இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 24
அத்தியாயம் 24
பூரணி, அண்ணா நீங்க பார்க்கலன்னு சொல்லல, எங்களுக்கும் பெரியம்மாவோட கொஞ்ச நாள் இருந்தா சந்தோஷமா இருக்கும் இல்ல.
இப்ப பெரியம்மா நல்லாதான இருக்காங்க. “முட்லூருக்கு அக்காவ, என்னை பார்க்க வந்ததா நினைச்சுக்கோங்க…”
“எப்பவும் பெரியம்மா அங்க… அக்கா வீட்டுக்கு வந்தா, பத்து நாள் இருந்துட்டு தான வருவாங்க. இப்ப இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வரப் போறாங்க. அவ்வளவுதான…
Advertisement
“நாங்க போயிட்டோம்னா….. பகல்ல பெரியம்மா தனியா இருக்கனும், நீங்களும் வேலைக்கு போயிடறீங்க…… இப்பதான அவங்க உடம்பு தேறி வந்திருக்காங்க”.
“கொஞ்ச நாள் அக்காவோட இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டுமே”… என அவனை பேசி… பேசியே… ஒத்துக் கொள்ள வைத்திருந்தாள்.
பாண்டியன் சிரித்துக்கொண்டே மாதவியிடம் “பூரணிக்கு கூட வாய் வந்திடுச்சு ..க்கா கல்யாணம் ஆனதும் நல்லா பேசக் கத்துகிச்சு”.
Advertisement
மாதவியும் பூரணி பேசும்போது அவளையேதான் பார்த்திருந்தாள். திருமணத்திற்கு முன்பெல்லாம் எதுவும் பேசுவதென்றாலே அத்தனை தயங்குவாள்.
Advertisement
பெரியவளாக வளர வளர அவளே பாண்டியனிடம் இருந்து பேசுவதைக் குறைத்துக் கொண்டு, அவனிடம் இருந்து ஒதுங்கியிருந்தாள். வெகு காலத்திற்கு பிறகு அவனிடம் இவ்வளவு நீளமாக பேசியிருக்கிறாள்.
இன்று அவள் பேசுவதைக் கேட்பதற்கே, மாதவிக்கு சந்தோஷமாக இருந்தது. பூர்ணியின் திருமணத்தில் ஏற்பட்ட தடங்கல்களால், பூர்ணியின் வாழ்வை, எதிர்காலத்தை நினைத்து பயந்த மாதவிக்கு, திருமணத்திற்குப் பின் மதுவுடனான அவளது வாழ்வு நிம்மதியைக் கொடுத்தது.
செல்வி மாதவியுடன் வருவதற்கு சம்மதிக்க மறுத்தார். “அதெல்லாம் வேணாம் டா…….., நான் பார்த்துப்பேன் நீங்க இரண்டு பேருமே கிளம்புங்க”.
Advertisement
பூர்ணி பிடிவாதமாக அவரை கிளப்பியிருந்தாள். ‘’ஒன்னு நீங்க வாங்க. இல்ல… நான் இங்க இருக்கறதுக்கு ஓகே சொல்லுங்க… என அடம் பிடித்து அவரைக் கிளப்பியிருந்தாள்.
மது வந்திருந்து கார் வைத்து செல்வி, மாதவி, பூர்ணி என எல்லோரையும் முட்லூருக்கு அழைத்து வந்தான். அவனுக்கு மனைவி எங்கே இன்னும் அங்கேயே நீட்டித்து விடுவாளோ… என பயம் இருந்தது.
செல்வியையும் அழைத்துக் கொண்டு இங்கே வருகிறார்கள் என்றதும் யாரையும் எதிர்பார்க்காமல், அவனே கிளம்பி வந்திருந்தான், அவர்களை அழைத்துச் செல்லவதற்காக.
நீண்ட விடுமுறைக்கு பிறகு பானு வேலைக்கு வந்திருந்தாள்.
