தேவராஜிற்கு அலுவலகம், கம்பெனி வேலைகளில் நாட்டம் இல்லாததால் தேவேந்திரனோடு செம்மரம் தொழிலை கவனிக்க ஆரம்பித்தான். நவீனா கர்ப்பம் தரித்த நாளிலிருந்த தேவராஜ் அதிகம் வீட்டில்தான் இருப்பான். தேவராஜ் இப்படி பொறுப்புள்ளவனாக மாறியதில் பெற்றோருக்கு அத்தனை மகிழ்ச்சி.
மாதத்தில் பாதி நாள்களுக்கு மேல் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் பொற்செல்வன், திருமணத்திற்கு பின்னே எங்கு சென்றாலும் தன்னோடு மனைவியையும் அழைத்துக்கொள்வான்.
உள்ளூரில் இருக்கும்போதும் செல்வனோடு அலுவலகம் செல்வது, வெளியூர் சென்றாலும் உடன் செல்வது என்று எந்நேரமும் பொற்செல்வனோடு இருப்பவளுக்கு காலம் அழகாய் சென்றது.
ஏழு மாதம் கழிந்த பின்னே கர்ப்பம் தரித்தாள் செந்தமிழ்செல்வி. உடல் ரீதியான ஆய்வுகளோடு மனரீதியாகவும் ஆய்வு செய்தான் பொற்செல்வன். உடல் ரீதியான ஆரோக்கியத்தில் குறையில்லை.
Advertisement
மன ரீதியான ஆய்வில்… பொற்செல்வனோடான வாழ்க்கையை ரசித்து வாழ்ந்ததில் தந்தையை தவிர்த்திருந்தாளே தவிர, அவர் செய்த துரோகங்களை மறக்கவில்லை. தந்தை மீதான கோபம் சிறிதும் குறையவில்லை என்றுதான் மருத்துவர் சொன்னார்.
இளவரசன் மூலமாக தாமோரனுக்கு இந்த செய்தி போனது. மகள் அன்னையாகப்போகிறாள் என்று பெரிதாய் மகிழ்ந்தார் தாமோதரன்.
தற்போதெல்லாம் மகளின் நினைவிற்கு ஈடாக சாம்பவியின் நினைவும் படுத்தியது. பெற்றோரிடத்தில் சாம்பவி வாழ்வை சீர்குலைத்துவிட்டேன் என்று வருந்துவார்.
Advertisement
தாமோதரனிடமிருந்து சுபாஷினி மொத்தமாய் விலகிவிட்டாள். மகன் திருந்திவிட்டானே, சாம்பவி மன்னிப்பை ஏற்பாளா? மகளின் நினைவில் வாடும் தாமோதரனின் நிலை இப்படியேத்தான் நீடிக்குமா என்று வேதனையில் உழன்றனர் தாமோதரனின் பெற்றோர்.
Advertisement
இதோ மேலும் ஒரு வருடம் முடிந்துவிட்டது, ஆனால் இவர்கள் மனவேதனை தீரவேயில்லை.
செல்வி தந்தையை மன்னிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை பொற்செல்வன். ஆனால் அவரால் உண்டான மன அழுத்தம் இன்னமும் குறையவில்லை என்பதுதான் பொற்செல்வனின் கவலை.
இது உன் ஹெல்த்துக்கு நல்லதில்ல செல்வி. இன்னும் எத்தனை காலத்திற்கு உன் அப்பாவை சுமந்துட்டு இருக்கப்போற? அவர் சொத்தும் வேண்டாம், அவர் உறவும் வேண்டாம்னு நினைக்கிறது போல, அவர் நினைவும் வேண்டாம்னு மறந்துடுடீ” என கெஞ்சலாக, தன்மையாக, மிரட்டலாக என்று எல்லா விதத்திலும் சொல்லிப்பார்த்துவிட்டான்.
Advertisement
செல்வியிடம் மாற்றம் இல்லை. ‘உன் அப்பா திருந்திட்டாராம், அந்த லேடியோட இப்போ டச்சே இல்ல. ஆன்ட்டியை நினைச்சி வேதனைப்படுறாராம்’ என்று வாயப்பு கிட்டும்போதெல்லாம் சொல்வான் பொற்செல்வன்.
‘அதுக்கு என்ன பண்ணலாம்?’ என்பாள்.
