Skip to content
Post Views: 4,403

நாட்கள் காற்றாய் பறந்து சுபா தன்னுடைய பன்னிரெண்டாம் வகுப்பின் பொது தேர்வை முடித்து இருந்தாள்…. நாளை நந்தினிக்கு வளைகாப்பு….
நந்தினி வளைகாப்பு வேண்டாம் என சொல்லி கொண்டு இருந்தாள்…. ஆனால் அவள் சொல்வதை கேட்க தான் அங்கு யாரும் இல்லை…
அவளுக்கு சிவா அப்பாவும் பாரு அம்மாவும் இல்லாமல் நடக்கும் இந்த வளைகாப்பு வேண்டாம் என கூறினாள்…
Advertisement
ஆனால் கிரிஜா இவளிடம் ” இங்க பாரு நந்து அண்ணனும் அண்ணியும் இல்லாம நடத்துறது எங்களுக்கும் கஷ்டமா தான் இருக்கு…. ஆனா இது உன்னோட முதல் வளைகாப்பு…. உனக்கு இப்ப எதுவும் தெரியாது.. கொஞ்ச நாள் போனா நமக்கு நடக்கலயேனு கஷ்டமா இருக்கும்…. அண்ணனும் அண்ணியும் எப்பயும் நம்ம கூடவே தான் இருப்பாங்க நந்து… ” என்று கூறி சம்மதிக்க வைத்தார்….
மிகவும் எளிமையாக தான் வளைகாப்பு நடைபெற்றது… குழந்தை பிறக்கும் வரை அங்கு வீட்டில் இரு என்று யார் கூறியும் கேட்காமல் பிறந்த வீட்டில் இருந்து அடுத்த நாளே புகுந்த வீட்டிற்கு வந்து விட்டாள்….
அதனால் அவளை பார்த்துக்கொள்ள பட்டு பாட்டி கிரிஜா செண்பகம் மருதாயி பாட்டி என இருவர் வீட்டில் தங்கிக்கொள்வர்….
Advertisement
வளைகாப்பு முடிந்து அடுத்த மாதம் வாணன் நந்தினியின் மகன் இந்த மண்ணில் ஜனித்திருந்தான்…
Advertisement
வாணன் தன் தந்தையே தன் மகனாக பிறந்து இருக்கிறார் என கருதி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்… தன்னுடைய தந்தை பெயர் வருவது போல் பார்த்து பார்த்து தன் மகனிற்கு சிவனேஸ் என பெயர் வைதான்….
எத்தனை மாதங்கள் ஆகி இருந்தாலும் இருவரின் இழப்பை யாராலும் ஏற்கமுடியவில்லை….. சிவனேஸ் தான் அனைவரின் சந்தோசத்தையும் மீட்டு இருந்தான்….
அதன்பின் சுபாவின் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது… அவள் ஆயிரத்து நூறு மதிப்பெண் எடுத்து இருந்தாள்…
Advertisement
மருத்துவம் படிக்க வாய்ப்பு இருந்தும் அண்ணன்கள் அண்ணி சிவனேஸ் பிரிய மனமின்றி பக்கத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து கொண்டாள்….
தேர்வு முடிவுகள் வந்த போது அர்ஜுனன் சுபாவின் வீட்டில் தான் இருந்தான்… அவனும் மருத்துவம் படி என்று கூறியும் கலை அறிவியல் கல்லூரியிலேயே சேர்ந்து கொண்டாள்…
கல்லூரியில் சேர்ந்த பின் தான் நாட்டிய வகுப்பிற்கு சென்றாள்… தேவியிற்கு கடைசி வருடம் என்பதால் இன்டர்ஷிப்க்காக கோவையில் உள்ள ஐடி கம்பனிக்கு சென்றுவிட்டாள்…
அதனால் இருவரும் பார்த்துக்கொள்வது இல்லை… முன்பு அடிக்கடி பேசிக்கொள்வர்… இப்போது மாதத்திற்கு ஒரு முறை தான் பேசிக்கொள்கின்றனர்…..
பார்த்துக்கொள்ளவும் முடிவது இல்லை… அவள் இன்டெர்ஷிப் முடிந்து வந்தாலும் ப்ராஜெக்ட் பிளேஸ்மென்ட் அது இது என அவளுக்கும் நாட்கள் சரியாக இருந்தது…
நாட்களும் அதன்போக்கில் சென்றது… சசி கலினரி ஆர்ட்ஸ் படிக்க டெல்லி செல்ல கண்மணியும் ஜனனியும் சுபாவுடன் அவள் படிக்கும் கல்லூரியில் சேர்ந்து கொண்டனர்…
முதல் வருடத்தை மூவரும் முடித்து இருக்க தேவியும் தன்னுடைய கல்லூரியில் படிப்பை முடித்து இருந்தாள்..
