Skip to content
Post Views: 11,716
அத்தியாயம் 1
செக்க சிவந்த வானம் மலையின் பின் மறைய தயாராக இருந்த சமயத்தில் கார் ஒன்று தாருமாறாக மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆளில்லா பகுதியில் சென்று கொண்டிருந்தது. காரினுள் பள்ளி வயதையொத்த மாணவ, மாணவிகள் குடிபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தனர்.
கார் எதிலோ மோத பட்டென பிரேக்கை அழுத்தினான் மித்திரன். “போதையே இறங்கிடுச்சு வாங்கடா” என்னன்னு பார்க்கலாம் என்று விசாகா சொல்லிக் கொண்டே கதவை திறந்து இறங்கினாள். காரை ஓட்டிய மித்திரனும், ஆகாஷ், லீனா, மெல்லினாவும் விசாகா பின்னே சென்றனர்.
“மித்திரா, ஒரு பொண்ணை இப்படி அடிச்சு தூக்கிட்டியேடா?” போச்சு பெரிய பிரச்சனையாகப் போகுது என்று விசாகா சொல்ல, எல்லாருக்கும் போதை இறங்கி பதட்டமாகி அவளிடம் ஓடி வந்தனர்.
Advertisement
“ஏய், இந்த பொண்ணு என்னடா இப்படி இருக்கா?” முகம் கூட தெளிவா தெரியல என்று ஆகாஷ் கேலி செய்ய, மெல்லினாவும் “ஆமாடா இவ நம்ம கூந்தல் கலரில் இருக்கா”.
கருப்புன்னு சாதாரணமா பேசாதீங்க. அவங்க கூந்தல் நம்முடையதை விட நீளமாக இருக்கு. அவங்க கண்ணை திறந்த பின் பாருங்க. அவங்க காந்த கண்ணழகியா தான் இருப்பாங்க என்று லீனா சொல்ல, அனைவரும் சிரித்தனர்.
“சிரிக்கும் நேரமா இது?” என்று விசாகா கோபமாக அந்த பொண்ணை எழுப்ப, நல்ல வேலை தலையில் எந்த அடியும் இல்லை. அவங்க பையை எடுத்து வந்துருக்காங்க. ஊருக்கு புதுசு போல என்றான் மித்திரன்.
Advertisement
எழ மாட்டேங்கிறாங்கடா. ஆனால் மூச்சு இருக்கு. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திடலாம் விசாகா சொல்ல, ஹாஸ்பிட்டல்லா? பெரிய கேஸ் ஆகிடாமல். அப்புறம் என்னோட அப்பா டின்னு கட்டிருவாரு என்றான் ஆகாஷ்.
Advertisement
“யாராவது வீட்டுக்கு கூட்டிட்டு போய் டாக்டர் வச்சு பார்க்கணும்” என்றாள் லீனா.
“சரி, அப்ப உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டி போ” என்றான் ஆகாஷ்.
அண்ணா திட்டுவான். என்னால முடியாது என்று லீனா சொல்ல, “மித்திரன் நீ?” என்று ஆகாஷ் கேட்க, என்னோட சித்தி பத்தி உங்களுக்கு தெரியாதா? என்றான் மித்திரன்.
Advertisement
“விசா, நீ?” என்று லீனா கேட்க, எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் அப்பா நினைச்சா தான் பயமா இருக்கு என்று எல்லாரும் மெல்லினா, நீ தான் கூட்டிட்டு போகணும். உங்க வீட்ல யாரும் கண்டு கொள்ளவே மாட்டாங்க என்றனர்.
மெல்லினா யோசனையுடன் அடிபட்ட பொண்ணை பார்த்தாள்.
“ஏய், என்னடி பார்த்த அவங்க தலையில இரத்தம் வருது” என்றாள் லீனா.
சரி, கூட்டிட்டு போகலாம் என்று அனைவரும் அந்த பொண்ணை காரில் போட, அந்த பொண்ணோட தாலி அவர்கள் கண்ணில் பட்டது.
டேய், இவங்க கல்யாணம் ஆனவங்கடா. வீட்டை விட்டு வந்திருப்பாங்களோ? என்று ஆகாஷ் கேட்க, அவங்க பையை எடுத்து உள்ள போடு.
“பார்க்கவே பாவமாக இருக்குடா” என்றாள் விசாகா.
“அதான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்றியா?” மெல்லினா கோபமாக கேட்டாள்.
“மெல்லி, சிகிச்சை செய்த பின் அனுப்பி விடு” என்றாள் விசாகா.
முதல்ல வீட்டுக்கு போகலாம். அவங்க செத்து போயிடாம. மெல்லி உன்னோட டாக்டர் அங்கிளுக்கு போன் செய்து விசயத்தை சொல்லாமல் உன்னோட வீட்டிற்கு வரச்சொல்லு என்றான் மித்திரன்.
“எல்லாத்தையும் தரமா செஞ்சுட்டு பிளான் போட்டு கொடுக்கிறியா?” என்ற மெல்லியா “சீக்கிரம் காரை எடு” என்று அவள் அவரை அழைக்க அனைவரும் மெல்லினா வீட்டிற்கு கிளம்பினார்கள்.
சிங்காரச் சென்னையில் பீச் சைடு வசதியான ரெசார்ட்டின் ஓர் அறையில், ஹே பேபி இன்னும் எவ்வளவு நேரம்? “கம் க்விக்” என்று அழைத்து அவளிடம் சென்று ஓர் பெண்ணை இழுத்து தன் மேல் போட்டு சரசத்தில் இருந்தான் துகிலன்.
சுண்டினால் இரத்தம் வரும் சிவப்பு நிறம். சின்னப்பையன் போல் அனைவரும் நம்பும் நல்லவன் போன்ற தோற்றம். அவனுக்கு ஆண் நண்பர்களே கிடையாது. முழுவதும் பெண்கள் தான் எப்போதும் அவனை சுற்றி இருப்பார்கள். அந்த பொண்ணோ அவனது அழகில் மயங்கி பணம் வாங்கிக் கொண்டு அவனுடன் உல்லாசமாக இருந்தாள்.