‘அதுக்கு நீ ஒன்னும் பண்ண வேண்டாம். அவர் செய்த தப்பை உணர்ந்துட்டார், ஆன்ட்டி கஷ்டப்பட்டதை போல, இப்போ ஆன்ட்டி இல்லாம உன் அப்பா கஷ்டப்படுறார், உன் அப்பாக்கு காலம் பதில் சொல்லிட்டிருக்கு’
வளைகாப்பு, குழந்தை பிறப்புனு நம்மளோட எல்லா விசயத்துலயும் அவரை ஒதுக்கி வச்சாச்சு. எனக்கு அவரைப் பத்தி கவலை இல்ல, நீ சரியா இருக்கனும். அம்மா ஆகிட்ட, உனக்குனு ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ் இருக்கு. உன் ஹெல்த் நல்லா இருக்க வேண்டாமா?’ என எடுத்துரைப்பான்.
தன் நலனுக்காகத்தான் பொற்செல்வன் பேசுகிறான் எனப் புரிந்தபோதும், ‘நான் சூப்பரா இருக்கேன், அவரைப் பத்தி பேசினாதான் எனக்கு டென்ஷன் ஆகுது’ என்ற வசனத்தை மட்டும் மாற்றவேயில்லை செல்வி.
அதுவும் பொற்செல்வன் மட்டுமே இத்தனை பேச முடியும். இளவரசனெல்லாம் தந்தையைப் பற்றி செல்வியிடம் பேசவேமாட்டான். எங்கே தன்னோடான உறவையும் முறித்துக்கொள்வாளோ என்று பயம்.
குழந்தை பிறந்த பின்னேதான் தன்னோடு பழைய செல்விபோல் ஒட்டுகிறாள். வீட்டிற்கு வந்ததும் குழந்தையை கொஞ்சிவிட்டால் போதுமே… இளவரசனை முறைத்துக்கொண்டு ஐந்து நிமிடம் வரை பேசவேமாட்டாள்.
‘உனக்கு அவன்தான் முக்கியம். நானில்லதானே? போடா… இந்தா நீ வாங்கி வந்ததை அவனுக்கே கொடு’ என பிணங்கிக்கொள்வாள். பொற்செல்வன் வீட்டிற்கு வந்துவிட்டால் இளவரசனின் கவலைகள் எல்லாம் மறந்துபோய்விடும்.
நவீனாவின் இரட்டை குழந்தைகளும், செல்வியின் மகனும் செய்யும் சேட்டைகளில் தன்னை மறந்திடுவான். பணிச்சுமை, அன்னை, மற்றும் தாத்தா பாட்டியின் திருமண வற்புறுத்தல், தந்தையின் வேதனையான முகத்தை சரி செய்ய முடியாத நிலை என அனைத்தும் மறந்து குழந்தைகளோடு ஐக்கியமாகிடுவான்.
இங்கே குழந்தைகளோடு எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் தந்தை பார்க்கிறார் என்பதை பொற்செல்வன் செல்வியிடம் சொல்லியிருந்தான். வழக்கம்போல் செல்வி கோபமடைந்தாள்.
இளவரசனின் உரிமைகளில் தலையிடுவது தவறு, எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண கத்துக்கோ. உன் அப்பா மேல உள்ள கோபத்துல இளவரசனை தள்ளி வைப்பியா? அத்தனை சொத்தும் வேண்டாம்னுட்டு உனக்காகத்தானே கவர்ன்மண்ட் ஜாப்ல இருக்கிறான்? இளவரசனை தள்ளி வச்சா நம்ம பிள்ளைகள் தாய்மாமன் உறவை இழந்திடுவாங்க, உன் கோபத்தை உன் அப்பா, தாத்தா பாட்டியோட நிறுத்திக்கோ” என்று நிதர்சனைத்தை எடுத்துரைத்தான் பொற்செல்வன்.
ஆமாம்ல? தனது கோபத்தால் தன் பிள்ளைகளும் தாய்மாமன் உறவை துறக்க நேரிடுமே… அதோடு இளவரசன் தன்னை காண வந்தால் தனக்குள் ஏற்படும் உணர்வுகளை விவரிக்க முடியாது.
கர்பனியாக இருக்கும்போது செல்வியின் நலனையும், அவளின் ஆசை என்ன என்பதையும் கேட்டுக்கொண்டே இருப்பான். பத்து வருடங்களாக அன்னையோடு தனித்து வாழ்ந்த செல்விக்கு அது ஒரு பரவசநிலை.
