Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –24

கீழ்வீட்டு பெண்களோ

”குணா குணா வந்துட்டியா, எங்க உன் பொண்டாட்டியை காட்டு, அவளை பார்க்கத்தான் வந்தோம்” என சொல்லிக் கொண்டே வர அவனுக்கு திக்கென்றது, அவசரமாக கண்மணியிடம் வந்தான், அவள் கையில் இருந்த தாலியை வாங்கி அதில் 3 முடிச்சுகளை அவனே போட்டு அதை அவளிடம் நீட்டி

”இந்தா இதை அப்படியே மாலை போல கழுத்தில போட்டுக்க சீக்கிரம்” என அதட்ட அவளோ முடியாது என தலையாட்ட அவனுக்கு கஷ்டமாகிப் போனது



Advertisement

”ப்ளீஸ் கண்மணி உன் கால்ல கூட விழறேன், இப்ப இதை போட்டுக்க” என அவள் காலில் கூட விழுந்து எழுந்தான், ஆனால் அவளோ மறுத்தாள்

”முடியாது குணா, தாலி விசயத்தில விளையாடக்கூடாது தப்பு” என அவள் சொல்லும் போதே பெண்கள் அந்த வீட்டிற்குள் நுழைவதைக்கண்டு திடுக்கிட்டவன் அவசரத்தில் அவனே அவளின் கழுத்தில் தாலியை போட்டுவிட்டு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதென அவளை இறுக்கமாக கட்டியணைக்க உள்ளே வந்த பெண்கள் அவர்களின் அன்னியோன்யத்தைக்கண்டு கூச்சப்பட்டு வெளியே சென்றார்கள்.

“ஏப்பா குணா, அதுக்குள்ள என்னப்பா அவசரம், வெளிய வாப்பா” என அவர்கள் அழைக்க அதில் குணாவோ கண்மணியை விட்டு விலகி வெளியே சென்றவன் அவர்களிடம் அசடுவழிந்து பேசினான்

Advertisement

”ஓ நீங்களா வந்துட்டீங்களா நானே வந்து உங்களை பார்க்கலாம்னு இருந்தேன்“

Advertisement

”அதுசரி நீ வந்ததே எங்களுக்கு தெரியாது, உன் பைக்கை பார்த்த பின்னாடிதான் இங்க வந்தோம், இங்க வந்து பார்த்தப்பதானே தெரியுது”

”என்ன பார்த்தீங்க எதை சொல்றீங்க” என அவன் பதட்டப்பட அந்த பெண்கள் கலகலவென சிரிக்க அவனுக்கு கொடுமையாக இருந்தது

”எதுக்கு எல்லாரும் சிரிக்கிறீங்க“

Advertisement

“இல்லை இன்னும் வீட்டுக்குள்ள குடிபோகவேயில்லை, அதுக்குள்ள குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்ட போல”

”என்ன சொல்றீங்க எனக்குப் புரியலையே”

”அதான் நாங்க பார்த்தோமே, நீ உன் பொண்டாட்டியை கட்டிப்பிடிச்சிக்கிட்டு இருந்ததை” என சொல்லவும் அவனுக்கு வராத வெட்கத்தை கஷ்டப்பட்டு வரவழைத்து வெட்கப்பட்டு தலையை தாழ்த்த அந்த பெண்கள் அதைக்கண்டு அவனை கேலியும் கிண்டலும் செய்து கலகலவென சிரிக்க, அந்த சிரிப்பு சத்தம் கேட்டு மற்ற போர்ஷனில் இருந்த ஆட்களும் வந்தார்கள், அதில் ஆண்களும் இருந்தார்கள்

”குணா என்னப்பா இவங்ககிட்ட வசமா மாட்டிக்கிட்ட போல, இன்னிக்கு நீ தப்பிச்ச மாதிரிதான்” என ஒரு ஆண் சொல்ல குணாவோ

