Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இடம் தருவாயா மனசுக்குள்ளே??24

மனசு 24
இன்பவேணி உறங்கி விட்டால் என்றவுடன், “பாட்டி நீங்க உங்க அறைக்கு போய் ஓய்வெடுங்க..” உதய்கிருஷ்ணா விழிகள் தன்னவளை வருத்தமுடன் கண்டன.
எவ்வித பதிலும் அளிக்காமல் எழுந்து சென்றார் பாட்டி.


Advertisement

விதார்த் அங்கு வந்து, “பாட்டி ஜோகன பாத்துட்டு வாரேன். பாரு பாவம். அவளுக்கு இப்ப யாருமில்லை” என்று அனுமதி கேட்டான்.

Advertisement

“உம் பொண்டாட்டி சரின்னு சொன்னா போக வேண்டியது தான? நான் வேண்டாம்னு சொன்னா இருந்துருவியா? எப்படியும் நான் சொல்றத யாரும் கேக்கப் போறதில்லை. அப்புறம் எதுக்கு கேக்கணும்?” பாட்டி விறுவிறுவென நடந்தார்.

Advertisement

இவர்கள் பேச்சு உதய்கிருஷ்ணாவிற்கும் கேட்டது. பாட்டி தன்னை தான் சொல்கிறார் என்று அவனுக்கும் புரிந்தது.

Advertisement

பாட்டி அண்ணா மாதிரி நானில்லை. கேட்க வேண்டியதை கேட்பேன். சாயாவ தனியா விட்டு போக தான் யோசனையா இருக்கு தயங்கி, பாத்துக்கிறீங்களா பாட்டி..???” அவர் கரம் பற்றினான்.
எம் பேத்திய பாத்துக்க நீ இப்படி தயங்க தேவையில்லை. அப்புறம் பொண்டாட்டிட்ட எப்படி அக்கறையா இருக்கணும்னு உன்னோட அண்ணனுக்கு சொல்லிக் குடு என சாயாலி அறைக்கு சென்றார் பாட்டி.
“ஆமா நான் சொல்லி தான் கேக்கப் போறான். போங்க பாட்டி..” முணங்கியவாறு உதய்கிருஷ்ணா அறையை பார்த்து கிளம்பினான்.
மற்றவன் எப்படி என்னுடைய ஹனியை தொடலாம் என உதய்கிருஷ்ணா கணவனாக கோபமானான். ஆனால் இப்பொழுது கோபப்படும் நேரமில்லை என உணர்ந்து இன்பவேணியை நெருங்கி படுத்து அவள் தலை கோதினான்.
மெதுவாக விழித்து அவன் கையை தட்டி விட்டு பதறி நகர்ந்தாள் அவள்.
“நகராத! கீழ விழப் போற ஹனி…” உதய்கிருஷ்ணா பதட்டமாக…
மனஉளைச்சலிலும் பயத்திலும் இருந்த இன்பவேணி உதய்கிருஷ்ணாவின் ஹனி என்ற அழைப்பில் நகர்வதை நிறுத்த பின்னோக்கி விழ, எட்டி அவளை விழாமல் பிடித்து இழுத்தான் உதய்கிருஷ்ணா.
அவனை தள்ளி விட்டு, “பக்கத்துல வராத….” தலையணையை அவன் மீது தூக்கி போட்டு உடலை குறுக்கி அழுதாள். இச்செய்கையை எதிர்பாராத உதய்கிருஷ்ணா திகைத்தான்.
இன்பவேணி அழுவதை பார்த்து அவளை நெருங்க, அவளது கீழ்க்கையில் இரத்தம் இருப்பதை கண்டு அவளிடம் வந்தான்.
“வராத வராத… எங்கிட்ட வந்த கொன்றுவேன்..போ போ…” அழுதாள்.
கையில அடிபட்டிருக்கு ஹனி. மருந்து போட்டுக்கலாம்..
அவன் பேசுவதை காதில் வாங்காமல், வராத வராத…. அழுதாள்.
