Skip to content
Post Views: 1,932

அர்ஜுனன் சுபாவுக்கு குடுத்த பிறந்தநாள் பரிசை பார்த்து சுபா அதை அணைத்து கொண்டு சத்தமாக அழுதுவிட்டாள்…. அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்ட அர்ஜுனன் கண்களிலும் கண்ணீர் கோடுகள்….
Advertisement
“மாமா இது இது” என்று கூறி அதை தூக்கி காட்டியவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை…. அவன் எதுவும் பேசவில்லை அவளை அணைத்து கொண்டான்…
Advertisement
Advertisement
கொஞ்ச நேரம் அழுதவள் கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வந்தாள்… அதன் பின் அர்ஜுனன் “நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணு அம்மு….. இது நாளைக்கு உன் கழுத்துல இருக்கும்…” என்று அவள் கையில் வைத்து இருக்கும் தாலியை பார்த்து கூறினான்… அவள் எதுவும் கூறவில்லை அவனின் தோள் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்… அவனும் அவளுக்கு வாகாக அமர்ந்தவன் அவள் கையை பிடித்து கொண்டான்….
Advertisement
வெளியில் சென்றவர்கள் வரும் வரை இருவரின் நிலையும் மாறவில்லை…. சுபா நீண்ட நாள் கழித்து நிம்மதியாக உறங்கினாள்… அவள் அய்யனார்புரத்தில் இருந்து வந்த பின் இரவு சிறு சத்தம் கேட்டாலும் எழுந்து கொள்வாள்… ஆனால் இன்று தன்னவன் தன் அருகில் உள்ளான் என்ற தைரியத்தில் எந்த வித மன அலைச்சலும் இல்லாமல் ஆழ்ந்து உறங்கினாள்….
ஆனால் அருகில் உள்ளவனுக்கோ தலை கீழாக இருந்தது….. சுபா தான் இல்லாமல் அனுபவித்த மன வேதனைகளை தெரிந்து கொண்டு மிகவும் கவலையாக இருந்தது…. அது மட்டுமில்லாமல் ஆரவாச்சும் சுபாவுடன் இருந்தான்… ஆனால் நிரவி இருவரும் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளாள் என சசி மூலம் தெரிந்து கொண்டவன் மிகவும் வருந்தினான்…. இனிமேல் நிரவி குட்டியை கலங்க விட கூடாது என உறுதியாக நினைத்து கொண்டான்… ஆனால் இவன் மட்டும் நினைத்தால் போதுமா விதி என்று ஒன்று உள்ளதே அதுவும் நினைத்தால் தான் அவன் நினைப்பது நடக்கும் என அர்ஜுனனிடம் யார் சொல்வது…
வெளியில் சென்றவர்கள் வந்து கதவை தட்டியும் அந்த சத்தம் கேட்காமல் சுபா உறங்கி கொண்டு இருக்க அர்ஜுனன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்…. மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டு தான் அர்ஜுனன் சுயநினைவு வந்து சுபாவை அருகில் உள்ள தலையனையில் உறங்க வைத்து விட்டு கதவை திறந்தான்…
கதவை திறந்ததும் ரித்திகா ஓடி சென்று அர்ஜுனனை அணைத்து கொண்டாள்… நிரவி சசியுடன் இருந்தவள் அர்ஜுனனிடம் ஓடி செல்ல பார்க்க அதற்குள் ரித்திகா சென்றதும் மீண்டும் சசியை தூக்க சொல்லி அவனிடம் சென்றுவிட்டாள்… ஆனால் நிரவி குட்டியின் கண்களோ கலங்கி விட்டு இருந்தது….
சசி அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன் யார் கவனத்தையும் பெறாமல் மீண்டும் வெளியேறிவிட்டான்…. ஆனால் மித்ராவும் சிவாவும் அவர்களை பார்த்துவிட்டனர்….
சிவனேஸ் சசியை நோக்கி செல்ல மித்ரா வருத்தமாக பார்த்தாள் நிரவி குட்டியை….
பெண்கள் சமையால் வேலை செய்ய ஆரம்பிக்க ஆண்கள் அனைவரும் அர்ஜுனனிடம் பேச ஆரம்பித்து இருந்தனர்…. சசி வெளியில் சென்றவன் வரவேவில்லை…. கர்ணன் போன் பண்ணி அழைத்தாலும் நிரவியுடன் வெளியில் உள்ளேன்… சிவாவும் இங்கு தான் உள்ளான் நாங்கள் வர நேரமாகும் என்று கூறிவிட்டான்….
