நுழைந்தவர்களை, கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பாட்டமாய் வரவேற்றது. தொலைக்காட்சி பெட்டியில் பாடலில்லா இசை அறையோடு மனதையும் நிறைக்க, அதுவரை இருந்த இயல்பு நிலை மாறி இருவருக்கும் புதுமண தம்பதியருக்கே உரிய உணர்வு ஒட்டிக் கொண்டது.

 

மாலைகளை மாற்றச் செய்து, கேலி கிண்டலோடு சில பல விளையாட்டுகள் இருவரையும் விளையாடச் செய்யவும், அவசர திருமணம் என்ற நினைவு பின் சென்றது. மறுநாள் போராட்டம் மறந்து போனது. இந்த நிமிடம் மட்டுமே உண்மை என்பதால், ‘கணவன் மனைவி’ என்ற அந்த நிமிடத்தை மட்டுமே ரசித்தனர்.

 

வீட்டிற்கு வந்திருந்த எபி-விழியின் நெருங்கிய அலுவலக தோழர்கள் அனைவரும் வாழ்த்தி, ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்துண்டு கிளம்பிச் செல்லவும், அவர்களின் ஆறு நபர் பட்டாளத்தோடு லீ-யும் தங்கிவிட, கையில் தட்டோடு அரட்டை கச்சேரி களைகட்டியது.

 

உணவு முடித்து எபி நடுகூடாத்திற்கு வரவும், தொலைக்காட்சி திரையில் கண்கள் பதிந்தது.

 

You’re the light, you’re the night

You’re the color of my blood

You’re the cure, you’re the pain

இசையோடு பாடல் வரிகள் திரையில் ஒளிபரப்பாக, எபியின் வாய் பாடல் வரிகளை முணுமுணுத்தாலும் பார்வையோ புது மனைவியின் மீது.

You’re the only thing I wanna touch

Never knew that it could mean so much, so much, முணுமுணுப்பு பாடலாய் மாறிப் போக, ஆட்ரே, எபியோடு பாடலில் இணைந்தாள்.

 

ஒருவன் ஆரம்பிக்க, அடுத்தடுத்த இசைக்கு ஒவ்வொருவராய் பாட, வண்ண விளக்குகளோடு, அதுவே (karaoke night) கேரியோக்கி இரவாக மாறிப் போனது. பாடலாய் ஆரம்பித்து விளையாட்டாய் உருவம் பெற்று, ஆண்கள் ஒரு அணி, பெண்கள் ஒரு அணி என்று போட்டியாய் மாறியது கேரியோக்கி இரவு.

 

பாயலும் இனியாவும், லீ-யை பாடியே ஓரம் அமரவைக்க… பெண்களிடையே சிரிப்பு.

 

மார்க், ஆட்ரேயை வம்பிழுக்க, ஒரு கட்டத்தில் பெண்ணால் வாய் திறக்க முடியாமல் போக ஆண்களிடையே கரகோஷம்.

 

மிஞ்சியது எபியும், விழியும்! ஆங்கில பாடல் ஒன்றை எபி ஆரம்பிக்க, கன்னம் சிவத்த பெண் வாய் திறக்க மாட்டாள் என்று நினைக்க, நினைப்பை பொய்யாக்கி, தமிழில் அலர்விழி பாட ஒருவருக்கொருவர் எதிலும் சளைக்காதவர்கள் என்பதால் போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது. கடைசி சுற்று, வெற்றி பெறுபவரின் அணியே வாகை சூடிக் கொள்ளும் என்ற நிலை. தோற்றும் போகும் எண்ணமில்லை அலர்விழியிடம்.

 

“நான் சீனியில் செய்த கடல்

நான் சீனியில் செய்த கடல்

வெள்ளைத் தங்கத்தில் செய்த உடல்

வெள்ளைத் தங்கத்தில் செய்த உடல்

உன் காதலி நானே”

அறையில் ஆட்கள் கூடியிருக்க, அடிவயிற்றிலிருந்து உணர்வுப் பூர்வமாக ஒருத்தி, ஒருவனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே உல்லாசமாய் விஷம புன்னகையோடே இப்படிப் பாடினால்.. அவனும் தான் என்ன செய்வான்? எழுந்த புன்முறுவலை சவ்வு மிட்டாயோடு மென்று… உமிழ்நீரோடு விழுங்கினான்.