உதய்கிருஷ்ணாவிற்கு ஒரு மாதிரி ஆனது. கீழே வந்து சித்ரலேகாவை அழைத்து,
அக்கா, அவ என்னை பக்கத்துலவே விட மாட்டேங்கிறா. அடிபட்டிருக்கு. அவ உடம்ப செக் பண்ணுங்க. காயம் பெருசா இருந்தா சொல்லுங்க. ஹாஸ்பிட்டல் போகலாம்..
சித்ரலேகா அவனுக்கு பதிலளிக்காமல் வேகமாக இன்பவேணி அறைக்கு செல்ல அவள் அழுது கொண்டிருந்தாள்.
வேணி ஒண்ணுமில்ல எதுக்கு அழுற?
“அண்ணீ, அவன் என்ன தொட்டுட்டான். எனக்கு அருவருப்பா இருக்கு. உடம்ப எறிக்கணும் போல இருக்கு” சித்ரலேகாவை கட்டி அழுதாள்.
அதிர்ச்சியுடன், “எறிக்கணுமா? வேணி….நீ இப்ப இன்பவேணி மட்டுமல்ல ஜான்வியோட அம்மா. உனக்கு ஏதாவது ஆனா பாப்பா ரொம்ப கஷ்டப்படுவா..நீ பேசாம போறத பாத்து அழுதுட்டா. நான் அவளை சமாதானப்படுத்தி தூங்க வச்சிருக்கேன்..
அழுதாளா? ஆனா..அவன்..
“வேணி நாம சேத்துல விழுந்துட்டா உடம்ப கழுவிட்டு நம்ம வேலைய பாக்க போயிடுவோம். அதே தான்…அவன் சேரு..சேத்த கழுவிட்டு ஜானுவோட நிம்மதியா படுத்து தூங்கு. இனிமே உன்ன நாங்க யாரும் தனியே விட மாட்டோம். எவன் உம் பக்கத்துல வர்றான்னு நானும் பாக்குறேன்” வீர வசனம் பேசி இன்பவேணியை குளிக்க அழைத்து சென்றாள்.
பின் காயமான இடத்தை துடைத்து மருந்திட்டு, “நீ தூங்கு பாப்பாவ உங்கிட்ட விட்டுட்டு போறேன். காலையில அவன பாத்துக்கலாம்” என பேசி இன்பவேணியை தூங்க வைத்து கீழே வந்தாள்.
உதய்கிருஷ்ணா விரைந்து சித்ரலேகாவை நெருங்கினான்.
அக்கா..அவ..
நான் ஆன்ட்டிய பாத்துட்டு வாரேன்..
ஏன்? என்னாச்சு?? அவளுக்கு ரொம்ப காயமா இருக்கா. வேற பிரச்சனையில்லையே! ஒரு மாதிரி பயத்துல இருந்தாக்கா…
அதான் நான் ஆன்ட்டிட்ட பேசிட்டு வாரேன்.
நானும் வாரேன்…
“வந்து என்னத்த கிழிக்க போற? நம்ம குடும்பத்தால அவ குடும்பமே அவமானப் பட்டுருக்காங்க. அதே அவமானத்தோட இந்த இடத்துல அவங்களால எப்படி இருக்க முடியும்னு நினைக்கிற? எல்லாத்தையும் விட பெத்த பொண்ண அவமானப்படுத்தி அவதூறா பேசி அடிச்சி காயப்படுத்தி இருக்காங்க..அந்த பெத்தவங்க வலி எப்படி இருக்கும்? வேணி இடத்துல ஜானு இருந்தா அவள அதே இடத்துல இருக்க வச்சிருப்பீயா? பாவம்டா அவங்க….பொண்ணு வாழ்க்கைய பத்தி எவ்வளவு கனவு வச்சிருந்திருப்பாங்க???? எனக்கு உன்னோட கஷ்டம் புரியுது. ஆனா நீ இப்ப வரைக்கும் வேணி விட்டு போனத பத்தி தான் யோசிட்டு இருக்க? அவ போனதால தான் பிரியங்காவுடனான வாழ்க்கைன்னு நினைக்கிற..உன்ன பத்தி யோசிக்காத குடும்பத்துக்காக இவ்வளவு வலிய நீயே தான் ஏத்துக்கிட்ட. ஆனா அதுக்கு காரணம் வேணின்னு உன்னை நீயே ஏமாத்தி அவள கஷ்டப்படுத்திட்டு இருக்க…
உனக்கு பிரியங்காவுடனான மோசமனா வாழ்க்கை நேரத்தில் அங்க வேணி என்ன செஞ்சான்னு உனக்கு தெரியுமா? ஆம்பளைங்க இல்லாத வீட்டுல்ல இருக்கிற பொண்ணுங்களுக்கு என்னென்ன பிரச்சனையெல்லாம் வரும்னு தெரியுமா?
