Skip to content
Post Views: 2,280
ஏனோ இரண்டு நாளாக நல்ல மனநிலையில் இல்லாதவனுக்கு இன்று இசை பேசியது ஏதோ மனதுக்கு இதமாக இருந்தது.
கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தவன் அவன் கட்டிலில் படுத்துக்கொண்டு அதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். தன் பாடலை , திறமையை ரசிக்க ஒருத்தி இருக்கிறாள் தனக்காக வருத்தப்படுகிறாள் என நினைக்க நினைக்க தமிழின் மனதில் ஒரு இனம்புரியாத இனிமையான உணர்வு.
Advertisement
ஒரு கலைஞனுக்கு தன் கலையை திறமையை ரசிக்க பாராட்ட ஒருவர் இருப்பதைவிட வேறென்ன வேண்டும். அந்த மனநிலையில் தான் இருந்தான் தமிழினியன்.
பெட்டில் படுத்துக் கொண்டு போனில் இன்ஸ்டாகிராம் நோண்டிக் கொண்டிருந்தான் தமிழ். சட்டென , “இசையோட இன்ஸ்டா ஐடி என்னவா இருக்கும்?.. என தோன்ற “பேசாம கேட்டுட்டு வந்திருக்கலாமோ?” என தன்னையே கடிந்து கொண்டாவன் இரண்டு மணி நேர தேடலுக்கு பிறகு அவளின் இன்ஸ்டாகிராம் ஐடி யை கண்டுபிடித்தான்.
Advertisement
Advertisement
இசையின் இன்ஸ்டா ஐடியை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் இருந்தவன் அவளின் ஐடிக்குள் போக இரண்டு மியூச்சுவல் ஃபாலோவர்ஸ் என காட்ட, வேகமாக யாரென பார்த்தான். ஒன்று எழிலின் அக்கவுண்ட் இன்னொன்று அவனுக்கு தெரிந்த மேத்ஸ் டிபார்ட்மென்ட் நண்பன் அரவிந்தின் அக்கவுண்ட், நண்பன் என்றால் தெரிந்தவன் அவ்வளவு தான்.
“அட நாயே.. எங்கூட தான சுத்தீட்டு இருந்தான் அதுக்குள்ள எப்ப ரிக்வெஸ்ட் குடுத்திருப்பான்.. ஒரு புள்ள அக்கவுண்டையும் விட்டு வைக்கிறதில்ல” என எழிலை திட்டினான்.
Advertisement
அவளின் ஐடியையே கடந்த பத்து நிமிடமாக பார்த்துக் கொண்டு ரிக்வெஸ்ட் தரலாமா? வேண்டாமா? யோசித்துக் கொண்டிருந்தான் இனியன்.
“நம்ம சீனியர்.. ஜூனியர் பொண்ணுக்கு ரிக்வெஸ்ட் குடுக்கிறதா?”.. “இன்னிக்கு தான் பேசுனோம் அதுக்குள்ள ரிக்வெஸ்ட் குடுத்தா அந்த பொண்ணு ஏதாவது தப்பா நினைச்சுக்குமோ..?” என யோசித்துக் கொண்டே மொபைலை நோண்டிக் கொண்டிருந்திருந்தவன் தவறுதலாக “ஃபாலோ” பட்டனை அழுத்திவிட்டான்.
“ஐயோ.. ரிக்வெஸ்ட் போயிருச்சே.. இப்போ என்ன பண்றது.. டேய் தமிழு.. ஏன் டா இப்படி இருக்க?” என அவனையே கடிந்து கொண்டவன், “சரி எப்படியும் நோட்டிஃபிகேஷன் போயிருக்கும்.. அக்சப்ட் பண்றாளானு பார்க்கலாம்” என அவள் இவன் ரிக்வெஸ்டை ஏற்க வேண்டுமே என நினைத்து கொண்டு போனை பார்த்துக் கொண்டே காத்திருக்க தமிழுக்கு எழிலிடம் இருந்து போன் வந்தது.
“இந்த கரடிக்கு வேற வேலையே இல்ல..” என நொடித்துக் கொண்டே போனை எடுத்தவன்,
“ம்ம் சொல்றா கரடி.. எதுக்கு கூப்பிட்ட?” என கேட்க
“வா நாயே.. ஃபிரீ ஃபயர்ல மேட்ச் போடுவோம்” என அழைத்தான் எழில்.
“டேய்.. அதெல்லாம் உன்ன மாதிரி வெட்டி பசங்க விளையாட்டுறது.. நான் வரல”.
“ஓஓ… சார்க்கு அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலைனு தெரிஞ்சுக்கலாமா?”
“அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது மச்சான்..” என தமிழ் கூற
“ஓஓ.. எங்களுக்கு புரியாது.. அந்த இன்னிசைக்கு தான ரிக்வெஸ்ட் குடுத்துட்டு உற்கார்ந்திட்டு இருக்க..” என எழில் கூறவும் அவரசமாக எழுந்து வந்து ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்துவிட்டு,
“உனக்கு எப்படி தெரியும்?..” என கேட்க
“ஜன்னல் வழியா எட்டியெல்லாம் பார்க்காத.. நான் வீட்ல தான் இருக்கேன்..” என்றான் எழில்.
