Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இப்படிக்கு, – 06

இப்படிக்கு,

 

அத்தியாயம் – 06

 



Advertisement

வண்டியில் இருந்து தன் கோர்ட்டை சரி செய்தவாறு,கீழிறங்கினான் பையன்.இருக்கையில்,அவன் கையில் வீற்றிருந்த பூங்கொத்து அழகாய் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

அவன் இறங்கிச் சென்றதும்,வண்டியை பார்க் பண்ண சற்று தூரம் நகர்த்தி நிறுத்திய வருணுக்கோ,ஒவ்வொரு முறையும் அவனை நினைக்கையில் அத்தனை பிரமிப்பு.

Advertisement

 

Advertisement

மலரிதழ்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து,அவன் சொற்ப வினாடிகள் தன்னை இழந்திருந்தாலும்,அடுத்தடுத்த நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டான்.

 

அதன் பின்னர்,பூங்கொத்தை நெஞ்சோடு சேர்த்தணைத்தாற் போல்,இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடியவன் தான்.அவன் கூறியதும் தான்,இமைகளை பிரித்ததே.

Advertisement

 

இருக்கையில் கிடத்தப்பட்டிருந்த மலர்களை பார்த்தான்.அப்படி என்னதான் இந்த மலர்களிடம் இருந்திடப் போகிறது, என்கின்ற நினைப்பில் அதை தடவிப் பார்த்திடும் எண்ணவோட்டம் முகிழ்த்திடும் போதே,மணக்கண்ணில் அனல் வீசும் விழிகளுடன் பையனின் விம்பம்.

 

ஆயினும்,அதை புறந்தள்ளி விட்டு, பூங்கொத்தை தொட,அவன் விரல்கள் நீள,சரியாக அக்கணம் பையனிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

“சீக்ரம் வா..” பேசி விட்டு அவனே அழைப்பை துண்டித்து விட,இதழ்களில் உறைந்த முறுவலுடன்,தான் நீட்டிய கரத்தை பின்னிழுத்திருந்தான்,அவன்.

 

“க்ரேஸி!” என முணுமுணுத்தவனுக்கு,பையனின் அலுமாரியில் ப்ளாஸ்டிக் பையொன்றில் பத்திரப்பட்டுத்தப்பட்டு இருக்கும் காய்ந்து போன மலரிதழ்கள் நினைவில் வர,அவனின் புன்னகை இன்னும் விரியப் பெற்றது.

 

தலையை உலுக்கிக் கொண்டே,வெளியிறங்கிச் செல்ல,அங்கு நின்றிருந்த மேகாவைக் கண்டவனுக்கு,ஐயோடாவென்றிருந்தது.

 

பையனின் பின்னே சுற்றுவது போதாதென்று,அவனையும் தொல்லை செய்து குடைச்சல் தந்திடுவாளே.”இவ கண்ணுல பட்றதுக்கு முன்னாடி எஸ் ஆகிரனும்..” மனதுக்குள் உருப்போட்டவாறு,அவன் விலகி நடந்திடும் போதே,அவனை வழி மறித்து நின்றாள்,அவள்.

 

கைகளை இரண்டையும் முன்னே நீட்டி,அவன் முன்னேற தடை விதித்தவளை இடையில் கையூன்றி,இதழ் குவித்து ஊதியவாறு பார்த்தான்,வருண்.

 

“நீங்க எதுக்கு என்ன பாத்து பயந்து ஓட்றீங்க..?” அவள் முகத்தில் ஒரு வித சாந்தத்தை தவழ விட்டவாறு கேட்டாள்.

 

“ஏன்னு உங்களுக்கு தெரியாதாம்மா..? நீங்க வந்து ஏதாச்சும் தில்லு முல்லு பண்ணிட்டுப் போயிருவீங்க..நா தான் எங்க பாஸ் கிட்ட காது கிழிய திட்டு வாங்கனும்..”

 

“ஹலோ வருண்..முன்ன தான் அப்டி..நா இப்போ திருந்திட்டேன்..வெவரம் தெரியாம,உங்க பாஸ் பின்னால சுத்தி உங்களயும் திட்டு வாங்க வச்சதுக்கு சாரி கேக்க தான்,இப்போ நா வந்ததே..” முகத்தில் வாட்டத்துடன் அவள் சொல்ல,அவன் விழிகளில் ஆராயும் தன்மை.

