Skip to content
Post Views: 338
அது படிக்கும் இடமானாலும் சரி வெளியிடமானாலும் சரி, இருவரும் இப்படியேதான் நடந்துக் கொண்டிருக்க, அதனால் அவர்கள் கல்லூரி படிப்பை கூட சரியாக கவனிக்காமல் விட்டார்கள், அதைகூட அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை, அவளின் ஒற்றை சிரிப்புக்காகவே தவம் கிடந்தான், அவளும் அவனை காக்க வைத்து சிரிப்பாள், அந்த சிரிப்பில் தெரிந்த காதலில் தன்னை இழந்தான் குணா.
அவள் சிரிக்கும் போது குணா பலமுறை பார்த்திருக்கிறான், ஆனால் அன்றுதான் அவன் கண்ணில் ஒன்று தெரிந்தது, அது அவள் சிரிக்கும் போது அவளின் கண்களும் சிரித்தது, அதை ரசித்தான், அவனது ரசனையான பார்வையில் ஒரு மின்னல் தெரிந்தது, அதை அவள் வெகுவாக ரசித்தாள், அதற்காகவே அடிக்கடி சிரித்து வைத்தாள், அவனும் அடிக்கடி பார்வையில் மின்னல் வரவழைத்தான்.
பேச முடியாத தருணங்களில் எல்லாம் இருவரின் கண்கள்தான் பேசும், வா, போ, என்ன, இல்லை, ஆமாம் என்பதை கூட அவள் கண் இமையை அசைத்தோ, புருவத்தை அசைத்தோ, தலையை அசைத்தோ அவள் செய்யும் அந்த அபிநயத்தை காண்பதற்காகவே வேண்டுமென்றே அவளுடன் பேச முடியாத தருணங்களை உருவாக்கினான் குணா, அவள் காட்டும் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் ரசித்தான், கோபம், தாபம், ஏக்கம், சிரிப்பு, அழுகை என அவள் காட்ட காட்ட அதில் அவனுக்கு பித்தம் தலைக்கேறியது.
சில நேரங்களில் கைகோர்த்து நடக்கும் போது அவனுக்கு அலாதி சுகமாக இருக்கும். உலகையே வென்றவன் போல தன்னை நினைத்துக் கொண்டு கர்வம் கொள்வான், அவனது கண்மணி அவனது கைகளை பற்றிக் கொண்டிருக்கையில் வேறு என்ன வேண்டும் இதுவே போதும் என்ற அளவு பக்குவம் வந்துவிட்டது, அவளுக்கும் அப்படித்தான், காதலை சிரிப்பால் பேச்சால் வெளிப்படுத்தியவள் அடுத்து எப்படி வெளிப்படுத்துவது என யோசித்து இவ்வாறு செய்யலானாள்.
Advertisement
தனிமையான இடம் கிடைத்தால் போதும் அவனது தோளில் தலை சாய்த்துக் கொள்வது, அவனது கையை கோர்த்துக் கொள்வது, என செய்ய பதிலுக்கு குணாவும் அவளை அணைப்பது, தழுவுவது, கன்னத்தில் முத்தம் தருவது என அவனால் முடிந்த அளவு தனது காதலை வெளிப்படுத்தினான்.
இப்படி எல்லாம் செய்தால்தான் காதலா என இளப்பமாக நினைத்தவளுக்கு இப்போது இந்த சின்ன சின்ன விசயங்களை கூட பெரியதாக நினைத்தாள், அதை விரும்பினாள், சொல்லப்போனால் அதற்கு அடிமையாகிவிட்டாள்.
