Skip to content
Post Views: 601
திரைப்படம் முடிந்து வெளியே வந்ததும் பேரறிவாளன் வீட்டிற்கு தேவையான மளிகை சாமான் வாங்க அங்கிருந்த சூப்பர் மார்க்கெட் சென்றுவிட கிடைத்த சந்தர்பத்தில் இசையிடம் அனைத்தையும் சொல்லிவிட்டாள் மலர்.
“அப்பவே ஏன் டி சொல்லல..” இசை அவளை கடிந்து கொள்ள “எங்க டி நீ சொல்ல விட்ட” என்றாள் அவளுக்கு குறையாத எரிச்சலுடன்.
“ஜாட காட்டியும் புரிஞ்சிக்கலனா நான் என்ன தான் பண்றது.. தத்தி” மேலும் மலர் திட்ட “ஆமா.. நேத்து அவரு வீட்டுக்கு போய்டு கால் பண்ண சொன்னாரு.. ஃபோன் உடைஞ்சது அப்பறம் நான் இருந்த மைன்ட் செட்ல சுத்தமா மறந்துட்டேன்..” என்றாள்.
“நீ அசால்டா சொல்ற மறந்துட்டேன்னு.. அங்க அவரும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷனாக்கி விட்டுடாரு”.
Advertisement
“வேணும்னு பண்ணல டி…” என்றவள் “ரொம்ப டென்ஷன் ஆகிட்டாரா?” என்று கேட்க “ரொம்ப ரொம்ப.. அவரு புலம்புன புலம்பல்ல எனக்கே பயம் வந்திருச்சு” என்றாள் மலர்.
“ச்சே தேவையில்லாம அவரையும் டென்ஷன் பண்ணிட்டேன்” இசை கவலையாக சொல்ல “விடு நான் அவர்கிட்ட நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணிக்கோங்கனு சொல்லிட்டேன்.. சோ அத பத்தி ஓவரா யோசிக்காத” என அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
அதற்குள் பேரறிவாளனும் வந்து விட மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர். வரும் வழியில் அறிவு மகளின் சரி செய்த தொலைபேசியை வாங்கித் தரவும் தான் இசைக்கு சற்று நிம்மதியா இருந்தது. தொலைபேசியை உயிர்பித்தவளுக்கு தமிழின் தவறவிட்ட அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது.
Advertisement
கூகுள் பேயை கூட விடாமல் அணைத்து தளங்களிலும் அவளை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளான்.
Advertisement
“ச்சே சீனியர் பாவம் ரொம்ப டென்ஷன் பண்ணீட்டேன் போல” வருந்தியவள் வீட்டிற்கு சென்றதும் தமிழிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
இவர்கள் வீட்டிற்கு வரும்போதே மணி இரவு எட்டு. வந்ததும் அறிவு உணவு எடுத்து வைக்க மூவரும் இணைந்தே உண்டனர். மலரின் பெற்றோர் பிறந்தநாள் விழாவிலே சாப்பிட்டுவிட்டு வருவதாக கூற அவளும் இவர்களுடனே இரவு உணவை முடித்துக் கொண்டாள்.
சாப்பிட்டு முடித்ததும் மலர் வீட்டிற்கு சென்றுவிட தந்தையும் மகளும் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு சமையலறை சுத்தம் செய்தனர். பேரறிவாளன் பாத்திரங்களை கழுவ இவள் ஒவ்வொன்றாய் துடைத்து அதன் இடங்களில் அடுக்கிக் கொண்டே இன்று கண்ட திரைப்படத்தை குறித்து அவருடன் கதையளந்து கொண்டிருந்தாள். இசை மீண்டும் இயல்பாக இருப்பது பேரறிவாளனுக்கு பெரும் நிம்மதியை குடுக்க அவரும் சிறப்புடன் மகளுக்கு பதிலளித்தார்.