”பரவாயில்லை அண்ணா, அக்காங்கதானே கிண்டல் செய்றாங்க செய்யட்டும் விடுங்க”

”சரி சரி எப்பதான் வீட்டுக்கு குடி வரபோற“

”ஏன் இவ்ளோ அவசரம்”

”அதுக்கில்லை குணா, ஏற்கனவே இங்க இரண்டு பேச்சுலர்ஸ் தங்க வைச்சிட்டு அவங்களால ஒரே தொல்லை, நீ வந்ததால எங்களுக்கு எல்லாருக்குமே நிம்மதி, நீ வரலைன்னா அந்த வீட்டு ஓனர் மறுபடியும் பேச்சுலர்ஸ்களை தங்க வைச்சிடுவாப்ல, மறுபடியும் யாரு கஷ்டப்படறது சொல்லு“

”இதோ நல்ல நாள் பார்த்து ஒரு நாள் வந்துடறோம்“

”ஆமா எங்க நீ மட்டும்தான் வந்திருக்கியா, உன் ஒய்ப்பை கூட்டிட்டு வரலை” என கேட்டதும் தாமதம் அங்கிருந்த பெண்கள் கலகலவென சிரிக்க மறுபடியும் குணா வராத வெட்கத்தை வரவழைத்து நாணிக் கோணி நிற்க ஆண்களுக்கு வேடிக்கையாக இருந்தது

”என்னாச்சி எதுக்கு இந்த சிரிப்பு“

”அது ஒண்ணுமில்லை, இன்னும் குடுத்தனமே வரலை அதுக்குள்ள குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டாங்க, அதுக்குள்ள நாங்க வரவும் வசமா மாட்டிக்கிட்டாங்க“

”அதுசரி உங்க கண்லயா இவங்க படனும், ஏப்பா குணா என்னப்பா அவசரம் உனக்கு“

“அது இல்லை சும்மாதான்”

”அதுசரி கூப்பிடு உன் ஒய்ப்கிட்ட பேசலாம் கூப்பிடு” என அழைக்க அதற்குள் கண்மணியே வெளியே வந்தாள், அவளின் அழகைக்கண்டு அனைவருமே வாயடைத்து நின்றார்கள், கண்மணியிடம் சென்ற குணாவோ

”இவள்தான் என் ஒய்ப், பேரு கண்மணி, நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல ஒண்ணா படிக்கறோம்” என சொல்லி அறிமுகம் செய்ய கண்மணியும் அனைவரையும் பார்த்து கைகூப்பி வணக்கம் வைத்தாள், அவளின் அடக்கம், அமைதி, அழகு அனைவரையும் கவர்ந்தது

”உனக்கு ஏத்த பொண்ணைத்தான் பிடிச்சிருக்க ஆமா எப்ப கல்யாணம் ஆச்சி”

“இப்பதான் ஒரு வாரம் முன்னாடி“

”படிக்கறப்பவே என்னத்த கல்யாணம், படிச்சி முடிச்சி வேலைக்கு வந்தபின்னாடிதான் செய்துக்கறது”

”அது ஒரு பிரச்சனை அதனால அவசர அவசரமாக எங்களுக்கு கல்யாணம் நடந்துடுச்சி“

”அதுசரி படிக்கறப்பவே கல்யாணம் ஆகி புருஷனாயிட்ட, படிப்பு முடியறதுக்குள்ள  அப்பாவாயிடுவ போல இருக்கே“

”அய்யோ இல்லை இல்லை, நான் கன்னியமா நடந்துக்குவேன், படிப்பு முடிஞ்சி வேலை கிடைச்ச பின்னாடிதான் எல்லாமே” என அவன் அழுத்தமாக கண்மணியை பார்த்தபடியே சொல்ல அவளோ வெட்கப்பட்டு சட்டென வீட்டிற்குள் சென்றுவிட குணா குழம்ப அதைக்கண்ட அனைவருமே கலகலவென சிரிக்க அந்த இடமே மகிழ்ச்சியில் திளைத்தது.

