Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Imsai Kaathali

இம்சை காதலி -1

இம்சை காதலி -1

அலாரம் அடிக்கும் சத்தம் காதை அடைத்தது.”அஞ்சு! அலார்ம நிறுத்து டி” கண்களை மூடியபடி ருத்ரா.

 



Advertisement

அலாரம் மீண்டும் அலறியது.”அஞ்சு…!” கத்திக் கொண்டே எழுந்து அலாரத்தை நிறுத்த மொபைலை தேடினாள். அலாரம் நின்றது. திரும்பி பார்த்தவள் நின்றுக்கொண்டிருந்தவளை முறைத்தாள்.

 

“அஞ்சு…..! இது உன் வேலையா? ஏன் டி தூங்குறவள இப்படி எழுப்புற?” முறைத்தப்படி.

Advertisement

 

Advertisement

“நா குளிச்சுட்டு தான் மேடம் உங்கள எழுப்புறேன்” சிரித்தாள்.

 

“அஞ்சு இன்னும் கொஞ்ச நேரம் டி. ப்ளீஸ்டா..!” கெஞ்சியபடி படுத்தாள்.

Advertisement

 

“நோ வே! எழுந்து கிளம்பு. ஃபர்ஸ்ட் டேவே ஆஃபிஸ் லேட்டா போவாங்களா டி! எழுந்துரு” போர்வையை இழுத்தாள்.

 

“ஆஃபிஸ்.. இதுலாம் நமக்கு தேவையா டி? நாம பாட்டுக்கு பத்து மணிக்கு எழுந்தமா சாப்டாம சீரியல் பார்த்தமா ஊர் சுத்துனமானு இருந்தோம். இப்ப பாரு! மிட் நைட்ல எழுந்திரிக்கிறதா இருக்கு” புலம்பியபடி எழுந்தாள்.

 

“ருத்து! போதும் கிளம்பு. டைமாச்சு. வந்து புலம்பு, கேக்குறேன்”.

 

“யாரு நீ கேப்ப! இத நா நம்பனும்! எல்லாம் நம்மள பெத்தத சொல்லனும். கேம்பஸ் இன்டர்வியூ போன்னு தூரத்துனாங்க” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இடையிலே,

 

“இந்த லூசு கம்பெனி நம்மல செலக்ட் பண்ணிட்டாங்க அதானே? இத கேட்டு கேட்டு என் காதுல இருந்து இரத்தம் மட்டும் தான் வரல. போதும் கிளம்பு டி. நா போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்” வெளியே சென்றாள். ருத்ரா சலிப்புடன் கிளம்பச் சென்றாள். இருவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினர்.

 

 

அந்த பல மாடிக் கட்டிடத்தைப் பார்த்ததும் இருவருக்கும் லேசாக பயம் வந்தது.

 

“அஞ்சு இந்த பில்டிங் பாக்கவே பயமா இருக்கு டி!” லேசான பயத்துடன்.

 

“நா இருக்கேன்ல ருத்து! பயப்படாத. வா! செக்யூரிட்டி கிட்ட போய் நம்ம கம்பெனி எங்க இருக்குன்னு கேக்கலாம்” இழுத்துச் சென்று ,”அண்ணா! காமினி டெக்னாலஜி எந்த பிளோர்?”.

 

“ஃபிப்த்து பிளோர் மா. உங்களுக்கு அவங்க அனுப்புன லெட்டர காட்டுங்க. அப்பதான் உள்ள விடுவோம்”. இருவரும் காட்டியதும், “இந்த வழியா போங்க மா” அனுப்பினார்‌.

 

 

ரிசப்ஷனிஸ்டிடம் சென்று, “எக்ஸ்கியூஸ் மீ! நாங்க நியூ ஜாயினீஸ். எங்க போகனும் மேம்?” அஞ்சு.

 

 

“லெட்டர்?” கை நீட்டினார். இருவரும் கொடுத்தனர். “ரெண்டு பேரும் அந்த ரூமுக்கு போங்க”.

 

 

“ஓகே தேங்க் யூ” சென்றனர்.

 

 

“என்ன டி! இவ்ளோ பெரிய ஹால்லா இருக்கு!” வேடிக்கை பார்த்தப்படி வந்தாள் ருத்ரா.

