Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இது நிலைக்குமா இல்லை நீடிக்குமா.. என் அன்பே!!"

இது நிலைக்குமா இல்லை நீடிக்குமா…என் அன்பே !!-Part 1

Part 1:

சூரிய கதிர்கள், தென்னை ஓலையின் மீது தெறித்து அதன் அழகான இளஞ்சிவப்பு கதிர்களை அந்த இரண்டு அடுக்கு வீட்டின் மீது தெறித்தது போல மிளிர்ந்தது அவ்வீடு. வீட்டின் நாட்புறமும் தென்னை ஓலையின் சலசலப்பு அந்த புணராத காலைப்பொழுதின் அழகை கூறியது போல் ஓர் தோற்றம்.



Advertisement

வீட்டின் முன்வெளியில் அழகிய புல்வெளி . அதன் நடுவில் ஒரு ஊஞ்சல், அதில் பளபளப்பான மரத்தால் செய்யப்பட்ட இருக்கை. அது பார்க்க வெண்ணை போல வளுவளுப்பாக இருப்பது போல ஒரு தோற்றம் ,அதை பார்பவர்யாராயினும் வந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க தூண்டும்.

புல்வெளியைச் சுற்றி மரங்கள்,அவற்றின் இலைகள் காற்றில் சலசலக்கின்றன, மேலும் மொட்டுவிரிந்த பூக்களின் வண்ணம் அந்த பச்சைப்புல்வெளியில் அதன் வண்ணங்களை சிதறியது போல ஓர் மாயத்தோற்றம்.மொத்தத்தில் இது ரம்மியம் மற்றும் அமைதியின் ஒரு ஆட்சி .

Advertisement

இவ்வனைத்து அழகையும் இருக்கண்கள் ரசித்துக்கொண்டு இருந்தது. அவளுடைய கண்கள் திரவ அம்பர் குளங்கள் போன்றவை ,அவற்றின் ஆழம் மற்றும் இதம் பார்ப்பவரை ஈர்த்துவிடும் .அவை புத்திசாலித்தனத்துடனும் கருணையுடனும் பிரகாசித்தன.

Advertisement

அங்கே மரத்தில் விளையாடும் அணில்களை பார்த்து அவளுடைய புன்னகை, அது அவள் முகம் முழுவதையும் ஒளிரச் செய்து அதைக் காண்போர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகின்றது . 

Advertisement

அவளது தலைமுடி தோள்களில் கீழே ஒரு அலை போல் தழுவி அவளது மென்மையான அம்சங்களை எடுத்துரைக்கிறது அவளது ஒவ்வொரு கூந்தல் இழையும் மெல்லிய தென்றலில் நடனமாடுவது போல் தோன்றி அவளது கவர்ச்சியைக் கூட்டுகிறது. 

அவள் காதம்பரி இருபத்தியொரு வயது மங்கை இனி அவளுடன் பயணிப்போம் .

 ஏய் பரி, இன்னும் எவ்ளோ நேரம் தா அந்த ஒரு டம்ளர் இஞ்சிடீயை கூடிப்ப,அதுவும் சாரல் வேற அடிக்குது அதுல நின்னுபடுத்துக்காத.

அடுத்தவாரம் பெங்களூரு போணும்ல அப்டியே போய் உங்க அண்ணன எழுப்பு நைட் புறாமுழிச்சுட்டு இருக்கவேண்டியது ,அப்புறம் காலைல நேரமாச்சுன்னு குதிக்கவேண்டியது என்று காதம்பரியின் அன்னை அபிராமி தனது காலைநேர சுப்ரபாதத்தை தொடங்கினார். 

மகனே கார்த்திகேயா !! உன் எருமை கண்களை திறந்து உன் அழகிய தங்கையை பாரும்மய்யா…பாரும்மய்யா… பாரும்மய்யா… என்று பாடியபடியே அவன் அண்ணனின் தோளை குலுக்கினாள் .

 எழுந்திரு கார்த்தி எழுந்திரு …எழுந்திரு கார்த்தி எழுந்திரு எப்படி எழுப்புனாலும் எழுந்துக்குதா பாரு எரும .என்னபண்ணலாம்?

 தண்ணி எடுத்து ஊத்துவோம் !அச்சோ அபிராமிட்டா யாரு வாங்கறது இந்த plan ஆஹ் delete பண்ணுடி காதம்பரி . யோசிடி பரி  யோசி …வேற என்னசெய்ய ..Idea  இருடி உண்ண எப்படி எழுப்பரணு .

போன் எங்க ?  போன் எங்க ? தா இங்க இருக்கு … என்று வடிவேல் மாடுலேஷனில் பாடிக்கொண்டே youtube-ல் “Who let the Dogs out” பாடலை ஒலிக்கவிட்டு  கார்த்திகேயன் காதின் அருகில் phone-யை  வைத்துவிட்டு, கதவின் பின்னு ஒளிந்து நின்று  அவள் அண்ணணனை நோட்டமிட்டால் பரி .

சமையல் அறையில் காதம்பரியின் தந்தை மஹேந்திரன் அவரது Coffee Mug-ல் இஞ்சிடீயை ஊற்றியபடி அபிராமியிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது, ஏய் பரிரிரி , எருமமாடே ஒழுக்கமா குடுக்கற அடிய வாங்கிக்கோ… கையிலமட்டும் கிடைச்ச சட்னி தா மவளே என்று கத்திக்கொண்டே சமையல் அறையில் நுழைந்தனர் அண்ணன்தங்கை இருவரும் .