காதலித்தால் என்ன நடக்கும் என முதல் முறை அனுபவித்தான் குணா, அவனது நேரம் காலம் கூட பொண் போல மாறியது, காதலியுடன் இருப்பது ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போல தெரிந்தது, சொர்க்கத்தை பற்றி தெரியாதவன் கூட காதலித்தால் தெரிந்துவிடும் என அப்போது அவன் உணர்ந்தான், தனக்காக ஒருத்தி, தனக்கென ஒருவள், தன்னுடன் இருப்பது கூட உலகை வென்றதற்கு சமம், அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடிகளும் ஒரு அழகான கவிதை தொகுப்பை தந்தது, அவன் படிக்கும் பாட புத்தகம் கூட கவிதை தொகுப்பாக மாறியது
Advertisement
இதற்கு முன் உலகை வென்றவனுக்கு இப்போது மொத்த உலகமும் அவனுக்கு அழகாக தெரிந்தது, அதை அழகாக உருவாக்கிய கண்மணியை தேவதையாகவே பார்க்கலானான்.
Advertisement
கடந்த கால அவனது வெறுப்பான வாழ்க்கை கண்மணியால் மாறிக் கொண்டே வந்தது, ஏனோதானோவென வாழ நினைத்தவனுக்கு இப்போது அவளுக்காக வாழ ஆசைபட்டான், அந்த ஆசையே அவனை மாற்றியது, அவளை காதலியாகவே பார்த்துவிட்டான், ஆனால் அவளோ கணவனாக பார்த்துவிட்டாள், அதனால் இருவர் காட்டும் அன்பிலும் அப்படியொரு வித்தியாசம் இருந்தது, குணா கண்மணி மீது அன்பை வாரி அளிப்பதை பேச்சாலும் சிரிப்பாலும் காட்ட அவளோ தனது அன்பை செயலால் காட்டினாள்.
குணாவுடன் எந்தளவுக்கு அன்பாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு அவன் மேல் அன்பு காட்டினாள், இதில் அந்த தாலி அதை அவள் உண்மையாகவே கருதினாள், குணாவை தனது கணவனாகவே பார்த்துவிட்டாள், அதனால் அவன் மீது அதீத உரிமையும் எடுத்துக் கொண்டாள், இது தவறு என குணாவுக்கு தெரிந்தும் ஏதாவது சொன்னால் அவள் வேதனைப்படுவாளே என்பதற்காக ஓரளவுக்கு அவளிடம் கண்ணியமாகவே நடந்துக் கொண்டான், ஆனாலும் அவளின் அன்பில் அவனது கண்ணியம் கூட தடுமாறும், அந்த சமயத்தில் எல்லாம் குணா படும் அவஸ்தையை கண்மணி புரிந்துக் கொண்டதில்லை, புரிந்துக் கொள்ளவும் முயன்றதில்லை, வழக்கமாக குணா வெளியே படுக்க செல்ல அன்று பார்த்து கண்மணி முரண்டு பிடித்தாள்
”முடியாது இன்னிக்கு என்கூடதான் படுக்கனும்”
Advertisement
”தினமும் இதே போல வம்பு பண்ற, விளையாடாத கண்மணி, நீ உள்ளயே படு அதுதான் நல்லது”
”போதும் நல்லது நல்லதுன்னு நீ என்னை அவாய்டு பண்ற”
”புரிஞ்சிக்க கண்மணி, நமக்கு இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கு”
”இப்ப என்ன படிக்காமலா இருக்கோம் ஒண்ணா படுக்கறதால என்ன குறைஞ்சிடவா போற”
”இப்பவே நான் என் கன்ட்ரோலை கொஞ்சம் கொஞ்சமா இழந்துக்கிட்டு வரேன், இதுல உன்கூட ஒண்ணா படுத்தேன்னு வையேன், சத்தியமா சொல்றேன் ஏதாவது தப்பு நடந்துடும், வேணாம் கண்மணி, என்னை விடு”
”அதென்ன தப்பு தப்புன்னு சொல்ற, புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடக்கறதை தப்புன்னு யாரும் சொல்ல மாட்டாங்க”
”நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை கண்மணி”
”என் கழுத்தில தாலியிருக்கு குணா”
”ப்ச் அது அவசரத்தில போட்டதுன்னு ஆயிரம் முறை சொல்லிட்டேன், திரும்ப திரும்ப சொன்னதையே சொன்னா என்ன அர்த்தம்”
”ஆயிரம் விளக்கம் சொன்னாலும் சரி நீ என் புருஷன்தான்”
”இப்ப என்னதான் வேணும் உனக்கு“
”என்கூட படுத்துக்கோ”
”ஷ்ஷ்ஷ் வேணாம் கண்மணி, தப்பாயிடும், இப்பவே அடிக்கடி கட்டிப்பிடிக்கற, முத்தம் வேற கொடுக்கற, அதுக்கே நான் கன்ட்ரோல் இழக்கறேன், இப்ப ஒண்ணா படுக்கனும்னா வேணாம் உன் கால்ல கூட விழறேன் ப்ளீஸ் என்னை விட்டுடு”
”முடியாது இப்ப என்கூட நீ உள்ள படுக்கலைன்னா உன்கூட நான் வெளிய வந்து படுப்பேன் எப்படி வசதி”
”உள்ள விட வெளிய மேல்“
”எப்படி“
”அதான் நமக்கு கமலி கவின்னு இரண்டு பாடிகார்ட்ஸ் இருக்காங்களே, தப்பித்தவறி ஏதாவது ஆனா கூட போதும் அவங்க அலார்ட் பண்ணுவாங்க வா போலாம்” என அழைக்க அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது, ஆனாலும் அவனை விட மனதில்லாமல் கூடவே சென்றாள்
அங்கு கவினோ கமலியை உலுக்கிக் கொண்டிருந்தான்
”என்னது மணி 10 ஆகுது, இன்னும் குணா உள்ள என்ன செய்றான், அப்படியே உள்ளயே செட்டில் ஆயிட்டானா, அய்யோ போச்சே போச்சே“
”டேய் கொன்னுடுவேன், குணாவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் ஏன்டா புலம்பற”
”இவ்ளோ நேரம் ஆகுது இன்னும் வெளிய வரலையே”
”ப்ச் நாளைக்கு ப்ராஜக்ட் தரனும், மறந்துட்டியா அது சம்பந்தமா ஏதாவது வேலையா இருப்பான் போல, பொறுமையாதான் இரேன்” என அதட்ட அதற்குள் குணாவும் கண்மணியும் வரவும் கவினுக்கு நிம்மதியாகிப் போனது
”அப்பாடா இப்பதான் உசுரே வருது”
”ஏன்டா இப்படி பயப்படற“
”இல்லை கமலி, நீ சரியா கவனிக்கலை, குணா என்னவோ விலகிதான் போறான், ஆனா இந்த கண்மணியிருக்காளே அவள் எப்ப பாரு அவனை உரசிக்கிட்டே இருக்கா“
”குணா மேல சந்தேகப்படாத”
”அய்யோ என் சந்தேகம்லாம் குணா மேல இல்லை கண்மணி மேலதான்”
”என்னடா சொல்ற”
”ஆமாம் இந்த வீட்டுக்கு வந்ததில இருந்து கண்மணியை நான் கவனிக்கிறேன், இங்கயும் சரி காலேஜ்லயும் சரி அவளோட நடவடிக்கையில நிறைய மாற்றம் இருக்கு, குணாவே விலகி போனா கூட இவளே தேடிப்போய் அவன்கிட்ட பேசறா, சிரிக்கறா, வழியறா, சில சமயம் யாரும் கவனிக்காதப்ப அவனோட கையை பிடிச்சிக்கறா, அதைப்பார்க்கறப்ப எனக்கு அப்படியே உடம்பெல்லாம் எரியுது“
”ஏன்டா கைபிடிச்சதுக்கேவா இப்படி சாகற”
”ஆமாம் நேத்து கைபிடிச்சா, இன்னிக்கு கட்டிப்பிடிப்பா, நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கும், அதை எல்லாம் பார்த்துக்கிட்டு சும்மாயிருக்க சொல்றியா”
”குணா கண்மணிகிட்ட டீசன்டா நடந்துக்கறான், கண்மணிதான் குணாவை டார்ச்சர் பண்றா, அவளை ஏதாவது செய்யனும்“
”தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன் கொன்னுடுவேன், எதை செய்றதாயிருந்தாலும் குணாவை செய் கண்மணி மேல சின்ன தூசு பட்டிச்சி, அவ்ளோதான் பார்த்துக்க”
”டேய் சும்மாயிருடா அவங்க கணவன் மனைவி போல நடிக்கறாங்கன்னு தோணுது, உள்ள ஒண்ணும் இல்லை, அவங்களுக்கு தெரிஞ்சதே படிப்பு மட்டும்தானே”
”ம்க்கும் அவங்க எங்க படிக்கறாங்க படிக்கற மாதிரி தெரியலையே”
”இப்ப செமஸ்டருக்கான ரிவிஷன் டெஸ்ட் நடக்கப் போகுது, அதுல அவங்க நிறைய மார்க் எடுப்பாங்க, அப்ப உனக்கே புரியும் பாரு”
“எனக்கு நம்பிக்கையில்லை கண்டிப்பா பெயில் ஆவாங்க”
”எதை வைச்சி சொல்ற”
”பஞ்சும் நெருப்பும் பக்கத்து பக்கத்துல இருந்தா சீக்கிரமா பத்திக்கும், அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது விடு“
”குணா தப்பு செய்ய மாட்டான்“
”நீ ஒண்ணு சந்தர்ப்பம் சூழ்நிலை சாதகமா அமைஞ்சா எப்பேர்ப்பட்ட உத்தமனும் தப்பு செய்வான், குணாலாம் எந்த மூலைக்கு, அய்யோ இவங்களுக்குள்ள எதுவும் நடக்கக்கூடாது, ஆண்டவா ஆமா அவங்க என்ன செய்றாங்க” என அலறினான் கவின், கமலியோ என்னவோ ஏதோவென பார்த்து திடுக்கிட்டாள்
குணாவும் கண்மணியும் வெட்டிவெளியில் பாய் தலையணையுடன் படுத்து வானத்தில் நட்சத்திரங்கள் தெரியாமல் போக அதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்
”ஆமா இப்ப எதுக்கு இவங்க ரெண்டு பேரும் வெளிய வந்து படுக்கறாங்க”
”தெரியலையே”
”கரண்ட்தான் இருக்கே அப்புறம் என்ன”
”டேய் ஏன்டா இப்படி, அவங்க உள்ள இருந்தாலும் சந்தேகப்படற வெளிய இருந்தாலும் சந்தேகப்படற”
”இப்பதான் சந்தேகம் அதிகமாகுது, எதுக்காக அவங்க ரெண்டு பேரும் வெளிய படுக்கறாங்க”
”உள்ள புழுக்கமா இருக்கும்”
”இல்லை இருக்காது என்னமோ தப்பிருக்கு”
”நீயா கற்பனை செய்யாத”
”இல்லை குணா நல்லவன்தான், ஆனா கண்மணி என்னவோ செய்றா, அதுல பயந்து அவன் அவளையும் கூட்டிட்டு வெளிய வந்திருக்கான்னு தோணுது”
”சரி விடு, அவங்கதான் வெளிய இருக்காங்கள்ல அப்புறம் என்ன”
”காத்து வேற பலமா வீசுது, மழை காலம் வேற”
”அதனால என்ன”
”லூசு நீயெல்லாம் எப்படி எனக்கு தங்கச்சியா பிறந்த”
”ஏன்டா திட்டற”
”பின்ன மழை பெஞ்சதுன்னு வையேன், இரண்டும் வீட்டுக்குள்ள போயிடும், குளிருக்கு அடக்கமா இரண்டும் ஒண்ணையும் ஒண்ணை”
”டேய் நிப்பாட்டு, இதுக்கு மேல ஏதாவது பேசின அண்ணன்னு கூட பார்க்கமாட்டேன், மழையும் வராது ஒரு மண்ணும் வராது பேசாம இருடா” என அவள் சொல்லிய நேரம் இடியுடன் கூடிய மின்னல் ஒன்று வெட்ட அதில் கவின் கமலி மட்டும் அல்ல கண்மணி கூட பயந்து அலறினாள். குணாவோ
”ஏய் கண்மணி ஏன் கத்தற, ஒண்ணுமில்லை வெறும் இடிதான்” என சொல்லியும் அவள் கேளாமல் அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள அதைக்கண்ட கவினும் கமலியும் நெஞ்சு வலி வந்தது போல துடித்துப் போனார்கள்.