“ஹே டியர்” என்று மற்றுமொரு பொண்ணும் உள்ளே நுழைந்து அவளாக ஆடையை களைந்து அவர்களிடம் சென்றாள். அவன் பணத்தை இருவர் மீதும் அள்ளி தெளித்தான். அந்நேரம் அவனுக்கு கால் வர, அதை பார்த்து “நிமா டார்லிங்” செம்மையா எஞ்சாய் பண்ணிட்டு இருக்கேன். நீயும் வர்றீயா? அவன் கேட்க,
“துகி, என்னிடம் வச்சுக்கிட்ட செத்தடா நீ” என்ற நிமலா..அந்த பொண்ணு எங்கடா?
எந்த பொண்ணு?
அதான் அவடா?
அவளா? எனக்கு பிடிக்கலை.
ஆமா எனக்கும் பிடிக்கலை. அதான் முதல்லவே வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனால் நீ தான் கேட்கவேயில்லை என்றாள் நிமலா.
நல்ல மூடுல இருக்கும் போது அவள எதுக்கு நினைவு படுத்துற? என்று அவன் சொல்ல, சரிவிடு துகி. ஈவ்னிங் அண்ணா நகர் கஃபேல்ல மீட் பண்ணலாம் என்று நிமலா சொல்ல, ஓ.கே டார்லிங் என்று துகிலன் சொல்ல நிமலா புன்னகையுடன் போனை வைத்தாள்.
நிமலாவும் துகியும் தோழன், தோழிகள். நிமலா துகிலனை காதலிக்கிறாள்.
அதே மாலை நேரம் “வொயிட் டிவி” நிறுவனர் முதல் ஊழியர் முழுவதும் பேட்டியை நல்ல படியாக முடிக்கணும் என்று அவரவர் வேலையை சுறுசுறுப்புடன் மும்பரமாக செய்து கொண்டு ஓடி திரிந்து கொண்டிருந்தனர்.
புதிதாக சேர்ந்த ஒருவன், “எதுக்கு இந்த பரபரப்பு?” என்று வினவினான்.
“என்ன கேட்டுட்ட? இப்ப ஆதிரேயன் சார் பேட்டிக்காக வரப் போறாராரு” என்றாள் ஒரு பொண்ணு.
ஆதிரேயனா?
அவரை தெரியாமல் ஊட்டில என்ன பண்ற? இங்க அவருக்கு என இல்லாத எதுவுமே இல்லை. ஷாப்பிங் மால், டீ எஸ்டேட், ரெஸ்டாரண்ட், ரெசார்ட் இருக்கு. ஹாஸ்பிட்டல், ஸ்கூல் கூட வச்சிருக்காரு. சாக்லேட் தொழிற்சாலை, டீ தூள் இப்போர்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியும் வச்சிருக்கார் என்று அந்த பொண்ணு சொன்னாள்.
“வயசான ஆளுக்காக இவ்வளவு பில்டப் பண்ற?” அந்த பையன் கேட்க, “என்னது வயசானவரா?” டேய் அவருக்கு வயசு இருபத்தெட்டு தான்டா. அவர் பார்க்க எப்படி இருப்பார் தெரியுமா? நம்ம சினிமா ஆக்டர் ராணா சாரை பார்த்துருக்கியா?
நம்ம பாகுபலி வில்லனா?
ஆமாடா, அவர் உடல் மாதிரி தான் இவர் உடல்வாகும். ஆனால் வட்ட முகம். அவரை விட மைதா மாவு நிறம். அப்படியொரு வெண்மை. பால் குணம் மாறாத தன்மை. கேட்கும் கேள்வியை தவிர அவர் யாருக்கும் பதில் சொல்ல மாட்டார். ஆனால் பொண்ணுங்க யாரும் பக்கம் கூட செல்லமுடியாது. அவரை பார்த்து புன்னகைத்தாலே அவர் கண்ணில் நெருப்பெறியும். அந்த கண்ணில் கண்ணாடி அணிந்திருப்பார். அழகோ அழகுடா அவர். இதெல்லாம் இருந்து என்ன புண்ணியம்? அழகான தன் மனைவியை இழந்து தன் குட்டிப்பிள்ளைகளுடன் குடும்பத்துடன் இருக்கார்.
மனைவி, பிள்ளைகளா?
ஆமாடா, அவர் மனைவி இறந்துட்டாங்க. அவரை விரும்பி காதலித்து கல்யாணம் செய்தார்கள். மருமகளை இழந்ததில் அவர் அம்மா சவிதாவிற்கு உடல் நலமில்லாமல் இருக்காங்க. அவரால் நாம் பேசுவதை கேட்க முடியும். ஆனால் ரியாக்ட் பண்ண முடியாது. அவர் அப்பா பிரபாகரனும் சேர்ந்து தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். தம்பி, தங்கை இருக்காங்க. அவர் தம்பி வெளிநாட்டில் படித்து வருகிறாராம். தங்கை அவர் பள்ளியில் தான் படிச்சுக்கிட்டு இருக்கா.
அவர் பொண்ணுங்க இருவரும் ட்வின்ஸ், கேஜி படிக்குறாங்க. ஆனால் சரியான சேட்டைகள். அம்மா இல்லாமல் வளரும் பிள்ளைகள். எப்படி இருக்கும்?
“ஹே, சார் வந்துட்டார்” என்று சத்தம் கேட்க, காரிலிருந்து ஆதிரேயன் கீழே இறங்கினான். நீ சொன்ன மாதிரி அப்படியே இருக்கார் என்று அந்த பையன் சொல்ல, “வா போகலாம்” என்று அவனை அழைத்துக் கொண்டு அவள் ஆதிரேயனுக்கு வெல்கம் பண்ண பூச்செண்டுடன் சென்றாள்.
அவன் அவளை பார்க்க கூட இல்லை. “தேங்க்யூ” என்று பூச்செண்டை வாங்கி தன் அசிட்டென்ட் அகரனிடம் கொடுத்து விட்டு நகர, நிறுவினர் அவனுடன் பேசிக் கொண்டு பேட்டியை ஆரம்பித்தனர்.
கேட்கும் கேள்விக்கு மட்டும் பதிலளித்த ஆதிரேயனிடம் அடுத்த கேள்வியாக ஒன்றை வைத்தனர்.