ஐயோ!! இப்போ என்ன பிரெச்சனை ரெண்டுபேருக்கும் காலங்காத்தால எட்டு ஊருக்கு கேக்கற மாற கத்திட்டுவரிங்க ரெண்டுபேரும் என்று சீடுசீடுத்தார் அபிராமி .

மா!! இவ தாம்மா, ஹே எருமை ஒழுக்கமா நீயா வந்து ஒரு அடிவாங்கிக்கோ நா மட்டும் உன்ன புடிச்ச அவ்ளோதா ரணகளம் ஆகும் பாத்துக்கோ..

ஹலோ ஹல்ல்லலோ  நா எதுக்கு அடிவாங்கணும் . அம்மா என்ன சொன்னாங்களோ அதத்தான் பண்ண,அதுக்குப்போய் இவ்ளோ பண்ணறான்.

 உன் பேச்சுக்கு இவ்ளோ தா மரியாதையான்னு கேளுமா என்று குறிக்கொண்டு நைஸ்- யாக அப்பா மஹேந்திரன் பின்னாடி போய் நின்று கொண்டாள் பரி.

பின்பு மெல்லமாக அம்மா தா பா அண்ணணன் நா எழுப்பிவிடசொல்லுச்சு, நல்லதுக்கே காலம் இல்ல ச்ச..

 மஹேந்திரன் எதோ கூற வர கார்த்திகேயன் அவரை தடுத்து உடனே பொங்கிட்டு உங்க பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராதீங்க பா.

ஏன்மா நீ சத்தமா பாட்டவெச்சு என்ன எழுப்ப சொன்ன ? என் காதுல இருந்து ஒரே ரத்தம் நீ கேளுமா என் நியாயத்தை என்றான் கார்த்தி .அதற்கு உண்டனே soft-ஆஹ் எழுப்பின தொரை எழுந்துகள,அதா  ஷிக் ஷிக் ஷிக்  சிங்கப்பாதைல போன்ன ,இது ஒரு குத்தம் ஆஹ் My Lord …

 இப்டி ரெண்டுபேரும் வாக்குவாதம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள். திடீரென்று அண்ணன்தங்கையும், அம்மா என்ன மா நாங்க தோண்ட தண்ணி வைத்த இங்க points-ஆஹ் சொல்லிட்டு இருக்கோம், நீ பாட்டுக்கு உன் வேலைய பாக்கற…

அப்பா நீங்களாவது எதாவுது சொல்லுங்கப்பா என்றனர் இருவரும்

அபிராமி இருவரையும் பார்த்து இந்த நாய் இருக்குல்ல நாய் அதுக்குள்ள சண்டை வந்தா செமயா கத்தும் அப்போ யாரும் அத கிட்டப்போய் அவங்க சண்டையை பிரிச்சுவிடமாட்டாங்க ஏன் தெரியுமோ  .

மா என்று கத்தினர் இருவரும். என்னயென்றார் அபிராமி.

எங்கள பாத்தா நாய்-னு சொல்ற என்று ஷாக்க்காகினர் இருவரும்.

ஆமா, உங்கள பாத்து தா. உங்க ரெண்டு பேர் கண்ணா பாத்து தா சொன்ன,அதுக்கு என்ன இப்போ என்றார் அபிராமி.

நீயா பேசியது என் அம்மா நீயா பேசியது என்று பாடினால் பரி …

ஆமாங்க மேடம் நாந்தான் பேசின, இப்போ என்ன அதுக்கு என்றார் அவர்களது அன்னை.

அண்ணனும் தங்கையும் ஒருவர்முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர் .

ஒழுக்கமா இன்னும் ஒருமணிநேரத்துக்குள்ள குளிச்சுட்டு, Dining table-க்கு வந்தா இட்லி கிடைக்கும், இல்லயா சட்னி கூட கிடைக்காது எப்படி வசதி பாசமலர்களே ?? என்று நக்கலாய் தன்பிள்ளைகளை பார்த்தார்.

மின்னல்வேகத்துல இந்த பரி அவ இட்லிய வாங்க வரேன் என்று குறிக்கொன்டே தன் அறையை நோக்கியோடினாள் . அவள் பின்னால் தனது அறையை நோக்கி கார்த்தியும் சென்றான் .

“ இந்த உலகத்தில் நான் இல்லை”  என்னும் பாவனையுடன் அமர்ந்துயிருந்த தன் கணவரை யோசனையுடன் பார்த்தார் அபிராமி. இன்றைய சமையலான வெங்காயம், கேரட் சேர்த்த சோளப்பணியாரம் ,தக்காளி குழம்பு மற்றும் கம்பு கலியை  டைனிங் டேபிள்- இல் வைத்துவிட்டு வந்து தன் கணவரின் தோள் தொட்டார்.

என்னமா அபி, பசங்க எங்க காணோம் என்றார். அவங்க பஞ்சாயத் அஹ முடிச்சுட்டு போய் பாத்து நிமிஷம் ஆகுது, காபி கூட குடிக்காம வெச்சுட்டு என்ன யோசனை உங்களுக்கு என்று கேட்டார் அபிராமி கணவனிடம்.

பெருசா ஒண்ணுமில்ல, அபி என்றார் ஒரு பெருமூச்சுடன்.சரி, அப்போ சிறுசா என்ன என்றார். சொல்லுங்க மனசில போட்டு ஒலபமா.

 தன்மனைவியை யோசனையுடன் பார்த்தார் கூறலாமா வேண்டாமா என்று ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!