குளியலறையிலிருந்து வெளியே வந்தவள், செல்வன் உறங்கிக்கொண்டிருப்பதை உறுதி செய்து, உடைமாற்றி திரும்ப, சற்று முன் கட்டிலில் இருந்தவன் தற்போது காணாமல் போயிருந்தான்.
அறை திறந்ததற்கான சத்தமும் வராததால் குளியலறை கதவை பார்க்க, அதுவும் திறந்திருந்தது. என்னடா இது? என நினைத்தபடி கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்க்க, அங்கேயும் செல்வன் இல்லை. அவனின் மொபைல் டேபிள் மீது இருக்க, எங்கே போயிருப்பார்? என யோசித்த நேரம் குளியலறையிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது.
“உள்ள இருக்கிங்களா? கதவை சாத்தமாட்டிங்க?” என கடிந்தபடி கட்டிலில் வந்தமர்ந்தவள், எனக்குத்தான் தூக்கம் தெளிஞ்சுச்சு அதனால குளிச்சேன், இவர் ஏன் இந்நேரத்துக்கு குளிச்சிட்டிருக்கார்? என நினைத்தவளுக்கு இரவின் நியாபகங்கள் இம்சை செய்தது.
Advertisement
இன்ப அவஸ்த்தையோடும் பெருகிய நாணத்தோடும் கட்டிலில் படுக்க, அப்பொழுதுதான் மெத்தை சுத்தம் செய்திருப்பதை கவனித்தாள். நான் குளிச்சிட்டிருக்கும்போதே எழுந்துட்டாரா? என நினைத்தவளுக்கு தற்போது குளியலறையிலிருந்து வெளியே வருபவனை எப்படி எதிர்கொள்வது என்பதே பேரவஸ்த்தையாக இருந்தது.
நேரம் பார்க்க நான்கு முப்பதை காட்டியது. யாரும் எழுந்திருக்கமாட்டார்கள். இல்லையென்றால் வெளியிலாவது சென்றிடலாம் என்று யோசித்திருக்க, குளித்து வந்தான் பொற்செல்வன்.
துண்டை கழற்றாமல் இவன் உள்ளாடை அணிய, “இதெல்லாம் பாத்ரூம்லயே போடமாட்டிங்களா?” என இவள் முணுமுணுக்க, உள்ளாடை அணிந்து துண்டை கழற்றியவன் லோயர் டீசர்ட் அணிந்து, “நைட் சாப்பிடவே இல்ல, எதாவது சாப்பிடுறியா?” என்றான்.
“நான் போட்டுட்டு வரேன்” என்று வெளியேற, செல்வியும் பின்னோடு வந்தாள்.
பூஜையறைப் பார்த்ததும், அண்ணிகள் இருவரும் திருமணமான புதிதில் காலை நேரம் விளக்கேற்றியது நியாபகம் வர, “நீ பூஜை பண்ண ரெடிபண்ணு, நான் காஃபி போடுறேன்” என்று சமையலறை செல்ல முற்பட, “வந்து சாமி கும்பிடுங்க, காபி வேண்டாம், பழம் சாப்பிட்டுக்கறேன்” என்றாள்.
“காபி கேட்டதானே? எனக்கும் சேர்த்து நீயே கும்பிடு” என்று கிச்சன் சென்று ஐந்து நிமிடத்தில் சிறு பையோடு வந்தவன், “வா வெளில போகனும்” என்று வெளியே அழைத்துப்போனான்.
“இந்த நேரத்துக்கா? எங்கே போகனும்?”
“ம்ப்ச் வாடீ” என வெளியே அழைத்து வந்தவன், பின்னே மனைவியோடு வெளியேறி அஸ்வத்திடம் சென்று “மார்னிங் ப்ராஸஸ் முடிச்சிட்டியாடா?” என சிரிப்போடு கேட்டபடி குதிரை மீது ஏறியமர்ந்து செல்வியை தூக்கி தன் முன்னே அமர்த்திக்கொள்ள, வழக்கமாக வட்டமிடும் திடலுக்கு மிதமான வேகத்தில் ஓடினான் அஸ்வத்.
