Skip to content
Post Views: 928
தமிழிடம் பேசி முடித்ததும் அன்னையிடம் சொல்லிவிட்டு இசையை காண வந்துவிட்டாள் மலர்விழி.
“வா டி..” இசை எப்போதும் போல் வரவேற்கவும் தான் நிம்மதியா இருந்தது மலருக்கு, “இந்த சீனியர் அவரும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷனாக்கி விட்டுடாரு..”.
Advertisement
தமிழின் பதட்டத்திலும் புலம்பலிலும் அவளுக்கே இசை என்ன மனநிலையில் இருப்பாளோ என்ற பயம் வந்திருக்க அத்துடன் நேற்று உறவினர் வீட்டிற்கு செல்லாமல் அவளுடனே இருந்திருக்க வேண்டுமோ என்ற குற்றவுணர்வும் எழ தயக்கத்துடன் தான் வந்தாள்.
இவர்கள் நினைத்ததை விட இன்னிசை தெளிவாக தான் இருந்தாள். வலியும் வேதனையும் வாழ்வில் ஒரு அங்கம் அதை நினைத்து அன்றாட வாழ்வை வாழாமல் இருக்க முடியாதே, இவள் அழுது கரைந்தால் மட்டும் போன அன்னை திரும்பி வரவா போகிறார் என்ற புரிதலிருக்க வேதனையாய் இருந்தபோதும் தன்னை இயல்பாக காட்டிக் கொள்ள முயன்றாள்.
Advertisement
Advertisement
இல்லாதவரை எண்ணி இருப்பவரை வருந்தவிடுவது சரியில்லையே என தந்தைக்காக தன்னை தேற்றிக் கொண்டாள்.
“வா மா மலரு..” பேரறிவாளன் அடுப்படியிலிருந்து குரல் கொடுக்க “அறிவுப்பா.. இன்னும் சமைக்கிறீங்களா?” என கேட்டபடி மலர் உள்ளே செல்ல இசையும் அவர்களுடன் சென்று நின்றுக் கொண்டாள்.
Advertisement
சமையல் மேடையில் ஏறி அமர்ந்த மலர், “ஐ நண்டா.. ஹம் வாசாம் ஆள தூக்குது” என சமையலை நுகர சிரித்தவர், “லேட் ஆயிடுச்சு டா.. ஒரு பத்து நிமிஷம்” என்றார்.
“ம்ம் பொருமையாவே பண்ணுங்க” என்றவள் அவருடன் கதையளக்க தொடங்க இவர்கள் இருவரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளாது வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள் இன்னிசை. என்ன முயன்றும் முற்றிலுமாக இயல்பாய் இருக்கமுடியவில்லை, உள்ளுக்குள் ஓர் இறுக்கம் இருந்துகொண்டே இருந்தது.
சமையல் முடிந்ததும் மூவரும் சாப்பிட அமர்ந்தனர். நண்டை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மலர்விழியை இசை குறுகுறுவென பார்த்தாள்.
அவள் பார்வையில் “வேணுமா..” என்ற மலர் நண்டை இசையின் முன் நீட்ட, “ஹம்.. எனக்கு வேண்டாம்” என்று முகம் சுளித்தவள் அவளுக்கென்று தந்தை செய்திருந்த சிக்கன் பிரியாணியை உண்ண ஆரம்பித்தாள்.
அவளுக்கு கடல் உணவுகள் பிடிக்காதென்பதால் பேரறிவாளன் மகளுக்கு மட்டும் தனியே பிரியாணி செய்திருந்தார்.
“போடி கழுத.. உனக்கெங்க தெரியப் போகுது நண்டு டேஸ்ட்” என்ற மலர் பேரறிவாளனிடம் திரும்பி, “ஆஃபிசர்.. நான் வேலைக்கு போனதும் முதல் வேலை உங்க கையிக்கு தங்கத்துல ஒரு வாச்ட் வாங்கி போட போறது தான்.. என்னமா சமைக்கிறீங்க.. இத்தன நாள் இந்த சுமதி ரசத்துல நண்ட போட்டுட்டு நண்டு குழம்புனு ஊர ஏமாத்திட்டு இருக்கு” என பாராட்டியவள் அன்னையை குறை சொல்ல “ஹே வாலு.. சுமதிக்கு தெரிஞ்சா நீ அவ்ளோ தான்” என்றார் சிரிப்புடன்.