சார், உங்க மனைவி குழந்தை பெற்றெடுத்த சமயம் தான் இறந்தாங்க. ஆனால் அந்த நேரம் கூட நீங்கள் அங்கே இல்லை என்றும் அந்த நேரத்தில் நீங்க ஏற்றுமதி வேலையாக வெளிநாட்டிற்கு சென்றதாக எல்லாரும் சொல்கிறார்களே? உங்களுக்கு உங்கள் மனைவியை பிடிக்காதா? என்று பேட்டி எடுத்தவன் கேட்டான்.
மற்ற கேள்விக்கு பதில் அளிப்பது போல் சாதாரணமாகவே, என் மனைவிக்கு கொடுத்த தேதியில் மாற்றம் வந்து முன்னதாகவே பிரசவம் ஆனது. “ட்வின்ஸ்” என்பதால் அவள் உடல் திடீரென ஒத்துக்காமல் என்று கண்கலங்கி இறந்து விட்டாள் என்ற ஆதிரேயன் பிரசவ வலி வந்தவுடனே நான் அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் நான் வருவதற்குள் தன் மனைவி உயிர் பிரிந்து விட்டது என்றான்.
“சாரி சார்” என்று அவன் மீண்டும் கேள்விகளை தொடுக்க, கடைசியாக ஒரு கேள்வி சார். உங்களுக்கு மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கா? அப்படியிருந்தால் பொண்ணு வசதியான அழகான பொண்ணா தான பார்ப்பீங்க? என்று கேட்டான்.
மறுமணம் செய்யலாம். ஆனால் என் எண்ணத்திற்கு ஏற்ற பெண் கிடைப்பது கஷ்டம் என்றான் அவன்.
ஏன் சார்? அந்த பொண்ணு எப்படி இருக்கணும்? அவன் கேட்க, அந்த பொண்ணை என்னோட பிள்ளைகள் அம்மாவா ஏத்துக்கணும். நினைவில்லாத தன் அம்மா எழுந்து அந்த பொண்ணை ஏற்றுக் கொண்டால் எனக்கு ஓ.கே தான் என்றான்.
இதெல்லாம் நடக்கும் காரியமா? என்று அவன் நேராக கேட்க, ம்ம்..நடக்காதுல்ல “அப்புறம் எதுக்கு இந்த கேள்வி?” ஆதிரேயன் கேட்டான்.
ஓரு பொண்ணு எழுந்து, நீங்க சொன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்தால். “ஐ மீன்” உங்கள் வாழ்க்கையில் வந்து நீங்கள் சொன்னதை செய்து அவள் அழகில்லாமல் இருந்தால் கல்யாணம் செய்து கொள்வீர்களா? எனக் கேட்டாள்.
அழகு என்பது பார்ப்பதற்கு மட்டுமே. நம் ஒவ்வொருவரின் கண்ணோட்டம் தான். ஆனால் வாழ்க்கை வாழ அழகு முக்கியமல்ல. அதை விட நம்மவர்களின் இயல்பான குணம் தான் முக்கியம். அதை புரிந்து கொள்பவர்களுடன் வாழ்வது தான் இனிமையான வாழ்க்கையாகும் என்று தத்துவம் சொன்னான்.
“சூப்பரா சொன்னீங்க சார்”. அந்த பொண்ணு கருப்பாக இருந்தால் ஏத்துப்பீங்களா? என்று அவள் கேட்க, ம்ம்..அந்த பொண்ணுக்கும் விருப்பம் இருக்கணும். என் குடும்பம் அனைவருக்கும் விருப்பம் இருக்கணும் என்றான்.
உங்கள மாதிரி ஓர் ஆளை வேண்டாம்ன்னு ஒரு பொண்ணு சொல்லுவாளா சார்? என்று அவள் சொல்ல, ஆதிரேயன் பேட்டி எடுப்பவனை பார்த்தான். அவன் முடித்து விட, அந்த சேனல் நிறுவினர் வந்து சாப்பிட அழைத்தார்.
“நான் அதிகம் வெளிய சாப்பிட மாட்டேன் சார்” என்று விறுவிறுவென நடந்து காருக்கு செல்ல, அசிஸ்டென்ட்டும் அவன் பின் சென்று காரை திறந்து அவனுடன் ஏறினான்.
சார், கம்பெனிக்கு போகலாமா? “டி குரூப்ஸ்” எவ்வளவு கோட் பண்ணாங்க? என்று ஆதிரேயன் கேட்க, சார் நம்மை விட ஒரு பாயிண்ட் தான் குறைவு சார். நாம தான் வாங்கிட்டோமே? என்றான் அகரன்.
அகரா, இப்படி தான் எதையும் சாதாரணமாக விடக்கூடாது. ஒரு பாயிண்ட்ல்ல நாம் இன்று வெற்றி கண்டது போல் அவனும் கண்டு விடுவான். நம் காரியத்தை சரியாக செய்யணும். எப்போதும் கவனம் தேவை என்றான் ஆதிரேயன்.
ஓ.கே சார் என்று கம்பெனிக்கு போகவா சார்?
இல்ல, வீட்டுக்கு போகலாம். முத்தண்ணா அகரனை வீட்டில் விட்டு செல்லலாம் ஆதிரேயன் சொல்ல, இருக்கட்டும் சார். நான் சென்று விடுவேன் சார் என்றான் அவன்.
இருக்கட்டும்டா. உன்னோட வீடு விசயம் என்னாச்சு? ஆதிரேயன் கேட்க, சார், நம்ம கம்பெனிக்கு பக்கத்துல பிளாட் வாங்கிட்டேன். அண்ணா, அண்ணி எல்லாரும் ஊர்ல தான இருக்காங்க. அதான் இந்த வாரம் நேரில் பார்த்து சொல்லீட்டு உள்ள போகலாம்ன்னு இருக்கேன் என்றான் அவன்.
“சரி, உன்னோட இடம் வந்துருச்சு” ஆதிரேயன் பார்க்காமலே கூற, “தேங்க்யூ சார்” என்று அவன் இறங்க மணி இரவு எட்டானது. ஆதிரேயன் கண்ணை மூடி காரில் சாய்ந்து கொண்டான்.