”அப்புறம் குணா கல்யாணம் ஆயிடுச்சி, வீட்டையும் பார்த்தாச்சி, மற்ற பொருளெல்லாம் வாங்கனுமே எப்ப வாங்குவ”

”லீவுல வாங்கறேன்”

”அதுசரி குடும்பம் நடத்த பணம் இருக்கா இல்லையா”

”நான் வேலைக்கு போறோன், பார்ட்டைம்மா கம்ப்யூட்டர் சென்ட்ர்ல கோச்சிங் டீச்சரா இருக்கேன், அவளும் சூப்பர்மார்க்கெட்ல பில் செக்ஷன்ல வேலை செய்றா, எங்க இரண்டு பேரோட வருமானம் போதும்”

”சரி உங்க அப்பா அம்மா எப்ப வருவாங்க” என கேட்க அவனோ சோகமானான் அதைக்கண்ட பெண்களில் ஒருவர்

”குணா என்னப்பா என்னாச்சி ஏன் சோகமாயிட்ட”

“இல்லைக்கா எனக்கு அப்பா அம்மா இல்லை இறந்துட்டாங்க“

”அடக்கடவுளே பாவம்பா நீ, ஆமா உன் ஒய்ப்புக்கு அப்பா அம்மா இருக்காங்களா இல்லையா“

”இருக்காங்க”

”அவங்க வருவாங்கள்ல“

”அவங்க வருவாங்களான்னு தெரியலை“

”என்ன சொல்ற, நீ சொல்றதைப் பார்த்தா அப்பா அம்மாவை எதிர்த்து காதல் கல்யாணம் செய்துக்கிட்டீங்களா“

”ஆமாம்“

”ஏன்பா அப்படி, அவங்க உங்க காதலை எதிர்த்தாங்களா”

”இல்லை நடந்த கதையே வேற“

”என்ன கதை”

”அது கொஞ்சம் பெரிசு“

”பரவாயில்லை சொல்லு“

“இல்லை உங்களுக்கு வேலையிருக்கும்ல”

”எந்த வேலையும் இல்லை, உன்னை பத்தி தெரிஞ்சிக்கறதுதான் எங்க வேலையே சொல்லுப்பா உன் கதையை” என கேட்டதும் தாமதம் குணா ஆரம்பத்தில் இந்த ஊருக்கு வந்தது முதல் கவினுடன் நடக்க இருந்த கல்யாணம்  வரை சொல்லி முடித்தான், அதைக்கேட்ட பெண்கள் கோபமுற்றார்கள்

”சரியான அயோக்கியனா இருக்கானே, எவனாவது தாலி கட்டற நேரத்தில சந்தேகப்பட்டு இப்படியா ஒரு கேள்வி கேட்பான் சே மனுஷனா அவன்” என ஆளாளுக்கு கவினை திட்டித் தீர்த்து முடித்து

”அப்புறம் என்னாச்சிப்பா”

”என்னாகனும், கவின் சந்தேகப்பட்டதால கல்யாணம் நின்னுடுச்சி, அவனும் அவன் சொந்த பந்தம் எல்லாரும் கிளம்பிப்போயிட்டாங்க, பாவம் கண்மணி என்னால பழி பாவத்துக்கு ஆளாயிட்டா, பழியோட அவள் எப்படி தனியா இருப்பா, அதனால நான் அன்னிக்கு” என அவன் சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்தவர்களே ஆளாளுக்கு கதையை சொல்லி முடித்தார்கள்

”எங்களுக்குப் புரிஞ்சிடுச்சி கண்மணியை நீயே கல்யாணம் செய்திருப்ப“

”அதனால அவளோட அப்பா அம்மா உன்னை வெறுத்திருப்பாங்க“

”அதனால வேற வழியில்லாம நீ கண்மணியை கூட்டிட்டு இங்க வந்துட்ட”