Advertisement
வேலை முடிந்ததும் அறிவு தூங்க சென்றுவிட இசையும் தன் அறைக்குள் வந்து கதவை அடைத்துவிட்டு ஃபோனுடன் கட்டிலில் அமர்ந்தாள். நேரம் ஒன்பதரையை கடந்திருக்க தமிழ் தூங்கியிருப்பானோ.. அழைக்கலாமா? வேண்டாமா? என யேசனையுடன் தயக்கமாக ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் குறுஞ்செய்திகளை கண்டதும் உள்ளம் உறுத்த தன் தயக்கம் விடுத்து தமிழை அழைத்தாள்.
இன்ஸ்டாகிராம் நோண்டிக் கொண்டிருந்தவன் போன் அடிக்கவும் அதை ஏற்க, “டேய் நாயே.. பசங்கலாம் நைட் ஃப்ரீ ஃபையர் மேட்ச் போடலாம்னு கூப்டாங்க.. நானும் நம்ம வரோம்னு சொல்லீட்டேன்.. சீக்கிரம் வா” படபடவென பேசினான் எழில்.
“யார கேட்டு சொன்ன?” தமிழ் எரிச்சலுடன் கேட்க “யார கேட்கணும்? சீன் போடாம வந்து சேரு” என்றவன் அழைப்பை துண்டித்துவிட “இவன் வேற இம்ச பண்ணீட்டு” கடுப்புடன் முணுமுணுத்தவன் தலையணையில் முகத்தை புதைத்து கவிழ்ந்து படுத்துவிட்டான். கேம் ஆடும் மனநிலையிலெல்லாம் அவன் இல்லை.
மீண்டும் போன் அடிக்க எரிச்சலானவன், “இப்போ எதுக்கு டா சும்மா நச்சு நச்சு கால் பண்ணீட்டே இருக்க..” என்று கத்த “சாரி சீனியர்.. பிசியா இருக்கீங்களா” என்றாள் இசை மெல்லிய குரலில்.
அவள் குரலில் சட்டென எழுந்து அமர்ந்தவன், “இசை..!!” உற்சாகமாக அழைக்க அவன் குரலிலிருந்த துள்ளலை கண்டவள், “இசை தான் சீனியர்..” என்றாள் சிறிய சிரிப்புடன்.
அவள் குரல் கேட்டதும் அகத்தில் ஒர் அலாதியான அமைதி.. ஆனந்தம்.. ஆர்ப்பரிப்பு.. என கலவையான உணர்வுகள்.
“இசை.. எப்படி இருக்க? ஆர் யூ ஓகே.. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா..” அவன் படபடவென பேச “நான் இப்போ ஓகே.. நல்லா இருக்கேன் சீனியர்..” என்றாள்.
அவள் வாய் மொழியாய் கேட்டவும் தான் முழு நிம்மதி அவனுக்கு. “மலர் கிட்ட சொல்லியாச்சும் ஒரு டெக்ஸ்ட் பண்ணிருக்கலாம்ல இசை.. நீ கால் அட்டன்ட் பண்ணலானதும் எனக்கு ஒன்னுமே ஓடல தெரியுமா..” என்றவன் பேச்சில் அத்தனை தவிப்பு அவளால் உணர முடிந்தது.
“பயந்துட்டீங்களா..” இசை தயக்கத்துடன் இழுக்க சற்றும் தயங்காமல், “உயிரே போயிருச்சு” என்றான்.
இசை அவனிடமிருந்து இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவளுள் ஓர் சுகமான அவஸ்தை.. பேச்சே வரவில்லை.
“ஹலோ இசை..” அவன் குரலில் சுயம் பெற்றவள், “இருக்கேன்..” என்றாள் மெல்லிய குரலில்.
“என்ன பேச்சே காணோம்?”