“அஸ்வத் மெதுவாத்தானே போறான், என்னை பிடிச்சிக்க வேண்டாம்” என இவள் நெளிய, இன்னும் தன்னோடு இறுக்கிக்கொண்டு கழுத்தில் முகம் புதைத்தவன், “நைட் ஒன்பது மணிக்கே தூங்கிட்ட” என்றான் ஏக்கமாக.
“நீ… நீங்க தூங்கலையா?” என்றாள் அதிர்ந்தபடி.
“ம்ஹூம்”
“என்னை எழுப்பியிருக்கலாம்தானே?”
“முன்னாடி நாள் நைட் தூக்கம் இல்லாம, நேத்து பகல்லயும் தூங்காம இருந்ததால தூங்கிட்ட, எப்படி எழுப்பறது?”
செல்வி முகம் வாடிப்போக, “பாவப்பட வேண்டாம், காலைல அதை காம்பன்ஸேட் பண்ணிட்ட” என்றான்.
“காலைலயா? நான் ஒன்னும் பண்ணலையே”
“என் கைக்குள்ளயிருந்து வெளில போக அஞ்சு நிமிஷமா ட்ரை பண்ணிட்டிருந்த, வாட் எ மொமண்ட்” என்றான் கிறக்கமாக.
நேற்றிரவின் முதல் அனுபவத்திற்கு பின்னே பல நிமிடங்கள் வரை உடையணியக்கூட தோன்றாமல் செல்வனின் மயக்கத்திலிருந்தாள் செல்வி. போர்வை எடுத்து செல்வன் போர்த்தி விட்டதும் மயக்கம் தெளிந்தவள், உடையணிய முயற்சி செய்ய, ‘அப்புறம் போட்டுக்கலாம், டென் மினிட்ஸ் ப்ளீஸ்’ என்று அணைத்துக்கொண்டான் பொற்செல்வன்.
செல்வனுக்கு மறுக்கத் தோன்றாமல், பத்து நிமிடம்தானே? என்று நினைத்தவள் ஐந்து நிமிடத்திலேயே உறங்கிப்போயிருந்தாள்.
செல்வி மீதான தாகம் தணியவில்லை என்றபோதும், உண்ணாமல் உறங்கிவிட்டாளே என்று சில முறை செல்வி என்று குரல் கொடுத்தான். கன்னம் தட்டிப்பார்த்தான். செல்வியிடம் அசைவில்லாமல் போக, அயர்ந்து உறங்கும் மனைவியை தொல்லை செய்ய மனமில்லாமல் தானும் உறங்கிப்போனான்.
ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கியதாலோ, அல்லது ஆழ்ந்த உறக்கம் என்பதாலோ… அதிகாலை மூன்றரை மணிக்கே விழிப்பு வந்துவிட்டது செல்விக்கு.
செல்வனின் கைக்குள் அடங்கியிருந்த செல்விக்கு கணவனின் தூக்கத்தை கெடுக்காமல் மெத்தையிலிருந்து எழுவது அத்தனை எளிதாய் இல்லை. பெரும் சிரமத்திற்கு பின்னே கையில் கிடைத்த சிறிய துணியால் தன்னை மறைத்தபடி கபோர்டில் உள்ள பெரிய துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்த பின்னேதான் பெரும் ஆசுவாசம் உண்டானது.
“ப்ராடு… முழிச்சிட்டுதான் இருந்திங்களா?” என திட்ட முயன்றவளுக்கு முறைக்கக்கூட முடியாமல் போக, “எதாவது உளறிடாதடீ, அஸ்வத்துக்கு புரியும்” என்றான் சிரிப்போடு.
பெரும் அவஸ்த்தைக்கு உள்ளான செல்விக்கு திடலுக்கு வரும்வரை பேச்சு வரவில்லை. குதிரை மீதிருந்து குதித்தவன், செல்வியையும் இறக்கி விட்டு அஸ்வத்தை ஓரிடத்தில் கட்டி வைத்து சற்று தள்ளி சென்று அமர்ந்தான் மனைவியோடு.