”இப்பவும் அந்த கவினால பிரச்சனை இருக்கா என்ன”

”ஆமாம் கவினால பிரச்சனை வராதுன்னு நினைச்சேன், ஆனா அவன் கண்மணியை ஃபாலோ பண்றான், அவள் பயப்படறா, அவனால திரும்பவும் ஏதாவது பிரச்சனை வரும்னு நினைக்கறா, ஹாஸ்டல்ல பாதுகாப்பு அதிகம்தான், ஆனாலும் ஹாஸ்டல் விட்டு வரும் போதும் போகும் போதும் கவினால அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துடக்கூடாதுன்னுதான் அவசர அவசரமா நான் வீட்டை பார்த்தேன்

இல்லைன்னா அவள் ஹாஸ்டல்லயே இருக்கட்டும்னு விட்டிருப்பேன், இப்ப அவளுக்கு நான்தான் பாதுகாப்பு, தாலி கட்டிட்டதால அவளை மனைவியா சொந்தம் கொண்டாடி அவளோட குடும்பம் நடத்தனும், சந்தோஷமா இருக்கனும்ங்கற எண்ணமே எனக்கு வரலை, அவளை பாதுகாக்கனும், அவள் ஆசைப்படி நல்லா படிக்க வைக்கனும், பெரியாளாக்கனும் அவள் தன் சொந்தகால்ல நிக்கனும்

அவளோட அப்பா அம்மா எங்களை மனசார ஏத்துக்கனும், அப்புறமாதான் நான் அவளுக்கு கணவனா இருப்பேன், அதுவரைக்கும் அவளுக்கு ஒரு நல்ல நண்பனா, காவலனா இருந்து அவளை நல்லபடியா பார்த்துக்குவேன்” என சொல்லி முடிக்க சுற்றியிருந்த அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.

வீட்டில் உள்ளே இருந்த கண்மணி கூட அவன் சொன்னதை கேட்டு கர்வம் கொண்டாள். அதற்காகவே வெளியே வந்தாள் கண்கள் கலங்கி அவள் குணா முன் கைகூப்பி

”நன்றி குணா“ என்றாள் அதைக்கேட்டு அவன் திடுக்கிட்டான்

”கண்மணி எதுக்கு அழற, இது என்னோட கடமை”

”என்னாலதானே உனக்கு இவ்ளோ கஷ்டம்“

”அப்படிப்பார்த்தா கமலியால உனக்கு கஷ்டம் வர்றதுக்கு நான்தானே காரணம், இப்பகூட கமலி உன்னை சும்மாவிடமாட்டாளே, ஒண்ணு நம்மளை பிரிக்கப் பார்ப்பா, இல்லைன்னா உன்னோட உயிரோட விளையாடவும் அவள் யோசிக்க மாட்டா, அந்தளவுக்கு சைக்கோ தனமா நடந்துக்கறா, இப்ப கூட பாரு நம்மளை ஃபாலோ பண்ணிக்கிட்டு இவ்ளோ தூரம் வந்துட்டா” என சொல்ல மற்றவர்கள் அதிர்ந்தார்கள்

”என்னப்பா சொல்ற அந்த பொண்ணு இங்கயும் வந்துட்டாளா” என ஒருவர் கேட்க

”ஆமாம் அண்ணா கமலி மட்டும் இல்லை கவினும் இங்கதான் இருக்கான், எங்களை வேவு பார்க்கறாங்க, இதுல கமலியும் கவினும் சண்டை போட்டுக்கிட்டு பிரிஞ்ச மாதிரி எங்க முன்னாடி நடிக்கறாங்க, ஆனா அவங்க உண்மையில ஒத்துமையா இருக்காங்க, அவங்களோட ஒரே நோக்கமே நாங்க ஒண்ணு சேரக்கூடாதுங்கறதுலதான் இருக்கு, எப்படியாவது அவங்ககிட்டயிருந்து நான் கண்மணியை காப்பாத்தனும், அது எப்படின்னு நினைச்சாதான் கவலையா இருக்கு, எல்லா நேரமும் என்னால கண்மணியை பார்த்துக்க முடியாது, நீங்கதான் அவளுக்கு பக்கபலமா இருக்கனும்னு கெஞ்சிக் கேட்டுக்கறேன்” என சொல்லியதோடு நில்லாமல் கைகூப்பி இருவரும் கெஞ்ச அதில் அவர்கள் மனம் இரங்கினார்கள்

