Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 20.3

சில நிமிடங்கள் அவளுக்கும் மூச்சு கொடுத்து தானும் மூச்செடுத்தவன் பிறவி பயனில் முதல் பாதியை அடைந்த நிம்மதியில் இடைவெளியிட, புயலாய் அவன் மார்பினில் சாய்ந்தாள்.

இடை வளைத்து தன்னோடு அவளை அனைத்தவன் மீண்டும் அவள் முகத்தை பற்றி தன்னை பார்க்க செய்தான். அவள் முகத்தின் செந்நிறம் தங்கள் முதல் முத்தத்தின் பிரதிபலிப்பை கூற, திருப்த்தியோடு மெல்ல புன்னகைத்தவன், இதழ் கடித்து உணர்ச்சியில் இருந்தவள் இதழை விரலின் உதவியோடு பிரித்தான்.

“சக்கரை… என்னமா இனிக்கிறடி” மீண்டும் மூன்று நொடி நீடித்த முத்தம் கொடுத்த தேவாவின் முகம் பிரகாசித்தது.

“உன்ன சக்கரைனு சொல்றது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா? நாட்டுச்சக்கரைடி நீ” அனுபவித்து உணர்வுகளின் பிடியிலிருந்தவன் கூறியது அளவுகடந்த சிரிப்பை கொடுக்க சத்தமாக சிரித்தவள் மெல்ல அவன் மார்பினில் அடித்தாள் பைரவி.



Advertisement

“என்னடி சிரிக்கிற?” என்றான் அப்பாவியாக.

“ஆனந்த்… என்ன ஏன் சக்கரை சொல்றிங்க?”

“நீ தேனா இனிக்கிறீயா அதான்…” மையல் பார்வையோடு மீண்டும் தன்னை நெருங்கியவன் வாயில் கை வைத்து தடை விதித்தாள் அவன் மனைவி.

Advertisement

“ப்ச்… சொல்லுங்க ஆனந்த்”

Advertisement

“ம்க்கும்… அதுவா…” இழுத்தவன் பிறகு, “உன்ன நான் எப்ப பாத்தாலும் எவ்ளோ சோகத்துல இருந்தாலும் சாப்பாட விட்டுட்டு ஸ்வீட் தான் அதிகம் சாப்பிட்ட.

நம்ம நிச்சயம் அன்னைக்கும்… அன்னைக்கும் அவ்ளோ டென்ஷன்ல இருந்தும் உன் வாட்டுக்கு குலாப் ஜாமுன் சாப்டுட்டு இருந்தியே அப்போ கோவத்துல இனிப்பு பண்டாரம்னு திட்டினேன்…

அது அப்றம் அப்டியே இனிக்கிற, தித்திக்கிற சக்கரையா அடுத்த கொஞ்ச நேரத்துலையே மாறிடுச்சு” நிச்சயம் அன்று இரவு முதல் முறை தன்னை சக்கரை என அழைத்தானே அதை தான் குறிப்பிடுகிறானோ என்ற கேள்விக்கு பதிலே அவன் அடுத்து கூறினான்.

Advertisement

“அன்னைக்கு நீ அழுதத பாத்துட்டு இருக்க முடியல, அப்றம் நீ பேசுனது ஏன்னு தெரியாம ரொம்ப புடிச்சது. தான் மேல தப்ப வச்சிட்டு ஒரு பொண்ணு இப்டி மனசு ஒடஞ்சு அழுகை மாட்டாங்க, அதோட என்னோட வாழ்க்கைக்காக பேசுன பாரேன்.

அப்போ தான் உன்ன முழுசா புரிஞ்சுக்கிட்டேன். அந்த நிமிஷம் உன் முகம் என் மனசுல சக்கரையா இனிச்சது” சிவந்தாள் மனைவி.