இங்கு மற்றவர்களிடம் அர்ஜுனன் நாளை சுபாவுக்கு மீண்டும் தாலி கட்டுவதை பற்றி கூறினான்… அனைவருக்கும் சந்தோசம்… அனைவரும் சரி என்று கூறிவிட்டனர்…
சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்து எழுந்த சுபா அர்ஜுனன் அருகில் இல்லாததை பார்த்து மீண்டும் விட்டு சென்று விட்டானோ என்று பயந்து “மாமா மாமா” என சத்தமாக புலம்ப ஆரம்பித்துவிட்டாள்…
அவள் கத்துவதை கேட்ட அனைவரும் வேகமாக அவளிடம் விரைந்தனர்…. அர்ஜுனன் அவளை அணைத்து “அம்மு அம்மு என்னை பாரு… நான் இங்க தான் இருக்கேன்… கண்ணை திறந்து பாரு” என்று கன்னத்தை தட்டினான் …
அவன் குரலை கேட்டு கண்ணை திறந்தவள் “மாமா என்னை விட்டு எங்கயும் போகாத…. என்கூடவே இரு…” என்று அவன் கையை இறுக்கமாக பிடித்து கொண்டாள்….
அவளின் இந்த பயம் அனைவருக்கும் பயமாக இருந்தது… இருந்தும் சரி செய்துகொள்ளலாம் என நினைத்து தங்கள் வருத்தத்தை மறைத்து கொண்டனர்….
அனைவரும் இரவு உணவு உண்ட பின் தான் சசி இருவரையும் அழைத்து வந்தான்…. பிள்ளைகள் அனைவருக்கும் நாளை மறுநாள் பள்ளி இருப்பதால் ஊருக்கு செல்வதை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்…. ஆரவ் இங்கு கேரளாவில் படிப்பதால் அவனை தனியாக விட முடியாது… ரித்திகா மதுரையில் படிப்பதால் அவளையும் தனியாக விட முடியாது… என்ன செய்வது என்றே தெரியவில்லை….
ஆரவ் தான் அவன் இங்கு ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக கூறிவிட்டான்… அதனால் அர்ஜுனன் சுபா ரித்திகா மூவரும் இரண்டு நாள் இருந்துவிட்டு ஆரவை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு மதுரை செல்வதாக பேசி முடிவு எடுத்து இருந்தனர்…. இவர்களின் இந்த முடிவில் நிரவி எங்கும் வரவில்லை….
அதை உணரும் நிலையில் அங்கு யாருமில்லை…. சசி தான் கோவத்தை இழுத்து பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தான்….
அனைவரும் உறங்க ஆரம்பிக்க ஆரவ் அர்ஜுனனை அணைத்து கொண்டு உறங்க ஆரம்பிக்க தனியாக அமர்ந்து இருந்த ரித்திகாவை சுபா தன்னுடன் அழைத்து கொண்டாள்… நிரவி குட்டி பாவமாக அதை பார்த்து கொண்டு இருந்தாள்… அப்போது தான் மற்றவர்கள் நிரவி குட்டியை பார்த்தனர்….
நிரவி குட்டி அழுது கொண்டே சசியின் தோளில் உறங்கிவிட்டாள்… அர்ஜுனனும் சுபாவும் அவளை காணாமல் உறங்குவது கஷ்டமாக தான் இருந்தது… அவளை மறந்தது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது…. நிரவி குட்டியின் ஏக்கத்தை பார்த்தவர்கள் தானே இவர்கள்… எதுவும் பேசாமல் அமர்ந்த இடத்திலேயே படுத்து உறங்கிவிட்டனர்….
சசி கோவமானவன் மித்ராவை அனைவரும் உறங்கியவுடன் தனியாக வர சொன்னவன் அவளிடம் மட்டும் கூறிவிட்டு அய்யனார்புரம் கிளம்பிவிட்டான்… அவன் மனதில் இருந்ததை கோவமாக கூறியவன் வேறு எதுவும் கூறாமல் கிளம்பிவிட்டான்…. சிவனேஸும் அவனுடனே கிளம்பிவிட்டான்… மித்ராவிடம் காலையில் தான் கூற வேண்டும் என கூறிவிட்டு சென்றுவிட்டான்….