”அதுக்கென்னப்பா இனி கண்மணி உன் பொண்டாட்டி மட்டுமில்ல, எங்க வீட்ல ஒருத்தர் அவளை நாங்க கண்ணும் கருத்துமா பார்த்துக்குவோம்”

”அதுசரி அந்த கவினும் கமலியும் யாருன்னு காட்டு பார்த்து வைச்சிக்கறோம்” என சொல்ல அதற்காக குணாவோ

”நான் காட்டறேன் ஆனா அவங்களை பார்க்காத மாதிரி வேடிக்கை பார்க்கற மாதிரி பாருங்க இல்லைன்னா அவங்க உஷாராயிடுவாங்க” என சொல்லிவிட்டு அவன் கமலியையும் கவினையும் காட்ட அவர்களும் எங்கோ பார்த்து பேசுவது போல அவர்கள் இருவரையும் நன்றாக பார்த்து வைத்துக் கொண்டார்கள்.

”ஓஹோ இவங்கதானா, சரி சரி, நாங்க இவங்களை பார்த்துக்கறோம், நீங்க எதுக்கும் கவலைப்பட வேணாம்”

”சரி அப்புறம் இன்னொரு விசயம்”

”என்ன?”

”அவங்களுக்கு நாங்க கல்யாணம் செய்துக்கிட்டது தெரியாது, தெரிஞ்சா பெரிசா பிரச்சனை பண்ணிடுவாங்க, அதனால இந்த விசயத்தை அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கனும்”

”ஏன்பா தெரிஞ்சா என்ன தப்பு”

”அவ்ளோதான் இருக்கற கோபத்தில எங்க இரண்டு பேரையும் கொன்னாலும் கொன்னுடுவாங்க“

”அய்யோ செய்தாலும் செய்வாங்க, பொல்லாதவங்களா இருக்காங்க, நீ கவலையேப்படாத குணா, நாங்க இருக்கோம்ல நாங்க பார்த்துக்கறோம், இந்த ஏரியாக்கு உள்ள கூட அவங்களை விட மாட்டோம், வெளியிடத்தில நீதான் கண்மணியை பத்திரமா பார்த்துக்கனும்“

”அதை நான் பார்த்துக்கிறேன், இந்தளவுக்கு எங்களுக்கு உதவி செய்ய முன் வந்ததே பெரிசு, இதுக்கு நாங்கதான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம் ரொம்ப நன்றி” என கைகூப்பி சொல்ல அனைவரும் முகம் மலர்ந்தார்கள்.

குணாவும் கண்மணியும் அங்கிருந்தவர்களின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்கள்.

அந்நேரம் கண்மணியோ குணாவிடம்

”குணா ரொம்ப நேரமாச்சி ஹாஸ்டலுக்கு போகனும் இல்லைன்னா வார்டன் திட்டுவாங்க”

”ஆஆ கண்டிப்பா இதோ” என சொன்னவன் அங்கிருந்தவர்களிடம்

”சரிங்க அவளுக்கு நேரமாச்சி, ஹாஸ்டல்ல விடனும், அதனால நாங்க கிளம்பறோம்” என சொல்ல அவர்களோ

”நீ கவலைப்படாத நாங்க எதுக்கு இருக்கோம், எல்லாம் நாங்க பார்த்துக்கறோம் நீ என்னிக்கு இந்த வீட்டுக்கு குடி வர்றன்னு சொல்லு போதும்”

