காட்டுக்குள் வந்து கார் பஞ்சராகி விட்டதில் அடுத்து என்ன செய்வது என்று ஆண்கள் இருவரும் சிந்தனையில் மூழ்க, அஞ்சலியோ பயத்தில, ” ஏய் லூசு!! வழி தெரியலைனா முன்னாடியே சொல்லித்தொலைய வேண்டிதான.. இப்போ பாரு உன்னால காட்டுக்குள்ள வந்து நிக்கிறோம்.. இப்போ எப்படி வீட்டுக்கு போறது” என்று இதற்கெல்லாம் காரணமான கீதாவை அர்ச்சிக்கத் தொடங்கி இருந்தாள்.
Advertisement
அவளை அடக்கிய கீதாவோ, “ஹேய் சும்மா எல்லாத்துக்கும் என்னையே குத்தம் சொல்லாத நானே பாவம் உலகம் அறியா பிள்ளை நான் தான் ஏதோ சொல்றேன்னா வண்டி ஓட்டுற இந்த தடிமாடுக்கு அறிவு வேண்டாம்.. அதுகூட பரவாயில்லை வண்டியில ஒரு ஸ்டெப்னி கூட இல்லாம சென்னையில இருந்து இங்க கிளம்பி வந்துட்டான்..இவனை நம்பி என்னை வேற இவன் கார்ல ஏற சொல்லிட்ட” என்று அவள் அஜயை குற்றம்சாட்டி விட்டு தப்பித்துக்கொள்ள பார்க்க,
Advertisement
அங்கிருந்த மரத்திலிருந்து ஒரு குச்சியை உடைத்த அஜய் அதை வைத்து அவள் முதுகிலே ஓர் அடியை வைத்தான்.
Advertisement
” அவதார் குட்டி வீணா என் வாயைக்கிளராம சும்மா இரு அதான் உனக்கு நல்லது.. தப்பா ரூட் காட்டினதும் இல்லாம என்னையவே குத்தம் சொல்றியா?? மவளே ஓங்கி வச்சேன்னு வையி அப்படியே மண்ணுக்குள்ள புதைஞ்சு போய்டுவ” என்று கீதாவை மிரட்டினான் அஜய்.
Advertisement
அதற்கு பதிலுக்கு கீதாவும் அவனோடு சண்டையிட வரிந்து கட்டிக்கொண்டு வர, இருவரையும் அடக்கிய அஸ்வத், ” அட எப்போபாரு சின்னப்பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு.. முதல்ல இங்க இருந்து எப்படி தப்பிக்கன்னு பார்க்கணும்.. ஸ்டெப்னி வேற இல்லை.. சோ வந்த வழியே நடந்து போய் யாராச்சும் ஆளுங்க இருக்காங்களான்னு பார்ப்போம்.. இப்போவே மணி 12.30க்கு மேல ஆச்சு.. சீக்கிரம் வீட்டுல இவங்களை விடணும்” என்று தன்னவளை மனதில் கொண்டு அவன் கூற,
மற்றவர்களுக்கும் அதைத்தவிர வேறு வழி இல்லை என்பதால் நால்வரும் தாங்கள் வந்த வழியிலே நடக்கத் துவங்கினர்.
போகும் வழியில் எங்காவது ஆள்நடமாட்டம் தென்படுகிறதா என்ற அவர்களின் தேடலின் பயன் என்னவோ தோல்வியில் தான் முடிந்தது.
கிட்டத்தட்ட அரை மணி நேரமாக நடந்தும் அவர்கள் கண்ணிற்கு எந்தவொரு மனிதனும் தென்படாமல் போக, நால்வரும் தங்கள் விதியை எண்ணி நொந்துபோய் விட்டனர்.
அப்போது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அஸ்வத்தின் கைபேசிக்கு சிக்னல் கிடைக்க அவன் சந்தோஷத்தில்,
“அஞ்சு மா.. இங்க சிக்னல் கிடைக்குது.. இந்தா உங்க அம்மாக்கு கால் பண்ணி பயப்பட வேண்டாம் பத்திரமா தான் இருக்கேன்னு சொல்லு” என்று அவன் அஞ்சலியிடம் போனைக் கொடுக்க,
அதை பட்டென்று பறித்துக் கொண்ட கீதாவோ, ” என்ன மாம்ஸ் உங்காளுக்கு மட்டும் தான் வீடு இருக்கா? எங்களுக்கும் வீடு இருக்கு.. என்னைக் காணாம எங்க அம்மாவும் இந்நேரம் சோறு தண்ணி கூட உள்ள இறங்காம என் மீனு துடிச்சுப் போயிருக்கும். உங்களுக்காக ரிஸ்க் எடுத்து இப்போ நானும் இந்த வெயில்ல கிடந்து வாடுறேன். சோ நான் முதல்ல பேசிட்டு தரேன்” என்று அவன் மறுத்துக் கூற வருவதை பொருட்படுத்தாமல் அவள் மீனாட்சிக்கு அழைத்து விட்டு அவர் எடுப்பதற்காக காத்திருந்தாள்.