காரை நிறுத்திய மித்திரன், “அவங்கள இறக்குங்கடா” என்று சொல்ல, ஆகாஷூம் மற்றவர்களும் அந்த பொண்ணை கீழே இறக்கினர். தலையில் அடிபட்ட இரத்தம் அதிகமாக முகத்திலும் வடிந்தது.
“மெல்லினா பார்த்துக்கோ” என்று மறுநிமிடமே காரில் ஏறி அவள் நண்பர்கள் கிளம்ப, “டேய் உள்ள வந்து விட்டுட்டு போங்கடா” என்று ரோட்டில் நின்று கத்தினாள் மெல்லினா.
அரண்மனை போன்ற மாளிகை. மெல்லினாவை பார்த்து அம்மாளிகையின் காவல்காரர் ஓடி வந்தார்.
என்னாச்சும்மா? இப்படி இரத்தமா இருக்கு? என்று அந்த பொண்ணை பார்த்து பதறினார்.
திவாகர் அண்ணா, இவள உள்ள தூக்கிட்டு வர்றீங்களா? அவள் கேட்டுக் கொண்டிருக்க, அவர்களது மருத்துவர் தமிழரசன் வந்தார்.
“இவ்வளவு இரத்தமாக இருக்கு. கொஞ்சமும் பதட்டமில்லாமல் இப்படி இந்த பொண்ணை போட்டு வச்சிருக்க?” என்று பிரபா வெளிய வா..என்று கத்திக் கொண்டே அந்த பொண்ணை தூக்கினார்.
அந்நேரம் மாளிகைக்குள் கார் ஒன்று நுழைந்தது. ஆதிரேயன் கீழே இறங்கினான். பிரபாகரும் ஓடி வந்தார். இருவரும் தமிழரசன் கையில் ஒரு பொண்ணு இரத்தமுடன் இருப்பதை பார்த்தனர். ஆதிரேயன் பெரியதாக கண்டுகொள்ளவில்லை.
“தமிழ், யாருடா இந்த பொண்ணு?” என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டே தமிழரசன் பின் ஓடி வந்தார்.
“உன் பொண்ணுக்கிட்ட கேளு” என்றார் அவர். ஆதிரேயன் நின்று தன் தங்கை மெல்லினாவை பார்த்தான். அவள் தெனாவட்டாக அவனை கடந்து சென்றாள். அனைவரும் உள்ளே செல்ல, வேலை பார்க்கும் அனைவரும் இவர்களை பார்த்தனர்.
வெகு வருடங்களாக சமையல் வேலை பார்க்கும் சீதாம்மா ஓடி வந்து, “அய்யா என்னாச்சு?” என்று கேட்டார்.
மருத்துவர் தன்னுடன் வந்த செவிலியருடன் தன் வேலையை பார்த்தார். மெல்லினா கூலாக சோபாவில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தாள். அவளை முறைத்து பார்த்துக் கொண்டே மருத்துவர் இருக்கும் அறைக்கு சென்றான் ஆதிரேயன். அவன் அப்பா பிரபாகரனும் உள்ளே இருந்தார்.
அந்த பொண்ணுக்கு கட்டிட்டு மருந்தை போட்டு விட்டு, கொஞ்ச நேரத்தில் இந்த அடி சாதாரணமானதா? இல்லை பலமானதான்னு தெரிந்து விடும் என்றார் தமிழரசன்.
பெருசா இருக்காதுல்ல? பிரபாகரன் கேட்க, இருக்காதுன்னு தான் நினைக்கிறேன். எழுந்த பின் தான் தெரியும் என்று மெல்லினா முன் வந்து நின்று, “என்னம்மா உன் வேலை இன்று பெருசா இருக்கே?” தமிழரசன் கேட்க,
அங்கிள், நான் ஏதும் செய்யலை. மித்திரன் தான் இவ வர்றது தெரியாம கார்ல அடிச்சு போட்டான். நான் என்ன செய்ய முடியும்? நாம தான் சிகிச்சை பார்க்கிறோமே? அப்புறம் என்ன? என்றாள் அவள்.
அம்மா, பணத்தை வைத்து எல்லாத்தையும் சரி செய்ய முடியாது. “பிள்ளைகள கவனிக்கிறத விட உனக்கு வேலை முக்கியமா போச்சுல்ல?” பிரபாகரனை தமிழரசன் திட்டினார்.
“ஆதி, இங்க வா” என்று தமிழரசன் அழைக்க, “சொல்லுங்க மாமா” என்று அமர்ந்தான் ஆதிரேயன். “பேட்டியில ஏதோ புதுசா பேசி இருக்க?”
“நடக்கும் வாய்ப்பில்லாத ஒன்றை பேசியதால் என்ன பிரச்சனை?” என்று அவன் கேட்க, “என்ன பேசுன ஆதி?” என்று பிரபாகரன் கேட்டார். தமிழரசன் போனை காட்டினார்.
“ஆதி என்ன இது?”
இதுல்ல என்னப்பா இருக்கு? இனி திருமணமெல்லாம் முடியாது. அதை விட இந்த பொண்ணுங்கள நம்பி மறுபடியும் ஏமாற வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.
ஏமாற்றமா? யாருக்குடா? உன்னோட மனைவி அப்பாவை பக்கம் வைத்துக் கொண்டே இப்படி பேசுற?
அழகான பொண்ணுங்க எல்லாருக்கும் பணமும், உடலும் தான் முக்கியமாக படுது. உங்க பொண்ணை பாருங்கப்பா. அந்த பொண்ணு அழகா இல்லாம இருக்கான்னு கீழ போடுற பொருள் போல போட்டு வைத்திருந்தாள் என்றான் ஆதிரேயன்.
மாப்பிள்ள, நீங்க பார்க்கலையே?
இல்ல மாமா, பார்த்தேன். மெல்லினா கார் வந்தததை பார்த்து தூரத்திலே நிறுத்தி விட்டேன். அவளும் அவள் நண்பர்களின் செயலும் தான் தெளிவாக தெரிந்ததே!
“ஆமா, எனக்கு இவள பார்க்கவே அசிங்கமா இருக்கு. பிடிக்கலை. சிகிச்சை முடியவும் வெளிய அனுப்பிடுங்க” என்றாள் மெல்லினா.
