Skip to content
Post Views: 1,670
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் -14
Advertisement
மூன்று பேரும் மும்பை ஹேர்போர்ட் வந்து சேர்ந்தனர்.
Advertisement
இவர்களை அழைத்து செல்ல அன்பு வரவில்லை.
Advertisement
அவனின் நண்பன் குரு ஹேர்போர்ட் வந்திருந்தான்.
குருவை ஏற்கனவே ஸ்ரீஜெயத்துக்கு தெரியும். ஒரு முறை அன்போடு விருதுநகர் பொங்கலுக்கு அவர்கள் இல்லம் வந்திருந்தான். ஆகாவே குருவை பார்த்து அடையாளம் கண்டு பிடித்த ஸ்ரீஜெயம் அவனின் அருகில் வந்தார்.
Advertisement
குருவும் இவர்கள் அருகில் வந்து “வாங்க, வாங்க” என்றவன். ஸ்ரீஜெயத்தை பார்த்து ” வாங்க சார்” என்றவன் நளினியை “வாங்கம்மா, வெல்கம் மும்பை சிஸ்டர்” என்று பார்கவியை கூப்பிட.
ஒரு சிறு புன்னகை செய்து தலையாட்டினாள் பார்கவி.
“எங்கே.. அன்பு வரலயா” என்றார் ஸ்ரீஜெயம்.
“அவனுக்கு ஒரு முக்கியமான வேலை, ஒரு புது ஆர்டர் அதுக்காக யு, எஸ், ஏ போயிருக்கான், வர ஒரு வாரம் ஆகும்”என்றான் குரு..
“ஏன் எங்க கிட்ட சொல்லல்ல. சொல்லி இருந்தா நாங்க லேட்டா ஒரு வாரம் கழிச்சி வந்து இருக்கலாம்” என்று புலம்பியபடியே நளினியும், ஸ்ரீஜெயமும் வர..
“அம்மா திடிர்னு அன்பு கிளம்ப வேண்டியதா போச்சு நான் தான் போக வேண்டியது. என் பொண்ணுக்கு திடிர்னு உடம்பு முடியல, அதான் அன்பு போயிருக்கான் நீங்க வாங்க என்று மூன்று பேரையும் அழைத்துக்கொண்ட குரு. அன்பு வீட்டுக்கு வந்தான்.
அன்பு மும்பையில் ஒரு பெரிய பிளாட் வாங்கி இருந்தான்.
12 மாடி கொண்ட பிளாட் அது. அதில் 12 வது மாடி முழுவதும் அன்புக்கு மட்டும் உள்ள பிளாட்..
நீண்ட ஹால், ஐந்து, ஆறு படுக்கை அறைகள், நீண்ட ஓபன் கிச்சன், பூஜை அறை, பெரிய ஓய்வு அறை, மாடியில் ஒரு அறை அதன் பக்கத்தில் , புல் தரைஅமைத்து, ஸ்ம்மிங் பூல், பெரிய பூதோட்டம் என பார்க்க பிரமாண்டமாக இருந்தது அந்த பிளாட்.
ஸ்ரீஜெயத்துக்கு பிளாட்டை பார்த்ததும் ஆச்சரியபட்டார், “எப்போ இந்த பிளாட் வாங்கினான் குரு”..
“வாங்கி ஆறு மாதம் இருக்கும் சார், புது பிளாட்டுப்பா இப்போதான் கட்டி முடிச்சாங்க. இவன் 12 டாவது பிளாட் முழுக்க வாங்கி இருக்கான். மேலே உள்ள மாடியும் நமக்கு மட்டும் தான், யாரும் வர முடியாத, நம்ம வீட்டுக்குள்ள இருந்து படி போகுது”.
நளினி மருமகளை அழைத்துக்கொண்டு எல்லா அறையும் சுத்தி பார்த்தவர் “நல்லா இருக்குல்லடா” என்று மருமகளின் கேட்டார்,
“உம்” என்று தலையை மட்டும் ஆட்டினாள் பார்கவி.
“நான் வர்ரேன் சார்” என்ற குரு. அவன் போன் நம்பரை குடுத்து விட்டு கிளம்ப, வேற என்ன இருப்பாக யோசித்தவன்.
“வேலைக்கார அம்மா வந்து சமையல் பண்ணி வச்சிருவாங்க, நான் சாயங்காலம் வர்ரேன்” என்று கிளம்ப போனவன். பின்பு ஞாபகம் வந்தவனாக , “இது வீட்டோட கீ ” என்று ஒரு சிறிய லாக் பட்டன் போல் உள்ள குட்டி ரீமோட் போல உள்ளதை கொடுத்தவன், கதவை திறக்க மூட சொல்லி கொடுத்து, அன்புவின் கார் கீ, பைக் கீ எல்லாம் தந்து விட்டு சென்றான்..
