Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அசுரனை ஆராதித்த பூம்பாவை

அத்தியாயம் 3

அத்தியாயம் 3

பெங்களூரின் ஒதுக்குப்புறத்தில் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள ராட்ஷச சுவரினை தாண்டி.. உள்ளே நுழைந்தது அபயின் கருப்பு நிற ” லா வாய்ச்சுர் நோய்ரி ”.. ஒரு வருடத்திற்கு முன்புதான் புகாட்டி நிறுவனத்தின் மூலம் இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டது.. இந்திய விலையில் இதன் மதிப்பு சுமார் 126 கோடி..

சில எண்ணிக்கையிலான கார்கள் மட்டும்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.. அதில் இந்தியாவில் அபயசிம்ஹாவிடம் மட்டுமே இக்கார் உள்ளது.. அபய் மனதிற்கு ஏற்ப அவன் காரும் நான்கு கால் கருப்பு நிற மிருகம் போல் காட்சியளித்தது.. ஸ்போர்ட்ஸ் மாடல் காரான இது மணிக்கு 260 மைல் வேகத்தில்.. அதாவது மணிக்கு 418km வேகத்தில் செல்லும் திறன் கொண்டது..

நீண்ட நடைப்பாதையில் இருமங்கிலும் பூந்தோட்டங்களும் மரங்களும் நிறைந்திருக்க.. அதன் நடுவில் கம்பீரமாய் காட்சியளித்தது அந்த எட்டடுக்கு பளிங்கு மாளிகை.. முற்றிலும் புதிய முறையில் அம்மாளிகை கட்டப்பட்டிருந்தது..



Advertisement

மாளிகையின் பெரிய அளவிலான போர்டிகோவில் வித விதமான கார்களும்.. மற்றொரு வரிசையில் அணைத்து ரக பைக்குகளும் இடம்பெற்றிருந்தன.. வேக வேகமாய் அபய் உள்ளே நுழைய.. அவனுக்கென்று பணியமர்த்தப்பட்ட மூன்று பணியாளர்கள் வந்து நின்றனர்.. அவனோ அவர்களை கண்டுகொள்ளாமல் லிப்டை நோக்கி சென்றான்..

அவர்களும்.. அவன் பின்னரே பணியாளர்களுக்கான லிப்டில் ஏறினர்.. அந்த எட்டடுக்கு மாளிகையின் கீழ்த்தள பிரிவு முழுவதும் விருந்தினர்கள் அறை.. இரண்டாம் பிரிவு சஞ்சீவ்ரதனுக்குரியது.. மூன்றாம் பிரிவு சுஜாதாவிற்கு உரியது.. அதில் அவர்களுக்கான உடற்பயிற்சி மையம், பார்லர், ஸ்டீம் பாத், என உள்ளது.. நான்காம் தளம் சஞ்சீவ்ரதன் சுஜாதா தம்பதியர்களுக்கான தளம்.. ஐந்தாம் தளம் முழுவதும் அதிக்குரியது.. அவள் அதிக நாட்கள் தன் வீட்டிலிருந்ததை விட இங்கு இருந்ததுதான் அதிகம்.. அடுத்த மூன்று அடுக்குகள் அனைத்தும் அபயசிம்ஹாவின் ஆட்சிக்குரியது.. ஆறாம் தளம் அபயின் படுக்கையறை, ஏழாம் தளம் அவனின் பிரைவேட் பார்வசதி கொண்ட அலுவல் அறை.. எட்டாம் தளம் நீச்சல் குளம் கொண்ட அவனின் உடற்பயிற்சி மையம்.. அதையொட்டி மேல்மாடி..

இந்த மாளிகையின் உள்ள மூவருமே ஓர் நாளின் இருபத்திநான்கு மணிநேரமும் போதாதவர்கள் தான்.. இருந்தாலும் காலை உணவும் இரவு உணவும் ஒன்றாகத்தான் உண்ண வேண்டுமென்பது சுஜாதாவின் எண்ணம்.. மதிய வேளை அவரவர் விருப்பம்….

Advertisement

சார்.. பிரேக் பர்ஸ்ட்.. என்ற பணியாள பெண்ணிடம்.. தனக்கு வேண்டியதை கூறியவன்.. தன் அறையினுள் நுழைய மற்ற இருவரும் வெளியில் நின்றனர்..

