Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –12

”குணா ஏன் அழுத” என்றாள் கண்மணி

”ஒண்ணுமில்லை” என்றான் குணா வெறுப்பாக

”எல்லாம் நம்ம நன்மைக்காகதான் சொன்னேன்”



Advertisement

”சரி”

”ப்ளீஸ் என்னை பார்த்து பேசு ஏன் தலைகுனிஞ்சி பேசற”

”என்னால முடியலை கண்மணி, உன்னைப் பார்த்தா நிச்சயம் நான் அழுதுடுவேன்”

Advertisement

”அழற அளவுக்கு இங்க எதுவும் நடக்கலை குணா”

Advertisement

”நீதான் காதலே வேணாம்னு சொல்லிட்டியே”

”படிப்பு வீணாயிடும்ல“

”அதெல்லாம் வீணாகாது”

Advertisement

“எப்படி சொல்ற, ஒருவேளை படிப்புல நாம தோத்துட்டா வாழ்க்கையில தோத்த மாதிரிதான் புரிஞ்சிக்க குணா”

”கண்மணி நீ ரொம்ப யோசிக்கற, படிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும், வாழ்க்கையும் முக்கியம்தானே, இத்தனை வருஷம்தான் எதுக்கு வாழனும், யாருக்காக வாழனும்னு விட்டேத்தியா வாழ்ந்துக்கிட்டு இருந்த எனக்கு நீ வந்தபின்னாடிதான் வாழ்க்கை மேல ஒரு பிடிப்பு வந்திருக்கு, வாழனும்ங்கற ஆசை வந்திருக்கு, அந்த ஆசையை நீயே மண்ல போட்டு புதைக்கலாமா சொல்லு”

”அய்யோ நான் அப்படி நினைச்சி சொல்லலை, காதலால படிப்புக்கு பாதகம் வரக்கூடாதுன்னு நினைச்சேன்”

”நான் தடுமாறிட்டேன்னு நினைக்கிறயா“

”ஆமாம் மனசு தடுமாறினா பாடம் தலைக்கு ஏறாது, நான் இன்னிக்கு இந்த பாவாடை தாவணியில வந்திருக்கவே கூடாது, தப்பு பண்ணிட்டேன்”

”ப்ச் இப்படி பேசி வைக்காத கண்மணி, எனக்காக நீ செய்ற சின்ன சின்ன விசயம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, புதுசா ஒரு வாழ்க்கை கிடைச்ச மாதிரியிருக்கு, இப்பதான் நான் எனக்காக வாழ ஆரம்பிச்சிருக்கேன், அது உனக்கு பொறுக்கலையா அதை கெடுக்கனும்னு நினைக்கறியா”

”நான் அப்படி நினைக்கலை என்னால உன் படிப்பு கெடக்கூடாதுன்னு நினைக்கிறேன்“

”அதெல்லாம் கெடாது கண்மணி”

”எப்படி நம்பறது“

”சரி என்ன செய்தா நீ நம்புவ சொல்லு, வேணா டெஸ்ட் வைக்கறியா நான் எழுதிகாட்டறேன், எல்லாமே கரெக்டா இருக்கும், நான் படிப்பு விசயத்தில உறுதியா இருக்கேன், தெளிவாவும் இருக்கேன் என்னை நம்பு”

”ம்ம் அடுத்த வாரம் மன்த்லி டெஸ்ட் வருது, அதுல நீ முழு மார்க் வாங்கிட்டா இந்த காதலை தொடரலாம் இல்லைன்னா”

”போதும் அதுவரைக்கும் காதலிக்க கூடாதா“

”காதலிக்கலாம் ஆனா உன்னோட உறுதி தெளிவு எந்தளவுக்கு இருக்குன்னு டெஸ்ட் ரிசல்ட் காட்டிக் கொடுத்துடும், நீ மட்டும் டெஸ்ட்ல தோத்துட்டேன்னு வையேன்”

”வேணாம் மேற்கொண்டு எதையும் சொல்லி என் மனசை காயப்படுத்திடாத, அழறதுக்கு கூட கண்ல கண்ணீர் வராது, எல்லாம் தீர்ந்துப் போச்சி”