ஒருவாறு மனைவியை தைரியப்படுத்தி சமாதானப்படுத்தி வேலைக்கு சங்கரே அழைத்து கொண்டு வந்திருந்தான்.
இடையிடையே தரணியும் போன் செய்து பானுவைத் தைரியப் படுத்தியிருந்தான்.
“தப்பு செஞ்சது அவன். அவனுக்கு பயந்து நீங்க வேலைக்கு வராம இருப்பீங்களா……..? எதையும் தைரியமா பேஸ் பண்ணி பழகுங்க வேலைக்கு கிளம்பி வாங்க…” என உரிமையாக மிரட்டி அழைத்திருந்தான்.
“எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு பாஸ் பண்ணி, கனவோட இந்த வேலைக்கு வந்தீங்க. இதையெல்லாம் எவனோ ஒருத்தனுக்கு பயந்து விடப் போறிங்களா………?”
இதையே நினைச்சி பயந்து வீட்டுல உட்கார்ந்திருக்கப் போறீங்களா…..? அப்படி பார்த்தா எந்த பொண்ணும் வெளிய வரவே முடியாது. உங்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி நடந்ததா நினைக்காதீங்க.
“இந்த மாதிரி வெறியெடுத்த ஒநாய்ங்க…, அங்கங்க இருக்கத்தான் செய்யுது”.
“அதையே நினைச்சி ஃபீல் பண்ணிட்டு இருந்தா…, நாம நம்ம லைஃப்ல முன்னேற முடியாது. இதையெல்லாம் போற போக்குல அடிச்சு துவம்சம் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கனும்”.
“அவன்லாம் ஒரு ஆளு. அவனுக்கு பயந்து உங்க வேலைய விடுவேன்னு சொல்றீங்க. எத்தனை பொண்ணுங்க இதையெல்லாம் அசால்ட்டா பேஃஸ் பண்றாங்க தெரியுமா……? இதுக்கு பயந்து அவங்க எல்லாம் வீட்லயேவா உட்கார்ந்திருக்காங்க”.
“சில பேர் வெளிய சொல்லாம விட்டுடறாங்க. சில பேர் நமக்கெதுக்கு தலைவலின்னு கண்டுக்காம இருந்துடறாங்க. எங்கயோ கொஞ்ச பேர்தான் எதிர்த்து நின்னு போராடறாங்க”.
“உங்களை சுத்தி நாங்க எல்லாம் இல்லையா……..? தைரியமா கிளம்பி வாங்க வேலைக்கு”… என அவளை ஊக்கப்படுத்தியிருந்தான்.
சங்கருடனும் பேசி… தான் பார்த்துக் கொள்வதாக தைரியப்படுத்தியிருந்தான் தரணி. பானுவை வேலைக்கு கொண்டு வந்து விட்ட சங்கர், தானே வந்து மாலை அழைத்துச் செல்வதாக கூறி சென்றிருந்தான்.
அன்று வேலைக்கு பேங்க் உள்ளே வந்ததுமே…, அவளது கண்கள் தன்னிச்சையாக மேனேஜர் கேபினைத்தான் தொட்டு மீண்டது. அந்த கேபின் காலியாக இருக்கவும் தான் அவளுக்கு நிம்மதியானது.
அவளது சீட்டில் வந்து உட்கார்ந்தவளை…, ஏன் இத்தனை நாள் லீவ்…? என கூட வேலை செய்பவர்கள் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
தரணியைத் திரும்பி பார்த்தாள். அவன் இவளைக் கண்டு கொள்ளாமல் வேலையில் கவனமாக இருந்தான். உடல்நிலை சரியில்லை என அவர்களிடம் சொல்லி சமாளித்தவள், வேலையில் கவனம் செலுத்தினாள். அதற்குள் வாடிக்கையாளர்களும் வர ஆரம்பிக்கவே வேலையில் பிஸியானாள்.