 

 

 

“நானும் உன் கூடதானே வரேன். எனக்கு மட்டும் எப்படி டி தெரியும்? வா! லாஸ்ட் ரோல போய் உக்காரலாம்”.

 

 

 

“அஞ்சு! லாஸ்ட்ல பாரு. நம்மல மாதிரியே ரெண்டு பேரும் உக்கார்ந்து இருக்காங்க. ஆனா நடுவுல உக்கார்ந்தா நாம தெரிய மாட்டோம்னு நினைச்சேன். இப்ப வேற வழி இல்ல வா ஓரமா உக்காரலாம்” சென்று உக்கார்ந்தனர்.

 

 

 

“சுஜி! வந்து எவ்ளோ நேரம் ஆகுது! என்ன டி கொடும இது? வெய்ட் பண்ண வச்சு சாகடிக்கிறானுங்க..” எரிச்சலாக சொன்னாள் ஹேமா.

 

“உள்ள வர வழிய மறந்திருப்பாங்க போல டி” கிண்டலாகச் சிரித்தாள் சுஜிதா. ஹேமா பொய்யாக முறைத்தாள். பக்கத்தில் உக்கார்ந்திருந்த அஞ்சுவும் ருத்துவும் சிரித்தனர். சிறிது நேரத்தில் நிறைய பேர் உள்ளே வந்தனர். நான்கு ஆண்கள் மட்டும் அங்கு இருந்த மேடை மேல் ஏறினர்.

 

“ஹாய் கைஸ்! கொஞ்ச அமைதியா இருந்தா நாங்க கொஞ்சம் பேசிப்போம் ” சிரித்தான் அதில் ஒருவன். மைக்கின் சத்தத்தில் அனைவரும் அமைதியாகி மேடையைப் பார்த்தனர்.

 

“ஹாய்! வெல்கம் டூ காமினி டெக்னாலஜி. ஐ ஆம் ஜெய விதுரன். இந்த கம்பெனியோட புராஜக்ட் மேனேஜர். இவங்க மூணு பேரும் டிஎல் அரவிந்த் , திவாகர் , சுந்தர்” சிரிப்புடன் அறிமுகம் செய்தான். மற்ற முவரும் சிரித்தனர்.

 

“நீங்க எல்லாரும் ஃப்ரெஷர்ஸ். இந்த கம்பெனிய பத்தி ஒரு சின்ன இன்ட்றோ தான் தரப் போறோம். இத்தனநாள் எல்லாரும் ஸ்டூடண்டா ஜாலியா இருந்திருப்பீங்க. அதெல்லாம் மிஸ் பண்ணிட்டோம்னு நினைக்காதீங்க. கொடுக்குற வேலைய சரியா பண்ணுனா இங்கயும் ஜாலியா இருக்கலாம்” கம்பெனியைப் பற்றி சிறிதுநேரம் பேசிவிட்டு அரவிந்திடம் மைக்கை கொடுத்தான்.

 

“ஹாய்! ஐ ஆம் அரவிந்த். அதான் தெரியுமேன்னு நீங்க நினைக்கிறது என் காதுக்கு கேக்குது” சிரித்தான். மற்றவர்களும் சிரித்தனர்.

 

 

“ஒவ்வொரு வருடமும் ஃப்ரெஷர்ஸ் வரப்ப வெல்கம் பண்ணுனத விட இந்த வருசம் ஃப்ரெஷர்ஸ வெல்கம் பண்ணுறது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு, ஏன்னு கேக்குறீங்ளா?? என் தங்கச்சி வந்துருக்கா அவ இங்க வரது எனக்கு தெரியாது.  அஞ்சு…” சந்தோஷமாக.

 

 

அஞ்சு சந்தோஷமாகப் பார்த்தாள். “டேய்! என்ன டா பண்ணுற?” பொய்யான சிரிப்புடன் மெதுவாக பல்லைக் கடித்தான் ஜெய விதுரன்.