“டேய் எப்புட்ராரா.. சரியா சொல்ற?” என்ற தமிழின் கேள்வியில் சிரித்தவன், “டேய் நாயே.. நான் உன்ன எல்.கே.ஜில இருந்து பாக்குறேன்.. எனக்கு தெரியாதா..” என்றான்.
“அது சரி.. இசைக்கு ரிக்வெஸ்ட் குடித்தது எப்படி தெரியும்?” என தமிழ் கேட்க “டேய் மக்கு சாம்பிரானி.. உன் இன்ஸ்டா அக்கவுண்ட் தான் என் போன்லயும் லாகின் ஆகியிருக்குல..” என்றான் எழில்.
“ச்சே.. இத மறந்துட்டனே” என அவனையே மனதில் கடிந்து கொண்டான் தமிழ்.
“என்ன பாடிசோடா.. மண்ட மேல இருக்கிற கொண்டைய மறந்துட்டியா?” என எழில் கிண்டலாக கேட்க கடுப்பான தமிழோ “நானே செம காண்டுல இருக்கேன்.. டென்ஷன் ஏத்தாம போயிரு..” என்றான் எரிச்சலாக.
“அப்படி என்ன காண்டு?..” என எழில் கேட்க “நீ ஏன் டா எனக்கு முன்னாடி இசைக்கு ரிக்வெஸ்ட் குடுத்த?” என கடுப்பாக கேட்டான் தமிழ்.
“இதென்ன அநியாயமா இருக்கு.. தெரிஞ்ச பொண்ணாச்சேனு ரிக்வெஸ்ட் குடுத்தேன். அந்த புள்ளையும் அக்செப்ட் பண்ணி ஃபாலோ பேக் பண்ணுச்சு.. இது ஒரு குத்தமா?.. ஆமா இதெல்லாம் நீ எதுக்கு இவ்வளவு சீரியஸா கேட்கிற?”.
“அது.. அது உன்ன மட்டும் அக்செப்ட் பண்ணாயில்ல. நான் ரிக்வெஸ்ட் குடுத்து அர மணிநேரம் ஆச்சு, இன்னும் அக்செப்ட் பண்ணல ” என்றான் சோகமாக.
“டேய் அந்த புள்ள என்ன உன்ன மாதிரி வெட்டி ஆபிசர்னு நெனசச்சியா?.. பாவம் அந்த புள்ளைக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கும், பொறுமையா தான் அக்செப்ட் பண்ணும் வெயிட் பண்ணு” என சமாதனமாய் சொன்னவன், “அந்த பொண்ணு ரிக்வெஸ்ட அக்செப்ட் பண்ற வரைக்கும் போனையே பார்த்துட்டு உற்காராம ஒழுங்கா மேட்ச்சுக்கு வந்து சேரு” என ஃபோனை வைத்தான் எழில்.
எழில் போனை வைத்ததும் அவனுடன் சேர்ந்து ஒரு மணிநேரம் ஃபீரீ ஃபயர் விளையாடினான் தமிழ். ஒரு மணி நேரத்தில் அவன் போனில் இருந்த சார்ஜ் முழுவதும் வடிய, “டேய் மச்சி சார்ஜ் முடிஞ்சிருச்சு.. நான் சார்ஜ் போட்டுட்டு அப்பறம் வரேன்” என விளையாட்டிலிருந்து வெளியே வந்தவன். போனை சார்ஜ் யில் போட்டுவிட்டு நோட்டிஃபிகேஷன் சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு வந்து ஹாலில் அன்னையுடனும் தங்கையுடனும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
கலைவாணி எழுந்து இரவு உணவு சமைக்க கிட்சென் போக அன்பரசனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்தவர், “சொல்லுங்க..”
“கலை என்ன பண்ற?”
“இந்நேரத்திற்கு என்ன பண்ணுவாங்க சமைக்க தான் போறேன்” .
“என்ன சமைக்க போற ?”
“என்ன.. தோச தான் சுடனும்”
“சுட ஆரம்பிச்சிட்டியா?” என அவர் ஒவ்வொரு கேள்வியாக கடுப்பான கலைவாணி, “ஏங்க இப்ப என்ன தான் உங்களுக்கு பிரச்சினை?” என்றார் சலிப்பாக “இல்ல கலை நீ சமைக்காத நான் வரும்போது ப்ரோட்டா வாங்கீட்டு வரேன்” என்றார்.
“ஏன்? என்ன திடீர்னு?” என கலைவாணி கேட்க, “அது ஒன்னுமில்ல.. காலையில்ல பையன ரொம்ப திட்டீட்டேன்.. எனக்கே கஷ்டமா போச்சு, அதான் அவனுக்கு ப்ரோட்டா பிடிக்குமேனு….” என்றிளுத்தார் அன்பரசன்.