லன்ச் டைமில் அவளுடன் சேர்ந்து கொண்டான் தரணி. எப்போதும் இருவரும் லன்ச்சை ஷேர் செய்து சாப்பிடுவார்கள். அன்று அவள் கொண்டு வந்த சாம்பார் சாதத்தையும் சேனைகிழங்கு வறுவலையும் தரணி எடுத்துக் கொண்டு, அவன் வாங்கி வந்திருந்த வெஜ் புலாவையும், தயிர் பச்சடியையும் அவள் பக்கம் நகர்த்தினான்.
ப்பாஹ்…….. “ நாக்கு செத்து போயிருந்தது இத்தனை நாளா……..? என்ன சொல்லுங்க… வீட்டு சாப்பாடு…, வீட்டு சாப்பாடு தான்.. அதுவும் உங்களோட கைமணம் ஸ்பெஷல்தான். உண்மையிலேயே உங்க வீட்டுக்காரர் லக்கிதான்…….”
“நான் இங்க… என்ன டென்ஷன்ல இருக்கேன்? இவன் சாப்பாட்டை பத்தி பேசறான் பார்…, சாப்பாட்டுராமன்…” என திட்டினாள் மனதில்.
“என்ன மைன்ட் வாய்ஸ்…, ? என்னை….. சரியான தீனிபண்டாரம்னு நினைக்கிறீங்களா……..?”
இல்லை… என தலையசைத்தவள், நினைக்கலாம் இல்ல. கன்பார்மே பண்ணி, திட்டிட்டிருந்தேன்.
ஹா…………. ஹா…………………, “என்ன டென்ஷன் இப்ப உங்களுக்கு? காலையிலிருந்து இவன் நம்ம கண்டுக்க கூட மாட்டேன்றான்னு தான……..”
அவளுக்கும் உள்ளுக்குள் அதே எண்ணம் தான். போனில் அத்தனை தைரியம் சொல்லி வரவைத்தவன், இங்கு வந்ததும், தன்னை கண்டு கொள்ளாமல் இருந்ததை நினைத்து கடுப்பானது.
அவளது பிரச்சினையை நாடி பிடித்து சரியாக சொல்லியிருந்தான் தரணி. அவனை நிமிர்ந்து அவள் ஆச்சர்யமாக பார்த்ததும், “அப்ப அதான் உங்க மைன்ட்ல குடையுது, சரியா சொல்லிட்டேனா,……?”
……………….
“என்ன குடையுது உங்க மண்டையில கேளுங்க……………..? சாப்பிடுங்க டைம் ஆகுது. சாப்பிட்டுட்டே பேசுங்க……..”
ஏன் காலையிலருந்து பேசல…………………
ஓஹ்………………
…………………………
அப்புறம்…………? வேற ஏதாவது கேட்கனுமா……………….?
ஆமாம் என தலையசைத்தவள், மேனேஜர் கேபினை திரும்பி பார்த்துவிட்டு, தரணியின் விழிகளை நேர்கொண்டு அர்த்தமுடன்… கேள்வியாக நோக்கினாள்.
அவளது பார்வையிலேயே புரிந்து கொண்டவன், ‘’ அவருக்கு உடம்பு சரியில்லையாம், மெடிக்கல் லீவ்ல இருக்காரு’’ என்றான்.
தரணியையே விடாமல் பார்த்திருந்தவள், “உண்மைய சொல்லுங்க…” ஸார் என்றாள்.
க்ஷணநேரம் பானுவை நிமிர்ந்து பார்த்தவன்… அவளது கேள்விக்கு ஏதும் மறுமொழி கூறாமல் குனிந்து, சாப்பிடுவதில் மும்முரமானான்.
பிரை சூப்பர். என்ன கிழங்குங்க இது…? செம டேஸ்ட். உங்க சாப்பாட சாப்பிட்டு சாப்பிட்டு, வர வர எனக்கே சமையல் கத்துக்கனும்ற ஆசை அதிகமாகுது.
சும்மா பேச்சை மாத்தாதீங்க…? என்ன பண்ணீங்க….?