 

“சாரி மச்சி! கொஞ்சம் எமோஷ்னல் ஆகிட்டேன்” மெதுவாக இளித்தவன்,

 

“உங்க ஜாப் பத்தி எந்த சந்தேகம் எதுவா இருந்தாலும் நீங்க தயங்காம எங்ககிட்ட கேக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க டீம் லீடர் யாருன்னு சொல்லுவாங்க. நீங்க அவங்கள ஃபாலோ பண்ணிக்கோங்க” மைக்கை விதுரனிடம் கொடுத்தான்.

 

 

“டீம் சொன்னதும் நீங்க உங்க பிளேஸ்க்கு போலாம் கைஸ். திவாகர், சுந்தர் உங்க டீஎல் யாருன்னு சொல்லுவாங்க. வெய்ட் பண்ணுங்க” மைக்கை நிறுத்திவிட்டு அரவிந்தைப் பார்த்தான்.

 

“என்ன டா? ஓவர் தானே? நா கீழ போறேன்” பதிலை எதிர்பார்க்காமல் வேகமாகக் கடைசி வரிசைக்குச் சென்று,”அஞ்சு குட்டி..!!” சந்தோஷமாக.

 

“அண்ணா! நீங்க எப்படி இங்க?” சந்தோஷமாக அவன் பக்கத்தில் வந்தாள்.

 

“இங்க தான் ஒர்க் பண்ணுறேன் டா. நீ எப்படி இங்க? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? நீ எங்க இருக்க?” கேள்வியாக அடுக்கினான்.

 

“அண்ணா! வெய்ட் வெய்ட்! இத்தன கேள்வி கேட்டா நா எப்படி பதில் சொல்லுறது? எல்லாரும் பைன். இங்க பக்கத்துல ஒரு ஹாஸ்டல்ல நானும் ருத்ராவும் இருக்கோம். ருத்ரா நியாபகம் இருக்குலண்ணா? என் ஃப்ரெண்ட்” ருத்ராவைக் காட்டினாள்.

 

“ம்ம்… இருக்கு டா. நாலு வருசமாச்சு டா உன்ன பார்த்து. சென்னை வரேன்னு ஏன் சொல்லவே இல்ல? சொல்லிருந்தா வீட்டுலயே தங்க வச்சுருப்பேன்”.

 

“அண்ணா! உங்க நம்பர் மிஸ் பண்ணிட்டோம். நீங்க சென்னைல இருக்குற விசயமே எனக்கு தெரியாது. நீங்களும் கால் பண்ணவே இல்ல”.

 

“எப்பா டேய்!! என்ன டா பண்ணுற? உன் பாச மலர பார்த்ததும் ஆஃபிஸ்ல இருக்குறது கூட மறந்துருவியா டா? ” பக்கத்தில் வந்தான் ஜெய விதுரன்.

 

 

“ஜெய்! உனக்கு நியாபகம் இருக்கா டா? இவ..” ஆரம்பிக்கும் போதே,

 

“போதும் டா அர்வி! நீ இப்படி வந்து பேசுறத எல்லாரும் பாக்குறாங்க” பல்லைக் கடித்தான்.

 

“உன்கூட இப்பவே வரேன் டா. ஜெய் ஒரு ஹெல்ப் டா. ப்ளீஸ்! பண்ணு டா” கெஞ்சலாக.

 

“என்ன உன் தங்கச்சிய உன் டீம்ல போடனுமா???”.

 

“ஈஈஈஈஈ… ஆமா டா”.

 

“கண்டிப்பா முடியாது. ரெண்டு பேரும் வேலைய பாக்காம அரட்டை அடிக்கவா? டீம்ல ஆல்ரெடி போட்டாச்சு” அஞ்சுவைப் பார்த்து.

 

 

“அஞ்சனலோஷினி! நீங்க ஜெய விதுரன் டீம், ருத்ரா! நீங்க அரவிந்த் டீம்” திவாகர்.

 

“ஓ நோ… சார்! எங்க ரெண்டு பேரையும் ஒரே டீம்ல போட முடியாதா?” அஞ்சு சோகமாக.

 

“ஒரே கிளாஸ் தானே ரெண்டு பேரும். ஒன்னா  வந்தவங்கள ஒரே டீம்ல போடமாட்டோம். இது எங்க ரூல்ஸ். சுஜிதா! நீங்க திவாகர் டீம் , ஹேமா! நீங்க என் டீம்”  சுந்தர்.