“போதுமா என் பொண்டாட்டிக்கு விளக்கம்?” தலையை ஆட்ட கூட வெட்கம் அனுமதிக்கவில்லை அவளது உடல். அவன் கையேடு கை கோர்த்து இனிமையாக இரவை ரசித்தாள்.

முதல் முத்தத்தின் கிரகத்தில் விறல் கோர்த்தவள் கைகள் தணிக்க முடியாத அவன் சூட்டை தென்னை காற்று தணிக்க போராடிக்கொண்டிருந்தது. “வீட்டுல எதுவும் சொன்னியா சக்கரை?”

“இல்லப்பா, நீங்க மாமா கூட சண்டை போட்டிங்கனு மட்டும் தான் சொன்னேன். ஏன் யாரும் எதுவும் கேட்டாங்களா?”

“இல்ல… எல்லாரும் வெளிய வந்து படுத்துட்டாங்களே அதான் யோசனை”

“ஆச்சி சொல்லிருப்பாங்க” என்றாள் யோசனையாக. “ஆமா நீ என்ன சொல்லிட்டு வந்த?”

“என் ஆனந்த்த பாத்துட்டு வர்றேன்னு சொன்னேன்” இடது கரம் அவன் கரம் பற்றியிருக்க வலது கரத்தை வளைத்துக்கொண்டது அவளது மற்றொரு கரம். “ஹே நிஜமா?” ஆச்சிரியமாக சிரிப்போடு கேட்டான்.

“ஆமா. நான் ஏன் பயப்பிடனும்?” நிமிர்ந்து கேட்டாள் பைரவி. சத்தமாக சிரித்தவன் கால்களை தரையில் உதைத்து இருவரும் ஊஞ்சலில் ஆடுவதை துவங்கினான்.

“பயம் வேணாம்டி. சங்கடமா இல்ல? எனக்கு கூச்சமா இருந்தது ப்பா” உண்மையை ஒப்புக்கொண்டு மனைவியை பார்த்தான்.

“எனக்கு அப்டிலாம் தோணல… சொல்லப்போனா இப்டி நான் கேக்க மாட்டேனான்னு எதிர் பாத்துட்டே இருந்தவங்களுக்கு நான் சொன்னது அவ்ளோ சந்தோசம். அனுப்பிவிட்டாங்க” காற்றில் கலைந்த கேசத்தை ஒதுக்கியவள் கலையான முகம் நொடியில் வாடியது.

முகத்தில் உணர்ந்த மாற்றம் தன்னை பற்றியிருந்த தேவாவின் கைகளிலும் தெரிய அவள் இடையோடு கைகள் வைத்து மார்போடு அணைத்தான்.

“நான் ஒரு நாளும் ஒரு மூலைல முடங்கி இருப்பேன்னு கனவுளையே யோசிச்சதில்லை. ஆனா ஒரே நாள். ஒரு மணி நேரம் நான் அனுபவிச்ச கொடுமைலை உலகத்துல இருக்க எல்லா பயத்தையும் எனக்குள்ள விட்டு,

இனி இது தன் உன் விதின்னு என்ன நானே சொல்லிட்டு ஊர் உலகம் சொல்ற எல்லா பேச்சையும் தப்பே செய்யாம வாங்கிட்டேன் பாருங்களேன்… அத விட கொடுமையான நரகத்தை நரகமே தர முடியாது” கண்ணீர் சிந்தி அழவில்லை, ஆனால் அவளது வேதனை நடுங்கும் அவள் உடலே சொன்னது.

“பொண்ணுன்னு ஒருத்தி தெருல நடந்து வந்தா, அவளை பாக்குற பத்து ஆம்பளைங்கள்ல ஒருத்தன் கண்டிப்பா அவளை துகிலுரிச்சு கற்பனைலயே கற்பழிச்சிட்டு தான் இருப்பான்.