குணாவோ கண்மணியை விலக்கினான்
”குணா பயமாயிருக்கு வா வீட்டுக்குள்ள போலாம்”
”உனக்கு பயமாயிருந்தா நீ போ நான் இங்கயே இருக்கேன்”
”மழை வர்ற மாதிரியிருக்கு இங்க எப்படி படுப்ப, வா உள்ள“
”ப்ச் மழை வராது கண்மணி” என சொல்லும் போது தூறல் போடவும் அதிர்ந்தனர் நால்வரும்
”போச்சி மழை பெய்யுது, வா வா உள்ள வா” என கண்மணி குணாவை அழைக்க அவனுக்கு திக்கென்றது
”மழையில நான் நனைஞ்சாலும் பரவாயில்லை நான் வரலை நீ போ”
”நீ வந்துதான் ஆகனும் வா” என அவனை கையை பிடித்து இழுக்க குணாவோ முடியாது என அலற அதைக்கண்ட கமலியும் கவினும் திக்குமுக்காடிப் போனார்கள்
”அவன் சும்மாயிருந்தா கூட இவள் விடமாட்டேங்கறாளே, பாவி எப்படி இழுக்கறா பாரேன், இவளை இப்பவே போய் ஒரு கை பார்த்துட்டு வரேன்”
”நானும் வரேன் வா”
”நீ எதுக்கு”
”கையோட குணாவை கூட்டிட்டு வந்துடலாம்”
”எங்க இங்கயா“
”ஆமாம் அவன் அங்க இருந்தா ஆபத்து என்கூடவே இருக்கட்டும்”
”ஐஐ ஜாலி”
”எது ஜாலியா நீ கண்மணியை விட மோசமா இருக்கியே, வேணாம் அவன் அங்கயும் இருக்க வேணாம் இங்கயும் இருக்க வேணாம், அவனை நான் எங்கயாவது கூட்டிட்டுப் போயிடறேன்”
என சொல்லும் போது சடசடவென மழை பொழியவும் எதிர்பக்கம் என்ன நடக்கிறது என அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்
மழை வரவும் குணாவே கண்மணியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை சாத்திவிட கமலிக்கும் கவினுக்கும் உயிரே இல்லை, இனி என்ன செய்வது என தெரியாமல் இருவரும் தவித்தார்கள்
”அய்யோ போச்சே போச்சே”
”டேய் புலம்பாதடா எனக்கு குணா மேல நம்பிக்கையிருக்கு பேசாம இரு”
”ஆனா எனக்கு கண்மணி மேல நம்பிக்கையில்லையே”
”சே அமைதியா இருடா, மழை நிக்கற வரைக்கும்தான், நின்னபின்னாடி குணா வெளிய வந்துடுவான் பாரு” என சொல்ல கவினும் மழை நிற்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டான்
மறுபக்கம் குணாவோ வீட்டிற்குள் வந்ததும் கண்மணி அவனை ஆசையாக அழைத்தாள்
”வா குணா என் பக்கத்தில வா”
”என்ன உன் குரல் வித்தியாசமா இருக்கு என்னாச்சி உனக்கு”
”ஒண்ணுமில்லையே நான் நல்லாதான் இருக்கேன்”
”இப்ப ஏன் ஒரு மாதிரி கிறக்கமா பேசற, எப்பவும் போல பேசு கண்மணி”
”ப்ச் மழை பெய்யறதால தொண்டை கட்டிக்கிச்சி“
”ம்க்கும் முடியலை என்னால”
”சரி வா படு”
”எங்க உன் பக்கத்திலயா“
”ஆமாம்”
