ரகுவரன் சீதா இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருஷம் ஆகிறது. இன்னமும் அவர்கள் திருமண உறவின் அடுத்த நிலைக்கு செல்ல அவசரம் கொள்ளவில்லை. பரஸ்பரம் நம்பிக்கை,காதல் இரண்டும் சேர்ந்து அதை வெளிப்படுத்த காமம் வேண்டும் என்று அமைதியாக இருந்தார்கள்.
அதிகம் பேசிக்கொள்ளாமல் இருந்தாலும் புரிபடும் மௌனமொழி பாஷைகள். என் மனதில் நீதான் என்று வாய்விட்டு சொல்லாவிட்டாலும் அதை அவர்களால் உணரமுடிந்தது. ராதா எதிர்த்த வீட்டில் இருந்து கொண்டு,”ஒரே ஒரு குழந்தையாவது பெத்துக்கோடி சீதா.அது ஒரு சுகம். ஒன்பது மாசம் கருவில் குழந்தையை வச்சி வளர்க்கறது, அதற்க்கு தாய்ப்பால் கொடுக்கிறது…. இதெல்லாம் வார்த்தையால் சொன்னா புரியாதுடி”என்று மகளை பார்க்கும் பொழுதெல்லாம் சொல்கிறாள்.முன்பெல்லாம் சீதாவிடம் மட்டும் சொன்னதை இப்போது ரகு காதுகளில் விழும்படிக்கு சொல்கிறாள்.கிருஷ்னன் சொல்லிவிட்டார்,”ராது ,இது அவங்க பர்சனல்.நாம சொல்லக் கூடாது டி “என்று.
“அதுசரி, கல்யாணம் செஞ்சுவச்சு,பேரனோ பேத்தியோ வேணும்னு கேட்டா அதுக்கு உபதேசம்.அதுசரி,குழந்தை பெத்துக்க இஷடம் இல்லன்னா கல்யாணம் எதுக்கு? எனக்கு துணைக்கு குழந்தைகள் வேணும்னு நா யோசிச்சேன். வயசான காலத்துல பூமா மட்டும் எப்படி தனியா பெத்தவங்களை சமாளிக்கும்?இன்னொரு தம்பியோ தங்கையோ இருக்கணும்.நிச்சயம் இருக்கணும் “என்றுவிட்டாள் .
ராதாவின் குரல் ரகுவுக்கும் சீதாவுக்கும் நன்றாகவே விழுந்தது. கொஞ்சநாட்களாகவே இவருக்கான தேவையை உணரவும்,துணைக்கு உணர்த்தவும் தொடங்கி இருக்கிறார்கள்.முன்பெல்லாம் பூமா இவர்களுடன் தூங்கினாள் .இப்போதெல்லாம் ராதா பாட்டிகிட்டே போறேன் என்றுவிட்டு இரவு அங்கே சென்று விடுகிறாள். அங்கே தாத்தாவிடம் கதை கேட்டுக்கொண்டோ,பாட்டியிடம் பாட்டு பாடச்சொல்லியோ தூங்கிவிடுகிறாள்.
சீதா திருமணம் முடிந்து ஆறு மாதத்தில் என்னன்னவோ சொல்லி மைதியின் பெற்றவர்களை இங்கே சென்னை அழைத்து வந்துவிட்டாள் . இவர்கள் பிளாட்டின் அடுத்த பிளாட்டில் வீடு வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள் . அவர்களுக்கும் அங்கே யாரும் இல்லையே! ரகுவரனின் பெற்றவர்கள் ” இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். எங்களுக்கும் ரொம்ப வயசானா ரகுகிட்டே தானே வரணும்.பெரியவன் அங்கேயே செட்டில் ஆகிட்டான். அவன்கிட்டே போய் மாசக்கணக்குல தங்கலாம்.வருஷ கணக்குல நமக்கு உடம்பு தாங்காது”என்றுவிட்டார்கள்.
பூமாவுக்கு கொண்டாட்டம் தான். மூன்று செட் தாத்தா பாட்டிகள் இப்போது அவளுக்கு இருக்கிறார்கள். சீதா அலுவலகம் செல்வதும்,வீட்டிலிருந்து வேலை செய்வதும் தொடர்கிறது.காலையில் ரகுவும் வீட்டு வேலைகளை சேர்ந்து செய்துவிடுவதால் பெரியதாக சுமை இல்லை.