நிமிர்ந்து பானுவை முறைத்தான். “இன்னைக்குதான் வேலைக்கு வந்திருக்கீங்க. வந்தவுடனே எல்லாம் தெரிஞ்சுக்கனுமா….? சாப்பிடுங்க பானு. வேலை நிறைய இருக்கு…”
சாப்பிட்டு முடித்தவன், அவளுடைய டிபன் பாக்ஸை கழுவி எடுத்து வந்து, மூடி அவளுக்கு பக்கத்தில் வைத்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து சென்று தண்ணீர் பிடித்து வந்து தானும் குடித்து விட்டு அவளுக்கும் பிடித்து வந்து வைத்தான்.
கர்சீப்பை எடுத்து கை, வாயைத் துடைத்தவனுக்கு ஏப்பம் வந்தது. அவனை நிமிர்ந்து பார்த்தவளைப் பார்த்து, சிரித்துகொண்டே நகர ஆரம்பித்தான்.
“நான் கேட்டதுக்கு… நீங்க பதில் சொல்லவே இல்ல…………” என்றாள்.
திரும்பி அவளைப் பார்த்தவன்…………………. “இப்ப என்ன தெரியனும் உங்களுக்கு….?அன்னைக்கு என்னையும் தப்பா நினைச்சிதான, நான் வாங்கி கொடுத்த சேரியை திருப்பி கொடுக்கற மாதிரி, அதுக்கான பணத்தை ரிட்டர்ன் பண்ணீங்க………”. என்றான் கோவமாக.
திடுமென்று தரணி இப்படி கேட்டதும் தடுமாறிப்போனாள் செய்வதறியாமல். வாயில் எடுத்து வைத்த கவளத்தைகூட விழுங்க முடியாமல் தொண்டையில் சிக்கி… தடுமாறிப் பார்த்தாள் தரணியை.
அவன் கூறுவதும் உண்மைதானே. அவனையும்தானே சந்தேகப்பட்டாள்.
அவனது வார்த்தைகள் கொடுத்த வலியில்… மௌனமாக தலை குனிந்தாள் வார்த்தையில்லாமல்.
நான் கொஞ்சம் லொட லொடன்னு பேசுவேன்தான். ஆனால் எல்லார்கிட்டயும் அப்படி பேசறது இல்லை. பழகுறது இல்லை. என்னவோ நீங்க வேலைக்கு சேர்ந்த புதுசுல வேலை தெரியாம திரு திருன்னு… முழிச்சிட்டு வந்து என்கிட்ட நிக்கும் போது அவ்வளவு பிடிக்கும் உங்களை.
“உங்களோட இன்னோசன்ட் இன்னும் பிடிச்சது. ஏன் ஆணும் பெண்ணும் குளோசாவே பழக கூடாதா…….? இல்ல நல்ல நண்பர்களா……. இருக்கறதில்லையா…………?”
யாரோ ஒருத்தர் தப்பு பண்ணா எல்லாருமே அப்படி கிடையாது. “மனசளவுல எந்த கல்மிஷமும் இல்லாம…, உங்களோட நெருங்கி பழகறதால தான், என்னால எந்த விகல்பமும் இல்லாம உங்க சாப்பாட்டை எல்லாம் உரிமையோட எடுத்து சாப்பிட முடியுது”.
“என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லை. இதை உங்களுக்கு எல்லாம் நேர்ல வாயால சொன்னாதான் நம்புவீங்களா………….? என்றான் காட்டமாக”.
ஒரு ஆள் பழகுறது வச்சு தெரியாதா……?. இவன் நல்லவனா…, கெட்டவனான்னு…?”இத்தனை நாள்ல உங்ககிட்ட தப்பான பார்வையோ…, பேச்சோ… ஏதாவது என்கிட்டயிருந்து வந்திருக்கா…….?”
அன்னைக்கு அம்மாக்கு சேரி எடுக்கும்போதுகூட, டக்குனு மைன்ட்ல தோணுனதுதான். உங்களுக்கும் சேரி எடுத்து குடுக்கனும்னு.