“அக்கா…” பதட்டம் நிறைந்த குரலில் அழைத்தான்.
என்ன? இப்பவும் அவளை தான் குற்றம் சாட்டப் போறீயா?
என்ன சொல்றீங்க? அவளும் கஷ்டப்பட்டாளா? அவ பிரச்சனை கௌதம் தான?
ம்ம்! வா…நீயே உம் மாமியார்ட கேளு. வேணி எந்த நிலையில இருக்கா தெரியுமா? அப்படி அழுதா. ரொம்ப பயப்படுறா..நம்ம ஜானுவ வச்சு தான் அவள தூங்க வச்சிட்டு வந்திருக்கேன்.
“ஒரு நிமிசம் அக்கா” உதய்கிருஷ்ணா மகளை தூக்கி ராமநாதன் அறையை தட்டினான்.
எதற்காகவும் தன்னறைக்கு வராத மகன் வரவும், வா உதய். இன்பாவுக்கு ஒண்ணுமில்லையே! வினவினார்.
உள்நுழைந்து மகளை படுக்கையில் போட்டு, “பாப்பாவ பாத்துக்கோங்க” அவருக்கு பதிலளிக்காமல் சித்ரலேகாவுடன் சென்றான்.
“எங்க போறாங்க?” என அவர்களையும் பேத்தியையும் பார்த்தவர் ஜான்வி அருகே சென்று அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளருகே அமர்ந்து கொண்டார்.
கோசலை வீட்டிற்கு இருவரும் வந்து கேட்டை திறக்க, கயிற்று கட்டிலில் படுத்திருந்த மானவ் அமர்ந்து அவர்களை பார்த்தான்.
ஆன்ட்டி எங்க? சித்ரலேகா கேட்க
எதுக்கு?
பேசணும். அவங்க இப்ப வரை அழுதுட்டு இப்ப தான் தூங்குறாங்க…
தூங்குறாங்களா? நான் பேசணும்..
என்ன பேசணும்??? உதய்கிருஷ்ணாவை பார்த்தான்..
“அவங்க பத்தி எல்லாமே தெரியுமா?” புருவம் உயர்த்தி மானவ்விடம் கேட்டாள்.
தெரியும்..
என்ன தெரியும் சொல்லு?
என்ன சொல்லணும்?
“இதுக்கு முன்னாடி யாரும் வேணிய அப்யூஸ் பண்ணி இருக்காங்களா?” சினமுடன் கேட்டாள்.
மானவ் முகம் வாட மௌனம் காத்தான்.
“சொல்லு? அவள இதுக்கு முன்னாடி யாரும்…” என பேச முடியாமல் தொண்டை அடைக்க உதய்கிருஷ்ணா கலக்கமுடன், “இல்லைன்னு சொல்லு” என மனதில் எண்ணியவாறு கேட்டான்.
ஆமா..
உதய்கிருஷ்ணா இடிந்த மனதுடன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
விரக்தியுடன் உதய்கிருஷ்ணா முன் வந்து, நீ வேணிக்கு ஒர்த்தே இல்ல அவ்வளவு சொன்னேன். அவ எங்க கேட்டா? கேக்கவேயில்ல. இதுல மத்தவனோட சேத்து பேசுற????