“இல்ல ஒன்னுமில்ல..” மழுப்பியவள், “அது நான் நேத்து ரொம்ப எமோஷனலா இருந்தேன்.. அதான் என்னையும் மீறி அழுத்துட்டேன்” என்றவள் சற்று இடைவெளிவிட்டு “சாரி தேவையில்லாம உங்களையும் சங்கடப்படுத்தி பயமுறுத்தி டென்ஷனாக்கிட்டேன்..” என தயக்கத்துடன் சொல்ல இசையின் இந்த அந்நிய பேச்சில் அவனுக்கு பிடிக்கவில்லை.
“என்னிடம் இவள் உணர்வுகளை பகிர எதற்கு இத்தனை சங்கடம்? தயக்கம்? ஏதோ அந்நியனிடம் பேசுவதை போல் பேசுகிறாள்” என்று உரிமையுணர்வு தலை தூக்கியதில் கோவம் தலைக்கேற மதியம் எழில் உரைத்த வார்த்தைகள் நினைவு வரவும் சற்று நிதானித்தவன் தன் மனதை தெளிவாய் விளக்க நினைத்தான்.
“இசை கொஞ்சம் ஓப்பனா பேசலாமா?” என்றவன் “இசை ப்ளீஸ் இனி இப்படி பேசாத எனக்கு ஹர்ட் ஆகுது..” முதலில் தயங்கி பின் சொல்லிவிட்டான்.
“ஐயோ சீனியர் நான் ஏதாவது தப்பா பேசிட்டனா.. ஐ அம் ரியலி சாரி” எதற்கென்ன புரியாமல் அவள் பதட்டமாக கூறினாள். “ஏதோ மூணாவது மனுஷன் கிட்ட பேசுற மாதிரி பேசுற.. எனக்கு கஷ்டமா இருக்கு.. ஏன் என்கிட்ட உன் எமோஷன்ஸ சொல்ல மாட்டியா? ஏன் இவ்வளோ சங்கடப்படுற?” என கேட்க
“அப்படி இல்ல சீனியர்.. எப்படி சொல்ல உங்களுக்கே தெரியும் எனக்கு சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுக வரும். அதுவும் எங்க அம்மா விஷயத்துல சொல்லவே வேணாம். சோ முடிஞ்ச அளவுக்கு யார் முன்னவும் உடைய கூடாதுனு நினைச்சேன்.. அதான்..” என்றாள் தயக்கத்துடன்.
“அதுக்குன்னு என்கிட்ட கூட வா” அவன் ஆதங்கமாய் கேட்க
“உங்க கிட்டனு இல்ல.. அப்பா முன்னாடி கூட.. நான் அழுதா அவரும் ஃபீல் பண்ணுவாரு.. அதான் நேத்து தனியா வந்திருந்தேன்.. ஆனா எவ்ளோ முயற்சி பண்ணியும் என்னால என் எமோஷன்ஸ கன்ட்ரோல் பண்ண முடியல” என்றாள் உள்ளே போன குரலில்.
“இசை..” கனிவாய் அழைத்தவன் “நீ ஏன் உன் எமோஷன்ஸ கன்ட்ரோல் பண்ணனும்னு நினைக்கிற? அது இன்னும் உனக்கு மன அழுத்தத்தான் குடுக்கும்.. நேத்து என்கிட்ட சொன்ன மாதிரி யாருகிட்டயாது ஷேர் பண்ணா தான் உனக்கும் நல்லா இருக்கும்”.
“இல்ல அது தேவையில்லாம யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான்..” அவள் இழுக்க
“அதுக்கு நீயே உன்ன கஷ்டப்படுத்திக்குவியா? அப்பா ஃபீல் பண்ணா என்கிட்ட சொல்லு” என்றவன் “இப்போ சொல்றேன் இசை.. உன் மனசுல தோணுற எல்லாத்தையும் எந்த தயக்கமும் இல்லாம தாராளமா நீ என்கிட்ட ஷேர் பண்ணலாம். நான் யார்கிட்டேயும் சொல்லவோ உன்ன ஜட்ஜ் பண்ணவோ மாட்டேன். அண்ட் எப்பவும் நான் உனக்காக இருப்பேன்.”
