Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 28

சுபாவிற்கும் மயக்கம் தெளிந்து இருந்தது…. முதலில் அழும் குழந்தைக்கு தாய்ப்பால் குடுத்துவிட்டு தான் குழந்தையைப் பார்த்தாள்… முதலில் அவளுக்கு மச்சத்தை எங்கேயோ பார்த்த ஞாபாகம் தான்… ஆனால் ஒரு நொடியில் இந்த மச்சம் தேவிக்கு இருக்கும் என ஞாபாகம் வந்துவிட்டது…. அவளுக்கும் என்ன கூறுவது என்றே தெரியவில்லை….

அப்போது தான் அர்ஜுனன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்… வந்தவன் நேராக சென்று அவளின் கால் அடியில் அமர்ந்து  அவளின் பாதத்தில் தன் முகத்தை புதைத்து கொண்டான்…. அவளால் அவனை அழைக்கவும் முடியவில்லை… சோர்வாக இருந்தது இருந்தும் “மாமா இங்க வா… முதல்ல எழுந்திரி… பக்கத்துல வா…” என்று சோர்வாக கூறினாள்…



Advertisement

அவன் மறுத்து அவளின் பாதத்தில் தன் தலையை இன்னும் புதைத்து கொண்டான்…. அவனின் மனநிலை அவளுக்கு புரிந்தது தான்…  மீண்டும் அவள் அவனிடம் “மாமா வா… என்னால முடியல…” என்று மெதுவாக கூறினாள்….

Advertisement

அவளின் சோர்வை உணர்ந்து அவள் அருகில் வந்து அமர்ந்தான்….. “மாமா எதுக்கு இப்ப அழுகுறீங்க… தேவி அக்கா தான் நமக்கு பொண்ணா பிறந்து இருக்காங்க… அவங்க தேவியா வாழாம விட்டது நம்ம பொண்ணா அவங்க வாழட்டும்… எதுக்கு இந்த அழுகை… ஒன்னும் இல்ல.. சரியா…” என்று சோர்வாக கூறினாள்..

Advertisement

அவளின் கையை பிடித்து அதில் தன் தலையை புதைத்து கொண்டான்… இன்னொரு கையால் அவனின் தலையை கோதினாள்….

Advertisement

தாயும் தந்தையும் தன்னை கவனிக்கவில்லை என்று அவர்களின் இளவரசி உணர்ந்தாளோ என்னவோ கை காலை அசைத்து அழுக ஆரம்பித்துவிட்டாள்…. குழந்தை அழுகும் சத்தத்தில் தான் இருவரும் அவர்களின் இளவரசியை கவனித்தனர்….

“மாமா வந்து பாப்பாவை தூக்கு” என்று கூறினாள்….

அவனோ சுபாவின்  முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்… அவள் மீண்டும் அவனிடம் “மாமா பாப்பா அழுகுறா பாரு தூக்கு… இப்போ அவ நம்ம பாப்பா மாமா… வேற யாரும் இல்லை… நம்ம பாப்பா மட்டும் தான் தூக்கு…. நான் சொல்றேன்ல போ… ” என்று கூறினாள்…

முதலில் வாங்கிவிட்டான் தான்… ஆனால் தற்போது குழந்தையை தூக்க அவனுக்கு கையுடன் உள்ளமும் சேர்ந்தே நடுங்கியது… அந்த மச்சம் அவனுக்கு தேவியை தான் ஞாபாகம் படுத்தியது…..

அவன் தூக்கலாம் என்று செல்லும் போது “அம்மா அப்பா” என்று கத்திக்கொண்டு ஆரவ் ஓடி வந்தான் இவர்களை நோக்கி….அவனுடன் மற்றவர்களும் உள் நுழைந்தனர்… அவர்கள் வந்தவுடன் யாரும் கவனிக்காதவாரு மீண்டும் சுபாவின் அருகில் அமர்ந்து கொண்டான்… வாணன் தான் குழந்தையை தூக்கினான்…

ஆரவ் தான் அர்ஜுனனை விட்டு நகரவே இல்லை… அவன் உட்கார்ந்து இருந்தால் அவனின் மடிமீது இல்லயென்றால் அவனின் அருகிலேயே தான் இருந்தான்… யார் அழைத்தும் செல்லவில்லை….