“ஆமா ப்பா.. நீங்க தான் வீட்டிலையே சோறு போட்டு ஒரு உளவுத்துறைய வளத்துறீங்களே.. அது சுமதி கிட்ட போட்டுக் கொடுத்துரும்” என்ற மலர் இசையை காண கடுப்பானவள், “இவ்ளோ நேரம் எனக்கு அந்த ஐடியா இல்ல பட் நீ இவ்ளோ பேசுனதுக்கு அப்பறம் நான் சொல்லாம இருந்தா நல்லா இருக்காதே..” என்றிழுக்க “தெய்வமே தெரியாம உளறீட்டேன்.. போட்டு கொடுத்துடாதே” என்று மொத்தமாய் சரணடைந்தாள் மலர்.
மேலும் தோழிகள் இப்படி வம்பு பேசிக்கொண்டே இருக்க, மூவரும் சாப்பிட்டு முடித்தனர். மலர் வந்த பின் இன்னிசை இன்னும் இயல்பாகிவிட பேரறிவாளனுக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.
மலர் இசை எப்போது தனியாக சிக்குவாள் தமிழிடம் பேச வைக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்க அவளோ பேரறிவாளன் இருக்கும் இடத்தை விட்டு நகர்வதாக இல்லை.
பொறுமை இழந்தவள் சைகையில் ஜாடை காட்டி அழைக்க அதை புரிந்து கொள்ளாத இசை, “என்னடி?” என தந்தையின் முன்னே கேட்க பேரறிவாளனின் பார்வையும் இவளிடம் தான். என்ன சொல்வாள் மலர்? திருதிருவென விழித்தவள் “அது.. அது.. ஒன்னுமில்ல.. ஃபேன் போடு” என்று மழுப்ப இசையும் ஃபேனை போட்டுவிட்டு மேற்கு கொண்டு கேள்வி கேட்காமல் போன் நோண்ட அறிவும் டிவி பார்க்க தொடங்கிவிட்டார்.
“சரியான தத்தி ஜாட காட்டுறத கூட புரிஞ்சுக்க மாட்டிங்கிறா..” இசையை மனதில் திட்டிய மலர் அவளை எங்காவது வெளியே அழைத்துச் செல்ல ஏதும் வழி உண்டா என யோசித்தாள். தமிழுக்காக என்றில்லை இசைக்காவும் தான்.
இத்தனை நேரம் இவளுடன் வம்பு பேசிக் கொண்டிருந்தவளிடம் மீண்டும் ஒர் அமைதி ஒர் இறுக்கம். வந்ததிலிருந்து அவளும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறாள், உடன் இருக்கும் போது இயல்பாக பேசிக் கொண்டிருப்பவள் தனிமையில் ஏதோ சிந்தனைக்குள் ஆழ்ந்து விடுகிறாள். ஏனோ இசை இம்முறை ரோஜாவை அளவிற்கு அதிகமாக தேடுவது போல் உணர்ந்தாள் மலர். அவளுக்கும் கஷ்டமாக தான் இருந்தது.
வீட்டிலே இருப்பதற்கு வெளியே எங்காவது சென்று வந்தால் அவள் மனதிற்கும் ஒரு மாற்றமாய் இருக்கும் என நினைத்தவள், “இசை எங்கயாவது அவுட்டிங் போலாமா.?” என்று கேட்க அவளோ கொஞ்சம் கூட யோசிக்காமல், “நான் வரல டி” என்று மறுத்துவிட்டாள்.
