“உனக்கு இந்த படிக்குற வேலை எல்லாம் இல்லையா டா..” என்ற ஆதி,
“ம்மா! பூ வேணும்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தானே? இவனை ஏன் கடைக்கெல்லாம் அனுப்புறிங்க?” என்று அன்னையிடமும் கோபத்தைக் காட்ட,
Advertisement
Advertisement
“ஆமா எனக்கு வேண்டுதல் தான் பாரு.. போவியா.. நான் உன்னை தேடிட்டு இருந்தேன்.. இவனா வந்து நான் போறேன்னு நின்னான்.. நேரமாச்சேன்னு சரின்னுட்டேன்.. ஏன் டா எல்லாத்துக்கும் கத்துற? நம்ம பையன் தானே?” என்று அன்னை கூற,
“அப்படி சொல்லுங்க ஆச்சி.. நான் இல்லாம சுமதி அக்காக்கு ஒரு ஃபன்க்சனா?” என்று மாரியும் கேட்க,
Advertisement
“ஆமா பெரிய ஃபன்க்சன் தான்.. பொண்ணு பார்க்க தான் வர்றாங்க.. ரொம்ப அலப்பறையை கூட்டாம வீட்டுக்கு கிளம்பு” என்ற ஆதி அவனை அதட்டவெல்லாம் இல்லை.
மாரியின் வார்த்தைகளில் கொஞ்சம் அமைதியாகி இருந்தான்.
“பொண்ணு பார்க்க வர்றதுன்னா முன்னாடியே சொல்ல வேண்டாமா? ஒரு மாசத்துக்கு முன்னாடி வர்றேன்னு சொன்னாங்க தாத்தா இறந்து போச்சு.. பாட்டிக்கு சுகமில்லைனு தட்டி கழிச்சுட்டு இப்படி திடிர்னு வர்றேன்னு போன் பண்றாங்க” என்று மீனாட்சி புலம்பலுடன் வேலையைப் பார்க்க,
“அதனால என்ன ம்மா? சுமதி தான் ஆபீஸ் போகலையே.. இதுவே நாளைக்கு சொல்லி இருந்தா? அப்படி நினைச்சுக்கோங்க..” என்ற ஆதி கடைக்கு வாங்கியிருந்த பலகாரத்தில் அனைவருக்கும் கொடுத்தது போக மீதி இருந்ததை எடுத்து வந்திருந்தான்.
“எனக்கென்னவோ இந்த மாப்பிள்ளை தான் ஆதிண்ணாக்கு மாப்பிள்ளையா வருவார்னு தோணுது ஆச்சி” என்று பேசியபடி ஒரு பழத்தை எடுத்து கடிக்க,
“உன் வாய்ல நல்ல வார்த்தைலாம் கூட வருதே.. நீ சொன்னது நடக்கட்டும்.. சுமதி கல்யாணத்துக்கு உனக்கு ஆதிக்கு மாதிரியே பட்டு வேஷ்டி சட்டை எடுத்து தர்றேன்” என்று மீனாட்சி கூற, ஆதியும் சுமதியும் சிரிக்க,
“இவ்வளவு தான் இருக்கா?” என்றார் மீனாட்சி அங்கிருந்த பலகாரங்களைப் பார்த்து.
“இல்லம்மா.. இது கடையில வச்சது.. வர்றவங்களுக்கு தனியா பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கி உள்ள வச்சிட்டேன்” என்றான் ஆதி.
“ஓஹ் அப்ப சரி” என்றபடி,
“நான் போய் தியாகு அம்மா, தேவி, தேவி பசங்களை எல்லாம் கூட்டிட்டு வர்றேன்” என்று நகர போக,
“ம்மா!” என்று ஆதி முறைக்க, சுமதி சிரிப்பை அடக்கி நிற்க, மாரிக்கு அந்த கட்டுப்பாடு எல்லாம் இல்லை.
“ஏன் ண்ணே! பொண்ணு பார்க்க வரும்போது நாலு பேர் கூட இருந்தா நல்லா தானே இருக்கும்?” என்று கூறிய மாரியின் கிண்டல் பேச்சு தெரியாதவன் இல்லையே ஆதி.