 

அவள் சொன்னதை,அவன் நம்பவில்லை எனும் ரீதியில் அவன் முகபாவம் இருக்க,”உண்மய சொன்னா நம்புறது கஷ்டமா தான் இருக்கும்..பட் அதான் உண்ம..” என்றாள்,அமைதியான குரலில்.

 

“இவ்ளோ நாள் இல்லாம திடீர்னு வந்து இப்டி சொல்லவும் நம்பலாமா வேணாமான்னு ஒரே டவுட்டா இருக்கு..?” துளியும் நம்பிக்கை இல்லையென்ற போதிலும்,நம்ப முயல்வது போன்றே பேசினான்,வருண்.

 

“உண்ம தான் பட்..ப்ராக்டிகல்னு ஒன்னு இருக்குல..எவ்ளோ நாள் தான் உங்க பாஸ் பின்னாடியே நா சுத்தறது..சேருமா சேராதான்னு தெரியாம வெயிட் பண்ணி கிட்டு இருக்க உங்க பாஸ் மாதிரி,நா தெய்வீகக் காதல் பண்ணல..” பையனை,அவள் வார கோபம் வந்தாலும்,அவனிதழ்களில் புன்னகையும் பூத்தது.

 

“ஆக்சுவலி,எங்க பாஸ பத்தி நீ திட்டுனதுக்கு எனக்கு உன் மேல கோபம் தான்..பட் நீ சொல்ற விஷயம் உண்மங்குறதால அமைதியா இருக்கேன்..எனிவே,நீ திருந்துனா சரி தான்..”

 

பையனின் வாழ்க்கை மீது அக்கறை இருந்தாலும்,மேகா அவனுக்கு பொருந்துவாள் என்கின்ற எண்ணம் இல்லை.அப்படி பையனுக்கு ஏற்ற ஜோடி என்கின்ற நினைப்பு துளிர்ததிருந்தால்,அவளின் காதலுக்கு அவனே,ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்க கூடும்.

 

“நீங்களாச்சும் சொல்லுங்க வருண்..சும்மா திரும்ப வர மாட்டாங்கன்னு தெரிஞ்சு கிட்டும் அவளுக்காக வெயிட் பண்ணாம,அவரு வாழ்க்கய பாக்க சொல்லி..” அவனுக்கு வருத்தப்படுவது போல் பேசிட,ஒரு நொடி நிதானம் அவனில்.

 

“அந்த பொண்ண அவரு தேடுனாலும்,அவள மாதிரியே ஒரு பொண்ண உலகத்துல எந்த மூலைல இருந்தாச்சும்,நா கொண்டு வந்து கண்ணு முன்னாடி நிறுத்திருவேன்..ஆனா..”

 

“ஆனா..?!”

 

“அவரு அந்த பொண்ணுக்குள்ள தொலஞ்சு போயிருக்குற தன்னத் தான் இன்ன வர தேடிட்டு இருக்காரு..ஸோ வாட் கேன் ஐ டூ..?” அமைதியாய் உரைத்தவனின் வார்த்தைகளில்,கொஞ்சமும் பொய்யில்லை.

 

அவள் விழிகளில் மெல்லிய அதிர்வு பரவிட,வேறெதுவும் பேசாமல் வருணும் அகன்றிருந்தான்,அவ்விடத்தில் இருந்து.

 

பையனின் விழிகள் அவன் மீது அழுத்தமாய் படிய,அதை வைத்தே கண்டு கொண்டான்,மேகாவுடன் தான் பேசியது அவன் விழிகளில் விழுந்திருப்பதை.

 

“சும்மா தான் பாஸ் பேசிட்டு இருந்தோம்..” அசடு வழிய அவன் உரைத்திட,பையன் வெறுமனே தோள் குலுக்காலானான்.

 

மேகாவும் ராகவ்வுடன் அங்கு வந்திருந்தாள்.ராகவ் கூறியதைப் போலவே,பையனை கண்டு கொள்ளாதது போல் நடித்தாள்.ராகவ்வுடன் நெருங்கி நின்று பேசினாள்.

 

பையன் மீதிருக்கும் உணர்வது முற்றாய் தொலைந்து விட்டாற் போலவும்,அவள் காதல் இப்போது ராகவ் தான் என்பதை பறைசாற்றுவது போலவும் அவள் நடந்து கொள்ள,அதே உணர்வு துடைத்த முகம் தான் பையனின் பதிலாய் இருந்தது.

