Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 2.1

அத்தியாயம் 2

பெண் வீட்டார் பொற்செல்வனை பார்க்க வந்து ஒரு வாரம் முடிந்திருந்தது.

ஜாதகம், குடும்பப்பின்னனி, என அனைத்தும் அமிர்தவள்ளியின் எதிர்பார்ப்பிற்கு பொருந்தி வர, மருமகளும் செழிப்பான அழகோடு இருக்க, அடுத்து வரும் நல்ல நாளில் நிச்சயம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர் பெரியவர்கள்.

ஜெயப்ரதாவிற்கு அழைத்து நிச்சயத்திற்கு முன்னே நேரில் பார்க்க கேட்டிருந்தான் பொற்செல்வன். அவளும் சம்மதிக்க, இன்று நேரில் சந்திக்கப்போகிறான்.



Advertisement

முக்கால்மணி நேர பயணத்திற்கு பின்னே மாலுக்குள் நுழைந்தான் பொற்செல்வன். இவனின் வரவை எதிர்பார்த்திருந்த ஜெயப்ரதா “ஹாய்” என்று கையை உயர்த்திக் காண்பித்து தனது இருப்பை தெரிவித்தாள்.

கவனித்துவிட்டான் பொற்செல்வன். புகைப்படத்தில் பார்த்ததை விட நேரில் இன்னும் அழகாய் இருந்தாள் ஜெயப்ரதா. தலையசைத்தவாறு அவளருகே வந்தவன், “அங்க போலாம்” என்று அந்த மாலில் உள்ள ரெஸ்டாரண்ட்டை காண்பித்து நடக்கலானான்.

மணக்கவிருக்கும் பெண்ணை பார்ப்பது போல் ஆசைப் பார்வை இல்லை. எதோ பிஸ்னஸ் மீட்டிங் போல நடந்து சென்றான். இதிலேயே பெரிய ஏமாற்றம் அடைந்தாள் ஜெயப்ரதா.

Advertisement

மாலுக்குள் நுழைந்ததிலிருந்து தன்னை கடந்து சென்ற ஒருவர் கூட தன்னை பாராமல் செல்லவில்லை. ஆனால் இவர் பெரிதாய் பார்க்கவில்லையே என்ற யோசனையோடு பொற்செல்வன் அருகே அமரப்போனாள்.

Advertisement

“உக்காருங்க” என்று தனக்கெதிரே இருந்த நாற்காலியை காண்பிக்க, ஜெயப்ரதா முகம் வாடிப்போனது.

“உங்களைப் பார்த்து பேச இப்படி உக்கார்ந்தாத்தான் வசதியா இருக்கும்” என்றான்.

அப்பொழும் மனம் சமனடையவில்லை என்றபோதும் தனது ஏமாற்றம் மறைக்க சின்னதாய் இதழ்பிரியாமல் சிரித்தாள்.

Advertisement

“வீட்ல என்ன சொன்னாங்க?” என்றான்.

“உங்களை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு”

“ஹம்… உங்களைப் பத்தி சொல்லுங்க” என்றான்.

இவள் தனது, பெயர், ஊர், படிப்பு பற்றி சொல்ல, “இதென்ன இன்டர்வியுவா? உங்களைப் பத்தின்னா… உங்களுக்கு பிடிச்சது, பிடிக்காதது, ஃப்யூச்சர் ப்ளான்… இப்படி கேட்டேன்” என்றான்.

“ஐ.டி கம்பெனியில ஒர்க் பண்ணிட்டிருக்கேன், கல்யாணத்துக்கு அப்புறம் ஜாப் ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்” என்றாள்.

இவன் அமைதியாக பார்த்திருக்க, “நான் பெங்களூர்ல ஒர்க் பண்ணிட்டிருக்கேன், உங்களை கல்யாணம் செய்துக்கிட்டா ரிசைன் பண்றதைத் தவிர வேற வழி இல்ல”

“கல்யாணத்துக்காக கரியரை விடுவிங்களா?”