“சும்மா தானே இருக்கோம்.. மாலுக்கு போய்டு அப்படியே மூவி பார்த்துட்டு வரலாம்”
“நான் வரல டி..” இசை மீண்டும் மறுக்க “போய்டு வா பாப்பா” என்றார் பேரறிவாளன்.
“இல்ல ப்பா.. வேண்டாம்”
“பிளீஸ் டி.. நம்ம படத்துக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு”
“அதான் மலர் அவ்ளோ ஆசையா கூப்பிடறாள போய்டு வா பாப்பா” தந்தை கூறவும் யோசித்தவள், “அப்போ நீங்களும் வாங்க” என்று அவரையும் அழைக்க மலரும் “ஆமா ப்பா நீங்களும் வாங்க” ஒரு வேகத்தில் அழைத்துவிட்டாள். பின் அவர் உடன் வந்தால் தமிழை சந்திக்முடியாதே என்பது உரைக்க தன்னையே நொந்து கொண்டவள் அதன் பின் வாயை திறக்கவில்லை .
அறிவு ஒன்னும் ஆண் நண்பர்கள் இருப்பதை தவறாக எண்ணும் ஆள்ளில்லை எதிலும் முற்போக்கு சிந்தனை கொண்ட இக்கால தந்தை தான். இருந்தும் மலருக்குள் ஒரு உறுத்தல் தயக்கம் அவர் உடன் இல்லாமல் இருந்தால் பரவாயில்லை என நினைத்தாள்.
அவள் நினைத்தது போலவே அவரும், “நான் எதுக்கு டா.. நீங்க போயிட்டு வாங்க நான் வேணா உங்கள வந்து டிராப் பண்ணீட்டு மூவி முடிஞ்சதும் பிக் அப் பண்ணிக்கிறேன்” என்று கூற விடுவாளா அவர் மகள், “நீங்க வந்தா போலாம்.. இல்ல நாங்களும் போல” என்று மலருக்கும் சேர்த்தி பிடிவாதமாய் கூறிவிட்டாள். மகளின் பிடிவாதம் தெரிந்தவரும் வேறு வழியின்றி இறுதியில் வருவதாக ஒப்புக்கொண்டார்.
தந்தை ஒப்புக்கொண்டதும் “சூப்பர்.. அப்போ நான் மூன்னு பேருக்கும் டிக்கெட் புக் பண்றேன்” என்று உற்சாகமாக மொழிந்த இசை மலரிடம், “போய் சுமிமா கிட்ட சொல்லீட்டு வா” என்று கூற பேரறிவாளனும், “ஆமா டா வீட்ல சொல்லீட்டு அம்மா அப்பாவும் வராங்களானு கேளு” என்க
“இல்ல ப்பா சாயந்திரம் அவங்க ஏதோ பர்த்டே ஃபங்க்ஷன்க்கு போறாங்க நம்ம மட்டும் போய்ட்டு வரலாம்” மலர் பதிலளிக்க அறிவும், “சரி டா அப்போ வீட்ல சொல்லீட்டு வா” என்றார்.
இருவரிடமும் சரியென்று வீட்டிற்கு வந்த மலர் பெற்றோரிடம் அனுமதி கேட்க முதலில் மறுத்த சுமதி பேரறிவாளன் உடன் வருவதாக சொன்னதும் ஒத்துக்கொண்டார். தந்தை தியாகராஜன் அவள் மறுக்க மறுக்க செலவுக்கு பணம் கொடுக்க குஷியாகவே தயாராக சென்றாள்.
அறைக்கு வந்தவள், “தனியா போனா சீனியர மீட் பண்ண வைக்கலாம்னு நினைச்சா இந்த லூசி அறிவு அப்பாவையும் வர வைச்சிட்டா.. தத்தி ஜாடையா சொல்றத கூட புரிஞ்சுகாட்டி நான் என்ன தான் பண்றது” என இசையை திட்டிக் கொண்டே விரைவாய் தயாராகி வர தந்தையும் மகளும் முன்பே தயாராகி காத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன இந்த லூசு அதுக்குள்ள கிளம்பிருச்சு..” என இசையை நினைத்து கடுப்புடன் முணுமுணுத்தாள் மலர். அவள் இன்னிசை வழக்கம் போல் தயாரக தாமதிப்பாள் அதற்குள் தமிழுடன் தொலைபேசியிலாவது பேச வைக்கலாம் எண்ணியிருக்க அந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை.