அதுக்காக தன்னோட வாழ்க்கையையும் தனக்கான சந்தோஷத்தையும் விட்டு வீட்டுக்குலையே முடங்கி இருக்க முடியுமா? அவளுக்குனு ஒரு கடமை இருக்கும், அவளுக்குன்னு ஒரு லட்சியம் இது எல்லாமே இருக்குற இடம் தெரியாம போக ஏதோ ஒரு நாய் பண்ண தப்பு முன்னாடி வந்து,

அந்த பொண்ணோட குடும்பம், நட்பு வட்டாரம் பின்னாடி போக இடம் குடுகுதுன்னா அப்போ தப்பு யார் மேல பைரவி?” சமாதான மொழி கூற முயன்றான். பதில் தெரிவித்த அவள் கண்கள் கலங்க வழிந்த கண்ணீரை காட்டின.

“இந்த காலத்துல ஒரு ஆம்பளைக்கே பாதுகாப்பு இல்லை. அப்போ அதெல்லாம் யோசிச்சு அவங்களும் மூலைல முடங்கி நிக்கணுமா? முட்டி மோதி தான் வாழ்க்கைல ஜெயிக்க முடியும். அதுல சிலருக்கு சின்னதா அடி படும்.

சிலருக்கு பெருசா எந்திரிக்கவே முடியாத அளவு அடி படும். வலிக்கிது வலிக்கிதுன்னு சொல்லிட்டே நின்னா சேர வேண்டிய இடத்துல சரியான நேரத்துக்கு போய் சேர முடியாது”

“இன்னமும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி உங்கள கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா நானும் வாழ்க்கைல அனுபவிக்க வேண்டிய சந்தோசத்தை எல்லாம் சரியான நேரத்துக்கு அனுபவிக்காமலே போயிருப்பேன்ல?” அவள் முதுகை பதமாய் தடவி உணர்ச்சிவசப்பட்டவள் உளம் அறிந்து செயலாற்றினான்.

“உங்க இடத்துல வேற ஒருத்தர் இருந்திருந்தா எனக்கு என்ன நடந்ததுன்னு கூட நான் சொல்லிருப்பேனோ மாட்டேனோ…”

“அடியேய் இந்த தேவா தவற வேற ஒருத்தன் உன் வாழ்க்கைல வந்துருப்பானா… இல்ல இந்த தேவா தான் வர விட்ருப்பானா?”

மீசையை முறுக்கி மனைவியை தேவா முறைக்க சிரிப்போடு அவன் மீசையை இழுத்து விளையாண்டவள் தீவிரமாக, “நான் ஒரு ரேப் விக்டிம்கிற எண்ணமே மொத்தமா வேரோட சஞ்சத்துக்கு காரணமே நீங்க தான் ஆனந்த்.

அந்த காட்சி வந்தாலும் அடுத்த செகண்ட் நம்ம கல்யாணம் அன்னைக்கு என்ன பாத்து சிரிச்ச உங்க முகம் வந்து சிம்மாசனம் போட்டு ஒக்காந்துக்கும்… பல கனவு உங்களோட காணனும், சண்டை போடணும், சிரிக்கணும், சந்தோஷத்துல அழுகணும். மொத்தமா நான் ஆனந்தோட பைரவியா இருக்கனும்”

ஊஞ்சல் ஆடுவதை நிறுத்தி மனைவி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த தேவா உணர்ச்சியின் பிடியில் கண் கலங்கி நிற்கும் மனைவியை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான்.

அவளும் சிறு எதிர்ப்பு கூட கொடுக்கவில்லை. பாதுகாப்பாக அவனது கழுத்து வளைவினுள் புதைந்து பாரத்தை தீர்த்துவிட்டு தலை திருப்ப, வாயிலை நோக்கி நடந்திருந்தான் கணவன்.

தேவாவின் சட்டையை பிடித்து இழுத்தவள் அவனை தடுக்க, அப்படியே நின்று, “வீட்டுக்கு போகலாம் சக்கரை, நேரமாச்சு” என்றான் அவசரமாக.

