Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Isaiyindri ennaven

இசையின்றி என்னாவேன் 4

இசையின் இன்ஸ்டா அக்கவுண்டை வைத்துக் கொண்டு மெஸேஜ் பண்ணலாமா? வேண்டாமா? என ஒரு பத்து நிமிடம் யோசித்தவன் தைரியத்தை வரவழைத்து கொண்டு மெஸேஜ் செய்ய போக, “டேய் பாடி சோடா.. மண்ட மேல இருக்கிற கொண்டைய மறந்துட்டியா?” என எழில் கொஞ்ச நேரத்திற்கு முன் கேட்டது நினைவுக்கு வந்தது.

 “ஐயோ, இத மறந்துட்டனே.. நல்ல வேலை நியாபகம் வந்துச்சு” என அவனையே கடிந்துக் கொண்டவன், செட்டிங்க்ஸ் சென்று அவன் அக்கவுண்ட்டை மொத்தமாக மற்ற எல்லா போனில் இருந்து லாக் அவுட் செய்து விட்டு மீண்டும் அவன் போனில் மட்டும் லாக் இன் செய்தான்.



Advertisement

“ஹப்பா..இனி இந்த நாய் என் இன்ஸ்டா அக்கவுண்ட்டை பார்க்க மாட்டான்” என‌ நிம்மதி பெருமூச்சு விட்டவன், இசைக்கு “ஹாய்” என மெஸேஜ் அனுப்பிவிட்டு அவளின் ரிப்பளைக்காக காத்திருக்க அந்த கல் நெஞ்சுக்காரி அவனை பத்து நிமிடம் காக்க வைத்து, “ஹாய் அண்ணா” என ரிப்ளை செய்திருந்தாள்.

நோட்டிஃபிக்கேஷன் வந்ததும் அவரசமாக உள்ளே போனவனுக்கு அந்த அண்ணா வை பார்த்ததும் பயங்கர எரிச்சல், “அண்ணா வா? என்ன பார்த்தா இவளுக்கு அண்ணா மாதிரியா இருக்கு..?” என இசையின் மீது செம கடுப்பில் இருத்தான் தமிழ்.

Advertisement

Advertisement

இசையை பிடித்திருக்கிறது, தன் பாடலை ரசித்து தனக்காக வருத்தப்பட்ட இன்னிசையை இன்னும் பிடித்திருக்கிறது, அவள் பேசியபோது மனதில் ஏற்பட்ட இனம்புரியா இனிமையான உணர்வைகளை இன்னும் இன்னும் பிடித்திருக்கிறது. கண்டவுடனே காதலா? என்றால் நிச்சயமாக இல்லை. அதில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை, கண்டவுடனே காதல் என்பது வெறும் புற அழகால் ஏற்படும் ஈர்ப்பு.. என்பது அவனின் கருத்து.

 இப்போதும் அவள் மீது காதல் எல்லாம் இல்லை, ஓரு ஈர்ப்பு.. அவள் அகத்தின் பால் மட்டுமே கொண்ட ஈர்ப்பு. அந்த ஆடிட்டோரியத்தில் எத்தனையோ பேர் அவன் பாடலை ரசித்து அவனுக்காக கைத்தட்டினர், பாராட்டினார் ஆனால் யாரும் இந்த அளவிற்கு அவனுக்காக அவன் அங்கீகாரிக்கப்படவில்லை என வருத்தப்படவில்லையே.. அவனுக்காக வருத்தப்பட்டவள் இன்னிசை மட்டுமே.

Advertisement

யாரென்றே தெரியாத போதே அவனுக்காக வருத்தப்பட்டவளின் இளகிய மனம் பிடித்திருக்கிறது. அவளின் பால் கொண்ட ஈர்ப்பினால் என்னவோ அவளின் அந்த அண்ணா..வை அவன் மனதால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவர்கள் இருவருக்குமான உறவு நட்பாக இருக்கலாம் காலப் போக்கில் காதலாகவும் மாறலாம் மாறாமலும் போகலாம் அது அவனுக்கே தெரியாது. ஆனால் இருவருக்குமான உறவு அண்ணன் தங்கையாக இருக்கக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தான் தமிழினியன்.