மித்ரா தான் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு அமர்ந்துவிட்டாள்…. அவளுக்கு உறக்கமே வரவில்லை… நடுவில் தண்ணீர் குடிக்க எழுந்த கண்மணி தூங்காமல் அமர்ந்து கொண்டு இருந்த மித்ராவை பார்த்து “ஹே மித்து இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க” என்று தூக்க கலக்கத்தில் கேட்டாள்…
மற்றவர்கள் தூக்கத்தை கெடுக்காமல் கண்மணியை தனியாக அழைத்த மித்ரா அவளிடம் “கண்மணி சசி நிரவியை கூட்டிட்டு ஊருக்கு போயிட்டான்…. இங்க யாருமே நிரவியை பத்தி யோசிக்கலனு அவனுக்கு கோவம் அதிகம் இருக்கு… அது மட்டுமில்லாம இப்போ ஆரவை இங்க ஹாஸ்டல்ல சேர்த்துட்டு அத்தானும் சுபாவும் மதுரை போகனும்னு முடிவு பண்ணி இருக்காங்கல அது சசிக்கு சுத்தமா பிடிக்கல…. நிரவி பத்தி யாரும் யோசிக்கல… அவளும் இத்தனை நாள் அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லாம தானு இருந்தா… ஆனா அவ கூட யாரும் இருக்குற மாதிரி பேசவே இல்ல… அது மட்டும் இல்லாம இப்போ தூங்குற அப்ப ஆரவ் அத்தான் கூட தூங்கிட்டான்…. சுபா அந்த பொண்ணு கூட தூங்கிட்டா… ஆனா நிரவியை அவங்க யோசிக்கவே இல்லை… ஏற்கனவே அவங்க மேல கோவமா இருந்த சசி இன்னும் கோவப்பட்டு இப்போ ஊருக்கு போயிட்டாரு…” என்று கவலையாக கூறினாள்…
“மித்து இப்போ என்ன பண்றது… ஆனா இங்க அண்ணாவும் சுபாவும் பண்ணது ரொம்ப தப்பு…. நிரவியை பத்தி யோசிக்கவே இல்லையே… சசி பண்ணது சரி தான்… ஆனா அவன் நாளைக்கு நேரா கேட்டுட்டு போய் இருக்கலாம்… இப்போ நாளைக்கு அவங்களுக்கு திரும்பியும் கல்யாண ஏற்பாடும் பண்ணியாச்சு… இதை கேட்டா என்ன ஆகுமோ தெரியல…” என்று கவலையாக கூறிக்கொண்டு இருக்கும் போதே முகுந்தன் அங்கு வந்து இருந்தான்….
“இந்த நேரத்துக்கு ரெண்டு பேரும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க….” என்று வந்து கேட்டான்…
கண்மணி அனைத்தையும் கூறிவிட்டாள்…. முகுந்தன் மித்ராவிடம் திரும்பி “அவன் கிளம்புற அப்பயே என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல ம்மா…” என்று கேட்டான்…
“இல்ல ண்ணா… கண்டிப்பா அவரை தடுத்து இருந்தா பிரச்சனையே ஆகி இருக்கும்… வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… ஆனா நிரவியை பத்தி கொஞ்சம் யோசிக்க சொல்லுங்க ண்ணா… சின்ன புள்ள தவிச்சு போயிடுற போறா…” என்று தவிப்பாக கூறினாள்…
அவனுக்குமே அந்த எண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது… ஆனால் ஒவ்வொரு முறையும் நிரவியை பற்றி அவர்களிடம் கூறிக்கொணடே இருக்க முடியாது இல்லையா…. அவர்களே கேட்கட்டும் என்று நினைத்து விட்டு இருவரிடமும் “நீங்க ரெண்டு பேரும் தூங்குங்க…. நான் சசி கிட்ட பேசிக்குறேன்…” என்று கூறிவிட்டு சசிக்கு அழைப்பு விடுத்தான்…
முதல் அழைப்பை எடுக்காதவன் இரண்டாவது அழைப்பை எடுத்தான்… “சசி எங்க இருக்க…” என்று எடுத்தவுடன் முகுந்தன் அதை தான் கேட்டான்… அந்த பக்கம் அமைதியாகவே இருக்க மீண்டும் அழுத்தி கேட்டான்…
“ஊருக்கு போயிட்டு இருக்கேன் மாமா… ப்ளீஸ் எதுவும் கேட்காதீங்க… ரொம்ப கோவமா இருக்கேன்…. நானே நாளைக்கு கூப்பிடுறேன்… இன்னிக்கு எதுவும் கேட்காதீங்க…. மன்னிச்சுடுங்க மாமா” என்று கூறி வைத்துவிட்டான்..
முகுந்தனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை… அவனுக்கு உறக்கமும் வரவில்லை…. கண்மணி மித்ரா இருவருக்கும் உறக்கம் வரவில்லை… அடுத்த நாள் காலை எந்தவித ஆர்பாட்டமும் இன்றி விடிந்தது போல் தான் இருந்தது… ஆனால் பல பூகம்பங்களை அடக்கி கொண்டு விடிந்து இருந்தது….
error: Content is protected !!