அவனுக்கு எங்கே தானே தன்னை மீறி சென்றிடுவோமோ என்ற பயம். மனைவியும் எல்லைகள் வகுக்காது அவன் போக்கில் விட்டிருக்க தேவா அவள் நிதானப்பட்டான்.

“நான் உங்ககூட இருக்கனும், உங்க பக்கத்துல இருக்கனும்” என்றாள் அழுத்தமாக.

“சக்கரை…” ஆற்றாமையில் நெளிந்தான் தேவா.

“நம்ம வீட்டுக்கு போங்க ஆனந்த்” பிடிவாதம் பிடிக்கும் மனைவி பேச்சு தட்டாமல் சென்றவன் அவளை வாயிலில் இறக்கிவிட அவன் வெளியிலே நின்றான்.

“என்ன ஆனந்த்?” புரியாமல் பைரவி அவனை கேட்க தலையை கோதிக்கொண்டே உள்ளே வந்து கதவை தாளிட்டான்.

தலை கவிழ்த்து மர சோபாவில் தேவா அமர, அவன் முன்னாள் வந்து நின்று அவன் காயத்திற்கு மருந்திடும் வேலையில் இறங்கினாள் பைரவி.

மனைவியின் எதார்த்தமான மனநிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது தேவாவின் எண்ணங்கள்.

இத்தனை நாள் தள்ளியிருந்த பார்த்த பொழுது இருந்த ஆசைகள் எல்லாம் இன்று தேன் குடித்த வந்து போல் மோக போதையில் கிறங்க துவங்கியது. அருகிலிருந்தால் தன்னையே மீறி அவளை ஆக்ரமித்து, அவள் முகம் சுணங்கினால் தன்னுடைய மனம் உடையுமே என்ற பயம் அவனுக்கு.

நின்று மருந்திட்டு வசதி இல்லாமல் போக அவன் மடியில் யோசிக்காமல் அமர்ந்தவள் செயல் புதிதில்லை என்றாலும் திருடனுக்கு திகிலூட்டியது.

“காயம் ஆறுன மாதிரி இருந்தது, ஆனா நீங்க மாட பிடிக்க போறேன்னு பாருங்க மறுபடியும் காயத்தை சுத்தி சிவந்துடுச்சு” குற்றம் சாட்டிக்கொண்டே அவனுக்கு வலிக்குமோ என பயந்து பயந்து மருந்திட்டாள்.

“நான் அப்டி பண்ணலைனா இந்நேரம் எனக்கு மாடும் வந்துருக்காது, என் பொண்டாட்டி நீயும் இப்டி என்ன ஒட்டி உரசிட்டு என் மடிலையே ஒக்காந்து மருந்து போட்ருக்க மாட்ட” உல்லாசமாய் தேவாவின் கரம் அவள் இடையில் வலம் வந்தது.

வெட்கத்தோடு அவன் கையை தட்டிவிட்டவள், “நான் மருந்து போடணும் ஆனந்த் சும்மா இருக்கனும் என்ன?” ஒப்பந்தம் பேசியவன் நேர்மையற்றவன் ஆயிற்றே எல்லை மீறியது அவன் கைகளும் கண்களும்.

“பொறுக்கி பொறுக்கி, கை வச்சிட்டு சும்மா இருங்க” பாறையென இருகியிருந்த அவன் புஜத்தில் பைரவி கிள்ள, அவனுக்கோ கொசு கடி போல் இருந்தது.

“என்னடி பொறுக்கியா நான்? ஒருதடவை பொறுக்கி சொன்னதுக்கு நான் பண்ணது மறந்து போச்சா?” போலியாக முறைத்தான்.

காயத்தை கவனித்து முடித்து அவனை கவனித்தாள், “எப்டி மறக்கும்? மறக்குற மாதிரியா அன்னைக்கு நெரிச்சிங்க?” சட்டமாக அமர்ந்து கண்கள் சுருக்கி அவனை முறைத்தாள்.