 

“இதுலாம் அநியாயம் அண்ணா” அரவிந்தைப் பார்த்து.

 

“அது ரூல்ஸ் டா பாப்பா. நீங்க எல்லாரும் எல்லார் கூடவும் பேசி பழகணும்ல. அதுக்குதான். ஜெய்! அஞ்சுவ…” இழுத்தான்.

 

 

“அர்வி! என் டீம் மெம்பர நா யாருக்கும் விட்டு தரமாட்டேன், திவா! சுந்தர்! ஓவரா?”.

 

“யா டா” என்றனர்.

 

“சரி டா. டிஸ்பர்ஸ். அர்வி! நாம போலாம்”.

 

“ம்ம்… சரி. அஞ்சு! உன்ன லஞ்ச்ல மீட் பண்ணுறேன் டா. ருத்ரா உன்ன டீமோட மீட் பண்ணுறேன்” சென்றான்.

 

“ஹாய்!! நா சுஜி. இவ ஹேமா. நீங்க டீஎல் கிட்ட பேசுறத பார்த்தேன். நாங்க ரெண்டு பேரும் காலேஜ்ல இருந்து ஃப்ரெண்ட்ஸ். எங்கள தனித்தனியா போட்டுட்டாங்க. ப்ளீஸ்! உங்க அண்ணாகிட்ட சொல்லி ஒரே டீம்ல போட முடியுமானு கேக்குறீங்ளா?” அஞ்சனாவை கெஞ்சினாள்.

 

“ஹாய்!! எதுக்கு கெஞ்சுற? நா கேட்டாலும் மாத்த மாட்டாங்க. சேம் கிளாஸ் மேட்ட ஒன்னா போட மாட்டாங்கன்னு இப்பதான் சொன்னாங்க. நா  அஞ்சனலோஷினி. இவ ருத்ரா. நாங்க ஜட்டி போட்ட காலத்துல இருந்தே ஃப்ரெண்ட்ஸ்” சிரிப்புடன். மூவரும் சிரித்தனர்.

 

“இனிமே நாம ஃப்ரெண்ட்ஸ்” ருத்ரா சிரிப்புடன்.

 

“சரி” என்றனர்.

 

“எல்லோரும் எங்க கூட வாங்க” என்று திவாவும் சுந்தரும் அழைத்துச் சென்றனர். விசலாமான பெரிய ஹால், அதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கணினிகள் எதிரெதிர் பார்ப்பது போல் அதற்கு ஏற்றாற்போல் நாற்காலிகளும் இருந்தன.

 

 

“இங்க பாருங்க கைஸ்! இந்தபக்கம் இருக்க ஃபர்ஸ்ட் ரூம் அர்விந்த் ரூம், நெக்ஸ்ட் ரூம் ஜெய விதுரன் ரூம், இந்தபக்கம் இருக்க ஃபர்ஸ்ட் ரூம் என்னோடது, நெக்ஸ்ட் சுந்தரோடது” திவாகர்.

 

“ஃபர்ஸ்ட் இரண்டு ரோ உங்களுக்கு தான். உங்க டீம் லீடருக்கு ஆப்போசிட்டா உக்கார்ந்தா நாங்க கூப்பிடுறப்ப வர ஈஸியா இருக்கும்” சுந்தர்.

 

 

“நாம நாளு பேரும் ஒன்னா உக்கார்ந்துகலாம்” ஹேமா.

 

“சரி” என்றனர்.

 

 

“நீங்க எல்லாரும் போய் உக்காரலாம்” திவா.

 

 

அஞ்சு நேராக விதுரன் அரவிந்துக்கு பொதுவான இடத்தில் அவர்களை பார்த்து அமர்ந்தாள். அவள் பக்கத்திலே ருத்ரா அமர்ந்தாள். அஞ்சு, ருத்ரா பக்கத்தில் வேறுவேறு ஆண்கள் பெண்கள் அமர்ந்ததால் அவர்களுக்கு எதிரில் இருக்கும் கணினிகளை சுஜிக்கும் ஹேமாவுக்கும் பிடித்தனர்.