“கல்யாணத்துக்காக கரியரை விடக்கூடாதுதான். அப்படி மைண்ட்செட்டும் இதுக்கு முன்ன இருந்ததில்ல, உங்க ஃபோட்டோவை பார்க்குற வரைக்கும். ஃபோட்டோ பார்த்ததும் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருச்சு. கரியரா? கல்யாணமானு யோசிக்கவேயில்ல. நீங்கதான் என் ஃப்யூச்சர்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.

ஜெயப்ரதா காதலோடு பேசியதை தகவல்போல் கேட்டுக்கொண்டவன், “தனியாவா வந்திங்க?” என்றான்.

“ஆமாம்”

“யார் அவர்? நாம இங்க வந்ததுலயிருந்து உங்களையே பார்த்திட்டிருக்கார்? நான்கூட உங்களோட வந்தவர், நாம பேசுறதுக்காக அங்க வெய்ட் பண்றாரோனு நினைச்சேன்” என்றதும், பொற்செல்வன் காட்டிய திசையைப் பார்த்த ஜெயப்ரதாவின் முகம் சற்றே பதட்டத்திற்குள்ளாகி பின்னே பிரயத்தனப்பட்டு இயல்புக்கு மாறியது.

“அவர் எனக்கு அத்தான் முறையாகுது. என் அப்பா வழி சொந்தம். அவரும் பெங்ளூர்ல ஒர்க் பண்றார். இங்க வந்திருப்பார் போல, நமக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகப்போகுதுனு அவருக்கு தெரியாது. தெரியாத யார்கிட்ட பேசிட்டிருக்கேனு பார்த்திருப்பார்” என்று சமாளித்தாள்.

“அவரை கூப்பிடுங்க”

“இல்ல…” என்று மறுக்கப் பார்த்ததும் பொற்செல்வன் புருவம் சுருக்க, “இல்ல… அவங்க ஃபேமலிக்கும் எங்க ஃபேமலிக்கும் ஆகாது. ரொம்ப வருசமாவே பேசிக்கிறதில்ல”

“ஒகே. உங்களை எதுக்கு வர சொன்னேன்னு சொல்றேன். நேத்து எனக்கு ஒரு கால் வந்தது, உங்களோட லவ்வர்னு சொன்னாங்க. உங்க வீட்டுலயிருக்கவங்களுக்கு பிடிக்காததால அவரை பிரேக்கப் பண்ணிட்டிங்களாம். உண்மையா?”

ஜெயப்ரதா முகம் அதிர்வாக, “இவ்வளோ அழகா இருக்கிங்க, பாஸ்ட் இல்லைனாதான் ஆச்சர்யப்படனும். எனக்கும் ஒரு பொண்ணை பிடிச்சது, ஆனா அவளுக்கு என்னைப் பிடிக்கல, எனக்கு அவளை வற்புறுத்த பிடிக்கல, அந்த பியூட்டியை மறக்கத்தான் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சேன்” என்று இலகுவாக சொன்னவன்,

“எதுவாயிருந்தாலும் இப்போவே எல்லாம் க்ளியர் பண்ணிடுங்க. எனக்கு போன் செய்தவன், கல்யாணத்துக்கப்புறம் எதாவது பிரச்சனை செய்தான்னா அது ரொம்ப அசிங்கமாகிடும்” என்றான் தன்மையாகவே.

இத்தனை வெளிப்படையாக பேசுபவனிடம் உண்மையை மறைத்து பின்னே ஓர்நாளில் தெரிய வந்தால் என யோசித்தவளுக்கு பயம் வந்துவிட, “லவ் பண்ணினோம், பொருத்தம் சரி வரலைனு வீட்டுல வேணாம்னு சொல்லிட்டாங்க” என்றாள் சின்னக்குரலில்.

இவன் அமைதியாக பார்த்திருக்க, ஜெயப்ரதாவிற்கு பொற்செல்வன் நம்பாமல் பார்ப்பதாய் தோன்ற, “லிமிட்லாம் தாண்டல” என்றாள்.