“ஏன் அதான் நாம நாலு பேர் இருக்கோம் தானே? சும்மா சும்மா கூட்டம் கூட்டாதீங்க.. எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்.. அப்புறம் கூப்பிட்டுக்கலாம்”
“டேய்! நீ போய் கடையை பாரு.. பூஜைய போட்டுட்டு பூட்டி வைக்க முடியாது..” என்று மாரியையும் கூற,
“மாப்பிள்ளை வீட்டுல இருந்து பத்து பேர் வர்றோம்னு சொன்னாங்க.. சொந்தக்காரங்களை தான் கல்யாணத்துக்கு பாத்துக்கலாம்னு சொன்ன சரினு விட்டேன்.. ஏன் டா யாரும் வேண்டாம்னு அலம்பல் பண்ணுற?” என்றார் மீனாட்சி குறையாய்.
“ம்மா!” ஆதி அழைக்க,
“ம்மா! நீங்க போய் கூட்டிட்டு வாங்க” என்று சுமதி கூறவும் பறந்துவிட்டார் மீனாட்சி.
“நீ சொல்லிடுவக்கா.. அண்ணனுக்கு தானே கஷ்டம்.. வர்றவங்க சும்மா இல்லாம பாட்டாப் பாடி அண்ணனை இல்ல வம்பிழுப்பாங்க” என சாருவை கூறி மாரி கிண்டல் செய்ய,
“டேய்! உன்னை கடையப் பார்க்க தானே போக சொன்னேன்.. உன்கிட்ட கேட்டேனா? சும்மாவே இருக்க மாட்டியா நீ?” என்று அவனருகே வர,
“அங்கிருந்து சொன்னாலே கேட்கும்.. கடைக்கு தானே போனும்? போறேன் போறேன்” என்றவன்,
“பாடுறவங்களை விட்ற வேண்டியது.. அவங்க பாடும் போது வாயில அடச்சிக்கும் போல.. என்னையே குதற வேண்டியது” என்று முணுமுணுத்து ஆதி கையை ஓங்கவும் ஓடியே விட்டான்.
சாருவும் ப்ரீத்தியும் வெளியே சென்றிருக்க, ஸ்ரீரங்கம் மனைவியிடம் சாரு கூறியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
“என்னங்க இப்படி சொல்றிங்க? அந்த பையனை எப்படி?” என்ற தேவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“சாரு எப்ப உங்ககிட்ட சொன்னா? ஏன் என்கிட்ட எதுவும் சொல்லல?” என கேள்விகளாய் தொடர,
“ஒரு வருஷம் முன்னாடியே தெரியும் தேவி.. என்கிட்ட சொன்னா என்ன உன்கிட்ட சொன்னா என்ன?” என்று மகளை தாங்கியவர்,
“ஆதியை தான் உனக்கும் தெரியுமே? அவங்க அம்மாவை கூட பெருமையா பேசுவ.. அப்புறம் என்ன உனக்கு?” என்றார்.
“ப்ச்! அது வேறங்க.. ஆனா மாப்பிள்ளைனு வரும் போது.. நான் என்னென்னவோ நினச்சேன்.. டாக்டர், போலீஸ்னு…” என்ற தேவிக்கு பெரிய அதிருப்தி.
“சாருக்கு பிடிக்க வேண்டாமா தேவி? ஆதி சொந்தமா நிக்குறான்.. சொந்தக்கால்ல நிக்குறான்.. அவனே மேல வரட்டுமே! பொண்ண பக்கத்துல வச்சு பாத்துக்க கசக்குதா உனக்கு? உன் பொண்ணு தெளிவா இருக்குறா.. அதையும் யோசிக்கணுமே!” என்றார் கணவர்.
“சரி தான்.. ஆதியும் நல்ல பையன் தான்.. ஆனா நான் இப்படி நினச்சுப் பார்க்கவே இல்லையே அதான்..”