”ஆம்பளை பையன்தானே நீ, இப்படி அழலாமா, நான் பாரு எவ்ளோ திடமா இருக்கேன் நான் அழவேயில்லையே”

”அழறதுக்கு ஆண் பெண் பேதமில்லை கண்மணி, கிடைச்ச வாழ்க்கையை தொலைச்சிடுவேனோன்ங்கற பயத்தில அழுதுட்டேன்”

”சாரி”

”எதுக்கு”

”உன்னை நான்தானே அழவைச்சேன் அதுக்கு”

”இனிமேல இப்படி நீ அழவைக்காத நான் பாவம்”

”எல்லாம் நீ டெஸ்ட்ல எடுக்கற மார்க் பொறுத்துதான் இருக்கு”

”டெஸ்ட்லயே குறியா இரு ஆமா இது என்ன 2 டிபன் பாக்ஸ்”

”ஒண்ணு எனக்கு ஒண்ணு உனக்கு”

”ஒரு பக்கம் பாசத்தை காட்டிட்டு இன்னொரு பக்கம் அழவைச்சி வேடிக்கைப் பார்க்கறியே ராட்சஸி”

”ஏய் எல்லாம் நம்ம நல்லதுக்குதானே இந்தா சாப்பிடு” என சொல்லி அவனுக்கு டிபன் தர அவனும் சாப்பிடலானான்

”ஹாஸ்டல் சாப்பாடா”

”ஆமாம் எப்படியிருக்கு”

”சுமாராயிருக்கு”

”என்ன செய்றது இப்படிதான் எல்லாரும் சாப்பிடறாங்க ஆமா நீ லாட்ஜ்ல இருக்கல்ல அங்க எப்படி சாப்பிடற”

”லாட்ஜ்க்கு பக்கத்துல ஓட்டல் இருக்கு, கையேந்தி பவன் கூட இருக்கு, எதுல வேணும்னாலும் சாப்பிடலாம், என்ன எனக்கு வெளி சாப்பாடு ஒத்துக்கறதில்லை, அலர்ஜி ஆகும், அல்சர் வரும்”

”அய்யோ அப்ப என்ன செய்வ”

”என்ன செய்றது மாத்திரை போட்டுக்குவேன்”

”இது ஒரு பதிலா“

”செய்றதைதானே சொல்ல முடியும்“

”அதுக்கில்லை வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்ல“

”வீடே இல்லை யார் எனக்கு சமைச்சி போடுவா, வருஷக்கணக்கா ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு வயிறே வெந்துப்போச்சி கண்மணி, இந்த ஹாஸ்டல் சாப்பாடு கூட எனக்கு பிடிக்கலை, ஏதோ பட்டினி கிடக்கனுமேன்னு சாப்பிடறேன்” என வருத்தமாக சொல்லிக் கொண்டே அவன் வேண்டா வெறுப்பாக சாப்பிட அவளோ

”நான் வேணா உனக்காக சமைச்சி போடவா“ என கேட்டதும் அவனுக்கு புரை ஏறி இருமினான்

”என்ன உளர்ற”

”பின்ன வெளி சாப்பாடு சாப்பிட்டு உனக்கு உடம்பு முடியலைன்னு சொல்றியே அப்பன்னா வீட்டு சாப்பாடு சமைச்சி போடவான்னு கேட்டேன் இது தப்பா”

”தப்பில்லை ஆனா எப்படி சமைச்சி போடுவ, எனக்கென்ன வீடா இருக்கு, நீயே ஹாஸ்டல்ல இருக்க அங்க எப்படி நீ சமைப்ப” என சொல்ல அவளுக்கு சலிப்பே வந்தது

”ப்ச் ஆமாம்ல நான் மறந்தே போயிட்டேன், எனக்கோ இல்லை உனக்கோ ஒரு வீடு இருந்திருந்தா கண்டிப்பா நான் வந்து சமைச்சி போட்டிருப்பேன், ஆஆ என்ன செய்றது, என் கையால செய்ற சாப்பாட்டை சாப்பிட உனக்கு கொடுப்பினை இல்லை” என அலுப்பாக சொல்லிக் கொண்டே சாப்பிடலானாள், அவள் சொன்னதைக் கேட்டதும் குணாவின் முகம் பிரகாசமானது