தற்போதும் பொற்செல்வன் அமைதியாகவே இருக்க, “நீங்க என்னை நம்பலையா?” என்றாள் தவிப்பாக.

“முதல்ல தூரத்து உறவுன்னிங்க, அப்புறம் அந்த குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஆகாதுனு சொன்னிங்க, இப்போ லவ் பண்ணினோம், ஜாதகம் சரி வரலைனு வீட்ல வேணாம்னு சொல்லிட்டாங்கன்றிங்க. உங்களைப் பத்தி நீங்களே மாத்தி மாத்தி பேசும்போது எனக்கு எப்படி நம்பிக்கை வரும்?” என்றவன்,

“உங்களை ஃபோட்டோவில பார்த்ததும் பிடிச்சது. அதனாலதான் கல்யாணம் செய்துக்கவே சம்மதிச்சேன். நேர்ல இன்னும் அழகா இருக்கிங்க, ஆனாலும் உங்க அழகு என்னை இம்ப்ரஸ் பண்ணல. நான் எதிர்பார்க்குற எதோ ஒன்னு உங்ககிட்ட மிஸ் ஆகுற ஃபீல்” என்றான்.

ஜெயப்ரதா முகம் ஏமாற்றத்தை காண்பிக்க, “ஹம்… பார்ப்போம். போகப்போக பிடிச்சாலும் பிடிச்சிடும்” என்றவன், “பழைய லவ் இப்போ இல்லைதானே? முழுசா அந்த பர்சனை விட்டு வெளில வந்துட்டிங்கதானே?” என்றான்.

“பழைய லவ் இருந்திருந்தா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கமாட்டேன்”

“ஃபைன், என்ன சாப்பிடுறிங்க?”

“காஃபி”

“என்ன காஃபி?”

“உங்களுக்கு பிடிச்சதே சொல்லுங்க”

பணியாளை அழைத்தவன், “டூ பம்கின்ஃபைஸ் கேப்பச்சூனோ” என்றான்.

ஆர்டர் செய்தது வரவே, எடுத்துப் பருகியபடி “இப்படி ஃபோன் கால்ஸ் திரும்ப வராம நீங்களே பார்த்துப்பிங்களா? இல்ல என்னோட ஹெல்ப் வேணுமா?” என்றான்.

“நா… நானே பார்த்துக்கிறேன்”

“குட்” என பாராட்டியவன், “மிஸ் ஜெயப்ரதா மிஸஸ் பொற்செல்வன் ஆன பின்னாடி இப்படி ப்ராப்லம் வந்தா நான் ஹேண்டில் பண்ற விதமே வேறமாதிரி இருக்கும்.

இப்படி ப்ராப்லம்லாம் என் பேரண்ட்ஸால தாங்க முடியாது. அவங்க பழமைல ஊறினவங்க. லவ் பண்றதையே பெரிய குற்றமா பார்ப்பாங்க. இதுல உங்களுக்கு எக்ஸ் இருக்குனு தெரிய வந்தா, நாம பார்த்து வச்ச பொண்ணு இப்படி பட்டவளானு உங்களையும் ரொம்ப தப்பா நினைப்பாங்க. இப்படிபட்ட பொண்ணை மகனுக்கு பார்த்துட்டோமேனு அவங்களும் பெரிய தப்பு செய்ததை போல நினைச்சி ரொம்ப வருந்துவாங்க.

உங்க பாஸ்ட் லவ் எனக்கு பிரச்சனையில்ல, ஆனா அதுவே என் பேரண்ட்ஸை கஷ்டப்படுத்துற அளவுக்கு வந்துடுச்சுனா கொஞ்சம் கூட யோசிக்காம எந்த முடிவையும் எடுப்பேன். கேர்ஃபுல்லா இருங்க” என்று காலி கப்பை டேபிளில் வைத்தான்.

ஜெயப்ரதா தடுமாற்றத்தோடு அமர்ந்திருக்க, “காஃபி பிடிக்கலையா? வேற சொல்லட்டுங்களா?” என்றான்.