தேவிக்கு கோவையில் வேலை கிடைத்து இருந்தது… வேலை கிடைத்தவுடன் தன் பெற்றோரிடம் தன்னுடைய காதலை பெற்றோரிடம் கூறிவிட்டாள்….
முதலில் எதிர்த்தவர்கள் பின் அர்ஜுனன் வந்து பேசிய பிறகு மெது மெதுவாக அவர்களின் காதலை ஏற்று கொண்டனர்.. பின் அர்ஜுனனிடம் எப்போது உங்கள் வீட்டில் சொல்வீர் என கேட்டனர்…
அதற்கு அவனோ ” எங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கரெக்டான ஏஜ் வரல அங்கிள்… கரெக்ட் ஏஜ் வர அப்ப கண்டிப்பா சொல்றேன்… எங்க வீட்டுல என் முடிவை யாரும் மறுக்கமாட்டாங்க… ” என்று கூறினான்….
அவர்களும் சரி என கூறிவிட்டனர்… பெற்றோர் சம்மதம் கூறியும் இருவரும் எல்லை மீறவில்லை… இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கோவை சென்று பார்த்து வந்தான்…
நாட்கள் யாருக்கும் காத்திராமல் இரண்டு வருடங்கள் சென்று இருந்தது….
ஆஷா அப்துல் இருவரும் நிக்காஹ் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகி விட்டனர்….
சுபா கண்மணி ஜனனி மூவரும் தங்களுடைய படிப்பை முடித்துவிட்டனர்…. சுபா தன் படிப்பை முடித்துவிட்டு நாட்டியாலயத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள்..
ஜனனி பி.எட் படிப்பிற்கு சேர்ந்து இருந்தாள்…. கண்மணிக்கும் முகுந்தனிற்கும் கல்யாணம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்து இருந்தனர்… அடுத்த ஒரு மாதத்தில் இருவருக்கும் கல்யாண தேதி முடிவு செய்து இருந்தனர்…
மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என முகுந்தனை வாணன் குடும்பத்தினர் தன் வீட்டிற்க்கு அழைத்து சென்றுவிட்டனர்…
இந்த மூன்று வருடத்தில் பார்வதி பரமசிவன் இறப்பை கடந்து விட்டனரா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறவேண்டும்… அனைவரும் உள்ளேயே வைத்து கொண்டு இருந்தனர்… எங்கே வெளியில் காண்பித்தால் மற்றவர்கள் வருந்துவார்களோ என…
கல்யாணத்திற்கு இடையில் ஒரு நாள் சுபாவின் அரங்கேற்றம்…. குடும்பமே சென்றது அதை பார்க்க… பட்டு பாட்டி மருதாயி பாட்டி முதல் சிவனேஸ் வரை… ஆனால் அர்ஜுனன் வரவில்லை… அவன் வருவான் என எதிர்பார்த்தாள் சுபா… அவன் வராத காரணத்தினால் கொஞ்சம் சுணங்கி தான் போனாள்…
இருந்தும் அவளின் நாட்டியக்கலையில் முக்கிய அரங்கேற்றம் இது… இதற்கு முன்பு சிறு சிறு அரங்கேற்றம் செய்து இருந்தாலும் தேசிய அளவில் நடைபெறும் அரங்கேற்றம் இது… இந்தியாவில் பல பிரபலங்கள் நாட்டிய சிகாமணிகள் எல்லாம் வருகை தர கூடிய அரங்கேற்றம் இது….
இதற்காக அவள் பல மாதங்களாக பயிற்சி எடுத்து கொண்டு இருக்கிறாள்….. அனைவரும் கிளம்பும் அர்ஜுனனை வர சொல்ல முக்கிய வேலை இருக்கிறது என சொல்லிவிட்டு தேவியை காண சென்றுவிட்டான்….
அனைவரும் வருகை தந்து இருக்க முதலில் குரு வணக்கம் செலுத்தி விட்டு நாட்டியம் ஆட ஆரம்பித்தாள்…
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில்
என்னை கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்…..ஆ….
