Skip to content
Post Views: 2,895

கோவை…
கர்ணனை பார்த்து பயந்து ஆரவ் அவன் நண்பர்களுக்கு நடுவில் நின்று கொண்டான்…. எங்கே அவன் தன்னை பார்த்துவிடுவானோ என்று…. அவனின் நெருங்கிய நண்பன் சுபாஷ்க்கு மட்டும் தான் அவனை பற்றி முழுதாக தெரியும்….
Advertisement
அவன் ஒளிந்தவுடன் “டேய் ஆரவ் ஏன் வந்து ஒளியுற…… யார பாத்து வர” என்று சுத்தி பார்த்தாவாரு கேட்டான்….
Advertisement
Advertisement
“டேய் சுபாஷே…. கர்ணன் சித்தா டா…. என்னை பார்த்தா அவளோ தான்…. டேய் அவரு இந்த பக்கம் தான் வராரு… என்ன பண்றதுனே தெரியல டா… ” என்று கூறி சுபாஷ் பின் மறைந்தான்….
“டேய் ஆரவ் அது தான் உன் கர்ணன் சித்தாவா…. ஸ்மார்டா இருக்காரு டா….” என்று கூறினான் சுபாஷ்….
Advertisement
சுபாஷின் மண்டையில் தட்டி “டேய் வராரு டா” என்று கூறி நன்றாக மறைந்தான்…. ஆரவ் மாஸ்க் அணிந்து தான் இருந்தான்…. கர்ணன் அந்த பக்கம் திரும்பிய ஒரு நொடியில் அங்கிருக்கும் பிலே ஏரியாவில் ஆரவை தள்ளி விட்டுவிட்டான் சுபாஷ்…
அனைவரும் மாலில் தான் இருந்தனர்…. அங்கிருக்கும் பிலே ஏரியாக்கு அருகில் தான் அனைத்து மாணவர்களும் நின்று இருந்தனர்… அங்கு அனைத்தும் பால் நிறைந்து இருந்தது….. அதனால் சுபாஷ் யோசிக்காமல் ஆரவை தள்ளிவிட்டு இருந்தான்… ஆரவை தள்ளிவிட்ட உடன் அவனும் உள்ளே இறங்கி இருந்தான்…. அவனை தொடர்ந்து மற்ற மாணவர்களும் இறங்கி இருந்தனர்….
கர்ணன் தூரத்தில் ஆரவை பார்த்தான்… ரொம்ப தூரமாக தான் பார்த்தான்…. ஆரவா என்று பார்க்க தான் அந்த பக்கம் வந்தான்… அவன் வரும் போது யாரோ ஒரு குழந்தை கீழே விழுந்துவிட்டான்…. அவனை தூக்க கர்ணன் திரும்பும் போது தான் சுபாஷ் ஆரவை பிலே ஏரியாவில் தள்ளிவிட்டு இருந்தான்….
கர்ணன் வந்து பாத்துவிட்டு தேடிவிட்டு போகும் வரை ஆரவை சுபாஷ் எழுந்திரிக்க விடவே இல்லை…. அவன் தலை மறையும் வரை பார்த்துவிட்டு அவனை எழுந்திரிக்க விட்டான்…
கர்ணன் போகும் வரை திரும்பி பார்த்தவாரே தான் சென்றான்… அவன் சென்ற பின் தான் ஆரவ் பெரு மூச்சை விட்டான்….
“டேய் சுபாஷே சித்தா என்னை தூரமா பாத்து இருக்காரு… அது தான் வந்து தேடி இருக்காரு… நல்ல வேல தப்பிச்சேன்…” என்று கூறி அவன் மேல் சாய்ந்தான் ஆரவ்
“ஐயாவோட ஐடியா அப்படி டா…. சரி வா விளையாடலாம்… ” என்று கூறி அவன் மற்ற நண்பராகளுடன் விளையாட ஆரம்பித்தான்….
ஆரவ் கர்ணன் சென்ற வழியை பார்த்து “மிஸ் யூ அன்ட் லவ் யூ சித்தா” என்று கூறிவிட்டு அவனும் விளையாட ஆரம்பித்து விட்டான்….
அய்யனார்புரம்….
வர்ணன் ஜனனியின் வீடு…
கார்த்திகாவும் நிரவியும் படித்து கொண்டு இருக்க சிவனேஸ் வந்து அவர்கள் முன் நின்றான்… அவன் வந்தது தெரிந்தும் இரண்டு பேரும் தலை நிமிராமல் படித்து கொண்டு இருந்தனர்…
அவனும் செல்வதாக இல்லை… இவர்களும் நிமிர்வதாக இல்லை…. அருனேஷ் இதை போய் ஜனனியிடம் கூறி இருக்க அவள் வந்து “சிவா குட்டி என்ன ஆச்சு… என்ன பண்ணாங்க ரெண்டு பேரும்” என்று கேட்டாள்….