புது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் கொஞ்சம் யோசனையுடன் அந்த அழைப்பை ஏற்ற மீனாட்சி கொஞ்சம் தயக்கத்துடன், ” ஹலோ!! யாருங்க பேசுறது??” என்று வினவ,
” மீனுஊஊ நான் தான் உன் செல்லக்குட்டி கீதா பேசுறேன்” என்று ஆர்ப்பாட்டமான குரலில் பேசி மறுபக்கம் இருந்த மீனாவை பதறவைத்தாள் கீதா.
” அடியேய் பைத்தியமே.. எங்க போய் தொலைஞ்ச.. நீ மட்டும் போனது இல்லாம அஞ்சலியை வேற ஏண்டி கூட்டிட்டு ஊர் சுத்திட்டு இருக்க?? பாவம் காமாட்சி அக்கா ரொம்ப பயந்து போயிருக்காங்க.. தேனி ஃபுல்லா அவ்ளோ கலவரமாக இருக்கு.. நீ எங்கடி இருக்க?? அஞ்சலி எப்படி இருக்கா?? நீ மட்டும் போயிருந்தா கூட எனக்கு ஒன்னும் இல்லை அவளையும் இழுத்துட்டு போய் இப்போ எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு.. சீக்கிரம் அவளை பத்திரமா கூட்டிட்டு வா” என்று அவர் கத்தியது வெளியே வரைக்கும் கேட்க,
அஜய் அவளைக் கண்டு நக்கலாய் சிரித்துக் கொண்டே, ” இது உனக்கு தேவையா??” என்பது போல் ஒரு பார்வை பார்க்க,
கீதா அதைக்கண்டு கடுப்புடன், “ம்மீ இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.. நீ எனக்கு அம்மாவா இல்லை அந்த எலிக்கு அம்மாவா.. ஒரு தாய் மாதிரியா பேசுற?? உனக்கு கொஞ்சம் கூட என்மேல பாசமே இல்லை ம்மீ” என்று அவள் பொறியத் துவங்க,
“இந்த டிராமைவை எல்லாம் வீட்டுக்கு வந்ததுக்கு பின்னாடி போடு.. முதல்ல அஞ்சலிகிட்ட போனை குடு” என்று அவளை அசிங்கப்படுத்தி இருந்தார் மீனாட்சி.
அதைக்கேட்டு மேலும் எரிச்சல் அடைந்த கீதா போனை அஞ்சலியிடம் தூக்கி போட்டு விட்டு கோபத்தில் விறுவிறுவென முன்னே நடக்க, அஜய் ஒரு புன் சிரிப்புடன் அஸ்வத்திடம் கண்ஜாடை காட்டி விட்டு கீதாவை பின் தொடர்ந்தான்.
இங்கு அஞ்சலியோ தன் சித்தியிடம் கீதாவை தாக்க வந்ததை மட்டும் மறைத்துவிட்டு மற்ற அனைத்தையும் கூறியவள், ” இப்போ ஒரு காட்டுக்குள்ள நிக்கிறோம் சித்தி.. எங்கிட்டு சுத்துனாலும் ஒரே இடம் மாதிரி தான் இருக்கு.. வந்த வழியே எதுன்னு தெரியலை.. எப்படியும் ஈவ்னிங்க்குள்ள வந்திடுவோம் சித்தி.. அம்மாகிட்ட பயப்பட வேண்டாம்னு சொல்லிடுங்க.. நான் சொன்ன ரொம்ப கத்துவாங்க.. அப்பா இன்னும் வரலைல??” என்று அவளின் தந்தை வந்திருக்கக்கூடாது என்கிற வேண்டுதலுடன் வினவ,
அவள் சொல்லிய விஷயங்களை கிரகித்துக் கொள்ளவே மீனாட்சிக்கு ஒரு நிமிடம் ஆனது..” என்ன அஞ்சலி சொல்ற?? வழி தெரியா காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டோம்னு இவளோ ஈசியா சொல்ற.. நான் வேணும்னா நம்ம டிரைவர் முத்துவை வர சொல்லவா??எனக்கு லொக்கேஷன் மட்டும் அனுப்பி வை.. கீதாவுக்கு தான் அறிவில்லைனு தெரியும்ல.. நீயாச்சும் எனக்கு அங்கேயே கூப்பிட்டு இருக்கலாம்ல..என்ன அஞ்சலி இப்படி இருக்கிங்க??” என்று அவர் பதட்டத்தில் பேச,
ஒரு தாயாய் அவரின் நிலை அஞ்சலிக்கு புரிந்தது இருந்தாலும், ” சித்தி பயப்படாதீங்க சித்தி.. அதான் கூட அவங்க இருக்காங்க தான” என்று அவருக்கு தைரியம் அளிக்க அவள் கூற,