“இல்ல வேணாம், இதோ குடிக்கிறேன்” என்று தற்போதுதான் அருந்த ஆரம்பித்தாள்.

“என்கிட்ட எதாவது கேட்கனுங்களா?”

ஆமாம் என்பதாய் தலையசைத்தவள், “என்னைப் பிடிச்சிருக்கா?” என்றாள்.

“இட்ஸ் எ டஃப் ஒன்”

“பிரேக்கப் ஆன பொண்ணுன்றதால டஃப் கொஸினா தோணுதுங்களா?”

“ஸீ… அப்படி தோணினா அதை உங்ககிட்ட சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இருக்காது. கல்யாணம் செய்துக்கிறதுக்கு முன்னாடியே பிடிச்சிருந்தா அதுக்கு பேர் லவ் மேரேஜ். அரேன்ஜ் மேரேஜ்ல பிடித்தம் கல்யாணத்துக்கப்புறமும் வரலாம்தானே?” என்றான்.

ஜெயப்ரதாவின் முகம் அதிருப்தியைத்தான் காண்பித்தது. “சரி நான் கிளம்பறேன்” என்றெழுந்தவன், “சேஃபா போய்டுவிங்கதானே?” என்றான்.

இப்படி ஆணழகனை தவற விடக்கூடாதென “இல்ல… நீங்களே என்னை ட்ராப் பண்ணிடுங்க” என்றாள் கோரிக்கையாக.

“நீங்கதான் என் வொய்ஃப் ஆகப்போறிங்கனு எனக்குள்ள இன்னும் ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் ஆகல, மே பி… நிச்சயம் முடிஞ்சா ஃபிக்ஸ் ஆகிடுவேன்னு நினைக்கிறேன், அப்படி ஆகிட்டா கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிப்பா எங்கையாவது வெளில போலாம்” என்றவன், தெரிந்தவனுக்கு அழைக்க, அவன் பத்து நிமிடத்தில் வந்தான்.

அவனிடம் பணம் கொடுத்து, “ட்ராப் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணு” என்று, கிளம்பு என்ற பார்வையோடு ஜெயப்ரதாவை பார்த்தான்.

“யார் இவர்?”

“உங்க ஊர்தான், எனக்கு தெரிஞ்சவன், உன்னை சேஃபா ட்ராப் பண்ணுவான். பயப்படாம கிளம்புங்க” என்றவன், இனி உன்னிடம் பேச ஒன்றுமில்லை என்பதைபோல தனது மொபைலை உயிர்ப்பித்து அதில் கவனம் பதித்தான்.

தன்னைப் பார்த்ததும் அழகில் மயங்கி, காதல் வசனங்கள் பேசுவான் என்று பல கனவுகளோடு பொற்செல்வனை காண வந்தாள் ஜெயப்ரதா. ஆனால் அப்படி ஏதும் நடக்காத ஏமாற்றத்தோடு, தன் கண்களைத் தாண்டி பொற்செல்வன் பார்த்தாய் கூட தெரியவில்லை.

பொற்செல்வனோடு திருமணம் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் நடந்தேறுமா என்ற பயம்தான் வந்தது.

காரினுள் அமர்ந்த பின்னே தன்னை பார்ப்பானா என்று ஜெயப்ரதா பார்த்தாள். ஆனால் பொற்செல்வனோ, “பாய் டா, டைம் கிடைக்கும்போது ஆஃபீஸ்க்கு வா” என்று சொல்லி தனது காரை நோக்கி நடக்கலானான்.

கம்பெனிக்கு சென்று மூன்று மணி நேரம் வரை வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வரவே, “லன்ச் சாப்பிடகூட நேரமில்லையா? மணி என்ன ஆகுது செல்வா?” என்று கடுகடுத்தார் அமிர்தவள்ளி.

“பசிச்சதும் வந்துட்டேன்தானம்மா?” என்றவன், “செல்விக்கு என்ன ஆச்சு?” என்றான்.