Advertisement
பாவம் சீதாவுக்கு தான் இரண்டு மாதங்களாக தூரம் வரவில்ல்லை.அளவுக்கு அதிகமாக ஸ்டெரெஸ் இருப்பதால் ஒருவேளை ப்ரீ மெனோபாஸ் நேரமாக இருக்குமா என்று பயந்தாள். மருத்துவரை பார்க்கவும் பயம். ரகுவிடம் சொல்லி புலம்ப,அவனோ கூலாக பிரேக்நேன்சி கிட்டை வாங்கிக் கொண்டு வந்து “ட்ரை பண்ணிப்பாரு. அப்புறமா டாக்டரை பாக்கலாம்”என்றானே பார்க்கலாம். அவனை முறைத்து தள்ளினாள் சீதா.
Advertisement
“நானே என்னோட நிலைமை நினைச்சு பயத்துல இருக்கேன். என்ன..ரொமான்டிக் லுக்கு .மனுஷனுக்கு ஆனாலும் கொழுப்பு கூடிப்போச்சு”என்று முனகியவாறே டெஸ்ட் செய்தவளுக்கு உண்மையிலேயே ஆனந்த அதிர்ச்சிதான். தூரமே நிற்கப் போகிறதா என்று பயந்தவளுக்கு ,வயிற்றில் கரு நிற்கிறது என்றால்?
இருவரும் மருத்துவரை சென்று பார்த்துவிட்டு வந்தார்கள். மருத்துவர் உறுதிப்படுத்தவே வீட்டுக்கு இனிப்புகள் வாங்கி வந்தார்கள்.இனி ,பூமாவை தயார் படுத்தவேண்டும் என்று இவர்கள் நினைக்க அந்த வேலையை ராதாவும்,மைதிலியின் அம்மாவும் ஏற்கனவே செய்து விட்டார்கள்.பூமாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
ரகுவும் சீதாவும் இப்போதெல்லாம் பூமாவை இரவு தங்களுடனேயே தூங்க வைத்துக் கொள்கிறார்கள்.புதியதாக குழந்தை வந்தபிறகு பூமா வித்யாசமாக உணரக்கூடாது என்று இந்த ஏற்பாடு.
Advertisement
கருவுற்ற நாளின் ஒவ்வொரு நொடியையும் சீதா ரசித்தாள். மசக்கை எல்லாம் அவளுக்கு படுத்தவில்லை. ஒரு அம்மாவுக்கு இரண்டு அம்மாக்களின் கவனிப்பு.ரகுவின் காதல். பூமாவின் பாசம் என்று தேவலோகத்தில் இருப்பத்தாக உணர்ந்தாள் சீதா.அவளுக்கும் வேறென்ன வேண்டும்?
குழந்தை பிறந்து பெயர் வைக்கும் பொழுது ராதாவும் கிருஷ்னனும் சீதா அவர்கள் பெயரில் டெபாசிட் செய்திருந்த பணத்தை இரண்டாக பிரித்து இரண்டு குழந்தைகள் பெயரிலும் டெபாசிட் செய்திருந்த ரெசிப்ட்டை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார்கள்.
“‘ நீயும்,மாப்பிள்ளையும் எங்க ரெண்டு பேரையும் நல்லாவே பார்த்துப்பீங்க. அந்த நம்பிக்கை இருக்கு.போதும். வீட்டு வாடகை பணம் அது வரட்டும். எங்களோட செலவுகளுக்கு வச்சுக்கறோம் ” என்றுவிட்டாள் ராதா. யாருக்குமே வார்த்தைகளால் எதையும் புரிய வைக்க முடியாது.உறவுகளின் அடிப்படை நம்பிக்கை. அதை சீதாவும் ரகுவும் இப்போது ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இது வெறும் கதை இல்லை.மனித எண்ணங்கள் காலத்துக்கு ஏற்ப மாறுகிறது.பரஸ்பரம் நம்பிக்கை குறைகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவுகள்,திருமண வாழக்கை ,குழந்தைகள் என்று எல்லாமே அவசியம் தான். தனியாக வாழ்ந்து விடுவேன் என்பதெல்லாம் வார்த்தைகளில் எளிது. நிஜத்தில் உடல்நிலை சரியில்லை என்றால் கூட யாரவது சுடுநீர் வைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்குமே. ஒரு ரசம் வைக்க துணைக்கு யாரவது இருந்தால் என்று தான் தோன்றும்.
ராதாவை நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஜானகி பெற்றவர்களை பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம்.மாமியாரை விட்டிருக்க வேண்டாம்.ராகவனும் சரி ஜானகியும் சரி ஜாடிக்கு ஏற்ற மூடிதான்.