பின்னே பையிலிருந்து ரொட்டித் துண்டுகளை எடுத்துக் கொடுத்து, “இதை சாப்பிடு, அப்புறம் காஃபி குடிக்கலாம்” என கொடுத்து, தானும் உண்டான்.
“அஞ்சு நிமிஷம்தானே கிச்சன்ல இருந்திங்க? இதை எப்போ ப்ரிப்பேர் பண்ணுனிங்க?” என்று வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.
“பால் அடுப்புல வச்சிட்டு வேற எதாவது சாப்பிட இருக்கானு பார்த்தேன், ப்ரட் இருந்தது, ஃப்ரிட்ஜில ஜாம் இருந்தது. ப்ரட்ல ஜாம் போட்டு பேக் பண்ணினேன், பால் பொங்கினதும் காஃபி கலந்தாச்சு, சிம்ப்பிள்” என்றான்.
“என்னை போல பண்ண வேண்டாம், பேஸிக்ஸ் சொல்லித்தரேன், ஈஸியாதான் இருக்கும், வா”
“நான் மாட்டேன்” என்றாள்.
மனைவியை வற்புறுத்தாமல் தனது பயிற்சியை தொடர்ந்தான். செல்வனை ரசித்துக்கொண்டிருந்த செல்விக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஆறு மணி ஆகிட, கருமை நீங்கி லேசான வெளிச்சம் எட்டிப்பார்க்க, தனது பனியனால் முகத்திலுள்ள வியர்வையை துடைத்தபடி “கிளம்பலாமா?” என்றான்.
இருவரும் வீட்டிற்கு வர, “போன் கூட எடுத்துக்காம எங்கேடா போனிங்க?” என்று செல்வியின் முடியை தொட்டுப்பார்த்து, “முடியை கூட காய வைக்கில, தலைவலி வரப்போகுது” என்றார் அமிர்தவள்ளி.
கேக்குறான் பாரு கேள்வி, முதல்ராத்திரி முடிஞ்சு வெளில வர மருமக முகத்தை பார்த்தாதானே சந்தோசமா இருந்தாளா இல்லையானு வீட்டுல உள்ள பெரியவங்களுக்கு தெரியும்.
இங்க இரண்டும் ஜோடியா வந்து நிற்குதுங்க, அதிலும் இவன் எதோ விளையாட்டு போட்டிக்கு போய்ட்டு வந்தமாதிரி வேர்த்து போய் வந்துருக்கான். இவனுக்கு நேத்து கல்யாணமானதாவது நினைவிருக்கானு தெரியலையே’ என்ற ஆற்றாமையோடு பல கேள்விகள் மனதில் ஓடிய போதும்,
“நேத்துதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, இப்படி பத்து வருசம் பழகினமாதிரி வெளில போய்ட்டு வந்தா கண்ணுபட்டு போகாதா?” என்றார்.
“காமடி பண்ணாதிங்கம்மா, நேத்து கல்யாணம் பண்ணினா இன்னைக்கு வெளில போகக்கூடாதுனு இருக்கா? நான் போய் குளிச்சிட்டு வரேன்”
“குளிக்காமத்தான் வெளில போனிங்களா?”
“ம்மா… குளிச்சிட்டுத்தான் போனேன், எக்ஸைஸ் பண்ணினதுல கசகசனு இருக்கு, இன்னொருமுறை குளிக்கக்கூடாதா? இன்னும் என்னென்ன ரூல்ஸ் இருக்கு? முதல்ல அதை சொல்லுங்க” என்று சோபாவில் அமர்ந்தான்.
“வெளிநாட்ல இருக்கும்போது காபி போட்டு குடிச்சேனு சொல்லியிருக்கான் ராஜி, ஆனா எனக்கு போட்டு கொடுத்ததில்ல” என அமிர்தவள்ளியும் கிண்டல் பண்ண,
“உங்களுக்கு என் அப்பா போட்டு தருவார்ம்மா” என்று சிரித்தான் பொற்செல்வன்.