அவளை கண்டதும் புன்னகைத்த அறிவு, “போலாமா மலர்” என எழுந்து நிற்க இவளும் “ம்ம் போலாம் ப்பா” என்றாள் சிரிப்புடன். பேரறிவாளன் வீட்டை பூட்டிவிட்டு காரை எடுக்க மூவரும் அருகே இருந்த மாலுக்கு சென்றனர்.
மலரிடம் இசையின் நலம் விசாரித்ததும் நிம்மதிடைந்த தமிழ் அதன் பிறகு சற்று இயல்பாகிவிட்டான். கோபால் செய்த பிரியாணியை ருசித்தவன், எழிலுடன் விதுரனுடனும் இணைந்து கேம் ஆடினான். பின் போர் அடிக்க மூவரும் மாடியில் கிரிக்கெட் ஆடினார்கள்.
எழிலும் தமிழும் சேர்ந்து கொண்டு விதுரனுக்கு பேட்டிங் கொடுக்காமல் அவனை பந்து பொறுக்க விட ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களின் அராஜகம் தாங்காமல் பொங்கிவிட்டான் விதுரன். மீண்டும் அண்ணன் தம்பிக்குள் முட்டிக் கொள்ள இவர்களுடன் சண்டையிட்ட விதுரன் கீழே சென்றுவிட நண்பர்கள் இருவரும் மட்டும் மாடியில் அமர்ந்திருந்தனர்.
அவ்வப்போது ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த தமிழின் முகம் வாடியிருக்க அவன் முக வாட்டத்தை கண்ட எழில் எங்கே விதுரன் சண்டை போட்டதை நினைத்து வருந்துகிறானோ என எண்ணி, “விடுடா சாயந்திரம் காலானோ பானி பூரியோ வாங்கிக் கொடுத்தா அவன் சரி ஆகிருவான்” என்று கூற “அது எனக்கு தெரியாதா என்ன? இவனுக்காக நான் ஃபீல் பண்ணல” என்றான் தமிழ்.
“அப்பறம் ?”
“மலர் இசைய பார்த்துட்டு கால் பண்றேன்னு சொன்னா.. இன்னும் பண்ணல” என்றவன் மீண்டும் அவன் ஃபோனை ஆராய “ஐயோ.. ஆரம்பிச்சுட்டான் டா” என்றிருந்தது எழிலுக்கு.
மலரின் அழைப்பிற்காக காத்து காத்து பொறுமை இழந்தவன் தானே அவளுக்கு அழைப்பு விடுத்தான். திரையரங்கில் இருந்தவள் தமிழிடமிருந்து அழைப்பு வரவும் அதை ஏற்க முடியாது சூழலில் இருக்க அழைப்பை துண்டித்து விட்டு,
“சீனியர் இசை நல்லா தான் இருக்கா. நாங்க வெளியே இருக்கோம். ரியலி சாரி நான் எவ்ளோவோ ட்ரை பண்ணேன் பட் மீட் பண்ணி பேச வைக்க முடியல. அவங்க அப்பா கூடவே இருங்காங்க. நீங்க நாளைக்கு காலேஜ்ல மீட் பண்றது பெட்டர்… இப்போ அவ மூவ் ஆன் ஆகிட்ட சோ நீங்க கவலப்படாம ரிலேக்ஸா இருங்க.. டேக் கேர்..”
என அவனுக்கு வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி தட்டிவிட்டாள்.
“என்னாச்சு?” தொலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தவனிடம் எழில் கேட்க பதில் பேசாமல் அதை அவனிடம் நீட்டியவன் எழுந்து சென்று சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டான். அகத்தில் அத்தனை ஏமாற்றம்.