அன்று இரவு நந்தினியும் அர்ஜுனனும் மட்டும் சுபாவுடன் மருத்துவமனையில் தங்கிகொண்டனர்… ஆரவை சமாதான படுத்தி அர்ஜுனன் கர்ணனுடன் அனுப்பி வைத்தான்… ஆரவும் சமத்து பையனாக சென்று விட்டான் வீட்டுக்கு…

அடுத்த  இரண்டு நாட்களில் சுபாவும் குழந்தையும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர்….  இரண்டு நாட்களும் அர்ஜுனன் குழந்தையை தூக்கவே இல்லை… சுபாவும் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தவாறு விட்டுவிட்டாள்… எதுவும் சொல்லவில்லை…..

குழந்தையும் அவளும் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஓடிய நிலையில் அவன் குழந்தையை தூக்கவும் இல்லை சுபாவுடன் நடந்த பிரச்சனை பற்றியும் பேசவில்லை….  இன்னொரு குழந்தை வந்தவுடன் ஆரவையும் கொஞ்சாமல் இருப்பது இல்லை… எப்போதும் போலவே அவனையும் கொஞ்சி கொண்டு இருந்தனர்….

அதோ இதோ என நாட்கள் சென்று குழந்தைக்கு பேர் வைக்கும் வைபவமும் வந்தது…. வீட்டில் அனைவரும் பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தனர்…. அர்ஜுனன் இன்னும் குழந்தையை தூக்கவில்லை….  யார் கவனத்தையும் பெறாமல் இதை செய்து கொண்டு இருந்தான்…. அவன் எவ்வளவு தூரம் செல்கிறான் என்று பார்க்க சுபாவும் அமைதியாக இருந்தாள்…

குழந்தைக்கு ‘நிரவிகா’ என்று பெயர் சூட்டினர்…. அன்று முழுவதும் கொண்டாட்டமாக சென்றது… மற்ற உறவினர்கள் எல்லாம் சென்று இருக்க  குடும்பத்தினர் மட்டும் தான் இருந்தனர்… அப்போது தான் சுபா ஒரு விஷயத்தை கூறினாள்… மற்றவர்கள் அதை கேட்டு சந்தோசப்பட்டு அதை ஆமோதிக்க ஒருத்தன் மட்டும் வேகமாக மறுத்தான்…

அது வேறு யாரும் இல்லை சசி தான்… சுபா கூறியது சசியின் கல்யாணத்தை பற்றி தான்… அவள் கூறியது முதலில் அர்ஜுனனிடம் தான்… அவனும் அந்த யோசனையில் தான் இருந்தான்… அது குறித்து இவளிடம் பேசவேண்டும் என முடிவு எடுத்து இருந்தான்… தற்போது இவள் கேட்டவுடன் இவளையே பேச சொல்லிவிட்டான்…

முதலில் மருதாயி பாட்டியிடமும் பட்டு பாட்டியிடமும் தான் கூறினாள்… அவர்களும் ஒத்துக்கொண்டனர்… அதன் பின் தான் அனைவரிடமும் கூறினாள்….

அனைவரும் அமர்ந்து இருந்த போது குழந்தையை தூக்கி அர்ஜுனனிடம் கொடுத்தாள்… அவன் அதை கவனிக்காத மாதிரியே அமர்ந்து இருந்தான் இவளும் பல்லை கடித்து அவனை யாரும் அறியாமல் முறைத்துவிட்டு சசியின் கையில் குடுத்துவிட்டு மீண்டும் அர்ஜுனன் அருகில் அவனின் கையில் நன்றாக யாரும் அறியாமல் கிள்ளிவிட்டு அமர்ந்து கொண்டாள்….

அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது… சுபாவிடம் தனியாக மாட்டினால் தான் காலி என… ஏன்னென்றால் இத்தனை நாள் அவளை தனியாக சந்திக்கவே இல்லை… இரவும் அவள் தூங்கிய பின் தான் வீட்டிற்கு வந்தான்… நடுவில் அனைவரும் இருக்கும் போது வந்து பார்த்துவிட்டு செல்கிறான்…. இன்று அவன் வசமாக சிக்க போவது உறுதி என தெரிந்துவிட்டது… இருந்தும் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டான்…

அனைவரும் சுபாவை தான் தற்போது பார்த்தனர்…. அவளும் “இன்னொரு விசேஷம் நம்ம வீட்டுல நடக்க போகுது…. அதை பத்தி பேச தான் இப்போ எல்லாரையும் கூப்பிட்டு உட்கார வெச்சேன்… அதை பத்தி மாமா சொல்லுவாரு” என்று அர்ஜுனனை கை காட்டிவிட்டாள்….