Advertisement

**********************************************

கோவையின் மத்தியில் உள்ள ஒரு பங்களாவிற்குள் தன்னுடைய காரை செலுத்தினாள் சிற்பிகா.. அங்கு வெள்ளை வேட்டி சட்டையில் கட்சித்தொண்டர்கள், காவல்துறை அதிகாரிகள், என ஒரு அரசியல்வாதியின் இல்லம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.. ஜெகன்நாதனின் பங்களா..

ஜெகன்நாதன் ஆளுங்கட்சியில் உள்துறை அமைச்சராக உள்ளார்.. மக்கள் மத்தியில் இவருக்கு மிகவும் நன்மதிப்பு உள்ளது.. ஜெகன்நாதனின் துணைவி சுசீலா.. சமூகசேவகி.. ஜெகன்நாதனின் மதிப்புக்கு இவரும் ஒரு காரணியாவார்..

Advertisement

ஜெகன் சுசிலாவின் ஒற்றை தவப்புதல்வி தான் ரூபாலி.. ஜெகன்நாதனுக்கு தன் மகளை அரசியலில் புகுத்த ஆசை.. அதனால் சிறுவயதிலிருந்தே அவளுக்கு தைரியத்தையும் அரசியலின் சாணக்கியத்தையும் போதித்து எதற்கும் அஞ்சாதவளாய் வளர்த்திருக்கிறார்..

வராண்டாவில் குழுமியிருந்த கட்சித்தொண்டர்களுக்கு சிற்பிகா யாரென தெரியுமென்பதால் அனைவரும் அவளுக்கு வழி விட்டு விலக.. அவள் ஓர் மென்சிரிப்புடன் உள்ளே சென்றாள்..

ஹாலில் அமர்ந்து சிலருடன் மும்மரமாக பேசிக்கொண்டிருந்த ஜெகனின் முகம் சிற்பிகாவைக் கண்டதும் மலர்ந்தது.. அடடே சிற்பிக்குட்டி என்னாச்சும்மா ரொம்ப நாளா ஆளையேக் காணும்.. என அன்பாய் வரவேற்க.. அவரிடமும் ஓர் மென்புன்னகையால் பதிலளித்துவிட்டு டைனிங் அறைக்குள் நுழைந்தாள்..

அங்கே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவிற்கு சூடாய் அமர்ந்திருந்தாள் ரூபாலி..

என்னாச்சு.. ரூபி ஏன் இப்படி கோபமா இருக்க என தன் தோழியிடம் கூறியவள்.. பக்கத்திலே முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்த சுசீலாவைக் கண்டாள்..

சுசிம்மா என்னாச்சு ஏன் ரெண்டு பேரும் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிருக்கீங்க என சுசியின் தாடையை பிடித்து கொஞ்சலாக கேட்க.. அவரோ அவள் கரத்தை தட்டிவிட்டார்.. ” இப்போதான் இங்க வரனும்னு தோனுச்சா சிற்பிக்குட்டி. ”

இல்லை சுசிம்மா.. இந்த தடவை அடுத்தடுத்து அரங்கேற்றம் வந்துருச்சு.. அதான் வரமுடியல.. இதுக்கு போய் கோவிச்சுக்கலாமா.. என தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்ச.. சுசிலாவின் முகம் கனிந்தது..

சரி பொழச்சுப்போ.. என முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டு கூறவும்.. இருவரும் நகைத்தனர்……. ” சுசிம்மா அடுத்த வாரம் நடக்கும் அவார்ட் பங்க்ஷன்க்கு நீங்களும் வருவீங்கள்ல.. ” என ஆசையாய் கேட்டாள்.. சிற்பிகா.

” கண்டிப்பாடா செல்லக்குட்டி.. நான் இல்லாமையா.. ” என்றவரை சிற்பிகா நெகிழ்வாய் தழுவிக்கொண்டாள்.. ரூபாலி என்றொரு ஜீவனோ இவையனைத்தையும் கண்டுக்கொள்ளாமல்.. நெய் மணக்கும் மிளகு பொங்கலில் சாம்பார் சட்னி என குழப்பியடித்து அவசர அவசரமாய் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது.. அதிலும் அங்குள்ள வடைகளையும் கேசரியையும் கூட எடுக்க மறக்கவில்லை..

அதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட சுசிலா ” எரும எரும.. எங்கயும் போயிடாது கொஞ்சம் மெதுவா முழுங்கு.. ”

” ம்ம் போம்மா.. நானே காலைல இருந்து எப்படா சாப்புடலாம்னு இருந்தா.. நீ உன் வளர்ப்பு மக சாப்புடமா யாரும் பொங்கல்ல கை வைக்க கூடாதுன்னு சொல்லிட்ட.. சரி நானும் அவ இப்போ வந்துருவா அப்போ வந்துருவானு தேவுடு காத்தா.. மஹாராணி ஆடி அசைஞ்சு வரா.. சரி இப்போவாவது சாப்பிட உட்காருவான்னு பார்த்தா.. ரெண்டு பேரும் செல்லம் கொஞ்ச ஆரம்பிச்சுட்டிங்க.. அதான் இது சரி வராதுன்னு நானே களத்துல இறங்கிட்டேன்.. ஏன்னா இதுக்கு மேல நான் பொறுமையா இருந்தாலும் என் வயிறு பொறுமையா இருக்காது.. ” என்று பொங்கலை வாயில் வைத்துக் கொண்டே பேச.. வெள்ளிச்சலங்கையென நகைத்தாள் சிற்பிகா.. அதை கண்டு அந்த இரு அன்புள்ளங்களின் மனமும் கசிந்தது.. ஏனெனில் இது போன்ற மனம் நிறைந்த புன்னகையை அவளின் சொந்த வீட்டிலோ இல்லை வெளியிடங்களிலோ பார்க்க முடியாது…

*********************************************

ராஜாங்கம் தன்னுடைய அறையில் அங்கும் மிங்குமாய் அலைந்துக் கொண்டிருந்தார்.. அப்பொழுது அவரின் தொலைப்பேசி ஒலியெழுப்ப வேகமாய் அதனை அட்டண்ட் செய்தவர்.. மிகவும் பணிவாகவும் குழைவாகவும் பேச ஆரம்பித்தார்..

” சொல்லுங்க தம்பி.. ”

….

” பாப்பா காலைல இருந்தே வீட்டுல இல்லீங்க தம்பி.. அதான் கையெழுத்து வாங்க முடியல.. ”

….

” இல்லை தம்பி.. எப்படியும் கையெழுத்து வாங்கிடுவேன்.. அடுத்த வாரம் நம்ம பாப்பாக்கு பெங்களூர்ல நாட்டிய தாரகை விருது தராங்க.. அதுக்கு நாங்க வரோம் தம்பி அப்போ கச்சேரி வச்சுக்கிட்டா.. நல்லதுங்க..”

….

” சரி தம்பி.. சரி தம்பி.. நேர்ல வரும்போது கையெழுத்து போட்ட அக்ரீமெண்ட் பேப்பர கொடுக்குறேன்.. தம்பி. அப்புறம் தம்பி அந்த அஞ்சுக்கோடில அட்வான்ஸ் எதாவது கொடுத்தா நல்லாயிருக்கும்.. ”

….

எதிர்முனையில் என்ன பதில் வந்ததோ.. ராஜாங்கத்தின் முகம் விழுந்து விட்டது.. ஹ்ம்ம் சரி தம்பி என போனை வைத்தவர்.. காதே கூசும்படியான வார்த்தைகளை கொண்டு எதிர் முனையில் உள்ளவனை திட்டி தீர்த்தார்..

” ச்ச.. **** பய.. அஞ்சுகோடில ஒருகோடிய அட்வான்ஸா கொடுத்தா குறைஞ்சா போயிடுவான்.. கையெழுத்து போட்ட டாக்குமெண்ட பார்த்ததுக்கு அப்புறம் தான் அட்வான்ஸ் தருவானாமே.. **** எல்லாம் நான் கட்டுன சனியனால வந்தது.. மூதேவி இவ மட்டும் குறுக்க வரலைன்னா இந்நேரம் ஒருகோடிய கைல பார்த்திருக்கலாம்.. ” என மிருகமாய் உறுமிக்கொண்டிருந்தார்..

***********************************************

இருபத்தைந்து பேர் ஒன்றாக அமர்ந்து உணவுண்ணக்கூடிய டைனிங் டேபிளின் தலைமை இடத்தில் சஞ்சீவ்ரதன் அமர்ந்திருக்க.. அவர் இருபக்கத்தில் அபயும் சுஜாதாவும் அமர்ந்திருந்தனர்..

அவர்களை சுற்றி மூவரின் தனிப்பட்ட பணியாளர்களும் மற்றும் பிற பணியாளர்களும்.. இவர்களின் பேச்சுக்கள் கேட்காத தூரத்தில்.. அதே நேரம் அவர்கள் பார்வை படும் இடத்தில் நின்றுக்கொண்டிருந்தனர்..