”கண்மணி ஒருவேளை எனக்கு ஒரு வீடு இருந்தா நீ சமைச்சி போடுவியா”

”ம்ம் போடுவேன் அதான் இல்லையே அப்புறம் என்ன”

”நான் வேணா வாடகைக்கு வீடு பார்க்கவா ஹாஸ்டல்லயும் லாட்ஜ்லயும் தங்கறதுக்கு பதிலா ஒரு வீடு எடுத்து நாம ஒண்ணா தங்கிடலாமா சொல்லு” என பட்டென கேட்க அவளுக்கு திக்கென்றது

”என்ன தனி வீட்ல நீயும் நானுமா”

”ஆமாம் நல்லாயிருக்கும்ல, அங்க நாம ஒண்ணா இருக்கலாம், நீ சமைச்சி போடு நான் சாப்பிடறேன், இரண்டு பேரும் ஒண்ணா படிக்கலாம், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம், என்ன சொல்ற, சரின்னு சொல்லு, உடனே நமக்காக ஒரு வாடகை வீட்டை பார்த்துடறேன்” என ஆர்வமாக கேட்க அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவனையே வியப்புடன் பார்த்தாள்.

”கண்மணி கண்மணி என்ன இவள் சிலை மாதிரி உறைஞ்சிப்போயிட்டா கண்மணி” என அவளை அழைக்க அதில் அவள் கவனம் சிதறி அவனை வியப்புடன் பார்த்து

”இன்னும் நாம காதலிக்க ஆரம்பிச்சி ஒரு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள கல்யாணத்தை பத்தி பேசறது தப்பு”

”கல்யாணமா இப்ப யாரு கல்யாணத்தை பத்தி பேசினது”

”பின்ன நீதானே வீட்டை பார்க்கறேன்னு சொன்ன”

”ஆமாம் அதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்”

”கல்யாணம் செய்துக்காம எப்படி இரண்டு பேரும் ஒரே வீட்ல தங்கறது அது தப்பு” என அவள் சிணுங்கலாகச் சொல்ல அவனுக்கு சிரிப்பே வந்தது

”ம்ம் கண்மணி ரொம்ப சிணுங்காத, 20 நிமிஷத்துக்கு முன்னாடி காதலே வேணாம்னு சொன்ன இப்ப கல்யாணம் வரைக்கும் பேசற, கண்டிப்பா நான் உன்னை கல்யாணம் செய்துக்குவேன், ஆனா அது இப்ப இல்லை, நான் படிக்கனும், பெரியாளாகனும், கைநிறைய சம்பாதிக்கனும், நமக்காக ஒரு பங்களா வாங்கனும், கார் வாங்கனும், உனக்கு நகைநட்டு வாங்கனும், உன்னை பெரியாளாக்கி காட்டனும், நம்ம தேவைகள் பூர்த்தியான பின்னாடிதான் ஊரறிய கல்யாணம்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன், நீ என்னடான்னா இப்பவே கல்யாணத்துக்கு அவசரப்படற”

”நான் ஒண்ணும் அவசரப்படலை நீதானே வீட்டை பார்க்கிறேன்னு சொன்ன“

”அதுவா சமைச்சி போட ஆசைப்பட்டியே அதுக்காக சொன்னேன்”

”நம்பிட்டேன்”

”சத்தியமா, நான் என்ன உன்கிட்ட தப்பா நடந்துக்குவேன்னு நினைக்கறியா பாரு, இங்க யாரும் இல்லை நீ வேற பாவாடை தாவணியில கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்க, இருந்தாலும் நான் உன்கிட்ட தப்பா எதுவும் நடந்துக்கலைல்ல, நான் பக்கா ஜென்டில்மேன் நம்பு”

”எது நீயா, நைட் கனவுல நீ என்கிட்ட எவ்ளோ சில்மிஷம் செய்தேன்னு தெரியுமா”

”அப்படியா எங்க சொல்லு கேட்கலாம்“

”ஆசையைப் பாரு, அதை நான் சொன்னா அதுபடி இப்ப நீ நடந்துக்கறதுக்கா”