“பசங்க விருப்பம் தானே முக்கியம் தேவி? எனக்கு ஆதி எந்த விதத்துலயும் குறைவா தெரியல..” என்று சொல்லிவிட,
“நான் அப்படி சொல்ல வரலைங்க.. ஆனா ஆதி எப்படி இப்படி பண்ணினான்னு தான் யோசிக்குறேன்” என்று கூற,
“கெட்டுச்சு போ.. ஆதி உன் பொண்ணு தான் வேணும்னு நிக்கல.. நம்ம சாருக்கு தான் ஆதியைப் புடிச்சிருக்கு.. ஆதிக்கும் தெரியுமாம்.. ஆனா அதெல்லாம் சரி வராதுன்னு சொல்லிட்டான் போல” என்று கூற, அது இன்னுமே அதிர்ச்சி தேவிக்கு.
“என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றிங்க?” என்று கேட்க,
“ஆதி நல்ல பையன் தான் தேவி.. எனக்கு இதுல முழு சம்மதம்” என்று கூற,
இருந்தாலும் பொண்ணுங்க எப்பவும் அப்பா பாசம் தான்.. பாருங்க கூடவே இருக்கேன்.. என்கிட்ட ஒத்த வார்த்தை சொல்லிருப்பாளா?” என்று கூறியதிலேயே தேவி சம்மதம் புரிந்துவிட,
“உன்கிட்ட சொல்லிருந்தா நீ சாதாரணமா இவ்வளவு நாள் பேசின மாதிரி அவங்ககிட்ட பேசி இருப்பியா? சொல்ல முடியாது உனக்கு சாரு மேல கோபம் கூட வந்திருக்கும்.. அதான் என்கிட்ட சொல்லியிருக்கா என் பொண்ணு” என்று கூறவும்,
“ஆமா குறை சொல்லணும்னா என் பொண்ணு தலையில தூக்கி வைக்கணும்னா உங்க பொண்ணு.. நல்லா விளையாடுறீங்க அப்பாவும் பொண்ணும்” என்று கூறவும் ஸ்ரீ ரங்கம் சிரிக்க, மீனாட்சி வந்துவிட்டார்.
வந்தவர் ஸ்ரீரங்கத்திடம் நலம் விசாரித்துவிட்டு கையோடு தேவியையும் அழைத்து செல்ல, மீண்டும் சிந்தனை ஸ்ரீரங்கத்திற்கு ஆதியிடம் பேசுவதா ஆதி அன்னையிடம் பேசுவதா என்று.
சாரு வரவில்லை என்றதும் ஆதி வெளிப்படையாய் பெருமூச்சு விட, ‘சாருக்கா கூட இவரை இவ்வளவு நினைக்காது போல.. நிமிஷத்துக்கு நிமிஷம் வேண்டாம்னு சொல்லி சொல்லி சதா அக்கா நியாபகமாவே இருக்கு.. இதை சொன்னா அடிக்க வேற வரும்’ என்ற மாரி மறந்தும் இதை சத்தமாய் சொல்லிவிடவில்லை.
“போறப்பவே வாய் வைக்காதன்னு சொன்னேன் கேட்டியா? பொண்ணு பார்க்க வர்ற இடத்துல வீடு கலகலன்னு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.. இப்ப பாரு சாருவும் ப்ரீத்தியும் வெளில போய்ட்டாங்களாம்..” என்று ஆதியை வந்து மீனாட்சி திட்டி செல்ல,
“அட விடுங்க ஆச்சி… இன்னும் கொஞ்ச நாள் தான்.. அப்புறம் பாருங்க இந்த வீடு எப்படி லகலகலகன்னு இருக்க போகுதுன்னு” என்ற மாரியை ஆதி தீயாய் முறைக்க,
“ஆச்சி கூப்பிட்டீங்களா?” என்று அவர் பின்னேயே சென்றுவிட்டான்.
ஆதி சொல்லை எல்லாம் கேட்காமல் தியாகு வீட்டினரையும் , மாரி வீட்டிலும் மீனாட்சி அழைத்திருக்க, வந்திறங்கிய மாப்பிள்ளை வீட்டினருக்கு பொறுப்பாய் நின்றான் ஆதி.