சுஜாதா ” அபய் இன்னும் டூ மன்த்ஸ்ல உனக்கு முப்பத்திமூனு வயசாகப்போகுது.. அதாவது உனக்கு நான் கொடுத்த டைம் முடிய இன்னும் ரெண்டே மாசம் தான் இருக்கு.. ” என மெல்லிய குரலில் கூறியவர் தன் முன்னிருந்த ஆப்பிள் துண்டுகளை டூத் பிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்..

” ஹ்ம்ம் ஐ நோ மாம்… பார்க்கலாம் அதான் இன்னும் சிக்ஸ்ட்டி டேஸ் இருக்கே ” என தனக்குரிய ஆளுமையான குரலில் அழுத்தமாக கூறிவிட்டு செல்ல.. சுஜாதாவின் விழிகளும் அவனை பின்தொடர்ந்து..

அபய் காரின் ஓசை மறைந்ததும்.. தன் கணவனை ஆயாசமாக பார்க்க.. சஞ்சீவ்ரதன் தன் மனைவியின் கரத்தை அழுத்தப் பற்றினார்..

” ரதன் லேடிஸ் கிளப்புல எல்லோரும் அபையோட சக்ஸஸ பத்தியும் அவனோட திறமைய பத்தியும் பாராட்டும் போது ஒரு அம்மாவா எனக்கு அவ்வளவு பெருமையா இருக்கும்.. பட் அவனோட பெர்சனல் லைஃப் பத்தி என்னால பெருமை பட முடியல.. ஏன் ரதன் எல்லாத்துலயும் உங்கள விட மேலா இருக்கிறவன் ஒழுக்கத்துல மட்டும் இல்லாம போனான்.. ” என வருத்தமாக கூறினார்..

சஞ்சீவ் ” சுஜா.. நீ ஒன்னும் ஒர்ரி பண்ணிக்காத.. மேரேஜ்க்கு அப்புறம் அபய் மாறிடுவான்.. அதிய அவன் கல்யாணம் பண்ணா ரெண்டு பேருக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கும் பட் ரெண்டு பேருமே வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. இப்போ நாம வெளியிடத்துல தான் பொண்ணு பார்க்கனும் போலயிருக்கு.. என மனைவியின் பேச்சை திசை திருப்ப.. சுஜாதாவின் கவனமும் தன் மகனின் மேலிருந்து அவன் வருங்கால மனைவிக்கு தாவியது..

” ஹ்ம்ம் ஆமா.. ரதன் அபய சமாளிக்க அதி மாதிரி போல்டான பொண்ணாலதான் முடியும்.. பட் என்ன பண்றது விடுங்க.. வெளில தான் தேடனும்.. நானும் ரெண்டு பொண்ணுங்கள பார்த்து வச்சுருக்கேன்.. ரெண்டு மாசத்துக்கு அப்புறம் கண்டிப்பா அவங்கள்ல ஒருத்தர அபய் கல்யாணம் பண்ணியே ஆகனும்.. ”

முயல் போல் சிறு சத்தத்திற்கு மருளும் மான்விழியாள் தான்… சிங்கம் போன்று கர்ஜிக்கும் தன் மகனுக்கு மனைவியாக வரப்போகிறாள் என அப்போது அவருக்கு தெரியவில்லை..

************************************************

சிற்பிகா ரூபாலி இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே சுத்திக் கொண்டிருக்க.. ராஜாங்கம் கடுப்பின் உச்சத்தில் இருந்தார்.. சிற்பிகாவிடம் நைச்சியமாக கையெழுத்து வாங்க அவர் முனையும் போதெல்லாம் எதாவது ஒரு தடங்கல் வந்துக் கொண்டிருந்தது..

சிற்பிகாவின் அருகில் ராஜாங்கம் வந்த மறுகணம் ரூபாலி அங்கு பிரசங்கமாவாள்.. இது எப்படி என்று இன்றுவரை அவருக்கு புரிந்ததில்லை..

அதோ இதோ என்று பெங்களூர் செல்லும் நாளும் வந்தது.. ஆனால் சிற்பிகாவிடம் இன்னும் கையெழுத்து வாங்கவில்லை.. அந்த டென்ஷனிலையே ராஜாங்கம் சுற்றிக்கொண்டிருக்க.. விதி சிற்பிகாவின் வாழ்க்கையில் மற்றொரு முறை தன் கோரமுகத்தை காட்டியது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!