இதையெல்லாம் அவள் கைகளை பிடித்துக் கொண்டு கண்களை பார்த்து சொல்ல அவனுக்கும் ஆசை தான்.. ஆனால் முடியாதே.
அவன் வார்த்தைகளில் ஆறுதல் கொண்டவள், “தேங்க்ஸ் சீனியர்.. இனி ஷேர் பண்றேன்” என புன்னகைக்க “ஹம் குட் கேர்ள்..” என்று சிரித்தவன், “சரி படத்துக்கு பேயிருந்தீங்களே எப்படி இருந்தது?” என பேச்சை மாற்ற அதை புரிந்துகொண்டவளும் திரைப்படத்தை குறித்து பேசினாள். அதற்குள் எழிலிடமிருந்து அத்தனை அழைப்புகள்.
“இவன் வேற..” தமிழ் முணுமுணுக்கவும் இசை என்னவென்று கேட்க எழில் விளையாட அழைத்ததாக கூறினான். “நீங்க போங்க.. நான் பேசுனா பேசீட்டே இருப்பேன்” என்க “அவனுங்க கெடுக்குறானுங்க வெட்டி பசங்க.. நம்ம பேசுவோம்” என கட்டிலில் வாகாய் படுத்துக் கொண்டவன் இசையுடன் பேசிக் கொண்டிருப்பதால் காலை அழைப்பதாக எழிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான். அதை பார்த்த எழிலும் மேற்கொண்டு அவனை அழைக்கவில்லை.
“எழில் அண்ணா கோவிச்சுக்க போறாங்க..” என்றவளிடம் “அதெல்லாம் சொல்லிட்டேன் இசை.. ஏன் உனக்கு தூக்கம் வருதா?” என கேட்க “இல்ல இல்ல” அவள் அவசரமாக மறுக்கவும் “அப்போ ஓகே” என கடலை போட தொடங்கிவிட்டான்.
“சீனியர் கேட்டனும்னு நினைச்சேன்.. முல்லை கிட்ட பேசுனீங்களே என்னாச்சு?” உரையாடலின் நடுவே நினைவு வந்தவளாய் கேட்டவள், “சாரி நேத்து இருந்த மைன்ட் செட்ல நீங்க பேசுன எதையும் நான் கவனிக்கல” என வருந்த “விடு இசை எனக்கு புரியுது” என்றவன் தங்கையுடன் பேசியதை விளக்கினான்.
“பாரு டா கிஃப்ட்லா குடுத்தீங்களா?.. அப்புறம் என்னாச்சு..” சிரிப்புடன் கேட்டவளிடம் சலிக்காமல் பேசிக் கொண்டிருந்தான்.
இப்படியே இவர்களின் பேச்சு நள்ளிரவு வரை நீள இன்னிசைக்கு தூக்கம் சொக்கியது.
“ஓய் இசை.. தூக்கம் வந்தா போய் தூங்கு” தமிழ் எத்தனை சொல்லியும் அவள் கேட்கவில்லை. “நான் தூங்கல சீனியர்.. நீங்க பேசுங்க” என்று தூக்க கலக்கத்தில் முனங்க “சரியான அடம்..” மனதில் செல்லமாக சலித்துக் கொண்டான் தமிழ்.
சற்று நேரத்தில் அவளின் முனகலான பதில்களும் நின்றுவிட அவள் தூங்கியதை உறுதி செய்தவன் “தூங்கீட்டா..” என சிரிப்புடன் அழைப்பை துண்டித்துவிட்டு அவளுக்கு குட்நைட் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தூங்க சென்றான்.
வெகு நாட்கள் கழித்து இசையுடன் ஒர் நீண்ட நெடிய உரையாடல் அவனின் நேற்றைய மனநிலைக்கு மருந்தாய் அமைய நிம்மதியாக நித்திரை தழுவினான் தமிழினியன்.
error: Content is protected !!