சசி தான் “என்ன விஷேசம் ண்ணா….?” என்று ஆர்வமாக கேட்டான்….

சுபாவோ “மாட்டுன டா என் பம்பரக்கட்டை மண்டையா” என்று மனதில் நினைத்து கொண்டு அவனை பார்த்து மர்மாக சிரித்தாள்.. அவளின் சிரிப்பை அவன் கண்டுகொண்டான்…. “என்ன சுப்பு  மார்க்கமா சிரிக்குறா… என்னவா இருக்கும்” என நினைத்து கொண்டு அர்ஜுனன் முகத்தை பார்த்தான்….

அர்ஜுனன் சசியை பார்த்து சிரித்துவிட்டு தன் தொண்டையை செருமி கொண்டு “சசிக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்… பாட்டிங்க கிட்ட பேசுனோம் அவங்களும் சரினு சொல்லிட்டாங்க… அது தான் சொன்னோம்… இப்போ அவனுக்கு ஒரு பொண்ணை தேடனும்…” என்று கூறி முடித்தான்…

அதுக்கு மாரியப்பனும் “நானே உன்கிட்ட  பேசணும்னு இருந்தேன் அர்ஜுன் நீயே பேசிட்ட… பொண்ணு தேடனும் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைக்குறேன்” என்று கூறினார்….

மற்றவர்களும் அதை தான் கூறினர்…. சசி வேகமாக மறுத்தான்… ஆனால் அவன் மறுப்பை தான் யாரும் கண்டுகொள்ளவில்லை… நிரவி குட்டியை வைத்து கொண்டு அவனால் சத்தமாக கூட பேச முடியவில்லை….

சுபாவோ  “பொண்ணு எல்லாம் ஏற்கனவே நான் பாத்து வெச்சிட்டேன்” என்று சத்தமே இல்லாமல் சசியின் தலையில் இடியை இறக்கி வைத்தாள்…. அவனோ அவளை பார்த்து முறைக்க ஆரம்பித்து விட்டான்…

இது பாட்டிகளுக்கும் அர்ஜுனனுக்குமே புதிய செய்தி… அனைவரும் அவளையே பார்க்க அர்ஜுனன் அவளிடம் “யாரு அம்மு… என்கிட்ட சொல்லவே இல்லை.. எப்போ பார்த்த… நமக்கு தெரிஞ்ச ஆளுங்களா???”  என்று கேட்டான்…

“பொறுமை மாமா… நமக்கு தெரிஞ்சவங்க தான்… நம்ம ஊரு தான்… தோ இந்த பைத்தியத்தை பைத்தியமா லவ் பண்ணவ… இப்பயும் பண்ணிட்டு தான் இருக்கா… இவனுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சி வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க பிடிக்காம இப்ப வர கல்யாணம் பண்ணாம இருக்கா… வேற யாரும் இல்ல… மாலதி மிஸ்ஸோட பொண்ணு நவமித்ரா…  அவளும் இப்ப டீச்சரா தான் இருக்கா…. எங்க கூட படிச்ச பொண்ணு தான்” என்று கூறி முடித்தாள்

“சுபி நவாவ தானு சொல்ற….உனக்கு எப்படி அந்த பொண்ணு சசியை லவ் பண்ணது தெரியும்” என்று ஜனனி கேட்டாள்…

“நான் தான் போன வாரம் கோவிலுக்கு போய் இருந்தேன்ல… அப்போ தான் மாலதி மிஸ் நவா கிட்ட பேசிட்டு இருந்தாங்க… கல்யாணம் பண்ணிக்கோ எனக்கும் வயசு ஆகிட்டே போகுது… இன்னும் எத்தனை நாள் நான் இருப்பேன்னு தெரியாது அப்டினு பேசிட்டு இருந்தாங்க….. நானும் நமக்கு தெரிஞ்சவங்க போய் பேசலாம்னு போய் பேசுனேன்…

அப்ப மிஸ் வந்து சொன்னாங்க… இவ ஒரு பையனை விரும்புனா ம்மா… அந்த பையனுக்கு கல்யாணம் ஆயிடிச்சு…. அந்த பையனை நினைச்சிட்டு இவ கல்யாணமே பண்ணிக்க மாட்டனு சொல்லிட்டா… யாரு அந்த பையன்னு சொல்லவும் மாட்டிங்குறா.. எனக்கு இப்பலாம் அடிக்கடி உடம்பு சரியில்லாமா போயிடுது… இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணலாம்னு பார்த்த எதுக்கும் ஒத்து வரமாட்டிங்குறா… அப்டினு சொல்லிட்டு அங்க இருந்த தூண்ல சாஞ்சி உட்காந்துட்டாங்க…. “