என்ன சொல்றீங்க? சித்ரலேகா குரல் கம்ம,
ஆமா உங்க தொம்பி இப்ப அடிப்பட்டு சீரியசா இருக்கானே அவனோட இன்பவேணிய சேத்து வச்சு பேசி இருக்கான். ஏன் என்னோடு கூட தான்..
என்னோட அக்காவ நான் டார்லிங்ன்னு தான் கூப்பிடுவேன். இன்பவேணிய தங்கையா நினைச்சி தான் டார்லிங்குன்னு கூப்பிட்டேன். உனக்கு எதையும் சரியா யோசிக்கவே தெரியாதா? உதய்கிருஷ்ணா சட்டையை பிடித்தான் மானவ்.
நான் ரௌடி குடும்பத்து பையன் தான். ஆனா இனி அந்த கும்பல பத்தி யாரும் கவலைப்படாதீங்க. எவனும் சாயாவையோ எங்களையோ தேடி வர மாட்டானுக…எல்லாரையும் கூண்டோட போட்டு தள்ளீட்டு தான் வந்துருக்கேன்..
என்ன? சித்ரலேகா அதிர,
ஆமா, எங்க குடும்பத்துல நாங்க பிறந்த சாபம் தான் எங்கள விரட்டுச்சு. நான் எங்க அப்பாவோட எதிரி ஆட்களை கொல்லலைன்னா அவனுக எங்க எல்லாரையும் கொன்றுப்பானுக..
இன்பவேணி எத்தனை தடவை பாதிக்கப்பட்ருக்கான்னு தெரியுமா உனக்கு? உதய்கிருஷ்ணா சட்டையை பிடித்தவன்,
விசுவமூர்த்தி அங்கிள் இறந்த பின் உன்னை பீச்ல அம்மாவும் அவளும் பாத்துருக்காங்க. நீயும் விதார்த்தும் அந்த பிரியங்காவோட சேந்து சுத்திட்டு இருந்திருக்கீங்க. அவ மனநிலை எப்படி இருந்திருக்கும்?
இல்ல…நானும் விதுவும் அவளுக்கு உதவ தான் வந்தோம்.
அவளுக்கு உதவ வந்தீங்க…நல்லா கேளு. மும்பை ட்ரையின்ல தான் நானும் சாயாவும் இருவரையும் பார்த்தோம். அந்த ட்ரெயின்ல பெருசா கூட்டமில்லை. அவங்க கையில இருந்த பொருள திருட்டு பசங்க தூக்கிட்டு போயிட்டானுக. லோக்கல் ட்ரையின்ல தான் பாத்தோம். என்ன செய்றதுன்னு தெரியாம அழுதுட்டு இருந்தா. அம்மா கலங்கி போய் இருந்தாங்க. தெரியாத இடத்துக்கு வந்து மாட்டிக்கிட்டதா அவள திட்டுனாங்க.
நாங்க குஜராத் நாளைக்கு போறோம்னு தான் அவங்கள எங்களோட அழைச்சிட்டு போனோம். முன்னாடி என்னோட அம்மாட்ட சொல்ல அவங்க வீடு பாத்து வச்சிருந்தாங்க. அவங்கள அந்த வீட்ல விட்டு தேவையான செஞ்சு குடுத்திட்டு தான் எங்க வீட்டுக்கு போனோம். ஆனா எங்க குடும்பமே இரத்த வெள்ளத்தில் மிதந்தாங்க. எனக்கு கண்ணு முண்ணு தெரியாத கோபம். அனீஷ் இருப்பதை பார்த்து அவன தூக்கிட்டு மேடமோட வெளிய வரும் போது எங்கள மறிச்சு நின்னாங்க…அவங்கள சமாளிச்சு மேடமோட தப்பிக்க பாடாகி விட்டது.