இலக்கியா செய்தது தவறு தான். மிகப்பெரிய தவறு தான். “அதுக்காக நீங்க மன்னிக்க கூடாதா?” தமிழரசன் கேட்டார்.
மன்னிப்பா? அவள் என்னோட தம்பியையே காதலித்து ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்டாள். பின்னாவது எனக்கு உண்மையாக இருக்கணுமா? இல்லையா? என்று சத்தமிட்டான் ஆதிரேயன்.
“மன்னிச்சிருங்க மாப்பிள்ள” என்றார் தமிழரசன்.
மாமா அவளுக்காக நீங்க மன்னிப்பு கேட்க தேவையில்லை. அவளுடன் ஒருநாள் கூட நிம்மதியாக பொழுதை கழிக்க முடியவில்லை. அவளால் மனதளவில் நான் பட்ட துயரங்கள் பல. எதையும் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது. அவள் துரோகி. அவ தான் இப்ப இல்லையே? அதுவும் நல்லது தான். பிள்ளைகளையாவது நல்லா வளர்க்கலாம். அவள் இருந்தால் அவர்கள் வாழ்க்கையையும் கெடுத்து விடுவாள்.
“நிறுத்துடா” பிரபாகரன் கத்த, தமிழரசன் கண்ணீருடன் எனக்கு வேற மகள் இருந்தாலாவது உங்களுக்கும் அவளுக்கும்..
மாமா, போதும். எனக்கு திருமணமே வேண்டாம். இதை நான் பேட்டியில் சொல்லி இருந்தால் நம் குடும்ப விசயம் வெளியே வந்திருக்கும். அம்மா நிலைக்கு காரணமும் அவள் தான்னு தெரிந்திருக்கும். அதுக்காக நான் பொய் சொல்லவும் இல்லை.
நான் சொன்ன மாதிரி நம்ம குடும்பத்தில் அனைவரும் முக்கியமாக லிதியா, நிதியா ஒரு பொண்ணை விருப்பப்பட்டு அம்மாவாக ஏற்றுக் கொண்டால் அவள் பரம ஏழையாக இருந்தாலும் நான் கல்யாணம் பண்ணிப்பேன்.
நம்ம லிது, நிது பக்கம் அவ்வளவு சாதாரணமாக யாரும் நெருங்க முடியாது. “தெரியும்ல்ல மாமா” என்று சாப்பிட்டு போங்க. நான் கிளம்புகிறேன் என்று எழுந்தான்.
“தம்பி, சாப்பிட்டு போங்க” என்று சமையற்காரம்மா சீதா கூற, “வாரேன்ம்மா, என்னை சரி செய்திட்டு வாரேன்” என்று தமிழரசனை பார்த்து “பணத்திற்காக ஒருவன், படுக்க ஒருவன் என்று இல்லாமல் பாசத்தை மட்டும் வைத்திருக்கும் பொண்ணு கிடைப்பது நடக்காது மாமா”.
யாரும் எனக்கு பொண்ணு பார்க்க வேண்டாம். அவரிடமும் சொல்லுங்க என்று மேலுள்ள அவன் அறைக்கு சென்றான் ஆதிரேயன்.
தமிழரசன் கதறி அழுது கொண்டு தன் நண்பனாகிய சம்பந்தியிடம், “என்னை மன்னிச்சிருடா” இலக்கியா இப்படி இருப்பான்னு தெரிஞ்சிருந்தா நான் ஆதிக்கு திருமணம் செய்து அவன் வாழ்க்கையை கெடுத்திருக்க மாட்டேன். அம்மா இல்லாமல் இப்படி வளர்ந்துட்டாடா என்ற அவர் நம் பேத்திகளுக்கு கண்டிப்பாக அம்மா வேணும்டா. இன்னும் இலக்கியாக்கள் உருவாக விடக்கூடாதுடா என்று சொன்னார்.
ம்ம்..என்று அமைதியாக பிரபாகரன் சொல்ல, மெல்லினா இருவரையும் முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
“பிள்ள எப்படி இருந்தான்?” அவன் முகத்தில் சிரிப்பே இல்லாமல் போச்சுடா. நானும் அவளும் மருமகளை கவனித்து இருந்திருக்கணும். கவனிக்காமல் விட்டு என் பிள்ளை வாழ்க்கையையும் என் மனைவியை உடல் நிலையையும் கெடுத்திட்டேன் என்று வருந்தினார்.
பிரபா, என்று சுற்றி பார்த்த தமிழரசன் யாருமில்லாமல் இருப்பதை பார்த்து விட்டு, நம்ம ஆதி பேட்டில்ல சொன்ன மாதிரியான பொண்ணு மாதிரி தானடா இந்த பொண்ணு இருக்கா. அதனால இந்த பொண்ணை ஆதியிடம் கட்டிக்க சொல்லி கேட்கலாமா?
பைத்தியமாடா நீ? அந்த பொண்ணு கழுத்துல இருந்த தாலியை நீ பார்க்கலையாடா?
இந்த நேரத்துல கையில் பையுடன் வந்தா பிரச்சனையாக தான இருக்கும். அந்த பொண்ணிடம் பேசலாம்டா.
இல்லடா. இந்த பொண்ணை நம்ம குடும்பத்துல ஏத்துக்க முடியாதுடா. அதுவும் கல்யாணம் முடிந்த பொண்ணு வேற. அவளோட புருசனுக்கு தெரிந்தால் யோசித்து பாரு தமிழ்.
சரிடா, வேண்டாம். நம்ம பாப்பாவை ஸ்கூல்ல இருந்து நிப்பாட்டி ஒரு மாதம் ஆகுது. இந்த பொண்ணை வச்சி நம்ம பேத்திகளையாவது சரி செய்யலாமே? தமிழரசன் கேட்டார்.
“கேர் டேக்கரே பயந்து ஓட வச்சிருங்க ரெண்டும்”. இந்த பொண்ணு எப்படிடா நம்ம பேத்திகளை சமாளிப்பா?
“முயற்சி செய்யலாமே?” என்றார் தமிழரசன்.
“சரிடா, முதல்ல அந்த பொண்ணு நல்லபடியா எழட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்றார் பிரபாகரன்.