இசையின் மீதிருந்த கடுப்பில் எழிலிற்கு அழைத்தான் தமிழ். தூக்கம் கலைந்து அழைப்பை ஏற்ற எழில், “சொல்றா நாயே.. ஏன் இந்நேரத்தில கூப்பிட்டிருக்க?” என தூக்க கலக்கத்தில் கேட்க

“டேய் அவ என்ன தான் நினைச்சுட்டு இருக்கா?” என்றான் எரிச்சலும் கோவமுமாக

“எவ..?” என புரியாமல் கேட்டான் எழில்.

“அதான் இன்னிசை..”

“ஏன் அந்த பொண்ணு‌ என்ன பண்ணுச்சு?”

“என்ன அண்ணானு கூப்பிடுறா டா..” என தமிழ் கடுப்பாக சொல்ல அதற்கு கொட்டாவி விட்ட எழிலோ, “என்னையும் தான் அண்ணானு கூப்பிடுறா..” என்றான்.

அதில் எரிச்சலானவன், “என்ன அண்ணானு கூப்பிடறதும் உன்ன அண்ணானு கூப்பிடறதும் ஒன்னா?” என கேட்க “அப்பறம் ஒன்னில்லையா?” என பதில் கேள்வி கேட்டான் எழில்.

“இல்ல..” என்றவன் மீண்டும், “அவ ஏன் டா என்ன அண்ணானு கூப்பிடுறா? என்ன பார்த்தா அவளுக்கு அண்ணா மாதிரியா இருக்கு?” என புலம்ப எரிச்சலான எழில் கண்களை கசக்கி நேரத்தை பார்த்துவிட்டு, “டேய் அர போத நாயே மணி பதினொன்றரை ஆச்சு.. இப்போ வந்து தூக்க கலக்கத்துல என்ன பேசுறது னு தெரியாம உளராத. ஒழுங்கா போய் தூங்கு பே.‌.. மனுசன தூங்க விடாம டார்ச்சர் பண்ணீட்டு” என கத்தியவன் தமிழின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அழைப்பை துண்டித்து விட்டு தூங்கிவிட்டான்.

எழில் அழைப்பை துண்டித்ததும் “கடவுளே.. என்னை மனுஷனா மதிச்சு பேசுன ஒரே பொண்ணு இவ தான்.. இப்ப இவளும் அண்ணாங்குறாளே” என வாய்விட்டே புலம்பியவன் மீண்டும் இன்ஸ்டாவுக்குள் போக இசையின் இன்ஸ்டா ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆக்டிவ் என காட்ட “இவ இன்னும் தூங்கலையா” என நினைத்தபடி “இன்னும் தூங்கலையா?” என மெஸேஜ் அனுப்பினான்.

அதை உடனே பார்த்தவள், “இல்ல அண்ணா..” என பதிலளிக்க தமிழுக்கு எங்கையாவது முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது. “இப்போ வார்த்தைக்கு வார்த்தை அண்ணா போடலனு யாரு அழுதா” என முனங்கினான் கடுப்பாக.

அவள் இவனிடம் பேசும் போது கூட சில இடங்களில் அண்ணா என்று தான் அழைத்தாள். இவன் தான் அவள் பேசிய விஷயத்தையெல்லாம் ஆர்வமாக கேட்டுவிட்டு அந்த அண்ணாவை கவனிக்க தவறவிட்டான்

“ஏன் ?” என கேட்க “சும்மா தான் அண்ணா தூக்கம் வரல..” என அவள் பதிலளிக்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தமிழோ, “அண்ணா வா???” என கேள்வியாக மெஸேஜ் அனுப்பினான்.

“ஆமா அண்ணா தான்.. நீங்க என்ன விட பெரிய பையன் தான?” என அவள் கேட்க, “இல்லைனு நான் எப்போ சொன்னேன்?..” என முனங்கியவன் “ஆமா அதுக்கு?” என கேள்வியாக பதிலளித்தான்.

“அப்போ உங்கள மரியாதையா அண்ணானு தான கூப்பிடனும்..” என இசை நியாயம் பேச, “இவ கிட்ட நான் மரியாதைய கேட்டனா?” என புலம்பியவன் “அவ்வளவு மரியாதையா பேசுனும்னு அவசியம் இல்ல” என பதிலளித்தான் தமிழ்.