இதில் நடுவில் புகுந்த அருனேஷோ “மம்மி அண்ணா ஒன்னும் குட்டி இல்ல… எவளோ ஹயிட்டா இருக்காரு…. ஏன் குட்டி சொல்ற…. “என்று கேட்டான்…
அவன் மண்டையில் கொட்டிய சிவனேஸ் “ஜனனிமா… மேடம் ரெண்டு பேருக்கும் பரதநாட்டியம் ஆட கேரளாவுக்கு போக சொன்னா போக மாட்டாங்காளாம்…. அங்க டான்ஸ் ஷோ இருக்கு… மேம் என்கிட்ட சொன்னாங்க… வீட்டுல பேசிட்டு சொல்ல சொன்னாங்க ” என்று கூறினான்….
ஜனனி அதனை கேட்டு விட்டு இருவரிடமும் திரும்பி “ஏன் போக மாட்டீங்க ரெண்டு பேரும்…” என்று கேட்டாள்…
கார்த்திகாவை முந்தி கொண்டு நிரவிகா “அத்த… அங்க ரெண்டு நாள் ஸ்டே பண்ணணுமாம்…. உங்களை விட்டுட்டு எப்படி இருப்போம்…” என்று முகத்தை பாவமாக வைத்து கூறினாள்….
“ஓஹ் அப்டியா மேடம்..” என்று கூறிவிட்டு “ம்மா விடுங்க அவங்க போக வேண்டாம்” என்று கூறிவிட்டு வேகமாக அறைக்கு சென்றுவிட்டான்….
ஜனனியும் போகும் அவனையும் இவர்கள் இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்துவிட்டு அவளும் உள்ளே சென்றுவிட்டாள்….
“கார்த்தி க்கா மாமா கோச்சிக்கிட்டாரா…” என்று பாவமாக கேட்டாள்…
“அடியே ஏன் வேண்டாம்னு சொன்ன… இப்போ பாரு அண்ணா கோச்சிக்கிட்டாரு…. ஒழுங்கா போகலாம் வா…. ” என்று கூறினாள் கார்த்திகா…
“க்கா எனக்கும் அம்மா பாக்கணும் போல இருக்கு… அவங்க ஞாபாகமாவே இருக்கு….. அம்மா நான் வேணாம்னு போய்ட்டாங்கல… அப்பாவும் என்னால தான் சாமிகிட்ட போனாரு…. அம்மாவுக்கு அண்ணாவுக்கு என்னை பிடிக்கல… அதுனால தான் என்னை விட்டுட்டு அவங்க மட்டும் எங்கயோ போயிட்டாங்க…. எனக்கு இங்க விட்டுட்டு வேற எங்கயும் போக பிடிக்கல… அப்போ அங்க கேரளா போனதுனால தான் எல்லாரும் என்னைவிட்டு போனாங்க…. திரும்பியும் அங்க போக மாட்டேன் ” என்று அழுதவாறே அவளை அணைத்து கொண்டாள்..
சிவனேஸ் மீண்டும் வெளியே வந்தவன் அவள் பேசுவதை கேட்டுவிட்டு அவள் அழுவதை பார்த்து வேகமாக அவர்கள் இருக்கும் அறைக்கு வந்தான்….
வந்தவன் நிரவிகாவை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டு “குட்டி இப்போ எதுக்கு அழுகுற… பாப்பா போ அம்மா வாரங்களா பாரு… இவ அழுகுறதை பார்த்தா அவங்களும் அழுவாங்க….” என்று கூறினான்….
அவன் கூறியவுடன் அவளும் ஜனனியிடம் சென்றுவிட்டாள்… அவள் சென்றவுடன் “குட்டி இங்க மாமாவை பாரு… எல்லாரும் உங்கிட்ட வருவாங்க அழுக கூடாது…. ” என்று கூறி தலையை வருடிவிட்டான்….
“மாமா அம்மா வருவாங்களா??” என்று கேட்டாள்… அவனும் ஆம் என்று கூறினான்….
“அப்போ அண்ணா….” என்று கேட்டாள்…
“உன் அண்ணா கண்டிப்பா வருவான் குட்டி “என்று கூறினாள்….