“என்ன ஆச்சா? நல்லாத்தானே இருந்தா? ஏன் அப்படி கேட்குற?” என்றார்.

பொற்செல்வனை பார்க்க பெண் வீட்டார் வந்த சென்ற பின்னே இன்னும் இவன் கண்ணில் படவில்லை செந்தமிழ்செல்வி. இன்று அவள் அலுவலகமும் வரவில்லை என்றறிந்ததும் சாம்பவியிடம் விசாரிக்கலானான்.

“ரொம்ப டையர்டா இருக்கு. ஒரு மாசம் மெடிக்கல் லீவ் போட்டிருக்கேனு சொன்னா. எப்போவும் இப்படி இருந்ததில்ல. அவங்கப்பா, அண்ணனை ஏது நினைச்சிக்கிட்டாளோ என்னவோனு கேட்டேன்.

அப்படிலாம் ஏதும் இல்லம்மா, ஆனா வேலைக்கு போக கஷ்டமா இருக்குனு சொன்னா. விரும்பி வேலைக்கு வந்திட்டிருந்தவ இப்போ கஷ்டமா இருக்குனு சொல்றா, அழுத்தம் கொடுக்க மனசு வரல, ஈவ்னிங் வீட்டுக்கு போன பின்னாடிதான் என்னனு விசாரிக்கனும்” என்றிருந்தார் சாம்பவி.

சாம்பவி சொன்னதை அன்னையிடம் சொல்லி, “அவளுக்கு கால் பண்ணி விசாரிங்க. எதாவது ப்ராப்லமா இருக்கப்போகுது” என்றான்.

அமிர்தவள்ளி செந்தமிழ்செல்விக்கு அழைக்க, அழைப்பை ஏற்றவள் “ம்… சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள்.

“உடம்பு சரியில்லையா? டாக்டர்கிட்ட போனியா?” என்றார்.

பொற்செல்வன்தான் விசாரிக்க சொல்லியிருப்பான் என்றறிந்து, “போனேன் ஆன்ட்டி, ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு சொல்லியிருக்கார்” என்றாள்.

“சரியானதும் வீட்டுக்கு வா” என்று கட்டளையிட்டு இணைப்பை துண்டித்தார் அமிர்தவள்ளி.

“உடம்புக்கென்னவாம்?”

“அதை கேட்கல செல்வா. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு டாக்டர் சொன்னாராம்”

‘ம்ப்ச்… தெளிவா கேட்டிருக்கலாமில்லம்மா?’ என்று இவன் கடுப்பாக நினைத்திருக்க, “இன்னும் இரண்டு நாள் கழிச்சு பொண்ணு வீட்டுக்கு போகப்போறோம். நியாபகம் இருக்கா?” என்றார்.

“ம் இருக்கு, இருக்கு” என்று உண்பதில் கவனமானான்.

“கொஞ்சமாவது கல்யாண கலையிருக்கா பாரு? சிடுசிடுனு” என்று அமிர்தவள்ளி கோபிக்க, அன்னையின் கவலைக்கருதி “இந்த மூஞ்சுக்கு என்னவாம்?” என்றான் இலகுவாக.

மகன் இயல்பானதில் சற்று நிம்மதியடைந்தார் அமிர்தவள்ளி. இரண்டு நாள் கழித்து ஜெயப்ரதாவின் வீட்டிற்கு சென்று, திருமண நாளும் குறித்து வந்தனர் பொற்செல்வன் குடும்பத்தினர்.

செந்தமிழ்செல்வி வேலைக்கு வராமல் இருந்தது பொற்செல்வனுக்கு  உறுத்திக்கொண்டே இருந்தது. இவன் செல்வியின் நினைவில் இருக்க, மணக்கவிருக்கும் பெண்ணை ஆசையாய் சிறு பார்வை கூட பார்க்கவில்லையே… தேவராஜைப் போல இளையவனுக்கும் இத்திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்ற கவலை உண்டானது பொற்செல்வனின் தந்தைக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!