”சே நீ என்னை ரொம்ப கேவலமா நினைக்கற கண்மணி நான் அப்படிப்பட்டவன் இல்லை, வெறும் சுகம்தான் தேவைன்னா என்னை எத்தனையோ பொண்ணுங்க காதலிக்க ஆசைப்பட்டாங்க, எத்தனையோ பொண்ணுங்க என்னை சுத்தி சுத்தி வந்தாங்க, அவங்ககிட்ட என் ஆசையை தீர்த்துக்கிட்டு இருப்பேனே, இந்த அல்ப்ப சந்தோஷத்துக்கு ஆசைப்படறவன் நான் இல்லை, உன்கிட்ட நான் எதிர்ப்பார்க்கறது அன்பு பாசம் அவ்ளோதான், மத்தபடி உன்னை கட்டிப்பிடிக்கனும், முத்தம் கொடுக்கனும், உன்னோடு சேர்ந்து ஊர் சுத்தனும், அதெல்லாம் இல்லை நீயே என்னை நெருங்கி வந்தாலும் நான் மனசு தடுமாற மாட்டேன்”

”அப்படியா நம்பலாமா“

”சரியா போச்சி உன்னை நம்ப வைக்க நான் என்ன செய்றதுன்னு தெரியலையே” என கேட்க அவளோ மென்மையாக சிரித்துவிட்டு கைகழுவ சென்றாள், அவனும் கைகழுவிவிட்டு வர அவனுக்கு தனது முந்தானை காட்டினாள்

”இது எதுக்கு“

”கை துடைக்க”

”வேணாம் என்கிட்ட கர்ச்சீப் இருக்கு”

”அப்படியா” என அவனை நெருங்கினாள், அவன் புரிந்துக் கொண்டான்

”டெஸ்ட் வைக்காத கண்மணி நான் தெளிவா இருக்கேன்”

”பார்க்கலாம்” என சொல்லியவள் அவன் எதிர்பாராத நேரம் பார்த்து அவனை கட்டியணைத்துக் கொண்டாள்

அவள் அப்படி செய்ததும் அவனுக்குள் கிளர்ச்சி ஏற்பட்டது, மனது அடித்துக் கொண்டது, கைகால் நடுங்கியது, காய்ச்சல் வந்தவன் போல உடல் நடுங்கினான், நாக்கு வறண்டுவிட்டது, அவனது கை அவனது பேச்சையும் கேளாமல் அவளை அணைத்துக் கொள்ள சட்டென அவனை விட்டு விலகி அவனது கன்னத்தில் விட்டாள் ஒரு அறை அந்த அறையில் இயல்புக்கு வந்து அவமானத்தில் தலைகுனிந்தான் குணா.

 

அந்நேரம் பெல் அடிக்கவும் அவள் கோபத்துடன் தன் இடத்தில் சென்று அமர்ந்தாள், குணாவோ தனது தவறை உணர்ந்து நொந்தபடியே அவளுக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர வர அவளோ முறைத்தாள், அதில் அவன் பழைய இடத்தில் சென்று அமர்ந்தான்

”குணா, என்னடா ஆச்சி உனக்கு, வீரா வேசமா டயலாக் விட்ட, கடைசியில தடுமாறிப் போயிட்டியே, இப்ப அவள் என்ன நினைச்சிருப்பா, உன்னை கேவலமா நினைச்சிருப்பா, பொறுக்கின்னு நினைச்சிருப்பா, அவள் சொன்னது தப்பில்லை, நீ செய்ததுதான் தப்பு, உன்னை நம்பி இனி அவள் உன்கிட்டகூட வரமாட்டா, போச்சி, சின்ன சபலத்தில வாழ்க்கையை இழந்துட்டியே முட்டாள்” என அவன் தன்னையே மனதுக்குள் திட்டிக்  கொண்டான்.

