சர்க்கரை, இரத்த அழுத்தம் என்று புருஷோத்தமனிற்கு எந்த வியாதியும் இல்லை. மகன் மருமகள் விவாகரத்திற்கு பின்னே உண்டான மனஅழுத்தம் குறைந்த இரத்த அழுத்தமாக மாறி மயக்கம் வந்திருந்தது.
இரண்டு நாள் மருத்துவமணையிலிருந்து இன்றுதான் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். மகன்கள் மூவரும் புருஷோத்தமனை விட்டு நகரவில்லை. குடும்பத்தின் மீது தேவராஜ் இத்தனை அக்கறை கொண்டிருக்கிறானா என்று பொற்செல்வன் தவிர்த்து அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
தேவராஜிடம் அவனின் திருமணத்தின்போது பேசியதுதான். மகனிடம் பேசி இரண்டு வருடங்கள் முடியப்போகிறது. இன்று பேசத் துடித்தது புருஷோத்தமன் மனம். தேவராஜை அழைத்து வர மனைவியிடம் சொல்லி அனுப்பினார்.
தேவராஜ் அறைக்கு சென்று வந்த அமிர்தவள்ளி, “அவன் குளிச்சிட்டிருப்பான் போலங்க, பத்து நிமிஷம் கழிச்சு போய் கூப்பிடறேன்” என்றார்.
Advertisement
இதோ… மார்டின் லூர்து இறந்து ஏழு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை ஏதும் இன்னல் வரவில்லை. கடத்தல் செய்யும்படி யாரும் தன்னை வற்புறுத்தவில்லை. வரும் பிரச்சனைகளை பிறகு பார்க்கலாம், தனக்கான வாழ்க்கையை பாருங்கள் என்று பொற்செல்வன் சொன்னதனைத்தையும் நினைத்தபடி ஷவரில் நின்றிருந்தான் தேவராஜ்.
நவீனா வேறொரு வாழ்க்கை அமைத்துக்கொள்வாள் என்பதில் நம்பிக்கை போயிருந்தது தேவராஜிற்கு.
விவாகரத்திற்கு முன்னே எப்பொழுது தன்னிடம் பேசுவான் என்று எதிர்பார்த்திருக்கும் மனைவி, விவாகரத்திற்கு பின்னே தான் அழைத்தும் ஏற்கவில்லை. இனி நேரில்தான் சென்றாக வேண்டும் என்ற முடிவோடு குளித்து தயாராகிக்கொண்டிருந்தான் தேவராஜ்.
Advertisement
ஒருமணி நேரம் ஆகியும் தேவராஜ் வெளியில் வராமல் இருக்கவே, புருஷோத்தமன் வெளியே வந்தார்.
“அண்ணிக்கு அண்ணாவோட சண்டை போடவெல்லாம் தெரியாதும்மா, அண்ணா மேல அன் கண்டிஷனல் லவ். அண்ணாவை கண்டிப்பா ஏத்துப்பாங்க”
“எப்போ வருவான்? கோர்ட்டு, கேஸ், அப்பாக்கு முடியாம போனதுனு என்னென்னவோ நடந்துடுச்சு, வீட்டுல பூஜை வச்சு, மாங்கல்யம் கட்ட சொல்லலாம். சம்மந்தி குடும்பத்தை மட்டும் கூப்பிட்டுக்கலாம்” என பரபரத்தார் அமிர்தவள்ளி.
“அஞ்சு வருசம் ஒழுங்காத்தான் பழகியிருக்கிங்க, இப்போ ஆறேழு மாசத்துக்கு முன்னாடிதான் பிரச்சனையாகியிருக்கு. என்ன செய்து பிரச்சனை ஆனதுனு சொன்னாத்தான் என் தங்கையை சரி பண்ண முடியும். சின்ன வயசுலயிருந்து எங்கப்பாவால பிரச்சனை. இப்போ உங்களால. ஜாலியா இருக்க வேண்டிய வயசுல மனஉளைச்சல்ல இருக்கா, பாவம்ங்க செல்வி” என்றான் ஆற்றாமையோடு.