 

“ப்ச்… பக்கத்து சிஸ்டம் கிடைக்கலையே” ஹேமா.

 

 

“பக்கத்து சிஸ்டம விட எதிர் சிஸ்டம்னா பாரு நாம நாலு சேரும் திரும்பி பேசிக்கலாம்” அஞ்சு.

 

 

“ஆமா! நாம இப்படி உக்கார்ந்தா தான் நாம பேசுறது நம்ம நாலு பேருக்கு கேக்கும்” ருத்ரா.

 

 

“இந்த பிளேஸ் நல்லா இருக்கு. அங்க பாரு! நமக்கு பக்கத்துல கொஞ்சம் தள்ளி போனாவே ரெஸ்ட் ரூம் எல்லாம் இருக்கு ஹேமா. எல்லாத்துக்கும் இதான் வசதி” சுஜி.

 

 

“ஆமால! சரி இப்ப நாம என்ன பண்ணனும்?” ஹேமா.

 

“இங்க பாருங்க! என் டீம் மெம்பர்ஸ் ஏழு பேரும் எழுந்துருங்க” திவா. ஏழு பேரும் எழுந்தனர். “என்ன டா! அஞ்சு பேரு இங்க ரெண்டு பேரும் அங்கனு இருக்கீங்க. மாத்தி உக்காருங்க”.

 

“சார்! ப்ளீஸ்.. நா இங்கயே உக்காருறேன்” சுஜி.

 

 

“ஏன்?”.

 

 

“ஃப்ரெண்ட்ஸோட சார். ப்ளீஸ்…”.

 

 

“எல்லார் கூடவும் பழகணும்னு தான் பிரிச்சு டீம் போடுறது”.

 

 

“சார்! சார்! இவங்க நியூ ஃப்ரெண்ட்ஸ்  இங்க வந்துதான் தெரியும்” அவசரமாக.

 

 

“திவா! விடு டா” சுந்தர்.

 

 

“கூப்பிடுறப்ப கரெக்ட்டா வந்துருங்க. என் டீம் மெம்பர்ஸ் லெவன்கு என் ரூமுக்கு வாங்க”.

 

“என் டீம் மெம்பர்ஸ் ஏழு பேரும் எழுந்துருங்க”, எழுந்தவர்களை பார்த்தவன், “நீங்க மட்டும் தான் தனியா அங்க உக்கார்ந்துருக்கீங்க. உங்களுக்கு ஓகேவா?” ஹேமாவைப் பார்த்து.

 

“எனக்கு ஓகே சார்”.

 

 

“ஓகே! நீங்களும் லெவன்கு என் ரூமுக்கு வந்துருங்க” திவாவிடம் பேசியபடியே அவன் அறைக்குச் சென்றான்.

 

“எப்படியோ நம்ம இடத்த மாத்தல. அதுவே போதும் இப்போதைக்கு” சுஜி.

 

“ஆமா டி” ஹேமா.

 

“நீங்க ரெண்டுபேரும் எங்க தங்கிருக்கீங்க” ருத்ரா.

 

“என் ரிலேடிவ் வீட்டுலதான் இப்ப இருக்கோம். இனிமேதான் ஹாஸ்டல் பாக்கனும்” சுஜி.

 

“ஆமா! நீங்க ரெண்டுபேரும் எங்க தங்கிருக்கீங்க?”.

 

“இங்க பக்கத்துல ஒரு ஹாஸ்டல்ல இருக்கோம்” அஞ்சு.

 

“அப்ப உங்க ஹாஸ்டல்ல எங்களுக்கு இடம் இருக்கா?”.

 

“தெரியலயே சுஜி” ருத்ரா.

 

“ஆஃபிஸ் முடிஞ்சு போறப்ப எங்க கூட வந்து கேட்டுட்டு வீட்டுக்கு போங்க”.

 

“ஓகே அஞ்சு” என்றனர்.

 

“ஜெய் சார் டீம், அர்விந்த் சார் டீம் உங்க டிஎல்ல போய் பாருங்க” ஒருவர் வந்து சொல்லிவிட்டு சென்றார்.