”பரவாயில்லை நான் வேற இடத்தில படுத்துக்கறேன்” என சொல்லும் போதே கரண்ட் கட் ஆகவும் கண்மணி அலறவில்லை குணாதான் அலறினான், அதைக்கேட்டு கண்மணி கலகலவென சிரித்தாள்
”குணா இருட்டுன்னா பயமா உனக்கு“
”இருட்டைக்கண்டா எனக்கென்ன பயம்”
”அப்புறம் ஏன் பயத்தில கத்தின”
”உன்னை நினைச்சிதான் பயத்தில கத்தினேன், கரண்ட் வேற இல்லை, வெளிய வேற மழை பெய்யுது, இதப்பாரு என்னை எதுவும் செய்யாத, நல்ல பொண்ணாட்டம் தூங்கு, அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது, கேட்குதா கண்மணி, கண்மணி கேட்குதா இல்லையா, என்ன பதிலே வரலை, எங்கடி இருக்க” என அவன் அலற அதற்குள் கண்மணி ஒரே ஒரு மெழுகுவர்த்தியை பற்ற வைத்து எடுத்து வந்தாள்
”ஏன் கத்தற குணா” என சொல்லிக் கொண்டே அந்த மெழுகுவர்த்தியை வசதியாக ஒரு இடம் பார்த்து வைத்துவிட்டு அவனை நெருங்கி வர அவனுக்கு மூச்சு முட்டியது
”கண்மணி வெளிய மழை நின்னுடுச்சின்னு நினைக்கிறேன், நான் வெளியே போறேன்”
”மழை நிக்கலை நல்லா ஜோன்னு பெய்யுது, நீ பேசாம உள்ளயே இரு” என சொல்லிக் கொண்டே அவனை கட்டியணைக்க வர அவனோ தடுத்தான்
”கண்மணி விளையாடாத, பீ சீரியஸ், அல்ப்ப சந்தோஷத்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை இழக்க வேணாம், படிப்புதான் நமக்கு முக்கியம், நாம படிச்சி பெரியாளாகி எல்லார் முன்னாடியும் வாழ்ந்து காட்டனும், அதுக்கு அப்புறம் கல்யாணம் செய்துக்கனும், அதுக்கு அப்புறம்தான் எல்லாம், அதுவரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா” என சொல்லி முடிப்பதற்குள் கண்மணி அவனது இதழில் முத்தம் வைத்தபடி இருக்க அவனோ ஸ்தம்பித்து போனான்.
மெழுகுவர்த்தி கரைவது போல குணா மெல்ல மெல்ல கரையலானான், அவளின் முத்தம் அவனை மயக்கியது, அவனாகவே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான், அவள் தந்ததை விட இப்போது அவன் அவளுக்கு அழுத்தமாக முத்தம் தந்தான், அந்த முத்தத்தினால் சித்தம் கலைந்தாள் கண்மணி, இருவரும் படுக்கையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி படுத்தனர் அவளோ அவனின் தலைமுடியை கோதிவிட அவனோ அவளின் கன்னத்தை தடவிவிட்டான்.
கரண்ட் இல்லாமல் வேர்த்து கொட்டியது, இருவரும் பேச வார்த்தைகள் இன்றி தடுமாறினார்கள், அவளின் கண்ணில் அப்படியொரு தாபம், அவனின் கண்ணில் அப்படியொரு ஏக்கம், இரண்டும் அவர்களை எல்லை மீறி வைக்கத் தூண்டியது.