 

சலித்துப் போனாலும்,அவள் அதை தன் முகத்தில் காட்டாமல் இருக்க,அரும்பாடு பட்டது என்னவோ உண்மை.அடிக்கடி ராகவ்வும் கண்ணசைவில்,அவளை கட்டுக்குள் இருக்க உதவி இருந்தான்.

 

தெரிந்தவர் என்பதால்,வாழ்த்தை தெரிவித்ததும்,அவனால் கிளம்ப முடியாது இருக்க,கிருஷ்ண மூர்த்தியின் வேண்டுகோளுக்கிணங்க சிறிது நேரம்,அவ்விடத்தில் உலாத்தித் திரிந்தான்.

 

பூங்காவும் அதை ஒட்டி இருந்த நீச்சல் தடாகமும்,அவனுக்கு சற்றே இதமளித்திட,நீச்சல் தடாகத்தின் அருகே வந்து நிற்க,அவன் நிழல் விம்பத்தை,நீர் பிரதிபலித்தது.

 

பையன்,அதைக் கவனித்திடவில்லை.அவன் அண்ணாந்து வானத்தையே பார்த்திருக்க,முதுகு காட்டி நின்றிருந்தவனை கடந்து சென்றிருந்தாள்,அவள்.

 

இருவரின் நிழலுருவங்களும்,ஒரு கணம் உரசி,மறு கணம் பிரிந்திருந்தது.

 

●●●●●●●●

 

  • மித்ராவின் கதை

 

நமக்கு ஒருத்தர புடிச்சி இருக்கு..பட்,அவங்க மேல இருக்குறது இன்பாக்ஷுவேஷனா இல்ல லவ்வான்னு கன்ஃபார்மா தெரியுற வர,ரொம்ப கன்பிபூஷனா இருக்கும்..

 

அந்த மாதிரி டைம் தான் எனக்கும் இருந்துது..சினிமாலலாம்,ஹீரோயின் ஹீரோவா மிஸ் பண்ணும் போது,கடக்கடாரர்,ஆட்டோ ட்ரைவர்,பஸ் கன்டக்டர் எல்லாரும் ஹீரோ மாதிரியே தெரிவாங்க..அவங்கரும் ஹீரோன்னு நெனச்சி,ஷாக் ஆகி நீயான்னு கேக்கற மாதிரியும் கனவா இருக்கும்னு கண்ண மூடித் தெறக்குற மாதிரியும் நெறய சீன்ஸ் நானும் பாத்துருக்கேன்..

 

அப்போலாம்,சுத்த முட்டாள்தனமா தோணுச்சு..கிறுக்குத்தனமான கான்செப்ட்னு திட்டியும் இருக்கேன்..அது எப்டி பாக்கறவன் எல்லாம் ஹீரோ மாதிரி கண்ணுக்கு தெரிவாங்க..? கண்ணுல பிரச்சின தான்னு என் ஃப்ரெண்டு கூட காரசாரமா டிஸ்கஸ் பண்ண சந்தர்ப்பங்களும் உண்டு..

 

அந்த மனுஷன காணாம,நா கடத்துன அந்த ஒரு வார கேப்ல தான்,அதுல்லாம் நடக்கவும் சான்ஸ் இருக்குன்னு என் மனசு கொஞ்சமா ஒத்துக்கவும் ஆரம்பிச்சேன்..

 

உண்ம தான,அவங்க கண்ல சிக்க மாட்டாங்களான்னு,நாம தவிச்சுப் போய் கெடக்கும் போது,அவங்க மாதிரி மத்தவங்க தோணுறது நியாயம் தான்..

 

அதுலயும்,அவங்க சாயல நாம மத்தவங்க காண்றது வேற..

ஆனா,மத்தவங்கள அவங்க சாயலா காண்றதுன்னு வேறல..

 

காண்போரில் அவனின் சாயலைக் காண்பெதென்பது வேறு..

காண்போரை அவனின் சாயலாகக் காண்பதென்பது வேறு ஆயிற்றே!