“அப்போ அப்பா” என்று அழுதவாறே கேட்டாள்… அவனுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை… அவனின் அமைதியை பார்த்து “அப்பா வர மாட்டாங்கனு உனக்கே தெரியுதுல மாமா… எனக்கு அப்பா வேணும் மாமா.. அம்மா வேணும் அண்ணா வேணும் … எல்லாரும் வேணும் ” என்று அழுது கொண்டே கேட்டாள்
அவள் அழுது அழுது சிவனேஸ் மடியிலேயே தூங்கிவிட்டாள்…. சிறிது நேரம் கழித்து வந்த கார்த்திகா நிரவி உறங்கி கொண்டு இருப்பதை பார்த்து “ண்ணா அம்மா அருணை கூட்டிட்டு வெளிய போயிட்டாங்க….. ” என்று கூறி அவளும் இன்னொரு பக்கம் அவன் மடியில் தூங்கினாள்…
இருவருக்கும் வாகாக கட்டிலிக் சாய்ந்து உட்கார்ந்து உறங்கும் இதுவரை பார்த்தவாரே அவனும் கண் அயர்ந்தான்….
அடுத்த நாள்…
பாலா பூர்விக வீடு….
கர்ணன் அப்போது தான் வீடு வந்து சேர்ந்து இருந்தான்…. அவனின் யோசனை முகத்தை பார்த்து சசி என்னவென்று கேட்டான்… அனைவரும் அப்போது அங்கு தான் இருந்தனர்….
“அண்ணா… அது வந்து கோவைல மாலுக்கு போன அப்ப ஆரவ் மாதிரியே ஒரு பையனை பார்த்தேன்… கிட்ட போய் பாக்கலாம்னு பார்த்தா அவனை காணோம்… எனக்கு அவன் ஞாபகமாவே இருக்கு ண்ணா….” என்று சோர்வாக கூறினான்…
அதை கேட்டு சசி “நம்ம வேணும்னா கோவை புல்லா திரும்பியும் தேடி பாக்கலாமா…. ” என்று கேட்டான்…
“எனக்கும் அப்படி தான் தோணுது ண்ணா…. ” பாக்கலாம் என்று கூறினான்…
ஆனால் பெண்கள் இருவரும் அதை மறுத்தனர்…. ” கோவைல இருந்தா கண்டிப்பா நம்ம கண்டு பிடிச்சி இருக்கலாம்…. அவங்க இங்க இல்ல…. எத்தனை தடவ கோவை போய் இருப்போம் இந்த ரெண்டு வருஷத்துல… அப்போ நமக்கு தெரியாமயா இருக்கும்… நமக்கு தெரிஞ்சவங்களும் எத்தனை பேர் இருக்காங்க… அவங்களும் பாக்காமயா இருப்பாங்க…. நாம தப்பா தேடுறோம்….” என்று கூறினர் மித்ரா பிரியா இருவரும்
இருவர் கூறியது சசி கர்ணனுக்கு சரியாக தான் இருந்தது….. சுபா ஆரவை கண்டு பிடிப்பார்களா?!?!?!…
கேரளா ( இடுக்கி )
பள்ளி சுற்றுலா முடித்துவிட்டு மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்து இருந்தனர்…. அனைவரும் அவரவர் பெற்றோரை நோக்கி ஓடி கொண்டு இருந்தனர்…. ஆரவும் சுபாவை நோக்கி “அம்மா…..” என்று ஓடினான்…
அவளும் ஓடி சென்று அணைத்து கொண்டாள்…. இருவரும் அவனின் ஆசிரியரிடம் விடைபெற்று கொண்டு வீட்டுக்கு சென்றனர்….
கோவையில் நடந்ததை பற்றி ஆரவ் சுபாவிடம் கூறிக்கொண்டு இருந்தான்…. ஆனால் கவனமாக கர்ணனை பார்த்ததை கூறவில்லை அவன்…. இருவரும் வீட்டுக்கு சென்று இருந்தனர்….. சுபா அவனை விட்டுவிட்டு அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்துவிட்டு சமைத்துவிட்டு நாட்டியாலயா சென்று இருக்க அவனும் அனைத்து வேலையும் செய்து விட்டு சாப்பிட்டு விட்டு அர்ஜுனனின் குட்டி போட்டோவை அணைத்து கொண்டு “அப்பா ஏன் எங்களை விட்டுட்டு போனீங்க.. அம்மா எவளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா????” என்று கேட்டுக்கொண்டே உறங்கிவிட்டான் ஆரவ் ……
************************************
சிவனேஸ் 16 வயது
ஆகாஷ் 13 வயது
ஆரவ் 11 வயது
கார்த்திகா 10வயது
நிரவி 7 வயது
அருனேஷ் 6 வயது
தன்சிகா 5 வயது
யாதவ், தர்ஷிகா, தஸ்விகா (4 வயது )
error: Content is protected !!