நளினி மகனை திட்டி கொண்டு இருந்தார். “இவ்வளவு பெரிய வீட்டை வாங்கி இருக்கான். ஒன்னும் நம்ம கிட்ட சொல்லல்ல, இந்த பய, என்று மகனை திட்ட..
பார்கவி நளினி பேசுவதை கேட்டு அமைதியாகி இருந்தாள். அவன் இல்லாதது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அனைவரும் மும்பை கிளம்ப வேண்டும் என்று சொன்னதில் இருந்தே. இவனை வேற பார்க்கனுமே என்று இருந்தவளுக்கு, அன்பு இல்லாதது , ஒரு நிம்மதியை தர. கொஞ்சம் ப்பிரியாக வீட்டை சுத்தி பார்த்தவள்.
மனதில் ரசிகன்டா நீ ஒவ்வொன்னு அழகாய் இருக்க, அதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.
வீட்டின் பெல் சத்தம் கேட்க, பார்கவி தான் கதவை திறந்து பார்த்தாள்.
ஒரு 50 வயதுடைய ஒரு பெண் வந்து நிற்க.
அவறை பார்த்து “யாரு வேணும்” என்று ஆங்கிலத்தில் கேட்க.. அப்பெண் “நமஸ்தே ஜீ” என்றவள், இந்தியில் சமையல் பண்ண வந்தேன் என்க.
“ஓகே, வாங்க” என்று கிச்சன் அழைத்து சென்றாள்.. அப்பெண் ஸ்ரீஜெயத்திடமும், நளினியிடமும் வணக்கம் சொன்னவள் “என்ன சமைக்கனும்” என்று கேட்க.
அது மதியம் நேரம் என்பதால். ஒரு கொழம்பு, ஒரு பொரியல் வையுமா என்று கூற. “வெஜ்ஜா, நான்வெஜ்ஜா” என்று அப்பெண் ஹிந்தியில் கேட்க.
ஸ்ரீஜெயத்திற்க்கு, நளினிக்கும் புரிய வில்லை. பார்கவிக்கு ஹிந்தி தெரியும் என்பதால். “வெஜ்சே சமையல் பண்ணுங்க” என்றாள்.
நளினி “நம்மலே சமைப்போமா”, என்று பார்கவியிடம் கேட்க.
“பாக்கலாம் அத்தை எப்படி சமைக்குறாங்கன்னு என்றவள். நீங்க வாங்க என்று ஒரு அறைக்கு அழைத்து வந்தவள் “கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்க அத்தை. சமையல் முடிஞ்சதும் கூப்பிடுறேன்” என்றவள். கதவை சாத்திவிட்டு வர.
“உனக்கு வீடு பிடிச்சுருக்காடா” என்றார் ஸ்ரீஜெயம்.
“நல்லா இருக்கு பா” என்றாள்.
முதலில் பார்கவி ஸ்ரீஜெயத்தை அங்கிள் என்று தான் அழைத்தாள். ஆனால் ஸ்ரீஜெயம் அவளுக்காக ஒவ்வொன்று பார்த்து, பார்த்து செய்யும் செயலில் அவளே அப்பா என்று அழைத்திருந்தாள்.
ஸ்ரீஜெயத்துக்கு மஞ்சு மகள் அப்பா என்று அழைத்ததிலிருந்தே, உண்மையான அப்பாவாக மாறி இருந்தார்.
பார்கவி தன் தாய் மாமன் வீட்டுக்கு எதற்கு வந்தாலோ. அதே உண்மையான பாசம், அக்கரை, உரிமையெல்லாம் அன்பு வீட்டில் பார்கவிக்கு கிடைக்க, கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள்.
நளினி பாசமாக பார்கவியிடம் நடந்து கொள்ள. பார்கவிக்கு நளினி அவளிடம் காட்டும் பாசம் பிடித்தது.
நளினியின் கணவர்கூட தினமும் ஏதாவது திண்பண்டம் வாங்கி வந்து மருமகளிடம் கொடுப்பார், “சாப்பிட்டு பாருமா, உனக்கு பிடிக்கும்” என்பார். உணவு உண்ணும் போது கூட “இன்னும் கொஞ்சம் சாப்பிடுமா, நளினி பிள்ளைக்கு இன்னும் சாப்பாடு வை” என்று பாசமாக நடந்துக் கொள்வார்.
ஸ்ரீஜெயம் அதற்கு மேல், அவளுக்கு என்ன தேவை, என்ன வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்து கொடுப்பார்.
அன்பு மாமனுக்கு போன் போட.
ஸ்ரீ ஜெயம் பார்கவியை அழைத்தவர் அருகில் அமர சொல்லி விட்டு, போனை ஆன் பண்ணி ஸ்பிக்கரில் போட்டு “அன்பு” என்றார் மருமகனிடம்.
“மாம்ஸ் வந்துட்டீங்களா” என்றான்..