 

அப்டி தான் எனக்கும் இருந்துச்சு..பாக்கறவங்க அவரா இருக்க மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் மனசுக்குள்ள..அப்டி இருந்துட்டா போதும்ங்குற எதிர்பார்ப்பு..அப்டி கண்டுட்டா,இந்த ஃபீல் காணாம போயிருமோன்னு ஒரு கவல..என் மனசு என்ன எதிர்பாக்குதுன்னு எனக்கே தெரில..

 

ஆனா,அந்த ஒரு வாரமும் அவ்ளோ பாரம் மனசுக்குள்ள..சும்மா சும்மா அழறதும் சிடுசிடுன்னு இருக்குறதும் ஒரு மார்க்கமா தான் இருந்தேன் நா..

 

இதுல அந்த மனுஷன் நெனப்பு வேற..பழசெல்லாம்,அப்டியே ஞாபகம் வர,ஒவ்வொரு எடமும் எனக்கு அவர தான் ஞாபகப் படுத்துச்சு..

 

ஃபோன கைல எடுத்தா,அவர் கிட்ட இருந்து ஒரு மெஸேஜ் வந்துராதான்னு யோசிப்பேன்..ஆனா,அது வர நாங்க மெஸேஜ் பண்ணிகிட்டதே இல்லங்குறது தான் உண்மயும் கூட..

 

என்னன்னு தெரியாம,மனசுக்குள்ள அவ்ளோ பாரம்..கால் பண்ணேன்,திவ்யாவுக்கு..

 

திவ்யா,என்னோட க்ஸாட் மேட்..அதுல்லாம பெஸ்டு ஃப்ரெண்டு..

 

காலேஜ் போகும் போதே,அவ வேற காலேஜ் நா வேற காலேஜ்..அப்டி பிரிஞ்சாலும்,எங்க ஃப்ரெண்ட் ஷிப் அப்டியே தான் இருந்துச்சு..

 

அடிக்கடி பேசிக்கறதில்ல..அப்ப்ப்போ பேசுனாலும்,அவ கூட மட்டும் நா,ரெண்டு மணி நேரம் பேசுவேன்..

 

அப்டி ஜட்ஜ் பண்ணுவாங்களா..? இப்டி நெனச்சுப்பாங்களான்னு பயம் இல்லாம,நம்ம பக்கத்த கேட்டு நம்மள ஜட்ஜ் பண்ணாம,சரின்னா என்கரேஜ் பண்ணி,தப்புன்னா வலிக்கும்னாலும் பரவாலன்னு எடுத்து சொல்லி,மனசுக்கு கஷ்டம் வந்தா இவங்க கூட பேசுனா ஓகே ஆயிரும்னு நெனக்க வக்கிற,ஆளுங்க ரொம்ப ரேர்!

 

அப்டி ஒருத்தர் லைஃப்ல இருந்தா,அது வரம் தான்..அப்டி பாத்தா,என்னோட திவ்யா எனக்கு மிகப் பெரிய வரம்!

 

திவ்யாவுக்கு தான்,ஃபோன போட்டேன்..எப்பவுமே,அவ நா பேசனும்னு நெனச்சா,எனக்குன்னு டைம ஒதுக்கி என் கூட பேசிருவா..நெஜமாலுமே,அவ என் வாழ்க்கைல கெடச்ச தேவத தான்..

 

பொண்ணுங்கன்னா,ஆம்பள பையன் மட்டுமா அவ வாழ்க்கைல தேவதூதனா வரனும்..?

இப்டி,நல்ல ஃப்ரெண்ட் ஒருத்தி தேவதயா வரலாம்ல..

 

ஓரவா போகுதுல..

கிரிஞ்சுனாலும்,அது தான் உண்ம..இப்டி ஒரு ஃப்ரெண்ட்ஷிப்ப ஃபீல் பண்ணி இருக்குறவங்களுக்கு,இது கிரிஞ்சா தெரிய வாய்ப்பும் இல்ல..

 

சரி!

கதைக்குள்ள வர்லாம்..

இவ ஒருத்தி சும்மா,வச்சு அறுத்து கிட்டு இருக்கான்னு நீங்க அனல் மூச்சு விட்றத என்னால உணர முடியுது..

 

அவளுக்கு ஃபோன போட்டு,அப்டியே சொன்னேன்..பட்,எனக்கு அவரு மேல ஒரு ஃபீல் இருக்குன்னு நா அவ கிட்ட டைரெக்டா சொல்லல..ஆனா,அவரு நல்லவரு..ரொம்ப நல்ல கேரக்டர்னு அவ கிட்ட சொல்லி இருக்கேன்..