“ஏன் டா இதுக்கா மூஞ்சிய இப்படி வச்சிருக்க? பாவம் அவ தான் ட்ரை பண்ணேன் முடியலனு சொல்றால.. அப்புறமும் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டா என்ன அர்த்தம்? அவ இடத்துல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு” எழில் சமாதானம் செய்ய தமிழிற்கு மனதே கேட்கவில்லை, “ஒரு ரெண்டு நிமிஷம் கூட பேச முடியலயா” என்றான் ஏக்கமும் ஏமாற்றமாய்.
எழிலுக்கு இந்த தமிழினியன் முற்றிலும் புதிது. எதிலும் அசட்டையாக இருப்பவன் இசையை காண அவள் குரல் கேட்க அத்தனை அல்லாடுகிறான். அவன் செயல்களெல்லாம் சிறுபிள்ளை தனமாக தோன்றியது.
“டேய் உனக்கு என்னாச்சு? நீ சரியில்ல அதுவும் இசை விஷயத்துல ரொம்ப சில்லியா நடந்துக்கிற..” எழிலின் பேச்சுக்கு தமிழிடம் பதிலில்லை. அதை அவனே உணர்கிறான்.
அவன் மௌனம் எரிச்சலை கொடுக்க தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டுவிட்டான். “நான் சுத்தி வளைக்கல.. இசைய லவ் பண்றியா?”
எழிலின் அதிரடியில் அதிர்ந்தவன், “டேய்.. அது.. நான்” என அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாற அவன் தோளில் கைப்போட்டு நின்றவன், “நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்.. உன் மனசுல இருக்கிறத வெளிப்படையா சொல்லு.. இன்னிசைய லவ் பண்றியா?” என பொறுமையாக கேட்க நண்பனை கலக்கமாக பார்த்தவன், “எனக்கு தெரியல டா” என்றான்.
இந்நாள் வரை இசையுடனான உணர்வுகளுக்கும் உறவுக்கும் தமிழ் ஓர் முழுமையான உருவம் குடுக்கவில்லை, நட்பு அதையும் தாண்டி ஒரு ஈர்ப்பு என்றே சித்தரித்தான். இவ்வுறவுக்கும் உணர்வுகளுக்குமான எதிர்காலம்? அவன் சிந்தித்தில்லை. இப்போது சிந்தித்தவனுக்கு மனம் முழுவதும் குழப்பம்.
“இப்படி சொன்னா எப்படி?” அமைதியாவே எழில் கேட்க
“எனக்கு இசைய ரொம்ப பிடிக்கும்.. அவ மேல ஒரு ஃபீலிங்க்ஸ் இருக்கு ஒத்துக்கிறேன்.. ஆனா இதுவரை அவ கூட ஒரு கல்யாணம் ஃபியூட்சர்னு எதுவுமே நான் யோசிச்சதில்ல.. அப்படி இருக்கிறப்போ இது லவ்வா? இல்ல இதுதான் லவ்வா? எனக்கு தெரியல.. அந்த புரிதல் இல்ல.. எனக்குள்ளயே நிறைய குழப்பம் இருக்கு” என தன் மனநிலையை தெளிவாக விளக்கினான்.
எழிலால் ஓரளவு அவனை புரிந்து கொள்ள முடிந்தது. “சும்மா மனச போட்டு குழப்பிக்காத.. நல்லா டைம் எடுத்துக்கோ.. யோசி” என்றான்.
“எனக்கு இதெல்லாம் எங்க போய் முடியுமோனு.. ஒருமாறி பயமா பதட்டமா இருக்கு டா..”
“இப்போ தான சொன்னேன்… என்ன நடக்கனும் இருக்கோ அது நடக்கும்.. எதுவும் நம்ம கையில இல்ல.. வீணா மனச போட்டு குழப்பிக்காத” என்று அவனை தேற்றிய எழில் மேற்கொண்டு ஏதும் பேசி அவனை குழப்பவில்லை.
error: Content is protected !!