“உம் வந்துட்டோம், நீ ஏன் அன்பு சொல்லல்ல, வேலையிருக்குன்னு சொல்லி இருந்தா, நாங்க ஒரு வாரம் கழிச்சு வந்து இருப்போமே” என்றார்..
“பக்கத்துல அந்த பொண்ணு இருக்கா” என்றான்.
“எந்த பொண்ணு” என்றார் ஸ்ரீ ஜெயம்.
“அது”… என்றவன் “பார்கவி “..
என்று சொல்ல.
“இல்ல நான் தனியா இருக்கேன் சொல்லு” என்றார் பார்கவியை பார்த்துக்கொண்டே.
“நான் இருந்தா அந்த பொண்ணுக்கு அங்க ப்பிரியா இருக்க முடியாது, தயங்கி, தயங்கி இருப்பா, அவ வர்ரப்போ நான் இல்லண்ணா , பார்கவி கொஞ்சம் ப்பிரியா நம்ம வீட்டுல பழகிப்பா அதுக்கு தான், குரு போற மீட்டிங்குக்கு நான் அட்டன் பண்ண வந்தேன், இன்னும் ஒரு வாரத்துல வந்திருவேன் மாம்ஸ்” என்றவன், வீட்டில் உள்ள வொய் பைவ் பாஸ்வர்ட் சொன்னவன், வேற என்ன வேண்டும் என்றவன், கார், டுவீலர் நிற்க்கும் இடம், நம்பர் சொன்னவன், “அந்த பொண்ண நல்லா பாத்துக்கோங்க மாம்ஸ்” என்று போனை வைத்திருந்தான்.
பார்கவி அமைதியாக அமர்ந்திருந்தாள், ஸ்ரீஜெயம் மகளின் தலையை வருடி விட்டு, “என் மருமகன் உன்னை நல்லா பாத்துப்பான் டா” என்று சொல்லி சென்றார்.
பார்கவிக்கு அன்பு பேசியது ஆச்சரியமாக இருந்தது. அவன் செய்த காரியத்தை நினைத்து.
பின்பு அவன் தாலி கட்டியது நினைவு வர. இவனும், அந்த பெரிய சாமியும் ஒன்னு தான். என்று சமையல் முடிந்ததா என்று பார்க்க சென்றாள்.
பார்கவியை பார்த்த சமையல் செய்பவர். “இதோ முடிஞ்சுருச்சு” என்று அனைத்தையும் எடுத்து டைன்னிங் டேபளில் வைக்க.
பார்கவி அந்தம்மா செய்த சமையலை திறந்துபார்க்க. சாதம், ரசம், கொழம்பு, பொரில், முட்டை சப்பாத்தி, குருமா, தயிர் என்று அனைத்தும் இருக்க, “இவ்வளவு ஏன் செஞ்சீங்க” என்று ஹிந்தியில் கேட்க..
“அன்பு சார் சொன்னார்” என்று சொல்ல,.. அமைதியாகி விட்டவள்
நளினி அறைக்கு சென்று அவரை எழுப்பி “சாப்பிட வாங்க அத்தை” என்றவள், “ஸ்ரீப்பா வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்து, மூன்று பேர் சாப்பிட.
வேலைகார பெண் அவர்கள் வீட்டிற்கு சென்று இருந்தாள்.
அனைவரும் உண்டு முடிக்க.
“டேய் ஜெயம் கொஞ்சம் கடைக்கு போவோமா” என்றார் நளினி..
“என்ன வேணும் கா”.
“பூஜை ரூம்புல ஒன்னும் இல்லடா, சாமி படம் விளக்கு, எல்லாம் வாங்கனும் போலாமா” என்றார்.
“சரிக்கா போலாம்”என்றவர் “பார்கவி வர்ரீயாடா கடைக்கு போகலாம்” என்றார் நளினி.
“நீங்க போயிட்டு வாங்கத்தை எனக்கு டெரெஸ் எல்லாம் எடுத்து வைக்கனும், மேல மாடியில, பால்கனில உள்ள செடியெல்லாம் தண்ணி ஊத்தனும், நீங்க போய்ட்டு வாங்கத்தை, நான் கொஞ்சம் அத பார்க்கிறேன் என்றாள்.
நளினி, ஸ்ரீஜெயமும் பார்த்து சிரித்து க்கொண்டனர். அன்பு சொன்னது சரிதான் போல என்று.
பார்கவிக்கு மாடியில் உள்ள அறையும் அந்த தோட்டமும் மிகவும் பிடித்து இருந்தது.
தோட்டத்தில் கீழ் புல் தரை போல் அமைத்து இருந்தது. சூரிய ஒலி செடிகளில் அதிகம் படாத வாறு. நெட் கட்டி இருக்க. உட்கார இரண்டு கல் பெஞ்சு போட பட்டு பார்க் போல இருந்தது.
error: Content is protected !!