 

“நான் முத்தம் தின்பவள்

ஒரு முரட்டு பூ இவள்

நான் தினமும் தோற்பவள்

அந்த ஆடை சண்டையில்”

விழுங்கமுடியாமல் போன புன்முறுவல் கட்டுப்பாடில்லாமல் பொங்கி வழிந்தது. சவ்வு மிட்டாயை மென்றுகொண்டே எழுந்த புன்முறுவலை மறைக்க இடக்கை கொண்டு நாடியை தேய்ப்பதும், தலை குனிந்து பிடரி முடியைக் கோதுவதுமாய் நின்றிருந்தவனை ஒரு வழியாக்காமல் விடுவதில்லை என்ற எண்ணம் கொண்டவளோ மொழி தெரியாத கூட்டம் நடுவில், ஒற்றை புருவம் உயர்த்தி அவனைப் பகிரங்கமாய் வம்பிழுந்துக் கொண்டிருந்தாள்.

 

“இனி குறையட்டும் திருவிளக்கு

நீ இடம் சுட்டி பொருள் விளக்கு”

‘அடியேய்… என்ன டி?’ பார்வையால் கேட்டு நின்றவன், வெட்கத்தில் நெளிந்தான்.

“அட கடவுளை அடையும் வழியில்

என் பேர் எழுதிருக்கு”

ஒருவருக்கும் புரியாமல் போனாலும் அவனுக்குப் புரிந்ததே அவளின் சேட்டை! ‘கொழுப்பெடுத்தவளே… போதும் டீ..’ எபி பார்வையால் கெஞ்சியும், பாட்டை நிறுத்தாமல் அவள் பாட, இதற்கு மேல் முடியாது என்று கைகளை உயர்த்தி சரணடைந்தான் எபி.

இசையை ரசிக்க மொழி தேவை இல்லை என்றது அறையில் எழுந்த கரகோஷம்.

 

ஆணின் ஆர்வமும் பெண்ணின் அழைப்பும் ஒன்று சேர, வீட்டிற்குள் நுழைந்ததுமே “அடங்க மாட்டியா டி நீ…” என்று மனைவியை தன்னோடு அணைத்துக் கொண்டான் மனோ.

“இப்போ தைரியம் இருந்தா பாடு டீ” அவன் சவால் விட, “ஏன் பாட மாட்டேனாக்கும்…” கேட்டவளின் மயக்கும் புன்னகையில் மயங்கித் தான் போனான். கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றவளுக்கு தைரியத்தில் குறைவில்லை என்றது அவள் முணுமுணுத்த பாடல் வரிகள்.

ஆண் ஆரம்பித்து பெண்ணை காம சுழலுக்குள் இழுக்க வேண்டும் என்பது சட்டமா? அப்படி ஒரு சட்டமிருந்தால், சட்டம் உடைக்கப்பட்டது அங்கே! பெண் முகம் மனோ கழுத்து வாளைவில் புதைந்திருக்க… முத்தம் தின்னும் முரட்டுப் பூவாய் அவள் மாறிப் போக அலர்விழி என்ற சுழலுக்குள் மனோ என்ற காதலன் முழுவதுமாக இழுக்கப்பட்டான்.

வெள்ளைத் தங்கத்தில் செய்த உடல் தானா என்ற ஆராய்ச்சி முடிவில்லாமல் தொடர்ந்தது. பஞ்சு நெருப்பை முற்றிலும் ஆக்கிரமித்திருக்க… ஆரம்பித்ததை இருவருக்குமே முடிக்கவும் தெரியவில்லை… முடிக்கும் நினைப்புமில்லை. 99% மனைவியை 100% மனைவியாக மாற்றும் முடிவில் அவன். அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவள்.

வெள்ளை தங்கத்தில் செய்த உடல் தானா என்று ஆரம்பித்து, ஆராய்ச்சி அவள் சீனியில் செய்த கடல் தானா என்று நீண்டு கொண்டே போனது.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!