கணவன் வீட்டில் எத்தனை இருந்தாலும், பிறந்த வீட்டின் உறவென்று ஒருவர் வந்து நிற்பது எந்த வகையான நிம்மதியையும் சந்தோசத்தையும் கொடுக்கும் என்பதை உணர்ந்த செல்விக்கு, இளவரசனின் உறவில்லாத வாழ்வை யோசிக்க கூட முடியவில்ல.
கணவன் சொல்வதை மனதளவில் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறாள். அதன் விளைவாகத்தான் தன் குழந்தையின் புகைப்படத்தையும் வீடியோவையும் தந்தை பார்க்கிறார் என்பதை அறிந்தும் இளவரசனிடம் சண்டை போடாமல் இருக்கிறாள்.
செல்வியின் திருமணத்திற்கு முன்னே, அன்னையின் சந்தோசத்திற்காக திருமணம் செய்து கொள்வேன் என்ற இளவரசன் தற்போது கொஞ்ச நாள் ஆகட்டும் என்பதையே ஒன்றரை வருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறான்.
சாம்பவியும் பல பெண்களின் புகைப்படத்தை காண்பித்து விட்டார். அத்தனையும் நிராகரித்தான். திருமணத்தை நிராகரிப்பதற்கான காரணத்தை உண்ணாவிரதம் இருந்துதான் சாம்பவி அறிந்துகொண்டார்.
மகனின் ஆசை நியாயமானதுதான். ஆனால் செல்வி இதற்கு சம்மதிப்பாளா? வற்புறுத்தினால் மன அழுத்தம் அதிகமாகுமா என்று பயத்தில் சாம்பவியும் செய்வதறியாது அமைதியாகிவிட்டார்.
இளவரசனைப் பார்த்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. தற்போது மும்பையில் பணிபுரிகிறான். காலையிலிருந்து இரண்டு முறை இளவரசனிற்கு அழைத்துவிட்டார் சாம்பவி. அழைப்பை ஏற்கவில்லை இளவரசன்.
செல்வி அழைத்ததும் அழைப்பை ஏற்றான். “அம்மா போன் செய்தா ஏன் அட்டன் பண்ணமாட்டேங்குற?” என கடிந்தாள்.
“அட்டன் பண்ணினா கல்யாணத்தை பத்தி பேசுறாங்க, எனக்கு கடுப்பாகுது” என்றான் கோபமாகவே.
“நீ ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற?”
“செல்வி எனக்கு வேலையிருக்கு. நான் அப்புறம் பேசுறேன்” என்று இணைப்பை துண்டித்துவிட்டான்.
“குட்டீஸ் பத்தி கூட கேட்காம கட் பண்ணிட்டாங்க, என்கிட்ட கோபமா பேசமாட்டான்தான? இன்னைக்கு கத்துறான்” என வெம்பினாள் கணவனிடம்.
செல்வியிடம் கோபமாக பேசியதை உணர்ந்து மீண்டும் அழைத்துவிட்டான். “கட் பண்ணிட்டு எதுக்குடா போன் பண்ணின?” என்றாள் ஆற்றாமையோடு.
“எனக்கும் உன்னை பார்க்கனும், குட்டீஸை பார்க்கனும். சீக்கிரம் வர ட்ரை பண்றேன், இப்போ பிஸியா இருக்கேன், நைட் கால் பண்றேன்” என்று கோபமில்லாமல் சொல்லி இணைப்பை துண்டித்தான்.
“செல்வி… எனக்கு ஒரு விசயம் தோணுது. டென்ஷன் ஆகாம கேட்பியா?” என்றான் பொற்செல்வன்.
“ம்”
“இளவரசன் கல்யாணத்தை தள்ளி போடுறதுக்கு காரணம் நீயா இருக்கும்னு தோணுது”
“நானா? நான் என்ன பண்ணினேன்?”
“பார்த்தியா? இதை சொன்னதுக்கே டென்ஷனாகுற, அப்போ என் மனசுல உள்ளதை எப்படி சொல்ல?”
“இல்ல, நான் டென்ஷன் ஆகல. நீங்க சொல்லுங்க”
“இளவரசன் கல்யாணத்துக்கு நாம போவோம்தானே?”
“ஆமாங்க, நாம இல்லாம எப்படி?”