டெய்லி உங்க கையால சமைச்ச சாப்பாட்டை உரிமையா எடுத்து சாப்பிடறேன். அதுக்கு பிரதி உபகாரமா ஏதாவது பண்ணனும்னு நினைச்சிதான், அந்த சேரிய… சடென்னா டிசைட் பண்ணி, வாங்கி குடுத்தது.
மறுநாளே முகத்தில அடிச்ச மாதிரி, அதுக்கான பணத்தை கொண்டு வந்து ரிட்டர்ன் பண்ணிட்டீங்க. இப்ப பர்த்டேக்குலாம் நாம கிப்ட் ஏதும் பிரசென்ட் பண்றதில்லையா………?
அதுல உங்க பிரண்ட்ஸ் சேரிலாம் கிப்ட் பண்ண மாட்டாங்களா……? அப்ப அதுல்லாம் தப்பா….? பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்சது சேரி ஜூவல்ஸ், ஆர்ணமென்ட்ஸ் தான. அப்ப அதை தான கிப்ட் பண்ண முடியும்.
உடனே அதுக்கு என்ன டையலாக் சொல்லி குடுத்தீங்க. எனக்கு சேரி எடுத்து குடுக்கனும்னா…………. என் புருஷன் இருக்கார்… என் அண்ணன் இருக்கார்.. என்னமா பேசீனீங்க………………..? ம்..ம்…..
அது அன்னைக்கு என்னை ரொம்பவே ஹர்ட் பண்ணிடுச்சு. அதனால தான் உங்ககிட்ட சொல்லாம கூட சீக்கிரமா வீட்டுக்கு கிளம்பியிருந்தேன்…. என சொல்லி விட்டு அவனது டேபிளுக்கு நகர்ந்து விட்டான்.
அவனது வார்த்தைகள் அத்தனையும் உண்மையானது தானே. சில சமயம் நம்முடைய கணிப்பு பிறழ்வது சகஜம்தானே. உண்மை உரைத்ததும் அவளுக்கு வருத்தத்தில் கண்கள் கலங்கியது. சாப்பிட்டு முடித்து கைகழுவி வந்தவள், அவனது டேபிளுக்கு வந்து அவன் முன் நின்றாள்.
அவளை சில நிமிடங்கள் கண்டு கொள்ளமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தவனுக்கு, அவள் நகருவதைப் போல தெரியாததால்… நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“ஸாரி………….” என்றாள் உதட்டசைத்து வார்த்தையின் ஓசை வெளிவராமல். அது “நான் படிக்கும்போது கூட காலேஜ்ல அவ்வளவா பாய்ஸ் கூட பேசினது இல்ல. நெருக்கமான பிரண்ட்ஸ்லாம் கேர்ல்ஸ்தான்”.
அதனாலதான்……………..”ஸாரி” என்றாள் கண்கள் கலங்கி நின்று.
இப்போதும் தரணிக்கு பானுவைப் பிடித்திருந்தது. இல்லல்ல நான் அப்படி நினைக்கல என, அவன் கூறியதும் மறுக்காமல், அதற்கு எந்த சமாதானமும், சப்பக்கட்டும் கூறாமல், அவள் தவறை ஏற்று வந்து நின்று மன்னிப்பு கேட்டவளை… அவனுக்கு அவ்வளவு பிடித்தது.
அவளையே பார்த்தவன் “சரி என தலையசைத்தான்……. மனதை வெளிக்காட்டாமல்”.
“அன்னைக்கு உங்களை ஹர்ட் பண்ணனும்னு பேசல. நீங்க பணத்தை வாங்கிக்கனுமேன்னு பதட்டத்துல, டென்ஷன்ல பேசிட்டேன், ஸாரி……..”
பானுவின் இன்னோசன்ட் முகத்தைப் பார்த்து முறுவலித்தவன், “நானும் ஸாரி…..” என்றான்.
…………………….