“நீ மட்டும் என்ன லேசாவா அடிச்ச?” மாறி மாறி கேள்வி கேட்டு நின்றனர் இருவரும்.

“ஒரு பொம்பள புள்ள இடுப்பை புடிச்சா இந்தா வச்சுக்கோங்கன்னு அப்டியே நிக்கவா முடியும்?”

“ஏன் நிக்க மாட்டியா?” அதிகாரமே கேட்டவன் கண்களில் ஆசை கொட்டி கிடந்தது. வெட்கம் பிடிங்கி தின்க மாட்டேன் என தலை அசைத்து எழுந்தவளை பிடித்து மண்டியில் அமர்த்திக்கொண்டான்.

“சக்கரை ஒரு முத்தம் குடேன்” இதழிலும் கண்களிலும் மாறி மாறி இடம்பெயர்ந்த அவன் விழிகளின் காமம் பைரவியின் உடலை சிலிர்க்க செய்தது. வயிற்றில் பூனை எதையோ உருட்டுவது போல் இருக்க, அந்த உணர்வு அவள் இதயத்தையும் சீரில்லாமல் துடிக்க வைத்தது.

“என்னங்க இது?” சிவந்து தலை தாழ்த்தினாள்.

“சரி நானே எடுத்துக்கவா?” பைரவிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது அவன் துடிப்பில்.

“அப்போ வெளிய இருந்தோம், சரியான பொசிஷன்ல இல்ல, சரியா குடுக்க முடியல” என்றான் குறும்பாய்.

குப்பென வியர்த்துவிடாது அந்த முத்தத்தில் திருப்த்தி இல்லையா இவனுக்கு? எவ்வளவு அழுத்தமாய், ஆழமாய் நேசத்தை கொட்டி அவளை கிறங்க செய்திருந்தான்!

நொடிக்கொருமுறை அதிர்ச்சி, ஆசை, வெட்கம் என பல்வேறு உணர்வுகளை காட்டுபவள் சிணுங்கல் கொடுத்து, “அதெல்லாம் குடுக்க முடியாது” என்றாள் வீம்பாக.

“காலைல இருந்து குறுகுறுன்னு பாத்துட்டே இருக்குறவ இப்ப என்ன பிடிவாதம்?”

“நா… நான் எப்ப உங்கள பாத்தேன்? சும்மா கனவு கண்டுட்டு இருக்காதிங்க”

வேறு பக்கம் பார்த்தவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பினான் அவள் கன்னத்தை வருடி,

“இப்டி ரோஸ் மாதிரி சிவந்துருக்க கன்னத்தை வச்சிட்டு பொய் சொல்லலாமா?” அடிகரும்பாய் இனித்தது அவன் வார்த்தைகள்.

அவன் கையில் அடித்தவள், “நான் பொய் சொல்லல” என்றாள் வேகமாக. இதழ் கடித்து சிரிப்பை அடக்கியவன் அவளை குறுகுறு பார்வை பார்க்க, “விடுங்களேன் ஆனந்த்” அழாத குறையாக மனைவி சினுங்க சத்தமாக சிரித்தான் தேவா.

“வர வர உனக்கு சேட்டை அதிகமாகிடுச்சு சக்கரை. அதுவும் இன்னைக்கு என்ன சுத்தி சுத்தி வந்து பாத்த பாரேன் அந்த பார்வை…”

தொண்டையை செறுமியவன், “அப்டியே இழுத்து பிடிச்சு கிஸ் அடிக்கணும்னு தோணுச்சு”

விழிகள் இரண்டும் சிறு எலுமிச்சை அளவு அகல விரிந்து கண் சிமிட்டினாள், அனைவர் முன்னிலையிலுமா என பயந்து. இவன் செய்ய கூடிய ஆள் தானே.

“அப்டி பாக்காதடி என்ன என்னவோ செய்ய தோணுது” கரகரத்தது கணவன் குரல்.