“வயசுல பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கனும் ல..?” என்றவளின் கேள்வியில் கடுப்பானவன் “வயசுல பெரியவங்க பெரியவங்கனா..? எனக்கென்னமோ எழுவது வயசான மாதிரி பில்டப் விடுறா..” என கடுப்பில் புலம்பியவன் அதையையே அவளிடமும் கேட்க சிரித்தவள், “அப்பறம் உங்கள எப்படி தான் கூப்பிடுறது ?” என கேட்க

“ம்ம அப்படி வா வழிக்கு” என்றவன், “பேர் சொல்லியே கூப்பிடு, இல்ல மலர் மாதிரி சீனியர்னு வேணா கூப்பிடு” என்க “பேர் சொல்லி கூப்பிடுறது எல்லாம் எனக்கு டக்குனு வராது நான் வேணா இப்போ சீனியர்னே கூப்பிடுறேன் அப்புறம் போக போக பேர் சொல்லி கூப்பிட பழகிக்கிறேன்” என்றாள் இசை.

“அம்மா தாயே.. நீ வாடா.. போடானு கூட கூப்பிடு ஆனா அண்ணா மட்டும் கூப்பிடாதே.. கேட்கவே கடுப்பா இருக்கு” என மனதில் புலம்பியவன் “சரி” என்பதோடு முடித்துக் கொண்டான்.

“ஐயோ.. கன்டென்ட் முடிஞ்சிருச்சே.. இப்போ என்ன பேசுறது?” என யோசித்தவன் அதே‌ வழக்கமான சாப்பிட்டியா?.. என்ன பண்ற? போன்ற கேள்விகளை வைத்து ஒரு ஐந்து நிமிடம் பேசினான், அதன் பிறகு என்ன பேசுவதென தெரியவில்லை தமிழுக்கு.

“இதுக்கு தான் நாலு அஞ்சு புள்ளைங்க சிட்ட பேசி பழகியிருக்கனும் போல” என அவனையே நொந்து கொண்டான்.

வேறு என்ன பேசுவதென யோசித்தவன், “இன்னும் அந்த ஆடிஷன் பத்தி நினைச்சிட்டு இருக்கியா?” என கேட்க , “இல்ல அண்ணா..” என டைப் செய்தவள் மீண்டும் அதை அழித்து விட்டு, “இல்ல சீனியர் நீங்க தான் அத பத்தி யோசிக்காத னு சொன்னீங்களே.. இது போச்சுன்னா இன்னொரு காம்பெட்டீஷன்.. அடுத்த காம்பெட்டீஷன்ல பார்த்துக்கலாம் விடுங்க” என பதிலளித்தாள் அவனுக்கு ஆறுதலாக.

கடைசியாக இருந்த ஒரு கன்டென்டும் முடிந்துவிட இப்போதும் என்ன பேசுவது தெரியவில்லை. ஆனால் அகத்தில் அவளுடன் பேசிக் கொண்டே இருக்க ஆசையும் ஆவலும் அலாதியாக இருந்தது தமிழுக்கு.

இசைக்கு தூக்கம் வர, “சாரி சீனியர்.. எனக்கு தூக்கமா வருது, நாளைக்கு பேசுவோமா?” என மெஸேஜ் அனுப்பினாள். ஏற்கனவே கன்டென்ட் குறையோடு இருந்தவனும் “சரி குட் நைட்” என முடித்துக் கொண்டு வழக்கம் போல பாடல்கள் கேட்டுக் கொண்டே உறங்கிவிட்டான்.

இரண்டு வாரங்கள் அப்படியே சென்றது. இந்த இடைப்பட்ட நாட்களில் தமிழ் அதிகமாக எல்லாம் பேசிக் கொள்ளவில்லை, எங்கே வழிய வழிய போய் பேசினால் அவனின் சீனியர் கெத்து போய்விடுமோ, இசை தவறாக நினைத்துக் கொள்வாளோ என அளவாக வைத்துக் கொண்டான். வாரத்தில் ஒர் இரண்டு நாட்கள் பேசினாலும் ஐந்து நிமிட உரையாடல்கள் மட்டுமே காலேஜில் அடிக்கடி பார்த்துக் கொண்டாலும் அப்படியே பெரியதான பேச்சுக்கள் இல்லை.

