கடந்த காலத்தை நினைத்து கொண்டு இருந்த சுபாவை கண்மணி கதவை திறந்து கொண்டு வந்து நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தாள்… கண்மணி அவளிடம் “குட் மார்னிங் சுபிம்மா.. போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா… கஞ்சி குடிக்கலாம்” என்று கூறினாள்…
சுபாவும் “குட்மார்னிங் கண்மணி” என கூறி அவளுக்கு ஒரு சிரிப்பை தந்துவிட்டு குளியறை சென்று பல் தேய்த்துவிட்டு முகம் கழுவிவிட்டு வெளியே வந்தாள்… வந்தவளை அங்கிருக்கும் சோபாவில் உட்காரவைத்து விட்டு அவளிடம் கஞ்சியை நீட்டினாள்….
சுபா அதில் பாதி அளவை மட்டும் குடித்துவிட்டு போதும் என கூறினாள்.. அவளை செல்லமாக முறைத்துவிட்டு “ஒழுங்கா குடி சுபிம்மா… இன்னும் கொஞ்சம் மட்டும் சாப்பிடு” என்று கூறினாள்…
சுபா சிணுங்கிக்கொண்டே குடித்தாள்… கொஞ்சம் குடித்துவிட்டு “இதுக்கு மேல என்னால முடியாது கண்மணி… போதும்” என கூறினாள்… அவளும் சரி என கூறிவிட்டு அதைஎடுத்துகொண்டுசமையல்அறையில்வைத்துவிட்டு மீண்டும் அவளிடம் வந்து அமர்ந்தாள்….
கண்மணியோ எதுவும் இல்லை என தலை ஆட்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்…
Advertisement
முகுந்தனும் அந்த அறைக்கு வந்துவிட்டான்… அவனும் வரும் போதே “குட் மார்னிங் சுபிம்மா” என்று கூறிவாரு வந்தான்… சுபாவும் “குட் மார்னிங் ண்ணா” என்று கூறினாள்…
Advertisement
“பீவர் எதோ இருக்கா கண்மணி” என்று கேட்டான்…
“இல்ல மாமா பீவர் இல்ல… ஆனா ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்…” என்று முகுந்தனிடம் கூறிவிட்டு சுபாவிடம் திரும்பி “ரெடியாகு சுபிம்மா ஹாஸ்பிடல் போட்டியி வரலாம்” என்று கூறி அவளை குளிக்க அனுப்பி வைத்தாள்…
கண்மணி முகுந்தனிடம் திரும்பி “மாமா போய் நீங்களும் ரெடியாகுங்க… போயிட்டு வந்துடலாம்… பிபி அதிகமா இருக்க வாய்ப்பு இருக்கு… அவளுக்கு சாதாரணமாவே பிபி ரைஸ் ஆகும்.. அதுனால போயிட்டு வந்துடலாம்.. “என்று கூறி அனுப்பி வைதாள்…..
அவளும் சென்று குளித்துவிட்டு வந்துவிட்டாள்… பின் காலை உணவு முடித்துவிட்டு சுபாவை அழைத்து கொண்டு முகுந்தன் கண்மணி இருவரும் மருத்துவமனை அழைத்து சென்றனர்….
அங்கு டாக்டர் அவளை செக் செய்து விட்டு கண்மணி நினைத்தவாறே பிபி அதிகமாக உள்ளது என கூறிவிட்டார்… அது மட்டும் இல்லாமல் சுபாவிடம் “சுபா ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க… அப்புறம் டெலிவரில ப்ரோப்லம் ஆகிடும்…” என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்….
மூவரும் எதுவும் பேசாமல் காரில் பயணமானார்கள்…. வழியில் ஜூஸ் கடையில் நிறுத்தி சுபாவிற்கு ஜூஸ் வாங்கி குடுத்து வீட்டிற்கு அழைத்து வந்தான்….
அவர்கள் மருத்துவமனை கிளம்பியதே காலை பதினொன்று மணி ஆகியதால் வீட்டிற்கு வர மதியம் ஆகியது….
சுபா இறங்கிய போது கண்டது கவலை தேய்ந்த முகத்துடன் ஆரவை தூக்கி நின்று கொண்டு இருந்த அர்ஜுனனை தான்….
ஓர் இரவில் ஒருவன் இவ்வளவு சோர்ந்து போவானா என்று தெரியாது… ஆனால் அர்ஜுனன் அந்த அளவு சோர்ந்து போய் இருந்தான்….
ஆரவ் சுபாவை கண்டதும் அம்மா….. என கத்திக்கொண்டு அர்ஜுனனிடம் இருந்து இறங்கி ஓடிப்போய் சுபாவின் கால்களை கட்டி கொண்டான்…
சுபாவும் அவனை தூக்க முற்பட்ட போது ஆரவே “ம்மா நோ பாப்பா உள்ள.. வலிக்கும் பாப்பாக்கு உனக்கு… தம்பி நிக்குறேன்” என்று கூறி மீண்டும் அவளின் கால்களை கட்டி கொண்டான்…
அவனுக்கு நெற்றி முத்தமிட்டு அர்ஜுனனை பாராமல் ஆரவை அழைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றாள்…
அங்கு பட்டு பாட்டி பாலா கிரிஜா தவிர அனைவரும் இருந்தனர்… யாரையும் காணாமல் அவள் செண்பகம் அம்மாவிடம் சென்று அமர்ந்து கொண்டாள்….
அவள் வந்தவுடன் சுப்ரியா அவளுக்கு சூப் கொண்டு வந்து தந்தாள்…. அவள்எதுவும்பேசாமல்ஆரவைதன்மடிமேல்அமர்த்திகொண்டுஅவனுக்கும்புகட்டிகொண்டுதானும்குடித்துமுடித்தாள்…