மீனாட்சியோ, “அட என்ன அஞ்சலி நீ புரியாம பேசுற.. என்னதான் உனக்கு அந்த பையனை பிடிச்சிருந்தாலும் இன்னும் உங்க அப்பா சம்மதிக்கவில்லை.. அப்படி இருக்கப்போ அவங்களை நம்பி ரெண்டு வயசுப்பொண்ணுங்களை எப்படி அவங்க கூட தனியா இருக்க விட முடியும்.. நடைமுறைக்கு இதெல்லாம் நல்லா இருக்காது அஞ்சலி.. அவங்க நல்லவங்களாவே இருந்தாலும் நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி தனியா இருக்கது மட்டும் வெளிய தெரிஞ்சா எவ்ளோ பிரச்சனை வரும் தெரியுமா. இப்போ நான் சொல்றது உனக்கு தப்பா தெரியலாம் ஆனா நீ ஒரு அம்மாவா இருந்தா உனக்கு என்னோட கவலை புரியும் டா..சரி ஒன்னும் பயப்படாத நீ லொக்கேஷன் மட்டும் அனுப்பி வை நான் முத்துவை நம்ம காரை எடுத்துட்டு அங்க வர சொல்றேன்” என்று மீனாட்சி ஒரு தாயாய் கவலைப்பட்டாலும் அவர்களை எப்படி அங்கிருந்து கிளப்ப என்று யோசித்து அதை செயலாற்றுவதில் மும்முரமாக,
அஞ்சலியும் அவரின் மனநிலையை புரிந்து கொண்டு அவர் கேட்டபடி லொக்கேஷனை அவருக்கு அனுப்புவதாக கூறிவிட்டு போனை வைக்க,
அவர்களின் கெட்ட நேரத்திற்கு அங்கு நெட்வொர்க் கிடைக்காமல் போக அவள் அனுப்பிய மெசேஜ் மீனாட்சியை சென்று அடையவில்லை.
சற்று நேரத்தில் கொஞ்சநஞ்சம் கிடைத்த சிக்னல் சுத்தமாய் கிடைக்காமல் போக, அஞ்சலி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.
இங்கு மீனாட்சியோ அஞ்சலியிடம் இருந்து எந்த ஒருவித தகவலும் வராமல் போனதில் மீண்டும் அவளுக்கு அழைக்க முயற்சிக்க,
‘ நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார். தயவு செய்து பின்னர் முயற்சிக்கவும் ‘ என்று பதிவுசெய்யப்பட்ட குரலே அவருக்கு பதிலாய் கிடைக்க, மீனாட்சியும் பயத்தில் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் ஒரு நொடி தயங்கினாலும், அடுத்த நொடியே சுந்தரபாண்டியனின் நண்பரான போலீஸ்காரர் ஒருவரிடம் இப்போது வந்த அழைப்பை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைக்க,
மிகவும் நம்பிக்கைக்குரிய அந்த போலீஸ் அதிகாரியும் மீனாட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, சுந்தர பாண்டியனிற்கு தெரியாமல் அவர் கேட்ட தகவலை கண்டறிந்து மீனாட்சிக்கு அனுப்பி வைத்தார்.
அதன்பின் தங்களின் விசுவாசியான முத்து என்பவரை அழைத்து அந்த போலீஸ்காரர் அனுப்பிய இடத்தைச் சொல்லி தங்களின் பெண்களை அங்கிருந்து கூட்டி வர பணித்தார்.
காமாட்சியிடம் முழுதாய் சொல்லாமல் கலவரத்தின் காரணமாக கீதாவின் தோழியின் வீட்டில் அவர்கள் இருவரும் இருப்பதாகவும் இப்போது அவர்களை பத்திரமாக கூட்டி வர முத்துவை அனுப்பியுள்ளதாக மட்டும் கூறி காமாட்சியை சமாதானப்படுத்தியவர், ‘ எந்தவொரு பிரச்சனையுமில்லாமல் அஞ்சலியும் கீதாவும் வீடு வந்து சேர வேண்டும் ‘ என்கிற வேண்டுதலோடு அவர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினார் மீனாட்சி.