“உங்கப்பா பொண்ணு கல்யாணத்தைதான் மிஸ் பண்ணிட்டார். அவர் செய்த தப்புக்கு இதெல்லாம் அனுபவிச்சுத்தான் ஆகனும். ஆனா இளவரசன் கல்யாணத்தையும் மிஸ் பண்ண நினைப்பாரா? உன் அப்பா இல்லாத கல்யாணம் இளவரசனுக்கு சந்தோசத்தை கொடுக்குமா?” என்றதும் அனைத்தும் புரிந்துகொண்டாள் செல்வி.
“என்னால… எனக்காக, இதை நினைச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கானா?” என்றவளுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
மனைவியை அணைத்தபடி அமைதியாக நின்றிருந்தான் பத்து நிமிடம்வரை.
அப்ராட்ல படிக்கப்போன இளவரசன், படிப்பை முடிச்ச பின்னாடி அம்மா தங்கையைப் பத்தி பேசி புரிய வைக்கலாம், அப்பாவை மன்னிப்பு கேட்க வைக்கலாம்னு நிறைய ப்ளான்ல இருந்தானாம்.
உன் அப்பா தப்பு பண்றானு படிப்பை முடிச்சிட்டு வந்த பின்னாடிதான் தெரிஞ்சிருக்கு. ரொம்ப வேதனைப்பட்டுருக்கான். அவனாலயே அப்பாவை மன்னிக்க முடியாதப்போ அம்மாகிட்ட இதுபத்தி பேசுறது தப்புனு புரிஞ்சிக்கிட்டான்.
இனி அம்மாப்பா சேரமாட்டாங்கனு உறுதியா தெரிஞ்சதுக்கப்புறம்தான் சிவில் சர்வீஸ்க்கு படிக்க முடிவு பண்ணியிருக்கான். அதுக்கப்புறம் நடந்ததுதான் உனக்கே தெரியுமே.
நீ அப்பா பாசத்தை இழந்த மாதிரி அவனும் அம்மாவை பிரிஞ்சிருக்க கஷ்டப்பட்டுருப்பான்தானே? உனக்காவது ஆன்ட்டி கூடவே இருந்தாங்க.
இளவரசனுக்கு அப்படியில்ல. பதினேழு வயசுல படிக்க போனவன், இப்போ வரைக்கும் தனியாத்தான் இருக்கான். வாழ்க்கை இழந்த அம்மாக்காக பார்க்குறதா? இப்போ திருந்தி வாழ்ற அப்பாக்காக பார்க்குறதானு புரியாம தவிச்சிட்டிருக்கான்.
எத்தனை மன்னிப்பு வேண்டினாலும் நீயும், ஆன்ட்டியும் இழந்ததை உன் அப்பாவால திருப்பி கொடுக்க முடியாது, உங்களுக்கு செய்த துரோகத்துக்கு அவரை நிராகரிச்சு சரியான தண்டனை கொடுத்திருக்கிங்க. அவரும் அவருக்கான தகுதியை உணர்ந்து விலகியிருக்கார்.
இளவரசனுக்கு அப்பா மேல பாசம் இருந்தாலும் உன் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கிறான். அதேபோல அவன் உணர்வை நீயும் வேல்யூ பண்ணனும். கல்யாணத்துக்கு உன் அப்பா வரதுக்கு நீ சம்மதிச்சா இளவரசன் கல்யாணத்துக்கு சம்மதிப்பான்” என்றான்.
“வரட்டும், அவர் என்கிட்ட பேசவிடாம நீங்க பார்த்துக்கோங்க” என்றாள் கண்களை துடைத்தபடி.
இத்தனை சீக்கிரம் சம்மதிப்பாள் என்று எதிர்பாராதவன், “உன் அப்பாவை பார்த்ததும் நீ என்ஜாய் பண்ணாம இருக்கக்கூடாது. உன் அண்ணன் கல்யாணத்துல உனக்கான உரிமையை சந்தோசமா செய்யனும்” என்றான்.
“கண்டிப்பா செய்வேன், நீங்க என்கூட இருக்கும்போது எதையும் ஃபேஸ் பண்ணுவேன்” என்றவளை அணைத்துக்கொள்ள தானும் அணைத்துக்கொண்டாள்.