”ஹவுஸ் ஓனர்கிட்ட கேட்டேன், சன்டே நல்ல முகூர்த்த நாளாம், அன்னிக்கே பால் காய்ச்சிட சொன்னாரு”

”அதுக்கு இன்னும் 5 நாள்தானே இருக்கு”

”ஆமாம் அதுக்குள்ள வீட்டுக்கு தேவையான எல்லா பொருளையும் நான் வாங்கனும்“

”இதப்பாரு குணா, இதை நினைச்சி நீ கவலைப்படாத, எங்க எல்லார் வீட்லயும் பயன்படுத்தாத பொருட்கள் நிறைய இருக்கு, அதை வைச்சி ஒரு குடும்பமே நடத்தலாம்” என சொல்ல குணா யோசித்தான். அதற்கு மற்றவர்களோ

”பழைய பொருள்ன்னு பார்க்கிறயா நல்லாதான் இருக்கும்”

”அய்யோ நான் அப்படி நினைக்கலை, இப்ப எனக்கு இருக்கற நிலைமைக்கு கடுகு கூட கடலளவுக்கு சமம், நீங்க தர்றதை நான் வேணாம்னு சொல்ல மாட்டேன், அதே போல நீங்க கொடுக்கற பொருட்களுக்கு நான் பணம் தருவேன், கட்டாயம் நீங்க வாங்கிக்கனும்”

”அட என்னப்பா பணம்னு சொல்ற“

”அதுக்கில்லை, நீங்களும் மிடில்க்ளாஸ்தான், பணப்பற்றாக்குறை எல்லார்கிட்டயும் இருக்கு, என்னால எவ்ளோ பணம் தரமுடியுமோ அவ்ளோ தரேன், வாங்கிக்க இல்லைன்னா எனக்கு மனசு கஷ்டமாயிடும்”

”அதுசரி இவ்ளோ கஷ்டத்திலயும் தன்மானத்தோட வாழனும்னு ஆசைப்படற, நல்லது, நாங்க பொருட்களை எடுத்து வைக்கறோம், நீ நாளைக்கு வந்து பாரு, எவ்ளோ கொடுக்கறயோ அவ்ளோ பணம் கொடு, நாங்க பிரிச்சிக்கறோம்”

”சரிங்க நாங்க கிளம்பறோம்” என சொல்லிவிட்டு கண்மணியை அழைத்துக் கொண்டு குணா அங்கிருந்து இறங்கி தன் பைக்கிடம் வர அதைக்கண்ட கமலியோ பதட்டமாகி அவசரமாக அவ்விடம் விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றாள், வழியில் கவின் தென்பட அவனையும் அழைத்துக் கொண்டு சென்றாள், அதைக்கண்ட குணாவோ கண்மணியிடம்

“பாரு எவ்ளோ ஒத்துமையா போறாங்கன்னு“

”இப்படி கூடவா ஆளுங்க இருப்பாங்க“

”இருக்காங்களே என்ன செய்றது, இவங்ககிட்டயிருந்து உன்னை காப்பாத்தறதுதான் என்னோட கடமையே“

”கடமையில கண்ணாயிருந்து படிப்பை கோட்டை விட்டுடகூடாது“

”படிப்பும் நீயும் எனக்கு ரொம்ப முக்கியம் கண்மணி, இரண்டையும் நான் தவறவிடமாட்டேன் என்னை நம்பு, வா போலாம்” என அவளை தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றான். அவர்களின் ஜோடி பொருத்தத்தைக்கண்டு அங்கு குடியிருந்தவர்கள் மெச்சிக் கொண்டார்கள்.