பொற்செல்வனால் மட்டுமே தங்கையை சரி செய்ய முடியும் என்று இளவரசனிற்கு புரிந்துவிட்டது. ஆனாலும் என் தங்கையை பெண் கேட்டு வா என்றா சொல்ல முடியும்? காதல் சொன்னவன்தானே காதலியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பொற்செல்வன் மீது கோபம் கொண்டான்.
“இவனும் இவன் தங்கை மாதிரிதான் இருக்கான்” என முணகியவன், “என்னை அக்ஸப்ட் பண்ணலைதான். ஆனா முழுசா வெறுக்க முடியாம தவிச்சிட்டிருக்கா. இதுதான் லவ்னு அந்த முட்டாளுக்கு புரியலை. இதுல நீங்க வேற அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறேனு படுத்திட்டிருக்கிங்க. எவ்வளோ நாளைக்கு அப்படியே விடறது?”
“நாங்க மாப்பிள்ளை பார்க்குறது உங்களுக்கு எப்படி தெரியும்? ஸ்பை வச்சிருக்கிங்களா?”
“ம்க்கூம், உங்களுக்கு தனியா வேற ஸ்பை வைக்கனுமா? தினமும் உன் அம்மா எங்கம்மாக்கு கால் பண்ணி பேசுறது போதாதா?
ஆன்ட்டி செல்விக்கு கோவைல ஒரு மாப்பிள்ளை பார்த்தாங்க, கண்டிப்பா செல்வி சம்மதிச்சிருக்கமாட்டா. ஆனாலும் அவனை பொண்ணு பார்க்க வர விடாம செய்தது உங்கப்பாதான்ற வரைக்கும் எனக்கு தெரியும்.
பொற்செல்வன் கோபத்தை ரசித்தவன், “செல்வியோட மனநிலை தெரிஞ்சிக்க வேண்டி நான் செட் பண்ணின ஆள் அவன். அவனுக்கு கல்யாணம் ஆகி எட்டு மாசத்துல குழந்தை கூட இருக்கு, என் அம்மாவும் அவனை உண்மையான மாப்பிள்ளைனு நினைச்சிக்கிட்டாங்க” என்றான் சிரிப்போடு.
“ஹம்… அதுவும் சரிதான்” என்று ஒப்பக்கொண்டு, “செல்வி விருப்பம் இல்லாம என் அம்மாகிட்ட இது பத்தி பேச வேண்டாம்னு ஆன்ட்டிகிட்ட சொல்லிடு. பை” என்று இணைப்பை துண்டித்து, செல்விக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
“முக்கியமான விசயம் பேசனுமா? இவர் சொன்னா உடனே நான் கால் பண்ணனுமா? முடியாது” என நினைத்துக்கொண்டாள் வீம்பாக.
செல்வியிடம் பதிலில்லாமல் போகவும், “கால் பண்ணுடீ, இல்ல இப்போவே ராஜஸ்தான் கிளம்பிடுவேன்” என்று அடுத்த செய்தியை அனுப்ப, அச்சோ… உண்மையாவே கிளம்பிடுவான்.
அம்மாகிட்ட இவன்தான் ப்ரப்போஸ் பண்ணினானு சொல்லிட்டேன், இந்த நேரம் பொற்செல்வன் இங்க வந்தா கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சிடுவாங்களே’ என்று உடனே அழைத்து விட்டாள் பொற்செல்வனுக்கு.
“ஹம்… எப்படி இருக்க?”
“இதான் முக்கியமான விசயமா?”
“பின்ன இல்லையா?”
“நான் வைக்கிறேன், எனக்கு டையர்டா இருக்கு”
“ஆனா எனக்கு டையர்டா இல்லை, நீ கட் பண்ணினா நான் கிளம்பிடுவேன்”
“என்ன விசயம்னு சொல்லுங்க” என்றதும் வீடியோ காலில் அழைத்தான்.