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே
பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே…..ஏ…..
பிள்ளை கனி அமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே…..ஏ…..
அள்ளி அணைத்திடவே என் முன்னே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே……ஏ….
அவளின் அபிநயத்தில் அனைவரும் ஒருவித மாயநிலையில் தான் இருந்தனர்….
உன்னை காணாது
நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது
நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
யாராலும் அவளின் முகத்தில் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை… அவ்வளவு அழகாக ஆடினாள்….
நடனத்திற்கு ஏற்ப அவளின் கண்களின் ஜாலமும் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தது… யாராலும் அவளை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை….
ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க
கண்ணன் ஊதும்
குழல் காற்றில் தூங்கிவிட்டு
காந்தம் போல இழுக்கும்
.
.
.
உதடு துடிக்கும் பேச்சு
இல்லை உயிரும் இருக்கு
மூச்சு இல்லை வந்த பாதை
நினைவு இல்லை போகும்
பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல்
சத்தம் வந்தால் பேதை ராதை
ஜீவன் கொள்வாள் கண்ணா
இங்கே வா வா
கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க…
கடைசியாக ஆடிய நடனத்தில் அவளின் கண்களில் தெரிந்த சோகமும் ஏக்கமும் அனைவரையும் வருந்த வைத்து இருந்தது… அவளின் காதலை தெரிந்தவர்களுக்கு அவளின் ஏக்கம் யாருக்காக என்று நன்றாக புரிந்து தான் இருந்தது…
அவர்களும் என்ன தான் செய்வார்கள்… கல்யாணம் என்ற பேச்சை எடுத்தாலே சாக்கு சொல்லி ஓடிவிடுகிறான்… அவர்களுக்கு அதை நினைத்து பெருமூச்சு தான் வந்தது…
இங்கு சுபா ஆடி முடித்து இருக்க அனைவரும் எழுந்து நின்று கை தட்டி இருந்தனர்…. பின் அவளுக்கு பரிசுகள் எல்லாம் வழங்கினார்… அதன்பிறகு பல நாட்டிய சிகாமணிகள் அவளை வாழ்த்தி சென்றனர்…
பரிசுகள் வழங்கி சில மணி நேரம் கழித்து தான் தன் குடும்பம் இருக்கும் இடத்திற்கு வந்தாள்… அவளை கொண்டாடி தீர்த்துவிட்டனர்… வீட்டிற்கு வந்ததும் பட்டு பாட்டி மருதாயி பாட்டி இருவரும் அவளுக்கு திருஷ்டி சுற்றிவிட்டு தான் உள்ளேயே அனுப்பி வைத்தனர்…
அதன்பின் முகுந்தன் கண்மணி திருமணத்தின் வேலைகளும் படு வேகமாக நடைபெற்றது… திருமண நாளில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருந்தது… தன் நண்பனின் கல்யாணத்திற்கு அர்ஜுனன் பம்பரமாய் சுழன்றான்…
குடும்பத்தினர் திட்டமிட்டு செய்தனரா இல்லை தற்செயலாக நடந்ததா என்று தெரியவில்லை.. அர்ஜுனன் சுபா இருவரும் ஒரே நிறத்தில் உடை உடுத்தி இருந்தனர்…
முகுந்தனும் கண்மணியும் தங்கள் வாழ்க்கையை நன்முறையில் தொடங்கி இருக்க மற்றவர்களும் தங்கள் வழமையான வேலைகளை தொடங்கி இருந்தனர்…. முகுந்தனிற்கும் கண்மணியிற்கும் திருமணம் முடிந்து மூன்று மாதம் சென்று இருந்தது…..
தேவி கோவையில் இருந்து ஊருக்கு வந்து இருந்தாள்… அவளை பார்க்க வேண்டும் என சுபா கூறி இருந்த காரணத்தினால் தேவி அவளை ஒரு ரெஸ்டாரன்ட்க்கு வர கூறி இருந்தாள்…
வாணன் வர்ணன் ஒரு வேலையாக வெளி ஊர் சென்று இருக்க முகுந்தன் தான் அவளை அழைத்து செல்ல இருந்தான்… நீண்ட நாள் கழித்து தன் தேவி அக்காவை பார்க்க போவதினால் மிகவும் சந்தோசமாக இருந்தாள் சுபா… அந்த சந்தோஷம் சொற்ப நேரத்தில் இல்லாமல் போவதை அறியாமல்….
error: Content is protected !!