ஹாஸ்டலில் கண்மணியை இறக்கிவிட்டவன் அவளிடம்

”அப்புறம் ஒரு விசயம், இந்த தாலி விசயம், இந்த ஏரியா தாண்டி யாருக்கும் தெரியக்கூடாது, ஹாஸ்டல்ல கூட சொல்லிடாத, காலேஜ்லயும் தெரியக்கூடாது சரியா”

”சரி அப்ப இதை எப்படி மறைக்கறது”

”கழட்டி வைச்சிடு வீட்டுக்கு வரும் போது எடுத்து போட்டுக்க” என சொல்ல அவளோ அரண்டாள்

”என்ன நீ விளையாடறியா இது தாலி”

”இதப்பாரு அதை வெறும் செயின்னு நினைச்சிக்க, ஆபத்துக்கு போட்டதுதானே அப்புறம் என்ன”

”அதுக்குன்னு நீ என் கழுத்தில போட்டதை நான் எப்படி கழட்டி வைக்கறது முடியாது குணா”

”இது வெறும் நடிப்புதான், சினிமால பார்த்திருப்பியே, நடிப்புக்காக தாலி கட்டறதும் நடிச்சி முடிச்சதும் கழட்டி வைக்கறதும், அது போலதான் இதுவும்” என அவன் சொல்லும் போதே ஏனோ குணாவின் மனம் கனத்துவிட்டது

என்னதான் அதை நடிப்பு என வாய்விட்டு சொன்னாலும் அவசரத்தில் அவன் போட்ட தாலி என்பதாலயே ஒரு நொடி அவன் தன்னை கணவனாக பாவித்தான், கண்மணியை தன் மனைவியாக பாவித்தான், ஆனாலும் அதை சொல்லி கண்மணியை குழப்பக்கூடாது என நினைத்து தன்னையே ஏமாற்றிக் கொண்டு அவளிடம் பொய்கதைகளை சொல்ல ஆரம்பித்தான்.

அவன் சொன்னதைக் கேட்ட கண்மணியோ அவன் போட்ட தாலியை கழட்ட மனமின்றி அவனை அந்த நொடி கணவனாகவே பார்த்துவிட்டதால் கணவன் சொல்பேச்சை  தட்டிக்கழிக்க முடியாமல் அச்சமயம் சரியென்பது போல் தலையாட்டிவிட்டு ஹாஸ்டல் அறைக்குச் சென்றவள் யாரும் பார்ப்பதற்குள் அந்த தாலியை கழட்டாமல் தனது உடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டாள்.

கண்மணியை ஹாஸ்டலில் இறக்கிவிட்டவன் எப்படியும் தன் பேச்சைக் கேட்டு அவள் தாலியை கழட்டியிருப்பாள் என நம்பி கனத்த மனதுடனே தனது லாட்ஜ்க்கு சென்றவன் அங்கிருந்தவர்களிடம் தான் வேறு இடத்தில் தங்க போவதாக சொல்லி அதுவரை தங்கியிருந்ததற்கான பணத்தை தந்து செட்டில் மெண்ட் செய்தவன் தனது உடைமைகளை பேக்கிங் செய்து வைத்துக் கொண்டான்.

ஹாஸ்டலுக்கு சென்ற கண்மணியும் வார்டனிடம் தனக்கு வேறு இடத்தில் தங்க இடம் கிடைத்துவிட்டதாகவும் அறையை காலி செய்வதாகவும் சொல்ல வார்டனும் சம்மதித்தார், அவளும் தனது உடைமைகளை பேக்கிங் செய்துக் கொண்டாள்.

மறுநாள் கமலி வேண்டுமென்றே கண்மணியை பிக்கப் செய்ய ஹாஸ்டலுக்கு வந்தாள் கண்மணியும் அவளின் வரவைக் கண்டதும் அதிர்ந்தாள்

”எதுக்கு இவ்ளோ சீக்கிரம் வந்திருக்கா, கண்டிப்பா நேத்து எங்க போன? என்ன விசயம்னு கேட்டு நச்சரிப்பா, நான் என்ன சொல்றது, உண்மை சொல்ல முடியாது, பொய் சொன்னா ஈசியா கண்டுபிடிச்சிடுவா, எப்படி இவள்கிட்டயிருந்து தப்பிக்கறது” என நினைக்கும் போதே குணா சரியாக வந்து சேர்ந்தான், அவன் வந்ததும் நிம்மதியான கண்மணி அவசரமாக அவனிடம் செல்ல கமலியோ அதிர்ந்தாள்