இசையிடம் பேசி வெகு நாட்கள் ஆனது போல் இருக்க தமிழே அவளுக்கு மெசேஜ் செய்தான். இசை ஒழுங்காக ரிப்ளை செய்யாமல் அவனுக்கு பதில் அளிக்க நேரம் எடுக்க,

“ஏன் இசை பிசியா இருக்கியா?” என கேட்டான் .

“ஆமா, சீனியர்.. இஃப் யு டோன்ட் மைன்ட் நாளைக்கு பேசலாமா..? சாரி எனக்கு இன்னிக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்க ஏமாற்றம் அடைந்தவன் அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல், “சரி சரி.. நிறைய வேலையோ..? நீ அதை பாரு நாளைக்கு பேசலாம்” கூற

“ஆமா சீனியர்.. நாளைக்கு பிராஜெக்ட் ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்.. அப்பறம் செமினார் வேற இருக்கு பீபீடி (PPT )ரெடி பண்ணனும்.. எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு” என அவள் மெஸேஜ் அனுப்ப

“நிறைய இருக்கா? நான் வேணா ஹெல்ப் பண்ணட்ட?” என பதில் அனுப்பினான்.

“நிஜமாவா.. எப்படி ஹெல்ப் பண்ணுவீங்கனு” என அவள் சந்தேகமாக கேட்க

“ம்ம் நீ வேணா பீபீடி ஓட கன்டென்ட் அனுப்பு.. நான் பீபீடி ரெடி பண்ணி தரேன்”

“நிஜமாவா சொல்றீங்க..? உங்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லையா ?”

“ச்சே ச்சே எனக்கு எந்த வேலையும் இல்ல.. ஃபிரீயா தான் இருக்கேன். நான் உனக்கு பீபீடி ரெடி பண்ணி தரேன்.”

“ரொம்ப தேங்க்ஸ் சீனியர்…நீங்க உங்க நம்பர் அனுப்புங்க நான் வாட்ஸ் அப் ல கன்டென்ட் அனுப்புறேன். நீங்க பீபீடி ரெடி பண்ணிட்டு எனக்கு வாட்ஸ் அப் பண்ணீருங்க” என மெஸேஜ் அனுப்பினாள்.

இசைக்கு அவனின் நம்பர் அனுப்ப அவள் அவனுக்கு பீபீடி கான கன்டென்டை வாட்ஸ்ஆப் பில் அனுப்பினாள். அவள் கன்டென்ட் அனுப்பியதும் தமிழ் அவளுக்காக பீபீடி ரெடி பண்ண இசையும் பிராஜெக்ட் ரிப்போர்ட் வேலையில் மூழ்கிவிட்டாள்.

பீபீடி யை முடித்தவன் அவளுக்கு வாட்ஸ் ஆப் பில் அனுப்பிவிட்டு அவளுக்கு மெஸேஜ் அனுப்பினான்,

“பிராஜெக்ட் வர்க் முடிஞ்சுதா?” என கேட்க “இல்ல சீனியர் இன்னும் கொஞ்சம் இருக்கு..” என அவள் கூற

“ம்ம் சீக்கிரம் முடிச்சுட்டு தூங்கு.. நைட் ரொம்ப நேரம் முழுச்சு ஸ்ட்ரெயின் பண்ணிக்காத” என அக்கறையாக மெஸேஜ் அனுப்பியவன் “பீபீடி முடிச்சுட்டேன் ஒரு தடவ சரி பார்த்துக்கோ.. ஏதாவது தப்புனா சொல்லு மாத்தி தரேன்” என கூற

பிராஜெக்ட் செய்யும் அவசரத்தில் இருந்தவள் “ம்ம் பார்த்துட்டேன் சீனியர் ரொம்ப தேங்க்ஸ்” என கூற அவனும், “அப்போ சரி.. சீக்கிரம் சாப்பிட்டு போய் தூங்கு.. குட் நைட்” என மெஸேஜ் அனுப்பிவிட்டு மேற்கொண்டு அவளை தொந்தரவு செய்யாமல் தூங்க சென்றுவிட்டான்.

மறுநாள் காலை பிராஜெக்ட் ரிப்போர்டை சப்மிட் செய்துவிட்டு வந்த இசை அடுத்த நடக்கவிருந்த செமினாருக்காக தயாராகி கொண்டே தமிழ் அனுப்பிய பீபீடி யை பார்த்தாள்.