கண்மணியோ

”கனவுல செய்த மாதிரி செய்றான் பாரு, சேட்டை பிடிச்சவன், இந்தளவுக்கு உணர்ச்சி வசப்படறவனை நம்பி எப்படி ஒரே வீட்ல தங்கறது, ரிஸ்க் வேணாம், அவனை விட நாமதான் திடமா இருக்கோம், ஆனாலும் நம்ம மனசும் ஏங்கிச்சே, அவன் கட்டிப்பிடிக்கனும்னு ஆசைப்பட்டோம், அது நடக்கவும் எவ்ளோ சந்தோஷப்பட்டோம்

ஆனா பெல் அடிச்சது கூட தெரியாம நாம இப்படி நின்னா யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க, அவனை விட்டு விலகலாம்னு பார்த்தா இரும்பு பிடியால பிடிச்சிக்கிட்டான் பாவி, அவன் பிடிச்ச பிடியில உடல் வலியே வந்துடுச்சி, அவனை அடிச்சது தப்போ, சே ஏதோ ஒரு வேகத்தில அவனை அடிச்சிட்டோம், பாவம் அவனோட முகமே சுருங்கிப் போயிடுச்சி

நம்ம பக்கத்தில உட்கார்ந்தா அவனால பாடத்தை ஒழுங்கா கவனிக்க முடியாது, அவன் பின்னாடி இருந்தாதான் பாடத்தில கவனம் செலுத்துவான், இப்போ அவன் சாப்பட்டுக்கு ஒரு வழியை கண்டுபிடிக்கனும், வெளி சாப்பாடு ஒத்துக்கலைன்னா, எப்படி அவனுக்கு வீட்டு சாப்பாடு தர்றது? அவனுக்கு சமைச்சி போடனும்னு ஆசையா இருக்கு, ஆனா எப்படின்னு தெரியலையே? முதல்ல இதுக்கு ஒரு வழியை கண்டுபிடிக்கனும், கண்டுபிடிக்கிறேன்” என அவள் அதைபற்றியே நினைத்துக் கொண்டிருந்ததில் பாடத்தை கவனிக்க தவறினாள்.

மாலை நேரம் பெல் அடிக்கவும் அனைவரும் கிளம்பிச் சென்றார்கள், குணாவோ கண்மணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாவது தனது காதலை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்து கண்மணியிடம் வந்தான்.

அவளோ தான் எடுத்த முடிவை அவனிடம் சொல்வதற்காக காத்திருந்தாள், மாணவர்கள் அனைவரும் வகுப்பை விட்டு வெளியேறி சென்றதும் குணா அவசர அவசரமாக வாசலுக்கு சென்று யாராவது வருகிறார்களா என பார்த்துவிட்டு சட்டென கதவை சாத்த அவளுக்கு திக்கென்றது

”என்ன செய்ற எதுக்கு இப்ப கதவை சாத்தின”

”இரு எல்லாம் ஒரு முக்கியமான விசயத்துக்குதான்“

”விசயமா என்ன விசயம்” என அவள் குழப்பத்துடன் கேட்க அவனோ அவளிடம் நெருங்கி வந்தான் அவளோ அச்சத்தில் பின் சென்றாள் அவனோ

”பின்னாடி போகாத நில்லு ஆஆ அப்படி வேணாம் இப்படி வந்து நில்லு, இதுதான் வாட்டமா வசதியா இருக்கும்”

”வசதியா ஆமா நீ என்ன செய்யப் போற” என பயத்துடன் கேட்க அவனோ

”அவசரத்தைப்பாரு செய்றப்ப தெரிஞ்சிக்கப் போற பொறு” என சொல்ல அவளுக்கு பல்வேறு கற்பனை மனதுக்குள் பறந்தது

குணாவோ தனது கை சட்டையை மடித்து வைத்துக் கொண்டான், டக் செய்த சட்டையை எடுத்துவிட்டான், தனது உடையை லூசாக்கி கொண்டான், அவனது செயல்களைக்கண்டு அவளுக்கு கிளுகிளுப்பாக இருந்தது

”அச்சோ இவன் என்னவோ செய்ய போறான்னு தெரியுது, என்ன செய்யப்போறான்னு தெரியலையே, கட்டிப்பிடிக்கப் போறானோ, அதைதான் ஏற்கனவே செய்துட்டானே, அப்படின்னா கண்டிப்பா முத்தமாதான் இருக்கனும், அய்யோ இப்ப என் கன்னம் வேற எண்ணெய் வடிஞ்சி கிடக்கே, முன்னாடியே தெரிஞ்சிருந்தா முகத்தையாவது கழுவியிருப்பேன்

ஒருவேளை உதட்டுல முத்தம் தருவானோ  ஆனாலும் இவனுக்கு ரொம்பதான் அவசரம், நான் இன்னும் என் காதலை சொல்லலை, அதுக்குள்ள முன்னேற ஆரம்பிச்சிட்டானே, அச்சோ கிட்ட வரான் முத்தம் தரப்போறான்” என அவளுக்கு அவளே மனதில் சொல்லிக் கொண்டு அவன் அவளை நெருங்கியதும் வெட்கத்தில் சட்டென கண்களை மூடிக் கொண்டாள்.