 மீண்டும் எழ போனவளை விடாமல் தடுக்க அவளது கழுத்து வளைவில் தேங்கியிருந்த கார்குழலை பின்னுக்கு தள்ளிய தேவா, அதன் இடத்தை தனதாக்கினான்.

அவனது நாசி பைரவியின் வாசனையை நுரையீரலுக்கு அனுப்ப, புத்துணர்ச்சி பெற்றவன் இதழ்கள் மெல்ல மெல்ல அவளிடம் முன்னேற துவங்கியது. கணவனிடம் கட்டுப்பாடுகள் விதிக்க தோன்றாமல் அவன் போக்கிலே மனைவியும் விட்டுவிட, அவனது வழியை நிறுத்துவார் இல்லை.

அணு அணுவாக அவளை ரசித்தவன் தேனூறும் உடலில் தேனை வண்டாய் பருக துவங்கினான். மோகத்தில் துவங்கிய முத்தம் எப்பொழுது மெத்தையில் வீழ்ந்ததென இருவருக்கும் தெரியவில்லை.

பஞ்சணையில் நெஞ்சணைத்தவன் அவளது விழி பார்த்து அனுமதி கேட்க வெட்கத்தாலே சம்மதம் தெரிவித்து அவனுள் உருகினாள். தன்னுடைய தாகத்திற்கெல்லாம் நீராய் மாறியவள் அங்கத்தின் ஒவ்வொரு இடத்தையும் இதழால் பூஜை செய்து கலங்கியிருந்ததாய் நினைத்த பெண்ணவளின் தேகத்தை காதலால் சுத்தம் செய்தான்.

பெண்ணவளோ ஆணவனின் வியர்வை கோர்த்த கல் மார்பினில் மலர் மாலையாய் விழுந்தாள். இன்பத்தின் நுழைவாயிலில் மனைவி வலியறிந்து இதமாய் பதமாய் அவளை அணுகியவன் அடுத்த ஒவ்வொரு நெருக்கத்திலும் இன்ப அவஸ்தையை பரிசளித்து அவளை மொத்தமாய் தன்னுள் தன்னவளாய் புதைத்துக்கொண்டான்.

அதன் பிறகான தேடலும் தித்திக்கும் காவியமாய் மாற, அம்புலி மறைந்து வெய்யோன் வரவும் தான் ஓய்ந்தனர். வியர்வையில் பூத்திருந்த புது மலர் அவளை உறக்கம் களைத்து இமைக்காது பார்த்திருந்தவன் குறுகுறு பார்வையில் அசைந்து படுத்தவள் அவன் முகம் பார்த்து சோர்வாய் மீண்டும் கண் மூட மெல்ல குலுங்கி மௌனமாய் அவன் சிரிப்பது தெரிந்து விழித்தாள் மீண்டும்.

“தூங்க விடுங்க ஆனந்த்” சலுகையாய் அவன் மார்பினில் சாய்ந்துக்கொண்டாள்.

“சக்கரை… இனிப்பு வேணும்டி”

“எல்லா இனிப்பையும் ஒரே நாள்ல சாப்டுட்டு இன்னும் வேணும் கேட்டா நான் எங்க போவேன்? போங்க எனக்கு தூக்கம் வருது”

என்றவளுக்கு அவன் கேட்டதை தராமல் தூக்கமும் வரவில்லை போலும்,  தூக்கத்திலே அவன் கழுத்து சங்கிலியை இழுத்து கழுத்திலே முத்தம் வைத்து,

“அவ்ளோ தான், அடுத்த இனிப்பு ஒரு வாரம் அப்றம் தான்” பதில் தந்துவிட்டு  குழந்தை போல் உறங்கியவள் தேகத்தை இன்னும் இன்னும் தன்னோடு ஆசையாய் பிடித்து வைத்து உறக்கம் தழுவினான் சிரிப்போடும் முழுமையான மன நிறைவோடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!