மிகவும் ப்ரோஃபெஷ்னலாக வடிவமைத்திருந்தான் தமிழ். என்ன ஒரு பிரச்சினை என்றால் அவள் ஆசிரியர் சொன்ன தீம்க்கும் (theme) அவன் வடிவமைத்திருந்த தீம்மிற்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லை.

இவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள் என்பதால் யாருக்கும் இதுவரை பீபீடி செய்து பழக்கமும் இல்லை, செய்ய தெரியவும் இல்லை. நேற்று செமினார் எடுத்த மாணவர்களும் பீபீடி வடிவமைக்க தெரியாமல் தவறாக செய்திருக்க அவள் ஆசிரியர் வகுப்பில் எல்லோரும் ஓரே மாதிரி பீபீடி செய்ய வேண்டும் என கூறி ஒரு தீம்மை கொடுத்துவிட்டார்.

மற்றபடி அதில் எந்த குறையும் இல்லை சொல்ல போனால் அவள் ஆசிரியர் சொன்னதை விட அவன் வடிவமைத்திருந்த பீபீடி நன்றாகவே இருந்தது .

இசைக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் நேற்றே ஒரு முறை சரி பார்க்க சொன்னான். இவள் தான் அலட்சியமாக விட்டுவிட்டாள். முற்றிலும் இவளின் அலட்சியத்தால் வந்த வினை, இப்போது புதுசாக பீபீடி செய்ய நேரமும் இல்லை.

மலரிடம் தமிழ் அனுப்பிய பீபீடி யை காட்ட “சூப்பரா இருக்கு டி.. மேம் சொன்ன தீம் விட இது நல்லா இருக்கு.. சொல்லிருந்தா நானும் சீனியர் கிட்டயே குடுத்திருப்பனே” என்றாள்.

“மலர் மேம் அவங்க சொன்ன தீம்ல பண்ணலனு திட்டுவாங்களா டி” என இசை கவலையாக கேட்க

“அதெல்லாம் ஒன்னும் திட்ட மாட்டாங்க.. சொல்ல போனா அவங்க சொன்ன தீம் விட இது தான் நல்லாயிருக்கு.. அவங்களுக்கு கன்டென்ட் தான் டி முக்கியம்” என்றாள் மலர்.

மலரிடம் பேசிய பிறகும் இசைக்கு ஏனோ ஒரு தேவையில்லாத பயம். ஆனால் இப்போது எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறாள். முற்றிலும் இவளின் தவறு, கடைசியில் “சரி திட்டினாலும் வாங்கி கொள்ளலாம்”‌ என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள்.

ஆசிரியர் வந்ததும் எல்லோரும் ஒவ்வொருவராக செமினார் எடுக்க தொடங்கினர். இசையின் முறை வந்ததும் முன்னாடி வந்து நின்றவள் பீபீடி யை ப்ரோஜெக்டரில் போட்டு செமினார் எடுக்க தொடங்கினாள்.

இசை செமினாரை முடித்ததும் அவளையே கூர்ந்து பார்த்த அவளின் ஆசிரியர், “இது நான் சொன்ன தீம் இல்லையே?” என கேட்க என்ன பதில் சொல்வதென தெரியாமல் முழித்த இசை,”மேம்.. அது.. நான்” என பதில் சொல்ல திணறினாள்.

அவளை கூர்ந்து நோக்கியவர் , “இது யாரு டிசைன் பண்ண பீபீடி?” என கேட்க “போச்சு நல்லா மாட்டுனோம்” என மனதில் புலம்பியவள், “அது.. அது நான் தான் ரெடி பண்ணேன் மேம்” என்றாள். அவளை அழுத்தமாக பாரத்தவர், “நிஜமா நீ தான் ரெடி பண்ணியா?” என கேட்க ஆம் என தலையை மட்டும் ஆட்டினாள்.

அவளை பார்த்து புன்னகைத்தவர், “ம்ம் வெரி குட்.. ரொம்ப நல்லா இருக்கு” என்றார். “ஸ்டூடெண்ட்ஸ.. அடுத்த செமினார்ல இருந்து நீங்களே இந்த மாதிரி உங்க பீபீடி ய டிசைன் பண்ண கத்துக்கோங்க” என்றவர் மீண்டும் அவளிடம், “வெரி குட் கீப் இட் அப்” என பாராட்டிவிட்டு சென்றார்.