 

படுபாவி கெஸ் பண்ணி இருப்பா..தெரிஞ்ச மாதிரி,அவளும் காட்டிக்கல..அவளுக்கு புரிஞ்சிருக்கும்னு மாதிரி நானும் நடந்துக்கல..

 

ஃபோன் அட்டன்ட் பண்ணதும்,நா இப்டி தான் சொன்னேன்..

 

“திவ்யா,மனசு எல்லாம் ஒரு மாதிரி அடச்சிப் போய் இருக்கு..அழுக அழுகயா வருது..ஒன்னுமே பண்ண புடிக்கல..எந்த வேலைலயும் ஒழுங்கா கான்சன்ட்ரேட் பண்ண முடில..” இவ்ளோ தான்,சொன்னேன்.

 

“மித்து,உனக்கு அடிக்கடி யாராச்சும் ஞாபகம் வர்ராங்களா..?” அவ அப்டி கேட்டதும்,எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு..சடன்னா,நா சைலன்ஸ் ஆயிட்டேன்..

 

என்ன பதில் சொல்றதுன்னே தெரில..அப்டியே நா,சைலன்ஸா இருக்க,அவளுக்கு அப்போவே கெஸ் பண்ணது உண்ம தான்னு புரிஞ்சு இருக்கும்..

 

“ஏன் அப்டி கேக்கற..?” மெதுவாய் வினவினேன்,நான்.என்னவோ,என் இதயம் அக்கணங்களில் மத்தளம் அடிக்கத் துவங்கியிருந்தது.

 

“நேத்து தான் ஒரு வீடியோ பாத்தேன்..நம்மள யாராச்சும் நெனச்சி கிட்டே இருந்தாங்கன்னா,இப்டிலாம் ஃபீல் ஆகுமாம்..அப்டின்னு சொல்லி இருந்தாங்க..” அவன் புன்னகையை அடக்குவதை என்னால்,உணர முடிந்தது.

 

அதைக் கேட்டதும்,என் இதயத்துடிப்பின் வேகம் இன்னும் இரட்டிப்பான உணர்வு.என்னைப் போல்,அவனும் என்னைப் பற்றியே நினைத்து மருகித் தவிக்கின்றானா என்கின்ற எண்ணமே,உயிரை உரசி நிற்க,கொஞ்சமாய் தவித்துப் போனேன்.

 

அப்படி அவனுக்கு உணர்வேதும் இருக்காது,என்று என்னை நான் சமப்படுத்த முயன்ற போதிலும்,என்னவோ அத்தனை எளிதில் அது நடந்தேறிடாது என்கின்ற உணர்வு எனக்குள்.

 

என்னைப் போலவே,அவனும் உணர்ந்திட வேண்டும் என்கின்ற எதிர்ப்பார்ப்பு,உயிரில் வேர்ப்பிடிக்க,அதன் நிச்சயமின்மையில் என் விழிகள் கலங்கின.

 

சட்டென,அழைப்பை துண்டித்து விட்ட போதும்,அவள் வார்த்தைகள் என் செவியோரம் கதை பேசிக் கொண்டே இருந்தன.

 

“நம்மள யாராச்சும் நெனச்சி கிட்டே இருந்தாங்கன்னா,இப்டிலாம் ஃபீல் ஆகுமாம்..” அவள் கூறியதை புத்தி மறுத்த போதும்,மனம் முழுவதுமாய் ஏற்றுக் கொண்டிட,அப்படி எதுவும் இல்லை என்று எனக்கு நானே பலமுறை கூறிக் கொண்டேன்.

 

அவரு மேல,எனக்கு ஃபீல் இருக்குன்னு ஏத்து கிட்ட என்னோட,மனசு அடுத்து என்னன்னு யோசிச்சு முடிக்க முன்னமே,அடுத்த வெடிய அழகா பத்த வச்சி இருந்தா அவ..

 

என் மனசுல என்ன இருக்குன்னே,நா சரியா ஒரு முடிவுக்கு வர்ல..இதுல,அவரு மனசுல என்ன இருக்குன்னு யோசிக்கிற மாதிரி,என்னய திருப்பி விட்டுட்டா,படுபாவி..!

 

தொடரும்.

 

🖋️அதி..!

2026.05.23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!