வேறு வழியில்லாமல் இன்பவேணிய தங்க வச்ச வீட்ல மேடமையும் அனீஷையும் விட்டு தனியா போனேன். என்னை சூட் பண்ணிட்டாங்க. டாக்டர மிரட்டி தான் சிகிச்சை எடுத்துட்டு வந்தேன். ஆனா இவனுக அவங்கள பாத்தா கொல்லாம விட மாட்டாங்கன்னு புரிஞ்சு தான் நான் துப்பாக்கியை கையில் எடுத்தேன். எங்க ஆளுங்கள பசங்க பெரியவங்க அங்கங்க எப்படியோ தப்பிச்சிருக்காங்கன்னு அவங்கள கூட்டு சேர்த்தேன். அவங்க மூலமா எங்க எதிரி குடும்பம் மொத்தத்தையும் அழிக்க திட்டம் போட்டு செயல்பட்டோம். நல்லா தான் போய்ட்டு இருந்தது.
அப்புறம் எப்படியோ அவனுக மேடம் அனீஷ் இன்பவேணி அம்மா எல்லாரையும் பிடிச்சு மிரட்டுனானுக..அதுல ஒருத்தன் வேணி கையை இறுக்கியவன் அவனை தொட விடாமல் அவன அவங்க எல்லார் முன்னாடியும் வெட்டிட்டேன். அனீஷ் ரொம்ப பயந்துட்டான். ரெண்டு பக்கமும் சண்டை போட்டோம்.
இவங்க நாலு பேரையும் என்னோட படித்த நண்பன் உதவியுடன் தப்பிக்க வைச்சேன். அவங்கள யார் கண்ணுக்கும் காட்டாமல் வச்சிருந்தேன். இதுக்கு மேல அவங்க குஜராத்ல இருக்கிறது ஆபத்துன்னு என்னோட கெர்ல் ப்ரெண்டு உதவியோட மும்பைல மக்களோட மக்களா சேர்த்து விட்டேன். அவங்க கவனம் முழுவதும் என் மேல இருப்பது போல பாத்துக்கிட்டேன்.
நான் குஜராத்ல எங்கள கொல்ல துடிக்கிறவனுக அழிக்கும் வேலையை தொடங்கினேன். இன்பவேணி கம்பெனிக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சா. அங்கயும் ரொம்ப தொந்தரவு தான்..ஒரு வருசத்துல மேனஜர் போஸ்டிங் கிடைச்சது. வேலை பார்த்தா..எல்லாரும் அவ மேல கை வைக்க பொறுத்துட்டு தான் இருந்தா. அவள் எதிர்பாராத அந்த கம்பெனி முதலாளியே அவட்ட எல்லை மீறினான். அவன்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள ரொம்ப கஷ்டப்பட்டு அவன குத்துயிரும் கொல உயிராக்கி வெளிய வந்தா. அவன் விபத்துன்னு சொல்லி ஹாஸ்பிட்டல்ல சேர்ந்துட்டான். அவனும் அவள தேட ஆரம்பிக்க, வேற இடம் பார்த்தனர்.
நகையை வித்து தனியா கம்பெனி தொடங்கினா..அப்புறம் தான் இந்த கௌதம் வந்திருக்கான். அவனும் சும்மா இல்ல. அவள் முதலீட்டுக்காக, கிளைண்டுக்காக என ஆட்களிடம் பேச செல்ல, அவன் ஆட்களை வைத்து அவளிடம் தவறாக நடந்து கொள்ள செல்ல, விழிகள் சிவந்தது உதய்கிருஷ்ணாவிற்கு.
அவளால சமாளிக்க முடியல. அவளோட கற்பையும் இழந்தா..
சித்ரலேகா வழியும் கண்ணீரை துடைக்க, உதய்கிருஷ்ணா கனலுடன் மானவ் சட்டையை பிடித்தான்.
“டேய் அவர விடுடா…” சித்ரலேகா உதய்கிருஷ்ணாவை தடுத்தாள்.