இசைக்கு அப்போது தான் மூச்சே வந்தது. ஆசிரியர் பாராட்டியதும் சிரிப்புடன் வந்தவளை பார்த்து, “அய்ய.. வாயப்பாரு” என மலர் திட்ட அவளை பார்த்தும் சிரித்தவள், “வா டி சீனியர பார்த்து தேங்க்ஸ் சொல்லீட்டு வரலாம்” என்றழைத்தாள்.

“பிரேக் முடிஞ்சுதும் என்னோட டர்ன் வரும்.. நாங்களும் செமினார் எடுப்போம்” என முகத்தை திருப்பிய மலரை பார்த்து முறைத்த இசை, “அப்போ நீ வர மாட்டியா?” என கேட்டாள் கடுப்பாக.

“நான் வரல நீ போய்டு வா.. நான் இன்னும் செமினார்க்கு பிரிப்பேரே பண்ணல” என அவளை மட்டும் அனுப்பி வைத்தாள் மலர்.

பிரேக்கில் எப்படியும் அவர்கள் கிளாசில் இருக்க மாட்டார்கள் என தமிழை தேடி இசை கேண்டீன்க்கு செல்ல, எழில் மட்டும் தனியே ஓரமாக அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

அவனிடம் சென்றவள், “அண்ணா தமிழ் எங்க?” என அவனை தேடியபடி கேட்க, “அவன் இன்னிக்கு லீவ் இசை” என்றான் எழில். “லீவ் வா..” என ஏமாற்றமாக கேட்டவள், “ஏன் வரல” என கேட்க “அது அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை..” என்றான் எழில்.

“அச்சச்சோ..உடம்பு சரியில்லையா.. என்னாச்சு?” என இசை பதட்டமாக கேட்டாள். “சாதாரண காய்ச்சல் தான் வேற ஒன்னுமில்ல” என்றவன் “ஏன் ஏதாவது முக்கியமான விஷயமா?” என கேட்க “இல்ல அண்ணா.. செமினார்க்கு எனக்கு பீபீடி ரெடி பண்ணி கொடுத்தாரு அதான் தேங்க்ஸ் சொல்ல வந்தேன்” என்றாள்.

“அடப்பாவி.. நான் எத்தனை தடவ கேட்டிருக்கேன்.. எனக்கு ஒரு தடவா செஞ்சிருப்பானா? புள்ளைங்களுக்கு மட்டும் ஓடி ஓடி செய்யுறது” என மனதில் தமிழை திட்டியவனோ “சரி நாளைக்கு வந்துருவான் அப்போ சொல்லிக்கோ இசை” என்றான் அதற்கு ஆமோதிப்பாய் தலையாட்டியவள், “சரி அண்ணா.. மலர் கிளாசில தனியா நான் போறேன்” என அவனிடம் சொல்லி விட்டு கிளாசிக்கு சென்றாள்.

கிளாசிக்கு வந்த இசைக்கு தமிழ் வராதது ஏனோ ஏமாற்றமாக இருந்தது. அவனுக்கு உடம்பு சரியில்லை என எழில் கூறியது வேறு கொஞ்சம் கவலையாக இருந்தது.

கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு வந்தவள்  வீட்டில் இருந்த வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஆறு மணி போல் போனை தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்றாள்.

மாடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சட்டென தமிழின் நினைவு வர.. “சீனியருக்கு உடம்பு சரியில்லைனு எழில் அண்ணா சொன்னாங்க ல.. சரி எப்படி இருக்காங்க னு கேட்கலாம்..” என நினைத்தபடி  தமிழை அழைத்தாள்.

தூங்கித்தில் இருந்தவனோ போன் அடிக்க கண்களை கூட திறக்காமல் அதை ஏற்றுக் காதில் வைத்தபடி, “சொல்றா நாயே.. எதுக்கு கூப்பிட்ட” என கேட்க

“ஹலோ சீனியர் நான் இசை பேசுறேன்..” என்றவளின் குரலில் தூக்கத்தில் இருந்து அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான் தமிழினியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!