குணாவோ சட்டென அவளது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து அவளின் பாதத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டு

”சாரி கண்மணி, வெரி வெரி சாரி ப்ளீஸ், என்னை மன்னிச்சிடு, நான் வேணும்னே அப்படி செய்யலை, எனக்கே தெரியலை நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு, என்னை மீறி நான் உணர்ச்சி வசப்பட்டுட்டேன், அதுக்காக என்னை தப்பானவனா நினைச்சிடாத, உன்கிட்ட நான் கன்னியமா நடந்துக்குவேன் நடந்ததை நினைச்சி என்னை சந்தேகப்பட்டு என்னை ஒதுக்கிடாத, ப்ளீஸ் கண்மணி” என அவன் புலம்ப அதைக்கேட்டு கண்விழித்த கண்மணிக்கு அவனது செயலைக்கண்டு அலுப்பே வந்தது

”அய்யோ இவனோட முடியலை” என நொந்துக் கொண்டே

”குணா எழு அய்யோ எழு குணா ப்ளீஸ்” என அவனை எழுப்பிவிட அவன் எழுந்து கைகூப்பி கண்கள் கலங்கியபடியே மன்னிப்பு வேண்டி நின்றான் அவளோ

”ப்ச் என்ன இதெல்லாம்”

”ஏதோ உணர்ச்சி வசப்பட்டு கட்டிப்பிடிச்சிட்டேன் சாரி கண்மணி” என பாவமாகப் பேசினான் விட்டால் அழுதுவிடுவான் போல இருந்தது

”இப்படி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கதான் கதவை சாத்திட்டு ட்ரஸ்லாம் சரி செய்தியா“

”ஆமாம் யாராவது பார்த்தா தப்பாயிடுமே, நான் அவமானப்படறதுக்கு பயப்படலை, தேவையில்லாம உன் மேல கெட்ட பேர் வந்துடக்கூடாது பாரு அதுக்குதான், கதவை சாத்தினான் இரு நான் போய் கதவை திறந்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவன் கதவை திறக்கச் செல்ல அவளோ நொந்துப் போய் தலையில் அடித்துக் கொண்டாள்

கதவை திறந்துவிட்டு அவளிடம் வந்தான் குணா

”இப்ப சொல்லு உன்னோட கோபம் போயிடுச்சா“

”நான் எங்க கோபமா இருந்தேன்”

”அதான் நான் உன்னை கட்டிப்பிடிச்சதுக்கு நீ என்னை கோபத்தில அடிச்சியே”

”அய்யோ, பெல் அடிச்சது கூட தெரியாம நீ பாட்டுக்கு என்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டு நின்ன, யாராவது பாரத்தா என்னாகிறது அதனாலதான் அப்படி அடிச்சேன், ஆனா ஒண்ணு சொல்லு என்னை என்ன காக்காவா தூக்கிட்டு போயிடப்போகுது, அப்படி இறுக்கமா கட்டிப்பிடிக்கற, நீ பிடிச்ச பிடியில என் முதுகே உடைஞ்சிப் போயிருக்கும், எப்படி வலிச்சது தெரியுமா” என அவள் ஆதங்கப்பட அவன் குழம்பினான்

”அப்ப உனக்கு கோபம் இல்லையா”

”இல்லையே”

”அப்புறம் ஏன் என்னைப் பார்த்து முறைச்ச நீ முறைச்சதும் நான் பின்னாடி போய் உட்கார்ந்துட்டேன்“

”அய்யா சாமி, நீ முன்னாடி உட்கார்ந்து என்னை சைட் அடிச்சிக்கிட்டு வாத்தியார் பாடம் எடுக்கறதை கவனிக்காம இருக்க கூடாதுன்னுதான் முறைச்சேன் பின்னாடி போய் உட்கார்ந்தியே பாடத்தை கவனிச்சியா”