அம்மாவும் வேணியும் விசம் குடிக்க, சாயா தான் அவங்கள ஹாஸ்பிட்டல்ல சேத்தாங்க..இருவரும் பிழைத்து வந்தனர். மறுநாளே வேணி ஆபிஸ் சென்றாள். அப்பொழுது தான் பயந்து மேடம் என்னை அழைத்தாங்க.
வந்து பேசினேன். அவங்க கேட்கவேயில்லை. நான் செல்லும் போது அனீஷூம் என்னுடன் வந்து விட்டான்.
உன்னை குற்றவுணர்ச்சிக்குள்ள தள்ளணும்னு தான் இன்னும் சிலரால் காயப்பட்டு இந்த இடத்துக்கு வேணி வந்தா. ஆனா நீ எதையும் கண்டுக்கல. அவங்களுக்கு கோபம். ஆனாலும் உன் மீதுள்ள காதல். இரு உணர்வுக்குள்ளும் சிக்கி கடைசி உன்னையே கல்யாணம் பண்ணிக்கணுன்னு முடிவெடுத்திருக்காங்க.
ஆனா அம்மா எதுக்கு உனக்கு கல்யாணம் பண்ணி குடுத்தாங்க தெரியுமா?
என்ன? ஒருவித பயத்துடன் சித்ரலேகா கேட்க,
இவங்க வீட்ல இருந்தா பாதுகாப்பா இருப்பான்னு தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க. இவன் மேல நம்பிக்கை வேற…ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவன் மாறி தன்னோட பொண்ண நல்லா பாத்துப்பான்னு. பெத்தவங்க வேற என்ன எதிர்பாக்க போறாங்க???? என்ன அவங்க நம்பிக்கை இப்ப பொய்யாகிடுச்சு…கோபமாக அமர்ந்தான் மானவ்.
உதய்கிருஷ்ணா இதயம் நொருங்கியது.
“எல்லாம் என்னோட தப்பு தான்…” தலையில் கை வைத்தான் கண்ணீருடன். கத்தி அழ வேண்டும் போல தோன்றியது அவனுக்கு..அவனையே இருவரும் பார்த்துக் கொண்டிருக்க, சித்ரலேகா உதய்கிருஷ்ணா தோளில் கை வைத்தார்.
தப்பு பண்ணீட்டேன்கா.. என்னோட கஷ்டத்தை விட அதிகமாக பட்டிருக்காக்கா..நான் சுயநலவாதியா இருந்துட்டேன். அவ ஜோகன்ட சொன்ன மாதிரி நான் அவள விடாம தேடி இருந்தா கண்டு பிடிச்சிருப்பேன். இது எதுவும் நடந்திருக்காது. தன் மீதே உதய்கிருஷ்ணா குற்றம் சுமத்திக் கொண்டான்.
அதான பாத்தேன். இப்படி உன்னையே உன்ன நீ குத்தம் சொல்லீட்டா எல்லாம் சரியாகுமா? கடந்த காலத்தை விடுத்து உன் மீதான காதலில் மட்டுமே உனக்கு பிடிக்கலைன்னாலும் பரவாயில்லைன்னு கல்யாணம் பண்ணீட்டா வேணி. நீயும் அதே மாதிரி உங்க வாழ்க்கையில நடந்த தவற்றை மறந்து நிகழ்காலத்தை ஒழுங்குபடுத்தி வாழுங்க அறிவுறுத்தினான் மானவ்.
கொலைகாரன் என்பதையும் தாண்டி அவனின் பாசிடிவ்வான எண்ணங்கள் சித்ரலேகா மனதை தாக்கியது. அவனை பார்த்துக் கொண்டே உதய்கிருஷ்ணாவை அழைத்து சென்று விட்டாள்.
சித்ரலேகா அவளறைக்கு உதய்கிருஷ்ணாவை அழைத்து சில அறிவுரைகள் வழங்கி அவனறைக்கு அனுப்பி வைத்தாள். அவன் கவனித்தானோ என்னமோ என வருத்தமுடன் துயிலானாள்.