அவளின் அப்பாவைப் பற்றி பேசியதும் முன்புபோல் மன அழுத்தம் அகிமாகி தூங்கிடுவாளோ என்று செல்வன் கவலையோடு பார்த்திருக்க, அப்படியில்லாமல் “இளவரசனுக்கு ஏத்த இளவரசியை பார்க்கனும்” என்றாள் ஆர்வமாக.
“உன் அண்ணன் யாரை கட்டிக்கிட்டாலும் இளவரசியா மாத்திடுவான், உன் அண்ணனுக்கு கால் பண்ணி உன் சம்மதத்தை சொல்லு, நாளைக்கே பறந்து வந்துடுவான்” என்றான்.
“இதை ஒரு வருசம் முன்னாடியே சொல்லியிருக்க வேண்டியதுதானே?” என செல்வனை கடிய,
“அவனை இம்ப்ரஸ் பண்ற மாதிரியான பொண்ணு இன்னும் கிடைக்கலை போலனு நினைச்சிட்டிருந்தேன், என்னைக்கும் கோபமா பேசாதவன் இன்னைக்கு ஏன் பேசினானு யோசிக்கும்போதுதான் இப்படினு புரிஞ்சது. முன்னாடியே தெரிஞ்சிக்க நானென்ன மந்திரவாதியா?” என முறைத்தான்.
“இளவரசனுக்கு கால் பண்றேன்” என்று அழைத்து பேச, “நிஜமாவா சொல்ற?” என்றான் ஆச்சர்யமாக.
“ம்… நிஜமாத்தான் சொல்றேன், இப்போவும் எனக்கு அவர் வேண்டாம்தான்” என்று உயர்ந்து ஒலித்த குரல் “ஆனா நீ வேணும்” என்று பாசமாய் ஒலித்ததில் கரைந்து போனான் இளவரசன்.
தங்கையின் சம்மதத்திற்கு நன்றி சொல்வதா? பாராட்டுவதா என்று கூட தெரியவில்லை இளவரசனுக்கு. நிச்சயம் பொற்செல்வன்தான் எடுத்துரைத்திருப்பான் என்று, “செல்வா எங்கே?” என்றான்.
“பரவால்லம்மா” என்று அனைவரின் நலம் விசாரித்து, உறங்கும் குழந்தைகளை பார்த்து ரசித்து மெல்லிய முத்தம் கொடுத்தான்.
“ஏன்டா வரேனு சொல்லல?” என கிசுகிசுத்தாள் செல்வி.
“ஹ..ஹா… நீ தைரியமான ஆள்னா அதை சத்தமா கேளு பார்க்கலாம்” என இளவரசன் தங்கையை வம்பிளுக்க, “டேய்… உன் குரல் கேட்டாலும் முழிச்சிப்பாங்க, மெல்ல பேசு” என அதட்டினாள் கிசுகிசுப்போடே.
“முதல்ல சாப்பிட கொடு செல்வி, சண்டை அப்புறம் போடலாம்” என்றான் பொற்செல்வன்.
“சாப்பிட்டுத்தான் வந்தேன். தண்ணி மட்டும் கொண்டுவா செல்வி” என்று வாங்கிப்பருகினான்.
செல்வி இளவரசனின் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பிக்க, “ட்ராவல் டையர்ட்ல இருப்பான், இதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம், போய் படு. நாளைக்கு கம்பெனில நிறைய வேலையிருக்கு” என்றான்.
மனைவியை அறைக்குள் அழைத்து வந்தவன், “இளவரசன் கல்யாணத்துக்கு உன் அப்பா வரதுக்கு சம்மதிச்சிருக்க. கண்டிப்பா இதை உன் அப்பாகிட்ட சொல்லியிருப்பான். அவர் எதாவது சொல்லியிருப்பார்.
அவர் பேசினது இளவரசனுக்கு சந்தோசத்தை கொடுத்ததா? வருத்தத்தை கொடுத்ததானு நமக்கு தெரியாது. உன்கிட்டயும் ஆன்ட்டிகிட்டயும் இதைப் பத்தி பேச முடியாது. என்கிட்ட பேசட்டும். உன் அப்பாக்காக இல்ல, இளவரசனுக்காக சொல்றேன்.
நீ மனசுல வச்சிட்டு புழுங்கின மாதிரியான நிலை அவனுக்கு வேண்டாம்னு நினைக்கிறேன். நான் ஸ்பேஸ் கொடுக்கலைனா உள்ளுக்குள்ளயே வருத்தப்படுவான்” என்றான் தன்மையாக.