சற்று நேரத்தில் ஆதிரேயன் கீழே வர, மெல்லினா சாப்பிட அமர்ந்திருந்தாள். செவிலியர் ஓடி வந்து சார், “அந்த பொண்ணு முழிச்சுட்டா” என்றாள். எல்லாரும் அந்த பொண்ணு இருக்கும் அறைக்கு வந்தனர்.
தலையில் கையை வைத்துக் கொண்டு படுக்கையிலிருந்து கீழே இறங்கினாள்.
“அம்மா, உனக்கு இப்ப எப்படி இருக்கு?” தமிழரசன் கேட்க, “தல வலிக்குது” என்று அனைவரையும் பார்த்தாள். அவர் அவளருகே வந்து நெற்றியில் கை வைக்க, அவர் கையை தட்டி விட்டு செவிலியர் பின் மறைந்து நின்றாள்.
அவர் “டாக்டர்ம்மா” என்றார் செவிலியர். அவரை எட்டி பார்த்து விட்டு மீண்டும் அவர் பின்னே நின்று கொண்டாள். மெல்லினா அவளருகே வந்து மேலும் கீழுமாய் பார்த்தாள்.
இருக்கட்டும்மா. “உனக்கு வேற எங்கேயும் அடிபட்டிருக்கா?” என்று தமிழரசன் கேட்க, செவிலியர் பின்னிருந்து முன் வந்து “இல்லை” என்று தலையசைத்தாள்.
பிரபாகரன் சீதாம்மாவை பார்க்க, அவர் அவளிடம் வந்து, “நீ யாரும்மா? இந்த ஊர்தானா?” என்று கேட்டாள்.
அவள் கண்ணீருடன் இல்லை. நான் சென்னை..என்று ஆண்கள் மூவரையும் பார்த்து விட்டு சீதாம்மாவை பார்த்து, உங்கள பார்த்தா என்னோட அம்மா மாதிரி இருக்கு. கட்டிக்கவா? என்று கேட்டாள். எல்லாரும் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.
மஞ்சலும் சிவப்பும் கலந்த குர்தியும், கண்கள் மீனாக, உதடு கருப்பாக அதன் மீதுள்ள மச்சம். கருப்பு நிற உறுப்பழகியாக இருந்தாள். சீதாம்மா அவராக அணைக்க, அவளும் அணைத்துக் கொண்டு அழுதாள்.
“புருசனிடம் கோவிச்சிட்டு வந்துட்டியாம்மா?” அவர் கேட்க, அவரை விலக்கி அவளது காலை பார்த்தாள். பாதத்தை தரையில் ஊன்றாமல் தூக்கி வைத்திருந்தாள். எல்லாரும் அவளது காலை பார்க்க, எதுக்கு காலை தூக்கி வச்சிருக்க? என்று மெல்லினா கேட்க, அவள் கண்ணீருடன் மெல்லினாவை பார்த்தாள்.
“சும்மா சும்மா அழாத. எனக்கு கடுப்பா இருக்கு” என்றாள் மெல்லினா.
உனக்கென்னம்மா பிரச்சனை? “நகரும்மா” என்ற தமிழரசன் அவளருகே வந்து “உட்காரும்மா” என்றார்.
“இல்ல இருக்கட்டும்” என்று அவ்வறையை கண்களால் துலாவினாள்.
“உட்காரும்மா” என்று சீதா அவளை உட்கார வைத்து, அவளது பாதத்தை பார்த்தார்.
யாரும்மா, இப்படி செஞ்சது? கால்ல இப்படி சூடு போட்டிருக்காங்க? என்று கேட்டார்.
அவள் கண்ணீருடன் அவரை பார்த்தாள். அதை பார்த்த மெல்லினா “உனக்கு வலிக்கலையா?” என்று கேட்டாள்.
“வலிக்குது” என்றாள் அந்த பொண்ணு.
தமிழரசன் செவிலியரை பார்க்க, “வழி விடுங்க” என்று செவிலியர் அந்த பொண்ணுக்கு மருந்து போட்டு விட்டார்.
உன்னோட புருசன் தான் செய்தானா? பிரபாகரன் கேட்க, ஆதிரேயனும் மெல்லினாவும் தன் அப்பாவை பார்த்தனர்.
அதற்கும் “ஆம்” என்று தலையசைத்தாள்.
“நீ என்னம்மா செஞ்ச?” சீதா கேட்க, நான் அவனோட அறையை விட்டு தப்பிக்க பார்த்தேன். அதனால் தான் சூடு போட்டான்.
“தப்பிக்க நினைச்சியா? உன்னோட கணவனிடமிருந்து எதுக்கு தப்பிக்க நினைச்ச?” செவிலியர் மருந்து போட்டுக் கொண்டே கேட்க, அவள் அழுதாள்.
மஞ்சள் கயிற்றை பார்த்தால் திருமணம் முடிந்து “ஒரிரு மாதம்” இருக்குமா? சீதா கேட்க, இல்ல “மூன்று நாள்” ஆகுது என்றாள். அனைவரும் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தனர்.
என்னம்மா சொல்ற? மூன்று நாள் தானா? அதுக்குள்ள “சூடு போட்டிருக்கான்” என்று சீதா கேட்டார்.
என்னோட அண்ணாவை பைக் விபத்திலிருந்து காப்பாற்றி அவரிடம் அறிமுகமானான். அவர் விபத்தால் நாங்க அண்ணாவை பார்க்க சென்றோம்.
நாங்களா?
ஆமா, மூத்த அண்ணி, சின்னண்ணா, அண்ணி, அக்கா எல்லாரும் போனோம். அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தானாம். அவனுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னான் என்று இரு நாட்களிலே திருமணத்தை முடிவு செய்தனர். அவனுக்கு சொந்தமெல்லாம் இல்லை. அவன் ஒரு கம்பெனியில் மேனேஜராக இருப்பதாக சொன்னான் என்றார்கள்.
எனக்கு இது கூட பெரியதாக தெரியல. அவன் ரொம்ப அழகாக கலராக இருந்தான். அவனுக்கு எப்படி என்னை பிடித்தது?ன்னு சந்தேகத்தை அண்ணாவிடம் கேட்ட போது, “இந்த கலரால் தான் உன்னை பிடிச்சிருன்னு சொன்னாரு” என்று சொல்ல, நானும் நம்பி திருமணம் செய்து கொண்டேன்.