” நானும் அவகிட்ட பேசி பார்த்தேன்… முதல்ல அது யாருனு சொல்லவே இல்லை… கொஞ்ச நேரம் பேசுனவாட்டி தான் இந்த லூசை பத்தி சொன்னா… முதல்ல பயங்கர ஷாக் எனக்கு… அந்த ஷாக்கை பார்த்து அவ நான் பொய் சொல்றன்னு நினைக்குறியா இல்ல கல்யாணம் ஆயிடிச்சுனு தெரிஞ்சும் நான் சசியை விரும்புனது பார்த்து என்ன பொண்ணு இவ கல்யாணம் ஆனா பையனை விரும்பி இருக்கானு தப்பா நினைக்குறியா சுபானு கேட்டா… “

எனக்கு என்ன சொல்றதுனே தெரியல… அப்போ தான் இவனுக்கு ஏன் நவாவை கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுனு தோணுச்சு… நான் அவ கிட்டயும் அவ அம்மா கிட்டயும் கேட்டேன்… ரெண்டு பேருமே ஒதுக்கல.. நான் பேசி புரிய வெச்சேன்… மிஸ் ஒத்துக்கிட்டாங்க… ஆனா நவா ஒத்துக்கவே இல்லை… அதுக்கு அப்பறம் பாப்பா அழுவுறானு நான் நம்பர் வாங்கிட்டு வந்துட்டேன்… தினமும் அவளை பேசி நேத்து தான் ஒத்துக்க வெச்சேன்…. ” என்று நீளமாக பேசி முடித்தாள்….

மருதாயி பாட்டியும் பட்டு பாட்டியும் “அவங்க நல்ல மனுஷங்க தான்… அப்பா இல்லாம ஒத்த அம்மாவா பொண்ணை நல்லா வளர்த்தி இருக்காங்க….பொண்ணை பத்தி விசாரிக்க தேவை இல்ல… நம்ம முன்னாடி திரியுற புள்ள தான்… குனிஞ்ச தலை நிமிரமா வேலைக்கு போயிட்டு வரும்… உங்க எல்லாருக்கும் சம்மதம்னா போய் பேசலாம்” என கூறி முடித்தனர்….

மற்ற அனைவரும் உடனே சம்மதம் எனக் கூறிவிட்டனர்….  பின் அவரவர் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்…. வீட்டில் அர்ஜுனன் சுபா ஆரவ் நிரவி குட்டி கர்ணன் மற்றும் சசி மட்டுமே இருந்தனர்….

சசி தான் வருத்தத்தில் இருந்தான் முதல் கல்யாணம் பெரும் தவறாகி போனதில்…. தற்போது இன்னொரு கல்யாணமா என…. ஆனால் அவனின் மறுப்பை எவரும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை….. அர்ஜுனன் “நல்லா யோசிச்சி முடிவு எடு சசி…. சுபா முடிவு எடுத்துட்டா… எப்படியும் உன்ன சம்மதம் சொல்ல வெச்சிடுவா…. யோசி… எத்தனை நாள் அதேயே நினைப்ப… யோசி நல்ல முடிவு எடு” என்று கூறி அவனின் தலையை கலைத்துவிட்டு சென்று விட்டான்….

சசியோ அங்கேயே தலையில் கை வைத்து அமந்துவிட்டான்… அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை… யோசித்து யோசித்து அங்கேயே சோபாவில் தூங்கி விட்டான்….

மேலே சென்ற அர்ஜுனன் அறைக்கு செல்லாமல் மேலே மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான்… இன்று சுபா தன்னை விடமாட்டாள் என அவனுக்கு தெரிந்து விட்டது… எனவே மேலே சென்று தன்னை கொஞ்சம் ஆசுவாசம் படுத்திக்கொண்டு பின் அறைக்கு சென்றான்…

அங்கு ஆரவ் அவனின் குட்டி கட்டிலில் தூங்கி இருக்க சுபா நிரவி குட்டிக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள்… அவளின் பார்வையே இன்று உன்னை விட மாட்டேன் என்று கூறியது… அனைத்திற்கும் தயாராக அங்கு இருக்கும் சோபாவில் உட்கார்ந்துவிட்டான் அர்ஜுனன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!