தனது அண்ணனுக்காக யோசிக்கும் கணவன் இன்னும்தான் ஈர்த்தான். “நீங்க போய் பேசிட்டு வாங்க, நான் வெய்ட் பண்றேன்” என்று மொபைலை எடுத்தவள் அதில் கவனமானாள்.
“ம்… நானும் நினைச்சேன், அவருக்கு அனுப்பி வச்ச ஃபோட்டோஸைதான் சுபாஷினிக்கும் அனுப்பினேன். அதை வச்சு கண்டுபிடிச்சிருப்பார்”
“எப்படி இப்படி சரியா கெஸ் பண்றிங்க?” என்றான் ஆச்சர்யமாக.
“அதை விடு, நான் மிரட்டி சுபாஷினி விலகினதுக்காக உன் அப்பா என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கக்கூடாதுனு சொல்லி வை”
“இல்ல அப்படி ஏதும் பண்ணமாட்டார், அப்படி பண்ணினா செல்வி உங்க மேல கோபப்படுவானு அவருக்கு புரியுது. பெரிய டென்ஷன்லயிருந்து என்னை காப்பாத்தியிருக்கார், என் மருமகன் செல்விக்காகத்தான் என்கிட்டயிருந்து விலகியிருக்கார், என் மகளோட மனசை புரிஞ்சி நடந்துக்கிறார்.
உன் கல்யாணத்துக்கு நான் வந்தா செல்வியும் சாம்பவியும் வரமாட்டாங்களோனு பயந்துட்டிருந்தேன். நான் செய்த தப்புக்கு தண்டனையா உன் கல்யாணத்துலயும் தள்ளியே இருந்துக்கலாம்னு கூட யோசிச்சிருக்கேன்.
என்னை அந்த நிலைமைக்கு தள்ளாம செல்வி சம்மதிச்சிருக்கா. இதுவே எனக்கு பெரிய விசயம். உன் கல்யாணத்துல மகள் மருமகனுக்கு சங்கடம் தராம தள்ளியிருந்து பார்த்துக்குறேனு சொன்னார்”
பொற்செல்வன், “ஆன்ட்டிக்கு செய்த துரோகத்தையும், பொண்ணோட படிப்பு, எதிர்காலத்தை விட அவரோட சந்தோசம்தான் முக்கியம்னு இருந்துருக்காருங்கிறதையும் செல்வியால தாங்க முடியல. எல்லாம் இழந்த பின்னாடி புத்தி வந்து என்ன யூஸ்?
மன்னிக்க முடியாத விசயங்களை மன்னிச்சிடுனு சொல்றதும் தப்புதானே? பாதிக்கப்பட்டவங்களுக்குத்தானே அதோட வலி தெரியும்.
கோபம், பொறுமை, ஆணவம், ஆசைனு எல்லாத்துக்கும் ஒரு எல்லையிருக்கு. பணம் இருக்குன்ற ஆணவத்துல தகாத உறவை தேடிப்போனார். வரம்பை மீறிய ஆசை உன் அப்பாவை இந்த நிலைக்கு தள்ளியிருக்கு. செய்த தப்புக்கான பலனை அனுபவிச்சுத்தானே ஆகனும்?” என்றான் வருத்தமாக.
பொற்செல்வன் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமே இல்லை என்று புரிந்தவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நன்றியோடு பார்த்த இளவரசனுக்கு கண்கள் கலங்கிவிட, “கல்யாணத்துக்கு முன்னாடியே கண்ணீரை தீர்த்துடாதடா, கல்யாணத்துக்கு அப்புறம்தான் மெயின் டாஸ்க் இருக்கு” என்றான் கிண்டலாக.
“அப்படியா?” என சிரித்தவன், “நீங்க போய் தூங்குங்க, நானும் அம்மா தூங்குறதுக்கு முன்னாடி கிளம்பறேன்” என்றான்.
இளவரசனை அனுப்பி வைத்து பொற்செல்வன் அறைக்கு வர, கைகளை விரித்தபடி புன்னகையோடு வரவேற்றாள் கணவனை.
அரைமணி நேரம் கழித்து அறைக்கு வந்தபோதும், ஏதும் கேட்காமல் தன் ஆசை தீர்க்க காத்திருக்கும் மனைவியிடம் சரணடைந்தான் பொற்செல்வன்.