முதலிரவன்று தான் அவன் சுயரூபம் தெரிந்தது. அவன் என்னை பேச கூட விடலை. என் விருப்பமில்லாமல் தொட வந்தான். அவனை தடுக்க தள்ளியதில் அவன் கீழே விழுந்து அடிபட்டு மயங்கி விட்டான். நான் பயந்து எழுப்பிய போது அவன் எழவில்லை. அவனருகே செல்லவும் பயமாக இருந்தது. அவனை ஓரிடத்தில் கட்டி வைத்து விட்டு, தண்ணீரை தெளித்து அவனை எழுப்பினேன். அவன் விழித்து கட்டிலிருந்து தப்பிக்க முயன்றான். “அவன் என்னை ஏதும் செய்து விடுவானோ?” என்று பயந்து கட்டையை எடுத்து அவன் தலையில் அடிக்க மீண்டும் மயங்கினான்.
காலை எழுந்து தயாராகி வந்து அவனை பார்த்தேன். அவன் விழித்து என்னை முறைத்துக் கொண்டிருந்தான். கட்டை அவிழ்த்து விட்டு வெளியே ஓடி விட்டேன். அண்ணா, அக்கா எல்லாரும் சேர்ந்து எங்களை அவன் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.
சீதனமென்று எதுவுமே அண்ணா அவனுக்கு கொடுக்கவும் இல்லை. அவனும் கேட்கவில்லை. அதே சென்னை தான் என்று அவன் சொன்னதால் அவர்களும் என்னை அவனுடன் அனுப்பி வச்சாங்க. யாருமே என்னுடன் அவன் வீட்டை பார்க்க கூட வரலை. எனக்கு வித்தியாசமாக பட்டாலும் அப்பொழுது ஏதும் தெரியலை.
அவன் என்னை அழைத்து சென்றது ரெசார்ட் ஒன்றிற்கு. போகும் வரை அமைதியாக வந்தான். என் குடும்பத்தின் முன் நல்லவன் போல் நடித்தான்.
அந்த ரெசார்ட் வரவும் மீண்டும் என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். எனக்கு அவன் என்னை தொடுவதே மனதுக்கு தவறாக பட்டதால் அவனை தொட விருப்பமில்லாமல் அழுது கொண்டே இருந்தேன். அதனால் கோபத்தில் என்னை அடித்து கஷ்டப்படுத்தினான். ஆனாலும் நான் அவனை நெருங்கவில்லை. அப்பொழுது தான் அவன் உண்மையை கூறினான்.
என்னோட அண்ணா, அண்ணி பணத்துக்காக என்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அண்ணாவ ரொம்ப நம்பினேன். இப்படி செய்வாங்கன்னு நான் நினைக்கவேயில்லை. பத்து லட்சம் கொடுத்திருக்கேன். அதனால என்னுடன் ஒத்துழைக்கணும்ன்னு அண்ணி அவனுடன் பேசியதை சொன்னான்.
அண்ணாவுக்கு தெரியாமல் அண்ணி அவனிடம், இனி நான் எங்க வீட்டுக்கே வரக் கூடாதுன்னு சொல்லி தனியா பணம் வாங்கி இருக்காங்க. இதில் நானும் அவனை தொடவிடாமல் செய்ததால் வேற பொண்ணை நாங்க இருந்த அறைக்கு கூட்டிட்டு வந்தான். என்னை கோபப்படுத்த செய்றான்னு அமைதியா இருந்தேன்.
அந்த பொண்ணு கிளம்பும் போது தான் அவனுக்கு அந்த பொண்ணு வாடிக்கையார்ன்னு சொன்னா. நீ எவ்வளவு வாங்குனன்னு என்னிடம் கேட்டாள். என்னால தாங்கவே முடியல. அங்க இருக்க பிடிக்கலைன்னு கிளம்ப நினைத்த போது, அவன் அறையில் என்னை கட்டி வைத்து, ஒரு பொண்ணு இல்ல பல பொண்ணுங்களுடன் இருந்தான். என்னால அங்க இருக்கவே முடியல. வாமிட்டே எடுத்துட்டேன். ஆனால் அவனுடன் இருந்த பொண்ணுங்க என்னை எள்ளலாக பார்த்தனர்.
அவன் மீண்டும் என்னிடம் வந்தான். என்னை தனியே விட சொன்னேன். என்னோட வீட்டுக்கும் போகல. யாரும் தெரியாத இடத்திற்கு போறேன்னு சொன்னேன். அவன் கோபத்தில் அவன் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை என் கையில் வைத்தான் என்று உள்ளங்கையை காட்டினாள். அனைவரும் அவளை பாவமாக பார்த்தனர்.
மறு நாள் உடல் நலமில்லாமல் போக அவன் என்னை காலையில் எந்த தொந்தரவும் செய்யலை. ஆனால் மூணு பொண்ணுங்க எங்க அறையில இருந்தாங்க. அவன் கவனம் அவர்கள் மீது இருக்கு என்று அந்த காய்ச்சலிலும் தப்பிக்க முயன்று அவனிடம் மாட்டி காலில் சூடு வைத்தான். இதுக்கு மேல அவன் பக்கத்தில் இருந்தால் “கொன்னாலும் கொன்றுவான்” என்று எனக்கு அவனே தூங்க கொடுத்த மாத்திரையில் அவனுக்கு தெரியாமல் அவன் சாப்பாட்டில் கலந்து விட்டு தப்பித்து இங்கே வந்தேன்.
என்னோட தோழி இங்க தான் இருக்கா. அவள் முகவரியை வைத்து தேடிக் கொண்டிருந்தேன். காற்றில் முகவரி வைத்திருந்த காகிதம் பறக்க அதை பிடிக்க வந்து கார் முன் வந்து இப்ப இங்க இருக்கேன் என்று சொல்லி முடித்தாள்.
உன்னோட தோழியின் முகவரி நினைவிருக்கா? சீதா கேட்க, “எனக்கு தெரியல” என்று அழுதாள். இப்படி வெகுளிப் பொண்ணா இருந்துட்டு தனியா எங்கம்மா போகப் போற?