பார்த்து பார்த்து அனைத்தும் செய்திருக்க, மாப்பிள்ளைக்கும் அவர்கள் வீட்டினருக்கும் பெண்ணை பிடித்துவிட, உடனே பூ வைக்கும் அளவுக்கு அவர்கள் பேசி இருக்க, இதையெல்லாம் நினைத்தும் பார்க்கவில்லை ஆதி.
அதற்கும் தனியே மகனை பேசிவிட்டு சென்றார் ஆதி அன்னை.
“இன்னும் நாலு பேர் சொந்தக்காரங்களை கூப்பிட்டிருக்கக்கலாம்.. உன்னால தான் டா..” என்று பொருமியவர் சும்மாவும் இருக்கவில்லை.
தியாகுவிற்கு அழைத்து வரும்படி சொல்ல சொல்லி மகனிடம் கூறிவிட்டு, தேவியை அழைத்து சாரு ப்ரீத்தி வர முடியுமா என்றும் கேட்க சொல்ல,
‘பூ தானே.. வச்சா வச்சுட்டு போகட்டும்.. நிச்சயதார்த்தத்துக்கு சொல்லிக்கலாம் தானே?’ என்று ஆதி எண்ணியவன் அடுத்து அன்னை ஆரம்பிக்கும் முன் தியாகுவையும் தியாகு தந்தையையும் வரவழைத்துவிட்டான்.
தேவி ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து சொல்ல அவரும் வந்துவிட்டார்.. வந்தவரை ஆதியும் பொதுவாய் நலம் விசாரிக்க அவரும் வாழ்த்து கூறி தியாகு தந்தையுடன் சென்று நின்று கொண்டார்.
ப்ரீத்தியின் ப்ராஜெக்ட் சம்பந்தமான பொருட்களை வாங்க சாரு, ப்ரீத்தி இருவரும் சென்றிருக்க, இருவரும் வரும்முன் சிறப்பாகவே நடந்து முடிந்திருந்தது சுமதியின் பூவைக்கும் விழா.
ஆதி வீட்டில் இருந்து தேவி வெளியே வரவும் சாருவும் ப்ரீத்தியும் வந்து இறங்கவும் சரியானி இருந்தது.
“அவங்க கிளம்பி அரை மணி நேரமாச்சு” என்று கூறி உள்ளே செல்ல, மாரி வெளியே வந்தவன்,
“சாருக்கா எங்கக்கா போன? உன்னை எவ்வளவு பேர் தேடினாங்க தெரியுமா? உன் பாட்டை கேட்க வேற ஒரு கூட்டம் கிடைச்சுது.. இப்படி கவுத்துட்டியேக்கா” என்றான்.
“என்னை எல்லாம் தேட ஆள் இருக்கா சில்ற?” என்று சாரு கேட்கவும்,
“ஏன் இல்லாம?” என்றவன் ஆதி செய்ததை சொல்ல,
“பாசம் புடலங்காய் இல்லைனாலும் வாத்திக்கு ஈவு இரக்கமாச்சும் இருக்க வேண்டாம்? நான் வரலைனா அவ்வளவு சந்தோசமா? என்னை தவிர யார் அந்த வீட்டுல காலெடுத்து வைக்க முடியும்? இரு இப்பவே வந்து கேட்குறேன்” என்றவள் ஸ்கூட்டியை தங்கையிடம் கொடுத்துவிட்டு ஆதி வீட்டை நோக்கி நடக்க,
“சிங்கமொன்று புறப்பட்டதே..” என்று மாரியும் பாடி பின்னால் வர,
உள்ளே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதி சாரு வருவதையும் பின்னோடே வந்த மாரியையும் பார்த்து முறைக்க,
“வாம்மா” என்று வந்துவிட்டார் மீனாட்சி.
“சாரிம்மா அப்ப வர முடியலை.. அதான் சுமதியை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்று சுமதி அறை பக்கமாய் சாரு திரும்பி விட்டாள்.
“அதுக்கென்ன சாரு” என்று மீனாட்சியும் அழைத்து செல்ல,
“அடப்பாவி அக்கா! இப்படியா கோர்த்து விடுவ..” என்று திகைத்த மாரி, ஆதி கவனிக்கும் முன் கடைக்குள் ஓடிவிட்டான்.