நானும் கொஞ்சம் ஒவரா உங்ககிட்ட உரிமையெடுத்திட்டேன்னு தெரியுது…. “ஸாரி…………..” என்றான். “என் கூட படிச்ச பிரண்ட்ஸ் எல்லாம் ஜோவியலா பேசி பழகுவாங்க. அது போலவே உங்களோடவும் உரிமை எடுத்துகிட்டதுக்கு ஸாரி………”
சரி நீங்க வேலையப்பாருங்க என அவளை அனுப்பினான். தலையசைத்து தனது இடத்துக்கு வந்தவள் வேலையில் மூழ்கினாள்.
அடுத்த சில நாட்களிலேயே பானு தெளிந்திருந்தாள். எப்போதாவது அதைப்பற்றின நினைவு வந்தாலும், அதனை ஒதுக்கி கவனத்தை வேறு எதன் பேரிலாவது செலுத்தி அதிலிருந்து விடுபட முயன்றாள்.
இதனால் நடந்த நல்ல விஷயம் தரணி சங்கருடனும் பானுவுடனும் நெருங்கியிருந்தான். எப்போதாவது விடுமுறை நாட்களில் சங்கரின், பானுவின் அழைப்பின் பேரில், அவர்களது வீட்டுக்கு சென்று சாப்பாட்டை… ஒரு கட்டு கட்டிவிட்டு வருவான்..
இவன் வருகிறான் என்றாலே தரணிக்கு பிடித்த ஐட்டமாக செய்து வைப்பாள் பானு. கூச்சப்படாமல் பிடித்ததை செய்யச் சொல்லி கேட்டு வாங்கி சாப்பிட்டு வருவான் அவர்கள் வீட்டில்.
நாட்கள் அதன் போக்கில் ஓடின. செல்வி நன்கு தேறி வந்திருந்தார். அடுத்த வாரம் சென்னை திரும்புவதாக இருந்தது அவர். அவரைப் பார்த்துச் செல்ல என மதுவும் பூர்ணியும் வந்திருந்தனர் அன்று.
செல்விதான் மதுசூதனனிடம் முக்கியமாக பேசவேண்டும் என வரவைத்திருந்தார் அன்று.
சென்னையில் பூர்ணியின் பேரில் இருக்கும் அவளது சொத்துக்களைப் பற்றி பேசுவதற்காக அழைத்திருந்தார்.
அவருக்கு அவர் இருக்கும் காலத்திலேயே அனைத்தையும் நல்லபடியாக மதுசூதனனிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என எண்ணினார். அதைப்பற்றி மதுசூதனனிடம் பேசினார்.
இவ்வளவு நாள் நான் பாதுகாத்துட்டேன். இனிமே அவளோட சொத்தை உங்ககிட்ட ஒப்படைச்சிடனும்னு நினைக்கறேன். வீடு, கடைன்னு அவள் பேர்ல இருக்கற அத்தனை இடத்தையும் இனி நீங்க பொறுப்பு எடுத்துக்கோங்க.
இதுவரைக்கும் அதிலிருந்து வந்த வருமானம் எல்லாத்தையும், அவள் பேர்லதான் பேங்ல போட்டு வச்சிருக்கேன். ஒரு நாள் சென்னை வந்தீங்கனா எல்லாத்தையும் உங்களுக்கு காமிச்சு கொடுத்து, பொறுப்பை ஒப்படைச்சுடுவேன்.
மதுசூதனன், “அதற்கு இப்ப என்ன அவசரம்? எப்பவும் போல நீங்களே பாருங்க” என கூறியும் அவர் கேட்கவில்லை. அவரது பிடிவாதத்தின் பேரில், மது சரி… என சம்மதித்த பிறகுதான் நிம்மதியானார் செல்வி.
செல்வி சென்னைக்கு திரும்பின சில நாட்களிலேயே மதுசூதனனையும் பூரணியையும் வரவைத்து அவர் கூறியபடியே நேரில் அழைத்துச் சென்று, அவள் பெயரில் இருந்த சொத்துக்களை காண்பித்துக் கொடுத்து அதற்கான பத்திரங்களையும் அவனிடம் ஒப்படைத்திருந்தார்.
தொடரும்.