குணாவே சற்று தடுமாறி அவளை நெருங்கும் சமயம் அவனது செல்போன் அலறியது, அதில் அவன் அவளை விட்டு விலகிப் போனான், கண்மணிக்கோ கோபம் தலைக்கேறியது, குணாவின் செல்போனை அவளே எடுத்தாள், மறுபக்கம் கவின் அலறினான்
”குணா குணா என்னடா செய்ற, வெளிய வாடா, மழை நின்னுப் போச்சி வாடா” என அலற அதைக்கேட்ட கண்மணியோ
”டேய் என்னடா வேணும் உனக்கு, என் புருஷன் என்கூட இருக்கான், உனக்கென்ன வந்தது, என் லைப்ல வராத” என சொல்லி டக்கென போனை கட்செய்துவிட அரண்டான் கவின்
”போச்சி போச்சி எப்படி பேசறா பாரு இவளை” என கோபத்தில் கொதிக்க கமலியால் பொறுமையாக இருக்க முடியாமல் குணாவிற்கு போன் செய்தாள், அப்போதும் கண்மணிதான் எடுத்தாள்
”குணா அவசரப்படாத தப்பு எதுவும் செய்யாத, ப்ளீஸ் என்னை மறந்துடாத, நான் இருக்கேன்ல கண்மணி வேணாம் உனக்கு” என கெஞ்ச கண்மணி
”ஏய் நீயெல்லாம் ஒரு பொண்ணா, அடுத்தவள் புருஷனை அடைய பார்க்கற, இன்னொரு முறை குணாவை நெருங்கின, உன்னை கொன்னுடுவேன் வைடி போனை” என திட்டி விட்டு போனை கட்செய்துவிட கமலியால் அதை ஏற்க இயலாமல் குமுறி குமுறி அழுதாள்.
குணாவோ கண்மணியிடம் இருந்து செல்போனை வாங்க முயல அவளோ தடுத்து அவனது போனை அவளே சுவிட்ச் ஆச் செய்துவிட குணாவோ திடுக்கிட்டான்
”கண்மணி என்ன செய்ற நீ”
”அந்த கவினும் கமலியும் நம்மளை நிம்மதியாவே இருக்க விடமாட்டாங்க, அதான் போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் இப்ப வா”
”வேணாம் கண்மணி இது தப்புன்னு மனசுக்கு படுது”
”ப்ச் குணா இதனால நாம எப்பவுமே பிரிய மாட்டோம்“
”இல்லை கண்மணி, நீ தப்பா புரிஞ்சிக்கற, நான் உன்னை விட்டுட மாட்டேன், அதுக்காக இப்படி செய்யனும்னு கட்டாயமில்லையே, ப்ளீஸ் கொஞ்ச நாள் பொறுமையா இரு“
”முடியாது குணா இப்ப நீ வர்றியா இல்லையா”
”கண்மணி செமஸ்டர் எக்ஸாம் வரப்போகுது, நாம வேற சரியா படிக்கலை எக்ஸாம்ல நாம பெயில் ஆனா அவ்ளோதான்”
”அதெல்லாம் ஆக மாட்டோம்“
”எதை வைச்சி சொல்ற, இத்தனை நாள்ல நீ புக் எடுத்து படிச்சி நான் பார்க்கலை”
”நான் காலேஜ்லயே படிக்கறேன்”
”கிழிச்ச அங்கயும் என்கூடதானே இருக்க”
”ப்ச் நீ வேலைக்கு போறப்ப நான் இங்கதானே இருக்கேன், அப்ப படிக்கிறேன்”
”நீ எங்க படிக்கற சமையல் செய்ற”
”குணா நீ பயப்படாத, நான் நல்லாதான் படிக்கிறேன்”
”இல்லை உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது, படிக்கறதை விட்டுட்டு என்கூடவே நேரத்தை ஓட்டற, இது சரியில்லை”
”எக்ஸாம் வரும் போது படிச்சிக்கிறேன்”
”அது தப்பு, நாளைக்கு ப்ராஜெக்ட் வேற தரனும் நீ முடிச்சிட்டியா”
”இல்லை“
”பாரு இது தப்பில்லையா”
”எல்லாம் நான் நேரத்தோட தந்துடுவேன்”
”இல்லை கண்மணி, இது சரியா வராது, நீ ப்ராஜெக்ட் பண்ணு நான் வெளிய போறேன்”
”குணா என்னை கோபமாக்கி பார்க்காத, என்கூட இருப்பியா மாட்டியா” என அவள் கோபமாக பேச அவனோ திடுக்கிட்டான்
…. தொடரும்
error: Content is protected !!