”கண்மணி நான்தான் வந்திருக்கேன்ல, குணாகிட்ட ஏன் போற, வா வா என்கூட வா” என அழைக்க குணாவோ

”கமலி உனக்கு இங்க என்ன வேலை தயவு செய்து கிளம்பு“

“ஏன் இப்படி கோபமா பேசற“

”இதப்பாரு கண்மணி உன்னால பயப்படறா, அவள் என்கூட வரட்டும், நான் அவளை பார்த்துக்கிறேன் நீ போ“

”என்னது கண்மணி பயப்படறாளா ஏன் எதுக்கு என்னைப் பார்த்து ஏன் பயப்படனும்“

”அவள் உன்னை பார்த்துப் பயப்படலை கவினை நினைச்சி பயப்படறா“

”கவினா அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்”

”எதுவும் இல்லைன்னா எதுக்காக உன் பின்னாடியே கவின் ஃபாலோ பண்ணிக்கிட்டு இவ்ளோ தூரம் வரனும் சொல்லு”

என சொன்னதும் அதிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தாள், கவினோ தூரத்தில் இருந்தான், அதைக்கண்டு நொந்துப் போன கமலியோ

”அவனை இப்பவே நான் விரட்டிடறேன்”

”ஒண்ணும் வேணாம், அவன் கண்மணியை விடற மாதிரி தெரியலை, உன்னாலயும் கண்மணியை பாதுகாக்க முடியாது, அதனால நானே கண்மணியை பார்த்துக்கிறேன்” என கடுமையாக பேசிவிட்டு கண்மணியை அழைத்துக் கொண்டு குணா சென்றுவிட்டான்

கமலிக்கு வந்ததே கோபம் அண்ணன் என்று கூட பாராமல் தன் வண்டியை ஓட்டிக் கொண்டு வேகமாக சென்று கவினின் வண்டியில் மோத அதில் அவன் தடுமாறி தெருவில் விழ அவனது வண்டியும் அவன் மீது விழ அதில் அவன் வலியில் அலறினான்

”டேய் உன்னால எல்லாமே நாசமாயிடுச்சி, சே நான் அவங்களை நம்ப வைச்சேன், ஆனா நீ எல்லாத்தையும் கெடுத்துட்ட, இப்ப உனக்கு சந்தோஷம்தானா”

”சாரி கமலி வந்து என்னை காப்பாத்து வா” என அழைக்க அவளும் போனால் போகட்டும் என அவனை காப்பாற்றினாள்

”என்னாச்சி ஏன் இப்படி செய்த”

”லூசு, குணா உன்னை பார்த்துட்டான், உன்னால கண்மணிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, இனிமேல நானே அவளை பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு அவளை கூட்டிட்டு போயிட்டான்“

”ஓ அப்படியா, சாரி, அவனுக்கு தெரியாமதான் வந்தேன், ஆனாலும் எப்படியோ கண்டுபிடிச்சிட்டான், அவன் ரொம்ப புத்திசாலியா இருக்கான் கமலி“

”ரொம்ப முக்கியம் நீ ஏன் என் பின்னாடியே அலையற”

”ஏய் நான் ஒண்ணும் உன் பின்னாடி வரலை, கண்மணியை பார்த்து மன்னிப்பு கேட்டு மறுபடியும் அவள் வாழ்க்கையில நுழையலாம்னு நினைச்சி வந்தேன்”

என சொல்ல கமலி இன்னும் கோபத்தில் அவனின் தோளிலும் முதுகிலும் மாறி மாறி அடிக்க அவன் வலியில் அலறினான்

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!