கோவமாக நடந்து சென்று கொண்டிருந்த கீதாவை பின் தொடர்ந்து கொண்டிருந்த அஜய், ” உனக்கு போலீஸ் ஆகனும்னு அவ்ளோ ஆசையா அவதார் குட்டி” என்று ஆழ்ந்த குரலில் கேட்க,
அதில் தன் நடையின் வேகத்தை குறைத்த கீதா, ” அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற” என்று எடுத்தெறிந்து பேச,
அவனோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல், ” சொல்லு அவதார் குட்டி.. எங்க தாய் மாமா சென்னையோட ஐஜியா இருக்காரு.. அவர்கிட்ட சொல்லி உனக்கு நான் வேலை வாங்கித்தரேன்” என்று அவளிற்கு ஆசை காண்பிக்க,
இப்போது நின்று அவனை நன்றாக திரும்பி பார்த்த கீதா ஓர் நம்பாத பாவனையுடன், ‘ இந்த எருமை இப்படியெல்லாம் பாசமா பேசாதே ‘ என்று சந்தேகத்துடன், ” என்ன திடீர்னு அக்கறை எல்லாம் பலமா இருக்கு” என்று கேட்டாள்.
” என்ன அவதார் இப்படி சொல்லிட்ட .. அதெல்லாம் உன்மேல அன்பும் அக்கறையும் ஏக்கர் கணக்குல உள்ள கிடக்கு.. நான் தான் அதை எஸ்டாபிலிஷ் பண்ணிக்கிறது இல்லை” என்று அஜய் பதிலளிக்க,
” நம்ப முடியலையே.. நீ எதையும் காரணம் இல்லாம செய்ய மாட்டியே” என்று அப்போதும் கீதா நம்பாமல் அவனைப் பார்த்தாள்.
“அறிவுக்குட்டி நீ.. கண்டுபிடிச்சிட்டியா?? யெஸ் நான் எதையும் காரணம் இல்லாம பண்ண மாட்டேன்.. இப்போவும் உன் லட்சியத்தை கண்டு புல்லரிச்சு போய் எல்லாம் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கலை.. எப்படி இருந்தாலும் நீ படிச்சு போலீஸ் எக்சாம் பாஸ் பண்ண மாட்ட.. உங்க அப்பாவும் உனக்கு கோல்மால் பண்ணி வேலையை வாங்கித்தர மாட்டாரு.. இதை காரணமா வச்சு நீ கல்யாணம் பண்ணிக்காம காலத்தை கடத்துனா நான் பாவமில்லையா.. நீ போலீஸ் ஆகுற வரைக்கும் காத்திருந்தா எனக்கு அடுத்த ஜென்மத்தில் தான் கல்யாணம் நடக்கும்.. அதான் நானே உனக்கு வேலை வாங்கித் தரேன்.. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஒரு வழியவே உன்னால உருப்படியா கண்டுபிடிக்க முடியலை சோ கண்டிப்பா திருடனையும் நீ கண்டுபிடிக்க மாட்ட.. அதுனால அவங்களே அடிக்கடி உன்னை சஸ்பென்ட் பண்ணி துரத்தி விட்டிடுவாங்க.. சோ லீவ் போடுற வேலை மிச்சம்.. அடிக்கடி ஹனிமூன் போகலாம் ஜாலியா.. நம்ம ஃபர்ஸ்ட் ஹனிமூன் எந்த இடத்துக்கு போகலாம்.. உன் விருப்பம் தான்.. என்ன சொல்ற அவதார்??” என்று கண்ணடித்து சில்மிஷத்துடன் அவளைக் கேட்க
அவனை அடிப்பதற்கு ஏதுவாக ஏதும் சிக்குகிறதா என்று அங்கும் இங்கும் கண்களை சுழலவிட்டவள் அங்கு ஓரத்தில் கிடந்த பெரிய கல் ஒன்றை எடுக்கப் போக,
அவள் அடுத்து செய்ய போவதை உணர்ந்த அஜய், ” நோ வயலன்ஸ் பேப்ஸ்.. மீ பாவம்.. படக்கூடாத இடத்தில பட்டிடுச்சுனா உனக்கு தான் கஷ்டம் பார்த்துக்கோ” என்று கத்திக்கொண்டே அவன் ஓட்டமெடுக்க,
அவனை துரத்திக் கொண்டே போன கீதா, ” டேய் டைனோசர் வாயா மரியாதையா நில்லுடா!! உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே கலாய்ப்ப?? மவனே உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன்” என்று கத்திக்கொண்டே அவனை பின்தொடர்ந்து ஓட,
அவன் அவளிற்கு பழிப்பு காட்டிவிட்டு சிரிப்புடன் அவளிடம் அகப்படாமல் விளையாடிக் கொண்டிருந்த சமயம்,
” என்ன நடக்குது இங்க???” என்று கர்ஜனையாக வந்த விழுந்த குரலில் இருவரும் அதிர்ச்சியில் அப்படியே அசையாமல் நின்றனர்.