 

“சரி! நாங்க போயிட்டு வரோம்” என்று இருவரும் (அஞ்சு, ருத்ரா) எழுந்தனர்.

 

“நீங்க போயிட்டு வாங்க. எங்களுக்கும் மீட்டிங்கு டைமாச்சு தான்” மற்ற இருவரும் எழுந்தனர்.

 

“வாங்க கைஸ்! மொத்த ஏழு பேரா? ம்ம்… குட்! எல்லாரும் உங்களபத்தி சொல்லுங்க” அர்விந்த். ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய ஆரம்பித்தனர்.

 

“ஐ ஆம் ருத்ரா ஃப்ரம் தேனி”.

 

“உங்கள தெரியும் ருத்ரா. எனக்கு நியாபகம் இருக்கு” சிரிப்புடன். ருத்ரா லேசாகச் சிரித்தாள்.

 

“உங்களுக்கு இன்னைக்கு பெருசா எந்த ஒர்க்கும் இருக்காது. உங்களுக்கு நாங்க ஒரு மெயில் ஐடி தருவோம். அததான் இங்க யூஸ் பண்ணனும். நீங்க என்னென்ன இப்ப படிக்கணும்னு அதுல டாகுமெண்ட் அனுப்புறேன். அத இப்ப படிங்க”.

 

“ஓகே சார்” என்றனர்.

 

“மெயில் ஐடி, பாஸ்வேர்ட்  நோட் பண்ணிக்கோங்க. ஓபன் பண்ணிட்டு பாஸ்வேர்ட சேஞ்ச் பண்ணிடுங்க. நோட் பண்ணிட்டு போங்க” அனுப்பினான்.

 

“ஐ ஆம் அஞ்சனலோஷினி ஃப்ரம் தேனி. நா ஓரே ஒரு பொண்ணு மட்டும் தான், அப்பா சூப்பர்மார்கெட் வச்சுருக்காங்க, அம்மா ஹோம்மேகேர், ஐ லவ் ம்யூசிக். அவ்ளோ தான் சார்” என்றாள் விதுரனை பார்த்து.

 

“ம்ம்… குட்! இப்ப உங்க ஐந்து பேருக்கு உங்க டீம் மெம்பர்ஸ் பத்தி தெரிஞ்சுருக்கும். நீங்க எப்போதும் ஒன்னாதான் ஒர்க் பண்ண போறீங்க. நல்ல ஃப்ரெண்ட்ஸா இருங்க”.

 

“ஓகே சார்” என்றனர்.

 

“இந்த நோட்பட், பென் எல்லாரும் எடுத்துக்கோங்க. என் ரூமுக்கு வரப்ப இது இல்லாம நீங்க வரக்கூடாது” மேசைமேல் இருந்ததை எடுத்தனர். ஒவ்வொருவராக பக்கத்தில் அழைத்து எழுதச் சொல்லி எழுதியதை சரிபார்த்தான்.

 

“நா எப்போதுமே பிஸியா இருப்பேன். அதுனால நிறைய நோட்ஸ் உங்க மெயில் ஐடிக்கு அனுப்பிருக்கேன். இன்னைக்கு என்ன படிக்கணும்னு அதுல சொல்லிருக்கேன். எல்லாரும் அத படிங்க. நாளைக்கு அதுல இருந்து ஒரு புரோம்கிராம் டெஸ்ட் வைப்பேன்”.

 

“ஓகே சார்” என்றனர்.

 

“எனக்கு ஒர்க் சொன்ன டைம்ல முடிக்கணும். நா இந்த விசயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட். கவனமா ஒர்க் பண்ணுங்க. இப்ப நீங்க போலாம்”.

 

“ஓகே சார். தேங்க் யூ!” என்று செல்லப் போனவர்களை, “அஞ்சனலோஷினி! நீங்க இருங்க. மத்தவங்க போய் ஒர்க்க பாருங்க”. அனைவரும் சென்றதும் அஞ்சுவைப் பார்த்தான்.

 

 

அரவிந்த் – அஞ்சு எப்படி உறவு வந்தது???எதற்காக அஞ்சுவை நிறுத்தினான்???  என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…..

 

 

 

?இம்சை தொடரும் ?….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!