“சரி.. ஆனா உங்க மகளுக்கு தான் ப்ரோட்டா பிடிக்காதுல்ல.. அவளுக்கு வேற ஏதாவது வாங்கீட்டு வாங்க..”என்க
“ம்ம் அது எனக்கு தெரியாதா?.. நான் பாப்பாக்கு பிடிச்சது ஏதாவது வாங்கீட்டு வரேன்.. நீ இரண்டு பேரையும் கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லு” என்றவர் போனை வைக்க போக, “ம்ம் பையனுக்கு பொண்ணுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கீட்டு வரேன்னு சொல்றீங்களே.. கலை உனக்கு ஏதாவது வேணுமானு ஒரு வார்த்தை கேட்கிறீங்களா?” என கடுப்பாக கேட்க, “ம்ம் என் கலை எப்போ கேட்டாலும் மாசால் தோசைனு தான் சொல்லுவா.. இருந்தாலும் உனக்காக கேட்கிறேன்” என்றவர்
“கலை உனக்கு ஏதாவது வேணுமா?” என கேட்க புன்னகைத்த கலைவாணி அதை குரலில் காட்டிக் கொள்ளாமல், “சரி சரி எனக்கு மாசால் தோசை வாங்கீட்டு வாங்க” என உத்தரவாக கூற “சரிங்க” என சிரிப்புடன் சொன்னவர் அழைப்பை துண்டித்தார்.
கலைவாணி சமையலறையிலிருந்து வந்து இவர்களுடன் அமர்ந்து டிவி பார்க்க, “ஏன் மா நீ சமைக்கலையா?” என கேட்டாள் முல்லை. “இல்ல பாப்பா அப்பா ஹோட்டல்ல வாங்கீட்டு வராராம்” என கூற அவளும் சிரிப்புடன் சரி என்றாள். தமிழ் அதற்கு பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.
டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது போனில் நோட்டிஃபிக்கேஷன்கள் வர எழுந்து எழுந்து போய் போனை பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ்.
“ஏன் டா தம்பி.. ஏன் சும்மா எழுந்து போய் போனை பார்த்திட்டிருக்க?” என கலைவாணி கேட்க என்ன பதில் சொல்வது என யோசித்தவன், “அது அம்மா மேம் முக்கியமான நோட்ஸ் அனுப்புறேன்னு சொன்னாங்க” என கூற அவனின் திருட்டு முழியை வைத்தே அது பொய்யென கண்டு கொண்டவர் மேற்கொண்டு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
அன்பரசன் இரவு உணவு வாங்கிக் கொண்டு வர நால்வரும் ஒன்றாக உற்கார்ந்து உண்டனர். சாப்பிடும் போதும் நோட்டிஃபிகேஷன் சத்தம் கேட்க தமிழ் இரண்டு முறை எழுந்து போய் போனை பார்க்க எழில் தான் ரீல்ஸ் அனுப்பியிருந்தான்.
அதில் கடுப்பானவன் “இந்த நாய்க்கு வேற வேலையில்ல” என மனதில் திட்டிய படி மீண்டும் வந்து சாப்பிட உற்கார, “சாப்பிடும் போது என்ன போனு?” என கேட்டார் அன்பரசன். தமிழ் என்ன பதில் சொல்வதென யோசித்துக் கொண்டிருக்க கலைவாணியே, “அவங்க மேம் ஏதோ முக்கியமான நோட்ஸ் அனுப்புறேன்னு சொன்னாங்களாம்.. படிப்பு விஷயமா தான பாக்குறான்” என பதிலளித்தார். “யாரு? உன் புள்ள.. படிப்பு விஷயமா இப்படி ஓடி ஓடி போனை பார்க்குறான்..” என நக்கலாக அன்பரசன் கேட்க தமிழ் எதையும் கண்டுகொள்ளாமல் உணவு உண்பதே அவன் தலையாய கடமை என்பது போல் சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.
கணவனை முறைத்த கலைவாணி, “அதெல்லாம் அவன் படிப்பான்..” என்றவர், “சரி சரி இப்போ நீங்க எதுக்கு சாப்பிடற நேரத்தில்ல தொன தொன னு போசீட்டு இருக்கீங்க” என அதட்ட அன்பரசனும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டார்.
எல்லோருக்கும் முன் சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு வந்தவன் பெட்டில் படுத்துக்கொண்டு பேனை பார்க்க இசை ஃபாலோ ரிக்வெஸ்டை அக்செப்ட் செய்து இவனை பின் தொடர ரிக்வெஸ்ட் குடுத்ததாக நோட்டிஃபிக்கேஷன் வந்திருந்தது. அதை பார்த்தவன் மகிழ்ச்சியாக இன்ஸ்டாவுக்குள் போய் அவள் ரிக்வெஸ்டை ஏற்றான்.
அவள் அக்கவுண்ட்யே வைத்துக் கொண்டு மெஸேஜ் பண்ணலாமா? வேண்டாமா? என ஒரு பத்து நிமிடம் யோசித்தவன் தைரியத்தை வரவழைத்து கொண்டு “ஹாய்” என மெஸேஜ் அனுப்ப, பத்து நிமிடம் கழித்து “ஹாய் அண்ணா” என ரிப்ளை செய்தாள் இன்னிசை.
error: Content is protected !!