“வீடியோ டச் ஆகிடுச்சு பாருங்க”
“அக்ஸப்ட் பண்ணு”
“என்ன? எதுக்கு?”
“எனக்கு உன்னை பார்க்கனும்” என்றதும் இணைப்பை துண்டித்திருந்தாள்.
“ஓகே, நான் அங்க வரேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பியவன், அதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருக்க, பத்து நிமிடம் கழித்து அழைத்து விட்டாள் பொற்செல்வனுக்கு.
அது வீடியோ கால் இல்லை என்பதால் அழைப்பை ஏற்கவில்லை பொற்செல்வன். நான்கைந்து முறை அழைத்துப் பார்த்தவள், பின்னே வேறு வழியில்லாமல் வீடியோ காலில் வந்தாள்.
அழைப்பை ஏற்றவன் முகத்தில் மகிழ்வில்லை. “இப்போ நிம்மதியா இருக்கியா?” என்றான் ஆழ்ந்த பார்வையோடு.
‘என்ன இப்படி கேட்குறான்’ என யோசித்திருக்க, “என்னை விட்டு விலகிப் போகனும்னு நினைச்சிருந்த. உனக்கு சிரமம் கொடுக்காம உன் அண்ணன் அதை நிறைவேத்திட்டான். அதான் இப்போவாவது நிம்மதியா இருக்கியானு கேட்டேன்” என்றான்.
இவள் அமைதியாக இருக்க, “இப்போவும் நீ நிம்மதியில்லாமத்தான் இருக்கேனு எனக்கு தெரியும். எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப்போற?” என்றான்.
செல்வி முகத்தை திருப்ப, “பேச ஆரம்பிச்சு இரண்டு நிமிஷம் கூட ஆகல, முகத்தை திருப்பற? மொபைல் ஸ்க்ரீன் பார்த்து பேசவா வீடியோ கால்ல வர சொன்னேன்?” என்றான் கடுப்பாக.
திரையில் முகம் காட்டியவளின் கண்கள் கலங்கியிருக்க, “இப்போ அழற அளவுக்கு என்ன கேட்டுட்டேன்? எதுக்கெடுத்தாலும் எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ஷன் பண்ற?” திட்டி,
“ஆன்ட்டிக்கிட்ட நான் ப்ரப்போஸ் பண்ணினதை சொல்லிட்டோமே… எங்கம்மாக்கும் நீன்னா பிடிக்குமே… இரண்டு குடும்பமும் பேசி கல்யாணம் செய்து வச்சிடுவாங்களோனு பயந்துட்டிருக்காத. உன் சம்மதம் இல்லாம நம்ம கல்யாணம் நடக்காது” என்றான்.
இவள் அதிர்ந்து பார்க்க, “என்ன?” என்றான்.
“அப்போ நான் சம்மதம் சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணுவிங்களா?”
“ம், என் மனசுல ரொம்ப ஸ்ட்ராங்கா உக்கார்ந்துட்ட. ஒவ்வொரு நாளும் உன் சம்மதத்துக்காக வெய்ட் பண்ணுவேன், நான் உனக்காக காத்திருக்கிறது பிடிக்கலைனா” என்றவன் சில நொடிகள் மௌனம் காத்து,
“ஒரே ஒரு ரிக்வஸ்ட்… உன் லைஃல நான் வேண்டவே வேண்டாம்னு முடிவு பண்ணியிருந்தா…. உனக்கு பிடிச்சவனா பார்த்து சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோ.
உன் கல்யாணம் லேட் ஆனதுனா எனக்காக யோசிக்கிறியோனு நினைப்பேன். உன் கல்யாணத்தை தள்ளிப் போட்டு எனக்கு ஹோப் கொடுக்காத. ஆல்ரெடி மீண்டு வர முடியாத தூரத்துக்கு போய்ட்டேன்” என கண்களை இறுக மூடித் திறந்தான்.
செந்தமிழ்செல்வி முகம் பெரும் கலக்கத்திற்குள்ளாக, பொற்செல்வன் இணைப்பை துண்டித்தான்.