”எங்க கவனிக்க முடிஞ்சது உன்னை பத்தியே நினைச்சிக்கிட்டு இருந்தேன்”

”இதுக்குதான் இந்த காதலே வேணாம்னு சொன்னேன் நீதான் கேட்கலை பாரு இப்ப என்னாச்சின்னு“  என அவள் வருத்தமாகச் சொல்ல அவனோ நொந்துப் போனான்

”கண்மணி படிப்புக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லை இரண்டையும் போட்டு குழப்பிக்காத நான் படிச்சி பாஸாயிடுவேன் நம்பு”

”என்னவோ டெஸ்ட் ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம்“

”சரி வா கிளம்பலாம்”

”பொறு நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் அதை சொல்லனும்”

”எதைப் பத்தி“

”ஆமா நீ இப்ப வேலைக்கு போறல்ல அங்க உனக்கு எவ்ளோ சம்பளம்“

”என்ன திடீர்ன்னு சம்பளம்லாம் கேட்கற“

”ஏன் நான் கேட்க கூடாதா”

”தாராளமா கேளு உனக்கில்லாத உரிமையா” என்றவன் தனது சம்பளம் பற்றிச் சொல்ல அவளோ பலமாக யோசித்தாள்

”எதுக்கு இவ்ளோ டீப்பா யோசிக்கற என்ன விசயம்”

”இல்லை இந்த சம்பளத்துக்கு வீடு கிடைக்குமான்னு யோசிக்கிறேன்”

”வீடா“

”ஆமாம் வாடகை வீடு”

”நீதான் வேணாம்னு சொன்னியே”

”உனக்கு வேணும்ல“

”புரியலையே”

”ஒரு வீடு எடுத்து தங்கு, நான் வந்து சமைச்சி போடறேன், ஆனா உன்கூட தங்க மாட்டேன் நான் சமைச்சி போடறதுக்கு மட்டும்தான் வருவேன் ஓகேவா” என்றாள் அதைக்கேட்டு அவனுக்கு ஆச்சர்யமும் சிரிப்பும் கலந்து வந்தது

”பதில் சொல்லு குணா ஓகேவா”

”உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியலை கண்மணி” என்றான் புன்னகையுடன்

”ரொம்ப முக்கியம் முதல்ல வீட்டை பாரு அப்புறம் ஒரு விசயம்”

”என்ன”

”உனக்கு நான் சமைச்சி போடனும்னா நீ டெஸ்ட்ல நல்ல மார்க் எடுத்தாகனும்“

”இது வேறயா“

”ஆமாம் அதனால ஒழுங்கா படிக்கற வேலையை பாரு, டெஸ்ட்ல நீ சொதப்பின அப்புறம் உனக்குதான் நஷ்டம், உனக்கு நான் சமைச்சி போடமாட்டேன்“

”இல்லை இல்லை நான் வீடு பார்க்கிறேன்“

”இப்ப இல்லை டெஸ்ட் முடிஞ்சி ரிசல்ட் வரட்டும் அப்பதான்”

”அதுவரைக்கும் நான் என்ன சாப்பிடறது“

”ஆஆஆ கொஞ்சநாள்தானே அட்ஜஸ்ட் பண்ணிக்க”

”ம் சரி கண்மணி வா கிளம்பலாம்” என அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்

கல்லூரியை விட்டு குணா பைக்கில் வர தூரத்தில் கண்மணி அவனுக்காகவே காத்திருந்தாள், அவள் அவ்வாறு காத்திருப்பது கூட அவனுக்கு சுகமாக இருந்தது, தனக்காக ஒருத்தி காத்திருப்பது அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது, அவளிடம் சென்றவன்

”சொல்லு கண்மணி“

“நேரமாச்சி என்னை சூப்பர் மார்க்கெட்ல ட்ராப் பண்றியா“

”நீயா இப்படி பேசறது”

”ப்ச் சும்மா எல்லாத்துக்கும் ஆச்சர்யப்படாத, நேரமாச்சி அதனாலதான் ட்ராப் பண்றியான்னு கேட்டேன், இல்லைன்னா நானே போயிடுவேன், எனக்கொன்னும் உன்கூட வரனும்னு ஆசையில்லை” என பிகு செய்தாள் அதை ரசித்தான் குணா

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!