கண்ணை துடைத்து விட்டு, என்னிடம் நான் சம்பாதித்த பணம் கொஞ்சம் இருக்கு என்று சீதாவை பார்த்து, அம்மா இந்த ஊர்ல அவளை தவிர எனக்கு யாரையும் தெரியாது. “எனக்கு இங்க ஏதாவது விடுதி கிடைக்குமா அம்மா?” என்று கேட்டாள்.
விடுதியா?
செலவுக்கு என்னம்மா செய்வ?
“நான் ஏதாவது வேலை செஞ்சுப்பேன்ம்மா” என்றாள்.
தமிழரசன் பிரபாகரனை பார்த்தார். ம்ம்..என்று அவரை பார்த்து தலையசைத்த பிரபாகரன் அவளிடம், “உன்னால சின்னப் பசங்களுக்கு கேர் டெக்கரா இருக்க முடியுமா?” என்று கேட்டார்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஆதிரேயன், “அப்பா..இந்த பொண்ணால முடியாது” என்றான்.
மெல்லினாவுக்கு அந்த பொண்ணின் கஷ்டத்தால் மனம் கொஞ்சம் இளகினாலும் அவளது நிறம் மெல்லினாவை தள்ளியே நிறுத்தியது. இவள் பட்டது போல தான என் அண்ணாவும் கஷ்டப்பட்டான் என்று மனதினுள் நினைத்த மெல்லினா ஆதிரேயனை பார்த்தாள்.
“சார், சின்னப் பசங்களா?” என்று அவள் கேட்க, ஆமாம்மா “எங்க ஆதியோட பொண்ணுங்க” என்று தமிழரசன் அவனை பார்த்தார். அந்த பொண்ணும் அவனை பார்த்தாள்.
சார், வொய்ஃப் இல்லையா? என்று அவள் கேட்க, ஆமாம்மா. என்னோட பொண்ணு தான். “பிள்ளைங்க பிறந்ததும் இறந்துட்டா” என்றார் தமிழரசன்.
“நீங்களும் இந்த வீட்ல ஒருவரா?” என்று அவள் கேட்க, “ஆமாம்மா” என்று அவர் பிரபாகரனை வருத்தமாக பார்த்தார்.
பையனா சார்? அவள் ஆர்வமாக கேட்க, “இல்லம்மா ட்வின்ஸ் இருவரும் பொண்ணுங்க” என்றார் பிரபாகரன்.
ட்வின்ஸ்ஸா..க்யூட்டா இருப்பாங்கல்ல. அவங்களுக்கு என்ன வயசு இருக்கும்? அவள் கேட்க, “அதெல்லாம் தேவையில்லை” என்றான் முனைப்புடன் ஆதிரேயன்.
ஆதி, என்று சத்தமிட்ட பிரபாகரன், இருவருக்கும் ஐந்து முடியப் போகுதும்மா என்றார்.
“சாருக்கு விருப்பமில்லை போல. நான் கிளம்புறேன்” என்று ஆதிரேயன் அருகே இருந்த அவளது பையை எடுத்தாள்.
எங்கம்மா போவ? சீதா கேட்க, தெரியலம்மா. “வெளிய போனா தானே பார்க்க முடியும்” என்று அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு அவள் செல்ல,” நில்லும்மா வெளிய ரொம்ப குளிரா இருக்கும்” என்று தமிழரசன் அவர் கழுத்தில் சுற்றி இருந்த ஸ்கார்ஃபை போட்டு விட்டார்.
வேண்டாம் சார். உங்களுக்கு வேண்டுமே? என்றாள்.
என்னோட கார்ல எதற்கும் ஒன்று அதிகமாக எப்பொழுதும் வைத்திருப்பேன் என்றார்.
“ஆதி, இந்த பொண்ணை விட்டா வேற யாரும் புள்ளைங்கல்ல பார்த்துக்க வர்றது கஷ்டம்” என்றார் பிரபாகரன்.
“சரிப்பா, அந்த பொண்ணு அவளாகவே கிளம்பிடுவா. பார்த்துக்கோங்க” என்றான் ஆதிரேயன்.
“நீயே புள்ளைங்கல்ல பார்த்துக்கோம்மா” என்று பிரபாகரன் சொல்ல, அவள் ஆதிரேயனை பார்த்தாள். “பார்த்துக்கோங்க” என்று அவளை பார்த்து சொல்லி விட்டு, “சீதாம்மா சாப்பிடணும் நேரமாகுது. பசங்க சாப்பிட்டாங்களா?” என்று கேட்டான்.
பால் மட்டும் தான் குடிச்சாங்கப்பா. அதுவுமே சின்னப் பொண்ணு மீதி வச்சுட்டாங்க என்றார்.
உன்னோட பெயர் என்னம்மா? பிரபாகரன் கேட்க, “ரசிகா” சார் என்றாள்
ரசிகாவா? உன்னை பார்த்தால் ரசிக்கும்படி இல்லையே? மெல்லினா கேட்க, “குட்டிப்பொண்ணே! நான் என்னை ரசிக்கும் அர்த்தம் வராது. நான் என்னை சுற்றியுள்ள அனைத்தையும் ரசிப்பேன்”. அதற்கான அர்த்தம் தான் என்னோட பெயர். “நீயும் உன்னுடைய பெயருக்கு ஏற்றவாறு மெலிதாகவும் அழகாகவும் இருக்க” என்றாள் ரசிகா.
நல்லா பேசுற? ஆனால் என்னிடம் வச்சுக்காத. “எனக்கு உன்னை பார்த்தாலே பிடிக்கலை” என்றாள் மெல்லினா.
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கே!” என்று ரசிகா அழகாக புன்னகைத்தாள்.
மெல்லினாவிற்கு லீனா சொன்னது நினைவில் வந்து, ஆமா கண்கள், சிரிப்பு, மெலிதான உடல் அழகாக தான் இருக்கா. என்ன கருப்பா இருக்காலே? இவளிடம் பேசினால் என் மானம் போய் விடும் என்று மெதுவாக நகர்ந்து அவள் அண்ணனிடம் சென்று அமர்ந்து கொண்டான். ஆதிரேயன் தன் தங்கையை பார்த்தான். அவளோ ரசிகா மற்றவர்களிடம் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதிரேயனும் அவளை பார்த்தான்.
error: Content is protected !!