அமிர்தவள்ளிக்கு வெக்கம் வர, “அப்போ மாமா காபி போட்டு கொடுத்தது உண்மைதானாத்த?” என்று ராஜலஷ்மியும் வியந்த பாவனையோடு சிரித்தாள்.
“இந்த கிறுக்கன் சொல்றானு நீ வேற கேக்குறியா? போய் பேத்தியை ஸ்கூலுக்கு அனுப்ப ரெடி பண்ணு” என்று அதட்டினார் பொய்யாக.
அத்தையின் வெக்கத்தை ரசித்தபடி நவீனா அமைதியாக நின்றிருக்க, சிரிப்பை உள்ளடக்கிய ராஜலஷ்மி, “ஹம்… என் புருசன் இன்னும் தண்ணி கூட எடுத்து கொடுத்ததில்ல” என்று பெருமூச்சிழுத்தபடி உள்ளே போனாள்.
புருஷோத்தமன் வெளியே நடக்கும் சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டுதான் இருந்தார். தேவராஜ் தேவேந்திரன் திருமணத்தின் போதெல்லாம் மகன் மருமகளுக்கு சங்கடம் வேண்டாம் என்று எட்டு மணிக்கு மேல்தான் வெளியே வருவார்.
ஆனால் இன்று தன் மனைவி சின்னவனிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்து வெளியே வந்தவர், “காபி போட்டு கொடுக்குறது என்ன? என் பொண்டாட்டிக்கு சாப்பாடே ஊட்டி விட்டுருக்கேன், அதுக்கென்னடா இப்போ?” என்றார் பொற்செல்வனிடம்.
செல்வியின் அணைப்பிலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாள் என்று புரிந்தபோதும், எதற்காக என்று யோசித்தவனுக்கு சில நிமிடம் கழித்தே, அவளின் பெற்றோர் தனது பெற்றோர் போல் இல்லை என நினைக்கிறாள் என்பது புரிந்தது. ஆனால் அதைப்பற்றி நினைக்காதே என்றால் வருந்துவாள்.
“உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணிட்டு வேற பொண்ணை நிச்சயம் பண்ணியிருந்தாலும் என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டல்ல? ஐயம் ஆல்ஸோ ப்ளஸ்ட்” என்று அணைப்பை கூட்டி அவளின் வருத்தத்தை மறக்க வைக்க முயன்றான்.
சற்று நேரம் அணைத்தபடி நின்றிருந்தவன், “சீனியர்ஸ் ரேகிங்லயிருந்து என் பொண்டாட்டியை காப்பாத்திட்டேன்” என்றான் பெருமையாக.
ஆமாம்ல? இன்று காலை ராஜிக்கா, ஆன்ட்டி எல்லாரையும் எப்படி பார்ப்பது என்று சங்கடப்பட்டிருந்தது நினைவிலேயே இல்லாமல் போனதை தற்போதுதான் உணர்ந்தாள்.
“அதுக்குத்தான் வெளில கூட்டிட்டு போனிங்களா?” என பெருமையடைய, ஆமாம் என்பதாய் தலையசைத்தவன், “நீயும் இன்னொரு முறை குளிச்சிடு” என்று செல்வியை அள்ளி மெத்தையில் விட, “ஏங்க…” என இவள் தவிக்க, “எக்ஸைஸ் பண்ணும்போது அப்படி பார்த்த… நான் எதாவது சொன்னேனா? இப்போ என் டர்ன்” என்று செல்வியின் இதழில் தொடங்கிய முத்தம் இஷ்டப்படி பயணிக்க,
“பார்க்குறதும் பண்றதும் ஒன்னா?”
“ஹா..ஹா ஒன்னு இல்லதான், நீ பண்ணுனதையேதான் நானும் பண்ணனும்னு ரூல்ஸ் இருக்கா என்ன? கமான் பொண்டாட்டி” என்று உடை களைய ஆரம்பித்தவன், தனது செயலால் மனைவியின் தவிப்பை தாபமாக மாற்றிக்கொண்டிருந்தான்.