ரூமுக்கு வந்த உதய்கிருஷ்ணா இன்பவேணியே பார்த்தவாறு நின்றிருந்தான். அவள் திரும்பி படுக்கவும் தன் எண்ணத்திலிருந்து கலைந்து, அவளருகே அமர்ந்து அவள் நெற்றியில் கை வைத்தான். சாதாரண சூடு தான்..அவன் உள்ளம் தான் தகித்தது. இவ்வளவு துயரங்கள் கடந்து இருக்கிறாயா? நான் உன்னை கண்டறிய இன்னும் எபர்ட் போட்டிருக்கலாம்..
ஆபிஸ் அறைக்கு சென்று யாருமறியாமல் கத்தி கதறி துடித்தான். என்ன செய்து விட்டேன் என்னவளுக்காக? எவ்வளவு துடிச்சிருப்பா? அய்யோ…யோ…யோ…!!! தலையை பிடித்து கத்தினான்.
பின் இன்பவேணியின் தற்போதைய நிலை எண்ணி முகத்தை அழுந்த துடைத்து அவ்வறை விட்டு வெளி வந்து குளியலறை புகுந்து இன்பவேணியை பார்த்தவாறு படுத்துக் கொண்டான்…தூக்கம் தூர சென்றது
                “வானம் தான் வீழ்ந்தாலும்
                 யார் உன்னை பிரிந்தாலும்
              உனக்காக எப்போதும் நானிருப்பேன்”
ஜோகனை சந்தித்து வந்த விதார்த்திற்கு அவன் எண்ணம் முழுக்க இன்பவேணியவே சுற்றி இருந்தது. அவனுக்காக காத்திருந்து உறங்கி இருந்த மனைவியை பார்த்தான். அவளை அணைத்து படுத்துக் கொண்டான்..
காலை எழுந்த சாயாலி விதார்த்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தான்.
மாமா..எழுந்திருங்க…
ஓரக்கண்ணால் அவளை கண்டு மீண்டும் விதார்த் விட்டத்தை வெறிக்க, அவனை உலுக்கினாள்.
“இதுக்கு முன்னாடி என்ன நடந்து சாயா? உனக்கு தெரிஞ்சத சொல்லு?” விதார்த் அசையாது அவளை பார்த்தான்.
கடந்த காலம் பத்தி எதுக்கு மாமா?
“எனக்கு தெரியணும்…” பிடிவாதமாக குரல் உயர்த்தினான். மானவ், உதய் சித்ராவிடம் கூறியதை சாயாலி கூறினாள்.
தப்பு பண்ணீட்டேன் சாயா…நானாவது இன்னுவ தேடி வந்திருக்கணும்..
“மாமா ப்ளீஸ்…அதெல்லாம் விடுங்க. எனக்கு அக்கா மாமாவ கல்யாணம் பண்ணி தப்பு செஞ்ச மாதிரி இருக்கு. அப்ப தான் பாதுகாப்புக்கு யாருமில்லை. ஆனா இங்க இத்தன பேர் இருந்தும் அக்காவ விட்டுட்டோம்” வருந்தினாள் சாயாலி.
இல்ல சாயா, உனக்கு அண்ணன முழுசா தெரியல. அண்ணாவால இத கண்டிப்பா தாங்க முடியாது. இருவரும் காதலிக்கும் போது கூட சிறு எல்லை மீறல் கூட இருந்ததில்லை. இன்று அதுவும் இன்னுவ திருமணம் செய்த பின் வேறொருவன் அவளிடம் தவறாக நடந்து கொள்ள எண்ணிதை கண்டிப்பா தாங்க மாட்டான். அண்ணா இனி இன்னு மேல கவனம் செலுத்துவான். முன் போல அவளை அப்படியே விட மாட்டான்…
பாக்கலாம் மாமா. ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை..
மாறுவான். நீ குளிச்சிட்டு கீழ போ. நானும் வாரேன்..என விதார்த் சொல்ல சாயாலி குளியலறைக்குள் புகுந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!